Yarl Forum
பேய் கதை சொல்லுங்கோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பேய் கதை சொல்லுங்கோ (/showthread.php?tid=3651)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- vasisutha - 10-29-2005

<span style='font-size:20pt;line-height:100%'>'மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'.. என்று
அல்லவா சொல்வார்கள்.. நீங்கள் மாற்றி கூறுகிறீர்களே..?:roll:


நான் ஒரு தமிழ் ஆசிரியர்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .</span>


- ragavaa - 10-29-2005

[quote=vasisutha]<span style='font-size:20pt;line-height:100%'>'மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'.. என்று
அல்லவா சொல்வார்கள்.. நீங்கள் மாற்றி கூறுகிறீர்களே..?:roll:
நான் ஒரு தமிழ் ஆசிரியர்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .</span>
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-30-2005

Aruvi Wrote:நான் ஒன்றரை வருடமாக வேலைவிட்டுவரும் போது இடுகாட்டிற்கு முன் நின்று தான் பேருந்து எடுக்கிறனான் அதுவும் இரவு 1 மணிக்கு சிலவேளை அந்த இடுகாட்டைச் சுற்றிக்கூட நடந்து போறனான் அப்பெல்லாம் எனக்குத் துணையா ஒண்டும் வரலையே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


பேய்க்க்கு பேய் எல்லம் துணையாக வருமா? லொள்ளு அருவியண்ணா. கோவிக்காதீங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:


- அருவி - 10-30-2005

வெண்ணிலா Wrote:பேய்க்க்கு பேய் எல்லம் துணையாக வருமா? லொள்ளு அருவியண்ணா. கோவிக்காதீங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:


வராதா பின்ன மனுஷங்க எல்லாம் பேயள அடிச்சு விரட்டினா அதுகளுக்கும்(எங்களுக்கும் நாம :wink: ) அதுகள் துணையா போகும்தானே.

:wink: :wink:


- Selvamuthu - 10-30-2005

வசி, ராகவா இருவருக்கும்;
"இ" வும், "ம" வும் இடம்மாறியதைச் சுட்டிக்காட்டிமைக்கு நன்றி.
நான் இதனை எழுதியபோது இரவு நடுநிசியைத் தாண்டிவிட்டது. சரியாகத்தான் எழுதியதாக ஞாபகம். ஏன் இடம் மாறியதென்றுதான் தெரியவில்லை. ஒருவேளை இதுவும் "பேயின்" வேலையாக இருக்குமா?


- Birundan - 10-30-2005

செல்வ முத்து புழுகாதீங்கோ.


- MUGATHTHAR - 10-30-2005

selvamuth Wrote:நான் இதனை எழுதியபோது இரவு நடுநிசியைத் தாண்டிவிட்டது. சரியாகத்தான் எழுதியதாக ஞாபகம். ஏன் இடம் மாறியதென்றுதான் தெரியவில்லை. ஒருவேளை இதுவும் "பேயின்" வேலையாக இருக்குமா?


ஜயா சாமி உங்கடை காலை ஒருக்கா காட்டுங்கோ தொட்டு கண்ணிலை ஒத்திக்கிறன் உண்மேலை நீங்க வாத்தியார் தான் பெடியள் பிழை பிடிக்கிறாங்களோ எண்டு ரெஸ்ட் பண்ணிப் பாத்திருக்கிறீயள் என்ன..........


- Selvamuthu - 10-31-2005

முகத்தார் அவர்களே! எதுக்கு ஒரு காலை மட்டும் கேட்கிறியள்? கால்களை என்ற கூறியிருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். வயதில் சிறியவரின் காலை ஒரு முதியவர் தொட்டுக் கண்ணிலை ஒத்திறது அவ்வளவு நன்றாக இருக்காது. இருந்தாலும் நீங்கள் உண்மையைத்தான் கூறினீர்கள். உங்கள் ஆதரவுக்கு.......நன்றி!!!!!!


