![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- kuruvikal - 03-27-2004 [b]<span style='color:red'>12 வயதுச் சிறுமி ஈ.பி.டி.பி உறுப்பினரால் பாலியல் வல்லுறவு நேற்று மதியம் கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைச் சேர்ந்த பன்னிரண்டு வயதுச் சிறுமியான அலிஸ்ரன் ரேமன் அஐந்தினி, கரம்பொன் சிறிய புஷ்பம் மகளிர் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் வழியில் அருகிலிருந்த பற்றைக்காட்டிற்குள் இழுத்துச் செல்லப்பட்டு ஊர்காவற்துறை முகாமைச் சேர்ந்த ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என்பவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தை அறிந்த ஊரவரும், உறவினர்களும் ஊர்காவற்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அஐந்தினியின் தந்தை ரேமனை காவல்துறையில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறும்படியும் அல்லது பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்றும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி முக்கியஸ்தருமான மதனராஐனால் சிறுமியின் பெற்றோர் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இச்சம்பவம் இப்பகுதி மக்களின் மனவுணர்வுகளில் பெரும் பாதிப்பையும் கோபாவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. </span> <span style='font-size:25pt;line-height:100%'>அட அங்கையும் பிரேமானந்தாக்களா...இரண்டும் 'ஆனந்தா' கும்பல் ஆச்சே....! :roll: </span> <span style='font-size:19pt;line-height:100%'>பெண்ணியமே.... எனும் மாயையே நீ எங்கே...உன் கூச்சல் என்னவாச்சு...மேடையோடும் காஞ்சிபுரத்தோடும் மகளிர் அமைப்பு அறிக்கைகளோடும் புகழ்தேடலோடும் அடங்கிப் போயாச்சா....????! அந்தப் பிஞ்சுக்கு நடந்ததை நீ கண்டுகொள்ள மாட்டாயே...ரூபவாகினியில் பேட்டி கொடுத்த போது மூஞ்சியே சொன்னது தாடியவன் வால்பிடிக்கும் செல்வியின் குணம்...!</span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மூலச் செய்தி...நன்றி புதினம்...! - Mathivathanan - 03-27-2004 கருத்தின் ஏளத்தன்மை காரணமாக கருத்து நீக்கப்பட்டள்ளது - மோகன் - Mathan - 03-27-2004 Eelavan Wrote:BBC Wrote:Eelavan Wrote:இது உண்மையிலேயே அவரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோ அல்லது போட்டுத் தள்ளிவிட்டு கட்டிய கதையோ யாரறிவார்? இருக்கலாம் ஆனால் அந்த செய்தி கருணா ஆதரவுதளங்கள் ஒன்றிலும் வெளிடப்படவில்லை. ஐபிசிதான் வெளியிட்டிருக்கின்றது. அப்படியானால் ஐபிசிக்கு கருணாதரப்புடன் தகவல் தொடர்பு இருக்கின்றதா? - Mathan - 03-27-2004 kuruvikal Wrote:[b]<span style='color:red'>12 வயதுச் சிறுமி ஈ.பி.டி.பி உறுப்பினரால் பாலியல் வல்லுறவு செய்தி உண்மையானால் நிச்சயமாக கிருமா கண்டிக்கப்படவேண்டிய தண்டிக்கப்படவேண்டிய ஒருவர். மற்றும் ஒரு செல்வி ஆதரிக்கின்றார் என்பதற்காக எல்லோரையு, குற்றம் சொல்ல முடியாது. ஆண்களையோ பெண்களையோ எதற்கும் ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்ல முடியாது. - kuruvikal - 03-27-2004 செய்தியில் பெயர்விபரங்கள் உள்ளடங்களாக அனைத்தும் இருந்தும் செய்தியை நம்பத் தயங்குபவர்கள்...எப்படி அநாமதேயத் தளம்/தளங்களில் இருந்து பெறப்படும் தமிழ்தேசியத்துக்கு எதிரான செய்திகளை நம்பி எடுத்து வந்து இங்கே போடுகிறார்கள்....???! :roll: அதுபோக ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்....! இங்கு கண்டனமோ அறிக்கையோ தண்டனையோ அந்தச் சிறுமியின் எதிர்காலத்தைச் செழிப்பாக்குமா...இவர்களை ஒழித்துக்கட்டுவதே மீண்டும் இவ்வாறான குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்க உதவும்.... அதைச் செய்வது யார்...மக்கள் தாம் செய்ய வேண்டும்...! :twisted: :evil: :!:
- Mathan - 03-27-2004 kuruvikal Wrote:செய்தியில் பெயர்விபரங்கள் உள்ளடங்களாக அனைத்தும் இருந்தும் செய்தியை நம்பத் தயக்குபவர்கள்...எப்படி அநாமதேயத் தளம்/தளங்களில் இருந்து பெறப்படும் தமிழ்தேசியத்துக்கு எதிரான செய்திகளை நம்பி எடுத்து வந்து இங்கே போடுகிறார்கள்....???! :roll: அந்த செய்தி வெளிவந்து இவ்வளவு நேரமாகியும் அது புலிகள் சார்பு ஊடகங்களிலோ, கருணா சார்பு ஊடகங்களிலோ, அரசாங்க ஊடகங்களிலோ இல்லை சர்வதேச ஊடகங்களிலோ வெளிவரவில்லை. அதனாலேயே கேட்டேன். மற்றும் நான் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளையே இங்கே போட்டேன். அவற்றை 100% உறுதிப்படுத்த என்னால் முடியாது, நாம் இரண்டு பக்க செய்திகளையும் படித்து புரிந்து கொள்ளவேண்டியது தான். இப்போது செய்தி நிறுவனங்கள் அவர்களுக்கு சார்பான செய்திகளையே தருவதால் இரண்டு பக்க செய்திகளையும் படிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். kuruvikal Wrote:அதுபோக ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம்....! இங்கு கண்டனமோ அறிக்கையோ தண்டனையோ அந்தச் சிறுமியின் எதிர்காலத்தைச் செழிப்பாக்குமா...