![]() |
|
தூறல்......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தூறல்......... (/showthread.php?tid=3485) |
- ப்ரியசகி - 09-26-2005 <img src='http://img162.imageshack.us/img162/9248/naamlooswarekleuren019td.jpg' border='0' alt='user posted image'> [b]மலர் என மறைத்தால் கசக்கி விடுவார்களோ என பயந்து... மணலுக்குள் மறைத்தேன் என் காதலை.... அழித்து விடுவார் என்பதை மறந்து........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-29-2005 <img src='http://img169.imageshack.us/img169/6103/4859lb.jpg' border='0' alt='user posted image'> [b]மணம் வீசும் மலராய் வாழ ஆசை மணம் முடித்து..... மனதொடிந்து போக இல்லை.. தென்றலோடு பேசி தினம் தினம் ஒரு டூயட் பாட ஆசை..... திருமதி ஆகி.... திகிலோடு வாழ ஆசை இல்லை.... பட்டு உடலின் மேல் பனித்துளி உருண்டுட ஆசை.... பட்டுக் கன்னத்தில்... பட்டு, பட்டு என்று வாங்க ஆசை இல்லை... சரம் சரமாய் மாலை கோர்த்து சங்கு கழுத்தில் வாங்கிட ஆசை... சந்தேகம் எனும் கயிற்றால்... சங்கை அறுத்துக்கொள்ள இல்லை... மொட்டாகி... மலராகி.... மணம் வீசி நலம் வாழ ஆசை.. "மணம்" ஆகி.... மணம் வீச முன்னேயே மனதிற்கு மலர் வளையம் வைத்திட ஆசை இல்லை........... - Mathan - 09-29-2005 கவிதை நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள். அதுசரி ஏன் மணம் முடித்து மனம் ஒடிந்து போக ஆசை இல்லை என்று எழுதி இருக்கீங்க? மணம் முடித்தால் மனது ஒடிந்து போகும் என்று யார் சொன்னது? தவிர கவிதை திருமணத்திற்கு எதிரா இருப்பது போல இருக்கே :roll: - ப்ரியசகி - 10-01-2005 Mathan Wrote:கவிதை நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள். அதுசரி ஏன் மணம் முடித்து மனம் ஒடிந்து போக ஆசை இல்லை என்று எழுதி இருக்கீங்க? மணம் முடித்தால் மனது ஒடிந்து போகும் என்று யார் சொன்னது? தவிர கவிதை திருமணத்திற்கு எதிரா இருப்பது போல இருக்கே :roll: திருமணத்தை நான் எதிர்க்கவில்லை..ஆனால் திருமணத்திற்கு நிறைய பக்கங்கள் இருக்கு..அதில் நான் கண்ட ஒரு பக்கத்தை வைத்து எழுதினேன். சிலவேளைகளில் நான் காணாத மறுபக்கம் நல்ல பக்கமாக இருக்கலாம்.எனக்கு தெரியல. :roll: :roll: அதைத்தவிர... எல்லோருடைய மண வாழ்க்கையும் மனம் விரும்பியது போல் இருந்தது என்றும் இல்லைத்தானே :roll: :roll: - sankeeth - 10-01-2005 கவிதை நன்றாயிருக்கு.ஆனால் இது கவிதையா? அல்லது சொந்தக்கருத்தா? :roll: :roll: :roll: - ப்ரியசகி - 10-01-2005 <!--QuoteBegin-sankeeth+-->QUOTE(sankeeth)<!--QuoteEBegin-->கவிதை நன்றாயிருக்கு.ஆனால் இது கவிதையா? அல்லது சொந்தக்கருத்தா? :roll: :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இரண்டும் தான் கீத். :roll: - கீதா - 10-01-2005 நல்ல கவிதை நன்றி அக்கா - sankeeth - 10-03-2005 சன்கேத் எழுதியது: கவிதை நன்றாயிருக்கு.