Yarl Forum
பிரித்தானிய தகவல்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பிரித்தானிய தகவல்கள் (/showthread.php?tid=5711)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- Mathan - 06-25-2005

லண்டன் கொலைகள்

<b>சம்பவம் - 1</b>

நேற்று இரவு லண்டன் ஈஸ்ட் காம்-இல்பேர்ட் (Eastham, Ilford) பகுதியில் நிகழ்ந்த குழு சண்டை (Gang Fight) ஒன்றில் 23 வயது தமிழ் இளைஞன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் நடந்த சண்டைகளின் தொடர்ச்சியாகவே நேற்றய கொலை நடந்ததாக கூறப்படுகின்றது.

<b>சம்பவம் - 2</b>

ஏறத்தாள ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் லூசியம் - கட்போர்ட் (Lewisham, Catford) பகுதியை அண்டிய பிரதேசத்தில் உள்ள Favorite Chicken Shopஇல் ( KFC போன்றது) நடுதர வயது தமிழர் ஒருவர் குத்தி கொல்லப்பட்டார். குத்தப்பட்டவரும் குத்தியவரும் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களாவர். இருவரும் ஆரம்பத்தில் சாதாரணமாக பேசி கொண்டிருந்தாகவும் இருவரின் ஊர் குறித்த பேச்சு எழுந்த போது இருவரும் ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசியதாகவும் அது வாய்தகறாக மாறி குடிபோதையில் வேலை செய்துகொண்டிருந்தவர் அருகில் இருந்த கோழி வெட்டும் கத்தியால் குத்தியதாககவும் கூறப்பட்டது.

இது தவிர சிறிது காலத்திற்கு முன்பு லண்டன் டூட்டிங் பகுதியில் உதைபந்தாட்ட போட்டியை தொடர்ந்து குழு சண்டையில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்கே போகிறது லண்டன் தமிழினம் Cry


- hari - 06-27-2005

வாழ்க தமிழ் புகழ்!
மதன் எல்லா பேப்பரிலும் இது வந்ததா? எங்கள் புகழ் உலகம் பூராகவும் பரவினதா? ஜாலி!.. இப்பதான் பாரதி கண்ட கனவு பலிச்சிருக்கு. ஜாலி!..ஜாலி.. :evil:


- Mathan - 06-27-2005

hari Wrote:வாழ்க தமிழ் புகழ்!
மதன் எல்லா பேப்பரிலும் இது வந்ததா? எங்கள் புகழ் உலகம் பூராகவும் பரவினதா? :evil:

South London Press உள்ளிட்ட சில பத்திரிகைகளில் போட்டிருக்கின்றார்கள். தாக்கியவர் தாக்கப்பட்டவர் இருவருமே தமிழர்கள் என்பதாலும் அடிக்கடி நடைபெறும் சம்பவம் என்பதாலும் இதை அவர்கள் பெரிதாக கணக்கில் எடுப்பதில்லை.


- Mathan - 06-27-2005

தெற்கு லண்டனின் பல பகுதிகளிலும் ஆசிய கலாச்சார நிகழ்ச்சி நடக்க ஏற்பாடாகி இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக நேற்று ஞாயிற்று கிழமை South East London Plumstead Common பகுதியில் ஆசிய கலாச்சார விழா (Asian Mela) நடந்தது. அது ஒரு கலாச்சார விழாவாக மட்டும் அன்றி அந்த பிரதேச ஆசிய மக்கள் ஒன்று கூடும் ஒரு நிகழ்வாகவும் அமைந்தது. அந்த பிரதேசத்தில் தமிழ் மக்களின் அளவு குறைவாக இருந்தமையினால் தமிழ் நிகழ்சிகள் அதிகம் இடம்பெறவில்லை. சிறிய தமிழ் குழந்தைகள் தமிழ் கலாச்சார உடையுடன் கலந்து கொண்ட ஆடல் நிகழ்சிகள் நடைபெற்றன. அடுத்த ஆண்டு விழாவின் போது மேலும் தமிழ் நிகழ்சிகளை இடம்பெற செய்யமுடியும் என்று நினைக்கின்றேன்.