இவர்களை ஒழித்துக்கட்டுவதே மீண்டும் இவ்வாறான குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்க உதவும்.... அதைச் செய்வது யார்...மக்கள் தாம் செய்ய வேண்டும்...! கண்டனமோ அறிக்கையோ தண்டனையோ அந்தச் சிறுமியின் எதிர்காலத்தைச் செழிப்பாக்காது என்பது உண்மைதான். ஆனால் நம்மால் முடிந்தது அது தான். கருணா விடயத்தில் கூட கண்டனம், அறிக்கை எதற்காக வெளியிடப்படுகின்றது? மக்களுக்கு நிலைமையை புரியவைப்பதற்காக, அதேபோல்தான் அந்த சிறுமியின் விடயத்தில் நமது கருத்துக்களைதான் வெளியிட முடியும் படிக்கும் மக்கள் சரியானதை அலசி ஆராய்ந்து நீங்கள் சொன்ன மாதிரி தேவையற்றவர்களை புறக்கணிக்க வேண்டும். - Mathan - 03-27-2004 தன்னைச் சுடமுயன்ற போராளியை கருணா அம்மான் சுட்டுக் கொன்று விட்டார் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை போராளியொருவர் சுட்டுக் கொல்ல முற்பட்டதாகவும் எனினும் அவரை கருணா சுட்டுக் கொன்று விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் மட்டக்களப்பில் காட்டுப் பகுதியொன்றில், மேற்படிý துப்பாக்கிச் சூýட்டுச் சம்பவம் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாவின் நடவடிýக்கைகளால் ஆத்திரமடைந்த, அவரது சக உறுப்பினரான செஞ்சுடர் என்பவர் இவர் மீது துப்பாக்கிச் சூýட்டை நடத்தியதாகவும் எனினும் குறி தவறவே, கருணா அவரை சுட்டுக் கொன்று விட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவம் கருணா குழுவின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கருணாவின் பாதுகாப்பு பல மடங்காக்கப்பட்டுள்ளதாகவும் கருணாவை எவருமே நெருங்க அனுமதிக்கப்படமாட்டார்களெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன. நன்றி - தினக்குரல் - Mathan - 03-27-2004 கருணா குழுவின் எச்சரிக்கையை அடுத்து ஜோசப்தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் எச்சரிக்கையை அடுத்து, தமிழ்த் தேசியக் கூ ட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கம் நேற்று வெள்ளிக்கிழமையுடன் தனது, தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தமிழினத்தின் தலைவர் எனவும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனவும் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்திற்காகவே தாங்கள் குரல் கொடுப்பதாகவும் குறுகிய பிரதேச வாதத்திற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜோசப் பரராஜசிங்கம் வலியுறுத்தி வந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா நீக்கப்பட்ட பின்னரும் அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததால், கருணா குழுவினர் ஜோசப் பரராஜசிங்கத்தை இது தொடர்பாக பல தடவைகள் எச்சரித்திருந்தனர். ஆனாலும், தனது மேற்படி, கோரிக்கைகளிலிருந்து தான் விலகப் போவதில்லை எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டி யிடும் பெருமளவு வேட்பாளர்கள் தனது இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்கி வருவதையும் கருணா குழுவிடம் சுட்டிக் காட்டி யிருந்தார். இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஜோசப் பரராஜசிங்கத்துடன் தொடர்பு கொண்ட கருணா குழுவைச் சேர்ந்த துரை உடனடியாக தேர்தலிலிருந்து ஒதுங்க வேண்டுமெனவும், தேர்தல், பிரசாரத்தில் ஈடுபடக் கூ டாதெனவும் தங்கள் எச்சரிக்கையையும் மீறிச் செயற்பட முனைந்தால் மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்திருந்தார். ஆனாலும், தேர்தலிலிருந்து தான் ஒதுங்கப் போவதில்லை எனவும், தனது கோரிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவித்துள்ள ஜோசப் பரராஜசிங்கம் தற்போதைய நிலைமையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காக தனது தேர்தல் பிரசாரங்களை உடனடி யாக நிறுத்துவதாகவும் தெரிவித்தார். இதேவேளை, ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலிலிருந்து ஒதுங்குமாறு கருணா குழுவினர், மிரட்டியதைக் கேள்வியுற்று நேற்று மாலை ஜோசப் பரராஜசிங்கத்தின் வீட்டில் திரண்ட நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் அவருக்கு தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்ததுடன், இந்தத் தேர்தலில் அவரை அதிகப் படியான வாக்குகளால் வெற்றி பெறச் செய்து மட்டக்களப்பில் பிரதேச வாதத்திற்கு இடமில்லையென்பதையும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், பிரபாகரனே தங்கள் தலைவன் என்பதையும் முழு உலகத்திற்கும் நிரூபிக்கப் போவதாகவும் கூ றியுள்ளனர். நன்றி - தினக்குரல் - Mathan - 03-27-2004 ~ஆனந்தசங்கரி நீ அரசியல் வாதியா, அரசியல் வியாதியா?| <b>தந்தை செல்வாவுடன் சங்கரி கற்பனைச் சந்திப்பு வாசகன் இரட்ணதுரை - கனடா</b> வீடியோவில் பாட்டுக் கசட்டைப் போட்டுப் பார்த்தபடி இருக்கிறார் ஆனந்தசங்கரி.. ரிவியில்; எம்.ஐpஆரின் படப்பாடல்கள். அதில் எம்.ஐp.