Yarl Forum
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


- மேகநாதன் - 01-22-2006

[size=18]மணிமாறன் உங்கள் நினைவு சரிதான்...

<b>லெப்.கேணல்.பாமா வர்கள் 12- 11- 1993 அன்று
<i>"தவளை நடவடிக்கை"யின்</i>(<i> பூநகரி- நாகதேவன் துறைக் கூட்டுப்படைதளங்கள் மீதான தாக்குதல்</i>)போது வீரச்சாவு அடந்ததார்.
விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின்
மகளிர் படையணித் துணைத் தளபதியாக
இவர் ஆற்றிய பணிகள் சிறப்பிடம் பெற்றவை.
இத் தாக்குதலில் "வோட்டர் ஜெட்"(நீரூந்து விசைப்) படகைக் கைப்பற்றி சொன்னபடி ஓட்டிவந்த சாதனையாளர் அவர்.</b>
குறித்த தாக்குதலில் 5 விசைப் படகுகள் கைப்பற்றப்பட்டதாக அப்போது வந்த சிறப்பு வெளியீடுகளில் படித்ததாக நினைவு.....


- மேகநாதன் - 01-22-2006

நர்மதா,
தமிழீழக் காவல்துறை தொடர்பாக நீங்கள் கேட்ட கேள்விக்கு வந்த பதில் சரியா?உறுதிப்படுத்திவிடுங்களேன்...கேள்வி கேட்டவர் உறுதிப்படுத்துவது சிறப்பு அல்லவா?


- நர்மதா - 01-22-2006

வெண்ணிலா Wrote:"தமிழ் மாணவர் பேரவை" என்ற மாணவர் இயக்கம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.? :roll:

தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது
1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது


- நர்மதா - 01-22-2006

வெண்ணிலா Wrote:[quote=நர்மதா]தமிழீழ காவற்துறை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

[size=18]<b>1991 கார்த்திகை 9ம் நாள் </b>

தமிழீழ காவற்துறை 1991 கார்த்திகை 9ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ~தமிழீழ காவற்துறை~யினது செயற்பாடுகள் அதிகாரபூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறிப்பு சிங்கள காவற்துறையினரால் யாழ்.பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


- மேகநாதன் - 01-22-2006

மேற்குறித்த தகவலுக்கு மேலதிகத் தகவல்....
"தமிழ் மாணவர் பேரவை" <b>சத்தியசீலன் என்ற பட்டதாரி மாணவரின் தலைமையில் செயற்பட்டது</b>....

<b>1970 நொவெம்பர் 24 ஆம் நாள் ஊர்வலத்தை வெற்றிகரமாக்குவதில் முன்னின்றவருள் முதன்மையானவர்...."உரும்பிராய்த் தியாகி" பொன்.சிவகுமாரன் அவர்கள்...( </b>தாயக நூலகம் ஒன்றில் <i>கோவை மகேசன் </i>எழுதிய <i>"நெஞ்சம் நிறைந்த தம்பி</i>"(?)- "சுதந்திரன் வெளியீட்டில்" படித்த நினைவு....வசதி உள்ளவர்கள் அதைப் படித்தால் பல தகவல்களைப் பெறக் கூடியதாயிருக்கும்)


- மேகநாதன் - 01-22-2006

தகவல்/குறிப்புகளுக்கு நன்றி நர்மதா.....


- மேகநாதன் - 01-22-2006

[size=18]சரி உறவுகளே...
மேலும் புதிய (இலகுவான) 3 கேள்விகள்....

<b>16) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த "முதலாவது மேஜர்" யார்?
(1985இல் சுதுமலையில் நடைபெற்ற சுற்றிவளைப்பில் வீரச்சாவு அடைந்தவர்;ஆயுதக் கையிருப்பில் கப்டன்.பண்டிதருக்கு பெறும் துணையாய் இருந்தவர்)

17)'போ போ பிறாவோ"(BO BO BRAVO) என்ற குறியீட்டுப் பெயருடன் வந்த சிறிலங்காப் படை அணியொன்று விடுதலைப் புலிகளின் தாக்தலுக்கு உள்ளாகியது.
வரலாற்றுப் புகழ்பெற்ற இத் தாக்குதல் எப்போது நடந்தது?
(ஆண்டு,மாதம்,திகதி கட்டாயம் தேவை)

18)தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு
முதன்முதல் நேரடியாக நடத்திய தாக்குதலாகக் கருதப்படுவது எது?(எங்கு,எப்போது)</b>

இக் கேள்விகளுக்கான பதில்கள் சில
முன்னமே தரப்பட்டிருக்கின்றன...
ஆகவே,கேள்விகள் மிக இலகு படுத்தப்பட்டிருக்கின்றன....


