Yarl Forum
எனக்குள் ஒருவன் - பிடித்த கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: எனக்குள் ஒருவன் - பிடித்த கவிதை (/showthread.php?tid=6974)

Pages: 1 2 3 4 5 6 7 8


- Priyamudan selvaa - 04-02-2005

நøல கவிதை குருவிகள்


- tamilini - 05-23-2005

<img src='http://img.123greetings.com/thumbs/love_sweetheart/1036-008-42-1059.gif' border='0' alt='user posted image'>

<b>கருநீல இருள் கொண்ட
இரவதில்
கன்னியிவள் கண்விழிகள்
கண்டது அவன் உருவம்.
கள்வனும் இவள்
கண்ணணும் அவனாய்.
கண்டது விழியது அவன் கோலம்
காட்சியது நிலைத்திட
கடும் சமர் அங்கே
கண்ணுக்கும் இரவிற்கும்.
விழி மூடி துயில்
தழுவும் நேரமதில்
விழி விட்டு அவன் மறைந்திடுவான் என
மங்கையவள் நினைத்துவிட
நடுச்சாமங்கள் சிவராத்திரியாய்.

விழியாலே
மொழி பேசும் விண்ணனவன்
நவகால காதலிற்கு வில்லனாம்.
எட்டவே நின்று இவள் உயர் குடிக்கிறான்.
அவன் ஆசை மொழி கேட்பதற்காய்.
அடங்கா ஆசையுடன் இவள்
செத்துச்செத்து தினம் பிழைக்கிறாள்
விழிகள் நான்கும் நெடுநாளாய் பேசும்
மொழியது இன்னும் இவள் அறியாததால்.

ஊடலிலும் கூடலிலும்
உள்ள சுகம்.
இன்று அறிவதால்.
செல்லக்கோபங்கள் தானே உண்டுபண்ணி
சமாரசமும் செய்கிறாள்..
அதில் தான் பேரின்பம்..
இதுவே பேரிடராக வேண்டாம் என
செல்லமாய் கூட சண்டைகள் தவிர்க்கிறாள் .
அவனுடன் மட்டும்...!

ஏங்கங்கள் நிறைந்திட்ட
ஏழையின் உள்ளம்
முழுதும் செல்வமே அவன்தானே.
சாவரினும் இனி அழியாத
அவன் நினைவில்
நனைந்து காய்வதால்..
கவலைகள் இல்லை..
கண்ணெதிரே அவன்
இல்லை என்பதைத்தவிர
கண்கள் நிஜம் தழுவும் நாள்
வெகுதூரம் இல்லை என...
அவன் சிறுவிழி சத்தியம்
செய்திட பு}ரித்துப்போய்..
செய்த புண்ணியம் எண்ணி..
மறுபடியும் மழலையாய் தவழ்கிறேன்..
நினைவில் அவன் மடி.
அவனும் அணைத்துக்கொள்கிறான்....!</b>
யாவும் கற்பனை

ஆயுள் வரை தொடர்வான் ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-23-2005

எல்லாம் சரியாகிவிட்டதா தமிழினி :mrgreen:


- வெண்ணிலா - 05-23-2005

அக்கா கவிதை அருமை. ம்ம்ம் ஆயுள்வரை தொடர வாழ்த்துக்கள். ஏன் அக்கா யாவும் கற்பனை என்பதை சிரியதாக்கி கொள்ளுறீங்க? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Mathan - 05-23-2005

அது கொஞ்சம் தான் உண்மை என்பதால் சின்னதா போட்டிருக்கு :mrgreen:
எப்படியோ தமிழினி வழமைக்கு திரும்பிட்டார் சந்தோசம்


- tamilini - 05-23-2005

அடப்பாவிகளா.. எல்லா இடத்திலும் யாவும் கற்பனை அப்படித்தான் போட்டிருக்கன்.. ஆராச்சியா..??

