![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
- sOliyAn - 03-26-2004 இறுதிப் பந்தியில் அவரில் ஏற்படவுள்ள மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதுதான் எனது கேள்வி?! முதல் இதைத்தான் குறிப்பிட்டேன். எழுதினேன் படித்தேன் இரசித்தேன் யாழ் களத்தை இனி... எழுத்து படிப்பு இரசிப்பு யாழ்களத்தில் இல்லை! இவ்வாறு நானும் ஒரு கவிதை என்ற பெயரிலை நாலைஞ்சு சொல்லை அடுக்கலாம். ஏன் யாழ் களத்தில் எழுத்து படிப்பு இரசிப்பு இல்லை என்று வாசகனுக்கு புரியவேண்டாமா? இதுதான் எனது வினா. வாசகனுக்கு புரிய வேண்டாமெனில் அதை பகிரங்கப்படுத்துவதால் என்ன பயன்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- nalayiny - 03-26-2004 தனக்குள் இருக்கும் சிறுமையை அவர் இதுவரை தெரியாதவராக இருந்து இப்போது தெரிந்தபோது தன்னையே நொந்து கொள்கிறாரே. தனக்குள் இருந்த அந்த சிறுமை புத்தியால் மிகுந்த அவமதிப்பாகிறார் அதிற்சியாகிறார். அந்த அதிற்சியின் வெளிப்பாடு தான் நொந்து நொந்து நூலாகி வந்த அந்த இறுதிவரிகள். எனது பார்வை. இது. - sOliyAn - 03-26-2004 உங்கள் பார்வை சரியாகவே பொருந்துகிறது. ஆனால் அந்த மனவருத்தத்துக்கான காரணத்தை கவிதையில் காணவில்லையே என்பதுதான் எனக்குள் தோன்றிய கேள்வி அல்லது வெறுமை. அதைத்தான் இங்கே பகிர்ந்துகொண்டேன். மற்றும்படி நிர்வாணியின் ஆக்கமென வாசிக்க நேர்ந்தது இக் கவிதையைத்தான். ஆகவே, அவரை மட்டம் தட்டவேண்டும் என்ற நோக்கில் நான் எதையும் எழுதவில்லை. - nalayiny - 03-26-2004 [quote=sOliyAn]உங்கள் பார்வை சரியாகவே பொருந்துகிறது. ஆனால் அந்த மனவருத்தத்துக்கான காரணத்தை கவிதையில் காணவில்லையே இதோ இருக்கிறதே. பின்னிரா வேளையில் எவளோ ஒரு இளம் பெண் நடந்து செல்ல அவள் "அதுவாகத்தானிருக்கும்" எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது நன்றி நிர்வாணி. ------------------------------------------------------- புரட்சி விடியல் தேடல் வர்க்கம் சாதி நான் அதிகம் பாவித்த வார்த்தைகள் நண்பர்கள் அதிகம் கூடினால் வாக்குவாதம் இது சம்பந்தமாகவே இருக்கும் முற்போக்குவாதி சிந்தனையாளன் வாசிப்பவன் ஆராய்ந்து பேசுபவன் இதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றி சொன்ன வா£¢த்தைகள் மேதாவி என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்ள யாருக்குப் பிடிக்காது ? பின்னிரா வேளையில் எவளோ ஒரு இளம் பெண் நடந்து செல்ல அவள் "அதுவாகத்தானிருக்கும்" எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது முகமூடி கிழிந்து முகம் தொ¤ய உனக்காக பொய்முகத்தோடு கவிதை புனைபெயர் கூட்டத்தில் கத்தல் எதுவுமே இனி சாத்தியமில்லை எனக்கு நன்றி - நிர்வாணி - nalayiny - 03-26-2004 இதோ மேலும் நிர்வாணியின் கவிதைகள் சில. http://www.vaarppu.com/php/bodymaker.php?p...tal=26&pt_id=15 - sOliyAn - 03-26-2004 மிகவும் நன்றி. - Mathan - 03-27-2004 சுடும்வரையில் நெருப்பு... அன்போ, கோவமோ உள்ளத்து உணர்வுகளை ஒளிகாமல் காட்டிவிட்டால்... சிறுபிள்ளைப் புத்தி என்பீர் 'சிடுமூஞ்சி' இவன் என்பீர்... பணம் மட்டும் வாழ்க்கை இல்லை, பக்குவமாய்ச் சொன்னாலும்... உதவாது வாதம் என்பீர்.. 'ஊதாரி' இவன் என்பீர்...! தென்றல் அது மாடிக்குச் சொந்தம்... தீ மட்டும் தெரு கோடிக்குச் சொந்தமா? - இனியாவது திருந்தச் சொன்னால்... திரும்பாதே பக்கம் என்பீர், 'தீவிரவாதி' இவன் என்பீர்! பருத்தியும் பழுக்கும் - இலவம் பஞ்சியும் பழுக்கும்! பசிபோக்குமா இவையாவும் ! பணம் பார்த்துப் பழகாதே - நல்ல குணம் பார்த்துப் பழகு என்றால்.... மெத்த படித்த திமிரா என்பீர்... 'மேதாவி' இவன் என்பீர்! பிள்ளையார் பால் குடிக்கிறாரா? - அட பித்தனே - இங்கே பிறந்த குழந்தைப் பாலுக்கழுகிறதே...- மனம் பரிதவித்துச் சொல்லிவிட்டால்... பார்த்துக் கொள்வார் கடவுள் என்பீர்... 'பைத்தியமோ' இவன் என்பீர்! தன்மானம் இழக்கும் செயல் தாங்கிக்கொள்ள முடியாது! தயங்காமல் கேட்டுவிட்டால்... 'தலைகீழ்' நடப்பான் என்பீர், 'தலைகனம்' இவனுக்கென்பீர்! கை நீட்டி தாலி அறுப்பான்! கண் முன்னே கழுத்தும் அறுப்பான்! கோணலாக புத்தி கொண்டு - பல கொடுமைகளைச் செய்திருப்பான் ! கொதித்தெழுந்துக் கேட்டுவிட்டால்... கொஞ்சம் கூட பொறுமை இல்லை... 'கோவக்காரன்' இவன் என்பீர் ! அள்ளி அள்ளி கொட்டிடுவீர் அத்தனையும் உண்டியலில்! அநாதை இல்லங்கள் அநாதையாய் இங்குண்டு! அடுத்தவேளை உணவிற்கு ஆளாய் பறந்திருக்கும் ஆட்கள் இங்கே கோடி உண்டு! மனம்கலங்கிச் சொல்லி விட்டால்... மாரியாத்தா குத்தம் என்பீர், 'மடையனே ' இவன் என்பீர் ! உதவாததை எடுத்துச் சொல்லி - மக்களுக்கு உதவும் வகைச் சொல்லிவிட்டால்... ஒட்டு மொத்தப் பெயராக 'நாத்திகன்' இவன் எப்பீர்... நட்பே ஆகாதென்பீர்...! நாட்டுக்கு நல்லது நினைப்போன் நாத்திகன் என்றிட்டால் ... போடா போ...! இருந்து விட்டுப் போகிறேன் நான்.. 'நாத்திகனாகவே' நன்றி - மணவழகன் - vallai - 03-27-2004 கடவுளை இல்லயெண்டு சொல்லுற நாத்திகனா மட்டும் இவர் இருந்தாரெண்டால் இவ்வளத்தையும் சொல்லுறதிலை அர்த்தம் இல்லை ஏழையின் சிரிப்பிலை இறைவனைக் காணுற ஆன்மீகவாதி தான் சனத்துக்குத் தேவை - Mathan - 03-29-2004 அவன் அவனாக! அவன் அவனாக வாழ்ந்த நாட்கள் குறைவு அவன்மட்டுமல்ல இங்கே எவனும் அவனாகவே வாழ்ந்த நாட்கள் குறைவுதான்! O நேற்றைய இருட்டு இன்றைய வெளிச்சம் இன்றைய வெளிச்சம் நாளைய இருட்டு எதிலும் எவனுக்கும் தௌ¤வு என்பது நிரந்தரமல்ல சந்தேகம் என்பதும் சாசுவதமல்ல ஒரு சந்தேகம் தௌ¤வாகி மறுபொழுதில் அந்தத் தௌ¤வே