15 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த நிகழ்ச்சிக்கு Sunrise Radio, Sony Entertainment மற்றும் Western Union உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆதரவளித்திருந்தனர். இதை தவிர Greenwich council மற்றும் அப்பகுதி தொழிற்கட்சி எம்பி John Austin ஆகியோரும் பக்கபலமாக இருந்ததுடன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.


- Mathan - 06-27-2005

இந்த நிகழ்ச்சியின் போது டிஜிட்டல் கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே இணைக்கின்றேன். அவை அவ்வளவு தெளிவாக இல்லை. மற்றய கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கும் போது அவற்றை பின்பு தருகின்றேன்.

<img src='http://img61.echo.cx/img61/3626/southlondon19zi.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img61.echo.cx/img61/3497/southlondon28of.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img61.echo.cx/img61/6381/southlondon39ze.jpg' border='0' alt='user posted image'>


- வெண்ணிலா - 06-27-2005

Mathan Wrote:இந்த நிகழ்ச்சியின் போது டிஜிட்டல் கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே இணைக்கின்றேன். அவை அவ்வளவு தெளிவாக இல்லை. மற்றய கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கும் போது அவற்றை பின்பு தருகின்றேன்.

இணைக்கப்பட்டவை அனைத்தும் தெளிவாகவே இருக்கின்றன. நன்றி


- SUNDHAL - 06-27-2005

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் மனைவி செரி பிளேர். இவர் வக்கீலாக இருக்கிறார். ஆளும் தொழிலாளர் கட்சி தொடர்பான வழக்குகளில் இவரே பெரும்பாலும் ஆஜர் ஆகிறார். செரி பிளேர் இப்போது டெலிவிஷன் தொடரிலும் நடிக்கிறார்.

2 மணி நேரம் ஓடும் இந்த டெலிவிஷன் தொடர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்களின் மனைவிமார்களை பற்றியது. 3 முன்னாள் பிரதமர் களின் மனைவிகள் கிளாரிசா ஈடன், மேரிவில்சன், நார்மா மேஜர் ஆகியோரும் நடிக்கிறார் கள். அவர்களுடன் இணைந்து நடிக்கும் செரிபிளேர் அவர்களை பேட்டி காண்கிறார்.


- Mathan - 06-28-2005

நன்றி சுண்டல்.

செரி பிளேயர் (Cherie Blair) கணவரைவிட தனது தொழில் மூலம் அதிகம் சம்பாதிப்பவர் என்று சண் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இது தவிர அமெரிக்க பல்கலைக்கழகங்களில் விரிவுவைகள் நடத்துவதன் மூலம் தனியாக சம்பாதிக்கின்றார். தன்னுடைய கணவரின் பதவி மூலம் கிடைக்கும் அந்தஸ்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.


- Mathan - 06-28-2005

இந்த நிகழ்வில் எடுத்த வேறு சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன். முழுமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி விரைவில் Sony Entertainment Television Asia இல் ஒளிபரப்பாகும்.


<img src='http://img137.echo.cx/img137/1268/southlondon41vb.jpg' border='0' alt='user posted image'>

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on4large1dm.jpg

<img src='http://img137.echo.cx/img137/4646/southlondon59un.jpg' border='0' alt='user posted image'>

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on5large4ht.jpg

<img src='http://img137.echo.cx/img137/3300/southlondon78ip.jpg' border='0' alt='user posted image'>

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on7large9tj.jpg

<img src='http://img137.echo.cx/img137/7383/southlondon67dc.jpg' border='0' alt='user posted image'>

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on6large8rr.jpg


- kavithan - 06-28-2005

நன்றி மதன் .. நீங்களும் போய் இருந்தீர்களா.. ?


