![]() |
|
சினிமா சினிமா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிமா சினிமா (/showthread.php?tid=7402) |
- Eelavan - 06-04-2004 நண்பர் BBC இற்கு குடில்களிருந்து விடயங்களைத் தரும்போது அவர்களது முகவரியையும் கொடுத்தீர்களானால் களத்தின் மற்றவர்களும் போய் ரசிக்க உதவியாக இருக்கும் - Mathan - 06-04-2004 அப்படியே ஆகட்டும் இது குசுப்பனுடையது ... http://kusumban.blogspot.com - Mathan - 06-11-2004 நியூ þ ஆபாசக் குப்பை? எம்.பி. உதயசூரியன் தமிழ் சினிமாவில் மேலும் ஒரு ஆபாசம் அரங்கேறக் காத்திருக்கிறது þ "நியூ' படத்தின் மூலம்! சமீபத்தில் வந்த "பாய்ஸ்' படத்துக்கு மக்கள் தந்த "வரவேற்பு' (!). பலான இயக்குநர்களின் வயிற்றில்கூட புளியை கரைத்தது தெரிந்த விஷயமே! ஆனானப்பட்ட ஷங்கரே "சூடுபட்டது' தெரிந்தும்.. டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா "நியூ' படத்தில் ஆபாசக் குப்பைகளை அள்ளித் தெளித்திருக்கிறாராம். பகýல் 8 வயது சிறுவனாக இருக்கும் சூர்யா, இரவில் 28 வயது வாýபனாக உருமாறுகிறார். இவரை திருமணம் செய்கிற நாயகி இரவுகளில் நடத்துகிற திருவிளையாடல்தான் "நியூ' மையக்கதை. இப்பேர்ப்பட்ட கதையில் காட்சிகள் எப்படி இருக்கும்? ஆம். அப்படி"ஏ' தான் சாம்பிளுக்கு ஒரு காட்சி. இரவில் வாýபனாகி விடுகிற ஹீரோவிடம் "குதிரை ஏற வர்றியா' என்று பச்சையாகக் கேட்டு இம்சை செய்கிறார் நாயகி. பாýயல் வெறிபிடித்த நாயகியிடம் சிக்கித்தவிக்கிற ஹீரோ, பகýல் சிறுவனானதும் தன் நண்பர்களிடம் "இரவுக்கதை'யை விவரித்து.. "ஒரு நாளைக்கு மூணு நாலு தடவை குதிரை ஏற கூப்பிடறாடா' என்று புலம்புகிறான். தெலுங்கில் லேட்டஸ்ட்டாக ரிலீஸ் ஆன "நியூ' படத்தில்தான் மேற்கண்ட "குதிரை சவாரிக்' காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. செக்ஸ் விஷயத்தில் தாராளம் காட்டுகிற தெலுங்கு சென்ஸôர் மேற்படி காட்சிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டது. ஆனால் தெலுங்கு ரசிகர்களிடையே "நியூ' படத்துக்கு எக்கச்சக்க எதிர்ப்பு உருவாகிவிட்டது. நமது கவலை þ தமிழ் "நியூ' படத்திலும் இதே "குதிரை ஏறும் காட்சிகள்' அப்படியே "பச்சை பசேலென' இடம் பெற்றுள்ளன. படம் பார்க்க வருகிற பெண்களை, தியேட்டரில் வைத்தே "குதிரை ஏற வர்றியா' என்று சில "வக்ர' ரசிகர்கள் கிண்டிலக்க "நியூ' ஐடியா கொடுத்திருக்கிறார் டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா. தம்பியின் மனைவி மீது தகாத ஆசை கொள்ளும் அண்ணன் "வாý', காதýயின் இடுப்பை கள்ளத்தனமாக ரசிக்கிற "குஷி' காதலன் þ இப்படி "மாத்ருபூத' வி(வ)காரங்களை மட்டுமே படமாக்கி.. பணம் பார்க்கத் துடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. போகிற போக்கைப் பார்த்தால் "தனது மூளையை செக்ஸ் வக்ரம் செல்லரித்துவிட்டது' என்று கூட இவர் புல்லரித்துப் பெருமைப்படலாம். ஆனால் இப்போதெல்லாம் தமிழகத்தில் நல்ல சினிமா ரசிகர்களும், பெண்கள் அமைப்புகளும் கைவசம் தயாராக இரண்டு பொருட்களை வைத்திருக்கிறார்கள்.. ஒன்று þ பதாகை. மற்றது þ பாதுகை! ரிலீஸôனதுமே தெரிந்துவிடும் "நியூ' படத்தை வரவேற்பது எந்த "கை' என்று! |