![]() |
|
வான் புலிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வான் புலிகள் (/showthread.php?tid=7132) |
- Mathan - 04-01-2005 தமிழனின் பறப்பு முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் நவாலி வட்டுக்கோட்டை இணையுமிடத்தில் களையோடை அம்மன் கோவில் என்கிற ஒரு சின்ன அம்மன் கோவில் இருக்கிறது. எனது ஊரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் அந்த அம்மன் கோவிலைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் எனது கண் அங்கே அந்தக் கோவில் வளாகத்தில் நின்ற ஒரு மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்ற ஒரு சிறிய ரக விமானத்தை நோக்கும். ஆம். அது பறப்பதற்கு முயற்சி செய்து பலன் தராது விட்ட ஒரு சிறிய விமானம். 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்களாம். யாழ்ப்பாணத்தையும் வலிகாமம் மேற்கையும் இணைக்கும் கல்லுண்டாய் வெளி ஒரு நீள் வீதி. அதிகம் பாவனைக்குள்ளாகாத அந்த வீதி ஒரு விமான ஓடுபாதைக்கு உரிய ஆகக் குறைந்த தகுதிகளை கொண்டிருந்தது. வெளிநாட்டு வீதிகளில் சோறு போட்டு சாப்பிடலாம் என்றால், சோறும் போட்டு சொதியும் விட்டு சாப்பிடக் கூடியதான (அவ்வளவு குழிகள்) யாழ்ப்பாண வீதிகளில் கல்லுண்டாய் வீதி ஒப்பீட்டளவில் பரவாயில்லை. அந்த வீதியினை நம்பித் தானாம் விமானங்கள் கட்டப்பட்டன. அவ்வகையான விமானங்கள் இரண்டடியோ நாலடியோ மேலெழுந்ததோடு தங்கள் பணியை முடித்துக் கொண்டு விட்டன. பிறகு களையோடை அம்மன் கோவில் போன்ற இடங்களில் ஏதாவது மரத்தில் பறந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட சாத்தியமாகாத விடயமாகவே அது அனைவர் மனதிலும் தங்கி விட்டது. 94 என்று நினைக்கின்றேன். கோண்டாவில் பகுதி ஒன்றில் புலிகள் முகாமில் ஹெலிகொப்ரர் ஒன்று அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சாதாரண பொதுமக்கள் அறியக் கூடியதாக அதன் கட்டமைப்புக்கள் நடந்தன. அது என்ன, எதற்கு என அறிந்து கொள்ளாமலே புலிகள் விமானம் செய்கிறார்கள் செய்தி உலவத்தொடங்கி சீக்கிரமே முடிவுக்கு வந்தது. அது புலிகள் பலாலி இராணுவ தளத்தில் உள்நுழைந்து ஹெலிகொப்ரர் ஒன்றை அழித்த தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு குறுந்திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாக சொன்னார்கள். மீண்டும் 98 இல் இந்தக் கதை சூடு பிடிக்க தொடங்கியது. இலங்கை இராணுவம் தன் ரேடாரில் தெரிகிறது, சத்தம் கேட்கிறது என கதையைக் கிளப்பியது. முத்தாய்ப்பாக 98 மாவீரர் தினத்தில் புலிகள் தம்மிடமுள்ள விமானப் படை குறித்து பிரகடனம் செய்தனர். மாவீரர் துயிலும் இல்லமொன்றில் விமானம் ஒன்று மலர் தூவியதாக கொழும்பில் அப்போதைய தினமுரசு செய்தி வெளியிட்டது. வானமேறினான் தமிழன் என்ற கருத்துப்பட புதுவை இரத்தினதுரையின் ஒரு பெருமிதக் கவியை வாசித்த நினைவும் இருக்கிறது. அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் அப்போதே அரசு செய்யத்தொடங்கி விட்டது. அரச மையங்கள் மீது விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. 98 இலேயே அது பற்றி அறிந்து கொண்டு அதற்கான ஆயத்தங்களையும் செய்து விட்டு மீண்டும் இப்போது 2005 இல் இலங்கை அரசு புலிகளின் விமானங்கள் குறித்து கத்துவதற்கான காரணம் வெளிநாடுகளிடம் புலிகளை போட்டுக் கொடுக்கவும் சிங்கள மக்களுக்கு புலிகள் தொடர்பாய் அச்ச உணர்வை ஏற்படுத்தவுமே.. எங்களிடம் விமானப் படை இருப்பது பழைய விடயம் தான் என புலிகளும் கேட்பவர் அனைவருக்கும் சொல்லி வருகிறார்கள். 98 இல் மாவீரர் தினத்தின் போது விமானப் பிரசன்னத்தை நேரில் பார்த்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள் அப்போது சந்தோச மேகங்கள் தலை தடவிப் போனதாம். நன்றி - சயந்தன் - tamilini - 05-11-2005 புலிகளின் விமான ஓடுபாதையில் புதிய கோபுரம், அச்சுறுத்தலைத் தடுக்க இலங்கைக்கு வெளிநாட்டு உதவி விடுதலைப் புலிகளின் விமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை அரசு வெளிநாட்ட உதவிகளைப் பெறவுள்ளது. கிளிநொச்சியில் இரணைமடுப் பகுதியிலுள்ள புலிகளின் விமான ஓடுபாதைக்குச் சமீபமாக இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வானூர்திகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது புலிகள் தங்கள் விமான ஓடுபாதைகளில் வமானப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை திருகோணமலை சம்பூரிலிருந்து கிளிநொச்சிக்கு விமானப்படையின் விஷேட ஹெலிகொப்டர் மூலம் புலிகளின் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் சொர்ணம் சென்றிருந்தார். இவரை ஏற்றிச்சென்ற ஹெலிகொப்டர் ஏ-9 வீதிக்கு மேலாக இரணைமடுப்பகுதியில் சென்றபோதும்ää ஹெலிகொப்ரரின் அடிப்புறத்தில்ப் பொருத்தப்பட்டிருந்த ஏவுகணை எதிர்ப்புக்கருவி செயற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதியும் கேணல் சொர்ணத்தைக் கிளிநொச்சிக்கு ஹெலிகொப்டர் ஒன்று ஏற்றிச்சென்ற போதும் அது அங்கிருந்து திரும்பிய போதும் இந்த ஏவுகணை எதிர்ப்புக் கருவி செயற்பட்டிருந்தது. இதேநேரம் கடந்த முறைப் பயணங்களைவிட கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு சென்று திரும்பிய ஹெலிகொப்டர் ஓட்டுனர் சுமுது தகநாயக்க புலிகளின் விமான ஓடுபாதைக்கருகே உயர்ந்த கோபுரம் ஒன்றிருப்பதை அவதானித்திருக்கின்றார். எனினும் அது விமானக் கட்டுப்பாட்டு கோபுரமாக இருக்கும் சாத்தியம் இல்லை என கருதும் விமானப்படையினர் இது என்னவாக இருக்கும் என அறிய முடியாது