![]() |
|
தாயகத்து அரசியல் கட்டுரைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தாயகத்து அரசியல் கட்டுரைகள் (/showthread.php?tid=8348) |
- sethu - 06-22-2003 மூன்றாம் கட்ட ஈழப்போரானது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை உறுதியானதொரு தளத்தின் மீது முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இதனைத் தேசியத் தலைவர் அவர்களின் நீண்ட தொலைநோக்குப் பார்வையும், இராணுவ அரசியல் இராஜதந்திர மதிநுட்பமும் நேர்த்தியான தலைமைத் துவமும் பெற்றுக்கொடுத்தது எனின் மிகையாகாது. இராணுவ hPத}யில் சந்திரிகா அரசு நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளையில் பௌதீகச் சூழ்நிலை, எதிரியின் குறிக்கோள் தமது பலம் என்பனவற்றிற்கு ஏற்ப பின்வாங்குதல், தடுத்து நிறுத்தல், தாக்கி அழித்தல் போன்ற தந்திரோபாயங்களைத் தேவைக்கேற்பக் கையாண்டு மூன்றாம் கட்ட ஈழப்போரைத் தேசியத் தலைவா பிரபாகரன் அவர்கள் வெற்றிகரமாக வழிநடத்திச் சென்றார். யாழ் குடாநாட்டில் இராணுவம் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட போது தந்திரோபாய hPதியில் பின்வாங்குதலைச் செய்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஜயசிக்குறு நடவடிக்கையின் போது தடுத்து நிறுத்தலும், ஊடறுத்துத் தாக்குதலும், பின்வாங்குதலும் என்ற hPதியில் தந்திரோபாயத்தை வகுத்துச் செயற்படுத்தினார். இறுதியில் ஓயாத அலைகள் 1, 2, 3 என தாக்கி அழிக்கும் நடவடிக்கை மூலம் நில மீட்பையும், எதிர்ச்சமர் என்ற hPதியில் இராணுவத்திற்குப் பெரும் இழப்பையும் கொடுத்தார். இதேசமயம் சந்திரிகா அரசாங்கம் அரசியல் hPதியில் விடுதலைப் புலிகளை ஓரம்கட்டவும் தம் இராஜதந்திர முயற்சி மூலம் சர்வதேச hPதியில் புலிகளைத் தனிமைப்படுத்தவும் மேற்கொண்ட பெரும் முயற்சியும் பின்னடைவையே சந்தித்தது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ அன்றித் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களோ அல்ல எனவும் - சமாதானத்திற்கும் அமைதிக்கும் விரோதமானவர்கள் எனவும் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான பிரச்சார இராஜதந்திர நடவடிக்கைகள் தேசியத் தலைவர் பிரபாகரனின் மதிநுட்பத்துடன் கூடிய அரசியல் இராஜதந்திர நகர்த்தல்கள் மூலம் தோல்வி கண்டன. சமாதானத்திற்கும், அரசியல் தீர்விற்கும் எவ வேளையிலும் நாம் விரோதிகள் அல்லா என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இராணுவ hPதியிலான அடக்குமுறைக்கோ அன்றி அழுத்தத்திற்கோ பணியப்போவதில்லை என்பதையும் வலியுறுத்தியே வந்தார். அத்தோடு, தமது நல்லெண்ணச் சமிக்ஞைகளைக் காலத்திற்குக் காலம் வெளியிட்டு வந்ததோடு, சர்வதேச மத்தியஸ துவத்திற்கு வரவேற்பும் அளித்தார். இதற்கு ஏற்ப ஆரம்பம் முதலே நோர்வேயின் சமரச முயற்சிகளுக்கு தமது புூரண ஒத்துழைப்பை வழங்கியதோடு பாதகமான நிலையிலும் ஒருதலைப்பட்சமாக யுத்தத்தைக் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நிறுத்தியும் வைத்தார். அதற்கும் அப்பால், சமாதானத்திற்கு