ஆனால் இது கவிதையா? அல்லது சொந்தக்கருத்தா? இரண்டும் தான் கீத். போச்சுடா உங்கள் அம்மா இன்னும் எத்தனை வருசத்துக்கு உங்கள் அவஸ்த்தையை தாங்கிறது பாவம். கருத்தை மாத்தி அம்மாவிற்கு விடிவு கொடுங்கோ...... :oops: :oops: :oops: - வெண்ணிலா - 10-03-2005 sankeeth Wrote:சன்கேத் எழுதியது: அம்மாவுக்கு மகள் எப்போதாவது அவஸ்தையாக இருப்பாளா? :evil: - ப்ரியசகி - 10-03-2005 Quote:போச்சுடா உங்கள் அம்மா இன்னும் எத்தனை வருசத்துக்கு உங்கள் அவஸ்த்தையை தாங்கிறது பாவம். கருத்தை மாத்தி அம்மாவிற்கு விடிவு கொடுங்கோ...... :roll: :roll: என்ன கீத் நான் அம்மாவுக்கு அவஸ்தையா? :roll: அது மட்டும் இல்லை..சில கருத்து தானாகத்தான் வந்தது..தானாவே மாறினால் தான் உண்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- jeya - 10-03-2005 ப்ரியசகி என்ன இப்படி சொல்லிட்டீங்கள் மணஎல்லோருடைய மண வாழ்க்கையும் மனம் விரும்பியது போல் இருந்தது என்றும் இல்லைத்தானே என்று இது தவறான கருத்து..... இரவு பகல்,நாணயத்தின் புூ தலை .......இதே போல் தான் எல்லாம் ..... - suddykgirl - 10-03-2005 ப்ரியசகி உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது ம்;ம்ம்ம் பலபேருடைய வாழ்க்கை இப்படித்தான் - Mathan - 10-03-2005 ப்ரியசகி Wrote:திருமணத்தை நான் எதிர்க்கவில்லை..ஆனால் திருமணத்திற்கு நிறைய பக்கங்கள் இருக்கு..அதில் நான் கண்ட ஒரு பக்கத்தை வைத்து எழுதினேன். சிலவேளைகளில் நான் காணாத மறுபக்கம் நல்ல பக்கமாக இருக்கலாம்.எனக்கு தெரியல. :roll: :roll: ம் அனைத்து பக்கங்களையும் பாருங்கள். திருமணம் இனிப்பதும் கசப்பதும் அவரவர்க்கு கிடைக்கும் வாழ்க்கை துணையின் மனப்பொருத்தத்தில் இருக்கின்றது. திருமணத்தில் இணைபவர்களிடையே மனப்பொருத்தம் இருந்தால் அது எப்போதும் இனிக்கும் - வெண்ணிலா - 10-04-2005 Mathan Wrote:ப்ரியசகி Wrote:திருமணத்தை நான் எதிர்க்கவில்லை..ஆனால் திருமணத்திற்கு நிறைய பக்கங்கள் இருக்கு..அதில் நான் கண்ட ஒரு பக்கத்தை வைத்து எழுதினேன். சிலவேளைகளில் நான் காணாத மறுபக்கம் நல்ல பக்கமாக இருக்கலாம்.எனக்கு தெரியல. :roll: :roll: பிரியசகி திரைப்படத்தில் வரும் கதாநாயகன் கதாநாயகி மனங்கள் போல இருந்தால்................ :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil:
- Jenany - 10-04-2005 கவிதைகள் நல்லா இருக்கு ப்ரியசகி.... - ப்ரியசகி - 10-04-2005 ம்ம்ம் நீங்கள் சொல்வது சரிதான்...ஜெயா(அக்கா? அண்ணா?) :roll: ..எல்லார் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி..எதிர் பார்த்தது போல் கிடைத்தவருக்கு இந்தக்கவிதை பொருத்தமற்றது..அதே வேற மாதிரி கிடைத்தவருக்கு பொருத்தம் இல்லையா? :roll: மதன்...ஒருபக்கத்தை வைத்து நான் முடிவு செய்வது தவறு தான்..ஆனால் நீங்கள்..சொன்னது போல நிறையப்பேர் சாதகப்பொருத்தம் பார்க்கிறவர்கள்..மனப்பொருத்ததை ப்பார்க்க தவறி விடுகிறார்கள்...