Yarl Forum
Breaking News - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Breaking News (/showthread.php?tid=7412)

- Mathan - 03-27-2004

திம்புக்கோட்பாடும் தமிழர் தாயகமும்

தி ம்புக்கோட்பாட்டுக்கு ஒரே குரலில் தமிழ் தேசிய மக்கள் குரல் கொடுத்தார்கள். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம். அதன் இணைப்பு வரலாற்று முடிவாகும் என்று ஒரே குரலில் கூறினார்கள். விடுதலைப் புலிகளின் படைப்பலத்தையும் கண்ட பேரினவாதிகள் தங்களது நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கிவந்தார்கள். அதிகாரப் பகிர்விற்கு இணக்கம் தெரிவித்து நிற்கின்றனர். ஒஸ்லோ பிரகடனத்தின் மூலம் சமஷ்டி முறையை ஏற்றுக்கொண்டனர்.

1956 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கென்றும் கிழக்கென்றும் பாராது தமிழர்களின் உரிமைகளுக்காக பல போராட்டக்களங்களை அமைத்தனர். அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். காலக்கிரமத்தில் ஆயுத போராட்டமாக மாறியது. ஆயுத போராட்ட காலத்தில் பல அழிவுகளைக் கண்டனர். 2003 ஆம் ஆண்டு வரையும் தமிழ் தேசிய மக்கள் தலை நிமிர்ந்து நின்றனர். தேர்தலும் வந்தது. பாராளுமன்ற கதிரைகளுக்காக ஐம்பது வருடங்களாக கட்டிக் காத்து வந்த கொள்கைகளை, கடமை கட்டுப்பாடுகளை காற்றிலே பறக்க விட்டு விடுகின்றனர்.

அதிகாரம் இன்றேல் அபிவிருத்தி இல்லை என்று முழங்கியவர்கள் இன்று அபிவிருத்திதான் வேண்டுமென்று முணுமுணுக்கின்றார்கள். கிழக்கிலே உதிக்கின்றது இந்த குரல் பேரின வாதிகளுக்கு இனியதோர் இரை.

தமிழர்களுக்குத் தெரியாதா? அரசியல் உரிமைகள் பற்றிப் பேசிய பொழுதெல்லாம் சிங்கள பேரினவாதிகள் அபிவிருத்தியை மட்டும் பேசி இருக்கின்றார்கள். அந்த அபிவிருத்தி அலைக்கு சிலதமிழ் தலைவர்களும் துணை சென்றார்கள்.ஆனால் வாக்குறுதிகள் அளித்த வண்ணம் அபிவிருத்திகள் நடைபெற வில்லை. அதிகாரம் அவர்கள் கையில் அவர்கள் விரும்பும் பொழுது அபிவிருத்தி தொடங்கும் விரும்பாத பொழுது அபிவிருத்தி முடிவடையும்.

உரிமைகளும் அபிவிருத்திகளும் தேர்தல் காலங்களில்தான் பெரிதாகப் பேசப்படுகின்றன. தேர்தல் முடிந்ததும் நீயார். நான் யார் என்று கைவிரித்து விடுகின்றனர். பேரின வாதிகள் உரிமைகளையும் கொடுத்ததில்லை. அபிவிருத்திகளையும் செய்ததில்லை. இந்த இரண்டு விடயங்களிலும் தமிழ் தேசிய மக்கள் எப்பொழுதும் ஏமாற்றப்பட்டார்கள். தமிழ் தலைவர்களும் ஏமாறி நின்றார்கள். இதுதான் வரலாறு.

1944 ஆம் ஆண்டில் அபிவிருத்தி

அதிகாரப் பகிர்வில் தமிழர்கள் பங்குடமை கேட்டது 1944 ஆம் ஆண்டில்தான். அன்றைய கால கட்டத்தில் ஆற்றல் மிகுந்த இளங்சிங்கமாக அரசியல் களத்தில் குதித்தவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம். அவர் 1938 ஆம் ஆண்டு தொடக்கம் சமபல பிரதிநிதித்துவத்திற்காக ஓங்கிக்குரல் கொடுத்தவர். 1944 ஆம் ஆண்டு சோல்பெரி ஆணைக்குழுவினர் இலங்கைக்கு வந்தனர்.

புதியதோர் அரசியலமைப்பை வரைவதற்கு முயன்றனர். அவ்வேளையில்தான் சமபல பிரதிநிதித்துவக் கொள்கைக்கு பலம் கொடுப்பதற்காக தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். தமிழ் மக்களின் தேசிய கட்சியாக தொடங்கியது. சமபல பிரதிநிதித்துவக் கொள்கை உந்து சக்தியாக மிளிர்ந்தது. 1944 ஆம் ஆண்டு சோல்பெரி ஆணைக்குழுவின் முன் ஏறக்குறைய 13 மணித்தியாலங்களாக சமபல பிரதிநிதித்துவத்திற்காக வாதிட்டவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம்.