ஆர் ~புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே| என்று பாடுகின்றார். சங்கரி: இதென்ன உதய சூரியன், புதிய சூரியனாய் மாறிப்போச்சு. எனக்கேதும் பிரமையோ? செல்வா: நீ எத்தனை முறை உந்த விடியோக் கசட்டைப் போட்டுப் பார்த்தாலும் அதிலை ~புதிய சூரியனின் பார்வையிலே| என்றுதான் இருக்கும். சங்கரி: யாரது? எங்கையோ கேட்டகுரல், எங்கையோ பார்த்த ஞாபகமாய் இருக்கு! செல்வா: தம்பி சங்கரி! அது நான்தான் செல்வநாயகம்.. தந்தை செல்வா! சங்கரி: ஐயா! செல்வநாயகமய்யா நீங்களே..! மறந்துபோனன். செல்வா: நீ, உன்னைக் கூட்டணியின் தலைவராக்கினவையே மறந்துபோனாய். கட்சியை உருவாக்கிய என்னை மறக்கிறது பெரிய காரியமே? உதென்ன தேர்தல் நேரத்திலை படம் போட்டுப் பாத்துக்கொண்டிருக்கிறாய்? சங்கரி: இது எம்.ஐp.ஆரின் பாட்டுக் கசட். முந்தி இந்தப் பாட்டைத்தானே நாங்கள் உதய சூரியனுக்குப் போட்டு வாக்குக் கேட்டனாங்கள். கனடாவிலை இருக்கிற கேம்றிஞ் கல்விமான் ப10டகக்காரர் இதை அனுப்பினவர், புலிகளுக்கு எதிராய் தேர்தலுக்குப் பயன்படுத்தச் சொல்லி. இப்ப இந்தப் பாட்டு மாறிப்போய் கிடக்கு. அதுதான் எப்படி மாறினது என்று தெரியல்லை. செல்வா: நீ எத்தனை முறை உந்த விடியோக் கசற்றைப் போட்டுப் பார்த்தாலும் அதிலை ~புதிய சூரியனின் பார்வையிலே| என்றுதான் இருக்கும்.. உதய சூரியனின் பார்வையிலே என்று வராது. சங்கரி: ஏன் ஐயா? செல்வா: எட சங்கரி! எம்.ஐp,ஆர் எப்ப தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவை ஆரம்பித்தாரோ அன்றே தன்னுடைய பழைய படங்களில் இருந்த ~உதய சூரியன்| என்ற சொல்லை வெட்டி அவற்றில் ~புதிய சூரியன்| என்று மாத்திப்போட்டார். பழைய ஓடியோக் கசற்றில் அல்லது கிராமப்போன் தட்டில்தான் மாறாமல் இருக்கும். இதுகூட தெரியாதே! சங்கரி: (மெதுவாக) எல்லாரும் எனக்கெதிராச் சதி செய்துபோட்டாங்கள். ஏன் இதற்கு கருணாநிதி நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு வாங்கேல்லையே? செல்வா: (மெதுவாக) உன்னாலை நீதிமன்றில் இடைக்காலத் தடையைத்தான் வாங்க முடியும். இடைக்கால சபையை வாங்கமுடியுமே? சங்கரி: புரியேல்;லை ஐயா? செல்வா: தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளால் மட்டும்தான் இடைக்கால சபையை வாங்கமுடியும். மற்றவையாலை இடைக்காலத் தடையைத்தான் வாங்க முடியும். சங்கரி: ஏன் நாங்களும் மக்களின் பிரதிநிதிகள் இல்லையே? ஏன் ஐயா! என்னையும், டக்ளசையும் நாலு பேர் கூப்பிட்டுக் கதைக்கினம்தானே? செல்வா: முட்டாள். அப்படிக் கூப்பிடுகிறவங்கள் யார்? சங்கரி: இந்தியா, சந்திரிகா, ரணில், த ஐலண்ட் பத்திரிகை, ம்..ம்.. பிபிசி செல்வா: இவையெல்லாம் தமிழர்களுக்கு எதிரான ஆட்கள். தமிழருக்குப் பிரதிநிதியாக உங்களைக் கூப்பிடேலை. தமிழருக்குப் பிரச்சினை குடுக்கக் கூம்பிடுகினம். உங்களை தமி;ழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகினமே தவிர உங்களைப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டல்ல. சங்கரி: அப்ப என்ன, என்னைப் புலிக்கு வாலாயிருக்கச் சொல்லுறியலே? என்ரை ஐம்பது வருட அரசியல் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? செல்வா: முட்டாள், ப10னைக்கு மீசையாக இருப்பதைவிட, புலிக்கு வாலாயிருப்பது மேல். சங்கரி: போட்டியென்று வந்துவிட்டால் புலியென்ன ப10னையென்ன? செல்வா: சங்கரி! நீ இன்று போட்டி போடுறது புலியோடையோ, ப10னையோடோ, தமிழ்க் கூட்டமைப்போடையோ அல்ல. சங்கரி: அப்ப? செல்வா: உனக்கும் டக்ளசுக்கும் தான் இம்முறை நேரடிப் போட்டி என்று சொல்லுகினம். சங்கரி: ஓ! மகேஸ்வரனும் அங்கையில்லை. ஐக்கிய தேசிய கட்சியும், Nஐ.வி.பியும் இல்லை. புலிகளுக்கு எதிரான வாக்குகளை வாங்குறதிலை எங்கள் இருவருக்கும்தான் யாழ்ப்பாணத்தில் நேரடிப் போட்டி. செல்வா: நான் நேரடிப் போட்டியென்று சொன்னது - யாழ்ப்பாணத்திலை தேர்தல் வாக்குகளைப் பெறுவதையல்ல. சங்கரி: அப்ப ஐயா? செல்வா: இந்தியாவையும், சந்திரிகாவையும் பந்தம் பிடிக்கிறதிலை உனக்கும் டக்களசுக்கும் தான் போட்டியென்று கதைக்கினம். சங்கரி: அப்படியில்லை ஐயா! இந்தியா என்னைத்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று ஏற்றுக்கொண்டிருக்கையா! செல்வா: எதிலை துரோகம் செய்யிறதிலையோ, காட்டிக் கொடுகிறதிலையோ? சங்கரி: ஐயா? செல்வா: எட சங்கரி, என்னத்துக்கெல்லாம் ஏக பிரதிநிதி என்று சொல்லுறதென்டு ஒரு விவஸ்தையே இல்லையே? பிரதிநிதித்துவம் என்றால் என்னென்று நினைக்கிறாய்? சங்கரி: நாலுபேர் நாலு வாக்குப் போட்டால் அவரும் ஒரு பிரதிநிதி. அவரும் ஒரு அரசியல்வாதி செல்வா: நடக்கிறது உடம்புக்கு நல்லது. அதற்காக நித்திரையில் நடக்கிறது நல்லதே? சங்கரி: அதெப்படி? அது வியாதியல்லோ! செல்வா: அப்படித்தான் நீயும் - அரசியல்வியாதி. அரசியல்வாதியல்ல. எட கடவுளே நாலு சின்ன வீடிருந்தால், நாலுக்கு நாலு வாக்குகள் விழும்தானே! அதுக்காக நாலு சின்ன வீடுகள் வைத்திருக்கிறவர் எல்லாம் நாங்களும் அரசியல்வாதிகள், நாங்களும் தமிழ் மக்களின் பிரநிதிகள் என்று சொல்லுறதே? சங்கரி: ஐயா நீங்கள் என்ன சொல்லுறியள்! செல்வா: மக்களின் பிரதிநிதித்துவம் என்றது வாக்குப் போட்டு வாரேல்லை? அப்படியென்றால் ஏன் உங்களைக் கூப்பிட்டு சந்திரிகாவோ, ரணிலோ தமிழற்றை பிரச்சினை குறித்துக் கதைக்கேலை. சங்கரி: அதுதானே? செல்வா: மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லுறது - அந்த மக்களுக்காகச் செய்யிற தியாகத்தாலை வாறது. அரசாங்கத்துடன் போராடுகின்ற பலத்தால் வாறது. யாருக்கும் அடிபணியாத நெஞ்சுரத்தாலை வாறது. பேரம் பேசுற சக்தியாலை வாறது. மக்களுக்காக எதிரியோடை போராடிச் சாகுறதிற்கு அந்த மக்களின் பிரதிநிதியாக எவன் போறானோ அவன்தான் அந்த மக்களின் பிரதிநிதி. சங்கரி: அப்ப நான் மக்களின் பிரதிநிதி அல்லவே! செல்வா: நீ தமிழர்களுக்குப் பிரதிநிதி அல்ல பிடிச்ச சனி. இன்று தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினைகள் சொல்லு பார்ப்பம்? சங்கரி: ம்..