- aathipan - 10-31-2005

வெளியே வெளிச்சமாக இருந்தாலும் அந்த ஹால் இருட்டாகவே இருந்தது. அத்துடன் கொஞ்சம் குளிர்ச்சியாகவும் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த ஹாலுக்குள் நுழைந்தேன். இருந்தும் மேலே தொடர்ந்து கொக்கரித்து சிரிப்பது போலவும் எதையோ போட்டு உருட்டுவது போலவும் சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. படிக்கட்டுக்கு அருகில் போக தைரியம் இல்லாததால் அங்கேயே நின்று கொண்டு "யாரங்கே" என்று உரக்கு கத்தினேன். இப்போது படிக்கட்டுகளில் யோரோ இறங்குவது போல சத்தம் கேட்க எதிர் கொள்ள எந்த தைரியமும் இல்லாது ஓட்டம் பிடித்தேன். மறக்காமல் வெளிக்கதவை மூடிவிட்டு வெளியே நின்ற நாயுடன் வீடுபோய்ச்சேர்ந்தேன்.

மறுநாள் காலை குழந்தைகளுடன் அவர்கள் விடுமுறை முடிந்து வந்துவிட்டிருந்தார்கள். உடனேயே அங்கு சென்று வீட்டை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பணத்துடன் வந்துவிட்டேன். என்னை பயமுறுத்திய சம்பவங்கள் எதையும் நான் அவர்களிடம் சொல்ல சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. அன்று மாலை அவர்களிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்து வரும் வெள்ளி குழந்தைகளுடன் தங்க முடியுமா என கேட்டனர். என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால் எனது நண்பி ஒருத்தியையும் அழைத்து வருவதற்கு அனுமதி கேட்டுப்பெற்றுக்கொண்டேன்.

வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் சொன்ன நேரத்திற்கு எனது உற்ற தோழியொருத்தியுடன் அங்கிருந்தேன். குழந்தைகளுக்கு உணவு கொடுத்து படுக்க வைத்தபின் தொலைக்காட்சி பார்க்க அமர்ந்தோம். திடீரென தொலைக்காட்சி நின்று போனது. முன்பு இதே போல நடந்ததால் பயம் என்னை மெதுவாகப்பிடித்துக்கொண்டது. எனது நண்பிக்கு எதையும் நான் சொல்லாததால் அவள் தொலைக்காட்சி நின்றதால் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க முடியவில்லை என்ற கவலையுடன் மட்டும்காணப்பட்டாள். சிறிது நேரம் கழித்து எம்மையாரோ பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் அவளை சமாதானபடுத்தி வைத்திருக்க முயற்சிக்கையில் மேலே அன்றைக்கு கேட்டது போலவே கெக்கரித்துச் சிரிக்கும் ஓசை கேட்டது. இதனால் பயந்து போன அவள் உடனே தனது தாயை தொலைபேசியில் அழைத்து அவருடன் சென்றுவிட்டாள். பாவம் அவள் மிகவும் பயந்து போனது அவள் செய்கையில் நன்கு தெரிந்தது. அவள் சென்ற பின் என்னை நானே சமாதானம் செய்துகொண்டு நிலமையை சமாளிக்க எண்ணினேன். ஆனால் எதோ ஒன்று நடக்கப்போகின்றது என்பது தெளிவாகத்தெரிந்தது. வெளியேஅமைதியாகத்தூறிக்கோண்டிருந்த மழை இப்போது அடைமழையாக ஒரு மாறியது. விழித்துக்கொண்ட அந்த வீட்டின் மூத்த பெண் என்னை அருகில் படுக்கும் படி கேட்டுககொண்டாள். இப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தவளாயிருந்தாலும் ஏதோகாரணத்தால் அவளும் பயந்திருப்பது போலத்தான் தெரிந்தது. அவளின் அருகில் சென்று தலையைக்கோதி அவளின் போர்வையைச் சரிசெய்து விட்டேன். மேலே கேட்கிற சத்தம் தண்ணீர்க்குழாயில் இருந்து வருவதாக அம்மா சொல்லியிருந்தாள். ஆனால எனக்கு அதில நம்பிக்கையில்லை. என்று தனது பங்கிற்கு அவளும் என்னைப்பயமுறுத்தி வைத்தால்.

