![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
கள உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்! - Selvamuthu - 03-09-2006 கள உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்! தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது தீர்ப்பு நாளைதான் கூறப்படும் என்பதனை அறியத்தருகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் நன்றி. - RaMa - 03-09-2006 நடுவர்களே! எங்கை தீர்ப்பு.. ஆறின காஞ்சியாக போகுது... வேளைக்கு கொண்டு வந்து போடுங்கோ... - Selvamuthu - 03-09-2006 கஞ்சி அடுப்பிலே இருக்கிறது. அரிசியும் அவிந்துவிட்டது. இனி பாலை விட்டு இறக்கவேண்டியதுதான். (கஞ்சி காய்ச்சும் முறை சரியா?) - RaMa - 03-09-2006 Selvamuthu Wrote:கஞ்சி அடுப்பிலே இருக்கிறது. காஞ்சி அடிப்பிடிக்க முதல் இறக்குங்கோ. சாப்பிட காத்திருக்கின்றொம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Selvamuthu - 03-09-2006 சரி, சுடச்சுடவே தருகிறோம். இன்னும் ஒரு மணி நேரத்தில்! அது சரி "கஞ்சி" வேணுமா "காஞ்சி" வேணுமா? "றொம்" அல்ல "றோம்" ரமா. கோபிக்கவேண்டாம்! - iniyaval - 03-09-2006 <b>வாழ்த்துக்கள் நன்மை அணியினருக்கு. பாராட்டுக்கள் தீமை அணியினருக்கு திறமையாக வாதாடியமைக்கு. எல்லோருக்குமே தெரியும் இணையத்தால் கூடியளவு நன்மை என்று ஆகவே நன்மை அணியினருக்கு வாதாடுவதற்கு இலகுவாக இருந்து இருக்கும். தீமை என்பது குறைவு. இல்லாத ஒன்றை வாதாடுவது என்பது எவ்வளவு கடினம் அதில் தான் உங்கள் திறமையை நீங்கள் காட்டக் கூடியதாக இருக்கும். ஆகவே எனது மனது நிறைந்த பாராட்டுக்கள் . நான் இப்பட்டிமன்றத்தில் பங்கு பற்றி இருந்தால் நிச்சயமாக தீமை அணியில் தான் பங்கு பற்றி இருப்பேன். சரி அடுத்த பட்டிமன்றத்தில் சந்திப்பம் அடுத்த பட்டிமன்றம் எப்போ? என்ன தலைப்பு? நன்றி இனியவள்</b> - Selvamuthu - 03-09-2006 அனைவருக்கும் எனது அன்பான வணக்கம் பட்டிமன்றம் முடிவடைந்தும் எமது தீர்ப்பை இன்றுதான் கூறியுள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தை தந்த சகோதரி இரசிகை, தோளோடு தோள் நின்று உதவிய சகோதரி தமிழினி, அணித்தலைவர்கள் இளைஞன், சோழியன், பங்குபற்றிய அனைத்து உறவுகள், பார்வையாளர்களாக இருந்த அனைத்துக் களஉறவுகள், அன்பர்கள் யாவருக்கும், முக்கியமாக திரு.மோகன் அவர்களுக்கும் எனது நன்றி. - stalin - 03-09-2006 ஆகா...வெற்றிமீது வெற்றி வந்து நம்மை சேரும்............... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- அருவி - 03-09-2006 நன்மையணி வாதிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <img src='http://img385.imageshack.us/img385/3747/congratulation6fc.jpg' border='0' alt='user posted image'><img src='http://img427.imageshack.us/img427/7825/congratulations4fq.gif' border='0' alt='user posted image'> - Eswar - 03-10-2006 எவ்வளவுதான் எடுத்துச் சொல்லியும் "கெடுகிறன் பந்தயம் பிடி " எண்டு நிண்டா நாங்க என்ன பண்ண. இதைத்தான் சொல்லுறது கெடுகுடி சொல் கேளாது எண்டு. ம்ம்ம்...... வாழ்த்துக்கள்.......... வேற என்ன நான் சொல்ல..... - Snegethy - 03-10-2006 ஆஹா பட்டிமன்றம் தீர்ப்பு வழங்கியாச்சா?? தமிழினி அக்காக்கும் ஆசிரியருக்கும் நன்றி......