- Mathan - 06-28-2005

ம் தமிழ் நிகழ்சிகளும் நடந்தன. இது இந்த பகுதியில் இருந்த அனைத்து ஆசியர்களுக்கு பொதுவான கலாச்சார விழா. இந்த பகுதியில் தமிழர்கள் குறைவு என்பதால் பங்களிப்பு குறைவாக இருந்தது. அது தவிர தமிழர்கள் தமது பிள்ளைகளை தமிழ் நிகழ்சிகளின் பங்கு பெற செய்வதில் அவ்வளவு முன்னிற்கவில்லை. அடுத்து Lewisham மற்றும் Bromley பகுதிகளை இணைத்து ஆசிய கலாச்சார தினம் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த பகுதிகளின் அதிகம் தமிழர்கள் இருப்பதால் பங்களிப்பும் கூடுதாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.


- Mathan - 06-30-2005

<img src='http://www.homeoffice.gov.uk/siteimages/global_ho_logo.gif' border='0' alt='user posted image'>

ஐக்கிய ராச்சியத்தில் ஏறத்தாள 570,000 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக உள்துறை அலுவலகம் (Home Office) அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் எதிர்கட்சிகள் சட்டவிரோதமாக தங்கியிருப்போரின் எண்ணிகையை விவாதங்களில் கேட்டபோதும் அதற்கு தொழிற்கட்சி அரசு பதிலளிக்கவில்லை, தொழிற்கட்சி குடியேறிகள் விடயத்தில் நெகிழ்வு போக்கை காட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் அந்த விபரம் வெளியிடப்பட்டால் அது தேர்தலில் எதிர்ப்பலை உருவாக்கலாம் என்று அப்போது இதற்கு பதிலேதும் சொல்லாமல் மெளனமாக இருந்த அரசு இப்போது தேர்தல் முடிந்த நிலையில் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் அரசியல் தஞ்சம் கோரி தற்போது விசாரணையில் உள்ளோரும் அது நிராகரிக்கபட்ட நிலையில் அதனை எதிர்த்து அப்பீல் செய்தோரும் உள்ளடக்கப்படவில்லை.

தற்போது ஐக்கிய ராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை அடையாளம் காணவதற்கு இலகுவான வழிமுறை ஏதும் இல்லை. முக்கியமாக இதனை காரணமாக வைத்தே அடையாள அட்டை திட்டத்தை தொழிக்கட்சி அரசு ஆரம்பித்தது ஆனால் இதற்கு நாடாளும் சபையில் ஆதரவு குறையும் நிலையில் இதன் அவசியத்தை உணர்த்தவே சட்டவிரோதமாக தங்கியிருப்போரின் எண்ணிக்கையை இந்த சமயத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை கூட மிக குறைவான கணிப்பீடு என்றும் உண்மையில் இதைவிட அதிகமானோர் இருக்கலாம் என்று குடியேறிகளை கண்காணிக்கும் Migration WatchUK அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தி ஆதாரம்: பிபிசி இணையம்

ஆங்கிலத்தில் முழுமையாக படிக்க http://news.bbc.co.uk/1/hi/uk_politics/463...7273.stm[/size]


- kuruvikal - 06-30-2005

என்ன லண்டன் கிட்டமுட்ட கொழும்பு மாதிரி இருக்கு...இல்ல ஆகிட்டா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

படங்களுக்கு நன்றி மதன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 06-30-2005

லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 06-30-2005

Mathan Wrote:லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பெரிய சாதனை தான் அடிச்சுக்கலைக்காட்டா சரி. 8) :? :wink:


- vasisutha - 06-30-2005

tamilini Wrote:
Mathan Wrote:லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பெரிய சாதனை தான் அடிச்சுக்கலைக்காட்டா சரி. 8) :? :wink:

ரோட்டில கொத்துறொட்டிக் கடையும் இளனிக் கடையும்
போடாத குறை ஒன்றுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 07-01-2005

அதை போட்டால் நல்ல பிஸ்னஸ் ஆச்சே .. வசி போடுவமோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 07-02-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 07-02-2005

அதையும் நாங்கள் கனடாவில விடல!


- Nilavan - 07-02-2005

கருத்து நீக்கப்பட்டுள்ளது - யாழினி