1938 ஆம் ஆண்டு ஆளுமை கொண்ட ஜீ.ஜீ.யின் குரல் சமபல பிரதிநிதித்துவத்தை முன்வைக்கத் தொடங்கிய பொழுது பேரினவாதிகள் அபிவிருத்தியைப் பற்றிக் கதைத்தனர். அதிகாரப் பகிர்வினை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் அன்றைய அரசியலில் கற்றுக்குட்டியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா வரையும் யாழ்ப்பாணம் சென்றனர். எவ்வளவு அன்பான ஆசைவார்த்தைகள், உடன் பிறந்த சகோதரர்கள் போல் அரவணைப்பு இரத்தத்தின் இரத்தமாக துடி துடிப்பு. மட்டக்களப்பு சென்றனர். அங்கும் அதே பேச்சு வவுனியா சென்றனர். அங்கும் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினர். அன்பு மழையில் தமிழ் மக்களை நனையவைத்தனர்.

கண்டிய இராச்சியத்தை கடைசிவரை காப்பாற்ற போராடியவன் தமிழன். சிங்கக் கொடியை விழவிடாமல் தூக்கிப்பிடித்தவன். தமிழன். தமிழர்கள் சிலகாலம் இலங்கையை ஆண்டார்கள். சிங்களவர்கள் சில காலம் ஆண்டார்கள். சிங்களவர்களை நம்புங்கள். நாங்கள் தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். எங்கள் தலைமையின்கீழ் நீங்கள் எங்களது இணைபிரியா சகோதரர்கள். உங்களுக்கு வேண்டிய தொழிற்சாலைகள், வீதிகள், வைத்தியசாலைகள். எல்லா வகை அபிவிருத்திகளையும் செய்து தருகின்றோம் என்றும் வினயமாக வேண்டி நின்றார். டி.எஸ்.சேனாநாயக்கா, அக்காலத்தில் தான் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பண்ணை தாம்போதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பூநகரி மகாதேவா தாம் போதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.இரண்டாம் உலக மகா யுத்தத்தில் உபயோகிக்கப்பட்ட படைத்தளக்கட்டிடம் காச நோய் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. அதிகாரப்பகிர்வு பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித்திட்டங்கள் தொடங்கப்பட்டன. மட்டக்களப்பில் பட்டும் படாமலும் சில அபிவிருத்தித்திட்டங்கள் தொடங்கப்பட்டன.

மகாதேவாவும் நடேசனும், சுந்தரலிங்கமும் சிற்றம்பலமும் ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவர் டி.எஸ்.சேன நாயக்காவையும். ஆதரித்து நின்றனர். மட்டக்களப்பில் நல்லையா ஆதரித்து நின்றார். இவர்கள் தமிழர்களுக்கு அதிகாரம் தேவையில்லை. அபிவிருத்திதான் தேவை என்று குரல் கொடுத்தார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்தது. சேனநாயக்கா உரிமை குரல் எழுப்பிய தமிழர் தலைவனான ஜீ.ஜீ.க்கு வலை விரித்தார்.

சகல விதமான ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட சிங்கத்தமிழன் ஜீ.ஜீ. பொன்னம்பலம் டி.எஸ்.விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்டார். 1948 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 4 ஆம் திகதி அமைச்சரானார். அத்தோடு தமிழர்களின் அதிகாரப்பகிர்வின் வேட்கையும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

தமிழர்களின் அரசியல் உரிமைகளை அதிகாரப் பகிர்வை மழுங்கடிப்பதற்காக சேனநாயக்கா செயல்பட்டார். அதற்காகவே சில அபிவிருத்தி திட்டங்களைச் செய்வதற்கு தடைபோடாது விட்டார். புதிய அரவணைப்பின் கதகதப்பில் இருந்த ஜீ.ஜீ.சீமெந்து தொழில்சாலையை அபிவிருத்தி செய்தார். வாழைச்சேனை காகித தொழிற்சாலையையும் உருவாக்கினார். ஜீ.ஜீ.பொன்னம்பலம் அமைச்சராக இருந்த காலத்தில் தான் வடக்கிலும் கிழக்கிலும் சில அபிவிருத்திதிட்டங்கள் செய்யப்பட்டன. ஜீ.ஜீ.யின் சமபல பிரதிநிதித்துவத்தை மழுங்கடிப்பதற்காக சில அபிவிருத்தி எலும்புகளை தமிழர் முன்போட்டனர்.

