![]() |
|
எமது பலவீனம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: எமது பலவீனம் (/showthread.php?tid=2677) |
- poonai_kuddy - 11-02-2005 எனக்கென்னவோ....எமது பலவீனம் எண்ட தலைப்பு திசைமாறுது போல கிடக்கு.....எனக்கும் இதில சில விசயங்கள் சொல்லோணும் எண்டு ஆசையா இருக்கு...ஆனா யாழ் விதி தடுக்குது........அதால bye - Mathan - 11-02-2005 ஒரு நாள் ஓய்வின் பின்பு களம் பாத்தால் தலைப்புக்கள் பல பக்கங்களை கடந்துவிட்டது. எதை எந்த தலைப்பில் விட்டுவைப்பது எதை பிரிப்பது என்று கண்டுபிடிக்கவே கடினமாக இருக்கிறது. இந்த தலைப்பை படித்து தனியாக பிரிக்கவேண்டியவை என கருதியவற்றை பிரித்து தனிதலைப்பில் போட்டுள்ளேன், பல கருத்துக்கள் பிரிக்கப்படாமல் விடுபட்டிருக்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> http://www.yarl.com/forum/viewtopic.php?t=7301
- இவோன் - 11-02-2005 மதன் வந்து போன பின்னும் இந்த தலைப்புக்கு பூட்டுப் போடப்படவில்லை என்பது அதிசயம் தான்! - இவோன் - 11-02-2005 மதன் அடுத்ததா.. கருத்துக்களும் அதன் அளவுகளும் பகுதியில உங்களுக்கு வேலை இருக்கிறது. தயாரா இருங்கோ - Mathan - 11-02-2005 இந்த தலைப்பில் குறுக்கால போவான் எழுதிய கருத்துக்களை தொடர்ந்து அதனை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துகளை எழுதுவோர் (குறுக்ஸ் உட்பட) அதனுடன் வேறு விடயங்களை கலக்காமல் தத்தமது கருத்துகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதினால் சிறப்பாக இருக்கும். முழு தலைப்பையும் படித்த போது அது பல இடங்களில் திசைமாறுவதை அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே எழுதப்பட்ட கருத்துகளுக்கு பதில் எழுதுவதற்காக தொடர்ந்து தலைப்புக்கு பொருத்தமற்ற கருத்துக்களை எழுதாமல் அவசியமானதை மட்டும் விவாதித்தால் நல்லது, மற்றய விடயங்களை அவற்றுக்கு பொருத்தமான மற்றய பிரிவுகளில் கலந்துரையாடலாம். - nallavan - 11-02-2005 கருத்துக்கள் திசைதிரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் சம்பந்தப்பட்ட ஒரு விசயம் சொல்லிச் செல்கிறேன். சோவியத் உடைவுக்குப்பின் உடைவுக்கு முன் என்று காலம் அளப்பது சரியென்று படவில்லை. சோவியத்தின் உடைவு எந்தவித்திலும் கோட்பாட்டில் தாக்கம் விளைவிக்காது. நிற்க, புலிகள் இன்றும்கூட தங்கள் உறுதியுரையில் (சத்தியப்பிரமாணம்) "சமவுடமை, தன்னாட்சி, தமிழீழ விடுதலைக்காக" என்றுதான் சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எடுக்கும் உறுதியுரையில் சொல்லும் சமவுடமைக்கு என்ன அர்த்தம்? (விளங்காமல் பாடமாக்கிச் சொல்கிறார்கள் எண்டு ஆரும் விளக்கம் தரமாட்டியளெண்டு நினைக்கிறன்) அத்தோடு தமிழகத்திலிருந்து இடதுசாரியச் சிந்தனையாளர்கள் வன்னிவந்து கலந்துரையாடுகிறார்கள். போராளிகளுக்கு வகுப்புக்கள் எடுக்கிறார்கள்.; இதெல்லாம் எதைக்காட்டுகிறது? மாஸ்கோவில் மழை பெஞ்சா வன்னியில