![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- shanmuhi - 08-28-2004 ஆலய திருவிழாவுக்கு சென்ற மாணவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பினர் ( யாழிலிருந்து எழின்மதி ) ( வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2004, 7:21 ஈழம் ) பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய ஐந்தாம் திருவிழாவுக்கு இரண்டு பேரூந்துகளில் சென்ற மாணவர்களை, நேற்றைய தினம் பொன்னாலை சந்தியில் நின்ற கடற்படையினர் திருப்பியனுப்பியுள்ளனர். அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மீதான கெடுபிடிகளையும் கடற்படையினர் அதிகரித்துள்ளனர். குறிப்பிட்ட மாணவர்களை ஆலயத்திற்கு செல்லவிடாமல் கடற்படை திருப்பியனுப்பிய போது, அப்பகுதிக்கு மூன்று பேரூந்துகளில் வந்த சிங்கள மாணவர்களை கடற்படையினர் அந்த பகுதிக்குச் செல்ல அனுமதித்துள்ளனர். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம் காரைநகர் கடற்படைத் தளத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நன்றி : புதினம் |