வழங்கும் பெரும் ஒத்துழைப்பாக மக்களைச் சமாதானத்திற்கு ஆதரவான சக்திகளுக்கு வாக்களிக்குமாறும் கடந்த பொதுத் தேர்தலின் போது கேட்டுக்கொண்டார். மக்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்ததின் மூலம் விடுதலைப் புலிகளே தமது ஏகபிரதிநிதிகள் என்பதை உறுதி செய்ததோடு சந்திரிகா அரசாங்கத்தையும் அதன் கைக்கூலிகளாகச் செயற்பட்ட தேசவிரோத சக்திகளையும் புறம் தள்ளினர். தேசியத் தலைவர் அவர்களின் இத்தகைய இராணுவ அரசியல் இராஜதந்திர முன்னெடுப்பானது இலங்கைக்குள்ளும், வெளி உலகிலும் தமிழ் மக்களின் போராட்டத்தை பல பரிமாணங்களைக் கொண்டதாக வளர்ச்சி காண வைத்தது. இதன் விளைவானது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வென்பது சர்வதேச பரிமாணத்துடன் கூடியதாக அமைய வேண்டும் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்தது. இதனடிப்படையில் மூன்றாம் கட்ட முடிவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்து பின்வரும் அம்சங்கள் உறுதி செய்யப்படுபவையாக இருந்தன. 1. விடுதலைப் புலிகள் அமைப்பு மரபு வழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றலைப் பெற்றிருந்தது. தமிழ்ப்பிரதேசத்தில் ஒரு பகுதி அவர்களால் விடுவிக்கப்பட்டிருந்தது. 2. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக புலிகள் உறுதி செய்யப்பட்டடிருந்தனர். 3. இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச பரிமாணம் பெற்றிருந்தது. சில மேற்குலக நாடுகள் புலிகள் அமைப்பு மீது தடை விதித்திருந்தபோதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண புலிகளுடனேயே பேசுதல் வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அளவிற்கு நிராகரிக்க முடியாதவர்களாகப் புலிகள் இருந்தனர். ஆகையினால் பெரும் சவாலைக் கொண்டதாக இருந்திருப்பினும் மூன்றாம் கட்ட ஈழப்போரானது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை உறுதியானதொரு தளத்தின் மீது முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இதனைத் தேசியத் தலைவர் அவர்களின் நீண்ட தொலைநோக்குப் பார்வையும், இராணுவ அரசியல் இராஜதந்திர மதிநுட்பமும் நேர்த்தியான தலைமைத்துவமும் பெற்றுக்கொடுத்தது எனின் மிகையாகாது. ( - sethu - 06-22-2003 சமூகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமூதாய மொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும். வீடும் நாடும் வளம்பெறும் " பெண்ணிலை மாற்றம் தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவர்கள் யாரது கருத்திற்கும் எட்டாமல் சத்தமேயில்லாமல் புரட்சி ஒன்று நடந்துகொண்டுதானிருக்கிறது. தாங்கள் ஒரு புரட்சி செய்வதை அப்பெண்கள் அறியாமலிருப்பதும், அப்பெண்ணின் புரட்சிகர நடவடிக்கையைச் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் போவதோடு அதனை விமர்சிப்பதும் அத்தகைய புரட்சியை மேற்கொள்ள பிறபெண்கள் முயலாததற்குக் காரணமாக அமைகிறது. கல்வியறிவு, பொருளாதாரப்பலம் என்பனவற்றையெல்லாம் மீறி ஒரு