தொடரும்..


- வெண்ணிலா - 10-31-2005

ரொம்ப திகிலக போகுது. இனி எப்ப தொடரும்.? :roll:


- ragavaa - 10-31-2005

வெண்ணிலா Wrote:ரொம்ப திகிலக போகுது. இனி எப்ப தொடரும்.? :roll:
இண்டைக்கு இரவு உங்க வீட்டில தொடரும்.....


- aathipan - 10-31-2005

அவளை சமாதானஞ்செய்ய வேறு கதைகள் பேசிக்கொண்டிந்த நான் அப்படியே தூங்கிவிட்டேன். ஏனோ திடீரென விழிப்பு வந்துவிட்டது. எனது உடல் வேர்வையில் குளித்திருந்தது. அப்போது நேரம் பதினோன்றைத்தாண்டியிருந்தது. யாரோ உள்ளே வருகின்றதுபோன்று ஒரு உணர்வு ஏற்பட்டது. நான் எழுந்து அமர்ந்துகொண்டேன். எதிர்பாராதவிதமாக எதிரே இருந்த கண்ணாடியைப்பார்த்த போது ஏதோ ஒரு உருவம் எனக்கு அருகில் இருப்பது போன்று தென்பட்டது. கட்டிலில் எனக்கு அருகில் யாருமே இல்லை. கட்டிலை கைகளால் தடவிப்பார்த்தும் தட்டியும் பார்த்தேன். யாருமே இல்லை. ஆனால் கண்ணாடியில் அந்த உருவம் எனக்கு அருகில் கட்டிலில் அமர்ந்திருந்தது. இப்போது பயந்துபோய் எனக்கு பக்கத்தில் படுத்pதருந்த அவர்களது மூத்;த மகள் தூக்கம் கலைந்து எழுந்துகொண்டாள். உடனே கண்ணாடியில் தெரிந்த அந்த உருவம் மறைந்துபோனது. ஆனாலும் பயம் எங்களை விட்டு அகலவில்லை. மூத்த மகளால் சரியாக சுவாசிக்க முடியாது திண்டாடினாள். அவள் நன்றாக பயந்திவிட்டிருக்க வேண்டும். உடனே அவர்கள் பெற்றோர்களை தொலைபேசியில் அழைத்து உடனே வரும்படி கேட்டுக்கொண்டேன். சமாதானஞ்செய்ய முனைந்தவர்கள் இறுதியில் வர ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் வந்ததும் அவளை ஒப்படைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

ஒருவாரம் கழித்து எனது பயம் அடங்கிவிட்டது. மீண்டும் அவர்கள் அழைப்பை ஏற்று மாலை அங்கு சென்றேன். மீண்டும் தொலைக்காட்சி தானாக அணைந்து விளையாட்டு ஆரம்பித்துவிட்டதை உணர்த்தியது. குழந்தையை மேற்பார்வை செய்ய சிறிய 'மொனிட்டரில்" அவள் அழுவது போல தெரியவே அவள் அறைக்கு ஓடிச சென்று பார்த்தேன். அவள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் மேலே யாரோ எதையோ தள்ளுவது போல ஓசைகேட்டது. உடனே அம்மாவை தொலைபேசியில் வரும்படி அழைத்தேன். அவர் வந்தும் மேலே நாடகம் தொடர்ந்தது. அம்மாமும் அதை தன் காதுகளால் கேட்டாள். பெற்றோர்கள் வரும் வரை அவள் எனக்கு துணையாக இருந்தாள். பெற்றோர்களிடம் நடந்ததைச்சொல்லி இனி என்னால் வேலைசெய்ய முடியாது எனக்கூறி அந்த வேலையில் இருந்து விலகிக்கொண்டேன்.