திண்டாடுகின்றனர். இது குறித்து விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஸல் டொனால்ட் பெரேரா தாம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் மாற்று நடவடிக்ககைள் குறித்து ஆராய்வதாகவும் விமானப்படை வட்டாரங்கள் தெரிக்கின்றன. அத்துடன் தமது விமானங்களையும் விமான ஓடுபாதையையும் பாதுகாப்பதற்காக வான்புலிகள் இலத்திரனியல் வான்பாதுகாப்பு முறையை பெற்றிருக்கலாம் எனவும் விமானப் படையினர் கருதுகின்றனர். இதே நேரம் புதிதாக விமான ஓடுபாதைக்கு அருகிலுள்ள கோபுரம் குறித்துக் கண்டறிவதில் தீவிரம் காட்டிவரும் விமானப் படையினர் இது குறித்து சில நாடுகளுடனும் தொடர்பு கொண்டிருக்கின்றனர். புலிகளின் விமான அச்சுறுத்தல்களை அடுத்த நவீன பாதுகாப்பு முறைகள் குறித்து இலங்கை அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. இதற்கான பயிற்சிகளையும் கருவிகளையும் வழங்கிய சில நாடுகளும் முன்வந்துள்ளன. இந்தியாவும் இது தொடர்பாக மிகுந்த அக்கறை செலுத்துவதடன் இது குறித்த இலங்கைத் தரப்புடனும் தொடர்பு கொண்டுள்ளது. இதேவேளை தங்கள் வசமிருக்கும் இலகு ரக வானூர்திகளையும் விமான ஓடுபாதைகளையும் பயன்படுத்தி தற்போது விடுதலைப் புலிகள் பயிற்சிகளில் ஈடுபட்ட வருவதாகவும் வெளிநாடுகள் பலவற்றின் புலிகள் பலர் விமானப் பயிற்சிகளைப் பெற்று வருவதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. சங்கதி http://sooriyan.com/index.php?option=conte...id=1650&Itemid= - Danklas - 05-11-2005 vasisutha Wrote:அப்பாடா ஒரு வழியாய் எங்களுக்கு ஏவுகணை கிடைக்கப் போகுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அமா அதெல்லாம் வன்னியில இல்லைத்தானே... :evil: :oops: - eelapirean - 05-14-2005 விடுதலைப்புலிகளின் விமானப் படை பலப்படுத்தப்படுகிறது! விடுதலைப்புலிகளின் வான்படையை மறுசீரமைத்து வான்படையை மேலும் பலம் வாய்ந்ததாக்குவதற்கென இரண்டு முக்கிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் வான்படையை பலம் பொருந்திய ஒரு படையாக மாற்றுவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்ää கென்னடி மற்றும் கடாபி ஆகிய இரு உறுப்பினர்களிடம் அதற்கான பொறுப்புக்கள் வழங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையின் உளவுப்பிரிவிற்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள விமான ஓடுபாதையை மேலும் விரிவாக்குதல்ää கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தில் சிறிய அளவிலான விமான ஓடுபாதையொன்றை அமைத்தல்ää இயன்றளவு உலங்குவானூர்திகள்ää இலகுரக விமானங்களை இயக்கத்திற்கு கொள்வனவு செய்தல்ää அரசாங்கத்தின் விமானப்படை தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் சக்திமிக்க எதிர்த்தாக்குதல் நடத்தக்கூடிய பிரிவொன்றை ஏற்படுத்தல்ää விமான ஓட்டிகள் மற்றும் விமானப்படையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உரிய வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்குப் பயிற்சியளித்தல் ஆகியனவே இவ்விரு உறுப்பினர்களிடமும் கையளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களாகும். தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்த கென்னடி விமானப்படையின் புதிய பொறுப்பாளராகவும்ää கடாபி துணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும் விடுதலைப்புலிகளின் விமானப்படை தொடர்பாகவும் அரச பாதுகாப்பு அமைச்;சிற்கு அறிவித்திருப்பதாக அரச உளவுப்பிரிவு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதினம் - kuruvikal - 05-14-2005 எங்களுக்கு இப்ப பலமான விமானப்படை தேவையில்லை..இது போதும்.. தேவை சிறீலங்கா விமானப்படையை செயலிழக்கச் செய்ய அவசியமான ஆயுத தொழில்நுட்ப பலமே...அதுதான் மக்களினதும் போராளிகளினதும் தமிழீழக் கட்டுமானத்தினதும் பாதுகாப்புக்கு அவசியம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- anpagam - 05-15-2005 அவர்கள் எங்கள் பகுதிக்குள் அத்துமீறி பறந்தால்.... நாம் அவர்கள் பகுதிக்குள் பறந்து...திரும்பிவந்து....பறந்து...திரும்பிவந்து காட்டுகிறோமோ... அதுகாணும்... பலத்துக்கு..... அவங்கள் பிரான்ஸ் காரர் அடுக்கடுக்கா பிளேனில வீடுகட்டி நாகரீகம் காட்டினால்... யாருக்கு மற்றவர் விமானம்விப்பது... நம்மைபோன்றோருக்குத்தானே.... அப்ப அந்த தொழில் நுட்பமும்தானே.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 05-21-2005 வான்புலிகள் அமைப்பு இந்திய, இலங்கை இறைமைக்கு பாரிய அச்சுறுத்தல் <b>கடும் நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி வலியுறுத்தல்</b> வான் புலிகள் அமைப்பானது, இந்தியாவினதும் இலங்கையினதும் இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தலாயிருப்பதால், அவர்கள் விடயத்தில் இனியும் பொறுமை காக்காது, இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா விடுதலைப் புலிகளுக்கெதிராக கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் இராணுவ அதிகாரியான கேணல் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக பதவி வகித்தவரும் இராணுவ புலனாய்வுத் துறைசார் நிபுணரும், ஓய்வு பெற்ற கேணலுமான ஆர். ஹரிஹரன் இந்தியாவின் `இந்து' நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். `புலிகளின் வான்படை வலுவும் அதன் அபாயமும்' என்ற தலைப்பில் அவர் வரைந்துள்ள அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆயுதக் கொள்வனவுகளை மேற்கொள்ளவும் தமது