![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- Mathan - 03-29-2004 Sri Lanka media election takeover By Frances Harrison BBC correspondent in Colombo <b>Sri Lanka's election commission has taken over state-run television and radio amid allegations of misuse in advance of Friday's general election. </b> It is the first time the state-run media has come under an independent authority during elections. The commission is empowered by the constitution to take over the electronic state media, but it has never been done so before. The move comes after a bitter dispute about the role of the media. <b>Bias allegations </b> The election commission's move also comes rather late in the election campaign. Allegations of bias have been levelled against the state media which President Chandrika Kumaratunga took control of five months ago. In a BBC interview earlier this month, she said the state media had been more free in recent months than at any time in the last decade. But the election commission seems to differ. A civil servant from the commission has been appointed to run state television and radio. The current head of state run radio, Hudson Samarasinghe, said they planned to mount a legal challenge to the take over. Mr Samarasinghe complained that private channels were biased in favour of the president's rival, Prime Minister Ranil Wickramasinghe, and yet they were not being taken over. An independent media watcher from the international monitoring group, Transparency International, said he thought the timing was too late - with campaigning almost over. But he said in the past the president had continued to broadcast in favour of her party in the final days when campaigning had stopped - claiming that she was not a candidate so it was not illegal. Thanx: www.bbc.co.uk - Mathan - 03-29-2004 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கும் புதிய பணிப்பாளர் நியமனம் ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 29 மார்ச் 2004, 20:00 ஈழம் ஸ இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கும் புதிய பணிப்பாளர் ஒருவரை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசநாயக்க நியமித்துள்ளார். இதன்படி உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினதும், இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்தினதும் பணிப்பாளராக டபிள்யு.டி.எல்.பெரெரா நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் அறிவித்துள்ளார். இவரது பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தல் முடிவடையும் வரையில் அமுலில் இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 17 ஆம் திருத்தத்தின் (27) 2 ஆம் பிரிவோடு இணைக்கப்பட்டுள்ள இலங்கை ஐனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104 (ஆ) 5 (இ) பிரிவால் தனக்குரித்தாக்கப்பட்ட தத்துவத்தின் பயனைக்கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நன்றி - புதினம் - Mathan - 03-29-2004 ஐனாதிபதி சந்திரிகா, தமிழ் மக்களுக்கு மூன்று விடயங்களை வலியுறுத்தி பகிரங்க அறிக்கை ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 29 மார்ச் 2004, 21:17 ஈழம் ஸ தமிழ் மக்களுக்கு மூன்று விடயங்களை வலியுறுத்தி பகிரங்க அறிக்கை ஒன்றினை சிறிலங்கா ஐனாதிபதி இன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தமது கட்சியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற, Nஐ.வி.