![]() |
|
இந்திய இராணுவம் செய்தது ..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இந்திய இராணுவம் செய்தது ..... (/showthread.php?tid=6807) |
- Mathivathanan - 08-24-2004 அப்படித்தான் உங்களுக்கு உவங்கள் படிப்பிச்சிருக்கிறாங்கள்.. செத்த அத்தனைபெரும் மின்சாரம்தாக்கி இறந்தார்களே தவிர சுட்டு எவரும் இறக்கவில்லை குருவிகாள்.. நாங்கள் கட்சிசார்பாக போட்டது தமிழரசுக்கட்சியாயிருந்தாலும்.. ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் என்பதற்கிணங்க அரசாங்கத்தொடை ஆடிப்பாடி யாழ்ப்பாணத்தை யாழ்ப்பாணமாக்கினது துரையப்பாதான்.. அதை நான் எப்போதும் கோடிட்டுச் சொல்லுவேன்.. இப்பதான் ஒண்டுமில்லையே.. எல்லாம் உடைச்சு எறிஞ்சாச்சே.. எவருக்கும் நான் ஆலவட்டம் பிடிக்கவில்லை அதற்கான தேவையுமில்லை.. எனது கருத்து எப்போதும் பொதுமக்கள் சார்ந்ததாகவெ எழுதப்பட்டது எழுதப்படுகின்றது.. அடடூளியத்தை சாடியே எழுதப்படுகின்றது.. அடாவடித்தனத்தைப்பற்றியே எழுதப்படுகின்றது.. தொப்பி அளவானவர்கள் தூற்றி எழுதுகிறார்கள்.. அதுதான் உண்மை.. - kuruvikal - 08-24-2004 என்ன தந்திக்கம்பத்தில கரண்டா... அதில ரெலிபோன் லைந்தானே போகும்... அதுபோக சுட்டது போக கரண்ட கம்பியையும் அறுத்து விழுத்தியும் கொன்றவங்களே பாவிகள் சனத்தை ஓட வைச்சுப்போட்டு கரண்ட் பாச்சிக் கொன்றிருக்கிறாங்கள்....! :evil: :roll: - Mathivathanan - 08-24-2004 மின்கம்பி அறுந்து விழுந்தது மின்சாரம் தாக்கித்தான் உயிலிழந்தார்கள்.. - kuruvikal - 08-24-2004 என்ன தாத்தா அதுக்க ரெக்கோட்ட மாத்திப்போட்டியள்... எங்க சிறிலங்கா லங்காவுவத்திலையே ரெயினிங் எடுத்தனியள்... நல்லா மாத்துறியள் ரைமுக்கு ரைம் ரெக்கோட்....மாத்துங்கோ மாத்துங்கோ ஏமாறுற கூட்டம் ஏமாறும்...! அதுதானே உங்கள் தேவை...உங்களுக்கான பணிப்புரை....! எல்லாம் மக்கள் தொண்டு..மகேசன் தொண்டு போல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-24-2004 எல்லாம் தமிழிலை எழுதிறதாலை வாற பிழை .. கறண்டுக் கம்பி கறண்டடிச்சுத்தான் செத்ததெண்டு அந்தக்காலத்து தமிழிலை சொல்லியிருந்தால் பிரச்சனை வந்திராது.. எல்லாம் உங்களுக்கு தமிழிலை எழுதினாத்தான் விளங்கும் எண்டதாலை வாற பிழை.. - ThamilMahan - 08-24-2004 அந்த நேரம் யாழ்ப்பாணத்தில கறண்ட் கம்பியும் இருந்ததே? எனக்கெண்டால் சத்தியமா ஞாபகம் இல்லை. எனக்கென்னவோ திருவிழாக்காலத்தில பெரிய ஜெனரேட்டர் மிசின் பூட்டி வெளிச்சம் போடுறதுதான் ஞாபகம். மற்றபடி வீட்டில அன்றாடம் விளக்கு. ஏதும் விசேசமெண்டால் பெற்றோமக்ஸ். சிலபேர் அலடின் விளக்கெண்டு சொல்லி பிரகாசமான ஒண்டும் வைச்சிருந்தவை.... இதுகளெல்லாம் ஞாபகமிருக்கேக்க.... கறண்ட் இருந்தது மட்டும் என்ணெண்டு எனக்கு மறந்துபோனதெண்டு தெரியேல்லை. ஒருவேளை தாத்தா அந்தனேரமே சந்திரிக்கான்ர தாய்க்கு ஆலவட்டம் பிடிக்கவெண்டு