குடைபிடிக்கிறது எவ்வளவு பிழையோ அதைப்போலத்தான் நியூயோர்க்கிலயோ லண்டனிலையோ மழைபெஞ்சாலும் வன்னியில குடைபிடிக்கிறதும் பிழை. வன்னியில பெய்யிற மழைக்குத்தான் குடைபிடிக்க வேணும். என்னைப்பொறுத்தவரை, குடை சரியாகவே பிடிக்கப்படுவதாகப் படுகிறது. - Mathan - 11-02-2005 இதற்கு மேலும் தொடர்ந்து பதில் எழுதி மேலும் மேலும் திசைதிரும்பால் இருக்க தலைப்புடன் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் எழுதுங்கள், சோவியத் உடைவு, புலிகள், சமவுடைமை போன்ற கருத்துக்களை கலந்துரையாட யாராவது தனி தலைப்பை ஆரம்பியுங்களேன். அப்படி ஆரம்பிக்கப்படும் தலைப்பில் இதில் இருக்கும் அதனுடன் தொடர்புடைய கருத்துக்களை அந்த தலைப்புக்கு இடமாற்றி விடுகின்றேன், - kurukaalapoovan - 11-02-2005 நல்லவன் உங்கள் கருத்துக்களை மேலும் கீளுள்ள இணைப்பில் எழுதுங்கோ. தொடரலாம்... நன்றி http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=137115#137115 மதன் நேற்று அடிச்ச வெறி இறங்கேல்லையோ? இன்னும் பூட்டாமல் விட்டுட்டு நிக்குறீர் அது தான் ஒரு சந்தேகம். - Mathan - 11-02-2005 இணைப்பை தந்தமைக்கு நன்றி, இந்த தலைப்புடன் தொடர்பில்லாத அதேசமயம் குறுக்ஸ் தந்த தலைப்புடன் தொடர்புள்ளவற்றை அங்கேயே விவாதிக்கலாம். மற்றது இந்த தலைப்பை முழுமையாக படித்து பார்த்தேன் தலைப்பு பல இடங்களில் திசை திரும்பியிருக்கின்றது ஆனால் முழுக்க முழுக்க தனிப்பட்ட தாக்குதலாக மாறவில்லை, அதனால் இந்த தலைப்பை பூட்ட வேண்டிய அவசியம் கள நிர்வாகத்திற்கு எழவில்லை, எந்த தலைப்பாக இருந்தாலும் கருத்து மோதல்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக உருமாறி அதனால் முற்று முழுதாக மூழ்கடிக்கபடும் போது தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க தலைப்பை மூடுவதை தவிர நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை. இதுவரை அவசியமற்று தலைப்புக்கள் எதையும் பூட்டியதாக எனக்கு நினைவில்லை, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Eelavan - 11-03-2005 குருவிகள் இந்தத் தலைப்பில் இட்ட கேள்விக்கு இதிலேயே பதிலளித்தல் பொருத்தமாகவுள்ளதால். உங்கள் தமிழின் தட்டுப்பாடு களம் அறிந்ததுதான் குருவிகள் அதனைச் சுட்டிக்காட்டினால் அலுமாரிக்கும்,அலவாங்கிற்கும் தமிழ் கண்டுபிடியுங்கள் பிறகு சீரியசை மாத்துவம் என்று படியளக்கிறீர்கள். சீரியசுக்கு தீவிரம் என்றொரு அழகான தமிழ்ச் சொல் இருக்கு.தீவிர சிகிச்சைப் பிரிவு என்று கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது.ஊரிலை நான் எப்படி மலசலகூடம் போவதைக் குறிப்பிடுவேனா நான் ஒப்பீசுக்குப் போயிட்டு வாறன் என்பேன் நீங்கள்? உங்களுக்கென்ன அழுத்தமா இருந்தக் கக்கூசு,மேலாலை இருந்தா ரொயிலட்டு நடத்துங்கோ நடத்துங்கோ.