பி. உட்பட ஏனைய கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐனாதிபதி அந்த அறிக்கையில் கூறியிருக்கின்றார். இதேவேளை தமிழ் மக்களுக்காக தனிநாடு கோருவதை தான் முழுமையாக நிராகரிப்பதாகவும் கூறியிருக்கின்றார். பல்லின மக்கள் வாழ்வதால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டதை தான் ஏற்றுக்கொள்வதாக ஐனாதிபதி தெரிவித்தார். ஆனால் விடுதலைப் புலிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் சமாதானத்தை ஏற்படுத்தாது என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் தான் அர்ப்பணிப்புடன் ஈடுபடப் போவதாகவும் ஐனாதிபதி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருக்கின்றார். நன்றி - புதினம் ஓட்டுக்களுக்காக இந்த அறிக்கை? - kuruvikal - 03-29-2004 <img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/ThampaPongu_1.jpg' border='0' alt='user posted image'> திருகோணமலை தம்பலகாமத்தில் மக்களின் உணர்வுகள் இப்படித்தான் வெளிப்பட்டிருக்கிறது....! நன்றி தமிழ் நெற்....! - kuruvikal - 03-29-2004 <span style='color:red'>மட்டு அரச அதிபர் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கண்டனம் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திரு.மௌனகுருசாமி மீது மேற்கொள்ளப்பட்ட கொடுரமான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமையகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இத்தாக்குதல் சம்பவங்கள் அப்பிரதேச மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையாகும். இத்தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்தத் தயாராகின்ற காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கம் கொண்டவையாகும். இத் தாக்குதல் சதி நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </span> நன்றி புதினம்...! - Mathan - 03-29-2004 SLN denies involvement in intimidating LTTE cadres [TamilNet, March 29, 2004 14:32 GMT] The Sri Lanka Navy Monday denied its involvement in the intimidation of LTTE political activists recently in the Puliyankoodal area in Kayts division in the Jaffna district. The SLN's denial came in a response to a complaint by the LTTE's Jaffna district political secretariat with the Jaffna regional office of the Human Rights Commission of Sri Lanka (HRCSL), sources said Mr.C. Ilamparithi, Jaffna district LTTE head, said in his complaint that a group of activists of the Eelam Peoples' Democratic Front (EPDP), led by former Member of Parliament Mr.N. Mathanarajah and assisted by members of the Sri Lanka Navy and police, had threatened and intimidated LTTE members who were engaged in political activities in Puliyankoodal area. Sri Lanka Navy and Sri Lanka Police made their responses to the Jaffna office of the HRCSL when its regional co-ordinator commenced his investigation into the complaint. The SLN had denied any involvement in the incident. The Kayts Police Officer-in-Charge had told the HRCSL that his men were not involved in that incident. However he had informed HRCSL that Mr.Mathanarajah made a counter complaint against the LTTE in regard to the Puliyankoodal incident, sources said. Thanx: TamilNet - kuruvikal - 03-29-2004 <img src='http://sooriyan.com/images/stories/chandrika01.jpg' border='0' alt='user posted image'> <span style='color:red'>பிரபல ஊடகவியலாளர் றோகண குமார படுகொலையின் பின்னணியில் ஐனாதிபதி சந்திரிகா! தென்னிலங்கையின் பிரபல ஊடகவியலாளர் றோகண குமார படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சிறிலங்கா ஐனாதிபதி இயங்கியிருப்பதாக பிரான்சின் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. பிரபல சிங்கள வார இதழான "சற்றான" சஞ்சிகையின் செய்தி ஆசிரியர் ரோகண குமார படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலை உலகிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்கா ஐனாதிபதி தொடர்பான ஊழல் மோசடி விவகாரம் ஒன்றை அம்பலப்படுத்திய காரணத்தாலேயே றோகண குமார படுகொலை செய்யப்பட்டடதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் ஐனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் றோகண குமாரவை கொலை செய்யும்படி உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஐனாதிபதியின் சிறப்பு படைத்துறைப் பிரிவினரே றோகண குமாரவை கொலை செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. இதேவேளை, உலகின் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்று ஐனாதிபதியின் குரல் தரவல்ல அதிகாரி ஐனதாச பீரிஸ் மறுத்துள்ளார். </span> ஐ.