ஒரு சந்தேகமாகி அவனைத் 'தேடு' என்று கட்டளையிட்டுவிடுகிறது O இதுதான் நான் என்று திட்டமிட்டுக் கூறியவர்களெல்லாம் அது அன்று தோன்றியது இன்றல்ல என்பதைத் தாங்களே அறிந்தபின் சிலர் அறிக்கையாய் வெளியிட்டும் சிலர் அடிமனதில் பூட்டிக் கொண்டும் நடக்கிறார்கள் O மனதின் ஏதோ ஓர் ஓரத்தில் மச்சங்களின் மிச்சங்களாய் இருந்த எத்தனையோ சந்தர்ப்பம் கைகுலுக்கியபோது தீப்பொட்டுக்களாய் எழுந்து கொள்ளியிடும் நெருப்பாய் விசுவரூபம் எடுத்திருக்கின்றன O சிலருக்கு இது எங்கிருந்து வந்தது என்பதே அறியாமல் திடீரென்று எழுந்துத்தாக்கி அவர்களின் அவர்களை குழிதோண்டிப் புதைத்திருக்கிறது O ஆக அவனவனுக்குள் எல்லாமும்தான் இருக்கின்றன ஆயினும் இந்தச் சமுதாயத்துக்காகப் போட்டுக்கொண்ட பொய்வர்ண முகத்துடன்தானே அவன் நாளும் அலைகிறான் கேட்டால் அறியாமையின் வெண்சாமர வீசலில் உறங்கிக்கொண்டு பொய்முகமே அவனின் நிஜமுகம் என்கிறான் எப்படியோ அவன் அவனாக இல்லை அவன் அவனாகவே வாழ்ந்த நாட்கள் குறைவுதான் அவனைப்போல நான் நானாகவே நீங்கள் நீங்களாகவே வாழ்ந்த நாட்கள் குறைவுதானே ? நன்றி - புகாரி - Mathan - 04-04-2004 வருகல் ஆறு கிழக்கே களப்பு வடக்கே வன்னி நடுவே பதட்டமாய் வருகல் ஆறு. கரையோர அதிர்வுகள் கண்களுள் அபாயமிட கண்ணீர் நுரைப்புடன் வருகல் ஆறு. இலை தளை சுமந்த என் மேல் உடம்பில் இனி தலை பல விழுமோ ? என்றே திகிலுடன் வருகல் ஆறு. ஆண்டாண்டு வீரம் அர்த்தமற்றுப் போனால் மீண்டும் அகதியாகும் ரத்தச் சகதியாகும் வருகல் ஆறு. கூட்டமாய் கட்டிய கோட்டையில் ஓட்டையா ? வேண்டாம்.... வேட்டை நாய்களின் விருந்தாகிப் போகும் வெட்கியபடியே வருகல் ஆறு புரட்சியும் இயக்கமும் பொய்யாகிப்போனால் போய்ச் சேர்ந்த போராளிகளுக்கென்ன பதில் சொல்ல ? என்றே புலம்பலில் வருகல் ஆறு. போராளித் தாகம் மாறாகிப் போனால் வீணாகிப்போகும் வருகல் ஆறு. தண்ணீரின் இடமோ தமிழ் ரத்தமாகும் தவிப்பினில் பயத்துடன் வருகல் ஆறு. நண்டுக் கதையாய் துண்டு படாமல்... ஒரே ஒலியாய் ஓசை முழங்க... கெஞ்சிக் கதறுது வருகல் ஆறு. நன்றி - நெப்போலியன் - Eelavan - 04-05-2004 இது சுட்ட கவிதைதான் ஆனால் சுடுபடமுன் ஆதங்கத்தால் வந்த கவிதை பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் வேண்டுகோள் இதுவே வெருகல் ஆறு மட்டுமின்றி எந்த ஆறுமே செந்நீராக மாறக்கூடாது தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீராலல்லவா காத்தோம் என்ற வரிகள் தாம் நினைவுக்கு வருகின்றன - Mathan - 04-14-2004 அரசியல் நடைபாதையில் தடங்களாய் கிடக்கும் சிறுபாறையை ஒதுக்கிப்போட யோசித்து ஒதுங்கினேன்... ஆளின்றி வழிந்தோடும் தெருக்குழாயை மூடத்தோன்றாமல் கண்மூடி கடந்து சென்றேன்... பாதையை கடக்க குருடனொருவன் உதவி