Yarl Forum
Breaking News - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Breaking News (/showthread.php?tid=7412)

- Mathan - 03-28-2004

எனது உயிருக்கு அச்சுறுத்தல் கூடுதல் பாதுகாப்பு வழங்குங்கள் மட்டு.பிரதி பொலிஸ்மா அதிபரிடம் ஜோசப் வேண்டுகோள்

(தெய்வீகன் ,வோஷிங்ரன்)

இனந்தெரியாதோரால் தொலைபேசி மூலம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

""நான் உயிர்வாழப்போவது சிறிது காலம் தான். ஆனாலும், இதுவரை காலமும் முன்னெடுத்து வந்த தமிழ்மக்களின் தேசியக்கொள்கையை எந்தக் காரணத்திற்காகவேனும் தியாகம் செய்ய மாட்டேன்.''

தேர்தல் பிரசாரங்களின் போது தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்தக்கூடாது என்றும் மட்டக்களப்பை விட்டு வெளியேறி விடுமாறும் கருணா தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் இந்நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க அடியோடு மறுப்புத் தெரிவித்திருக்கும் ஜோசப் பரராஜசிங்கத்தை மட்டக்களப்பில் இருந்து வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுடனான கோரிக்கை நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது.

ஆனால், அவரை அங்கிருந்து வெளியேறக்கூடாது என்று இளைஞர்களும், பொதுமக்களும் அன்புக்கட்டளையிட்டுள்ளனர். அவரது உயிருக்கு வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் அவருக்குப் பக்க பலமாக நின்று எதிர்கொள்ளத் தயாராக இருப்பது என்றும் அவர்கள் சபதம் பூண்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

""மிரட்டலுக்கு பயந்து தேர்தலில் இருந்து ஒருபோதும் வாபஸ்பெறமாட்டேன். ஆனால் தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நிறுத்தியிருக்கின்றேன்.

எனது நீண்ட காலக் கொள்கையை எந்தவொரு காரணத்திற்காகவும் நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வதன் மூலம் மட்டு.அம்பாறை மாவட்ட மக்கள் பிரதேச வாதத்தை விரும்பவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்கள் நிரூபிப்பார்கள்''எனவும் ஜேசப்பரராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

போராளிகள் வன்னி நகருகின்றனர்

இது இவ்வாறிருக்கையில், புலிகளின் தலைமை மட்டு.அம்பாறை போராளிகளுக்கு விடுத்த அறிக்கையை அடுத்து அங்குள்ள போராளிகள் வன்னிக்கு நகருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக போராளிகளின் பெற்றோர்களே தமது பிள்ளைகளை வன்னிக்கு கூட்டிச் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருணா தரப்பினர் தளம் அமைத்துள்ள தரவைக் காட்டினுள் ஊடகவியலாளர் எவரும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி - வீரகேசரி

- Mathivathanan - 03-28-2004

பொலீஸ்..ராணுவத்திட்டை பாதுகாப்பு கோருறதுக்கு நம்மாக்களைக்கேட்டுத்தான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 03-28-2004

உண்மைதான் எப்படியிருப்பினும் சனநாயக சோசலிசக் குடியரசில் தங்கள் பாதுகாப்பை கேட்டுத்தான் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது டக்ளசிற்கும் சங்கரிக்கும் பாதுகாப்பிற்குப் போகிறவர்கள் தானே பரராஜசிங்கத்திற்கும் பாதுகாப்புக் கொடுக்கட்டுமேன்

- Mathivathanan - 03-28-2004

உங்களுக்கு ஓட்டைக் காதே.. அறுத்துறுத்து இராணுவத்திடம் பாதுகாப்புக்கோரியுள்ளனர் எண்டு நெடுகலும் உந்த றேடியோ சொல்லுது.. கடைசியா கேட்ட பாதுகாப்பு தேர்தலுக்குப் பிறகுதான் கொடுக்கப்படும் எண்டு மறுமொழியும் வந்திட்டுது.. உங்களுக்குத்தான் கேக்குதில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vallai - 03-28-2004

என்ன மதி ஆருக்குப் பாதுகாப்பு ஆரிட்டையிருந்து பாதுகாப்பு ஒரு
"குடிமகன்" கள்ளடிச்சிட்டு தனியா நடமாட முடியேலை உவங்கடை சனநாயகமும் மண்ணாங்கட்டியும் எப்ப ஒரு குடிமகன் ரோட்டிலை நிம்மதியா போக முடியுதோ அப்ப தான் அந்த நாடு சுதந்திர நாடு எண்டு எங்கடை ஊர் வல்லிபுரப் பரியாரியார் சொல்லுறவர்