பெண்ணின் தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது, அப்பெண் பொங்கியெழும் சம்பவங்கள் இடம்பெறினும் பின்னர் அப்பெண்ணுக்குப் போதிய ஆதரவு சமூகத்திலும் குடும்பத்திலும் கிடைக்காமற் போவது அப்பெண்ணை குற்றவுணர்விற்கு உள்ளாக்குகிறது. தான் காதலித்த ஒருவனை ஒரு பெண் மறுக்கத் தலைப்படும்போது, அப்பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாகிறது. சமூகத்தின் அப்பார்வை ஆணிண் அடக்கு முறைகளுக்குப் பெண்ணைப் பணிந்து போகச் செய்கிறது. தான் காதலித்த ஒருவன், 'சீதனமில்லாமல் வீட்டுக்காரர் கல்யாணம் செய்யவிட மாட்டினமாம்' என்று தன் காதலைப் பெற்றோரைக் காட்டி விலை பேசிய போது, அவனைத் திருமணம் செய்வதற்காக இரண்டு வருடங்கள் உழைத்துப் பணம் சேர்த்தார் ஒரு பட்டதாரிப்பெண். இரண்டு வருடக் கடின உழைப்பின் பின் பணத்திற்காக என்னை மறுதலித்த ஒருவன் என்ற எண்ணம் மனதில் விதைக்கப்பட்ட பின்னும் அப்பெண் அவனை மணக்கத் துணிந்தது காதலுக்காகவல்ல, குடும்பத்தின், சமூகத்தின் நிர்ப்பந்தத்திற்காகவே. தான் அவனை மறுப்பின் தனதும் தன கீழுள்ள சகோதரிகளினதும் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற நிலையில் அப்பெண் மனதில் தோன்றிய வெறுப்புடனேயே மணவாழ்க்கைக்குள் நுழைகிறாள். இன்னொரு பெண்ணோ பலவருடங்களாகத் தன்னை விரும்பிய ஒருவன் சீதனம் வேண்டித் தன்னை மறுத்த போது, அவனை மறுக்கும் உரிமை தனக்குமுண்டென உணர்ந்தாள். திருமண தினத்தன்று அருட்தந்தை 'இவரைத் திருமணம் புரியச் சம்மதமா?' என வினாவியபோது அவனை மறுத்தாள். 'தான் செய்தது சரியே' என்ற நிமிர்வுடன் அவள் வெளியேறிச்சென்ற போது அந்த 'நிமிர்வு' சமூகத்தின் பார்வையில் 'திமிர்' ஆனது. அந்த நிமிர்வை அவள் தொடர்ந்து பேண முடியாத வகையில் குடும்பமும் சமூகமும் அவளை நிந்தித்தபோது 'நீ செய்தது சரியே' என அவளைத் தட்டிக்கொடுத்து உளப்புூர்வமான ஆதரவைத் தர யாரும் வராத நிலையில், பிறப்பாலும் வளர்ப்பாலும், 'ஒரு தமிழ்ப்பெண் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்றூட்டப்பட்ட உணர்வுகளே அவளை மனச்சிதைவு நிலைக்குள்ளாக்கியபோது அவளது புரட்சி பயனற்றதாகிப்போனது. சூழ நின்ற சமூகம், அப்பெண்ணிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மன வேதனையையும், அதன் பலனாகவே எதிர்காலத்திலும் தன் திருமண வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் இத்தகைய முடிவையெடுக்க அவள் துணிந்தாள் என்பதையும் புரிந்துகொள்ளாது. 'ஒரு பொம்பிளை இப்பிடியே நடக்கிறது' எனக் கடுமையாக விமர்சித்தது. மறைமுகமாக 'ஒரு ஆம்பிளை செய்தாலும் பரவாயில்லை' என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டது. தன் தன்மானத்திற்கு விழுந்த அடியைத்திருப்பிக்கொடுக்க முனைந்த அவள் நிமிர்வு 'அவளுக்கு ஆணவம் தலைக்கேறிப்போச்சு' என விமர்சிக்கப்பட்டது. இத்தகைய விமர்சனங்கள் அப்பெண்ணைத் தன்னுள் மேலும் ஒடுங்கச்செய்தது. இப்பெண்ணுக்கு உளப்புூர்வமான ஆதரவைக் கொடுத்து இனிவரும் வாழ்க்கையை அவள் நம்பிக்கையுடன் வாழ வழிகாட்டப்போவது யார்? பெண்கள் துணிச்சலான முடிவுகளை எடுத்துத் தமது வாழ்வைத் தாமே