பி.சி /புதினம்...! நன்றி சூரியன் டொட் கொம்...! - Mathivathanan - 03-29-2004 சார்பான பத்திரிகை என்பதையும் கருத்தில்கொண்டு பார்க்கையில் போராளிகளை வற்புறுத்தி வைத்திருக்கிறார்.. ஆயுத்தால்அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார் என்ற செய்திகளுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக இன்றைய தினக்குரல் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறதே..? அவர்கள் விட்ட அறிக்கையை ஊர்ஜிதம் செய்யும்வகையில் வெளியேற விருப்பமானவர்களை வெளியேற அனுமதித்ததாயும் செய்தி தெரிவிக்கின்றது.. <span style='font-size:25pt;line-height:100%'>ஒரு வார காலத்தில் கருணா தரப்பிலிருந்து 1600க்கும் மேற்பட்ட போராளிகள் வெளியேற்றம்</span> மட்டக்களப்பில் கருணா குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்குள் 1 600க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிடத் தயாராகுமாறு கருணா விடுத்த உத்தரவை ஏற்க மறுத்த 800 போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். இதேவேளை, தங்கள் சொந்த பாதுகாப்பு காரணமாக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகளும் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளுடன் போரிட மறுத்தவர்களில் 800க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதை கருணா தரப்பும் ஒப்புக் கொண்ட அதேநேரம், புலிகள் தரப்புடன் மோதலொன்று வரும் போது இவர்களது செயற்பாடுகள் தங்களைப் பாதிக்குமென்பதாலேயே அவர்களை விலகிச் செல்ல அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், இராணுவத்தினருடன் மோதலென்று ஒன்று வரும்போது இவர்களை மீளவும் அழைக்க முடியுமெனவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், கருணா தரப்பு இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் படையினருடன் மோதலொன்றுக்கு இனிச் சாத்தியமில்லை என்றும், சகோதர மோதலை தங்களால் நினைத்துப் பார்க்க முடியாதெனக் கூறியே இவர்கள் விலகிச் சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தங்கள் சொந்தப் பாதுகாப்புப்க் காரணங்களுக்காக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். எனினும், போராளிகளை பராமரிப்பதில் பெரும் செலவு ஏற்படுவதாகவும் தற்போது வன்னியிலிருந்து நிதியுதவி முற்றாகவும் நிறுத்தப்பட்டுள்ளதால், உள்@ரில் போதிய பணம் திரட்ட முடியாத நிலையில் இந்த 800 பெண் போராளிகளையும் அங்கிருந்து வெளியேற அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.thinakural.com/2004/March/29/ImpNews.htm#5 - Mathan - 03-29-2004 Kanani Wrote:தற்ஸ்தமிழின் தமிழ் இலங்கை செய்தி: தவறுக்கு வருந்துகிறோம் கொழும்பு: இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சி வேட்பாளர் உட்பட 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக நேற்று வெளியான செய்தி தவறானது. இருவர் சுடப்பட்டு காயமடைந்தார்கள் என்பதே சரியான செய்தி. யாரும் கொல்லப்படவில்லை. இந்தத் தவறான செய்திக்கு வருந்துகிறோம் ஆசிரியர் தற்ஸ் தமிழ் - Mathan - 03-29-2004 Posters, leaflets against Karuna Group in Batticaloa Mar 29, 2004, 17:38 [TamilNet] Posters criticising the Karuna Group appeared in many parts of Batticaloa Monday. Several leaflets urging people in the troubled eastern district not to provide any form of assistance to the group led by renegade LTTE commander, Mr. Vinayagamoorthy Muralitharan, were also distributed in Batticaloa town and its outskirts Sunday night. Police and civil society sources in Batticaloa said Monday that a large number Liberation Tigers are now active in many parts of the eastern district and are behind the posters and leaflets. "Although it is very obvious now their numbers are rapidly increasing by the day, there is no indication so far that the Tigers will trigger clashes with the Karuna Group now", a well informed Catholic priest in the east said. Thanx: Tamil Net - Mathan - 03-29-2004 யார் விஜயவை கொன்றது என்பதில் கூட