![]() |
|
பிரித்தானிய தகவல்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: பிரித்தானிய தகவல்கள் (/showthread.php?tid=5711) |
- Mathan - 05-08-2005 தவறேதும் இல்லை. பரந்து வாழும் சூழ்நிலையில் தனியாக அரசியல் பலம் இல்லாத நிலையில் தனித்து போட்டியிடுவதால் பயனேதும் இல்லை. நமக்கு ஏற்ற கட்சியுடன் சேர்ந்து இயங்குவது நல்லது. - Mathan - 05-08-2005 லண்டனில் Bromley, Waltham Forest, Westminster,Croydon, Bexley, Havering, Hillingdon உள்ளிட்ட 10 தொகுதிகளிலேயே கன்சவேட்டிவ் வெற்றி பெற்றது, தொழிற்கட்சி லண்டனில் 40க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. - MEERA - 05-08-2005 CROYDON CENTRAL இல் 75 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தொழிற் கட்சி தனது தொகுதியை இழந்துள்ளது... - Mathan - 05-08-2005 <!--QuoteBegin-அசோகன்+-->QUOTE(அசோகன்)<!--QuoteEBegin--> <!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin--> ஏறத்தாள தொழிற் கட்சியை ஜதேக கட்சிக்கும் கன்சவேட்டிவ் கட்சியை சுதந்திரகட்சிக்கும் ஒப்பிடலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது ஒரு சுவாரசியமான ஒப்பீடு. பொரு்ளாதார மற்றும் சமூக விடயங்களில் சுதந்திரக் கட்சி இடதுசாரிப் போக்குக் கொண்டது. ஐதேக வலதுசாரிப் போக்குக் கொண்டது, பிரித்தானியத் தொழிற் கட்சி பாரம்பரியமாக இடது சாரிப் போக்குக் கொண்டிருந்தது. இப்போதைய "நவீன தொழிற்கட்சி" நடுவழிப் பட்டதாக இருந்தாலும், கன்சர்வேடிவ் கட்சியுடன் ஒப்பிடும் போது இடது பக்கம்தான் உள்ளது. அதன்படி பார்த்தால் ஐதேகவையும் கன்சர்வேடிவ் கட்சியையும் தான் ஒரே பக்கத்தில் வைக்க வேண்டும்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அசோகன் வலதுசாரி, இடதுசாரி அடிப்படையில் பார்த்தால் நீங்கள் குறிப்பிட்டது போல் ஐதேகவையும் கன்சர்வேட்டிவையும் தான் ஒரே பக்கத்தில் வைக்க வேண்டும். இலங்கையில் கடந்தமுறைக்கு முன்பு நடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தமிழர்கள் ஆதரிக்கவேண்டும் என்று புலிகள் உட்பட பலரும் நினைத்தார்கள் அதற்கு காரணம் அப்போதை சூழலில் சுதந்திர கட்சியை விட ஐதேக ஆட்சிக்கு வருவது நல்லது என்பதே, அதன் அடிப்படையிலேயே தொழிற்கட்சியை ஐதேகக்கு ஒப்பிட்டேன். தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தமது வாக்குகளை ஆட்சிக்கு வரமுடியாத லிபரல் கட்சிக்கு அளிக்கும் போது அது அடிப்டையில் தொழிற்கட்சி ஆதரவாளர்களாக இவர்களின் ஆதரவு குறைவதால் கடும் போக்குள்ள கன்சவேர்டிவ்க்கு வாய்ப்பு அதிகரிக்கு என்று கூறினேன், <!--QuoteBegin-அசோகன்+-->QUOTE(அசோகன்)<!--QuoteEBegin-->புலத்தில் தமிழர் பொதுவாக இடதுசாரிக் கட்சிகளையே ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் இடதுசாரிக் கட்சிகள் தான் குடிவரவு, அகதிகள் போன்ற விடயங்களில் எங்களுக்குச் சார்பான போக்கைக் கொண்டிருக்கின்றன. உதாரணம் பிரித்தானியாவில் தொழிற்கட்சி, கனடாவில் லிபரல், அல்லது என்.டி.பீ. ஆனால், தமிழர்கள் பொருளாதார, மற்றும் குடிவரவு தவிர்ந்த மற்றைய சமூக விடயங்களில் மிகவும் பாரம்பரிய, வலதுசாரிக் கருத்துகளைக் கொண்டவர்கள் என நினைக்கிறேன். மேற்கத்தைய இடது சாரிக் கட்சிகளின் மற்றைய கொள்கைகளை விழுங்குவதில் தமிழர்களுக்குக் சங்கடமாக இருக்கும் (உதாரணங்கள்்: ஒரினச் சேர்க்கை, பெண் உரிமைகள், கருக் கலைப்பு, கடவுள்). குடிவரவு, சிறுபான்மையினர் விடயங்களைத் தவிர மற்ற விடயங்கள் முன்னடிக்கு வரும்போது புலத் தமிழர்கள் இடதுசாரிக் கட்சிகள் பக்கமிருந்து வலது சாரிக் கட்சிகளின் பக்கத்துக்குத் தாவும் நிலைமையைக் காணக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நிச்சயமாக நாம் பல விடயங்களில் நாம் வலதுசாரி கொள்கையை தான் ஆதரிப்போம். அந்த சமயம் கட்சிக்கு உள்ளேயே வலதுசாரி போக்கை எடுக்ககூடிய சாத்தியங்கள் இருக்கின்றன, - Mathan - 05-08-2005 <!