கொடுக்கப்பட்ட சில அபிவிருத்தித்திட்டங்களுக்குப் பதிலாக தமிழர்களின் உரிமைகளை இல்லாது ஒழித்து விட்டனர். தமிழர்களுக்கு கொடுக்க வேண்டிய அதிகாரங்கள் மழுங்கடிக்கப்பட்டபின் கொடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்காது விட்டுவிட்டார்கள்.

ஜீ.ஜீ.க்குப் பின் வந்த அமைச்சர்கள் ஒருவித கப்பையும் தான் தமிழ் மக்களுக்காக போட முடியவில்லை. அவர்கள் அதிகாரங்களைக் கேளாது விட்டதினால் அபிவிருத்தித் திட்டங்களை கொடுக்காமல் விட்டனர். சுதந்திரம் அடைந்தபின் மட்டக்களப்பிலிருந்து வந்த அமைச்சர்கள் நல்லையா, இராசதுரை, தேவநாயகம் போன்றோர் என்ன அபிவிருத்தித் திட்டங்களை மட்டக்களப்பில் போட்டார்கள். அவர்கள் அபிவிருத்தி விதைகள் எவற்றையும் விதைக்க வில்லை. உண்மையில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிகாரம் சிங்கள அமைச்சரவையில குவிந்திருந்தது. அவர்களிடம் இருக்கவில்லை.

1977 ஆம் ஆண்டிலும் அபிவிருத்தி

1977 ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்காக தமிழர்கள் வான் முட்ட முழக்கம் இட்டனர். தமிழீழம் வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆணை கொடுத்தனர். தமிழ் தேசிய மக்கள் கொடுத்த ஆணையை மழுங்கடிக்க குள்ளநரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா திட்டம் தீட்டினார். தமிழர்களின் தானைத் தளபதி அண்ணன் அமிர்தலிங்கத்தை வளைத்துப்பிடிக்க கொழும்பிலே வலைவிரித்தார்.

ஜே.ஆர்.விரித்த வலையில் அண்ணன் அமிர்தலிங்கமும் அகப்பட்டுக் கொண்டார். எவ்வாறு ஜீ.ஜீ.விழுந்தாரோ அவ்வாறே அண்ணன் அமிர்தலிங்கமும் வீழ்ந்தார். ஜீ.ஜீ. அமைச்சரானார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ஜீ.ஜீ.சில தொழிற்சாலைகளைக் கட்டுவித்தார். அண்ணன் அமிர்தலிங்கம் மாவட்ட அபிவிருத்தி சபையைப் பெற்றார். தமிழ் ஈழத்தை கை விட்டார். அபிவிருத்தி சபையை இறுக்கிப் பிடித்துக்கொண்டார்.

கடைசியில் அச்சபைக்கு மேசையும் கதிரையும் வாங்க பணம் திரட்டவே அதிகாரம் இல்லை என்று அதன் தலைவர் செனட்டர் நடராஜா தூக்கி எறிந்துவிட்டார். தமிழர்கள் எப்பொழுது அதிகாரத்தில் பங்கு கேட்கின்றார்களோ அப்பொழுது அபிவிருத்தியைப் பற்றி பேரினவாதிகள் பேசுவார்கள். தமிழ் தலைவர்கள் சிலரும் தலை அசைத்து நிற்பார்கள். இன்று சிறு மாற்றத்துடன் இக்கதை மேடை ஏறுகின்றது. அதிகாரம் கேட்ட தளபதியே அபிவிருத்தி போதும் என்று கிழக்கில் குரல் கொடுக்கின்றார். அதற்கு சாமரை வீசுகின்றனர் ஜனாதிபதியும் ஜே.வி.பி.யினரும். தேர்தல் முடிந்தபின்பு ஜீ.ஜீ.க்கு நடந்தகதை கருணாவுக்கும் நடந்துவிடும். அண்ணண் அமிர்தலிங்கத்திற்கு போட்ட அபிவிருத்தி சபை எனும் மாலை கருணா அம்மானுக்கு போடப்படும். எல்லோருக்கும் நடந்தகதை தமிழ் தேசிய மக்கள் நன்கறிவர். அதனால் தான். தலைவர்கள் ஏமாந்த பொழுதும் ஏமாற்றப்பட்ட பொழுதும் தமிழ் தேசிய மக்கள் ஒரு பொழுதும் ஏமாறவில்லை. 1947 ஆம் ஆண்டிலும் தமிழ் தலைவர்கள் கேட்ட ஆணையைக் கொடுத்தனர். சோல்பரி ஆணைக்குழுவின் ஆலோசனைகளை நிராகரித்தனர். 1977 ஆம் ஆண்டிலும் தமிழ் தலைவர்கள் கேட்டவாறு தமிழீழ ஆணைதனைக் கொடுத்தனர். தலைவர்கள் தளம்பினார்கள். தமிழ் தேசிய மக்கள் தளம்பவில்லை. 2004 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய கூட்டணியை முன்னிறுத்தி ஆணை கேட்கின்றார்கள். நிச்சயமாக தமிழ் தேசிய மக்கள் ஏப்ரல் மாதம் இரண்டாந்திகதி கேட்டவாறு ஆணைதனை வழங்குவார்கள். ஏனெனில் தமிழ் தேசிய மக்கள் தங்களது உரிமைகளுக்கு எதிராக ஒருபொழுதும் நடந்ததில்லை. துரோகத்திற்கு ஒரு பொழுதும் துணைபோனதில்லை. எப்பொழுதும் உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர்கள். தங்களது வீடுகளைக் காப்பாற்ற இரண்டாந் திகதி ஒரே அணியில் ஒன்றாக திரண்டிடுவர். பொங்கு தமிழர்களுக்கு இன்னல்கள் விளைகின்ற இந்நேரத்தில் சிங்களஞ்சேர் தமிழ் தேசிய மக்கள் வடக்கென்றும் பாராது. கிழக்கென்றும் பாராது இரண்டாந்திகதி ஒன்றாகி விடுவர். தமிழ் தேசிய கூட்டணியை பாராளுமன்றம் அனுப்பிடுவர். இரண்டாம் திகதிக்குப்பின் எங்கள் பகைவர்கள் எங்கோ மறைந்திட வீடுதனைக் காப்பாற்றி வீறு நடைபோடுவர். வாழ்க தமிழீழ தேசிய மக்கள். வளர்க அவர்கள் ஒற்றுமை. வெல்க திம்புக் கோட்பாடு.