- நர்மதா - 01-22-2006

[quote="மேகநாதன்"][size=18]

17)'போ போ பிறாவோ"(BO BO BRAVO) என்ற குறியீட்டுப் பெயருடன் வந்த சிறிலங்காப் படை அணியொன்று விடுதலைப் புலிகளின் தாக்தலுக்கு உள்ளாகியது.
வரலாற்றுப் புகழ்பெற்ற இத் தாக்குதல் எப்போது நடந்தது?
(ஆண்டு,மாதம்,திகதி கட்டாயம் தேவை)

23.07.1983

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதலணித் தளபதி லெப்டினன்ட் சீலன் வீரவேங்கை ஆனந்த் ஆகியோர் யாழ். படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இவர்கள் வீரச்சாவைத் தழுவிய 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது. இதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு 'போர்போர்பிராவோ' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. குருநகர் அணிக்கு 'போர்போர்சாளி' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது.

இதில் 'போர்போர் பிராவோ' அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கேணல் கிட்டு லெப்டினன்ட் கேணல் விக்டர் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணை மேஜர் கணேஸ் உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இத்தாக்குதலில் லெப். செல்லக்கிளி - அம்மான் வீரமரணமடைந்தார்


- மேகநாதன் - 01-22-2006

<span style='color:green'>பாராட்டுக்கள் நன்றி நர்மதா....
மேலதிகத் தகவல்களுக்கும் நன்றிகள்...

இத் <b>தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் லெப்.செல்லக்கிளி அம்மான்</b>

<b>முதன் முதல் SLR ரகத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதும் </b>இத் தாக்குதலிலேயே
என்று முன்னம் வாசித்த நினைவு...

<b>லெப்.கேணல்.புலேந்திரன் (புலேந்தி அம்மான்)உம் பங்குபற்றியதாகவும் </b>படித்ததாய் நினைவு...</span>


- sri - 01-23-2006

Quote:16) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த "முதலாவது மேஜர்" யார்?
(1985இல் சுதுமலையில் நடைபெற்ற சுற்றிவளைப்பில் வீரச்சாவு அடைந்தவர்;ஆயுதக் கையிருப்பில் கப்டன்.பண்டிதருக்கு பெறும் துணையாய் இருந்தவர்)
மேஜர் அல்பேர்ட்(தயாநிதி-அச்சுவேலி)


- மேகநாதன் - 01-23-2006

<b>மேஜர் அல்பேட் </b>என்பது சரியானவிடை..
<span style='color:green'>வாழ்த்துக்கள் சிறி...

<b><i>கேணல் கிட்டுவின் சுதுமலை முகாமை
சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்தபோது </i></b>
<b>21- 12- 1985 இல் இவர் வீரச்சாவு </b>அடைந்தார்.அச்சுவேலியைச் சேர்ந்த
இவரது சொந்தப் பெயர் <b>கந்தையா ரூபநிதி</b></span>


- மேகநாதன் - 01-23-2006

<b>16வது,17வது கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்துவிட்டன....</b>

<span style='color:green'>18வது கேள்விக்கான (மிக இலகுவான) பதிலைத் தாருங்கள் அன்பு உறவுகளே....{பதிலைக் கொண்டு எழுப்பப்பட்ட கேள்வி இது}

<b>18) தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு
முதன்முதல் நேரடியாக நடத்திய தாக்குதலாகக் கருதப்படுவது எது?(எங்கு,எப்போது)</b> </span>


- nallavan - 01-23-2006

மகளிர் அமைப்பினரின் முதல்தாக்குதல் லெப்கேணல் விக்டர் தலைமையில மன்னார் அடம்பனில் நடத்தப்பட்ட தாக்குதல். இதில் மகளிரணிக்குத் தலைமை தாங்கியவர் வசந்தா.

இதில்தான் முதன்முதல் இரு சிறிலங்கா இராணுவத்தினர் உயிருடன் பிடிபட்டனர்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் என் நினைவிலிருந்து மட்டுமே.
சரியா தவறாவென கேள்வி கேட்டவர் சொல்லவும்.


- மேகநாதன் - 01-23-2006

<span style='color:green'>நல்லவன் உங்கட பதில் சரி...
<b>1986- 10 - 12 இல் மன்னார் அடம்பனில்</b>
மற்றைய தகவல்களும் சரி...
வாழ்த்துக்கள்...