அதுசரி அடிக்கடி எதிரணி என்று சொல்றீங்கிளே யாரவை? - வர்ணன் - 03-10-2006 ஹைய்யா.. தீர்ப்பு வந்திருச்சு! இணையத்தால் நன்மைதான்னு சொல்லிட்டாங்கல்ல! நடுவர்கள் சொன்னது போல - இது ஒரு தீவிர கருத்து பகிர்வு நிகழ்வு அம்புட்டுதான் -! இதுல நாமதான் ஜெயிச்சிட்டோம்னு துள்ளி குதிக்க எதுவும் இல்லீங்க! 8) இந்த தீர்ப்பால் - நிறைய மகிழ்ச்சி அடையகூடியது - எதிர்தரப்பில வாதத்தை வச்சவங்கதான் ! தீமைன்னு தீர்ப்பு சொல்லி இருந்தா- நாளைக்கு இணையம் பாவிக்கும்போது - ஒரு குறுகுறுப்பா இருக்கும் இல்லியா? 8) பை-த-வே : ரசிகை - அடுத்த தலைப்பு என்ன- ? அட - பயப்பிடாம சொல்லுங்க - எப்பிடியும் அடுத்த கிறிஸ்மஸ்க்கு முன்னம் - வாதாடி முடிச்சிடுவோம்ல - முடிச்சு! :wink: :wink: 8) - தூயவன் - 03-10-2006 பட்டிமன்றத்தை சிறப்பாக முடித்தமைக்கு நன்றிகள்.இதை வெற்றிகரமாக செயற்படுத்தி முடித்த ரசிகை, நடுவர்கள், மோகன் அண்ணா, மட்டுறுத்தினர்கள், சக உறுப்பினர்களுக்கு நன்றிகள்!! - narathar - 03-10-2006 பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளும் இந்தப் போட்டியை நடாத்தி முடித்த ரசிகைக்கும்,இன்னல்களுக்கு மத்தியில் நடுவராக செயற்பட்ட செல்வமுத்து அவர்களுக்கும்,தனியாக பட்டிமன்றத்திற்கு நடுவராக பொறுப்புடன் செயற்பட்ட தமிழினிக்கும்.ஆரோக்கியமான கருத்தாடலாக இதை நகர்த்திய கருத்தாளருக்கும் நன்றிகள்.யாழ்க் களத்தில் உருப்படியாக செய்யப்பட்ட ஒரு சில விடயங்களில் இந்தப் பட்டி மன்றம் முக்கிய இடம் வகிக்கிறது.இது தொடர வேண்டும் என்பதுவே எனது விருப்பம்.பொருத்தமான தலைப்புடன் மீண்டும் சந்திப்போம். களத்தில் உள்ள எல்லாக் கருத்தாடல்களும் பட்டி மன்றத்தைப் போல் ஆரோக்கியமானதாக இருந்தால் களம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? - ப்ரியசகி - 03-10-2006 <span style='color:green'><b>நன்மை அணியினரே வாழ்த்துக்கள்..</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [size=9]தோற்றாலும் வாழ்த்தி செல்லணும்..அதுதான் பெரிய மனசாம்..அப்பிடித்தான் எங்கட அப்பம்மா சொல்லி தந்தவா...</span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 03-10-2006 நடுவர்களின் தீர்ப்புக்கள் அவர்கள் மட்டில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கட்டும்..! வாழ்த்துக்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 03-10-2006 பட்டிமன்றம் நல்ல கருத்துகளுடன் நடந்தது ஓழுங்கமைத்த ரசி அக்காக்கும் நடுவர்களான தமிழ் அக்கா செல்வமுத்து அங்கிள் மற்றும் இரண்டு அணி அங்கத்தவர்களுக்கும் நன்றிகள் - வியாசன் - 03-10-2006 நடுவர்மீது எனக்கு ஒரு சந்தேகம் அவர் உண்மையில் நடுவர் மட்டும்தானா அல்லது எதிரணியில் வேறு பெயரில் வாதாடினாரா? ஏனென்றால் அவர் அடிக்கடி எதிரணியினர் எதிரணியினர் என்று குறிப்பிட்டார் உண்மையான நடுவராக இருந்திருந்தால் அவர் இருபக்கத்தையும் சமமாக ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்.