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->CROYDON CENTRAL இல் 75 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தொழிற் கட்சி தனது தொகுதியை இழந்துள்ளது...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நீங்கள் குறிப்பிட்ட தொகுதியில் கன்சவேட்டிவ் கட்சியை சேர்ந்த Andrew Pelling 19974 வாக்குகளையும் தொழிற்கட்சி சேர்ந்த Geraint Davies 19899 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதன் அடிப்படையில் வெளிநாட்டவர்கள் லிபரல் கட்சிக்கு அளித்த வாக்குகளை தொழிற்கட்சிக்கு அளிப்பதுடன் வாக்களிக்காமல் இருந்த நம்மவர்கள் பலரும் வாக்களித்திருந்தால் தொழிற்கட்சி வெல்லும் சாத்தியம் இருந்திருக்கலாம். நம்மவர்களில் பலரும் வாக்களிப்பதில்லையே என்ன செய்ய <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-08-2005 [quote=Mathan][ நிச்சயமாக நாம் பல விடயங்களில் நாம் வலதுசாரி கொள்கையை தான் ஆதரிப்போம். அப்ப நீங்கள் கட்சி அரசியலில் இறங்கியிருக்கிறீர்கள் என்கிறீர்கள். அப்ப நம்ம வருங்கால பிரதமருக்கு எல்லோரும் ஓ போடுங்க. - MEERA - 05-08-2005 உது கொஞ்சம் ஓவராக தெரியல......... - KULAKADDAN - 05-08-2005 MEERA Wrote:உது கொஞ்சம் ஓவராக தெரியல.........எமக்கு கற்பித்த ஆசிரியர் சொல்லி தந்தது கற்பனையில் கஞ்சத்தனம் வைக்க கூடாதெண்டு. - MEERA - 05-09-2005 எல்லோரும் ஒருக்கால் ஓ போடுங்கோ...... ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ மதன் என்ன சத்தத்தை காணவில்லை..... - Mathan - 05-09-2005 ஐயோ குளக்ஸ் நான் தமிழர்கள் என்று பொதுவாக சொன்னேன், ஆளை விடுங்க சாமி - Mathan - 05-09-2005 பிரிட்டனில் டோனி பிளேர் பதவி விலக கோரிக்கை பிரிட்டனில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருந்தாலும், மக்கள் இடத்தில் கட்சியின் ஆதரவு சரிந்துள்ளதாக முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் டோனி பிளேர் தனது கட்சிக்குள்ளிருந்தே பெருகிவரும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டுவருகிறார். அவர் பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரத் தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பிரான்க் டாப்சன், பிளேர் தலைவராக நீடித்தால் தொழிற்கட்சிக்கு எப்போதுமே ஆதரவு தர முடியாது என வாக்காளர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதே நேரம் பிளேருக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலித்துள்ளன. மூத்த அமைச்சர் ஒருவரான டேவிட் பிளங்கெட், கட்சிக்குள்ளிருந்தே பிளேரைத் தாக்குவது என்பது ஒருவர் தனது சுய விருப்பத்தில் மூழ்கிச் செய்யும் செயல் என்று கூறியுள்ளார். இம்முறை நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சியின் பெரும்பான்மை பெருமளவு சரிய முக்கியக் காரணம் இராக் மீது போர் தொடுக்க டோனி பிளேர் எடுத்த முடிவு மீது மக்கள் காட்டிய எதிர்ப்புதான் என்று பழிசுமத்தப்படுகிறது. BBC தமிழ் - Mathan - 05-11-2005 அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் லேபர் கட்சி வென்ற போதிலும் சில தோல்விகளையும் சந்தித்தது. அவற்றில் ஒன்று லண்டன் Hornchurch பகுதியில் தனது எம்பி ஆசனத்தை கன்சவேட்டிவ் கட்சியிடம் இழந்தது லேபர் கட்சி. இந்த லண்டன் Hornchurch பகுதியில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்டவர் John Cryer. இவருடைய தாய் தந்தையர் இருவரும் எம்பிக்களாக இருந்தவர்கள், பின்னர் தந்தை