உண்மைக்கதை -- Jocelyn Callahan


- SUNDHAL - 10-31-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :roll: :roll:


- sathiri - 10-31-2005

கதையை கடைசிலை இப்பிடி முடிச்சிட்டீர் கத்தி கொலை ரத்தம் எண்டு இழுத்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :evil: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 10-31-2005

சப்பென்றூ போட்டுது, சரி கண்ணாடியில தெரிந்தது லக லக இல்லையா?


- வெண்ணிலா - 10-31-2005

அட கதை முடிந்துட்டுதா? நான் நினைத்தேன் ரொம்ப திகிலாக போகுமென. ஓ உண்மைக்கதையா? கடவுளே :roll: ஆமா அப்போ அவ்வீட்டில் சத்தம் போட்டதெல்லாம் ஆவியா? :roll: :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Birundan - 10-31-2005

ஆமா மேல்வீட்டு பாட்டி புட்டவிச்ச ஆவி,


- vasisutha - 10-31-2005

Birundan Wrote:ஆமா மேல்வீட்டு பாட்டி புட்டவிச்ச ஆவி,

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- aathipan - 11-05-2005

எனது சின்னவயதிலே எனது நண்பி(மேரி) வீட்டுக்குச்சென்று விடுமுறையில் தங்குவது வழக்கம். அவளது வீடு பெரிய ஒரு தோட்டத்தின் நடுவிலே அமைந்துள்ளது. மிகவும் பழமையான வீடு. ஒவ்வொரு அறையும் பெரிய விசாலமானவை. பல அறைகள் பராமரிப்பு இன்றி தூசி படிந்து கிடக்கும். அங்கு குழந்தைகளுகள் விளையாடுவதற்கென்று தனி அறை ஒன்று அதில்தான் நாங்கள் பெரும்பாலும் எனது பகல் நேரத்தைச் செலவு செய்வோம். அறையின் ஒரு பகுதியில் தண்ணீரை சூடு செய்யும் சாதனம் அமைந்திருந்தது. அதையொட்டி பெரிய பெரிய அலுமாரிகள் சுவரில் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு அலுமாரியில் தான் நாங்கள் விளையாடும் விளையாட்டுப்பொருட்கள் நிறைந்து கிடக்கும். அதையொட்டி உள்ள மேசையில் தான் நாங்கள் படங்கள் வரைந்து விளையாடுவோம். அந்த அறையில் நான் தனியாக இருக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் எனக்கு பயங்கரமாகவே கழியும். அதனால் எனது நண்பியுடன் தான் எப்போதும் இருப்பேன். அந்த தண்ணீரை சூடு பண்ணும் இயந்திரத்திற்கெதிராக நான் எப்போதும் அமர்வது கிடையாது. அங்கு யாரோ பின்னால் இருப்பது போன்று உணர்வு ஏற்படும்.

உயர் நிலைப்பள்ளியில் நாம் படிக்கும் போது நண்பிகளுடன் அரட்டை அடிப்பது வழக்கம். அப்போது சில சமயங்களில் ஒருவருக்கொருவர் தெரிந்த பேய்கதைகள் சொல்லி மற்றவர்களை; பயமுறுத்தி மகிழ்வோம்.

ஒரு சமயம் ஒரு நண்பி தனது வீட்டில் ஏற்பட்ட அனுபவத்தைச்சொன்னாள். அவளது வீட்டில் பேய் குடியிருப்பதாக அவர்கள் நம்பினார்கள். நடு இரவில் பல சமயங்களில் குழந்தை அழும் ஒலியை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். விசாரித்ததில் அந்த வீட்டில் முன்பு ஒரு குழந்தை இறந்ததாக தெரிய வந்துள்ளது. அந்தக் குழந்தை ஒரு சிறிய தொட்டிலில் இருந்த போதுதான் இறந்துள்ளது. அந்த குழந்தையின் அறையை இப்போது யாரும் பயன்படுவதில்லையமாம்.