- Mathivathanan - 03-28-2004

vallai Wrote:என்ன மதி ஆருக்குப் பாதுகாப்பு ஆரிட்டையிருந்து பாதுகாப்பு ஒரு

சுட்ட அப்பத்தை தோசையை நின்மதியாயிருந்து சாப்பிடுவமெண்டால் இந்தாள் விடுதில்லை.. வெறியடிச்சிட்டுவந்து நாற்சந்தியிலை நிண்டு கூச்சல்போடுது.. கடத்தல் பிடிக்கவந்த ஆமிக்காரன் தொல்லையைவிட இந்தாள் தெல்லை தாங்கேலாமல்க்கிடக்கு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Jaffna_voice - 03-28-2004

vallai Wrote:என்ன மதி ஆருக்குப் பாதுகாப்பு ஆரிட்டையிருந்து பாதுகாப்பு ஒரு
"குடிமகன்" கள்ளடிச்சிட்டு தனியா நடமாட முடியேலை உவங்கடை சனநாயகமும் மண்ணாங்கட்டியும் எப்ப ஒரு குடிமகன் ரோட்டிலை நிம்மதியா போக முடியுதோ அப்ப தான் அந்த நாடு சுதந்திர நாடு எண்டு எங்கடை ஊர் வல்லிபுரப் பரியாரியார் சொல்லுறவர்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :x அவனவன் தமிழ் கதைத்துக்கொண்டு நாட்டில் நடமாடமுடியேல்லையே எண்டு கவலைப்படுறான். உமக்கு கள்ளு அடித்துவிட்டு நடமாடமுடியேல்ல என்று கவலையோ, இந்த லட்சணத்தில ஈழதமிழ் பிரைச்சனை பற்றி கருத்து எழுதுறீங்க

- vallai - 03-28-2004

என்ரை ரெக்கமண்டிலை ஒருமாதிரி உள்ளை வந்திட்டியள்.
அப்பு ராசா உங்கை பார்

மனிசி சுட்ட அப்பம் தோசையை தின்னவிடுறாங்கள் இல்லையெண்டு மச்சான் மதிக்கு கவலை கூவில் கள்ளுக் குடிக்க முடியேலை எண்டு எனக்குக் கவலை

எல்லாத்துக்கும் என்ன காரணம் உந்த இனப்பிரச்சனை அதை எப்பிடித் தீர்க்கலாம்

தீர்க்கிறன் தீர்க்கிறன் எண்டு சொல்லி நிவாரணம் மட்டும் தந்த டக்ளஸாலையே எங்களுக்கு ஒழுங்கா கள்ளுக் கிடைக்க செய்யமுடியேலை

சாய்... இவனொருத்தன் யாழ்ப்பாணப் பொடியனாம் கள்ளுத் தெரியாதாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- anpagam - 03-28-2004

வலை உமது கருத்தாடல் முறை வரவேற்ககூடியதாக உள்ளதே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

- Mathan - 03-28-2004

Eelavan Wrote:உண்மைதான் எப்படியிருப்பினும் சனநாயக சோசலிசக் குடியரசில் தங்கள் பாதுகாப்பை கேட்டுத்தான் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது டக்ளசிற்கும் சங்கரிக்கும் பாதுகாப்பிற்குப் போகிறவர்கள் தானே பரராஜசிங்கத்திற்கும் பாதுகாப்புக் கொடுக்கட்டுமேன்

டக்ளசிற்கும் சங்கரியும் பாதுகாப்பு கேக்கிற மாதிரி பரராஜசிங்கமும் கேட்கும் நிலைமை என்றால் அவர்களுக்கும் பரராஜசிங்கத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் அல்லவா?

- Eelavan - 03-28-2004

BBC Wrote:

இருவரும் ஒரே பகுதியினரிடம் பாதுகாப்பு கோருகின்றார்கள் என்றாலும் யாரால் பிரச்சனை வரும் என நினைக்கிறார்கள் என்பதுதான் உள்ளீடு

- Mathan - 03-28-2004

Eelavan Wrote:

பரராஜசிங்கத்துக்கு பழைய புலி மத்தவங்களுக்கு ...