ம்.. பாதுகாப்பு, மற்றது. செல்வா: பொறு பொறு. நீ இன்று யாரிட்டை இருந்து யாரை பாதுகாக்க வேணும்? சங்கரி: இலங்கை அரச இராணுவத்திட்டை இருந்து தமிழரைப் பாதுகாக்க வேணும். செல்வா: நீயும் தமிழ்க் குழுக்களும் இன்று யாருடைய பாதுகாப்புலை யாழ்ப்பாணம் வந்திருக்கிறியள்? சங்கரி: ஸ்ரீலங்கா இராணுவத்தினுடைய பாதுகாப்பிலை. வீட்டுக்கு வெளியிலை பாருங்கோ அவைதான் காவல் நிற்கினம். செல்வா: பார்த்தியே சங்கரி? ஸ்ரீலங்கா இராணுவத்தின் பாதுகாப்பில் உள்ள நீங்கள், எப்படி ஸ்ரீலங்கா இராணுவத்திடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பியள்? முதலிலை உங்களை நீங்கள் பாதுகாக்கத் தெரியவேணும். முதலிலை உன்னைப் பாதுகாக்கவே ஒரு பிரதிநிதி தேவைப்படுகுது. அதுக்குள்ள நீ தமிழரின் பிரதிநிதியென்று நினைக்கிறாய்! சங்கரி: விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் பாதுகாப்பிலைதானே வெளிநாடுகளுக்கு அரசின் உலங்குவானு}ர்தியில் n;சல்லுகினம். செல்வா: முட்டாள் கள்ளனைப் பிடித்தாலும், சுற்றிப் பொலிஸ் காவலுடன் தான் கொண்டுபோவாங்கள். கவர்னர் போனாலும் சுற்றிப், பொலிஸ் காவலுடன்தான் போவார். இரண்டுபேரும் சமனே! இன்டைக்கு உனக்கு ஒண்டு நடந்தால் யாருக்குக் கெட்ட பெயர். சங்கரி: விடுதலைப் புலிகளுக்கு. செல்வா: அப்ப உன்னை யார் இன்று பாதுகாக்க வேண்டும்? சங்கரி: புலிகள். ஓ! சர்வதேச அரசியல் வாழ்க! செல்வா: இப்படித்தான் ஸ்ரீலங்கா அரசுக்கும் - தங்களுக்கு எதிராக வெளிநாடு போய்க் கதைக்கிற புலிகளைப் பத்திரமாகக் கொண்டுபோய் பத்திரமாய்க் கொண்டுவந்து சேர்க்கவேண்டிய கஷ்டகாலம். சங்கரி: அதுக்காக நான் யாழ்ப்பாணம் போகாமல் நிற்கேலுமே? செல்வா: நீ கடைசியாய் எப்ப யாழ். மாவட்டச் சனத்தைப் போய் பார்த்தாய் சங்கரி? சங்கரி: போன எலக்சனுக்குப் போனனான். பிறகு யாழ் பொது நு}ல் நிலையம் திறக்கப் போறதென்டவுடனை போகப்பார்த்தன். ஆனால் திறக்கேல்லை. நான் போகேல்லை. செல்வா: பார்த்தியே! அந்த மக்கள் உயர் பாதுகாப்பு வலயம், மீன்பிடித்தடை, நிவாரணவெட்டு, அகதிப்பிரச்சினை, பொங்குதமிழ், பசி பட்டினி என்றெல்லாம் போராடினபோது நீ அங்கை போகேல்லை. ஆனால், இப்ப யாழ் மாவட்டத்திலை தேர்தலிலை கூட்டமைப்பின் சார்பில் நிற்கிறவங்கள் யார்? சங்கரி: இரண்டு பேர்தான் கூட்ணிக்காரர் மிச்சமெல்லாம் யாரோ? செல்வா: இந்தப் போராட்ட காலத்தில் மக்களோடை கூட நின்றவை. நின்ற அமைப்புகள். அதிலும் அந்தப் பல்கலைக்கழகப் பெடியன் போர்நிறுத்த ;காலத்தில் - நீ உலாத்தித்திரிய - பேராட்டம் நடத்தி, பொலிசாராலை பிடிபட்டு அடிபட்ட பையன்;. இப்ப சொல்லு யார் அரசியல்வாதி, யார் அரசியல் வியாதி? சங்கரி: ஐயா இது ரவிராஐ_ம் சம்பந்தரும் செய்த சதி, என்னை அவங்கள்தான் தனியா நிற்க வைச்சுட்டாங்கள். செல்வா: நீ இந்தியத் து}துவரையும், சந்திரிகாவையும் போய் சந்திக்கேக்கை அவங்களைக் கூட்டிக்கொண்டே போனனீ. தனியத்தானே போனனீ. அப்ப தனியாய்த்தான் நிற்கவேணும். சங்கரி: ஐயா நான் கூட்டணியின் தலைவராகத் தானே போனேன்? செல்வா: உன்னை கூட்டணியின் தலைவராகத் தெரிவு செய்தது யார்? மக்களே? சங்கரி: இல்லை. கூட்டணியின் செயற்குழு. செல்வா: அந்தச் செயற்குழு உன் மீது நம்பிக்கையில்லையென்றால் நீ விலகவேண்டியதுதானே? சங்கரி: ஐயா நீங்கள் தானே ஆயுட்கால தலைவர் என்று பதவியை எழுதிப்போட்டுப் போனீங்கள். செல்வா: வயதான காலத்திலை எனக்கிருந்த ஆயுள் கொஞ்சம். அதாலை எனக்குப் பிறகு, தான் பதவியை அனுபவிக்க அமிர்தலிங்கம் செய்த வேலையது. நான் விட்ட மிகப்பெரிய தவறு அது. சங்கரி: அப்ப பார்த்தியலே? (இறுமாப்புடன்) எனது ஆயுள் இருக்கும்வரை நான் தான் கூட்டணியின் தலைவன். செல்வா: உண்மைதான் ஆயுள் இருக்கும்வரைதான். உனக்கு அமிர் போயும்.. சீ இவ்வளவு மயிர் போயும் மூளை வேலைசெய்யேல்லை. சங்கரி: ஐயா நீங்கள் அப்ப சொன்னியள்தானே ~தமிழரை கடவுளாலையும் காப்பாற்ற முடியாது| என்று - அது இப்ப உண்மை ஐயா? என்னையே என்னால் காப்பாற்ற முடியவில்லை. செல்வா: தமிழனை கடவுள் காப்பாற்ற முடியாது என்று நான் சொன்னது சிங்களவரிடமிருந்தல்ல. அதை மானமுள்ள ரோசமுள்ள தமிழன் பார்த்துக்கொள்வான். நான் கடவுளாலையும் தமிழனைக் காப்பாற்ற முடியாது என்று சொன்னது - உன்னை மாதிரி எட்டப்பர்களிடமிருந்து. நீ செய்யுற வேலை யாருக்கு லாபம்? தமிழருக்கோ, சிங்களவருக்கோ? சங்கரி: ஐயா அது என்னுடைய மூளை. அரசியல் சாணக்கியம். செல்வா: எது இடைக்காலத் தடை உத்தரவு வாங்கியதோ? சங்கரி: ஓமய்யா! எனக்கில்லாதது எவருக்கும் இல்லை. இதைவிட்டால் எனக்கு வாழ்க்கையே இல்லை! செல்வா: எட உன்னிட்டை இருக்கிற பெரிய ஆயுதம் - சட்டம் - இடைக்காலத் தடை உத்தரவு. அதை நீ இந்தமுறை தேர்தலிலை கூட்டமைப்புக்கு எதிராய் பயன்படுத்திறாய். சரி. போன தேர்தலிலை டக்ளசிட்டை இருந்த பெரிய ஆயுதம் துவக்கும், பொல்லும். அதை அவன் பொடி, நெடுந்தீவிலை உங்களுக்கு எதிராய்த் தேர்தலிலை பயன்படுத்தியது மட்டும் - அப்ப என்ன தவறு. அதுவும் தேர்தல் சாணக்கியம்தானே? சங்கரி: ஐயா! உதய சூரியன் கிடைக்காமல் செய்தது கெட்டித்தனமில்லையோ? செல்வா: தமிழருக்கு உதய சூரியன் இல்லாமல் பண்ணலாம். அது அரசியல். மன்னிக்கலாம், ஆனால் நீங்கள் தமிழருக்கு விடியலே இல்லாமல் பண்ணப்பாக்கிறியள் அதுதான் தவறு. சங்கரி: ஐயா! அப்ப நான் மீண்டும் தலையெடுக்கேலாதே? செல்வா: எட சங்கரி! நீ தலையெடுக்க வேணும் என்று நினைக்கிறவங்கள் இப்ப உன்னுடைய தலையெடுக்க வேணும் என்றும் நினைக்கலாம். சங்கரி: என்னய்யா சொல்லுறியள். விளங்கேலை. செல்வா: நீ தலையெடுத்து, அதாலை புலிகளுக்கு வாற நட்டத்தைவிட, உன் தலையெடுத்து, அதாலை புலிகளுக்குக் கெட்டபெயர் உண்டாக்கிறது அவங்களுக்கு லாபம். எதற்கும் கவனமாய் இரு. சங்கரி: ஐயா அப்ப எனக்குப் பிரச்சினையோ? செல்வா: தேர்தலையும், பிரச்சினையையும் வைத்தே சீவிக்கிறவங்கள் இருக்கிறாங்கள். பிரச்சினையிக்கை பிரச்சினையாய் சில பிரச்சினைகளை பிரச்சினையி;ல்லாமல் முடித்துப் போடுவாங்கள். (ஆலாலசுந்தரத்துடன் சேர்ந்து எனக்கும் அடுக்குமொழி வருகுது.) சங்கரி: ஐயா என்ன சொல்லுறியள்? எனக்குப் பயமாயிருக்கு. செல்வா: எதிரியின் எதிரி நண்பன் என்று நினைக்கிறது அந்தக்கால உள்ளுர் அரசியல், இப்ப எதிரியின் எதிரியைக் கொலைசெய்து எதிரிக்கு சர்வதேச மட்டத்திலை கெட்ட பெயரைக் கொண்டுவாறது இந்தக்கால சர்வதேச அரசியல். இப்ப தமிழரற்றை பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாய் போச்சு. புரிஞ்சால் சரி. சங்கரி: ஐயா நான் இப்ப என்ன செய்யிறது? நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேணும். செல்வா: நீ அரசியல்வாதியாய் இருந்தால் காப்பாற்றலாம். ஆனால் நீ அரசியல் வியாதி. புலிகள் மூலம் தமிழ் மக்களைக் காக்கிற ஆண்டவன்தான் உன்னையும் காப்பாற்றவேண்டும். நன்றி: ஈழமுரசு - Eelavan - 03-27-2004 Batticaloa GA shot, wounded [TamilNet, March 27, 2004 13:07 GMT] Batticaloa government agent, Mr. Ratnam Mounagurusamy, was shot and wounded by unidentified gunmen near the eastern town Saturday evening around 6 p.m. Police said. He was travelling in a car when the gunmen opened fire at Pillaiyaradi on the northern outskirts of Batticaloa town. He was rushed to the intensive care unit of the Batticaloa hospital. இனி கருணாவே நினைத்தாலும் இவற்றையெல்லாம் தடுக்க முடியாது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி என்பதை தவறாகப் புரிந்து கொண்டார்களோ? - Mathan - 03-27-2004 ஐக்கிய தேசிய கட்சி எம்பி மகேஸ்வரன் சுடப்பட்டதாக அறிந்தேன். ஆனால் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள் - Paranee - 03-27-2004 அப்பாடா ! - Mathan - 03-27-2004 ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மகேஸ்வரர் கொழும்பில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வரும்போது ஜிந்துப்பிட்டி பகுதியில் வைத்து சுடப்பட்டதாக கூறப்படுகின்றது. அவருக்கு மாலை அணிவிக்க ஒருவர் முயன்றதாகவும் அந்த சமயம் பின்னாலிருந்து ஒருவர் சுட்டதாகவும் அதனால் அவர் கழுத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. - Mathan - 03-27-2004 இன்னும் ஒரு செய்தி - கொழும்பு ஆறு மல்லிகா லேனில் வைத்து ஈ.பி.டி.பி உறுப்பினர் சங்கரனும் சுடப்பட்டார் என்று கூறப்படுகின்றது. அவர் இறந்துவிட்டார் என்றும் உயிர் பிழைத்து விட்டார் என்றும் முன்னுக்குபின் முரண்பாடான செய்திகள் வெளிவந்துள்ளன. - Mathan - 03-27-2004 Sri Lanka's former Hindu Affairs minister shot <img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/maheswaran_24082_120.jpg' border='0' alt='user posted image'> [TamilNet, March 27, 2004 14:37 GMT] Sri Lanka's former Hindu Affairs Minister and ex. MP for Jaffna, Mr. Thiyagarajah Maheswaran was shot and seriously wounded by unidentified gunmen in downtown Colombo Saturday night around 8 p.m. Mr. Maheswaran is contesting elections as a United National Front candidate in the Colombo district. Mr. Maheswaran was fired at by the gunmen when he was returning after an election campaign meeting in the crowded suburb of Jinthuppiddy in downtown Colombo. - AJeevan - 03-27-2004 BBC Wrote:ஐக்கிய தேசிய கட்சி எம்பி மகேஸ்வரன் சுடப்பட்டதாக அறிந்தேன். ஆனால் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள் ஐக்கிய தேசிய கட்சி எம்பி மகேஸ்வரன் கொட்டாஞ்சேனையின் ஜிந்துபிட்டியில் வைத்து சுடப்பட்டுள்ளதுடன், அவரை துப்பாக்கியால் சுட்டவர், மகேஸ்வரனது பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது மகேஸ்வரன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். <span style='color:red'>அத்துடன் (JVP) சோமவன்ச தமது கூட்டணி பதவிக்கு வந்தால் சுயாட்சியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் , தாம் புதிதாக மீண்டும் விடுதலைப் புலிகளின் இரு பகுதிகளுடன் பேச்சு வார்த்தைகளை தொடரப் போவதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அத்துடன் நோர்வேயின் அனுகு முறைகளை வன்மையாக எதிர்ப்பதாகவும் கூறினார்.