Yarl Forum
காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ (/showthread.php?tid=1135)

Pages: 1 2 3 4 5


- தூயவன் - 02-01-2006

<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->றோ- எவ்ளோ தூரம் பாயும் எண்டு சரியா தெரிஞ்சும்- கதைக்கிறம்-!  இந்த லக்கி லுக்- ராஜாதிராஜா-எல்லாம் தாயை இழுத்து கூட பேசுறாங்க இங்க-!
ஒண்டை கவனிச்சிங்களா-?-  

அதே வார்த்தையை நாங்க திருப்பி பாவிச்சா என்னாகும்- எப்பிடி பிறகு எங்க அம்மா முகத்தை பார்க்கலாம் -??????????
எண்டு தெரிஞ்சும் பாவிக்கிறாங்க- நல்ல காலம்- நாங்க ஒரு ஒழுக்கமான தலைமையின் கீழ் இருக்கிறோம் !

அர்த்தம்: யாரோ வீசிய எலும்பு துண்டுக்காக எங்களை  சீண்டி- ஏதும் அறிய நினைக்கிறாங்க-!


முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதே ஆட்கள் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டை, பிறிதொரு தளத்தில் பிரியானிக்கு சேர்ந்த கூட்டம் என்று வசைபாடும் அழகிலேயே அவர்களின் சுயரூபம் புலப்படும்.

எனவே அவர்களை அவர்களின் வழியில் சென்று கதைப்பதை விட, கண்டுகொள்ளாமல் விடுதல் தான் சாலச்சிறந்தது. இது கூட சிறந்த அவமதிப்பாகும். எனவே இவர்களின் கீழ்தரமான வசனங்களை மட்டறுத்தினர் கண்டு கொள்ளட்டும்.

நாம் தலைப்பை மட்டுமே விவாதிப்போம்.


- paandiyan - 02-01-2006

<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்களது இனையத்தளங்களில் எத்தனை இடங்களில் இலங்கைத்தமிழனை விளித்து கெட்ட வார்த்தைகளால் நீயும் உனது சகாக்களும் எழுதியிருக்கிறீர்கள் எழுதுகிறீர்கள் என்பது எங்களுக்குத்தெரியாது என்று நினைத்துவிட்டாயா?? அதை நீ எப்பவாவது உனது சகாக்களிடம் கேட்டிருக்கிறாயா?? அல்லது கோபப்பட்டிருக்கிறாயா?? நீ என்ன பேசினாலும் அது சரி ஆனால் நாம் வாய் திறக்கக்கூடாது..ம்ம்ம்... உனக்கு ஒரு சொல் எழுதியதற்கே இப்படி கொதிக்கிறாயே உனது இனையத்தளத்தில் எங்களை நாயைவிட கேவலமாக எழுதுகிர்றயே அது நியாயமா. உனக்கெல்லாம் நீதீ நியாயமென்பது என்ன என்று தெரியுமா.. நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்களெல்லாம் அதுதான் என்பது உங்களது நடவடிக்கையிலிருந்தே தெரிகிறது.


- sathurangan - 02-01-2006

மூக்கிருந்தால் சளி இருக்கத்தான் செய்யும். எங்கடை பெண்டுகள் யாராவது இந்தியா சாரி சல்வார் கொண்டு வந்து வீட்டை பரப்பி விட்டு வந்தவன் கதையோட கதையா புதினம் கேட்டு எல்லாம் தெரிஞ்சு கொண்டு போவன். கடையில ஆயிரத்திற்கு விக்கிறத 500 க்கு குடுத்துட்டு விலாவாரியா எல்லாம் ரதையும் கேட்டுக் கொண்டு போய் டிடை யனுப்ப எல்லாத்தையும் விட்டுட்டு ஓடித்திரியுதுகள். யாரும் சொன்னாலும் மூக்குக்கு மேல கோவம் அன்டைக்கு சரியான சாப்பாடும் இருக்காது முதல்ல நாங்க எங்களைத் திருதிதுவம் பிறகு ரோப்படையையும் நாய்ப்படையும் பாக்கலாம்.