- Eelavan - 03-28-2004

முன்பு புலி இப்போது தமிழ் மக்கள்

- Mathivathanan - 03-28-2004

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

- Mathivathanan - 03-28-2004

Eelavan Wrote:முன்பு புலி இப்போது தமிழ் மக்கள்
சாரைப்பாம்புக்குப் பயப்பிடு அளவுக்கு மக்களுக்குப் பயமில்லை.. ஐந்தறிவு புலிக்கும் வாலுகளுக்கும்தான் பயமெண்டு நான் நினைக்கிறன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 03-28-2004

Eelavan Wrote:முன்பு புலி இப்போது தமிழ் மக்கள்

மக்களுக்கு அவர்கள் பயப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

- Mathivathanan - 03-28-2004

<span style='font-size:21pt;line-height:100%'>ஊர்காவற்துறை சம்பவத்தை யாழ்ப்பானத்து பத்திரிகையான உதயன் இப்படி செய்தி வெளியிட்டிருக்கிறது.. இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன..?</span>
:?: :?: :?:
[size=14]ஊர்காவற்றுறையில்
சிறுமி மீது துஷ்பிரயோகம்
ஊர்காவற்றுறையில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் 12 வயதுப் பள்ளிச் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒனறு இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பிரஸ்தாப சிறுமியை வழிமறித்த நபர் ஒருவர் அருகில்உள்ள பற்றைக்குள் அவரை இழுத்துச் சென்று து~;பிரயோகம் செய்ய முயன்றார் என ஊர்காவற்றுறைப் பொலீஸில் அவரது பெற்றோர்க ளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்தச் சம்பவத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரஸ்தாப சிறுமியின் பெற்றோர் பொலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு ஈ.பி.டி.பி. வேட்பாளர் மதனராஜன் அச் சுறுத்துகின்றார் என்றும் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி உதயன்
:!: :?: :?:

- Mathan - 03-28-2004

Mathivathanan Wrote:<span style='font-size:21pt;line-height:100%'>ஊர்காவற்துறை சம்பவத்தை யாழ்ப்பானத்து பத்திரிகையான உதயன் இப்படி செய்தி வெளியிட்டிருக்கிறது.. இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன..?</span>
:?: :?: :?:
[size=14]ஊர்காவற்றுறையில்
சிறுமி மீது துஷ்பிரயோகம்
ஊர்காவற்றுறையில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் 12 வயதுப் பள்ளிச் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒனறு இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பிரஸ்தாப சிறுமியை வழிமறித்த நபர் ஒருவர் அருகில்உள்ள பற்றைக்குள் அவரை இழுத்துச் சென்று து~;பிரயோகம் செய்ய முயன்றார் என ஊர்காவற்றுறைப் பொலீஸில் அவரது பெற்றோர்க ளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்தச் சம்பவத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரஸ்தாப சிறுமியின் பெற்றோர் பொலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு ஈ.பி.டி.பி. வேட்பாளர் மதனராஜன் அச் சுறுத்துகின்றார் என்றும் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி உதயன்
:!: :?: :?:

பாலியல் துஷ்பிரயோகம் பெண்ணுக்கு எதிரான ஒரு கொடுமையான அடக்குமுறை. இனப்பிரைச்சனை ஆரம்பித்த பிறகு தமிழ் பெண்கள் அதிகமாக இலங்கை ராணுவத்தால் இந்த அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இப்போது இது போதாது என்று தமிழர்களே தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள். இது யாராக இருந்தாலும் கண்டிக்கப்ப்டவேண்டிய ஒன்று. இது ஈ.பி.டி.பியால் செய்யப்பட்டிருந்தால் ஆயுதமேந்திய குழுவுக்கு எதிராக மக்கள் என்னதான் செய்யமுடியும்.

- Mathan - 03-28-2004

நீங்கள் எதையோ சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அதை நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் தாத்ஸ். இந்த சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?

- Mathivathanan - 03-28-2004

BBC Wrote:நீங்கள் எதையோ சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அதை நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் தாத்ஸ். இந்த சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?
உதயன் பத்திரிகையில் செய்தி சொல்லப்பட்டிருக்கும் விதம்.. எதிர்மறையான கருத்தை தருகிறது..
மேலும் விசாரணைகள் ஏதுமின்றி குற்றம் நிரூபிக்கப்படதுபோன்ற நேரடிச் செய்தி.. வானொலிகளில் முதன்மைப்படுத்தி இரண்டுநாட்களாக சொல்லப்படும் விதம்.. என்பன என்னத்தை சொல்லுகின்றன..?
:?: :?: :?: