![]() |
|
இந்திய ஊடகங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: இந்திய ஊடகங்கள்...! (/showthread.php?tid=7719) |
- pepsi - 12-03-2003 AJeevan Wrote:எந்த நாட்டு நிகழ்ச்சிகளை வாங்கினாலும், தமக்கென சொந்த நிகழ்ச்சிகளை தயாரிக்காத எந்த ஊடகமும் நிலைக்காது. (டெலிபோன் நிகழ்ச்சிகள் அல்ல. அதைச் செய்ய வானோலி போதும். அதற்கு ஏன் ஒரு தொலைக் காட்சி?) சரியாகச் சொன்னீக அஜீவன். தற்போது இலவசம் என்று சொல்லி ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க தொலைபேசி நிகழ்ச்சிகளே. அதுவும் அவர்கள் நிறுவனத்தின் தொலைபேசி அட்டையின் பின் இலக்கத்தை அழுத்தினால் மட்டுமே பங்குபற்றிக்கொள்ளலாம். இவர்கள் முதலில் தொ.கா ஆரம்பிக்கும் போது சொன்னார்கள் புலம்பெயர் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்போவதாக ஓரே ஒரு ஜோசியருக்கு மட்டும் வாய்புக் கொடுத்திருக்கிறார்கள் அதுவும் தொலைபேசி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. :? - nalayiny - 12-04-2003 உண்மை தான். அண்மையில் தொலைக்காட்சியைப் பாற்போமே என போட்டேன். நகைச்சுவை நேரம் என ஒரு நிகழ்வு போய்க்கொண்டு இருந்தது. மூன்று நல்ல கலைஞர். பாடலை மாத்தி பாடி கொலை செய்து கொண்டு இருந்தார்கள் நானும் கொலைசெய்யப் பட்டு விடுவேனோ என பயந்து தொலைக்காட்சியை உடனடியாக நிறுத்தி விட்டேன். AJeevan Wrote:இங்கே (புலத்தில்) ஓரு நிகழ்ச்சியை தயாரிக்க கொடுக்கும் பணத்தில் , ஒரு நாள் புரோகிறாமையே வாங்கி விடலாம் என்று சொன்னவர்கள் இப்போதுதான் கன்னத்தில் கை வைத்து தடவுகிறார்கள். - ganesh - 12-04-2003 இறால் போட்டுதான் சுறா பிடிப்பார்கள் இலவச தொலைக்காட்சி என்றார்கள் கட்டணத்தொலைக்காட்சியிலும் பார்க்க இவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் செலவு அதிகமாவுள்ளது செய்திகளைத்தவிர மற்றவைகள் தொல்லைக்காட்சியாக உள்ளது இனியும் ஏமாறாதீர்கள் - ganesh - 12-04-2003 இதுவும் ஒரு இந்திய ஊடகமா? நம் நாட்டு வாசம் தெரியவில்லை - vasisutha - 12-05-2003 அப்படித்தான் எல்லோரும் கேட்டுக்கொள்கிறார்கள். இந்திச் செய்திகளுக்கு முன்னுரிமை. இந்திய நடிகர்கள் பேட்டி. தொலைபேசி உரையாடலில் இந்திய தமிழ் பேசும் அறிவிப்பாளர்கள். ஆங்கில உச்சரிப்பிலும் அப்படியே. - sethu - 12-05-2003 வரப்போகும் தேசத்துரோக வானொலியும் இந்திய ஊதகம் தானுங்கோ பொறுத்திருங்கோ தேசத்துரோகிகள் மீண்டும் வந்து கொண்டு இருக்கினம். - mohamed - 12-05-2003 ஆரோக்கியமான கருத்துக்களை பலர் சொலிலியிருக்கிறார்கள். நமக்கு வந்த ஆவேசத்தை கூட ஒரு பக்கம் மூட்டை கட்டிவைத்து விட்டு சிந்திக்க வைத்திருக்கிறார்கள் அஜீவனும், வீராவும். பல உண்மைகளை வெளியில் கொணர்ந்தமைக்கு நன்றி. இப்ப பூனைக்கு மணி கட்டுவது யார்? இந்த புலம் பெயர் ஊடகங்களை இங்கே உள்ள கலைஞர்களை வைத்து நிகழ்ச்சிகளை கொண்டு வர அழுத்தம் யார் கொடுக்கப்போகிறார்கள்? இதற்கு இந்த நிறுவனங்கள் தயாரா? எனது சொந்த அனுபவத்தில் கூற வேண்டுமானல், இந்த தொலைக்கட்சிகள் தரம் பற்றி பயப்படுகின்றன. தரம் என்று இந்த தொலைக்காட்சிகள் இந்திய தரத்தை வைத்திருப்பதே மிக வேதனையான விடயம். ஒரு தொலைக்காட்சி பிரான்ஸில் தயாரான படங்களை ஒரு தொகுப்பாக போட்டார்கள். அதை பற்றிய விமர்சனைத்தை மக்கள் தமக்குள்ளாகவே வைத்தும் விட்டனர். விளைவு? புலம் பெயர் தயாரிப்புகளை மக்கள் மௌனமாக நிராகரிப்பு! ஆனால் இந்த தயாரிப்புகளை மேற்கொண்டவர்களிடம் விமர்சனம் சென்றதா? அண்மையில் லண்டனில் ஒரு படம் வெளியாகியது. இதைப்பற்றி விமர்சனம் செய்ய ஒரு தொலைகட்சி இந்த தயாரிப்பாளர்களை முதலில் அணுகி நாங்கள் உங்களையும் வைத்து ஒரு விமர்சனம் செய்வேம். நீங்களும் உங்கள் கருத்தை கூறுங்கள், ஆனால் ஒளிப்பதிவுக்கு மட்டும் கொஞ்சம் பணம் கொடுக்கவேண்டும். காரணம் அதற்கு இந்த நிறுவனம் பணம் கொடுக்காதாம். அறிவிப்பாளர் பாவம் அவருக்கு அக்கறை இருக்கு ஆனால் நிறுவனத்திற்கு இருக்கோ? இது ஒரு சின்ன உதாரணம். ஆனால் அதற்காக நாம் விசக் கிருமிகள் பக்கம் விழுவதையும் ஏற்றுக்கொள்ள முடியதாது. தொடரந்து நமது தொலைக்காட்சிகளை விமர்சிப்பதன் மூலமே அவர்களை சரியான பாதைக்கு செல்ல வைக்க முடியும். - mohamed - 12-05-2003 ஒரு ஆதங்கம் - உந்த சன் டீவீ சந்தா டிசம்பர் 1ம் திகதியுடன் இலவசம் இல்லை எண்டு சொல்லிச்சினம். பிறகு அண்டைக்கு முக்கியமான நிகழ்ச்சிகளை மௌனமாக விட்டிச்சினமாம், (ஒலி இல்லாமல்) பிறகு மெல்ல மெல்ல திறந்து விட்டிச்சனமாம். அண்ணாமலை, மெட்டி ஒலி ரசிகர் பரவசப்பட்டு சொன்னார். மெட்டி ஒலியிலை ஆரோ ஓடினவையம் அதைப் பார்ககேலாமல் போச்சாம், ஆனால் பிநகு இலவசமாக வந்ததை வைத்து கூட பிடிக்கேலாமல் கிடக்காம். சன் டிவீ சந்தா அம்போ போல தான் கிடக்குது, ஜெயத ரீவியை காணேல்லை ஏதும் தெரிஞ்சா சொல்லுங்கோவன்!!!! - shanthy - 12-06-2003 AJeevan Wrote:இங்கே (புலத்தில்) ஓரு நிகழ்ச்சியை தயாரிக்க கொடுக்கும் பணத்தில் , ஒரு நாள் புரோகிறாமையே வாங்கி விடலாம் என்று சொன்னவர்கள் இப்போதுதான் கன்னத்தில் கை வைத்து தடவுகிறார்கள். அஜீவன் உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால் அம்மாவை ஒருவன் கொலைசெய்ய வரும்போது அம்மா எனக்கு முந்தி அடிச்சவா அதாலை எனக்குக் கவலையில்லையென்று இருக்க முடியுமா ? என்றோ ஒருநாள் பொருளாதார பலமின்மையால் அல்லது எமது கலைஞர்களின் அருமை தெரியாது இருந்த எமது ஊடகம் சொன்ன ஒரு வார்த்தையை இன்று து}க்கி வைத்து அன்று அப்படிச் சொன்னார்கள் இன்று அவர்களை எதிர்ப்பதோ அல்லது அழியட்டும் என்று விட்டுவிடுவது எமது ஊடகத்துக்கு நாமே வேட்டுவைக்கும் நிலமையாகத்தான் பார்க்க முடிகிறது. ரீரீஎன்னில் தற்போது பல புதிய நிகழ்ச்சிகள் சொந்தத் தயாரிப்பாக வருகிறது. ஆனால் அதை எம்மவர்கள் ஏனோ கவனிக்கிறார்களில்லை. எங்கள் மழலைகளின் நிகழ்ச்சியைவிட தென்னிந்திய ஊடகங்களில் வருகின்ற குழந்தைகளின் நிகழ்ச்சிகளைத்தான் அச்சா , ஆகா ஓகோ என்கிறார்கள். இந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் தொலைபேசி நிகழ்ச்சிகள் இல்லையா ? - aathipan - 12-07-2003 சுதேசிய ஊடகங்களுக்கு எமது மக்கள் முழுமையான ஆதரவு கொடுப்பது மகிழ்ச்சியான விடயம். சுதேசிய ஊடகங்களுக்கு எல்லா நிகழ்ச்சிகளையும் தயாரிக்க முடியாது. தயாரிப்பாளர்கள் சுவையான நிகழ்ச்சிகளைத்தயாரித்து ஊடகங்களுக்;கு விற்பனை செய்யலாம். அல்லது தங்கள் நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித்தரசொல்லி அந்த நேரத்தில் தாங்கள் தயாரித்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பலாம். தயாரிப்பில் ஏற்பட்ட செலவுகளை விளம்பரதாரர்களிடம் அறவிட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் சுதேசிய ஊடகங்கள் பயன் பெறுவதுடன் தயாரிப்பாளர்களும் பயனடையலாம். வளர்ந்துவரும் எமது சுதேசிய இயக்குனர்களை கலைஞர்களை வளர்க்க ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும். இலங்கை இந்தியாவில் உள்ள மற்ற ஊடகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இவர்களை அவ்வப்போது குறிகிய காலபயிற்சிக்கு வாளர்ந்த ஊடகங்கிடம் அனுப்பலாம். இத்துறையில் சிறந்து விளங்குபவர்களை அழைத்து கருத்தரங்குகளுடன் கூடிய பயிற்ச்சிப்பட்டறைகளை ஏற்படுத்தலாம். இந்தியாவில் உள்ள கூத்துப்பட்டறை, சின்னதிரை இயக்குனர்சங்கம் போன்ற அமைப்புகளிடம் இதற்காக உதவியைப்பெறமுடியும். அதற்காக முழுவதுமாக அவர்களைப்பின்பற்ற வேண்டியதில்லை. ( பத்திரிகையாளர்கள் இப்படித்தான் தங்களை வாளர்த்துக்கொள்கிறார்கள். மற்ற நாட்டு பத்திரிகையாளர்களின் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து பயற்சிப்பட்டறை ஏற்படுத்தி புதிய நுட்பங்களை கற்றுக்கொள்கின்றனர். ) - aathipan - 12-07-2003 எமது மக்கள் இந்திய என்றதும் எதிரிநாடு என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு இந்தியா அரசியல்வாதிகள் தான் காரணம். உண்மையில் மக்களுடனான உறவு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சில பல விடயங்களில் இந்தியா ஒரு மாதிரித்தான் நடந்து கொள்கிறது. இருந்தாலும் எமது மக்கள் நிச்சயமாக ஒரு அமைப்பபை ஏற்படுத்தி இங்கு வந்து வேண்டிய தொழில் நுட்பத்தைக்கற்றுக்கொள்ளாலாம். எந்த சம்பத்ந்தமும் இல்லாத சிங்களவர்கள் எல்லாம் வந்து இங்கே தொழில்நுட்பத்தை கற்றுச் செல்கின்றனர். ஏன் எமது மக்கள் பயன்பெறக்கூடாது. பழைய காயங்களை இனி மறந்துவிடுங்;கள். பழிக்குப்பழி ஆகிவிட்டது. உங்கள் வளர்ச்சிக்கு இந்தியதமிழர்கள் உதவுவார்கள். நீங்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன்கீழ் உதவியைக்கோரலாம். பயன்பெறலாம். சும்மா கிடைத்தால் எதற்கும் மதிப்பு இல்லை. நிச்சயமக இதற்கு பணம் செலவுசெய்யவேண்டித்தான் இருக்கும். - AJeevan - 12-07-2003 shanthy Wrote:AJeevan Wrote:இங்கே (புலத்தில்) ஓரு நிகழ்ச்சியை தயாரிக்க கொடுக்கும் பணத்தில் , ஒரு நாள் புரோகிறாமையே வாங்கி விடலாம் என்று சொன்னவர்கள் இப்போதுதான் கன்னத்தில் கை வைத்து தடவுகிறார்கள். Quote:ஆனால் அம்மாவை ஒருவன் கொலைசெய்ய வரும்போது அம்மா எனக்கு முந்தி அடிச்சவா அதாலை எனக்குக் கவலையில்லையென்று இருக்க முடியுமா ? <span style='font-size:23pt;line-height:100%'>அம்மா, குழந்தைக்கு பக்கத்தில் இருந்தால் முடிந்ததை உதவலாம். ஆனால், பக்கத்திலயே இல்லாத அம்மாவானால், அவருக்கு நடப்பதை, எந்தக் குழந்தையால் தடுக்க முடியும்?</span> செவிடன் காதுகளில் சங்கு..........சங்கு................?????
- kuruvikal - 12-07-2003 aathipan Wrote:எமது மக்கள் இந்திய என்றதும் எதிரிநாடு என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு இந்தியா அரசியல்வாதிகள் தான் காரணம். உண்மையில் மக்களுடனான உறவு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சில பல விடயங்களில் இந்தியா ஒரு மாதிரித்தான் நடந்து கொள்கிறது. இருந்தாலும் எமது மக்கள் நிச்சயமாக ஒரு அமைப்பபை ஏற்படுத்தி இங்கு வந்து வேண்டிய தொழில் நுட்பத்தைக்கற்றுக்கொள்ளாலாம். எந்த சம்பத்ந்தமும் இல்லாத சிங்களவர்கள் எல்லாம் வந்து இங்கே தொழில்நுட்பத்தை கற்றுச் செல்கின்றனர். ஏன் எமது மக்கள் பயன்பெறக்கூடாது. பழைய காயங்களை இனி மறந்துவிடுங்;கள். பழிக்குப்பழி ஆகிவிட்டது. நாமும் இதையே சிந்தித்தோம்...எமது நண்பர்களுடன் கலந்தாலோசித்த போது நாம் இதைச் சொன்னோம். நீங்கள் களத்தில் அதே பொருளில் குறிப்பிட்டுள்ளீர்கள் நன்றிகள்...கவனிக்கத் தக்க விடயம்....!சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா.....????! :twisted: :twisted:
- shanthy - 12-07-2003 [quote=AJeevan]quote="AJeevan"]<span style='font-size:23pt;line-height:100%'>அம்மா, குழந்தைக்கு பக்கத்தில் இருந்தால் முடிந்ததை உதவலாம். ஆனால், பக்கத்திலயே இல்லாத அம்மாவானால், அவருக்கு நடப்பதை, எந்தக் குழந்தையால் தடுக்க முடியும்?</span> செவிடன் காதுகளில் சங்கு..........சங்கு................?????பக்கத்திலிருக்கும் அம்மாவைத்தானே சாகடிக்க நிற்கிறது கருத்து. பிள்ளைக்குத் தன்னை அம்மா அடித்த கோபத்தை மனதில் வைத்துத்தான் இப்படிக் குதறியெறிய நினைக்கிறது. செவிடன் காதில் சங்கூதுவதாக நினைத்து ஒழுங்கான காதுகளையல்லவா செவிடாக்க முனைகிறது நிலமை. - AJeevan - 12-07-2003 shanthy Wrote:[quote=AJeevan]quote="AJeevan"]<span style='font-size:23pt;line-height:100%'>அம்மா, குழந்தைக்கு பக்கத்தில் இருந்தால் முடிந்ததை உதவலாம். புலம் பெயர் கலைஞர்கள் பங்கு கொண்ட சில குறும்படங்கள் (குழந்தைகள்) இணையத்தில் வந்த போது ஒரு வார்த்தை கூட பேசாதவர்கள், இப்போது 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வேற்று தயாரிப்புகளோடு வாழும் தொலைக்காட்சிகளுக்காக பேச வந்தது வியப்பாக இருக்கிறது? ஐரோப்பாவில் முதல் தமிழ் தொலைக் காட்சியாக TRT தமிழ் ஒலி-ஒளி ஆரம்பமான போது ஒரு சதமும் வாங்காமல் எனது சொந்த பணத்திலும், உழைப்பிலும் (என்னோடு பணியாற்றியவர்கள் உழைப்பும் இங்கு உண்டு.இவர்களது சேவையும் இலவசம்.) வாரா வாரம் சுவிஸ் நேரம் என்ற நிகழ்ச்சியை சுவிஸ் கலையகம் (இது எனது கலையகம்) என்ற பெயரில் தயாரித்து வழங்கி வந்தேன். தவிர சிறிது காலம் சுவிஸ் செய்திகளை TRT தமிழ் ஒலிக்காக இரவுகளில் வழங்கினேன். சுவிஸ் நேரம் வழி புலத்தில் உள்ள கலைஞர்கள் மக்கள் மற்றும் கலை-இயல்-இசை- இயக்க நிகழ்வுகளைக் கூட எதுவித பக்க சார்புமற்று செய்து வந்தேன். இது சுவிஸில் மட்டுமல்ல ஐரோப்பாவில் பெரும் பாலானவர்களுக்கு தெரியும்.இப்படியே தொடர முடியாத நிலை, சொல்லி விட்டு நின்று விட்டேன். சிறிது காலத்துக்கு பின்னர் TRT சில பிரச்சனைகளால் கை மாறியது. (இது எனக்கு தேவையில்லாத விடயம்.) நான் ஒரு சாராருக்காக வேலை செய்ய விரும்புவதில்லை. நான் ஒரு கலைஞன். கலைஞன் அனைவருக்கும் பொதுவானவன். நான் அரசியல்வாதியல்ல.என் நண்பர்கள் எல்லா ஊடகங்களிலும் இருக்கிறார்கள்.நான் அனைத்து ஊடகங்களுக்கும் செல்வதுண்டு.அவர்களுக்கு என்னைத் தெரியும்.அதனால் பலருக்கு நான் பிடிவாதக் காரணாகத் தெரிவதுண்டு.அது பிடிவாதமல்ல, எனது கொள்கை. நான் ஒன்றை மட்டுமே சொல்வேன். புலத்தில் இருக்கும் எந்த ஊடகத்துக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. அதை மறுப்பதற்கில்லை. இவற்றின் மேல் பழி போடுவதல்ல எனது நோக்கம். புலத்தில் எத்தனை ஊடகம் வந்தாலும் அது நல்லது. உலக வளர்ச்சியை எமது தன்னலத்துக்காக சேறு பூசுவது ஒரு போதும் நியாயமாகாது. எந்த ஊடகம் நல்ல படைப்புகளை செய்கிறதோ அது நிலைக்கும். அது யாராக இருந்தாலும். தொலைக் காட்சி வந்த போது சினிமா அழியும் என்றார்கள் அது அழியவில்லை.அதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒருபடிதான். வருந்தும் இதயங்களே, புலத்திலுள்ள கலைஞர்களுக்கு, இவர்களில் எவராவது பணம் கொடுத்து எதையாவது (படைப்புகளை) வாங்குவதுண்டா என்று கேளுங்கள்? இல்லை கொஞ்சமாவது கொடுக்க நினைத்துதாவது உண்டா என்று கேளுங்கள்? எமது கலைஞர்களுக்கு கொடுக்க இல்லாதது , ஏனையவர்களுக்கு கொடுக்க மட்டும் எங்கிருந்து வருகிறது? எமது கலைஞர்கள் வாழ்வதற்கும் பொருளாதாரம் வேண்டும். செடிக்கு பசளையும், தண்ணீரும் தேவை. அது இல்லாது செடி தொடர்ந்து அழகாக காட்சி தராது. வாடிப் போன செடிகள் புலத்தில் அதிகம். <span style='font-size:25pt;line-height:100%'>யோசிப்பார்களா? </span> சாப்பிட்டது எப்படியாவது வெளியாக வேண்டும்.அது இப்போது வாந்தியாக வரத் தொடங்கியிருக்கிறது. __________________________________அஜீவன் (மு.கு:- நான் லண்டன் புறப்படுவதால், மீண்டும் வரும் வரை நான் யாழைப் பார்க்க முடியாது.நன்றி , வணக்கம்.) - shanmuhi - 12-07-2003 லண்டன் சென்று விடுமுறையை இனிதே... மகிழ்ந்திட... வாழ்த்துக்கள். - vasisutha - 12-07-2003 இந்த தொல்லை வேண்டாம் என்றுதான் நாஙங்கள் இப்ப ரீவி பாக்கிறதை வீட்டில நிப்பாட்டிட்டம். ஒன்லி ரேடியோக்கள் தான் - vasisutha - 12-07-2003 இண்டைக்கு நான் ஈரிபிஸி கலந்துரையாடலில் பங்குபற்றலாம் எண்டு நினைக்கிறன். லைன்தான் கிடைக்குதோ தெரியாது - ganesh - 12-07-2003 நிச்சயம் லைன் கிடைக்கும் தற்போது ஊடகங்கள் கேட்போரை விட அதிகம் - vasisutha - 12-07-2003 இன்னும் கிடைக்கவில்லை. நேயர்கள் தொடர்ந்து வருவதால் தொடர்பு கிடைப்பது கஸ்டமாக இருக்கிறது. சேது அருமையாக கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கிறார். |