தீர்மானிக்கத் தயங்குவதற்குச் சமூகத்தின் இத்தகைய விமர்சனங்களே காரணமாக அமைகின்றன. எதிர்பார்க்காத இடத்தில் இன்னொரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண்ணின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் 'இந்தப் பெண்ணிடம் இவ வளவு தெளிவா? என ஆச்சரியப்படவைத்தன. பதினேழு வயதுடைய அப்பெண் கல்வியறிவோ, பொருளாதாரப் பலமோ அற்றவள். ஒரு வயதுக் குழந்தையை இடுப்பில் ஏந்திய வண்ணம் வந்த அப்பெண்ணை ஏனைய பெண்கள் நோக்கியவிதம், சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத செயலொன்றை அவள் புரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அப்பெண்ணுடன் தனியே பேசமுற்பட்ட எனக்கு அப்பெண்மேல் பெருமதிப்பு ஏற்பட்டது. திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையில் ஒருவனிடம் தன்னை இழந்து கர்ப்பிணியானாள். திருமணம் செய்ய அவன் மறுத்தபோது நீதிமன்றத்தை அணுகினாள். அவளைத் திருமணஞ்செய்யும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அப்பெண் எடுத்த முடிவு வியக்கத்தக்கது. 'என்னை ஏமாத்தினவனை ஏனக்கா நான் கல்யாணம் செய்யவேணும்? என்ரை பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆரெண்டு சனத்துக்குக் காட்டத்தான் நான் கோர்ட்டிற்குப் போனனான்' சுயமரியாதை மிக்கதொரு பதில். சமூகத்தினரால் ஏற்கமுடியாத பதில். ஏனெனில் சமூகத்தின் பார்வையில் அவள் நடத்தை சரியில்லாதவள் பிள்ளை, தகப்பன் பேர் தெரியாத பிள்ளை. கூலி வேலைக்குச் சென்று தன் மகனை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அப்பெண்ணை அவளைச் சூழவுள்ளோர் மதிக்கத் தவறியதேன்? அரச திணைக்களமொன்றில் தொழில் புரியும் பெண்ணொருவர் சோகம் ததும்பிய முகத்துடனேயே தினமும் வேலைக்கு வருவார். எந்நேரமும் 'அவர்லு} அவர்லு}' என்று தனது கணவரைப்பற்றியே ஏதாவது கூறிக்கொண்டிருப்பார். சிறிது காலமாக எதுவும் பேசாது அப்பெண் அமைதியாயிருந்தது ஆச்சரியமளித்தது. 'என்ன கதையையே காணேல்லை' என்ற கேள்விக்குப் பதிலாக அப்பெண் கண்ணீர் உருக்கத் தொடங்கினாள். திருமணம் செய்த நாளிலிருந்தே 'நான் உன்னை வீட்டுக்காரரின்ரை ஆய்க்கினைக்காண்டித்தான் கட்டினனான்' என்று சண்டைபிடித்து அப்பெண்ணை உளவியல் hPதியான வன்முறைக்குள்ளாக்கிய அவளது கணவன், அச்சண்டையின் உச்சக்கட்டமாக குழந்தையைப் பிரசவித்த பதினான்காம் நாள் தனது அடிவயிற்றில் அடித்தததாகக் கூறி 'இப்பவும் அடி வயிற்றிலை அந்த வலி நிரந்தரமாத் தங்கீற்றுதக்கா' என்று அழுதாள். அண்மையில் தனது கணவன் ஒரு பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்ததைக் கூறியபோது, வேதனையிலும் அவமானத்திலும் அவள் முகம் கன்றியது. 