இராணுவ பலத்தை மேலும், வலுப்படுத்தவும் சமாதான முயற்சிகளை பயன்படுத்தும் விடுதலைப்புலிகளின் வழமையான பாணிக்கு தற்போதைய காலப்பகுதியும் ஏதுவாக அமைந்துள்ளது. தமது படைகளின் மன உறுதியைப் பேணுவது, புதிய நடவடிக்கைகள் தொடர்பான வியூகங்களை உருவாக்குவது, எதிரியை தந்திரோபாயமாக நிலை குலையச் செய்வது போன்ற வழிகளின் ஊடாக விடுதலைப்புலிகள் தம்மை இக்காலப்பகுதியில் வலுப்படுத்தியுள்ளனர். சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் 2004 ஆம் ஆண்டு நடுப்பகுதிவரை,புலிகள் சுமார் 11 கப்பல்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளனர். திறனற்ற கண்காணிப்புக் குழு, அறிக்கைகளில் மட்டுமே தனது பணியை ஆற்றும் கையாலாகாத அமைப்பாக செயற்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் காணப்படும் அரசியல் இழுபறியால் சமாதான முயற்சிகள் மேலும் காலம் தாழ்த்தப்படுவது புலிகள் பெருமளவான நிதி, சக்தி, நேரம் போன்ற வளங்களை மூலதனமாகக் கொண்டு வான் புலிகள் அமைப்பை நேர்த்தியாக நிறுவ ஒரு வகையில் வழி கோலியுள்ளது. இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியிலேயே விடுதலைப்புலிகளுக்கு வான் படை அமைக்கும் இலக்கு இருந்தது. சிறிய விமானங்களுக்கான உதிரிப் பாகங்களை அப்போதே நாம் விடுதலைப்புலிகளின் இரகசிய இடங்களிலிருந்து மீட்டிருந்தோம். விடுதலைப்புலிகளின் தொழில் நுட்ப பொறியியல் பகுதி ஒன்றிலிருந்து இலங்கை இராணுவமும் அப்போது விடுதலைப்புலிகளின் விமான உதிரிப்பாகங்களை மீட்டிருந்தது. 1988 இன் பிற்பகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணை, ராடார் தொழில் நுட்பம், கடற்படை என பின்னர் வளர்ச்சி கண்ட விடுதலைப்புலிகள் இன்று `வான் புலிகள்' அமைப்பையும் அமைத்து தம்மை ஒரு முழுமையான இராணுவமாக உருவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கட்டுப்பாடுகள் தடைகள் அமுலில் உள்ளபோதும் விடுதலைப்புலிகள் பெருமளவான நிதி மற்றும் தொழில் நுட்ப வளங்களை கொண்டு வந்து தமது திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது இலங்கைக்கோ, அதற்கு மிகவும் அயலில் உள்ள இந்தியாவுக்கோ ஆரோக்கியமான விடயங்கள் அல்ல. தம்மை ஒரு முழுமையான படைக் கட்டமைப்பாக கட்டியெழுப்பியிருக்கும் விடுதலைப்புலிகள் அடுத்த தடவை அரசுடன் சமாதான பேச்சுக்களுக்காக வரும்போது பேரம் பேசக் கூடிய வலுவான சக்தியாக இருக்கப் போகிறார்கள். இது இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் நிலையை உருவாக்கியுள்ளது. இந்தியா மீது கொமாண்டோ பாணியிலான வான் தாக்குதலை மேற்கொள்ளவல்ல வலுவைக் கொண்டுள்ள விடுதலைப்புலிகளின் வான் படை சக்தி குறித்து இந்திய அரசு விழிப்படைய வேண்டும். தனது படைகளை கண்காணிப்புப் பணிகளில் உசாராக்கி நாட்டின் பாதுகாப்பு மீதான அவதானத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் எங்கிருந்து விமான உதிரிப்பாகங்களை பெறுகிறார்கள், வான் கலங்களுக்கு எங்கிருந்து எரிபொருள் பெறுகிறார்கள், வான் புலிகளுக்கு எங்கு பயிற்சியளிக்கப்படுகின்றன என்பன குறித்த தகவல்களையும் இந்தியா தனது புலனாய்வு அமைப்புக்களை உசாராக்குவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றார். தினக்குரல் - jeya - 05-21-2005 கோணல் ஹரிஹரன் நன்றிகள் உனக்கு நம்மைப் பற்றி அந்தமாதிரித்தான் அறிந்து வைத்திருக்கிறாய்.. சிறீலங்கா அரசாங்கம் இந்தியாவிற்கு கம்பி நீட்டேக்குள்ள தெரியும் உமக்கெல்லாம்.. இந்த பாக்கிஸ்தானை உளவு பார்த்து இந்தியாவைப்பாது காக்கிற வழியை விட்டுட்டு நம்மோட ஏன் சொறிய வாறீங்கள். நாங்கள் தானே பலமுறை சொல்லிப்போட்டம்..நாங்கள் ஆயுதம் ஏந்தினது ..இரத்தம் சிந்தி போரடுறதெல்லாம் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க என்று.. பிறகு ஏன் எங்களோட சொறிய வாறீங்கள். உதவி செய்யவேண்டிய நீங்கள் மேலும் மேலும் உபதஇதிரம் செய்கிறீங்கள். நீங்கள் உபதஇதிரம் செய்யாமல இருந்தாலே கோடி உதவி செய்ததற்க சமன். பின் ஒருகாலம் உதவியாக கைமாறு செய்வம்... இது ஏன் தான் மரமண்டை உங்களுக்கு விளங்கவில்லையோ தெரியவில்லை கோணல்(கேணல்).... :oops: - Mathan - 05-22-2005 அனுமதி மறுத்த புலிகள்! புலிகளிடமிருக்கும் போர்ப் பிரதேசங்களைப் பார்வையிடுவதென்பது ஒருதலைப்பட்சமானதும் சாத்தியப்படாதெனவும் புலிகள் கூறிவிட்டனர் விடுதலைப் புலிகளின் `வான்புலிகள்' குறித்து இலங்கை மட்டுமல்லாது இந்தியாவும் பெரும் கவலை கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் இரு கடற்படைகளைத் தவிர, மூன்றாவது கடற்படையாக கடற்புலிகள் வர முடியாதெனக் கூறி வந்த இந்தியாவுக்கு, தற்போது விடுதலைப் புலிகளின் வான் புலிகள் குறித்து பெரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. வான் புலிகள் அமைப்பானது இந்தியாவினதும் இலங்கையினதும் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் பேரச்சுறுத்தலாயிருப்பதால், வான்புலிகள் விடயத்தில் இனியும் பொறுமை காக்காது, இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா விடுதலைப் புலிகளுக்கெதிராக கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டுமென, இந்தியாவின் முன்னாள் சிரேஷ்ட படை அதிகாரியொருவர் கூறுமளவிற்கு நிலைமை வந்துள்ளது. புலிகள் வசம் வான்படை இருப்பதன் மூலம் இலங்கையானது தனது வான் பரப்பின் இறைமையை இழந்து விட்டதாக இந்திய தரப்பிலிருந்து கவலை வெளியிடப்படுகிறது. இந்த வான் புலிகள் அணியானது வான் கரும்புலிகள் படையணியாக மாற்றம் பெற்று