அவர் நன்மை என்ற அணியில் வாதாடியபடியால்தான் அவர் மனதில் எங்களை எதிரணியாக மனதில் நினைத்ததை யோசிக்காமல் தீர்ப்பில் பாவித்திருக்கலாம். அடுத்ததாக அவர் இளைஞன் இறுதியில் வைத்த கருத்தை நிராகரித்ததாக ஒரு வரியேனும் குறிப்பிடவில்லை. இதுபோன்ற பட்டிமன்றங்கள் கள உறவை பாதிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து முன்பு நடந்த பட்டிமன்றத்தில் பங்குபற்றினோம் சோழியனின் தீர்ப்பை மறுவார்த்தையில்லாமல் ஏற்றுக்கொண்டோம். இது எனது தனிப்பட்ட கருத்து - AJeevan - 03-10-2006 <span style='font-size:21pt;line-height:100%'>பட்டி மன்ற முடிவுகளை நடுவர்கள் செல்வமுத்து அவர்களும் தமிழினி அவர்களும் அறிவித்திருக்கிறார்கள். நல்ல பல கருத்துகளையும் முடிவுகளோடு சொல்லியிருக்கிறார்கள். இந்த பணி கடினமானதொன்று............... இது ஒரு விளையாட்டு மைதானம் போன்றது. இங்கே யாரும் தொடர்ந்து வெல்வோரும் இல்லை. தோற்போரும் இல்லை. வெற்றி தோல்விகளை அடக்கத்தோடு முகம் கொடுப்பது இளைய தலைமுறையை மேலும் உயர்வடைய வைக்கும். வென்றவர்களாக இங்கே கருதப்படுவோர் மட்டுமல்ல தோற்றாதாக கருதப்படுவோரும் நமக்கு தெரியாத பல கருத்துகளை இங்கே வைத்திருந்தார்கள். அவை எமக்கு மட்டுமல்ல பலருக்கும் பிரயோசனமாகவே இருந்திருக்கிறது. இங்கே வெற்றி பெற்றதற்காக துள்ளிக் குதிக்கவோ தோற்றதற்காக துவண்டு விடவோ தேவையில்லை. நல்ல கருத்துகள் இப் பட்டி மன்றத்தினூடக வந்திருக்கிறது. இப்படி அருமையாக வாதாடக் கூடிய நண்பர்கள் யாழ் களத்தில் இருக்கிறார்கள் என்று அனைவரும் பெருமைப்படலாம். ஒரு போட்டிக்காக ஒரு பாடசாலையில் இரு அணியாக பிரிந்து போட்டியிடும் போது ஒரு அணிதான் ஜெயிக்கும். அதற்காக நாம் அந்த பாடசாலையை வெறுப்பதில்லை. நாம் விரோத மனப்பான்மையை கொண்டு வாழ்வதில்லை. காரணம் நாம் தொடர்ந்தும் அந்தக் கூரையின் கீழ்தான் வாழ்கிறோம். அப்படித்தானே? நாளை நாம் வேறு ஒரு தலைப்பில் வேறொரு பக்கமாகி கலந்து கருத்துகளை வைக்க வேண்டி வரும். தோற்றவர்கள் வெல்லவும் வென்றவர்கள் தோற்கவும் சிலவேளை இதற்கு மாறான முடிவுகளும் ஏற்படலாம். போட்டி என்று ஒன்று நடந்தால் எங்கும் நடுவர்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதே ஒரு சிறந்த போட்டியாளரை மேன்மையடைய வைக்கும். நாம்தான் நமது எதிர்கால இளைய சமூகத்துக்கு வழிகாட்டியாக வேண்டும். விவாதத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்............. நடுவர்களது கடும் உழைப்புக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். நாம் சகோதரர்களாய் என்றும் இணைந்து நிற்போம். நன்றி.</span> - RaMa - 03-11-2006 வெற்றி பெற்ற நன்மை அணியினாருக்கு எனது வாழ்த்துக்கள். |