'என்னாலை அந்த அவமானத்தைத் தாங்க முடியேல்லையக்கா அப்பவே பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டை போயிட்டன். தாயும் மகனுமாவந்து நிற்கினம். மணவிலக்குத் தரட்டாம், சீதனமா வாங்கின காசைத்திருப்பித் தாங்கோ, மணவிலக்குத் தாறன் என்று சொல்லிப்போட்டன். என்ர காசை ஏனக்கா நான் விடுவான்' என்று ஆவேசப்பட்டாள். இவ வளவு துணிச்சலும், தன்னம்பிக்கையும் உரிமைக்காகப் போராடும் குணமும் இந்தச் சின்ன உருவத்தினுள்ளா என்ற ஆச்சரியங்கலந்த மௌனத்தில் இருந்த என்னை 'என்னக்கா! நான் செய்தது பிழையே, நீங்களும் பேசாமல் இருக்கிறீங்கள்?' என்று கவலை தொனிக்க வினாவினாள். சுற்றமும் உறவும் ஏற்படுத்திய கண்டனங்களும், விமர்சனங்களும் உளாPதியான ஆதரவைத் தேடும் மனோநிலையை அவளுள் ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து ஆதரவுடன் அவள் கைகளைப் பற்றினேன். 'மூன்று வருட காலமாக வேதனையை அனுபவித்த உங்களுக்குத்தான் நீங்கள் எடுத்த முடிவின் பரிமாணம் தெரியும். நீங்கள் சரியான முடிவையே எடுத்திருப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனத்தையிட்டுக் கவலைப்படாதீர்கள்' என்று கூறினேன். 'மூன்று வருடத்தில் எனது திருமண வாழ்க்கை முறிந்தது எனக்கு எவ வளவு வேதனையாயிருக்கும் என்று இந்தச் சனத்திற்கு ஏனக்கா விளங்குதில்லை?' என்று கண்ணில் நீருடன் வினாவினாள். 'உங்கள் வாழ்க்கை உங்கள் பொறுப்புத்தான். நீங்கள் யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய தேவையில்லை. பிள்ளையை நல்லவனாக வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்துங்கள்' என்று மட்டுமே என்னால ஆறுதல் கூறமுடிந்தது. சமூகத்தில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமுதாயமொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும். வீடும் நாடும் வளம்பெறும். -கு. தீபா - sethu - 06-22-2003 சமாதான தேவதை என்றும் வன்முறை அரசியலால் கணவனையும் தந்தையையும் இழந்த அபலைப்பெண் என்றும் - பல்லின உணர்வுகொண்ட ஜனநாயகவாதி என்றும் புகழப்பட்ட சந்திரிகா அம்மையார் மிகக்கொடூரமான சர்வாதிகாரியாகவும், கொலைகார ஆட்சியாளராகவும் மாறி மனிதாபிமானத்தையே காலில் போட்டு மிதித்து ஆட்சி புரிந்தார். இப்போது ரணில் விக்கிரமசிங்காவின் முறை வந்துள்ளது. ஆரம்பம் நம்பிக்கைதரும் விதத்திலேயே உள்ளது. ஆயினும், நம்பி ஏமாற தமிழ் மக்கள் இம்முறை தயாராக இல்லை. ஐ.தே. முன்னணித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்துவிட்டது. சமாதான முயற்சிகளையும் பொருண்மிய மீட்சியையும் முக்கிய ஆட்சியியல் இலக்காகக் கொண்டு தமது அரசாங்கம் செயற்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். புலிகள் இயக்கம் சார்பில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிரகடனப்படுத்திய ஒரு மாதகால போர்நிறுத்தத்தைக் கருத்தில் எடுத்த சிறீலங்காப் பிரதமர் அரசாங்கத்தரப்பில் இருந்து ஒரு மாத மோதல் தவிர்ப்பை அறிவித்தார். நத்தார் தினத்துடன் ஆரம்பமான போர் ஓய்வு சிறந்த முறையில் இருதரப்பினராலும் கடைப்பிடிக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்கெதிரான பொருண்மியத் தடைகளை படிப்படியாக அகற்றப் போவதாக வாக்குறுதி அளித்த பிரதமர் முதற்கட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார். வெளிநாட்டு மத்தியத்துவராக முன்னர் செயற்பட்ட நோர்வே அரசிற்கு மீண்டும் அழைப்பனுப்பிய சிறீலங்கா பிரதமர் நோர்வேயின் பங்களிப்பைக் கோரியுள்ளார். சந்திரிகா