களத்திலை நிறைய பபாக்கள் தமிழ் படிக்க வருவினம் சொல்லிக்கொடுங்கோ. - nallavan - 11-03-2005 சைக்கிள் உதிரிப்பாகங்களைத் தமிழில சொல்லு எண்டு ஜெயலலிதா கேட்டமாதிரித்தான் இதுவும் ஈழவன். இண்டைக்கும் புலிகள் பெயர்ப்பலகையைத் தமிழில வையுங்கோ எண்டா, முதலில உங்கட இராணுவ நிலைகளைத் தமிழில வையுங்கோ பாப்பம் எண்டு ஏளனம் கதைக்கிற சனம் இருக்கு. - kuruvikal - 11-03-2005 Eelavan Wrote:குருவிகள் இந்தத் தலைப்பில் இட்ட கேள்விக்கு இதிலேயே பதிலளித்தல் பொருத்தமாகவுள்ளதால். உண்மைதானே ஆண்டாண்டா...அது தமிழ் இல்லை என்று தெரிந்தும் உச்சரிக்கிறீர்கள்..அழுத்தம் கருதி சில ஆங்கிலச் சொற்களை உச்சரிப்பதால் மட்டும் தமிழ் சீரழிந்துவிடாது...! காரணம்..அலுமாரி என்பது சொல்லித்தான் தெரியனும் வேற்று மொழிச் சொல் என்று...ஆனால் சீரியஸ் இது ஆங்கிலம் என்று எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும்..எனவே அறியாக் கலப்புகள் செய்யும் அளவுக்கு குழந்தைகள் தெளிவில்லாமல் இல்லை..! தெளிஞ்சுதான் இருக்கிறார்கள்..! be சீரியஸ்..! உங்களை நீங்களே பெருமையாகச் சொல்லிக் கொள்வீர்கள்...ஏன்..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 11-03-2005 nallavan Wrote:சைக்கிள் உதிரிப்பாகங்களைத் தமிழில சொல்லு எண்டு ஜெயலலிதா கேட்டமாதிரித்தான் இதுவும் ஈழவன். மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழ் தமிழ் எனும் கருணாநிதி உதய சூரியனை கட்சிச்சின்னமாக வைத்துக் கொண்டு சன் ரீவி நடத்தும் போது ஜெயலலிதா கேட்டதில் தப்பே இல்லை..! அதேதான் புலிகள் என்றாலும் பொதுமக்கள் என்றாலும்..! புலிகளுக்கு மட்டும் தான் கேள்வி கேட்க முடியுமா..மக்களுக்கு கேட்க முடியாதோ...அப்படி அவர்கள் உங்களைப் போல மக்களில் குறை பிடிப்பதில்லை...சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வார்கள்..! சீரியஸ் ஒரு அழுத்ததிற்கு பாவிக்கிறம் என்று சொல்லியும்..அது புரியாமால் தீவிரம் அதிதீவிரம்...என்று சொல்லுறது வேடிக்கை...! இது என்னவோ மற்றவனை பற்றி எல்லாம் அறிஞ்சவன் என்ற பேச்சா இருக்கு...! இதுதான் இங்கு கருத்துகள் பலவீனமாகக் காரணம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- காவடி - 11-03-2005 ஐயா.. குருவிகாள், நீங்கள் ஆங்கிலம் பேசலாம்.. சிங்களம் பேசலாம்.. பிரெஞ்சு பேசலாம்.. அது உங்கள ்விருப்பம்.. ஆனால் இதுவே உங்கள் கருத்துக்களோடு உடன்படாதவர் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதாவது எழுதியிருப்பின் அவர்களுடை தமிழுணர்வை கேள்வி கேட்டு நீங்கள் சகல பக்கத்தாலும் வாதாடியிருப்பீர்கள். நினைவிருக்கிறது. ஒரு கவிதை தொடர்பான விவாதத்தில் அதை எழுதியவருடைய பெயரில் முதல் இரண்டும் ஆங்கிலத்தில் இருக்க கண்டு.. அது என்ன ஏதோ வெள்ளைக்காரன் மாதிரி இருக்கிறது என்ற ஏளனத் தொனியில் கருத்து எழுதியிருந்தவர் நீங்கள். ஒரு வேளை ஒரு அழுத்தத்திற்காக அவரும் தனது பெயரின் முதல் இரு எழுத்தை ஆங்கிலத்தில் வைத்திருக்கலாம். அதற்கு நீங்கள் ஏதோ மற்றவனை எல்லாம் அறிந்தவன் கணக்காக