கார் விபத்தில் இறந்தார். இவரும் கடந்தமுறை எம்பியாக இருந்து இம்முறை கன்சவேட்டிவ் கட்சியிடம் தோற்றார். பஞ்சாபி இன பெண்ணை திருமணம் செய்துள்ள இவர். இடது சாரி போக்குடையவர் என்பதுடன் பழகுதற்கு இலகுவானவர். ஈழத்தமிழர் உட்பட சிறுபான்மையினரின் கோரிக்கககளுக்கு ஆதரவளிப்பர். இப்படியான எமக்கு ஆதரவு தரக்கூடிய ஒருவர் 500க்கு உட்பட்ட வாக்கு வித்தியாசத்தில் இம்முறை தோற்றுப்போனார் என்பதுதான் கவலைக்குரிய் விடயம். இந்தபகுதியில் இருந்த இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர் (ethnic minority) அனைவரும் தமது வாக்குகளை முழுமையாக பயன்படுத்தியிருந்தார் இவர் வெற்றி பெற்றிருப்பார். இதுபோன்ற Marginal Seats ஆக உள்ள இடங்களில் வாக்களிப்பதும் சரியான கட்சியை தேர்ந்தெடுப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் காட்டுகின்றது. - Mathan - 05-21-2005 பிரித்தானிய தொழிற்கட்சியின் வருடாந்த மகாநாடு வரும் செப்டம்பரில் கடற்கரை நகரான Brighton இல் நடைபெற இருக்கின்றது. தற்போதைய பிரதமர் டொனி பிளேயரின் எதிர்காலம், அடுத்த தலைமைத்துவம் யார் மற்றும் அடுத்த வருட உள்ளூராட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் இந்த மகாநாட்டில் கலந்துரையாடப்படும். இது தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் விருத்தினராக இந்த மகாநாட்டில் பங்குபற்றலாம் என்பதுடன் தொழிற்கட்சி பிரமுகர்களை சந்திக்க கூடியதாகவும் இருக்கும். விருந்தினர் நுழைவுசீட்டுக்கள் இப்போதே பதிவு செய்து பெற்று கொள்ளலாம். - tamilini - 05-21-2005 பதிஞ்சாச்சா மதன்.. :mrgreen: :mrgreen: - anpagam - 05-21-2005 <img src='http://www.speakeasy-mag.com/speakeasy/img/eminem.gif' border='0' alt='user posted image'>...<img src='http://www.agrnews.org/issues/203/Eminem.JPG' border='0' alt='user posted image'> இப்படி தொப்பி போடஇயலாமல் சட்டம் வந்துள்ளதாமே... தடையாமே... அமுலாகிற்றா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 05-21-2005 அன்பகம், அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு இன்னும் தடை செய்யவில்லை. இங்கு உள்ள anti-social behaviour இளையர்களின் அடையாளமாக இந்த பேஸ் போல் தொப்பி இருக்கின்றது. அவர்கள் சட்டத்தை மீறி நடக்கும்போது மற்றவர்கள் தம்மை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்கவும் கண்காணிப்பு கமராக்களில் தம்முடைய முகம் தெரிவதை தடுக்கவும் பேஸ்போல் தொப்பி அணிகின்றார்கள். அண்மையில் லண்டனில் உள்ள பெரிய சொப்பிங்க் கொம்பிளக்ஸ் இல் ஒன்றான Bluewater shopping complex அதற்குள் இவ்வாறான தொப்பிகளை அணிந்து நுழைவதை தடை செய்தது. அதனையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன். இந்த தடையை பிரித்தானிய அரசு ஆதரித்துள்ளது. இதனை தொடர்ந்து வேறு பல இடங்களிலும் இந்த தடை நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படலாம். இது குறித்த மேலதிக தகவல்களை பின்பு தருகின்றேன். - Mathan - 05-23-2005 நடந்து முடிந்த பிரித்தானிய தேர்தல் குறித்து இந்தியர் ஒருவரின் பார்வையும் ஆதங்கமும். இந்த ஆதங்கம் இலங்கைக்கும் பொருந்தும் http://www.nilacharal.com/news/specials/en...208.html[/size] - anpagam - 06-05-2005 ஐரோப்பாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள பிரான்ஸ் நெதர்லாந்து மக்களின் தீர்ப்பு ஐரோப்பிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் அவசரமாக உருவாக்கியுள்ள கூட்டணி ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச அரசியல் யாப்பை நிராகரித்ததன் மூலம் பிரான்ஸின் வாக்காளர்கள் ஜனாதிபதி