![]() |
|
காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?! (/showthread.php?tid=5274) |
- vasisutha - 02-15-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 02-15-2005 காதலர் தினம் போலத்தான் அன்னையர் தினமும். அதுவும் மேல்நாட்டவரது தான். இதையும் நிறுத்தலாம் :roll: - paandiyan - 02-15-2005 [quote=Mathan][size=14]காதலர் தினம் மட்டுமல்ல தைப்பொங்கள், புதுவருடம், எழுச்சி தினங்கள் இன்னும் பிற தினங்கள் தேவையா என்று கேள்வி எழுப்பலாம். பண்டிகைகள் தினங்கள் மக்களை மகிழ்சியாக வைத்திருக்கவேண்டும் அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. அவை எந்த இனத்திற்கோ கலாச்சாரத்திற்கோ சொந்தமாக இருந்தாலும் அவற்றை உங்களால் ஏற்றுக்கொள்ளகூடியதாக இருந்தால் கொண்டாடுகள் ஆனந்த்மாக இருங்கள், இல்லையேல் அவற்றை விட்டுவிடுங்கள். தமிழராக இருந்தால் காதல்தினம் கொண்டாடலாமா என்று கேட்பது போல் கிறிஸ்மஸ் கொண்டாடலாமா என்றும் கேட்கலாம். அது தமிழர்கள் மதமல்லவே பின்பு புகுந்ததுதானே என்று வரலாறும் பேசலாம். என்னை பொறுத்தவரை பொங்கல், புது வருடம், கிறிஸ்மஸ், ஹஜ் தினம், காதலர் தினம், அன்னையர் தினம் எதுவும் கொண்டாடுவதில் தப்பில்லை. பண்டிகைகளின் இன, மத, மொழி வேறுபாடு பார்க்காதீர்கள். ize] எதை எதை எதனுடம் ஒப்பிடவேண்டுமென்றே தெரியாமல் காதலர்தினத்தை நியாயப்படுத்த வாறியள். காதலுக்கென்று ஒரு நாள் அதைக்கொண்டாட ஒரு கூட்டம். அதாவது அன்பை நடு வீதியில் குறிப்பிட்ட ஒரு நாளில் காட்டினால்தான் அது அன்பு. அன்பு உங்களது ஆழ் மனத்திலிருந்து வரவேண்டியது ஒரு பூவிலிருந்தோ அல்லது ஒரு கார்ட்டில் இருந்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்தோவல்ல. குறிப்பிட்ட நாள்தான் உகந்ததென்றால் அப்படியொரு அன்பு நாள் எமக்குத் தேவையா?? காதலர் தினமென்று வைத்து அன்பையே கொச்சைப்படுத்துவதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. எமது கலச்சாரத்தைப்பொறுத்தவரை நாம் எப்போதும் அன்பை ஏதோ ஒரு வடிவில் யாரிலாவது செலுத்திகொண்டேயிருக்கிறோம். நாம் எமது தாய் தகப்பனில் ஒருவிதமான அன்புடன் சாகும் வரையும் இருக்கிறோம், ஏன் அவர்கள் இறந்த்பின்புகூட் அவர்களை நினைத்து உருகிறோம். இப்படியான எமக்கு மதன் எழுதியபடி அன்னையர் தினத்தை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. வெள்ளைக்காரரைப் பொறுத்தவரை அவ்ர்கள் தாய் தகப்பனை சென்று பார்ப்ப்தே அபூர்வம் என்றபடியால்தான் அப்படியானவர்களுக்கென்று ஒரு அன்னையர் தினத்தையும் தந்தையர் தினத்தையும் உருவக்கி அந்த நாளிலாவது உனது தாய் தகப்பனை நினை என வைத்திருக்கிறார்கள். எமது கலச்சாரம் அவர்களைமாதிரியானதல்ல. நாம் எமது தாய் தகப்பனையே தெய்வமாக நினைத்து வாழ்கிறோம். - Mathan - 02-15-2005 <span style='font-size:21pt;line-height:100%'>உங்கள் கருத்துகளில் இருந்து அந்த தினம் கொண்டாடும்படும் முறையுல் உள்ள வருததங்களையே காணமுடிகின்றது. காதலர் தினமே கூடாது என்பதற்கான கருத்துகள் ஏதும் இல்லை, அன்பு ஆழ்மனத்தில் இருந்துதான் வெளிவரவேண்டும் இல்லை என்று சொல்லவில்லை, அன்பை பலவிதமாக வெளிக்காட்டலாம். ஒரு பூவை கொடுத்தும் வெளிக்காட்டலாம் பொன்னை கொடுத்தும் வெளிக்காட்டலாம். இல்லை எதுவும் கொடுக்காமலும் வார்த்தைகளால் வெளிக்காட்டலாம். அன்புக்கு ஏங்காதவர் யார்? அதூ வெளிக்காட்டப்படும் போது மனம் மகிழ்ச்சியடைகின்றது. சரி நாம் ஒரு அறிஞர்களின்/தலைவர்களின் நினைவு தினத்தை கொண்ட்டாடுகின்றோம். அவர்களின் சமாதிக்கு சென்று பூ அல்லது விளக்கேற்றி வழிபடுகின்றோம். அப்போது நமது அன்பு/நினைவுகள்/நன்றி அனைத்தும் அந்த பூவிலோ அல்லது விளக்கிலோதான் இருக்கின்றதா? இல்லையே அவை நமது மனத்தில் தான், அதுதவிர அந்த தினம்தவிர மற்றய நாட்களில் நாம் அவர்களை மறந்துவிட்டோமா? அதுவும் இல்லையே</span> - Jude - 02-19-2005 <!