வோட்டுக்காக சண்டை. <img src='http://www.dailymirror.lk/2004/03/30/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'> நன்றி - டெய்லி மிரர் - Mathan - 03-29-2004 மட்டுநகரில் கருணாவுக்கெதிராக சுவரொட்டிகள், பிரசுரங்கள் மட்டக்களப்பு, மட்டக்களப்பு நகரில் கிழக்கின் முன்னாள் புலிகள் தளபதி கருணா அம்மானுக்கு எதிரான சுவரொட்டிகள் கடந்த சனியன்று இரவோடிரவாக ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே பிரசுரங்களும் வீசப்பட்டிருந்தன. அத்தோடு தபால் மூலமும் பிரசுரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு நகரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பதுடன் தொலைபேசி மூலமும் உண்மை நிலைவரங்களை அறிவித்து வருகின்றனர். நன்றி - வீரகேசரி - Mathan - 03-29-2004 150 புலிகளை சம்பூருக்கு அழைத்துவரும் திட்டம் ஏப். 5 வரை ஒத்திவைப்பு (எஸ்.என்.ஆர்.பிள்ளை) தேர்தலை முன்னிட்டு ஓமந்தையிலிருந்து 150 புலிகள் இயக்க அங்கத்தவர்களை சம்பூருக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை பின் போடப்பட்டுள்ளதாக சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. ஓமந்தையில் இருந்து 150 புலிகள் இயக்க அங்கத்தவர்களை இன்று 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சம்பூருக்கு அழைத்து வர ஏற்பாடுகளை செய்து தருமாறு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் சமாதான செயலகத்தை கடிதம் மூலம் கேட்டிருந்தது. அதேவேளை நாளை 31ஆம் திகதி 150 பெண் போராளிகளை சம்பூரில் இருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லவும் புலிகள் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் தேர்தல் காலம் என்பதால் அழைத்து வரப்படும் புலிகள் இயக்கத்திற்கு பாதுகாப்பு படையினரால் வழித்துணை பாதுகாப்பு வழங்க முடியாது. அந்த கடமையை 5ஆம் திகதி செய்யத் தயாராக இருக்கின்றோம் என சமாதான செயலகம் புலிகள் இயக்கத்திற்கு அறிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி - வீரகேசரி - anpagam - 03-29-2004 அது சரி இந்த புலிகளின் குரல் வாணொலி மட்டக்கிளப்புக்கு வேலை செய்யுதில்லையா புதியகருவி வாங்கினது எண்டார்கள் ஏன்....வேலை செய்யல்ல... - Mathivathanan - 03-29-2004 anpagam Wrote:அது சரி இந்த புலிகளின் குரல் வாணொலி மட்டக்கிளப்புக்கு வேலை செய்யுதில்லையா புதியகருவி வாங்கினது எண்டார்கள் ஏன்....வேலை செய்யல்ல...பற்றி இல்லையாம்.. அதுதான் கொம்பியூட்டராலை விடுறாங்களாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-30-2004 Mathivathanan Wrote:anpagam Wrote:அது சரி இந்த புலிகளின் குரல் வாணொலி மட்டக்கிளப்புக்கு வேலை செய்யுதில்லையா புதியகருவி வாங்கினது எண்டார்கள் ஏன்....வேலை செய்யல்ல...பற்றி இல்லையாம்.. அதுதான் கொம்பியூட்டராலை விடுறாங்களாம்.. உங்க லொள்ளுக்கு குறைச்சலே இல்லை தாத்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-30-2004 தமிழ்அலை பத்திரிகை நிர்வாகத்திலிருந்து பிளவுபட்ட அணியினர், இன்னுமொரு நிழற்பதிப்பை ஆரம்பித்துள்ளனர் ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 2:57 ஈழம் ஸ தமிழ்அலை என்ற பெயரில், நிழற்பதிப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இன்னுமொரு பத்திரிகை, கருணாவின் பின்னால் உண்மை தெரியாமல் அணிவகுத்திருக்கும் போராளிகளுக்கும் மக்களுக்கும் தற்போதைய உண்மை நிலைமைகளை எடுத்துச் சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அதனது முதற்பதிப்பில் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். தங்களது உயிருக்குக் கடும் ஆபத்து இருப்பதைத் தாம் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ள இப்பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர், தமது உயிருக்கு அஞ்சாது உண்மையை எடுத்துச் சொல்லவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர். கடந்த சில வாரங்களாக தாம் கடுமையான அழுத்தம் காரணமாகவே பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து செயற்பட்டதாகவும், இனியும் அப்படியான துரோகச் செயலில் ஈடுபட தங்கள் மனம் இடம்கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள, பிரிந்துசென்ற பத்திரிகையாளர்கள், இனிமேல் தாம் அமைதி காக்கப்போவதில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார்கள். கிழக்கிலங்கை