நன்றி - வீரகேசரி

- Mathan - 03-27-2004

<img src='http://www.virakesari.lk/20040327/PICS/vdp05.jpg' border='0' alt='user posted image'>

நன்றி - வீரகேசரி

- Mathan - 03-27-2004

மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு ஜோசப்பை வெளியேறுமாறு கருணா தரப்பு கடும் உத்தரவு! பிரசாரத்தில் ஈடுபடுவதற்கும் தடைவித்துள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப் பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் ஜோசப் பரராஜசிங்கம் அந்த மாவட்டத்தில் இருந்து உடன டியாக வெளியேறிவிடவேண்டும் என்றும் -தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் கருணா தரப்பு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணி யளவில் கருணா தரப்பைச் சேர்ந்த துரை என்பவர் தொலைபேசி மூலம் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு இந்த உத் தரவைப் பிறப்பித்துள்ளார் எனத் தெரியவந்தது.
இந்த உத்தரவை ஏற்காது செயற் பட்டால் உமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
அண்மையில் கூட்டமைப்பு வேட் பாளர்களை அழைத்துக்கலந்துரையா டிய கருணா தரப்பினர்.
தேர்தலில் கிழக்கு அபிவிருத் தியை முன்நிறுத்தியே பிரசாரம் செய் யவேண்டும் என்றும் - வடக்கு - கிழக்கு இணைந்த தாயகம், விடுத லைப் புலிகள் ஏகப்பிரதிநிதிகள் என் பதை முன்நிறுத்திப் பிரசாரம் செய் யக்கூடாது என்றும் - அறிவுறுத்தி யிருந்தனர்.
இந்த அறிவுறுத்தலை ஏற்கமறுத்து வடக்கு - கிழக்கு இணைந்த தாய கம், விடுதலைப் புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் என்ற விடயங்களை முதன்மைப்படுத்தி ஜோசப் பரராஜ சிங்கம் தனது பிரசாரங்களை மேற் கொண்டுவந்தார்.

இதற்கிடையில் - கூட்டமைப்பு வேட் பாளர்கள் யாவரையும் நேற்றுமுன்தினம் தம்மைச் சந்திக்கும்படி கருணா தரப்பு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று ஏழு வேட் பாளர்களும் அவர்களது பிரதேசத் துக்குச் சென்று இருந்தனர். ஜோசப் பரராஜசிங்கம் மட்டும் அங்கு செல்ல வில்லை.
தேர்தலை எப்படி முகம் கொடுப் பது என்பது குறித்து சென்றவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சகல வேட்பாளர்களும் இணைந்து ராஜன் சத்தியமூர்த்தியை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றும் - ஒரு லட்சம் விருப்பு வாக்குகளை அவர் பெற சகல வேட்பாளர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் - கருணா தரப்பு அறிவுறுத்தல் விடுத் துள்ளது என அறியவந்தது.

நன்றி - உதயன்

- Mathan - 03-27-2004

கருணாவை தீர்த்துக்கட்ட விடுதலைப் புலிகள் முடிவு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட அதன் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதி முரளிதரன் என்கின்ற கருணாவை தீர்த்துக்கட்டப் போவதாக புலிகளின் தலைமை வெளிப்படையாக அறிவித்துவிட்டது!