--QuoteBegin-paandiyan+-->QUOTE(paandiyan)<!--QuoteEBegin--> காதலுக்கென்று ஒரு நாள் அதைக்கொண்டாட ஒரு கூட்டம். அதாவது அன்பை நடு வீதியில் குறிப்பிட்ட ஒரு நாளில் காட்டினால்தான் அது அன்பு. அன்பு உங்களது ஆழ் மனத்திலிருந்து வரவேண்டியது ஒரு பூவிலிருந்தோ அல்லது ஒரு கார்ட்டில் இருந்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்தோவல்ல. குறிப்பிட்ட நாள்தான் உகந்ததென்றால் அப்படியொரு அன்பு நாள் எமக்குத் தேவையா?? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> காதலர்தினம், அந்த ஒரு நாள் தான் காதலர் தமது அன்பை காட்டும் நாள் என்ற கருத்துடன் கொண்டாடப்படுவது அல்ல. தமிழர் மட்டுமல்ல, உலகில் பிறந்த மனிதர்கள், ஏன் மிருகங்கள் கூட, இன்னுமொரு உயிரை எப்பொழுதும் நேசித்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அறிவிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த பண்பாடுகளில், மக்கள் தாம் ஒன்று கூடவும், மகிழ்ந்திருக்கவும், நாட்களையும் காரணங்களையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கணவன் மனைவியரும், காதலரும் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கி, நேரம் ஒதுக்கி, ஒன்றாக மகிழ்ந்திருக்க காதலர்தினம் பண்பட்ட மக்கள் மத்தியில் பயன்படுகின்றது. பிறந்தநாளும் இவ்வாறே ஒருவருக்கு அன்பளிப்புகளை வழங்கி, அவருக்காக நேரம் ஒதுக்கி, அவரை மகிழ்விக்க கொண்டாடப்படுகின்றது. தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்த நாளை தமிழீழ மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்கள் மிகவும் மகிழ்ச்சியடன் கொண்டாடி, இந்நாளில் தாம் தமிழீழ மக்களுக்காக மேலும் என்ன செய்யலாம் என்று சிந்தித்து, அதை செய்து முடிக்க உறுதிகொள்கிறார்கள். <!--QuoteBegin-paandiyan+-->QUOTE(paandiyan)<!--QuoteEBegin--> வெள்ளைக்காரரைப் பொறுத்தவரை அவ்ர்கள் தாய் தகப்பனை சென்று பார்ப்ப்தே அபூர்வம் என்றபடியால்தான் அப்படியானவர்களுக்கென்று ஒரு அன்னையர் தினத்தையும் தந்தையர் தினத்தையும் உருவக்கி அந்த நாளிலாவது உனது தாய் தகப்பனை நினை என வைத்திருக்கிறார்கள். எமது கலச்சாரம் அவர்களைமாதிரியானதல்ல. நாம் எமது தாய் தகப்பனையே தெய்வமாக நினைத்து வாழ்கிறோம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தமிழர்களின் அடிமைநிலைக்கு "மற்றவர்களிலும் பார்க்க நாம் மேல்" என்ற ஆதாரம் இல்லாத, முட்டாளதனமான (இனவாதமான) கருத்தும் ஒரு காரணம். இந்த சிந்தனை தான சாதியமைப்புக்கும் அடிப்படை காரணம். மேலே பாண்டியன் எழுதியது அதற்கு தகுந்த உதாரணம். "வெள்ளைக்காரர் தாய் தகப்பனை போய் பார்ப்பதில்லை" என்று எழுதுகிறார் பாண்டியன். ஏன் போய்ப்பர்ப்பதில்லை என்று சிந்தித்துப்பார்க்காமல், தான்தோன்றித்னமாக 'அவர்கள் தாய்தகப்பனை நேசிக்காததனால் தான் போய் பார்க்கவில்லை' என்று கருத்துப்பட எழுதுகிறார். அதே வேகத்தில் "நாம் தாய் தகப்பனை தெய்வங்களாக மதிக்கிறோம்" என்றும் எழுதுகிறார். தமிழர்களில் எத்தனை ஆயிரம் பேர் இந்த <b>"தெய்வங்களை"</b> அந்த போர்ககளத்தில் விட்டுவிட்டு வந்து வருடக்கணக்காக போய் பார்க்காமல் இருக்கிறார்கள்? தமிழர் போய் பார்க்காததற்கு மட்டும் தானா ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய காரணம் உண்டு? வெள்ளைத்தோலுடையவன் தாய் தகப்பனை போய் பார்க்காவிட்டால் மட்டும் 'அவர்களுக்கு அன்பு இல்லை' என்று முடிவுக்கு வருவதா? இது மட்டும் இனவெறியில்லையா? |