வருவதாகவும் இது பிராந்தியத்திற்கே பேராபத்தாகி விடுமெனவும் இலங்கையும் இந்தியாவும் கூறுகின்றன. புலிகள் -கரும்புலிகள், கடற்புலிகள் - கடற்கரும்புலிகள் என்ற நிலையில், தற்போது வான்புலிகள் என்பதை விட `வான் கரும்புலிகள்' என்பதே சிங்கள தேசத்தினது நிம்மதியை குலைத்தது மட்டுமன்றி இந்தியாவையும் பெரும் கவலையடையச் செய்துள்ளது. இது குறித்து இலங்கை அரசுடன் இந்தியா நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதுடன், வடக்கே பலாலி விமானப் படைத் தள ஓடு பாதையை பல கோடி ரூபாவில் திருத்தியமைக்கவும் பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது. இலங்கையிலிருந்து இந்தியப் படைகள் வெளியேறிய பின் கடற்புலிப் படையணியை கட்டியெழுப்புவதில் மிகத் தீவிரம் காட்டிய புலிகள், வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தனர். கடற்பரப்பு எவர் வசமிருக்கிறதோ அந்த நிலப்பரப்பும் அவர்கள் வசமேயிருக்கும் என்பதை கடந்தகாலப் போர்கள் தெளிவுபடுத்தின. ஆனையிறவு படைத்தள முற்றுகை இதற்கு மிகவும் சிறந்த உதாரணமாகும். இவ்வாறானதொரு நிலையில் தான் வான்புலிகள் அணியை கட்டியெழுப்புவதிலும் புலிகள் ஆர்வம் காட்டினர். ஆரம்பத்தில் இது சாத்தியப்படாத போதிலும், புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் உதவியுடன் புலிகளால் வான் புலிகள் படையணியை உருவாக்க முடிந்தது. பல தமிழ் இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளில் விமானப் பயிற்சிகளை பெற்றதுடன் அவற்றுக்கான தொழில்நுட்பங்களையும் கண்டறிந்தனர். 1993 இல் கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கே விடுதலைப் புலிகள் விமான ஓடுபாதையை அமைத்தனர். சுமார் இரு வருடங்களில் இந்த ஓடுபாதை பூர்த்தியடைந்தது. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இதனைத் திறந்து வைத்தார். அப்போது இந்த ஓடுபாதையில் `கிளைடர்' ரக வானூர்தி மூலம் போராளியொருவர் தங்கள் வான் பறப்பை ஆரம்பித்தார். எனினும் இந்த ஓடுபாதை பின்னர் விமானப் படையினரின் பலத்த விமானக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இதன் பின்னர் 1995 இல் புலிகளின் விமான எதிர்ப்புப் படையணி, கேணல் கிட்டு ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டது. 95 ஏப்ரல் 28, 29 ஆம் திகதிகளில் இந்தப் படையணியே யாழ்ப்பாணத்தில் விமானப் படையினரின் இரு அவ்ரோ விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் 1998 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தின் மீது புலிகளின் சிறிய ரக வானூர்தியொன்று மலர் தூவி தங்கள் வசம் வானூர்திகள் இருப்பதை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியது. தற்போது போர்நிறுத்த உடன்பாடு அமுலில் இருக்கையில் இரணைமடுப் பகுதியில் புலிகள் பாரிய விமான ஓடுபாதையொன்றை அமைத்து அதனருகே சிறிய ரக விமானங்களை நிறுத்தி அவற்றின் பாதுகாப்பிற்கென வான் பாதுகாப்பு முறையையும் வைத்திருப்பதாக இலங்கை அரசு உலகம் முழுவதும் கூறி வருகிறது. இதுபற்றி இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் ஆதாரபூர்வமாக அறிக்கைகளை அனுப்பி வைத்தும் இருந்தது. இரணைமடு விமான ஓடுபாதைக்கருகே இரு சிறிய விமானங்கள் இருப்பதை விமானப்படையினர் பல்வேறு தடவைகள் உறுதிப்படுத்தினர். இது பற்றி கண்டறியுமாறு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கும் பல தடவைகள் அரசு தரப்பு அழுத்தங்களைக் கொடுத்தும் அவர்களால் இதுவரை அந்தப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை. புலிகளின் தலைமைப் பீடத்துடன் இது குறித்து கண்காணிப்புக் குழு பல தடவைகள் பேசியது. இது பற்றி நோர்வே அனுசரணையாளர்களிடமும் (நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி விரிவான கடிதம் அனுப்பியிருந்தார்.) இலங்கை அரசு பல தடவைகள் முறையிட்டும் இரணைமடுப் பகுதியில் புலிகளின் விமான ஓடுபாதையை எவராலுமே பார்க்க முடியவில்லை. ஆனாலும் இலங்கைப் படைத்தரப்பும் இலங்கை அரசும் நோர்வேயிடமும் கண்காணிப்புக் குழுவிடமும் இதுபற்றி தொடர்ந்தும் முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்தன. இந்த நிலையில் தான் கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி சென்ற இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கார் இது பற்றி புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது, புலிகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இரணைமடுவோ, வேறெந்தப் பகுதியோ இவ்வாறான இடங்களைப் பார்க்க எவரையும் அனுமதிக்கமாட்டோமெனத் தெரிவித்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இது குறித்து இனிமேல் பேசுவதில் பயனில்லையெனவும் பிரட்ஸ்கார் மூலம் இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை படையினரைப் போன்றே விடுதலைப் புலிகளிடமும் இராணுவ கட்டமைப்புள்ளது. அவர்கள் தங்கள் படை நடவடிக்கைக்காக பல்வேறு படைப்பிரிவுகளையும் கொண்டுள்ளனர். அந்தப் படைப்பிரிவுகள் பல்வேறு வகையான போர்த் தளபாடங்களைப் பயன்படுத்தும். அது அரசபடையினருக்கும் நன்கு தெரியும் என்பதால் புலிகளிடமிருக்கும் போர்ப் பிரதேசங்களைப் பார்வையிடுவதென்பது ஒருதலைப்பட்சமானதும் சாத்தியப்படாதெனவும் புலிகள் கூறி விட்டனர். இன்று விமான ஓடுபாதையைப் பார்க்க வேண்டுமென்பவர்கள் நாளை புலிகளிடம் இருக்கும் ஒவ்வொரு ஆயுதங்களையும் பார்க்க வேண்டுமென்பார்கள். இது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமுடியாததென்றும் கூறி