மட்டக்களப்பு, அம்பாறை மக்களை பகுதி உணர்வை தூண்டி கருணா ஏமாற்றி வருவதை இதற்கு மேலும் அனுமதிக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தயாராக இல்லை என்றும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தேசிய உணர்விற்கும் எதிரான துரோகிகளின் எதிரிகளின் கைப்பாவையாகிவிட்ட கருணாவை இதற்கு மேலும் தமிழீழ மண்ணில் அனுமதிக்க முடியாது என்று புலிகளின் அரசியல் பிரிவு வன்னியில் இருந்து விடுத்துள்ள அறிக்கை கூறுகிறது.

"உண்மையை அறியாத மக்களையும், தொண்டர்களையும் பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து வருகிறார் கருணா. ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக சிந்தப்பட்ட ரத்தத்தை, செய்யப்பட்ட தியாகத்தை எதிரிகளுடன் கருணா பேரம் பேசி வருகிறார். நமது தேசத்தையும், நமது மக்களையும் காப்பாற்ற இதற்கு மேலும் நமது மண்ணில் கருணா நீடித்திருக்க அனுமதிக்கப் போவதில்லை" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

கருணாவிற்கு விசுவாசமாக உள்ள தொண்டர்களை விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ள அந்த அறிக்கை, கருணாவிற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை எதிர்க்கும் எவரொருவரும் தமிழ் தேசியத்தில் துரோகியாக கருதப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

நன்றி - வெப் உலகம்

- Mathan - 03-27-2004

BBC Wrote:கருணா மீது சக போராளி துப்பாக்கிப் பிரயோகம்

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 27 மார்ச் 2004, 7:54 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணா மீது, அவருடன் கூட இருந்த போராளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து கருணா தப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணாவுடன் இணைந்திருந்த உறுப்பினர், கருணா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற போதும் கருணாவின் பதில் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் செஞ்சுடர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

கருணாவின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரின் உடலை அவருடைய உறவினருக்கு வழங்குவதற்கு கருணா குழுவினர் மறுத்திருப்பதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நன்றி - புதினம்
http://www.eelampage.com/index.shtml?id=200402270754134016&in=

இதைபற்றி வேறு ஏதாவது செய்திகள் கிடைத்தால் தாருங்கள்.

- Mathivathanan - 03-27-2004

சலசலப்புச்செய்தியோ தெரியவில்லை..
ஐபிஸி வானொலியில் சொல்லத்தொடங்கிய நேரத்திலிருந்து எல்லாத்தளங்களும் தேடியும் எந்தத்தடயமும் கிடைக்கவில்லை.. சிறிதுநேரத்துக்கு முன்னம்தான் இணைத்திருக்கிறார்கள்.. உறவுப்பாலச்செய்தியில் பெயர்கூட ஏதோ சொன்னார்கள்.. எதுவாயினும் ஆதாரபூர்வமான செய்தி வெளிவரும்வரை பொறுத்துப்பார்ப்போம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vallai - 03-27-2004

என்ன வீரகேசரி இப்பிடிப் பொய் சொல்லுது ஜீ.ஜீ க்குப் பிறகு ஒருத்தரும் அதிகாரத்தையும் கையிலை எடுக்கேலை அபிவிருத்தியும் செய்யேலை எண்டு

இலங்கையின் சர்வ வல்லமை பொருந்திய சனாதிபதிக்கு அடுத்தபடியான பதவி வடக்குக் கிழக்கு புனர் வாழ்வு புனரமைச்சுத் தானே அது உவன் தம்பி டக்ளஸிட்டை வரேல்லையோ

அவன் வந்து யாழ்ப்பாணத்திலை எத்தினை அபிவிருத்தியை பண்ணினவன்

தன்ரை கட்சியின்ர பிரதேச சபைக்குள்ளை வந்த குச்சொழுங்கை எல்லாத்தையும் தார் ரோட்டாக்கினான் சனம் போர வற வயல் வரம்புகளிலை இருந்த கானுக்கெல்லாம் மதகு கட்டிக் குடுத்தான்

அவன் மட்டும் இல்லையெண்டா மாநகர பிரதேச சபையெல்லம் இருந்த இடம் புல்லு முளைத்துப் போயிருக்கும் என்ன சுதியான கட்டிடங்கள் கட்டினவன் அனியாயமாய் இத்துப் போய் இருந்த சிறீதர் தியேட்டரை வெளிநாட்டுத் தூதுவர் வந்து போற ரேஞ்சுக்கு மாத்தினவனெல்லோ