</span> - AJeevan - 03-27-2004 <span style='font-size:30pt;line-height:100%'>மட்டக்களப்பு அரச அதிபர் ஆர்.மௌனகுரு இனந் தெரியாதவர்களால் பிள்ளாயாரடி பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில், கொழும்புக்கு, ஹெலிகொப்படர் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தழும்பல் நிலையில் இருப்பதாக BBC News கூறுகிறது.</span> - AJeevan - 03-27-2004 [size=18]Batticaloa Government Agent R Mounaguruswamy shot at and wounded Batticaloa GA transferred to Colombo hospital for surgery after shooting incident.......... [size=15]Former Hindu Affairs Minister shot. Former UNP Minister T Maheswaran shot at and wounded in Colombo............. A new initiative for peace is needed- JVP leader Somawansa Amarasinghe..... [size=9]_BBC NEWS from Colombo - Mathan - 03-27-2004 கலாநிதி திருச்செல்வம் கொலை முயற்சியின் பின்னால் யார் ? கிழக்கு பல்கலைக்கழக விவசாயபீட பீடாதிபதி கலாநிதி திருச்செல்வம் அவர்கள் இனந்தெரியாதோர்களின் துப்பாக்கிச்சு10ட்டுக்கு இலக்காகியதாக நேற்று செய்திகள் வெளியாகின. மட்டக்களப்பு மாரியம்மன் வீதியில் அமைந்திருக்கும் பீடாதிபதியின் வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சயிக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அவரது வீட்டுக்குள் நுளைந்து கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றதாக பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய செய்திகளில் அறிந்திருந்தோம். ஆனால் இந்தக்கொலையின் சு10த்திரதாரியான கருணாவும் கருணா கொல்லென்றால் கொலைசெய்யும் கருணாவின் அடியாட்களின் வரிசையில் திருமால் இ பிள்ளையான் இருவரும் அடங்குகின்றனர். நேற்று நாமெல்லாம் அறிந்து கொண்ட கலாநிதி திருச்செல்வம் அவர்களைச் சுட்டுவிட்டுத்தப்பித்தவர்கள் திருமால் இ பிள்ளையான் என்பதை யார் அறிவீர்கள் ? ஆம் திருமால் இ பிள்ளையான் என்பவர்களே இக்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள். முழுதாக உயிரை எடுக்கப்போனவர்கள். பாதியில் விட்டது அதிசயம்தான். அவசரத்தில் தம்மை அடையாளம் காணமுன்னர் சுட்டுவிட்டுத்தப்பியோட முனைந்தவர்களின் அவசரமே பாதி உயிருடன் விட்டுவைக்கக் காரணம். முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்காயப்படுத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கொலைஞர்கள் மருத்துவமனைக்குச் சென்று கொலை செய்துவிட்டுப் பின்னர் அக்கொலையானது இனந்தெரியாதோர் எனவும் மூன்றாந்தரப்பு எனவும் சாட்டுதல் செய்யப்படதை அறிந்தோமல்லவா. அதேபோலவே இக்கொலையும் மூன்றாந்தரப்பு என்றும் இனந்தெரியாதோரின் செயல் என்றும் கண்டித்துக்கொண்டு இன்னும் பல கிழக்குப் புத்திஜீவிகள் அல்லது தமிழ்த்தேசியத்துக்காக குரல் கொடுப்பவர் யாராகவிருந்தாலும் இதுவே முடிவு என்பதை இக்கொலையானது சொல்லும் சேதியென்பதை உலகம் அறியுமா ? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலாநிதி திருச்செல்வம் அவர்களை மீண்டும் சுட்டுக்கொல்வதற்கு கருணா குழுவினரால் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதை கருணாவின் விசுவாசத்துக்குரியவராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு கருணாவை விட்டு வெளியேறத்தருணம் பார்த்துக்காத்திருக்கும் ஒருபோராளி இத்தகவலைக் கசியவிட்டுள்ளார். கலாநிதி திருச்செல்வம் அவர்களின் உயிரைக்காக்க உலகத்தமிழினமே குரல் கொடுங்கள். அடுத்துச்சில தினங்களில் திருச்செல்வம் அவர்கள் இந்தத்துரோகி கருணாவின் ஏவல்களான திருமால் இ பிள்ளையான் ஆகியோரால் கொல்லப்படும் அபாயம் உள்ளதை யாவரும் புரிந்து கொள்ளுங்கள். உடனே அவரது உயிர்காக்க உங்கள் குரல்களை மனிதவுரிமையாளர்களுக்குத் தெரிவியுங்கள். இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகமட்டத்தினர் பதில்சொல்லப்பயந்ததை பீபீசியின் நேற்றைய செய்தியில் அனைவரும் கேட்டிருப்பீர்கள். அவர்கள் யாரென்பதை இனங்காட்டினால் அவர்களுக்கும் நாளை இதுதான் கதியென்பதை உணர்த்தும்படியாகவே இச்சம்பவமானது மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. யாழ் - வன்னியைச் சேர்ந்தவர்களுக்கு தாம் அதிபடித்தவர்கள் என்ற திமிர் அதிகம் என்ற கருணா தற்போது கிழக்கில் புத்திஜீவிகளின் உயிர்களை