- MUGATHTHAR - 02-01-2006

<!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin-->கொஞ்சம் பொறப்பு மன்னாதி மன்னர் நாளை காலை வருவார் கூடவே டம்பீ ராஐாகன்னும் வருவார் பிறகு 1 மணிநேரம் கழித்து நம்மட வசம்பர் வருவார்
எல்லாம் முடிய வலைஞன் வருவார்
விளங்கினதோ இல்லை எண்டா கூட்டிக் களிச்சு பாரப்பு கணக்கு சரியாவரும்
உதுக்கும் சரி வரேல்லை எண்டா நம்மட வினித்தும் டூயவனும் உதவி செய்வினம்
8)  8)  8)  8)  8)  8)  8)  8)  8)  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சின்னப்பு இவையெல்லாம் வருகினமோ இல்லையோ உன்ரை கத்தலைக்கேட்டு நம்மடை கூட்டாளி (10)ஆயுதத்தோடை ரெடியாகியிட்டார் பாரன் ஒருக்கா........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/kabuki_manjimaru01.gif' border='0' alt='user posted image'>


- தூயவன் - 02-01-2006

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->
சின்னப்பு இவையெல்லாம் வருகினமோ இல்லையோ உன்ரை கத்தலைக்கேட்டு நம்மடை கூட்டாளி (10)ஆயுதத்தோடை ரெடியாகியிட்டார் பாரன் ஒருக்கா........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/kabuki_manjimaru01.gif' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முகத்தார்.
நானும் அரைமணித்தியாலமாகப் பாத்துக் கொண்டு நிற்கின்றன். இவர் சும்மா போட்டு வாளை ஆட்டிக் கொண்டு நிற்கின்றாரே தவிர, ஒண்டும் வெட்டுகின்ற மாதிரி இல்லை. :wink:

எனவே சும்மாவெல்லாம் புூச்சாண்டி காட்டாதீர்கள் :twisted: :twisted:


- நர்மதா - 02-01-2006

ரா அமைப்பு 1968ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது தொடங்கப்பட்டது. அப்போதைய ஐ.பி - Intelligence Bureau அதிகாரி. ஆர். என். காவ் ரா அமைப்பு தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். Research and Analysis Wing என்பதன் சுருக்கம் தான் RAW. ஆரம்ப காலங்களில் ரா அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய தூதரகங்களில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது பல இடங்களில் அவர்கள் பரவி இருக்கின்றனர். இந்திய மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருப்பது இவ்வாறான உளவு வேலைகளுக்கு வசதியாக இருக்கிறது. இவர்கள் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே உளவு வேலைகளையும் செய்வார்கள். ரா தொடங்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் அண்டை நாடுகளை இந்தியாவிடம் பணிய வைப்பது. இந்தியாவை இப் பிரதேசத்தின் வல்லரசாக, "பிரதேச பெரியண்ணண்" போல உருவாக்குவது தான் ராவின் முக்கிய குறிக்கோள். தெற்காசிய பிரந்தியத்தில் தான் வல்லரசாக வேண்டும், அதற்காக என்றால் பிற நாடுகள் இந்தியாவுடன் அணுசரணையாக இருக்க வேண்டும் என்பதாக இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைந்து இருந்தது.

ரா உளவு அமைப்பை தொடங்கி அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் ராவின் அறிக்கைகளையே பெரும்பாலும் நம்பி இருந்தனர். இராணுவ அதிகாரிகளின் அறிவுரைகளை விட ராவின் அறிவுரைகளையே இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அதிகம் நம்பினர். இதனாலேயே இலங்கை விஷயத்தில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது என இந்தியப் பாதுகாப்பு படையின் பின்னடைவு குறித்து எழுதிய பல இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ரா சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இந்தியப் பிரதமர்களின் நம்பிக்கையை பெற்ற அமைப்பாக இருந்திருக்கிறது. தொடர்ந்து அதே நிலையிலேயே இருந்தும் வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் ராவின் பங்களிப்பு முக்கியமானது.