முந்தித் தாங்கள் தங்கம் தேடி இடித்த கோயிலெல்லாத்தையும் திருப்பிக் கட்டுறதுக்கு காசு குடுத்த தங்கப்பவுண் தீவு மக்களை யாழ்ப் பாணத்தர் அடிமைப் படுத்துறதா ஒரு பேருண்மையைக் கண்டுபிடிச்ச ஐன்ஸ்டீன்

இவனை கணக்கிலை எடுக்கேலை வீரகேசரி வர வர வீரகேசரியிலையும் மாத்துக் கருத்தெண்டது இல்லாமல் போச்சுது

- Eelavan - 03-27-2004

Mathivathanan Wrote:சலசலப்புச்செய்தியோ தெரியவில்லை..
ஐபிஸி வானொலியில் சொல்லத்தொடங்கிய நேரத்திலிருந்து எல்லாத்தளங்களும் தேடியும் எந்தத்தடயமும் கிடைக்கவில்லை.. சிறிதுநேரத்துக்கு முன்னம்தான் இணைத்திருக்கிறார்கள்.. உறவுப்பாலச்செய்தியில் பெயர்கூட ஏதோ சொன்னார்கள்.. எதுவாயினும் ஆதாரபூர்வமான செய்தி வெளிவரும்வரை பொறுத்துப்பார்ப்போம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ம்ம் இது சலசலப்புச் செய்தி போலத் தெரியவில்லை புதினத்தில் போரளி பெயர் செஞ்சுடர் என்றும் வந்திருக்கிறது
அவன் சொன்னான் ஊடகங்கள் சொல்லினம் என்று அனாமதேய செய்திகளை வெளியிடும் தாத்தா
இப்படியான செய்திகள் வரும் போது மட்டும் ஆதாரத்துடனான செய்தி வரட்டும் என்பதன் காரணம் என்னவோ

- Mathivathanan - 03-27-2004

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

- kuruvikal - 03-27-2004

<b>ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தொடரும்: மதிமுக தேர்தல் அறிக்கை</b>

<span style='font-size:21pt;line-height:100%'>ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு மதிமுகவின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும். இதற்கு எந்தத் தடை வந்தாலும் அதைக் கண்டு பயப்பட மாட்டோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span>

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அக் கட்சியின் அறிக்கையை கோவையில் வைகோ வெளியிட அதை திருப்பூர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய பகுதிகள்:

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல, தெற்காசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான தனது நிலையை இந்தியா மாற்றிக் கொள்ளவேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியாவும் முக்கியப் பங்களிக்க வேண்டும்.

இலங்கைக்கு சம்பந்தமே இல்லாத பல நாடுகள் இலங்கையில் காலூன்ற நினைக்கின்றன. எனவே தனது சொந்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டாவது, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.

சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற இலங்கை முட்டுக் கட்டை போட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற மதிமுக பாடுபடும்.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களால் மீன் பிடிக்க முடியாத நிலை உள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். எனவே கச்சத்தீவை மீண்டும் இந்தியாவே கைவசப்படுத்த மத்திய அரசை வற்புறுத்துவோம்.

மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை நீக்க வேண்டும், தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், செம்மொழியாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

பாஜகஅதிமுக சதி: வைகோ

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், திராவிட இயக்கங்களை அழிக்க பாரதீய ஜனதாக் கட்சி திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதற்கு அதிமுக உதவுகிறது.

தமிழகத்தில் பலமாக காலூன்றும் வகையில் பா.ஜ.கவினர் செயல்படுகிறார்கள். பலம் பெற்ற பின்னர் திராவிட இயக்கங்கள் அத்தனையையும் வேரோடு அழிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அதிமுகவும் உடந்தை. இவர்களை ஒருங்கிணைக்கும் சக்தி எது என்பது மக்களுக்கே தெரியும். (காஞ்சி மடத்தை வைகோ மறைமுகமாகக் குறிப்பிட்டார்)

அதிமுக அரசு மதமாற்றத்தைத் தடை செய்துள்ளது. அதேபோல ஆடு, கோழி பலியிட தடை விதித்தது. பின்னர் தேர்தலுக்காக அதை நீக்கியுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அதை அமல்படுத்துவார்கள்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் நாட்டையே அது பிளவுபடுத்தி விடும். தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியாவில் சிறுபான்மையினராக வாழும் இந்தியர்களுக்கு அது பெரும் ஆபத்தாக முடியும்.