இது பற்றி இனிமேல் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாமெனவும் புலிகள் பிரட்ஸ்காரிடம் தெளிவாகக் கூறியுள்ளனர். இந்தச் செய்தி பிரட்ஸ்காரினால் உடனடியாக அரச தரப்பிற்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. புலிகளின் இந்த நிலைப்பாட்டால், அடுத்து என்ன செய்வதெனத் தெரியாத நிலையில் அரசு உள்ளது. இது பற்றி பல நாடுகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் தற்போது இந்தியாதான் இவ் விடயத்தில் தீவிர அக்கறை காட்டி வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் விரைவில் இங்கு வரும் போது அரச தரப்புடன் இது பற்றி பேசவுள்ளார். இதேநேரம், புலிகளிடமிருப்பதாகக் கூறப்படும் செக் குடியரசுத் தயாரிப்பான `சிலின் Z-143' ரக விமானங்கள் இரண்டும், நாட்டின் ராடர் கண்காணிப்பையும் தாண்டி எவ்வாறு வன்னிக்குள் வந்துசேர்ந்தன என்பதே மிகப் பெரும் கேள்வியாகும். கட்டுநாயக்கா மற்றும் இரத்மலானையிலுள்ள விமானத் தளங்களிலிருக்கும் ராடர் கருவிகளால் முன்னர் 60 கடல் மைல் பிரதேசத்தை கண்காணிக்க முடிந்தது, எனினும் தற்போது பீதுருதாலகாலமலையில் நிறுவப்பட்டுள்ள ராடர் கருவிகளின் மூலம் கொழும்பிலுள்ள ராடர் தளத்திலிருந்து 200 கடல் மைல் தூரத்தை கண்காணிக்க முடியும். அப்படியிருந்தும் இவ்விரு விமானங்களும் எவ்வாறு இலங்கைக்குள், அதுவும் வன்னிக்குள் நுழைந்தன என்பதை படையினராலோ அல்லது புலனாய்வுத் தரப்பினராலோ இதுவரை அறிந்து கொள்ள முடியவில்லை. அதேநேரம், வெளிநாடுகளிலிருந்து உதிரிப் பாகங்களாக வன்னிக்குள் கொண்டு வரப்பட்டு பின்னர் அவை விமானங்களாகப் பொருத்தப்பட்டிருக்கலாமென்ற ஊகங்களுமுள்ளன. உதிரிப் பாகங்களாகத்தான் கொண்டு வரப்பட்டு இவை பொருத்தப்பட்டன என்றால் படையினரின் அச்சம் உச்சத்திற்கே சென்று விடும். ஏனெனில், இவ்விரு விமானங்களையும் விட பொருத்தப்படாத நிலையில் மேலும் பல விமானங்கள் வன்னியில் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டிருக்கலாமென்ற அச்சமும் எழுகிறது. இரணைமடு விமான ஓடு பாதையானது 1,250 மீற்றர் நீளமானது. இதன் அருகே இரு விமானங்களுள்ளன. விமானங்கள் நிறுத்தப்படும் இடமுமுள்ளது. அமெரிக்காவின் மிகப் பெரும் சரக்கு விமானமான ஹேர்குலிஸ் (சி.130) முழுமையாக சரக்குகளுடன் தரையிறங்கக் கூடியளவிற்கு இந்த விமான ஓடுபாதை விஸ்தீரணமானதென விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். புலிகள் வசமிருப்பது இலகு ரக சிறிய விமானங்களென்றால், உலகின் மிகப் பெரும் சரக்கு விமானங்களைத் தரையிறக்கக் கூடியளவிற்கு அவர்கள் ஏன் மிகப்பெரிய ஓடுபாதையைஅமைத்துள்ளார்களென்ற கேள்வியும் படைத்தரப்பால் எழுப்பப்படுகிறது. சிறிய ரக விமானங்களை வெளியே காண்பித்து பெரிய ரக விமானங்களைத் தரையிறக்கப் போகிறார்களா அல்லது எங்காவதிருந்து விமானங்களை கடத்தி வரப் போகின்றார்களா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர். அதேநேரம், இந்த ஓடு பாதையானது இந்தியப் படையினர் பயன்படுத்தும் டோர்னியர்ஸ் (Dorniers) ரக நடுத்தர விமானங்களைப் பயன்படுத்தும் வசதி கொண்டது. டோர்னியர்ஸ் விமானமானது 12 முதல் 14 துருப்புக்களையும் 1.2 தொன் நிறையுடைய சரக்குகளையும் ஒரேநேரத்தில் ஏற்றிச் செல்லக் கூடியதென்பதால் இவ்வாறான விமானமொன்றினால் ஏற்படும் விளைவு பற்றிய தாக்கம் இலங்கை அரசை மட்டுமல்லாது இந்திய அரசையும் கவலை கொள்ள வைக்கிறது. புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் இலகு ரக விமானங்களை கண்டறிவதென்பது மிகவும் சிரமமானது. இவ்வாறான இலகு ரக விமானங்களால், மிகவும் தாழ்வாகவும் ராடர்களுக்குள் சிக்காதும் பறக்கக் கூடியன. இவற்றிலிருந்து வெளிப்படும் மிகச் சிறிய சமிக்ஞைகளை ராடர்களால் கண்டறிய முடியாது. கடந்த 11 ஆம் திகதி வாஷிங்டனில் வெள்ளை மாளிகைப் பகுதியில், விமானப் பறப்பிற்கு தடைவிதிக்கப்பட்ட சுமார் 3 மைல் தூர அதிஉயர் பாதுகாப்பு வலய வான்பரப்புக்குள், உலகத் தனிப்பெரும் வல்லரசின் பாதுகாப்பையும் மீறி இலகு ரக விமானமொன்று பல தடவைகள் ஊடுருவிப் பறந்ததால், வெள்ளை மாளிகையிலிருந்தும் அமெரிக்க பாராளுமன்றத்திலிருந்தும் அனைவரும் வெளியேற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இலகு ரக சிறிய விமானங்களால் எங்கும் ஊடுருவ முடியுமென்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் விமானங்கள் மூலம், நியூயோர்க்கில் செப்டெம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட வான் வழித் தற்கொலைத் தாக்குதலைப் போன்று பாரிய தாக்குதல்களைக் கூட நடத்த முடிமென்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. தற்போது வன்னியில் புலிகளின் வான் படையினர், மண்மூடைகளை இலக்குகளாக வைத்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கூறுகின்றனர். கொழும்பிலும் தெற்கிலும் வான் வழித் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கிலேயே இந்தப் பயிற்சிகள் நடைபெறுவதால் முக்கிய தலைவர்களையும் கேந்திர முக்கிய நிலைகளையும் தாக்கும் வாய்ப்புகளுள்ளதாகவும் அச்சம் எழுத்துள்ளது. இவ்வாறானதொரு தாக்குதலின் போது, விமானத்தில் வரும் கரும்புலிகள் தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கிகளை பொருத்தியிருப்பதுடன் மட்டுமல்லாது அந்த வானூர்திக்குள்ளும் பெருமளவு வெடி மருந்தை நிரப்பி வந்து இலக்குகள் மீது தாக்குதல் நடத்த முடியும். பொதுக் கூட்டமொன்றில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முக்கிய தலைவர் அல்லது