Yarl Forum
கொதிக்கிறது திருமலை... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கொதிக்கிறது திருமலை... (/showthread.php?tid=1634)

Pages: 1 2 3 4 5 6


- MUGATHTHAR - 01-30-2006

[quote]திருகோணமலை மாவட்டம் மூதூரில் உள்ள லிங்கநகர்

<b>லிங்கநகர்</b> எனும் இடம் திருகோணமலை நகருக்கு அண்மையில் இருக்கிறது இந்த சுட்டுச் சம்பவம் நடந்த இடம் மூதூரில் ஈச்சலம்பற்றுக்கு அருகிலிருக்கும் <b>லிங்கபுரம்</b> எனும் இடத்தில்......


- மேகநாதன் - 01-30-2006

<b>திருகோணமலையில் மேலும் ஒரு தமிழ் விவசாயி சுட்டுப் படுகொலை </b>

திருகோணமலை லிங்கபுரத்தில் தமிழ் விவசாயி தம்பையா ஜெயராஜ் (வயது 50) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


சேருவில பிரதேசம் லிங்கபுரத்தில் தனது நெல் வயலில் காவல் பணியில் இருந்த போது நேற்று சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இருவாரங்களில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள லிங்கபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ள 2 ஆவது தமிழ் விவசாயி தம்பையா ஜெயராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனவரி 12 ஆம் நாள் தனபாலசிங்கம் என்ற தமிழ் விவசாயியை சிறிலங்கா இராணுவத்தினர் அடித்துப் படுகொலை செய்தனர். தனது வயல் வெளியில் பாதுகாப்புக்காக சென்றிருந்த போது சிறிலங்கா இராணுவத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து 70 தமிழ் விவசாயிகள் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேசத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதையடுத்து லிங்கபுரம் மற்றும் அதை அண்மித்த கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக திருமலை செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள லிங்கபுரம் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சேருனுவர சிறிலங்கா காவல்துறையினருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 01-30-2006

முகத்தார்,

உங்கள் சுட்டிக்காட்டல் மிகச் சரியானதே....
மிக்க நன்றி

ஆனால்,"சங்கதி" இல் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள்..
ஒரு தமிழ் ஊடகமே இப்படிப் போட்டா..???

இப்ப பாருங்க,நீங்க சரியானதைச் சுட்டிக்காட்டிட்டிங்க...
அப்படி யாரும் சொல்லாட்டி
"லிங்க நகர்" "லிங்க புரம்" வித்தியாசம் தெரியாமல் போய்விடும்...


- மேகநாதன் - 01-30-2006

<b>திருமலை மாவட்ட செய்தியாளர்கள் அரச செய்திப் புறக்கணிப்பு போராட்டம் </b>

திருக்கோணமலை மாவட்ட ஊடக வியலாளர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவும் சுட்டுக்கொல்லப்பட்ட சுடரொளி பத்திரிகையின் திருக்கோணமலை செய்தியாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் விசாரணையை துரிதப்படுத்தவும். எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்டாது பாதுகாப்பை ஏற்படுத்தவும் வேண்டி எதிர்வரும் மாசிமாதம் 4ம் திகதி சிறிலங்காவின் 58வது சுதந்திரதினம் வரை அரசாங்க நிறுவனங்களின் செய்திகளைச் சேகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளனர் ஞாயிற்றுக்கிழமை (29.01.2006) நடைபெற்ற சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>


- மேகநாதன் - 02-04-2006

<b>சிறிலங்கா சுதந்திர நாள்: திருமலையில் இன்று முழு அடைப்பு! </b>

சிறிலங்கா சுதந்திர நாளை எதிர்த்து திருகோணமலையில் இன்று சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.


சிறிலங்காவின் 58 ஆவது சுதந்திர நாளைப் புறக்கணிக்கும் வகையில் வர்த்தக நிறுவனங்களை மூடி, வீதி நடமாட்டத்தைத் தவிர்க்குமாறு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பிலான துண்டுப் பிரசுரங்கள் வீதிதோறும் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-07-2006

<b>தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை ஆட்சேபித்து
திருமலைத் தமிழ் வர்த்தகர்கள்
நேற்றுஎதிர்ப்புஆர்ப்பாட்டம் </b>

திருகோணமலையில் தமிழ் வர்த்தகர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமலை நகர தமிழ் வர்த்தகர் கள் திருமலை பொலீஸ் நிலையத்திற்கு முன் பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று நடத்தினர்.
அதேசமயம், நேற்றைய தினம் நகரத்தின் அனைத்துக் கடைகளும் இழுத்து மூடப்பட்டன. தமது பாதுகாப்பிற்கு படைத் தரப்பினர் உத்தரவாதம் தரும்வரை கடைகளைத் திறக்கப் போவதில்லையென்று வர்த்தகர்கள் திட்ட வட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
நேற்று முன்தினம் ஏகாம்பரம் வீதியிலுள்ள வெஸ்கோ நகை மாளிகையைச் சேர்ந்த இரு முஸ்லிம் வர்த்தகர்களைச் சிங்களக் காடையர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கின் றனர். பொல்லுகள், தடிகள் சகிதம் வந்திருந்த சுமார் 15 பேரைக்கொண்ட இந்தக் காடையர் கள் குழு, நாளை (அதாவது நேற்று) கடைகளை திறக்கக் கூடாது என்று கூறியே தாக்குதல் நடத் தியிருக்கின்றது.
இது குறித்து தாக்கப்பட்டவர்கள் அருகிலி ருந்த இராணுவத்தினரிடம் கூறியபோதும் அதனை அசட்டை செய்த இராணுவத்தினர் தங்களால் ஒன்றும்செய்ய இயலாதென கை விரித்துவிட்டனராம்.
இதேபோல், மூன்றாம் குறுக்குத் தெரு விலுள்ள தமிழ் வர்த்தகர் ஒருவரும் தாக்குத லுக்கு உள்ளானார் எனத் தெரியவருகிறது.
இந்தத் தாக்குதல்களை கண்டித்தும், எதிர்ப் புத் தெரிவித்துமே நேற்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் வர்த்தகர்களின் இந்த ஆர்ப்பாட்டத் தையடுத்து, மேற்படி தாக்குதல் குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் திருகோணமலை பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