ஜக் சிராக்கையும் கண்டத்தின் அரசியல் உயர் குழாமையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் தேங்கிப் போன பொருளாதாரம்இ தேசிய அடையாளம் போன்றவை குறித்த தமது அச்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தை வலுப்படுத்திஇ அதற்கு ஒரு தலைவரையும் வெளிவிவகார அமைச்சரையும் நியமிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பைஇ நிராகரித்த முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது (நெதர்லாந்தும் பின்னர் நிராகரித்துள்ளது). ஐரோப்பா சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றது எனப் பிரான்ஸ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த ஜக் சிராக்கும் அவரது சகாக்களும் தவறியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் தமது நலன்களுக்காகச் செயற்படுகின்றது என்ற நம்பிக்கை பிரான்ஸ் மக்களிடம் காணப்படாததும் புலனாகியுள்ளது. பிரான்ஸின் மிகவும் பெருமைக்குரிய விடயமாக குறிப்பிடப்படும் சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியல் யாப்பு பாதுகாக்க உதவும் என ஜனாதிபதி ஜக் சிராக் குறிப்பிட்டிருந்தார். எனினும் பிரான்ஸின் பெரும்பாலான வாக்காளர்கள் இது குறித்துச் சந்தேகம் கொண்டிருந்தனர். பிரசல்ஸில் உள்ள அதிகார வர்க்கம் பிரான்ஸுக்குள் அமெரிக்காவின் சுதந்திர சந்தையைக் கொண்டு வருவதற்கான கருவியாக இதனைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் பிரான்ஸ் மக்களிடம் காணப்பட்டது. புதிய அரசியல் யாப்பு பிரான்ஸின் வாழ்க்கை முறையை பலியாக்காது என்ற உறுதிமொழியை அவர்கள் நம்பத் தயாராகவில்லை. பிரான்ஸின் வாக்காளர்கள் அளித்துள்ள முடிவு அந்த நாட்டின் சாதாரண மக்களுக்கும்இ அரசியல் வர்த்தகஇ ஊடக சமூகத்தினருக்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது. பிரான்ஸின் அரசியல்இ வர்த்தக சமூகத்தினரும் ஊடகங்களும் இதற்கு (புதிய அரசியல் யாப்புக்கு) பெரும் ஆதரவைத் தெரிவித்து வந்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியலமைப்பு 448 பிரிவுகள் உட்பட பல பக்கங்களை உள்ளடக்கியது. இதன் காரணமாக இதனை சாதாரண மக்களிடம் எடுத்துச் செல்வது கடினமான விடயம். மேலும்இ பாரிய வேலை வாய்ப்பின்மை போன்றவற்றால் கடும் கிளர்ச்சி மனப்பான்மையில் இருந்த பிரான்ஸ் மக்கள் இதனைத் தீவிரமாக ஆராயவும் தயாராக இருக்கவில்லை. ஜனாதிபதி ஜக் சிராக்கின் எதிர்ப்பாளர்கள் 2007 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவரைப் பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனைக் கருதினர். சிராக்இ புதிய அரசியல் யாப்புக்கான மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகத் தனது தனிப்பட்ட கௌரவத்தை பணயம் வைத்திருந்தார். இதில் தோற்கும் பட்சத்தில் அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதிப் பதவிக்கும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அற்றுப் போகலாம் என்ற நிலை காணப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியல் யாப்பை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் மக்களின் அச்சத்தை காரணமாகப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பலவேளைகளில் விவாதங்கள் அரசியல் யாப்பைக் கடந்து இனப்பகைமை குறித்ததாகக் காணப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய யாப்பை எதிர்ப்பவர்கள் அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி அமெரிக்காவையும்இ துருக்கியையும்இ குடியேற்றவாசிகளையும் எதிர்ப்பதில் ஆர்வம் காட்டியது. சுதந்திர சந்தையை மையமாக கொண்ட முதலாளித்துவம் இவர்களது கடும் விமர்சனத்துக்குள்ளானது. பிரான்ஸ் தனது வேலை வாய்ப்புகளைக் கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த 