தலைவர்கள் மேடையிலிருக்கும் போது அந்த மேடையை இலக்கு வைத்து வந்து தாக்குதலை நடத்த முடியும். அதேநேரம், கடற்கரும்புலி அல்லது தரைக் கரும்புலியென்றால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதலை நடத்தி ஆபத்தெதுவுமின்றி அவர்களை அழித்துவிடலாம். ஆனால், வான் கரும்புலியின் வானூர்த்தி, கூட்டமொன்றை இலக்கு வைத்து மேடையை நோக்கி வரும் போது கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை சுட்டு வீழ்த்தி அழிப்பது பேராபத்தானது. அந்த வானூர்தி முழுவதும் வெடிகுண்டுகளும் வெடிமருந்துகளும் நிறைத்து வைக்கப்பட்டிருக்குமென்பதால், அதன் மீது தாக்குதலை நடத்தும் போது அந்த வானூர்தி வெடித்துச் சிதற அதற்குள்ளிருக்கும் வெடிமருந்துகளும் குண்டுகளும் வெடித்துச் சிதற அழிவின் அளவு சொல்லும் தரமற்றதாயிருக்கும். இதனால் வான் கரும்புலிகள் குறித்த அச்சம் அரசையும் படையினரையம் அதிர வைத்துள்ளது. புலிகளின் வானூர்திகளை இவ்வாறான தாக்குதல்களை விட மேலும் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். வானிலிருந்து வந்து தரையிலோ அல்லது கடலிலோ தாக்குதலை நடத்த முடியும். வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை கடத்தி வரமுடியும். கடற்படைக் கப்பல்களதும் படையினரதும் நடமாட்டங்களை கண்காணிக்கலாம். ஆட்லறித்தாக்குதல்களை வான்வெளியிலிருந்து வழி நடத்தலாம். களமுனையிலிருந்து காயமடைந்தவர்களை அப்புறப்படுத்தலாம், குறுகிய நேர அறிவித்தலில் தங்கள் தலைவர்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்லலாம். அத்துடன், விமானப் படைத்தளங்கள், கடற்படைத் தளங்கள், இராணுவத்தளங்கள் மீதும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தமுடியும். அதேநேரம், விமானப்படையினரால் இந்த விமானங்களை நடுவானில் வைத்தே பல்வேறு விதங்களிலும் அழித்துவிட முடியும். இந்த வானூர்திகள் புலிகளின் ஓடுபாதையிலிருந்து கிளம்பியது தெரிந்துவிட்டால் அவற்றை நடுவானில் வைத்தே அழித்துவிடவும் முடியும். இதேநேரம் தங்கள் வானூர்திகளை விமானப் படையினர் குண்டு வீசி அழித்து விடுவார்களென்பதையும் புலிகள் நன்கறிவர். இதனால் தங்கள் விமானத் தளத்திற்கு அவர்கள் `இலத்திரனியல் வான் பாதுகாப்பு முறை'களையும் ஏற்படுத்தியுள்ளனர். புலிகளின் இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை, அண்மைக் காலங்களில் வன்னிக்கு புலிகளின் தலைவர்களை ஏற்றியிறக்கச் சென்ற ஹெலிகொப்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புலிகளின் இந்த வான் பாதுகாப்பு முறையானது, தானாகவே செயற்படும் பொறிமுறையைக் கொண்டது. அதாவது, இந்த வான் பாதுகாப்பு பொறிமுறையிலுள்ள பிரதேசத்தை, அநாமதேய விமானங்களோ அல்லது எதிரியின் விமானங்களோ நெருங்கினால் விமானத் தளத்திலுள்ள இந்தக் கருவிகள் தானாகவே இயங்கி அந்த விமானங்களை நோக்கி தன் வசமுள்ள, நிலத்திலிருந்து விண்ணை நோக்கிப் பாயும் ஏவுகணைகளைச் செலுத்தி இலக்கை தாக்கும். இவ்வாறு தினமும் வெளியாகும் தகவல்கள் வான் புலிகளின் பலம் பற்றி பல்வேறு தகவல்களையும் வெளியிடுகிறது. ஆரம்பத்தில் இரணைமடுவில் விமான ஓடு பாதை பற்றிய செய்தி வெளியானது. பின்னர் அவர்கள் வசமிருக்கும் விமானங்கள் பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் அப்பகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருப்பது பற்றியும் அதன் பின்னர், தங்கள் விமானங்களையும் தங்கள் பிரதேசத்தையும் விமான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதற்கு வான் பாதுகாப்பு முறையை புலிகள் அறிமுகப்படுத்தியிருப்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி ஆச்சரியமளிக்கின்றன. இந்த நிலையில் தற்போது கிழக்கிலும் புலிகள் விமான ஓடு பாதையை அமைக்க முயல்வதாக வெளியாகும் செய்திகளால் அரசு தரப்பு இடிந்து போயிருக்கிறது. தினக்குரல் கண்காணிப்பு குழு தலைவர் - நேசன் - 05-28-2005 கண்காணிப்புக்குழு தலைவர் இன்று பத்திரிகையாளர் மத்தியில் விடுதலைப்புலிகளின் விமானம் பற்றி சொன்ன கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. அவர்கள் போர்நிறுத்தத்தை அவதானிக்க சென்றார்களே தவிர ,விடுதலைப்புலிகளின் விமானம் யாருக்கு ஆபத்து என்று பரிசீலிக்க செல்லவில்லை.போர்நிறுத்த ஒப்பந்தத்தின் படி விடுதலைப்புலிகள் என்ன ஆயுதம் வைத்திருக்கின்றர்கள் என்று ஆராய்வது கண்காணிப்புக்குழுவுக்கு வேலையில்லை. லங்காவின் விமானம் புலிகளின் விமானத்தளத்தை அழிக்க குண்டுவீசினால் அதுவே போர்நிறுத்த முறிவாக இருக்கும் என்றும் சொல்கிறார். அதன்படி விமானத்தளத்தை குண்டுவீசி அழிப்பதே சரி என்ற தோரணையில் லங்கா அரசுக்கு புத்திமதி சொல்கிறார் போல் தான் அவரது பேச்சு தெரிகிறது. அனைத்து தமிழர்களும் அவரது கருத்தை கண்டிக்கவேண்டும் - Mathan - 05-28-2005 'புலிகளிடம் விமானமும் ஓடுபாதையும் இருந்தால் அது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும்'- ஹொக்லாண்ட் <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/10/20041030170215hagruphockland203.gif' border='0' alt='user posted image'> <b>ஹொக்லாண்ட்</b> விடுதலைப்புலிகளிடம் விமான ஓடுபாதையும், விமானங்களும் இருந்து அவை பயன்படுத்தப்படுமானால், அது இலங்கை சட்டவிதிகளை மாத்திரமல்லாமல், சர்வதேச சட்டவிதிகளையும் மீறும் ஒரு செயல் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லாண்ட் கூறியுள்ளார். விமான ஓடுபாதை குறித்து தனக்கு இலங்கை அரசிடம் இருந்து முறைப்பாடு