ஆனால் பின்னால் பீல் பண்ணும் மனசை புரிந்து கொள்பவர்கள் சிலரே..அதுவும் கூட பெண்கள் என்றால்..சமாளித்து க்கொள் எண்டு சொல்லி விடுவார்கள்..இவை எல்லாம் பார்க்கையில்..எதுவுமே அறியாமல் நாங்கள் நுழையும் எதிர்காலத்தில் எதை எதிர் பார்ப்பது? :roll: :roll: :roll: பூ விழும் என்றா...இல்லை தலை விழும் என்றா? :roll: :roll: - ப்ரியசகி - 10-15-2005 <img src='http://img405.imageshack.us/img405/1120/0175080rl5qklll9rw.jpg' border='0' alt='user posted image'> [b]பத்திரிகையில் வரும் அந்த இரு காட்சிகளில் ஆறு வித்யாசங்களே.... ஆனால்...அவனுள்......... அத்தனை வித்யாசங்கள்.. கணக்கு சரியாக வராவிட்டாலும் முயன்று எண்ணி விடுவேனே.. தெரிந்து கொண்டு விட்டால்.... .............. பெண்மை எனக்கே அவன் மென்மை ஆச்சர்யமே... பேச்சிலிருந்து..........நான் பெற்றுக்கொண்டேன்... பொறுமை என்னவோ பொறுத்திருக்கிறது அவனோடு... பழகியதிலிருந்து.........நானும் பழகிக்கொண்டேன்... .............. எத்தனை அழகுகள் உலகிலோ அத்தனையும் அத்துப்படி அவனுக்கு.... அணு அணுவாக ரசித்து... அழகாக பதில் சொல்வான்... அங்கே கிடைத்த.. அத்தனை உறவுகளுக்குள்ளும் அவனை நண்பனென்று அழகாய் ஏற்றுக்கொண்டேன்.. அவன் அன்புக்காய் மட்டுமே.. அவனோடு உறவாடினேன்...... ஆனாலும்.. அவன் கொண்ட அதிசயங்களை அறிந்து விட்டேன் என்றால் அது உண்மையாக பொய்யே... கவிதை என்று நான் சொல்வேன் தலைப்பு சொல்வான்..... கற்பனை என்பேன் காதலி என்பான்..... காதல் என்பேன் காதல் தான் என்பான்..... கவர்ச்சி என்பேன் கண்களைப்பொறுத்தது என்பான்...... கலாச்சாரம் என்பேன் கூட பிறந்தது என்பான்.... கொஞ்சம் புரிந்து கொள் என்பேன்.. கெஞ்சி கஞ்சத்தனம் செய்வான்......... கவிதை எழுதுகிறேன்.. அவன் ஊடல் கொண்ட நேரமாய் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவிதை கூட ஏனோ அவனைப்போலவே... புதிராக............................. :roll: - shanmuhi - 10-15-2005 <b>பெண்மை எனக்கே அவன் மென்மை ஆச்சர்யமே... பேச்சிலிருந்து..........நான் பெற்றுக்கொண்டேன்... பொறுமை என்னவோ பொறுத்திருக்கிறது அவனோடு... பழகியதிலிருந்து.........நானும் பழகிக்கொண்டேன்...</b> கவிதை அருமை... ப்ரியசகி... வாழ்த்துக்கள்... - கீதா - 10-15-2005 நல்ல கவிதை வாழ்த்துக்கள் அக்கா :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 10-15-2005 பிரியசகி, காதலுள் கரைந்துவிட்டீர்கள் போல. கவிதை நன்றாகவே வருகிறது. சில இடங்களில் தடுக்கல்கள். ஒரே எழுத்தில் அடுத்தடுத்து தொடங்கியதால் அலுப்படிக்க வைக்கிறது. மற்றும்படி சண்முகி அவர்கள் குறிப்பிட்ட அந்தப் பந்திகள் இரண்டும் அருமையான வரிகள். அதோடு இதனையும் சேர்த்துக் கொள்கிறேன்: ஆனாலும்.. அவன் கொண்ட அதிசயங்களை அறிந்து விட்டேன் என்றால் அது உண்மையாக பொய்யே... தொடருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|