மக்களை முற்றாகக் குற்றம் சாட்டும் புலம்பெயர் மக்கள் அதை நிறுத்திக்கொண்டு, கருணா என்ற தனிமனிதனின் குற்றத்தை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ள இப்பத்திரிகை, கிழக்கில் வாழும் மக்கள் உண்மை நிலையை அறிந்து கொண்டுள்ளார்கள் என்றும், அவர்களது ஆதரவு எப்போதும் வன்னித் தலைமைக்கே இருக்கும் என்றும் தெரிவிக்கிறது. <b>http://www.thamilalai.net</b> நன்றி - புதினம் - Mathan - 03-30-2004 சிறிலங்காவில் இம்முறை தொங்கு பாராளுமன்றமே அமையுமென ஆய்வாளர்கள் கருத்து ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 2:58 ஈழம் ஸ கடந்த நான்கு வருடங்களில் மூன்றாவதாக இடம்பெறும் இத்தேர்தலில், எந்தக் கட்சியும் பெரும்பான்மைப் பலம் பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்புக்கள் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாகவும், ஒரு தொங்கு பாராளுமன்றம் அமையும் வாய்ப்பே அதிகமாக உள்ளதாகவும் பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகக்குறைந்தது 113 ஆசனங்களையாவது ஒரு கட்சி பெற்றால் மட்டுமே, பெரும்பான்மைப் பலமுள்ள ஒரு ஆட்சியை அமைக்க முடியுமென்பதால், இத்தகைய ஒரு தேர்தல் முடிவு அமைவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது. இந்நிலையில், சிறிலங்காவில் அரசியற் குழப்ப நிலையும், கலவரங்களும் உருவாக நிறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். நன்றி - புதினம் - manimaran - 03-30-2004 Wonder baby In a conference, three scientists - an American, a German and a Sri Lankan - were talking and bragging about the technological advances their respective countries have achieved in the field of medicine. Says the American, "In Washington, there was a baby boy born without arms so we attached artificial arms on him. And now that he's grown, he has become an Olympic professional boxer and a gold medallist at that!" The German replied, "That's nothing to what we have done. Back in Berlin, there was a baby girl born without legs so we attached a pair of artificial legs on her. Now she is a three-time marathon gold medallist in the Olympics!" The Sri Lankan interjected, "Is that all you have, just gold medallists? In Colombo we had a baby girl born without a HEAD! We attached a COCONUT and she is now head of state!" Just joking ole girl, just joking! http://www.thesundayleader.lk/20040328/nutshell.htm - Mathan - 03-30-2004 BBC Wrote:தமிழர் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வெளிநாடுகளில் உள்ள தமிழர் இயக்கங்கள் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள், இதேசமயம் ஈ மெயில் மூலமும் அப்படியான ஒரு பிரச்சாரம் நடைபெறுகின்றது, அதனை உங்கள் பார்வைக்காக ........... <b>இணையத்தளத்தில் ஒரு வேண்டுகோள்</b> பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி புலம்பெயர்ந்த தமிழர்கள் இணை யத்தளம் ஊடாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புலம்பெயர்ந்த உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்!| என்ற தலைப் பில் வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இனி எமது ஈழம் ஜப்பானாக மாறப் போகிறதா? இல்லை சுடுகாட்டுச் சாம் பல்மேடாக மாறப்போகிறதா? என்ப தைத் தீர்மானிக்கும் வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். அதன் முதற்படியாக நாம் எமது இன உறுதியினையும் நாட்டுப் பற் றையும் காட்டும் அரிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது வரும் பொதுத்தேர் தல். சில தேசவிரோத சக்திகள் அந் நிய மற்றும் சிங்களக் கைக்கூலிக ளாக மாறித் தமிழர் ஒற்றுமையைச் சிதைக்க கங்கணம்கட்டி நிற்கின்றன. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஈழத்தில் வாழ் கின்ற எம் உறவுகளைத் தொலைபேசியில் அழைத்து அவர்களைத் தமிழ்த் தேசி யக்கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி கூறுங்கள். நீங்கள் செய்யப் போகும் இந்த அளப்பரிய சேவை இனிவரும் எமது ஈழச்சந்ததிக்கு நீங் கள் அமைக்கப்போகும் ஏணிப்படி யாகும் என்றுள்ளது. நன்றி - உதயன் |