கேட்கையில் அவசரமாய் உதறித்தவிர்த்தேன் சுமைதாங்காது உதவிக்காய் எதிர்பார்த்து ஏங்கி நின்ற பெரியவர்கண்டு எள்ளி நகையாடினேன்... எனைப்பார்த்து சரியாகத்தான் சொன்னான் ஜோசியக்காரன்..!! பின்னாளில் பொதுசேவையில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய தேவைப்படும் லட்சணங்கள் அனைத்தும் கச்சிதமாய் பொருந்துவதாய்..!!! நன்றி - சாந்தி - Mathan - 04-16-2004 மணமாலை என்றோர் செய்தி வந்தால் பொங்கிடுவேன் பொங்கல் ! நாலு குமர் கரைசேர்க்க நாற்பது தாண்டியது . . . நாற்றும் நட முடியாது நடுத் தலையும் வெளித்தது . . இனி என் முறைதானென்று இள நகை புரிந்திருக்க ! ஐந்தாவது குமருக்கு அழகாய் அடுக்குப் பண்ணிவிட்டு ; அவசரமாய் போனெடுத்தாள் அம்மா ! அவள் என்ன செய்வாள் கரை சேர்க்கத்தானே கடல் கடந்தோமென்று கரையிலிருந்து குரல் கொடுத்தாள் ! மூத்தக்கா போனெடுத்து முதலில் மூத்தவனையாகிலும் எடுத்துவிடு என்றாள் ! வேலையை விட்டுவிட்டார் ! - இனி வெளிநாடு போகத் திட்டமென்று விரைவாகத் தொடர்பு கொண்டாள் இளையக்கா ! பெத்தகடன் மறவாத் தந்தை சில்லறைக் கடனையேனும் சீக்கிரமாய் முடியென்றார் ! கடன் முடிவதெப்போ ? நான் முடிப்பதெப்போ ? பொல்லு}ன்றும் காலம் கண்ணுக்குள் சுழல்கிறது ! பூமாலை இனியெதற்கு போகட்டும் ! இருந்தாலும் எனக்கோர் ஆசை ! இரை தேடும் பறவைகளே ! பொங்கல் பொங்கும் புண்ணிய நேரத்திலாவது என் சுகம் கேட்டு ஓர் போன் எடுப்பீர்களா ? மணமாலை எனக்கும் வேண்டுமென்று உங்கள் மனச்சாட்சி சொல்லி விட்டால் ? மகிழ்வுடனே பொங்கிடுவேன் பொங்கல் ! நன்றி - குகக் குமரேசன் மற்றும் சந்திரவதனா - Mathan - 04-19-2004 <b>பருவம் - என்றால் என்ன?</b> பருவம் என்றால் ஆணுக்குச் சிறகுகளும் பெண்ணுக்கு விலங்குகளும் உருவாகும் காலம். நன்றி - சந்திரவதனா - Mathan - 05-02-2004 முக்கிய அறிவிப்பு இலக்கணங்களையும் மொழிப் புலமையையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எம் உணர்வுகளைப் பேசிட கொஞ்சம் சொற்கள் போது மெமக்கு......... ஒலிப் பெருக்கிகளும் மேடைகளும் உம்முடையதாகவே யிருக்கட்டும் எம் உண்மைகளைக் கேட்க கொஞ்சம் செவிகள் போது மெமக்கு.............. கேளிக்கை விடுதிகளையும் விருந்து மண்டபங்களையும் நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள் இயல்பாய் மூச்சு விட கொஞ்சம் திறந்த வெளி போது மெமக்கு........ பட்டங்களையும் விருதுகளையும் நீங்களே அணிந்து கொள்ளுங்கள் எம்மை கௌரவிக்க எம் அடையாளங்கள் போது மெமக்கு........ இன்னும் நம்பிக் கொண்டிருக்காதீர் வாழ்க்கைப் பந்தயத்தில் உம் சுமைகளையும் யாமே சுமந்தபடி ஓடி இனிமேலும் உம்மை முந்த விட்டுக் கொண்டிருப்போமென ஏனெனில் நாங்கள் பாடங் கற்றுக் கொண்டது உமது வெற்றியிலிருந்தல்ல எமது தோல்வியிலிருந்து....... உமது சுகங்களிலிருந்தல்ல எம் வலிகளிலிருந்து.............. உம் சுதந்திரத்திலிருந்தல்ல எம் கட்டுகளிலிருந்து........... புரிந்து கொண்டு பகிர்ந்து கொண்டால் ஒன்றாய் ஓடுவதில் எமக்கொன்றும் ஆட்சேபனையில்லை...... உணர்ந்து கொள்ளும் மனப் பக்குவம் உமக்கில்லை யெனில் முந்திக் கொண்டோட வேண்டியிருக்கும்........ இது எச்சரிக்கையில்லை உம் மீது கொண்ட கனிவின் மிகுதியால் வெறும் அறிவிப்பு மட்டுமே...............! நன்றி - தோழியர் வலைப்பூ - Mathan - 05-14-2004 கருத்து ஒன்றுபடுவோம் கூடித் தொழிற்படுவோம் வாருங்கள் மீண்டாலும் வெற்றியுடன் மீள்வோம் வீழ்ந்தாலும் வீரமுடன் வீழ்வோம்! கூறுபட்டுச் சமுதாயம் நு¡று குழுத் தோன்றி மாறுபடச் சிந்தித்தால் வீழ்ச்சிதான். பாட்டம் பாட்டமாய் மழைகொட்டப் போவதனை மூடிக்கிடக்கும் முகிற்கூட்டம் காட்டுகுது எமக்கு, ஓலைக்குடிசை என்றாலும் ஒதுங்கி இருக்க இடம் வேண்டும் வாருங்கள் கருத்து ஒன்றுபடுவோம் கைகோர்த்து நிற்போம் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்திக் கொள்வோம். இது தா.இராமலிங்கம் எழுதிய கவிதையின் ஒரு பகுதி - AJeevan - 05-17-2004 [align=center:4aed14f074] நீ எனை தொழும் கணங்கள்....! ![]() <span style='color:brown'>என் உடலுக்கு உயிர் தா... என் இதயத்திற்கு சுவாசம் தா.. என் நரம்புகளுள் உணர்வு சேர்... என் விழிகளுக்கு ஒளியூட்டு... எனக்குள் கவிதை ஊற்றாய் வா... நீ தந்த உயிர் மூச்சு என்னை விட்டு பிரியும் வரை உன்னையே என் கவி தொழுது நிக்கும். போடா போ.. நீ தந்து சென்ற ¬தா¤யங்கள் என்னை வழிப்படுத்தும். நீயே நானான பின் உன் கோபங்கள் என்னை என்ன செய்து விட முடியும்..! கரம் ஏந்திய உன் பாதைவழிப் பிச்சைக்கா£¤யாய் நான் உன் முன் . முறைத்துப்பாற்து விட்டு முகத்தை திருப்பிக்கொள்கின்றாய். ம்...! ஆனாலும் உனக்குள் என்னையே தொழுதபடி..! எனக்குத் தொ¤யாதா உன் மனசு. நீ என்னை தொழும் கணங்கள் யாவும் எனக்குள் கவி மழை. நளாயினி தாமரைச்செல்வன்,சுவிற்சலாந்து. 10-05.2004 </span>[/align:4aed14f074] http://www.thinnai.com/pm0513041.html - Mathan - 05-19-2004 இவர் தான் இலங்கையின் சுப்பிரமணிய சுவாமி <img src='http://kavithai.yarl.net/archives/kathirkamar.jpg' border='0' alt='user posted image'> பேரு கதிர்காமன் ஊரு கொழும்பு உத்தியோகம் நிரம்பிய மேல்தட்டு வர்க்கம் தமிழனென்றால்? வன் ஒப் த சிரிலங்கன் எதினிக் குறூப் என்று சொல்வார் உண்மையிலேயே அறியார் இதுவரை சொன்னதுதான் பொய்யும் புரட்டுமெண்டா இப்போது சொவதும் பழைய குருடி கதைதானே ஐயா. இலங்கையில் ஒன்று சொல்வார் இந்தியாவில் இன்னொன்று சொல்வார் அமெரிக்கா போனபின்பு அனைத்தையும் மறந்திடுவார். புலியென்றால் கிலியென்பார் தடி கொண்டு அடியென்பார் தமிழர் கொலையாமென்றால் இல்லையில்லை சும்மா என்பார் நானே ஒரு தமிழன் எனக்கிங்கு கேடில்லை பிள்ளை குட்டிகளுடன் சுதந்திரமாய் இருக்கின்றேன். தே பீப்பிள்ஸ் எல்.