1947ம் ஆண்டுக்கு முன்பு இருந்த முக்கிய கட்டடங்களை தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவிப்பது ஒன்றுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்றார் வைகோ.

thatstamil.com

- Eelavan - 03-27-2004

சில விடயங்களுக்கு மறதி தான் மருந்து பல விடயங்களில் அது உதவாது ம்ம் ஏற்றுக் கொள்கிறேன்

- Mathan - 03-27-2004

BBC Wrote:
BBC Wrote:கருணா மீது சக போராளி துப்பாக்கிப் பிரயோகம்

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 27 மார்ச் 2004, 7:54 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணா மீது, அவருடன் கூட இருந்த போராளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து கருணா தப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணாவுடன் இணைந்திருந்த உறுப்பினர், கருணா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற போதும் கருணாவின் பதில் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் செஞ்சுடர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

கருணாவின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரின் உடலை அவருடைய உறவினருக்கு வழங்குவதற்கு கருணா குழுவினர் மறுத்திருப்பதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நன்றி - புதினம்
http://www.eelampage.com/index.shtml?id=200402270754134016&in=

இதைபற்றி வேறு ஏதாவது செய்திகள் கிடைத்தால் தாருங்கள்.

Mathivathanan Wrote:
Eelavan Wrote:
Mathivathanan Wrote:நீக்கப்பட்டுள்ளது
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ம்ம் இது சலசலப்புச் செய்தி போலத் தெரியவில்லை புதினத்தில் போரளி பெயர் செஞ்சுடர் என்றும் வந்திருக்கிறது
அவன் சொன்னான் ஊடகங்கள் சொல்லினம் என்று அனாமதேய செய்திகளை வெளியிடும் தாத்தா
இப்படியான செய்திகள் வரும் போது மட்டும் ஆதாரத்துடனான செய்தி வரட்டும் என்பதன் காரணம் என்னவோ
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Eelavan Wrote:சில விடயங்களுக்கு மறதி தான் மருந்து பல விடயங்களில் அது உதவாது ம்ம் ஏற்றுக் கொள்கிறேன்

இந்த செய்தி வந்து இவ்வள்வு நேரமாகியும் புலிகளின் ஊடகங்களிலோ அல்லது மற்ற ஊடகங்களிலோ ஒன்றுமே சொல்லப்படவில்லை. அதுதான் ஏன் என்று தெரியவில்லை.

- Eelavan - 03-27-2004

இது உண்மையிலேயே அவரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோ அல்லது போட்டுத் தள்ளிவிட்டு கட்டிய கதையோ யாரறிவார்?

- Mathivathanan - 03-27-2004

BBC Wrote:
BBC Wrote:
BBC Wrote:கருணா மீது சக போராளி துப்பாக்கிப் பிரயோகம்

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 27 மார்ச் 2004, 7:54 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணா மீது, அவருடன் கூட இருந்த போராளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து கருணா தப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணாவுடன் இணைந்திருந்த உறுப்பினர், கருணா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற போதும் கருணாவின் பதில் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் செஞ்சுடர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

கருணாவின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரின் உடலை அவருடைய உறவினருக்கு வழங்குவதற்கு கருணா குழுவினர் மறுத்திருப்பதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நன்றி - புதினம்
http://www.eelampage.com/index.shtml?id=200402270754134016&in=

இதைபற்றி வேறு ஏதாவது செய்திகள் கிடைத்தால் தாருங்கள்.

Mathivathanan Wrote:
Eelavan Wrote:
Mathivathanan Wrote:சலசலப்புச்செய்தியோ தெரியவில்லை..
ஐபிஸி வானொலியில் சொல்லத்தொடங்கிய நேரத்திலிருந்து எல்லாத்தளங்களும் தேடியும் எந்தத்தடயமும் கிடைக்கவில்லை.. சிறிதுநேரத்துக்கு முன்னம்தான் இணைத்திருக்கிறார்கள்.. உறவுப்பாலச்செய்தியில் பெயர்கூட ஏதோ சொன்னார்கள்.. எதுவாயினும் ஆதாரபூர்வமான செய்தி வெளிவரும்வரை பொறுத்துப்பார்ப்போம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ம்ம் இது சலசலப்புச் செய்தி போலத் தெரியவில்லை புதினத்தில் போரளி பெயர் செஞ்சுடர் என்றும் வந்திருக்கிறது
அவன் சொன்னான் ஊடகங்கள் சொல்லினம் என்று அனாமதேய செய்திகளை வெளியிடும் தாத்தா
இப்படியான செய்திகள் வரும் போது மட்டும் ஆதாரத்துடனான செய்தி வரட்டும் என்பதன் காரணம் என்னவோ
ஐபிஸி செய்தி என்னமாதிரியெண்டது எனக்கெல்லோ தெரியும்.. நெடுமாறனை விட்டிட்டாங்கள் எண்டு நீதிமன்றத்திலையிருந்து அறிக்கை விட்டதும் அடுத்தநாள் நாங்கள்தான் முதலில் சொன்னோம் எண்டு முதல்நாள் செய்தியைமேற்கோள் காட்டி செய்தி சென்னதும்.. ஐபிசியை மேற்கோள்காட்டி புதினம் செய்தி வெளியிட்டதும்.. பிறகு ஒருமாதத்துக்குப்பிறகு இண்டைக்கு விடுறான் நாளைக்கு விடுறான் எண்டு திரும்ப செய்தி சொன்னதும் அப்ப இன்னும் விடேல்லையே எண்டு நான் கேட்டதும் Eelavan.. உங்களுக்கு மறந்தாலும் எனக்கு மறக்காது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Eelavan Wrote:சில விடயங்களுக்கு மறதி தான் மருந்து பல விடயங்களில் அது உதவாது ம்ம் ஏற்றுக் கொள்கிறேன்