அழிக்கும் முதல்கட்ட நடவடிக்கையாக ஆரம்பித்திருக்கும் தொடக்கமே கலாநிதி திருச்செல்வம் அவர்கள் மீதான துப்பாக்கிச்சு10டு. இந்த வெறியனின் கொலைவெறிக்கு இன்னும் எத்தனை கல்விமான்கள் பலியாகப்போகிறார்களோ.....????? - புளியம்தீவிலிருந்து முகுந்தன் - நன்றி - வெப் தமிழன் - Mathan - 03-27-2004 பிரிந்து நின்றால் 1, 2, 3, 4 இணைந்து நின்றால் 1234 பகிரங்கக் கடிதம்-வாசகன் இரட்ணதுரை- உடன்பிறப்புகளே! முல்லாவின் கதை ஒன்று! முல்லாவிற்கு திருமணம் நடைபெற்று தேனிலவுக்கு மனைவியுடன் செல்கின்றார். படகு ஒன்றில் இருவரும் சல்லாபம் செய்தபடி மகிழ்ச்சியாகச் செல்கின்றனர். திடிரென்று கடும் காற்றும் புயலும் மழையும் வருகின்றது. படகு ஆடுகின்றது. புயலின் அறிகுறி தெரிகின்றது. புதுப்பெண் பயந்துவிட்டார். உடனே கணவனைக் கட்டிக்கொண்டால். அவளின் உடல் நடுங்குவதை கணவனால் உணரமுடிந்தது. ஆனால் கணவனோ சிரிக்கின்றான். வாய்விட்டுச் சிரிக்கின்றான். மனைவி அவனை உற்றுப்பார்க்கிறாள். அவளுக்குச் சந்தேகம் பிடித்துக்கொண்டது. எதற்கும் துணிந்து கேட்டுவிட்டாள். ~ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?" படகு கவிழப்போகின்றதே என்ற பயமில்லையா? புயல் வரும்போல் தெரிகிறதே? உங்களுக்கு உயிர் மேல் ஆசையில்லையா?" என்று நடுங்கியபடியே கேட்டாள். உடனே அந்தக் கணவன் - தன்னிடமிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து அவளின் முகத்துக்கு நேரே சுடுவதைப் போல் காட்டினான். அதனை மனைவியின் நெற்றிப் பொட்டில் வைத்தான். இப்போது அவள் சிரித்தாள். ஆனால் அவன் அவளைப் புரிந்துகொண்டாலும் கேட்கிறான். ~ஏன் உனக்கு துப்பாக்கியைக் கண்டால் பயமில்லையா? உனக்கு உயிரின் மீது ஆசையில்லையா?" அவன் கேட்கிறான். ~அதெப்படி நான் பயப்படமுடியும்?| ~ஏன்?| ~என்னை அன்பு செய்பவரிடத்திலல்லவா இந்தத் துப்பாக்கி இருக்கின்றது. என்னை அதிகம் நேசிப்பவரின் கையிலல்லவா இந்தத் துப்பாக்கி இருக்கின்றதுஇ நான் கடவுள் போல் நேசிக்கும் உங்கள் கையிலல்லவா இந்தத் துப்பாக்கி இருக்கின்றதுஇ நான் ஏன் பயப்படப் போகிறேன்.?| என்றாள் மனைவி. உடனே முல்லா 'அதேபோல்தான் இந்தப் புயலும்இ காற்றும்இ மழையும் என்னை அன்பு செய்பவரின் கையில்தான் இருக்கின்றது. எனவே நான் ஏன் பயப்படவேண்டும்" என்று கேட்டார். ஒரு கணவனின் மீது மனைவி வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தவும்இ கடவுள் மீது ஒருவர் எத்துணை நம்பிக்கை வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் இந்தக் கதை சொல்லப்படுவதுண்டு. இது 'நான் கடவுள் போல் மதிக்கும்" ஒருவர் மீது எத்துணை நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பதற்கும் பொருந்தும். கப்பல் ஒன்று கடல் வழியே போய்க்கொண்டிருக்கின்றது. அதிலே பயணம் செய்கின்றவர்கள் அனைவரும் கப்பல் தலைவனின் மீது நம்பிக்கை வைத்து செல்கின்றனர். வழியில் புயல் அடிக்கின்றது. தலைவனின் மீது பயணிகள் சந்தேகம் கொள்கின்றனர். தலைவனின் கட்டளையை பயணிகள் ஏற்க மறுக்கின்றனர். தலைவன் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லிப் பார்க்கிறான். பயணிகள் கப்பற் தலைவனை து}க்கி எறிகின்றனர். கடைசியில் அவர்கள் தாம் செய்வதறியாது தவிக்கின்றனர். இறுதியில் கப்பலுடன் அவர்களும் சேர்ந்து மூழ்கிப் போகின்றனர். வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று நம்பிக்கை. கணவன் - மனைவிஇ பெற்றோர் - பிள்ளைகள்இ அரசியல்வாதிகள் - மக்கள்இ தலைவர்கள் - தொண்டர்கள் என்று ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கவேண்டிய இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மீது நம்பிக்கை வைக்கவேண்டிய வரலாற்று கட்டாயத்தில் சகல தமி;ழ் மக்களும் உள்ளனர். அதனை மக்கள் ஏற்றுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. தாம் நம்பிக்கைக்கு உரியவர் என்பதை அவர் பல தடவைகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றார். அமெரிக்காவாக இருந்தாலும்இ இந்தியாவாக இருந்தாலும்இ இலங்கை அரசாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்களிடம் உதவிகளை பெற்றாலும் - அவர்களின் சொல்லுக்கு கட்டுப்படாத நிலையில் இலட்சியம் ஒன்றையே குறி;க்கோளாகஇ மக்களின் விடுதலைக்கான பயணத்தை விட்டுக்கொடுக்காது தனக்கு உதவியவர்களை உதறித்தள்ளவும் - ஏன் அவர்களை எதிர்க்கவும்இ துணிந்து பல தடவைகளில் தாம் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதை எடுத்துக்காட்டியிருக்கின்றார். புலிகளுடன் முரண்பட்டு நின்ற பல தமி;ழ் இயக்கங்களும்இ அரசியல் கட்சிகளும் கூட அதனை இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசினால் போதுமானது. எங்களுடன் பேசத் தேவையில்லை என்று சகல தமிழ் கட்சிகளும் அரசிடமும்இ இனப்பிரச்சினை விடயத்தில் தலையிடும் வெளிநாட்டு மத்தியஸ்தர்களிடமும் தெரிவித்துள்ளனர். ஏன் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் - அமைச்சர் அஸ்ரப் அவர்கள் கூட ~விடுதலைப் புலிகள் பேச்சுக்களுக்கு வந்தால் நான் என்னுடைய முஸ்லிம்களுக்கான தனி