தெற்காசியாவில் ராவின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ஆரம்ப காலத்தில் பாக்கிஸ்தான், சீனா இவற்றை குறி வைத்து தான் ரா செயல்பட தொடங்கியது. ஆரம்பத்தில் சுமார் 250 பேருடன் தொடங்கப்பட்ட ரா பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. ஒரு கட்டத்தில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட ரா உளவாளிகள் பாக்கிஸ்தானில் இருப்பதாக பாக்கிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது.

ராவின் வெற்றிகளில் முக்கியமானது பங்களாதேஷ் உருவானது தான். கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கிஸ்தானை பிளக்கும் ராவின் நோக்கத்திற்கு சரியான இடமாக இருந்தது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது.

ராவின் மற்றொரு முக்கியமான வெற்றி, சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. 1973ல் சிக்கிம்மில் நடந்த உள்நாட்டு பிரச்சனையை பயன்படுத்தி சிக்கிமை ரா இந்தியாவுடன் இணைய வைத்தது. 1975ம் ஆண்டு, சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.

நேபாளம், பூட்டான், மாலத்தீவு போன்ற அனைத்து தெற்காசிய நாடுகளிலும் ராவின் செயல்பாடுகள் இருந்தது.

ராவின் தோல்விகளில் முக்கியமானது இலங்கை பிரச்சனை தான். ஆரம்ப காலங்களில் புலிகள் மற்றும் பிற போராளி குழுக்களுக்கு பயிற்சி அளித்தது தொடங்கி, இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அனைத்தும் ரா இந்தியப் பிரதமர்களுக்கு அளித்த அறிவுரையின் காரணமாகவே நிகழ்ந்தது.

ரா அமைப்பின் பல நடவடிக்கைகள் ரகசியமானவை. அதிகம் வெளிவருவதில்லை. அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தான் ராவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யுடன் ஒப்பிடும் பொழுது ரா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கிறது. பங்ளாதேஷ் உருவானது, சிக்கிம் விவகாரம், பூட்டான், மாலத்தீவு போன்ற நாடுகளை இந்தியாவின் மாநிலங்கள் போல பல விஷயங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க வைத்தது போன்றவை ராவின் வெற்றிகள். இலங்கையில் ராவின் நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கருணா விவகாரம் கூட இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் ராவின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம்.

இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் மற்றும் பிற உளவு நிறுவனங்கள் அனைத்துமே பிற நாடுகளில் நாச செயல்களை விளைவித்து அந் நாடுகளை சீர்குலைப்பதை முக்கியமான செயலாக செய்திருக்கின்றன. இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல, இந்தியா உட்பட


அது போலவே இந்திய உளவு அமைப்பான ராவும் பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலும் நுழைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போல ஒரு நிழல் அரசாங்கமாகவோ, சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாகவோ இல்லாமல் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் அதிகபட்ச அதிகாரத்துடனே ரா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது


- sinnappu - 02-01-2006

MUGATHTHAR Wrote:
sinnappu Wrote:கொஞ்சம் பொறப்பு மன்னாதி மன்னர் நாளை காலை வருவார் கூடவே டம்பீ ராஐாகன்னும் வருவார் பிறகு 1 மணிநேரம் கழித்து நம்மட வசம்பர் வருவார்
எல்லாம் முடிய வலைஞன் வருவார்
விளங்கினதோ இல்லை எண்டா கூட்டிக் களிச்சு பாரப்பு கணக்கு சரியாவரும்
உதுக்கும் சரி வரேல்லை எண்டா நம்மட வினித்தும் டூயவனும் உதவி செய்வினம்
8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)

சின்னப்பு இவையெல்லாம் வருகினமோ இல்லையோ உன்ரை கத்தலைக்கேட்டு நம்மடை கூட்டாளி (10)ஆயுதத்தோடை ரெடியாகியிட்டார் பாரன் ஒருக்கா........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/kabuki_manjimaru01.gif' border='0' alt='user posted image'>


எடமுகத்தான் ஏன்ராப்பா அந்த மனுசனை ஞாபகப்படுத்திறாய்
Cry Cry Cry Cry Cry Cry