10 நாடுகளிடமும் இழக்க வேண்டிவரும் (இந்த 10 கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்கள் மலிவான விலைக்குக் கிடைக்கின்றனர்) என பிரான்ஸ் மக்களிடம் காணப்பட்ட அச்சத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். இதேவேளைஇ பிரான்ஸ் பாரியளவில் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் யாப்பினை நிராகரித்தமை ஐரோப்பாவை மிக மோசமான அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. நிச்சயமற்ற ஒரு அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. ஐரோப்பாவின் ஒன்றிணைவு முன்னரும் பல தடவைகள் தடுக்கப்பட்டுள்ளது. 1954 இல் ஐரோப்பிய பாதுகாப்புக் குழுவை உருவாக்கி இத்தாலிஇ ஜேர்மனிஇ பிரான்ஸ்இ நெதர்லாந்துஇ லக்ஸம்பேர்க்இ பெல்ஜியம் ஆகிய நாடுகள் (ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபித்த நாடுகள்) மத்தியில் நெருங்கிய இராணுவ ஒத்துழைப்பைக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பிரான்ஸின் தேசிய பாராளுமன்றம் நிராகரித்திருந்தது. இதன் பின்னரே ஐரோப்பிய தலைவர்கள் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து ஐரோப்பிய பொருளாதாரக் குழுவை (1957) உருவாக்கினர். மீண்டும் ஒரு பொதுவான பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கு 40 ஆண்டுகள் எடுத்தது. 1965 இல் குறிப்பிட்ட பொருளாதாரக் குழுவில் பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் தீர்மானங்கள் எடுக்கும் முறையைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்த போது பிரான்ஸ் இதனை எதிர்த்தது. 1992 இல் டென்மார்க் வாக்காளர்கள் மட்ரிச் ஒப்பந்தத்தை நிராகரித்தனர். ஐரோப்பிய குழுவை ஐரோப்பிய ஒன்றியமாக மாற்றுவதே மட்ரிச் உடன்படிக்கையின் நோக்கம் என்பது முக்கியமானது. எனினும்இ 1993 இல் நடைபெற்ற இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பில் டென்மார்க் மக்கள் இதனை ஏற்றுக் கொண்டனர். யூரோஇ ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கை குடிவரவு மற்றும் அரசியல் தஞ்சம் ஆகியவை தொடர்பாக டென்மார்க் சில சலுகைகளைப் பெற்றது. 1990 இல் மாட்டுத் தீவன நோயைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனின் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் ஜோன் மேயர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பதில்லை என்ற கொள்கையைக் கடைப் பிடித்தார். இதற்கு ஒரு வருடத்துக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 2001 இல் அயர்லாந்து வாக்காளர்கள் நைஸ் உடன்படிக்கையை நிராகரித்தனர். எனினும் தொடர்ச்சியாக இரண்டு நாடுகள் ஒரு வாரத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உத்தேச யாப்பை நிராகரித்துள்ளது. ஐரோப்பிய தலைவர்கள் இதனைக் கைவிட வேண்டி வருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பிரான்ஸ்இ நெதர்லாந்து மக்கள் இதனை எதிர்த்தமைக்குத் தமது தேசிய அடையாளங்கள் அழிந்து வருவது குறித்த கவலையும்இ அதிகார வர்க்கம் குறித்த நம்பிக்கையீனமுமே காரணம் எனப் பரவலான கருத்து முன்வைக்கப்படுகின்றது. பிரான்ஸை தொடர்ந்து நெதர்லாந்தும் நிராகரித்துள்ளமை புதிய யாப்பு குறித்த உத்வேகத்தை குறைக்கக் கூடும். சிலர் இந்தப் புதிய யாப்பினை புதிய உலக ஒழுங்கு முறையை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக வரவேற்ற அதேவேளைஇ பலர் தமது கலாசார அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகப் பார்த்தனர். நெதர்லாந்துப் பிரதமர் பால்கென்னென்டே அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் புதிய இடைவெளி தோன்றியுள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஐரோப்பா என்ற எண்ணக்கரு அரசியல்வாதிகளுக்கானதாகக் காணப்பட்டதுஇ நெதர்லாந்து மக்களுக்கானதாக அது இருக்கவில்லை. இது மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்தின் தனித்துவ அடையாளங்கள்இ நிதி விடயங்கள் வேகமாக மாறி வருவது பற்றிய கவலையுள்ளது. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்து வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை நிராகரித்தமை அவர்களது உள்முக சிந்தனையை வெளிப்படுத்துகின்றது. அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய இணைப்புஇ வீழ்ந்து வரும் பொருளாதாரம்இ இஸ்லாமிய தீவிரவாத அச்சம் போன்றவற்றுடன் போராடுகின்றனர் என சுட்டிக் காட்டப்படுகின்றது. நெதர்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியம் குறித்துஇ நடைபெற்ற முதல் வாக்கெடுப்பு இது. இதற்கு கிடைத்துள்ள எதிர்ப்பு அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தில் உள்ள நாங்கள் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து செயல் புரிய தயார். எனினும்இ நாங்கள் நெதர்லாந்து ஆட்களாக இருக்க விரும்புகின்றோம். ஐரோப்பிய ஒன்றியம் அரசியல்வாதிகளின் சிந்தனையில் மாத்திரம் இருக்கின்றது. அரசியல்வாதிகள் மக்களைக் கலந்தாலோசிக்காமல் மூடிய கதவுகளுக்கு பின்னால் இதனை உருவாக்கி விட்டார்கள் என நெதர்லாந்தின் சோசலிஸக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கின்றார். இதற்கிடையில் இந்த அரசியல் அமைப்பின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச அரசியல் யாப்பு சட்ட பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் இறந்து விட்டது என்கிறார் லண்டனை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய சீர்திருத்தத்துக்கான அமைப்பின் அயர்லாந்து ஆய்வாளர் டானியல் கியோகேன. வேறு அரசியல் ஆய்வாளர்களும் இதனை ஆதரிக்கின்றனர். இரண்டாவது வாக்கெடுப்புச் சாத்தியமில்லை என அனைவருக்கும் தெரிந்துள்ளது என்கிறார் இன்னொரு ஆய்வாளர். பிரான்ஸ் மக்கள் இதனை நிராகரித்த விதத்தினை (நெதர்லாந்தும்) பார்க்கும் போது அந்த நாடு மீண்டுமொரு முறை முயற்சிக்காது என்பது புலனாகின்றது. குறிப்பாக பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளயர் இது குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்த துணிய மாட்டார் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபித்த இரு நாடுகள் நிராகரித்து விட்ட நிலையில் ஏன் வேறு நாடுகள் இதற்கு துணியப் போகின்றன என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. அரசியல் தலைவர்கள் இது இன்னமும் சாத்தியம் என கருதக் கூடும். ஆகக் குறைந்தது 20 நாடுகளாவது இதனை அங்கீகரித்தால்இ இது அரசியல் யாப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான உத்வேகத்தை உருவாக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். அடுத்த இரண்டு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் தலைவர்கள் இது குறித்து ஆராயவுள்ளனர். இந்த அரசியல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சட்டவழி முறைகளைக் காண்பது மாத்திரம் போதாது. ஐரோப்பாவின் பாதை குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கும் என சுட்டிக் காட்டப்படுகின்றது. பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஜக்ஸ் ட்ரோ ஐரோப்பாவின் செல்திசை குறித்து ஆழமான கேள்விகளை பிரான்ஸும்இ நெதர்லாந்தும் எழுப்பியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். பல அரசியல் அமைப்பு நிபுணர்களுககு ஒன்றிணைந்த ஐரோப்பா பலமுறை உலகின் தூணாகவும்இ அமெரிக்காவை எதிர்த்து நிற்க கூடியதாகவும் விளங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டதும் உண்மை. இந்த இலக்கு தற்போதைக்கு சாத்தியமில்லாததாகத் தோன்றுகின்றது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: நன்றி: தினக்குரல் - Mathan - 06-07-2005 [size=13]<b>2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை லண்டனில் நடத்துவது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதம் டொனி பிளேயர் விடுத்த வேண்டுகோள் இது ....