டி.டீ சும்மா சும்மா பொம்ப் வைக்குதென்பார். அமெரிக்காவால் வந்ததுமே ஆரம்பிப்பார் பழங்கதையை பேச்சுவார்த்தை மேசைக்கு எப்போதும் நாங்க தயாரென்பார். போற வாற இடமெல்லாம் புறணி பாடிவிட்டு வந்திறங்கிய பின்னாலே வெத்திலை வைத்திடுவார். ஐ.நாவுக்கு ஆசைப்பட்டார் ஐயாவுக்கு கிடைக்கவில்லை பிரதமர் பதவியுமோ பிய்ந்த பழம் செருப்பாச்சு இன்னமுமா ஏறவில்லை உம்முடைய மண்டைக்கு உமக்கெங்கே ஏறும் உண்மைக் கதையளெல்லாம் நீர்தானே உம் காலைத் தூக்கி உம்மினத்துக்கே மூத்திரம் அடிக்கும் ஆள்??? நன்றி - ஈழநாதனின் வலைப்பூ - Mathan - 05-19-2004 பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது <img src='http://kavithai.yarl.net/archives/old.jpg' border='0' alt='user posted image'> பிள்ளைகள் பல பெற்றும் அந்திம காலத்தில் அநாதைகளாய் உலாவும் ஈழத்துப் பெற்றோர் பற்றி ஈழத்துக் கவிஞர் ஒருவரின் வரிகள் பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது ஆற்றினிலே நீருமில்லை ஆதரிப்பார் யாருமில்லை நேற்றிருந்த சொந்தமெல்லாம் நேரினிலே இன்று இல்லை ஆற்றினிலே நீருமில்லை ஆதரிப்பார் யாருமில்லை நேற்றிருந்த சொந்தமெல்லாம் நேரினிலே இன்று இல்லை பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது நாய் வளர்த்துப் பாலை வார்த்தால் வாளையாட்டிக் கொள்ளும் நம்பிப் பெற்ற பிள்ளைகளோ நன்றியினைக் கொல்லும் நாய் வளர்த்துப் பாலை வார்த்தால் வாளையாட்டிக் கொள்ளும் நம்பிப் பெற்ற பிள்ளைகளோ நன்றியினைக் கொல்லும் கோவிலுண்டு பூசை செய்ய யாருமிங்கு இல்லை கொள்ளியிடக் கூட ஒரு பிள்ளையிங்கு இல்லை பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது கட்டிலுக்கு வந்தவளும் என்னைவிட்டுப் போனாள் தொட்டில் வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார் கட்டிலுக்கு வந்தவளும் என்னைவிட்டுப் போனாள் தொட்டில் வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார் விட்டபடி சுத்துதடா பூமியென்ற பந்து இரத்தபாசம் என்பதெல்லாம் இங்கு வெறும் பேச்சு பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது ஆற்றினிலே நீருமில்லை ஆதரிப்பார் யாருமில்லை நேற்றிருந்த சொந்தமெல்லாம் நேரினிலே இன்று இல்லை ஆற்றினிலே நீருமில்லை ஆதரிப்பார் யாருமில்லை நேற்றிருந்த சொந்தமெல்லாம் நேரினிலே இன்று இல்லை பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது நன்றி - ஈழநாதனின் வலைப்பூ - shanmuhi - 05-19-2004 அருமையான கவிவரிகள் கொண்ட பாடல். கேட்கும்போது மனதை சற்றே கலங்க வைக்கின்ற நம்மவர் பாடல் இது. |