வந்ததைத் தொடர்ந்து ஹெலிக்கொப்டர் ஒன்றில் பயணம் செய்யும் போது அந்த ஓடுபாதையை தான் பார்த்ததாகவும், ஆனால் அங்கு சென்று நேரடியாக அது குறித்து விசாரணை நடத்த தனக்கு புலிகள் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். அதே போன்று புலிகளிடம் இலகு ரக விமானங்கள் இருப்பதாகவும் இலங்கை அரசு புகார் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த விமானங்கள் அல்லது ஓடுபாதை மீது இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்துமானால் அது மீண்டும் ஒரு யுத்தத்துக்கு வழிவகுத்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். BBC தமிழ் - Mathan - 05-28-2005 புலிகள் விமானப்படையால் இந்தியாவுக்கு ஆபத்து: நார்வே தூதுக்குழு எச்சரிக்கை விடுதலைப் புலிகளின் விமானப்படையால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்று நார்வே அமைதிக் குழு எச்சரித்துள்ளது. இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க நார்வே தூதுக்குழு மீண்டும் முயற்சி எடுத்து வருகிறது. இக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது விடுதலைப் புலிகள் வடக்குப் பகுதியில் விமான தளம் ஒன்றை உருவாக்கி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் கூறுகையில், விடுதலைப் புலிகள் வசம் 2 இலகு ரக போர் விமானங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் விமானங்களை நாங்கள் பார்க்கவில்லை. விமான தளத்தை மட்டும் தான் பார்த்தோம். விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருந்தால் அது மிகவும் ஆபத்தானது. இதனால் இலங்கையின் பாதுகாப்பு மட்டுமின்றி அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வான் வெளியை பொறுத்த வரை அது இலங்கை அரசின் முழுக்கட்டுப்பாட்டில் தான் உள்ளது. புலிகள் விமானங்களை இயக்கினால் அது இலங்கை வான் வெளியை மட்டுமல்லாது சர்வதேச வான்வெளி சட்டதிட்டங்களை மீறிய செயலாக கருதப்படும். இலங்கை விமானப்படை, புலிகளின் விமான தளத்தின் மீது குண்டு வீசினால் அது போர் தொடங்குவதற்கு அச்சாரமாக அமைந்து விடும். இப்படி ஒரு சம்பவம் நடந்தால் நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விடுவோம் என்றனர். தட்ஸ் தமிழ் - hari - 05-28-2005 Quote:இலங்கை விமானப்படை, புலிகளின் விமான தளத்தின் மீது குண்டு வீசினால் அது போர் தொடங்குவதற்கு அச்சாரமாக அமைந்து விடும். இப்படி ஒரு சம்பவம் நடந்தால் நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விடுவோம் என்றனர். சதி ஆரம்பம்! :roll: - Sriramanan - 05-28-2005 இனி இவரை தொடர்ந்து உந்தப் பதவியில் நிலைக்க விட்டால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடுநிலைமைத் தன்மை என்பது இல்லாமல் போய்விடும். அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு நோர்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் - hari - 05-28-2005 இராணுவம் தன்னை பலப்படுத்திக்கொள்ளலாம்! நாங்கள் இழிச்சவாய்கள் சும்மா இருக்க வேண்டுமாம், நல்ல நியாயம்? :evil: - anpagam - 05-28-2005 வேலியேபயிரைமேய்ந்த கதையாகிறது... அல்லது ஆக்கப்பட்டதோ... ஆக்கப்படுகிறதோ... :? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :x - jeya - 05-28-2005 எல்லாவற்றுக்கம் பதில் அண்ணையிடம்(தலைவரிடம்) இருக்கு. யாரும் எங்களுக்கு சட்டம் நியாயம் கூறமுடியாது. சட்டம் நியாயத்தைப்பற்றி இவங்களுக்கு என்ன தெரியும்..... :twisted: :twisted: - சாமி - 05-28-2005 hari Wrote:[quote=jeya]எல்லாவற்றுக்கம் பதில் அண்ணையிடம்(தலைவரிடம்) இருக்கு. யாரும் எங்களுக்கு சட்டம் நியாயம் கூறமுடியாது. சட்டம் நியாயத்தைப்பற்றி இவங்களுக்கு என்ன தெரியும்..... :twisted: :twisted: ஏன்னராப்பா அந்தாளுக்கு எவ்வளவு வேலைகள் இருக்கு. நீங்களும் கொஞ்சம் எதிர்புக்களைக்காட்டி அண்ணையின்ர சுமைகளைக் குறைக்கலாம் அல்லவா? இனி புலிகளிடம் ஆட்டிலறி இருக்கின்றது. அதுவும் இருக்கக்கூடாது என்று கண்காணிப்புக் குழுத்தலைவர் சொன்னாலும் சொல்லுவார். - hari - 05-29-2005 <b>கிழக்கில் தொடரும் கொலைகளால் போர் நிறுத்தத்துக்கு நெருக்குதல்</b> இரு தரப்பினரும் விரும்பும் வரை கண்காணிப்புக் குழு இலங்கையில் இருக்கும் என்கிறார் தலைவர் ஹொக்லண்ட் கிழக்கில் படுகொலைகள் அதிகரித்திருப்பதும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கும் ஸ்தம்பித நிலையும் யுத்த நிறுத்தத்துக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்ற போதும் விடுதலைப் புலிகள் மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லையென இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது. `புதிதாக போர் மூளுவதற்கான அறிகுறிகள் இல்லை. ஆனால், சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்படாதிருப்பது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்திருக்கின்றது' என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பதில் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்துடன் வியாழனன்று இடம்பெற்ற சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் படுகொலைகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தில் காட்டுப்பகுதியில் இடம்பெறும் சம்பவங்களும் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவினருடனான மோதல் என்று குறிப்பிட்டிருக்கும் ஹொக்லண்ட், அது உண்மையானதொரு பிரச்சினை என்று குறிப்பிட்டிருக்கிறார். `மட்டக்களப்பு