கொழும்பில நிண்டவரோ? அதைத்தான் மாறி ஊரெண்ட ஞாபகத்தில உளறிப்போட்டாரோ? - kirubans - 08-24-2004 தாத்தா, யார் கல்லெறிந்தது? உக்களைப் போல ஆட்கள்தான் எரிச்சலில் கல்லெறிந்திருப்பார்கள். அப்படித்தான் என்றாலும் மக்களைக் காவல் காக்க வேண்டியவர்கள் கண்டபடி சூடு நடத்தலாமா? அந்த நேரத்தில் இயக்கங்களும் இல்லை. புலி என்ற பேச்சும் இல்லை. சிங்களவர் தமிழரை அடக்கி வாழவில்லையென்று நீங்கள் சொல்லுவதைக் கேட்க நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. 74 இல் நடந்தது இதுதான். முற்றவெளியில் தமிழாராய்ச்சிக் கூட்டத்தில் இந்தியப் பேராசிரியர் நைனா முகமட் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென வானிலும் ஜீப்பிலும் வந்த பொலிசார் கண்டபாட்டுக்குச் சுடத் தொடங்கினார்கள். அகப்பட்டவர்களுக்கு கொட்டனால் தாக்கினார்கள். 50000 பேரளவில் இருந்த மக்கள் கூட்டம் நாலாபக்கமும் சிதறி ஓட வெளிக்கிட்டதால் பலர் மிதிபட்டனர். மக்கள் ஓடுவதைக் கண்ட பொலிசார், மின்சாரக் கம்பிகளை நோக்கிச் சுட்டதால் அது அறுந்து விழுந்தது. அதற்குள் அகப்பட்டுத்தான் பலர் சாக வேண்டி வந்தது. செத்தவர்களில் சென் ஜோன்ஸ் ஆசிரியரும் ஒருவர். இந்த மரணங்களுக்கு கண்மூடித்தனமாக சூடு நடாத்திய பொலிசார்தான் காரணம், மற்றும்படி நீங்கள் சொல்வதுபோல் கல்லெறிந்தவர்கள் அல்லர். பிரமாண்டமான முறையில் நடந்த தமிழாராய்ச்சி விழாவைக் குழப்ப சிங்கள பொலிசார் செய்த படுகொலைகள்தான் வன்முறைப் போராட்டத்தை ஊக்கியது. பி.கு. நீங்கள் பொதுமக்களை பிரதிநிதிபடுத்துவதாகக் கூறி தமிழ் பொதுமக்களின் அறிவைக் கொச்சைப்படுத்த வேண்டாம். - ThamilMahan - 08-25-2004 உவரின்ர நியாயம் என்னவெண்டால், சிங்களவன் அடிச்சவன் தான். ஆனால் அவன் அடிச்சதால சனம் சாகேல்லை. சனம் பதறியடிச்சு ஓடினதில கறண்ட் கம்பி விழுந்து தான் செத்தவை எண்டது. முதலாவது கேக்கிறன் அந்த உயரத்தில இருந்த கரண்ட் கம்பி சும்மா என்னண்டு விழுந்தது? ஒரு ஆளின்ர உயரமெங்க கரண்ட் கம்பீன்ர உயரமெங்க. அதால ஓடின சனம் தட்டினதால தான் கரண்ட் கம்பி விழுந்தது எண்டது பொய்யாகுது. அதோட தாத்தாவின்ர ஆக்கள் கல்லெறிஞ்சதாலயும் கரண்ட் கம்பி விழுந்திருக்காது. கரண்ட் என்ன இளக்கயித்திலயே போகுது? கல்லெறிக்கு அறுந்து விழ? இரண்டாவது, சரி ஒரு விவாதத்துக்காக இப்பிடி வைப்பம்: சனம் ஓடேக்க ஏதோ ஒருகாரணத்தால கரண்ட் கம்பி விழுந்து சனம் செத்தது எண்டு. அப்பிடிப்பாத்தால் சனம் ஏன் ஓடினது? சிங்களவன் அடிச்சதாலதானே? உவர் சொல்லுறதைப் பாத்தால் "நான் அடிச்சதால உனக்கு நோகேல்லை; நான் அடிக்க நீ விழுந்தனீ அதாலதான் உனக்கு நொந்தது" எண்டு சொல்லுறமாதிரி எல்லோ இருக்கு. - kavithan - 08-25-2004 <span style='font-size:25pt;line-height:100%'>\"காகம் இருக்க பனம்பழம் விழுந்தது போல\"</span>இது <b>1974 இல்</b> <span