அலகு கோரிக்கையை கைவிடத்தயார்" என்று எரிக்சொல்ஹெய்மிடம் தெரிவித்திருந்தார். இது விடுதலைப் புலிகளின் மீது அனைவரும் கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகின்றது. இன்று புலிகளுக்குள் ஒரு பிரச்சினை வராதா என்று எதிர்பார்த்திருந்த உள்ளுர் எதிரிகள் கூட ஏங்கிப்போய் நின்கிறார்கள். இது முதலுக்கே மோசம் என்பதுபோல். வரலாறு சில விடயங்களை எங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். சீனப் புரட்சியில் சீனப் போராளிகள் மாவோ சேதுங் மீது சந்தேகப்பட்டிருந்தால்இ ரசியப் புரட்சியின் போது லெனினின் மீது ரசியப் போராளிகள் சந்தேகப்பட்டிருந்தால்இ கியுபா புரட்சியின்போது பிடல் காஸ்ரேயை போராளிகள் சந்தேகித்திருந்தால்இ வியட்நாம் யுத்தத்தில் கோசிம்மை போராளிகள் சந்தேகித்திருந்தால். இன்றைக்கு அந்த நாடுகளுக்கு சரித்திரமே இல்லாமல் இருந்திருக்கும். ~நீ எல்லாரையும் சந்தேகப்படு. அப்போதுதான் நீ உண்மையான போராளியாக இருக்கலாம்" என்று தலைவர் சொல்லிக்கொடுத்ததை தவறாக புரிந்துகொண்டிர்களே? ~சாதி ஒழிப்புஇ சமபந்தி" என்ற சொல்லே பயன்படுத்தக் கூடாது. அப்படி அந்தச் சொல்லைச் சொல்லும்போது சாதி என்பது இருக்கிறது என்பது ஞாபகப்படுத்தப்படுகின்றது - என்று சொன்ன தலைவருக்கு இப்படியொரு சோதனை. எப்படி? இப்படி? இந்தப் பிரச்சினை உருவானதுஇ எப்படி முன்னர் ஆதிகால சமுதாயம் பிராந்தியங்களாகப் பிரிவுபட்டிருந்தது என்று தமது அரிப்பைத் தீர்த்துக்கொள்ள - குட்டையைக் குழப்ப பல எழுத்தாள எருமைகள் புறப்படப் போகின்றனர் என்பதை நினைக்கவே பயமாக இருக்கின்றது. எவருக்கு எங்கள் பிரச்சினை அவரின் பிரச்சினைக்குத் தீர்வாகின்றதோஇ - அவர் எங்கள் பிரச்சினையின் தீர்;வு குறித்து எழுதப்போகின்றார் என்று நினைக்கவே நடுங்கிறது. மட்டக்களப்பு ஆயர் சொன்னதுபோல் இப்படியொன்று நடந்ததே மறக்கப்படவேண்டும். தமிழில் ஒரு பழமொழி உண்டு 'அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது" என்பது அது. உண்மையில் அதுவல்ல அந்தப் பழமொழி. 'அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது" என்பதே சரி. அதாவது ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் சில பருக்கைககள் கஞ்சிக்குள் விழவே செய்யும். ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் கல்லறை காணும். அது தவிர்க்க முடியாது. விடுதலைப் போராட்டப் பாதையும் அப்படித்தான். அதற்காக தவறுகளை எல்லாம் நியாயப்படுத்தவேண்டும் என்பதோ அல்லது கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்பதோ எனது வாதமல்ல. ஆனால் நாம் இன்று ஒரு வரலாற்றுக் கடமையின் முன் நிற்கிறோம். நாம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தமிழர்கள் புலிகளின் தலைமையை அதன் தலைவரை ஏற்கவும் நம்பவும் வேண்டியது வரலாற்றுக் கடமை. இது தவிர்க்கப்பட்டால் தமிழன் என்றொரு இனம் இலங்கையில் இருந்தது என்பதை வருங்காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சியில்தான் கண்டுபிடிக்கமுடியும். விடுதலை அமைப்புக்கள் ஆயிரம் தமிழீழத்தில் உருவானபோதும்இ அவை யாவும் அவற்றின் தலைமைகள் யாழ்ப்பாணத்தில் உருவானபோதும் - தமிழீழத்தின் தலைநகர் திருமலைதான் என்று எந்தவொரு அமைப்பும் சொல்லாமல் இருந்ததில்லை. தமக்கிடையில் என்ன வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் அனைத்து தமிழ் அமைப்புக்களும் கட்சிகளும் தமிழீழத்தின் தலைநகர் திருமலையென்றே கூறினர். அனைத்து அமைப்புகளும் தமிழர்களுக்குத் தீர்வு புலிகளால்தான் முடியும் என்பதை இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. அது காலத்தின் கட்டாயம். அதனால்தான் மெல்ல ஒரு தீர்;வு வந்தது. அட அதையும் மெல்ல வருகின்றனரே? ஆடுகள் அடிபட்டால் ஒழுகும் இரத்தத்தைக் குடிக்க ஓநாய்கள் காத்திருக்கின்றனவே? எவருக்கு எங்கள் பிரச்சினை அவரின் பிரச்சினைக்குத் தீர்வாகின்றதோஇ - அவர் எங்களுக்குள் பிரச்சினையைத் து}ண்டிக்கொண்டே இருப்பார் - அவரின் பிரச்சினை தீரும்வரை. 'தலைக்கு மட்டும் தயைணையா? வாய்க்கு மட்டும் உணவா? வேலை செய்வது கைகால்கள்இ தலைக்கு மட்டும் கிரீடமா?" என்று உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் கேள்வி கேட்கத் தொடங்கினால் என்ன நடக்கும். வேலைசெய்ய வேண்டிய உறுப்புகள் வேலைநிறுத்தம் செய்தால் என்ன நடக்கும்? வீரத்தைக் காட்ட வேண்டியவை விறைத்துப் போய்விடும். உடம்பு உடலமாகிவிடும். சாதனை படைக்க வேண்டியது சடலமாகிவிடும். தமிழர்களும் அப்படித்தான். தமிழர் சரித்திரம் படைக்க முடியாது. தரித்திரம்தான் படைக்கலாம் என்றாகிவிடும். இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது - மட்டக்களப்பு கவிஞன் வாமதேவனை. அவனின் கவிதைகளை யாழ்ப்பாணத்தில்; தொகுத்து வெளியிட்டது டொமினிக் ஐPவாவின் மல்லிகைப் (பந்தல்) வெளியீடு. அதில் ஒரு கவிதை. அந்த மட்டக்களப்புக் கவிஞனின் கவிதை. தனித்து நின்றால் 1, 2, 3, 4 இணைந்து நின்றால் 1234 புரிந்து கொண்டால் அதுபோதும் எமக்கு நன்றி! வாசகன் ரட்ணதுரை (கனடா) நன்றி: ஈழமுரசு / வெப் தமிழன் |