இத் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்,சடலங்கள்,மற்றும் பிடிபட்ட
சிங்களப் படையினர் இருவர்..
நல்லூர் கந்தசாமிக் கோயிலுக்கருகில்
பொது மக்கள் பார்வைக்காக கேணல் கிட்டு அவர்கள் வைத்ததை பார்த்த நினைவு இருக்கு...

பின்னர் நல்லெண்ணத்தில்(போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது) விடுவிக்கப்பட்ட இப் படையினரில் ஒருவர் பின்னாளில் மட்டக்களப்பில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார்...</span>


- மேகநாதன் - 01-23-2006

சரி எல்லாக் கேள்விகளுக்கும்
எதிர்பர்க்கப்பட்ட சரியான பதில்கள் வந்து விட்டதால்..
மேலும் சில கேள்விகள்...

<b>19)வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தமிழர் தாயக ஆள்புலக் கோட்பாட்டைத் துண்டாடும் வகையில் "வெலி ஓயா" என்ற பெயரில் தமிழரின் "இதய பூமி" யான "மணலாறு" எத் திட்டத்தின் கீழ் சிங்கள மயமாக்கப்பட்டது?</b> ( குறித்த திட்டத்தின் சரியான ஆங்கில எழுத்துத் தரப்பட வேண்டும்)

<b>20)சிறிலங்காக் கடற்படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதலாகக் கருதப்படக்கூடியதும் 6 கடற்படையினர் பலியாகியதுமான "பொலிகண்டித் தாக்குதல்" எப்போது மெற்கொள்ளப்பட்டது?</b>

<b>21)"தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்" அக்டொபர் 10 இல் ( முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் நினைவு நாள்) எந்த ஆண்டு முதன் முதலாக எழுச்சி கண்டது</b>?


- nallavan - 01-24-2006

மேகநாதனின் கேள்விகளுக்குத் துல்லியமான பதில்கள் எனக்குத் தெரியவில்லை. என்பங்குக்கு நான் சில கேள்விகளைக் கேட்டு வைக்கிறேன்.

<b>22</b>)<b>'ஜெயசிக்குறு நாயகன்' என்ற சிறப்புப் பெயர்பெற்ற புலிகளின் தளபதி யார். இவர் லெப்.கேணல் இராணுவ நிலையில் வீரச்சாவடைந்தார். மட்டு-அம்பாறைப் படையணியின் தளபதிகளில் ஒருவராயிருந்தவர்.</b>

<b>23</b>)<b>ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதலான தாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதல் எப்போது நடந்தது? அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளின் பெயர்கள் என்ன?</b>

<b>24</b>)<b>விடுதலைப்புலிகளால் முதன்முதல் 50 கலிபர் துப்பாக்கி எப்போது எங்கே கைப்பற்றப்பட்டது?</b>


- வெண்ணிலா - 01-24-2006

nallavan Wrote:<b>22</b>)<b>'ஜெயசிக்குறு நாயகன்' என்ற சிறப்புப் பெயர்பெற்ற புலிகளின் தளபதி யார். இவர் லெப்.கேணல் இராணுவ நிலையில் வீரச்சாவடைந்தார். மட்டு-அம்பாறைப் படையணியின் தளபதிகளில் ஒருவராயிருந்தவர்.</b>



தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் :roll:


- வெண்ணிலா - 01-24-2006

nallavan Wrote:<b>23</b>)<b>ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதலான தாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதல் எப்போது நடந்தது? அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளின் பெயர்கள் என்ன?</b>


10.06.1997.
1.முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி
2.............
3............. :roll:


- வர்ணன் - 01-24-2006

<b>24)விடுதலைப்புலிகளால் முதன்முதல் 50 கலிபர் துப்பாக்கி எப்போது எங்கே கைப்பற்றப்பட்டது?</b>

பூநகரி -தவளை பாய்ச்சல் -நடவடிக்கையின்போது-!
சரியா நல்லவன்? :roll:


- மேகநாதன் - 01-24-2006

அதில்
<b>முதன் முதல் பத்து 50 கலிபர் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன...</b>அவ் வேளையில் தான்
<i><b>"ஒவ்வொரு புலி வீரனுக்கும் 10க் கைகள் முளைத்து விட்டன"</b></i> என்ற பொருள் படத்தக்க
வரலாற்று வாசகம் உதித்தது....

ஆகவே, நீங்கள் சற்று முயன்றால்
சரியான பதிலைப் பெறலாம்....[/i]