style='font-size:25pt;line-height:100%'>\"சனம் ஓட மின்சார கம்பம் விழுந்தது போலை\"</span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <span style='font-size:25pt;line-height:100%'>இனி தண்ணித்துவக்கால் தான் சுட்டது என்றும் சொல்லுவார் தாத்தா...... </span><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ThamilMahan - 08-26-2004 ஒரு சின்னத் திருத்தம் கவிதன். தாத்தாவின்ர கறண்டுக்கம்பி விசயம் நடந்தது 1974 தை 10 இல. 1956 இல விழுந்த அடி கோல் பேஸ் கடக்கரையில சத்தியாக்கிரகம் இருக்கேக்கை. - shanthy - 08-27-2004 Mathivathanan Wrote:ஒப்பரேசன் லிபரேசன்போது கத்து கத்தெண்டு கத்தி இந்தியாவை கூப்பிட்டிட்டு உவங்கள் உப்பிடி எத்தனை போர் சொல்லி கறப்பாங்கள்.. இப்பவும் றொக்கற் விடக்கூடிய இடம் கேந்திர முக்கித்துவம் உள்ள தளம் அமெரிக்கா.. யப்பான்.. இந்தியா.. வெண்டு படம் காட்டித்தான் கறக்கிறாங்கள்.. உதுக்கெல்லாம் எடுபட நம்ம சனம் கைநாட்டுக்கள்தானே.. வெளியேறின சனத்தின்ரை தொகை மில்லியனெண்டு கணக்கு.. கொழும்புக்கு இடம்பெயர்ந்த சனத்தின்ரை தொகை 5 இலச்சம்.. எல்லாம் உவங்கடை தனிநாட்டு பனிப்போர் தந்தது.. தமிழருக்காக அடிபடுறாங்களாம்.. சனம் எங்கை விட்டிட்டு ஓடலாமெண்டு காத்திருக்கிது.. எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....? நீழும் இரவின் கருமைக்குள் கண்ணெங்கும் விளக்காக.... அச்சத்தின் விரல்களுக்குள் ஆவிகள் நசிபட வேலி பிரியும்..., நாய் குரைக்கும்...., விதம் விதமாய் ஒலியெழும் திசைபார்த்து விக்கித்துப் போய்விடும் உயிர்களுக்கு உத்தரவாதம் தராத இரவுகள். வேட்டதிரும்...., எங்கோ ஒரு வீட்டின் மகனோ , மகளோ.... அவர்களுக்கு இரையாக.... இருளோடு ஒரு சாவு உறுதியாய்.... 'சலோ" என்றபடி விடிகாலை - அவர்கள் வீதியுலா வெளிக்கிடுவர். புலியொன்றைக் கொன்றதாய் பொய்சொல்லி ஊர்வாயில் மெய்யாக்கிப் போய்விடுவர். சந்திகளில் அரணமைத்து சாவிழுத்தக் காத்திருக்கும் மந்திகளின் மணம் உணரும் மூக்குத் துவாரங்கள் - உயிர் மூச்சையே அதிர்விக்கும். வீதியில் தேவைகட்காய் விரையும் மனிதரின் உயிர்களில் வலியெடுக்கும்.... பெண்களைக்காணும் பனைமரத்து அரணிருக்கும் பேய்களின் இடையிருக்கும் உடை நழுவ விரல் நீட்டி அழைக்கும் விழுங்கிடும் பார்வைகளில் உயிர் மூச்சே நின்றுவிடும்...., பாவாடை கட்டிய ஒரு பூவின் இதழ்கள் பற்களின் அடையாளங்களுடன் பனைவடிலிப் பற்றையில் பிணமாகும். இப்படித்தான் அவர் வருகை சாவையும் , கண்ணீரையும் , உறவுப்பிரிவையும் , ஊரழும் துயரையும் தந்து போன உண்மைகள். எதை மறக்க....? எதை நினைக்க.....? என்றுதான் எமை வாழவிட்டார் நன்றியுரைக்க எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....? :?: :?: :?: :?: :?: :?: :?: :?: hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 08-27-2004 ThamilMahan Wrote:ஒரு