தற்போது பிரச்சினைக்குரிய பகுதியாக உள்ளது. இது முழுப் பிராந்தியத்தையும் சீர்குலைக்க வைக்கிறது. ஆனால், முற்றுமுழுதாக பார்க்கையில் யுத்த நிறுத்தத்துக்கு ஆபத்தில்லை என்று நான் கருதவில்லை' என்றும் ஹொக்லண்ட் கூறியுள்ளார். கடல்கோளால் வட, கிழக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் தாங்கள் முழுமையாக ஈடுபட்டிருப்பதாக அரசாங்கமும் புலிகளும் கூறுகின்றனர். அதேசமயம் யுத்த நிறுத்த மீறல் தொடர்பாக முறைப்பாடுகள், மீறல் சம்பவங்களும் குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, விடுதலைப் புலிகளிடம் இரு விமானங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுவது சமாதானத்துக்கு அச்சுறுத்தல் என்றும், ஏனெனில், யுத்த நிறுத்த உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்ட அதிகார சமநிலையை இது பாதிக்குமென்றும் ஹொக்லண்ட் தெரிவித்திருக்கிறார். போர் நிறுத்த உடன்படிக்கை சைச்சாத்திட்ட பின்னர் புலிகள் யுத்த விமானத்தை பெற்றிருந்தால் அது போர் நிறுத்த உடன்பாட்டு மீறலாகும். அதிகார சமநிலையை அது பாதிக்கும். இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் இதுவாகும். இந்தியாவும் இது தொடர்பாக அக்கறை கொண்டுள்ளது. புலிகளின் விமானம் எதனையும் கண்காணிப்புக்குழு பார்க்கவில்லை. ஆதலால் விமானங்கள் புலிகளிடம் இருக்கின்றதா? இல்லையா? என்பது பற்றிக் கூற முடியாது. ஆனால், புலிகளிடம் விமானம் இருப்பதாக இலங்கை அரசு நம்புகிறது. இந்தியா கூட இது தொடர்பாக வெகுவாக அக்கறை காட்டுகிறது என்றும் ஹொக்லண்ட் தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அரச சமாதான செயலக பணிப்பாளர் நாயகம் ஜயந்த தனபால ஆகியோரின் புகார்களையடுத்து புலிகளின் விமானத்தளத்திற்கு வீதி வழியாக செல்ல கண்காணிப்புக்குழு முயற்சித்தது. ஆனால், சோதனைச்சாவடிகளில் புலிகள் நிறுத்தி விட்டனர். அதனைத் தொடர்ந்து விமானத் தளத்திற்கு ஹெலிக்கொப்டரில் செல்ல ஹெலிகளை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் கூறியது. ஆனால், அதற்கு புலிகள் அனுமதி வழங்கமாட்டார்களென்று ஹொக்லண்ட் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் விமானத் தளம் மீது இலங்கை விமானப்படை குண்டு வீசினால் என்ன நடக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது போர் மூண்டதாக ஆகிவிடும் என்று அவர் கூறியிருக்கிறார். யுத்த நிறுத்த மீறல்களை கண்காணிப்புக் குழுவினர் கட்டுப்படுத்த வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்ப்பது நீதியற்றது என்று கூறியுள்ள ஹொக்லண்ட், கண்காணிப்புக் குழுவிடம் பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸார் போன்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியாது. சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்த மாதிரியான வன் செயல்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்கவும் மட்டுமே எங்களால் முடியுமென்று அவர் தெரிவித்தார். அதிக அதிகாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்க்கப்பட்ட போது, தற்போது 60 கண்காணிப்பாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் கண்காணிப்புக்குழுவின் பணிகளுக்கும் வருடாந்தம் 2 மில்லியன் டொலர் (20 கோடி) செலவாகிறது. அதேவேளை, கிழக்கு மாவட்டங்களில் இடம் பெறும் கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்த முடியாமல் இலங்கைப் பொலிஸார் உள்ளனர். ஏனெனில் எவரும் முன்வந்து சாட்சி சொல்வதில்லை. இலங்கைப் பொலிஸாராலேயே முடியாமல் இருக்கிறது என்று ஹொக்லண்ட் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மர்மமாகவிருக்கும் கருணா குழு, தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், கருணா குழுவுடன் கண்காணிப்புக் குழுவிற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று கூறியிருக்கிறார். பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அரசாங்கம், புலிகள் ஆகிய இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டல், தாங்கள் வெளியேறி விடுவோம் என்று கூறியிருக்கும் ஹொக்லண்ட், ஆனால், இதுவரை இருதரப்பினரும் தாங்கள் இங்கு தங்கியிருப்பதையே விரும்புவதாக கூறியுள்ளார். - Mathan - 05-29-2005 புலிகளின் விமானப் படையால் போர் அபாயமா?: மறுக்கிறது கண்காணிப்புக் குழு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையால் போர் ஏற்படும் சூழல் இருப்பதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி ஸ்தாபனம் வெளியிட்ட செய்திகளை கண்காணிப்புக் குழு நிராகரித்துள்ளது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இதுபோன்ற சிறிதும் யோசிக்காத, இத்தகைய தொணியில் தெரிவிக்காத கருத்துகளை ஏ.எஃப்.பி செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை குறித்து நாம் அவற்றை பார்வையிடாத நிலையில் எதையும் உறுதி செய்யவில்லை என்றும் புலிகளின் வான்படை சிறிலங்கா வான்தளத்தை பயன்படுத்தினால் அது சர்வதேச விதிகளுக்கு எதிரானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று போர் நிறுத்த கண்காணிப்புக்குத் தலைவர் தெரிவித்ததாக ஏ.எஃப்.பி தெரிவித்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு சிக்கலான நிலைமையில் இருக்கின்ற சூழலில் உணர்வுகளை எரியூட்டுகிற வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டாம் என்றும் அனைத்து ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Puthinam |