எழுதிக் குவித்திருந்தமை என்ன நியாயம்.? எனக்குத் தெரியும்.. இந்தக் கேள்விக்கு அதி மேதாவித்தன வார்த்தைகள் என நீங்கள் நினைப்பவற்றை இட்டு ஒரு ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத விவாதம் என்கிற வறட்டுப் பிடிவாதத்தை நடத்துவீர்கள்.. ஆனால்.. நிலைமைகள் என்ன சொல்கின்றதென்றால்... தவறு செய்தேன் என ஏற்றுக்கொள்ளுதல் உங்கள் பிம்பங்கள் உருக்குலையாமல் பாதுகாக்கும். அவ்வாறில்லையெனின்.. மன்னித்துக் கொள்ளுங்கள்.. உங்கள் சாயம் வெளுக்க தொடங்கி விட்டது. - kuruvikal - 11-03-2005 <!--QuoteBegin-காவடி+-->QUOTE(காவடி)<!--QuoteEBegin-->ஐயா.. குருவிகாள், நீங்கள் ஆங்கிலம் பேசலாம்.. சிங்களம் பேசலாம்.. பிரெஞ்சு பேசலாம்.. அது உங்கள ்விருப்பம்.. ஆனால் இதுவே உங்கள் கருத்துக்களோடு உடன்படாதவர் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதாவது எழுதியிருப்பின் அவர்களுடை தமிழுணர்வை கேள்வி கேட்டு நீங்கள் சகல பக்கத்தாலும் வாதாடியிருப்பீர்கள். நினைவிருக்கிறது. ஒரு கவிதை தொடர்பான விவாதத்தில் அதை எழுதியவருடைய பெயரில் முதல் இரண்டும் ஆங்கிலத்தில் இருக்க கண்டு.. அது என்ன ஏதோ வெள்ளைக்காரன் மாதிரி இருக்கிறது என்ற ஏளனத் தொனியில் கருத்து எழுதியிருந்தவர் நீங்கள். ஒரு வேளை ஒரு அழுத்தத்திற்காக அவரும் தனது பெயரின் முதல் இரு எழுத்தை ஆங்கிலத்தில் வைத்திருக்கலாம். அதற்கு நீங்கள் ஏதோ மற்றவனை எல்லாம் அறிந்தவன் கணக்காக எழுதிக் குவித்திருந்தமை என்ன நியாயம்.? எனக்குத் தெரியும்.. இந்தக் கேள்விக்கு அதி மேதாவித்தன வார்த்தைகள் என நீங்கள் நினைப்பவற்றை இட்டு ஒரு ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத விவாதம் என்கிற வறட்டுப் பிடிவாதத்தை நடத்துவீர்கள்.. ஆனால்.. நிலைமைகள் என்ன சொல்கின்றதென்றால்... தவறு செய்தேன் என ஏற்றுக்கொள்ளுதல் உங்கள் பிம்பங்கள் உருக்குலையாமல் பாதுகாக்கும். அவ்வாறில்லையெனின்.. மன்னித்துக் கொள்ளுங்கள்.. உங்கள் சாயம் வெளுக்க தொடங்கி விட்டது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நல்ல கருத்து... உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறோம்..இங்கு (பழைய களம் புதுக்களம்) இயன்றளவு தூய்மையாக தமிழில் எழுத வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும்.. அப்படி செய்தும் இருக்கிறோம்..! நெகிழ்வுத் தன்மைகள் வந்த பின்னர்..நாங்களும் நெகிழ்ந்து கொண்டோம்..அது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியும்..! எனவே அவர்கள் வேடிக்கையாக குருவி நீர் ஏன் ஆங்கிலம் பேசுறீர் எனும் போது அதற்கு காரணம் சொல்லித்தான் ஆக வேண்டும்..! அதுதான் இது...! மற்றும்படி நாங்கள் சாயம் பூசி வரவில்லை..வெளுக்கிறதுக்கு..! எப்போதும் எங்கள் நிலை எங்களளவில் தெளிவானதே..! முரண்பாட்டுக்குள் இணக்கப்பாடு தேடலாமே..அதுதான் பலம் மற்றெல்லாம் பலவீனம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|