சின்னத் திருத்தம் கவிதன். தாத்தாவின்ர கறண்டுக்கம்பி விசயம் நடந்தது 1974 தை 10 இல. 1956 இல விழுந்த அடி கோல் பேஸ் கடக்கரையில சத்தியாக்கிரகம் இருக்கேக்கை. நன்றி தமிழ் மவனே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sathiri - 09-03-2005 இந்திய இராணுவத்தின் இருண்ட காலங்கள் களத்தில் பல புதிய உறுப்பினர்கள் உள்ளதால் உங்கள் அனுபவங்களையும் இங்கு பதியுங்கள். நாட்டில் அமைதி காக்கவெனவந்தவர்கள் எம் குடும்பத்தின் அமைதியையும் குலைத்து போனதேன் குடும்பமாய் குருவிகளைப்போல் கூட்டில் கூடி வாழ்ந்த எம் கூடுகளை குதறி போனதேன் குற்றுயிரும் குலையுயிருமாய் எம்மை குறிவைத்து குண்டுகள்வைத்து அண்டமெங்கும் அவர்கள் வல்லரசென்று அகங்காரமாய் சிரித்து எம் அவலத்தில் அவர்கள் அலங்காரம் செய்துகொண்டதேன் விடை யாருக்காவது தெரியுமா???? - தூயவன் - 09-04-2005 5 லட்சமோ, 10 லட்சமோ இவ்வளவு சனம், 83 பயம் இல்லாமல் கொழும்பில் துணிவாய் இருக்கினம் எண்டால் புலிகளின் ஆயுதபலம் தானே காரணம். - தூயவன் - 09-04-2005 என்னவோ இந்திய ஆக்கிரமிப்பு படைகளை புலிகள் கூப்பிட்ட மாதிரி நினைக்காதையுங்கோ. எல்லா கைக்கூலிகளையும் வளைச்சுப்போட்ட இந்தியாவால் தலைவரை மடக்கேலாமல் போனது தான், உணவு போட்டு வந்து பார்த்தவை. அதை விட்டிட்டு இப்பவும் எம் மக்கள் மீது கொண்ட பாசம் தான் எண்டு புலம்பும், மடைச்சாம்பிராணிகளை யாராலும் திருத்த முடியாது. 95ல் யாழ்பாணச்சனங்கள் 5 லட்சம் பேர் இடம்பெயரும்போது இந்த "பாசமலர்கள்" எங்கே போனவை. ஆனால் ஓயாதஅலைகள்3ல் சிங்கள ஆமி மாட்டுப்பட்டிருக்கும் போது நோர்வே மூலம் இரகசிய து}து அனுப்பியவை தானே. பிரபாகரனை உயிருடனோ, அல்லது ...... பிடிப்போம் எண்டு வாய்சவால் விட்டு அலம்பில் காட்டில் இறங்கியபோது வாங்கிக் கட்டிய அனுபவத்தை, மறைக்க "கை கட்டிப்போட்டிருந்தது. கால் கட்டிப்போட்டிருந்தது" என்றும் "கடைசியில் வந்த உத்தரவு" என்றும் தங்களின் இயலாமையை, வங்குரோத்து நிலையை மறைக்கும் புலமையை தங்களுக்குள் மட்டுமே அடக்க வேண்டுகின்றேன். தாத்தா, உங்களை மாதிரி ஆக்கள் தான் இண்டுவரைக்கும் ஒரு தீர்வுமே எமக்கு கிடைக்காதற்கு காரணம். புலியை எதிர்க்கோணும் எண்டு மனதிலே உறுதி புூண்டு அவர்கள் செய்யும் எதிர்க்கும் ஈனத்தனமான செயல்களை செய்யாதீர்கள். சண்டை செய்யும்போது இலங்கைக்குள் தீர்வு பெற்று வாழலாம் என்று கதைப்பதும், அது பற்றி புலிகள் பேச "ஐயகோ!. தமீழீழம் எங்கே போய்விட்டது. இறந்த மக்களின் தியாகம் வீணாகிவிட்டதே. என புலம்புவதும் இதற்கு சான்று. - sathiri - 09-04-2005 இந்திய இராணுவம் யாழ்குடாநாட்டை தமது கட்டுக்குள் கொண்டு வந்த சில நாட்களின் பின் ஆங்காங்கே சில மோதல்கள் நடந்து கொண்டிருந்த நேரம் மக்களும் கொஙஞசம் கொஞசமாக தங்கள் வழைமையான பணிகளிற்கு திரும்பி கொண்டிருந்தனர். எங்கும் இந்திய இராணுவ மயம் அப்போ யாழ்குடாவின் ஒரு