மதன் இது கூட கற்பனை தான். வழமை எல்லாம் ஒன்றும் இல்லை.. அதுவும் கற்பனை தான்.. நன்றிகள் கருத்திற்கு.. எங்கட ஒருவனை படிச்சிதற்கும். :wink:


- kuruvikal - 05-23-2005

அவள் போலவே அழகான கவிதை... வாழ்த்துக்கள் தமிழினி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-23-2005

நன்றிங்க.. எங்களவனை வாசிச்சதற்கு. :wink: :mrgreen:


- Mathan - 05-23-2005

Quote:விழியாலே
மொழி பேசும் விண்ணனவன்
நவகால காதலிற்கு வில்லனாம்.
எட்டவே நின்று இவள் உயர் குடிக்கிறான்.
அவன் ஆசை மொழி கேட்பதற்காய்.
அடங்கா ஆசையுடன் இவள்
செத்துச்செத்து தினம் பிழைக்கிறாள்
விழிகள் நான்கும் நெடுநாளாய் பேசும்
மொழியது இன்னும் இவள் அறியாததால்.

எட்ட இருந்து பேசும்போதுதான் காதல் உணர்வும் தவிப்பும் இன்னும் அதிகமாக இருக்கும்.

விழிமொழி நல்லாத்தான் வதைத்திருக்கு போல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 05-23-2005

என்னத்தை வதைக்க.. சும்மா கற்பனை பண்ணிப்பாக்கிறம்.. அப்படி இப்படி என்று அவ்வளவும் தான். :wink: :mrgreen:


- Malalai - 05-23-2005

Quote:ஏங்கங்கள் நிறைந்திட்ட
ஏழையின் உள்ளம்
முழுதும் செல்வமே அவன்தானே.
ம் அதே தான்.....
Quote:மறுபடியும் மழலையாய் தவழ்கிறேன்..
நினைவில் அவன் மடி.
அவனும் அணைத்துக்கொள்கிறான்....!

ம்ம்
அக்கா என் மனநிலையை அப்படியே எழுத்துருவில் வடித்திருக்கிறிங்க Cry Cry Cry ...நல்லா இருக்கு அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 05-23-2005

மழலை இது என் ஆள் மனமடியில் தவழ்தல் பற்றிய கவிதை.. நீங்க எல்லாம் தவழகூடாது.. சே.. மனநிலை என்றக்கூடாது.. இது எனக்குள் ஒருவனுக்கும் நமக்கும் மட்டும் தான்.. :wink: :mrgreen:


- Malalai - 05-23-2005

ஜயோ அக்கா நான் அப்படி சொல்லல.....நீங்க கவிதையில் சொல்லியிருக்கும் அனைத்தும் எனக்கு பொருத்தமா இருக்கு...அது தான் அப்படி சொன்னன்....சரி சரி நீங்க எழுதியது உங்க ஆளுக்கு மட்டும் தான் சரியா அக்கா.... Cry Cry Cry


- tamilini - 05-23-2005

ஆஆஆ அது ... சே அக்கா சும்மா சொன்னான்.. நாட்டில நடக்கிறதைத்தானே.. எடுத்துவிட்டம்..பொருந்தினால்.. சந்தோசம் தான்.. அழாதீங்க தங்கையே நகைச்சுவைக்காக அப்படிச்சொன்னன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 05-23-2005

ம்ம்..சரி நீங்க சொல்லி நான் அழவில்லை..சரி விடுங்க..என்ன செய்றிங்கள?


- tamilini - 05-23-2005

சரி சந்தோசம்.. என்ன செய்யிறமா.. கனவு காணிறம்.. இருக்கம் பள்ளிக்கூடத்தில.. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Malalai - 05-23-2005

சரி சரி அக்கா நல்லாப் படியுங்க....


- kuruvikal - 05-23-2005

களக் கன்னிகளுக்கு என்ன நடந்தது.. புலம்பிக்கிட்டு திரியுறாங்க...! கண்ணன்கள் புலம்ப வைச்சிட்டு.... புரிஞ்சுக்காத மாதிரி இருக்காங்களோ....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-23-2005

ஆகா.. களக்கன்னிகளுக்கு ஒன்றும் நடக்கல.. புலம்பவும் இல்லை.. சும்மா.. அக்காவும் தங்கையும்.. பேசிட்டிருக்கம்... ஏன்ன புரிஞ்சுக்க வேண்டியவைக்கு புரியும்... மாதிரிக்கே இங்க கதையில்லை.. புரிஞ்சிச்சா..?? :wink: :mrgreen: :evil:


- kuruvikal - 05-23-2005

சரிங்க நீங்க பேசிக்கோங்க... புரிஞ்சுக்க வேண்டிய புரிஞ்சுக்குவினம்...! அதுக்கேன் குருவிகளைக் கோவிக்கிறீங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->