அதன்பின்; மேரி ஒரு உண்மையைச்சொன்னாள். தங்கள் வீட்டிலும் அது போன்ற சில சம்பவங்கள் நடந்ததாகச்சொன்னாள். ஒரு சமயம் தனது தாய் இரவு புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் போது திடீரென குளிர் காற்று வீசியதாகவும். அப்போது யாரொ அருகே நடந்து செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும். அவர்கள் வீட்டு செல்ல நாய் திடீரென அந்த தண்ணீர்சூடு பண்ணும் இயந்திர உள்ள அறையைப்பார்த்து குரைத்ததாகவும். இந்தச் சம்பவத்திற்கு முன் அந்த அறையில் தானாக தண்ணீர்க்குழாய் திறந்து தண்ணீர் கொட்டிய சம்பவங்களும் நடந்துள்ளதாம்.


Brandy


- aathipan - 11-05-2005

இது நடந்தது பல வருடங்களுக்கு முன். அப்போது எனது தாயாருக்கு பத்து வயது இருக்கலாம். அப்போது அவர்கள் பேய்க்குளம்(இப்போது அதன் பெயர் மாற்றப்பட்டுவிட்டது) என்னும் இடத்தில் வசித்து வந்தார்கள். வீட்டிற்கு சிறிது தூரத்தில் ஒரு கடை இருந்தது. அடிக்கடி தேவையான பொருட்களை வாங்க எனது அம்மம்மா அவரை அந்தக்கடைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். கடைக்குச்செல்ல பல வீடுகளைக்கடந்து தான் செல்ல வேண்டும். ஒரு மத்த்pயானவேளை எனது தாயார் கடைக்குச் செல்லும் வழியில் ஒரு தோட்ட வீட்டைப்பார்த்தார். அந்த வீட்டின் முன் சில கோழிகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாயுடன் ஒரு சிறுமியும் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள். அவளும் எனது தயாரின் வயதை ஒத்த வயதில் காணப்பட்டதால் தாயார் அவளுடன் நட்புக்கொண்டு ஒன்றாக சிறிதுநேரம் விளையாடி மகிழ்ந்தார்கள். சிறிது நேரத்தின்பின் அந்தப் சிறுமியின் பெற்றோர் எனது தாயாரை மதிய உணவு உண்ண அழைத்துள்ளார்கள். ஏழைக்குடும்பத்தில் பிறந்த எனது தாயாருக்கு அந்த உணவு அமிர்தமாக இருந்ததாம். அது மட்டுமல்ல அவர்கள் மிகவும் அன்பாக நட்புடன் பழகியதால் எனது தாயாரால் இன்றும் அதை மறக்க முடியவில்லை. உணவு உண்ட பின் சிறிது நேரம் விளையாடியபின் வீட்டு நினைவு வர தாயார் விடைபெற்றுவந்துவிட்டார். தாயாரைக்காணாததால் கவலையில் அம்மம்மா கோவம் கொண்டுள்ளார். எங்கே சென்றாய் என்று தாயாரைக்கேட்டுள்ளார். தாயார் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. ஏனெனில் அப்படி யாரும் அங்கு இல்லை. அதன்பிறகு தாயார் விபரமாகச் சொன்ன பின்னும் அம்மம்மாவால் நம்பமுடியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் அம்மா சொன்ன அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் அனைவரும் தீவிபத்தில் இறந்து போனார்கள். சில நாட்கள் கடந்து மீண்டும் எனது தாயார் அந்த கடைக்குச்செல்லும் போது அந்த வீட்டைப்பார்த்திருக்கிறார் அந்த வீடு பாழடைந்து காணப்பட்டிக்கிறது. அங்கு யாரும் வாழ்வதுபோன்ற அறிகுறியே அற்றிருக்கிறது.

Terri