![]() |
|
கைக்கூ கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கைக்கூ கவிதைகள் (/showthread.php?tid=7785) |
- aathipan - 10-07-2004 மஞ்சள் கம்பளம் விரித்து வசந்தகாலத்திற்கு வரவேற்பு துணைதேடிக்கூவும் குயில் - aathipan - 10-07-2004 தோட்டத்தில் மேயுது பஞ்சடைத்த கன்றுக்குட்டி அது அம்மா என்றழைத்து நாளாயிற்று - aathipan - 10-07-2004 தண்ணீர் வற்றிய குளம் கொக்குகள் "கட்வாக்" செய்கின்றன.. - aathipan - 10-07-2004 என்ன கவலை? கள்ளுப்பானைகளுடன் பனைமரங்கள் - aathipan - 10-07-2004 "நாய்கள் ஜாக்கிரதை" அறிவிப்பு நாய்களுக்கு ஏன் எச்சரிக்கை? - வெண்ணிலா - 10-07-2004 <b>நான்கு கண்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்து </b> <b>காதல்</b> - வெண்ணிலா - 10-07-2004 <b>சந்ததிக்காய் கைச்சாத்திடப்படும் பகிரங்க ஒப்பந்தம்</b> <b>திருமணம்</b> - வெண்ணிலா - 10-07-2004 <b>தாம்பத்திய தவத்தில் கிடைத்த வரம்</b> <b>குழந்தை</b> - Sabesh - 10-30-2004 குடைக்குள் மழை -சினிமா குடிசைக்குள் மழை வாழ்க்கை! கதவை தாழிட்டுப் படுக்கிறேன் எப்படி வந்து நுழைகிறாய் கனவில்! வறுமையிலும் வயிறு நிறைந்திருந்தது கர்ப்பிணிப் பெண்! கட்டில் ஆடாமல் தொட்டில் ஆடியது... சோதனைக்குழாய் குழந்தை...! இதொண்டும் நான் எழுத இல்லை...தினகரன்.கொம்மில சுட்டது -நன்றி: தினகரன்.கொம்- - kavithan - 10-30-2004 Quote:இதொண்டும் நான் எழுத இல்லை...தினகரன்.கொம்மில சுட்டது அட அப்படியா ரொம்ப நன்றி... - Jaya - 11-18-2004 சொல்லைத்தேடி அகராதிக்குள் தொலைந்து போனவன். கவிஞனாகாமல்க்கலைந்த கனவான கனவான் ஒருவன் குறுங்கவிதை குரங்குவித்தை அரங்கவிதி அற்ற அரங்கவித்தை Jaya <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Jaya - 11-22-2004 என வீடடுததகரககூரையில தாரைமழையின தாளம மேகததின மிருதஙகததனியாவரததனம Jaya - Om_shanthi - 11-26-2004 பனித்துளிகள் எப்படித் தூய்மைப்படுத்தப்படுகிறது உலகின் தூசிகளை? - kuruvikal - 11-26-2004 வரிப்புலி வீரம் வேகம் விவேகம் வாங்கிய மைந்தன் வையகத்துள் விடிவெள்ளியாய் - பிரபாகரன்...! - kuruvikal - 11-26-2004 கூந்தலுக்குள் குடியிருந்து ஜாடைகாட்டும் என்னவள் அழகு மலர்...! - Om_shanthi - 11-26-2004 பூச்சாண்டி பொம்மை ன்நெல் வயலில் எத்தனை விழிப்புணர்வற்று !! எத்தனை உபயோகமாய் !! - Om_shanthi - 11-26-2004 உதிர்ந்த இலை கிளைக்குத் திரும்புகிறதோ? வண்ணத்துப் பூச்சி. - kuruvikal - 11-26-2004 சூனியமாய்ப் போனால் உச்சரிக்கும் வார்த்தை ஓம் சாந்தி....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Om_shanthi - 11-26-2004 நீயாய்த்தான் விழி மலரவேண்டும் நிலவொளியில் குளிக்கும் நீள்வரி மலர்களைத் தரிசிக்க ! - Om_shanthi - 11-26-2004 இதைப் புரிந்து கொள்.. சூனியமே இருட்டு.. அந்த இருட்டில் சென்றால்தான் ஒளியை தரிசிக்கலாம் !! 8) |