<i><b>தகவல் மூலம்-உதயன்</b></i>


- மேகநாதன் - 02-08-2006

<b>திருமலையில் மீன்பிடித்தடையினால் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு </b>

திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா கடல்படையினர் விதித்துள்ள கடல் வலய தடைச் சட்டம் காரணமாக 15,000 மீனவ குடும்பங்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளன. இவர்களில் தமிழ் பேசும் மீனவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக துறைமுகத்தை அண்டிய பகுதியிலும், உட்துறைமுக பகுதியிலும் மீன் பிடித்தல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் திருகோணமலை நகரத்தில் துறைமுக உட்பரப்பில் மீன் பிடித்தொழிலை மேற்கொண்டு வரும் 150 குடும்பங்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் இப்பரதேசத்தில் கட்டுவலைமூலம் தொழில் செய்தவர்களை கடற்படையினர் உபகரணங்கள் முற்றாக கடல் ஓரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என கடுமையான சட்டத்தையும் பிரயோகித்துள்ளனர். இதனால் அவர்கள் தமது உபகரணங்களை நெருக்கடி மிகுந்த தமது வீடுகளில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இத்துறைமுக பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு புதிதாக மீன்பிடியை மேற்கொள்ள ஸ்ரீ லங்கா கடற்படையினர் அனுமதி வழங்கியதோடு அவர் அதனை திறம்பட செய்வதற்கு ஒத்தாசைகளயும் வழங்கியுள்ளனர். இதற்கு முன்னர் இத்தடைப்பிரதேசத்தினுள் கட்டுவலை போட்டனர் என்பதற்காக மூன்று தமிழ் மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு தலா 3000 ரூபா தண்ணடமும் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தடை காரணமாக காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக தொழில் செய்த தமிழ் மீனவர்களுக்கு பலத்த அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது. சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக துறைமுக பகுதியில் காக்கைதீவுக்கும், திருகோணமலை இறங்கு துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்படித்தல் முற்றாக தடைசெய்யப்பட்டிருந்தது. ஏனைய பகுதியில் மின் பிடிக்க படையினர் அனுமதித்திருந்தாலும் அண்மையில் கடற்படைப் படகு ஒன்று தாக்கப்பட்டடதைத் தொடாந்து மீன்படிக்க அனுமதியை மறுத்து விட்டதோடு கடுமையான நடவடிக்கைகளையும் கடற்படையினர் எடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு அலுவலகத்திற்கு முன்னால் காக்கை தீவுக்கு அண்மித்த 10 வருடங்களுனுக்கு மேலாக தடைசெய்யப்ட்ட பகுதியில் மீன்படியில் ஈடுபட்டிருந்தோரை பார்க்க வீதியில் பொது மக்கள் ஒன்று கூடி வேடிக்கை பார்த்தனர். வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் அளவுக்கு மூவினத்தையும் சேர்ந்தோர் அங்கு வேடிக்கை பார்ப்பதில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தினதும், கடற்படையினரதும் இச் செற்பாடு தமிழ் மக்கள மீது பிரயோகிக்கப்படும் ஒரு விதமான அழுத்தல் நடவடிக்கையாக அமைகின்றது.

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>


- MUGATHTHAR - 02-21-2006

<b>திருமலை மாணவர் படுகொலை தொடர்பான அறிக்கை நீதிமன்றில் தாக்கல்</b>

திருகோணமலை மானவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலான விசாரணை அறிக்கையை திருமலை நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

மாணவர்களைக் கொன்ற கொலையாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளப் படைத்தரபினர் 14 பேர் நீதிபதி ராமகமலனிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கின் நேரடி சாட்சிகளாக சம்பவத்தில் படுகாயமடைந்த இரு மாணவர்களும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
கடற்கரையில் தாங்கள் அமர்ந்திருந்தபோது கறுப்பு நிற பந்து போன்ற பொருள் ஒன்று முச்சக்கர வாகனம் ஒன்றிலிருந்து வீசப்பட்டு எங்கள் முன்னர் வெடித்தது என்று காயமடைந்த மாணவர் லோகநாதன் காவ்லதுறையிடம் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் தனது காலை இழந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் சிறிலங்கா படைத் தரப்பினரைப் போல் சீருடை அணிந்த 15 பேர் தம்மைத் தாக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்று பின்னர் விடுவித்ததாகவும் அம்மாணவர் கூறியுள்ளார்.

தாம் விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தான் கேட்டதாகவும் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு மாணவரான கோகுலராஜ பரராஜசிங்கமும் இதேபோல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 27ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

puthinam