உரில் தமது தோட்டத்தில் ஒரு தந்தையும் அவரின்20 வயது மகளும் வேலை செய்தபடி நிக்கிறனர் அந்த வழியால் இந்திய இராணுவ சிறுஅணியொண்று ஜீப்பில் ரோந்து வருகிறனர். அவர்கள் அந்த தந்தையிடமும் மகளிடமும் உங்களிற்கு LTTE தெரியுமா என கேட்க தந்தை தெரியாதையா என்று சொல்லியபடி சைகையாலும் காட்டுகிறார். ஒருவன் உடனே மகளை நோக்கி யு எல் டி டி எண்டு கேக்க மகள் பயந்து இல்லை இல்லை யென்று சொல் அவனோ உன்னை விசாரிக்க வேண்டும் எங்களுடன் வா என்று அப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து செல்ல தந்தையே ஒவ்வொரு இராணுவத்தினரின் காலையும் பிடித்து அய்யா விடுங்கய்h பிள்ளைக்கு எதுவும் தெரியாதைய்யா என்று கத்த மகளும் அப்பா அப்பா என்னுகத்த .வந்தவர்கள் இந்தியில் ஏதோ சொன்னபடி தந்தையை தாக்குகிறார் கள் ஒருவனின் இரும்பு சப்பாத்து கால் தந்தையின் வயிற்றில் இறங்க தந்தை சுருண்டு விழுகிறார். அவர்கள் மகளை ஜீப்பில் தூக்கி போட்டுகொண்டு போய்விடுகிறனர். காயம்பட்ட தந்தை போய் ஊரில் சிலரை அழைத்து கொண்டு அருகிலிருந்த முகாமிற்கு சென்று மகள் அங்கிருக்கிறாளா என விசாரிக்கிறார்.அவர்கள் இல்லையென்று கூறிவிட அருகிலிருந்த மற்றைய முகாம்கள் காப்பரண்கள் என்று எல்லா இடமும் தேடி கிடைக்கவில்லை. அன்று மாலை இராணுவத்தினர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு மயங்கிய நிலையில் காயங்களுடன் கை எலும்பு முறிந்த படி வைத்திய சாலையில் கொண்டுவந்து போட்டு விட்டு போய்விட்டனர். வைத்தியர்கள் அவளது உயிரை காப்பாற்றினாலும் அவளிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் அவளின் மனநிலை பாதிக்கபட்டு விட்டது. தனத மகளிற்கு நடந்த நிலையை பார்த்து தந்தை விரக்தியில் மதுபோதையில் காப்பரணில் இருந்த இராணுவத்துடன் பிரச்சனை பட அவர்கள் தந்தையை சுட்டு கொன்று விட்டார்கள். பல இடங்களில் அவரக்கு வைத்தியம் பார்த்தும் இன்னமம் குணமடையவில்லை - வினித் - 09-04-2005 [quote]அன்று மாலை இராணுவத்தினர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு மயங்கிய நிலையில் காயங்களுடன் கை எலும்பு முறிந்த படி வைத்திய சாலையில் கொண்டுவந்து போட்டு விட்டு போய்விட்டனர். வைத்தியர்கள் அவளது உயிரை காப்பாற்றினாலும் அவளிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் அவளின் மனநிலை பாதிக்கபட்டு விட்டது. தனத மகளிற்கு நடந்த நிலையை பார்த்து தந்தை விரக்தியில் மதுபோதையில் காப்பரணில் இருந்த இராணுவத்துடன் பிரச்சனை பட அவர்கள் தந்தையை சுட்டு கொன்று விட்டார்கள். பல இடங்களில் அவரக்கு வைத்தியம் பார்த்தும் இன்னமம் குணமடையவில்லை «É󾺹ìâìÌ þÐ ¦¾Ã¢Ô§Á¡? ¼ý **ìÌ ¦¾Ã¢Ô§Á? º¢÷ò¾¡ýÛìÌ ¦¾Ã¢Ô§Á¡? ²ý ±ÁÐ ¯ñÊ¡ø ¦ƒÂ¾ÅÛìÌ ¦¾Ã¢Ô§Á ![]() ** - தணிக்கை வினித் உணர்ச்சி வசப்படாமல் கருத்த்துக்களை நாகரிமான முறையில் முன் வையுங்கள். நன்றி - மதன் |