இந்த செய்தி வந்து இவ்வள்வு நேரமாகியும் புலிகளின் ஊடகங்களிலோ அல்லது மற்ற ஊடகங்களிலோ ஒன்றுமே சொல்லப்படவில்லை. அதுதான் ஏன் என்று தெரியவில்லை.
இதைத்தான் Mind Games என ஆங்கிலத்தில் அழகாக சொல்லுவார்கள்.. இவர்களை மேற்கோள் காட்டி அவர்கள் செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..
:?: Idea Arrow

ஓ அப்படியா. புதினத்தை மேற்கோள் காட்டித்தான் தமிழ் நாதத்தில் வந்துள்ளதை பார்த்தேன்.

- Mathan - 03-27-2004

Eelavan Wrote:இது உண்மையிலேயே அவரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோ அல்லது போட்டுத் தள்ளிவிட்டு கட்டிய கதையோ யாரறிவார்?

யார் கட்டிய கதை எங்கின்றீர்கள் கருணா தரப்பா? அப்படி என்றால் ஐபிசியில் எப்படி வந்தது?

- Mathivathanan - 03-27-2004

BBC Wrote:
Eelavan Wrote:இது உண்மையிலேயே அவரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோ அல்லது போட்டுத் தள்ளிவிட்டு கட்டிய கதையோ யாரறிவார்?

யார் கட்டிய கதை எங்கின்றீர்கள் கருணா தரப்பா? அப்படி என்றால் ஐபிசியில் எப்படி வந்தது?
எவரும் எவரையும் போட்டதாக தெரியவில்லை..

இனியென்ன இவரை அவரை மேற்கோள்காட்டி எல்லா தளங்களிலும் செய்தி வரும்.. சிங்கள ஆங்கில இந்தியப்பத்திரிகைகள்தான் பாக்கி..
இவர்களை மேற்கோள்காட்டி அவர்கள் செய்தி வெளியிட ..
இதுதான் நம்ம உலகம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-27-2004

ஒண்டு மட்டும் விளங்குது துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்கிட்டதெண்டது....எங்கை போய் முடியப் போகுதோ.....!

:evil: :twisted: :?: :!:

- Eelavan - 03-27-2004

BBC Wrote:
Eelavan Wrote:இது உண்மையிலேயே அவரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோ அல்லது போட்டுத் தள்ளிவிட்டு கட்டிய கதையோ யாரறிவார்?

யார் கட்டிய கதை எங்கின்றீர்கள் கருணா தரப்பா? அப்படி என்றால் ஐபிசியில் எப்படி வந்தது?

எனக்கும் தெரியாது அப்பிடியும் இருக்கலாம் என்றொரு கோணத்தில் யோசித்ததை சொன்னேன்
கருணா பிடிக்காதவரை சுட்டுவிட்டு தன்னை தாக்க முயற்சித்தார் சுட்டேன் என்று சொல்லியிருக்கலாம் அதனை ஐ.பி.சி வெளியிட்டிருக்கலாம்

- Eelavan - 03-27-2004

Mathivathanan Wrote:
BBC Wrote:
Eelavan Wrote:இது உண்மையிலேயே அவரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோ அல்லது போட்டுத் தள்ளிவிட்டு கட்டிய கதையோ யாரறிவார்?

யார் கட்டிய கதை எங்கின்றீர்கள் கருணா தரப்பா? அப்படி என்றால் ஐபிசியில் எப்படி வந்தது?
எவரும் எவரையும் போட்டதாக தெரியவில்லை..

இனியென்ன இவரை அவரை மேற்கோள்காட்டி எல்லா தளங்களிலும் செய்தி வரும்.. சிங்கள ஆங்கில இந்தியப்பத்திரிகைகள்தான் பாக்கி..
இவர்களை மேற்கோள்காட்டி அவர்கள் செய்தி வெளியிட ..
இதுதான் நம்ம உலகம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

என்ன தாத்தா சக்தி தொலைக்காட்சியையும் தமிழலையையும் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு வந்த நீங்களே இப்படி அலுத்துக் கொண்டால்