</b> Dear supporter As many of you will know, I am a passionate supporter of London's bid to bring the 2012 Olympic and Paralympic Games to the UK for the first time in 64 years - and we are about to enter the final lap of the campaign. The International Olympic Committee (IOC) will meet in Singapore on 6 July to decide the 2012 Host City and I will be there immediately prior to the vote to help press the case for London. London's bid has captured the imagination of the British public. Latest opinion polls show public support in London around 80 per cent, over two million people have directly registered their support for the bid and all the major political parties are united behind it. And the reasons for this support are clear. A London victory on 6 July would mean: + thousands of new jobs + a boost to tourism across the UK + the chance to host athlete preparation camps up and down the country + one million pieces of sports equipment, five temporary swimming pools and four arenas redistributed across the UK after the Games end + a UK-wide cultural festival + the largest volunteering opportunities ever seen in post-war Britain and + a sporting legacy for the whole of the UK which will be felt for generations to come. But as well as these tangible benefits, there is also the boost to our national pride and the inspiration our children will feel by witnessing the world's greatest sporting event on home soil. Our bid is widely regarded as a leading contender - but the result is too close to call. Please do your bit for the UK's Olympic bid by registering your support at www.london2012.com or text London to 82012. <img src='http://reply-new.labour.org.uk/aem/clients/LAB001/images/BlairSig.gif' border='0' alt='user posted image'> Tony Blair Prime Minister and Leader of the Labour Party - Mathan - 06-07-2005 <img src='http://www.labour.org.uk/uploads/tx_templavoila/olympics_flag_369.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:20pt;line-height:100%'>2012ம் ஆண்டுக்குரிய ஒலிம்பிக் போட்டியை லண்டன் மாநகரில் நடத்துவதற்காக கடும் முயற்சியில் பிரித்தானிய தொழிற்கட்சி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டி எந்த் நாட்டில் நடக்கும் என்பது வரும் ஜூலை மாதம் 6ம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். இந்த ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் வாய்ப்பு பல இன கலாச்சாரத்தை கொண்டுள்ள பிரித்தானியவாவிற்கு கிடைத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகளை அடையலாம். இதனை ஆதரிக்க விரும்புவோர் கீழுள்ள இணைய தளத்திற்கு சென்று தமது ஆதரவை பதிவு செய்யலாம், அது மட்டுமன்றி உங்கள் கைதொலைபேசியிலிருந்து London என்று 82012 எனும் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் ஆதரவளிக்கலாம்.</span> |