அரசாங்கம் ஓரங்கட்டியிருந்த முன்னாள் அனுசரணையாளர் சொல்கைம் அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். முன்னர் தனியொரு அனுசரணையாளர் என்ற நிலைமாறி இப்போது ஆறு பேர்கொண்ட அனுசரணையாளர் குழுவொன்று பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளப் போகின்றது. நோர்வேயின் வெளிவிவகார பிரதி அமைச்சர் திரு . கெல்கேசன் தலைமையிலான அனுசரணையாளர் குழுவில் சொல்கைமும் ஒருவர். புலிகள் இயக்கத்துடன் இதுவரை காலமும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததற்கு 'பலமான அடித்தளம் இன்மையே' பிரதான காரணம் என பிரதமர் ரணில் தனது கருத்தைக் கூறியுள்ளார். பலமான அடித்தளத்தை அமைக்க தனது அரசாங்கம் மெதுவாகவும், உறுதியாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். புலிகள் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுக்களை நடாத்தி ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு அரசாங்கத்திற்கு உதவும் வகையில் தான் மூன்று குழுக்களை அமைத்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கும் பணியில் ஒரு குழுவும், பேச்சுவார்த்தைகளை நேரடியாக நடாத்த ஒரு குழுவும், பேச்சுக்களில் பிணக்குகள் ஏற்பட்டு முடக்க நிலை எழுந்தால் மாற்றுத் தீர்வுகளை ஆய்வு செய்து அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற ஒரு குழுவும் என மூன்று தளங்களில் இவை செயற்படும் என்றார். புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் நேரடியாகப் பங்குபெற கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல். பீரிசும், பொருளாதார சீர்திருத்த அமைச்சர் மலிந்த மொறகொடவும், முன்னாள் ராஜதந்திரி ஜயந்த தனபாலாவும் பிரதமரினால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என ஐ.தே. முன்னணி சார்பான சண்டே லீடர் (30.12.2001) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு அவநம்பிக்கையுூட்டும் வகையில் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ இடையிடையே சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதான முயற்சியில் காட்டிவரும் ஆரம்ப முயற்சிகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையுூட்டுபவையாக உள்ளன. தமிழரின் தேசிய இனப்பிரச்சினை புூதாகார வடிவமெடுத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் இருந்து தென்தமிழீழத்தை ரணகளமாக்கிய ஆர். பிரேமதாசா உட்பட, இலங்கைத்தீவையே இரத்தக்காடாக்கிய சந்திரிகா அம்மையாரது காட்டாட்சிகளையும், அதன் எதிர் விளைவுகளையும் நேரடியாகப் பார்த்த அனுபவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு. மூன்று வேறு காலகட்டங்களில் சிறீலங்காவின் ஆட்சியாளர்களாக இருந்த இந்த முப்பெரும் சிங்களத் தலைவர்கள், போர் மூலம் புலிகளை வெல்லமுயன்று, படுதோல்வி கண்ட உண்மை புதிய பிரதமருக்கு நன்கு தெரியும். போர்மூலம் புலிகளை வென்று தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை நசுக்கும் திறன் சிங்கள அரசுக்கு இல்லை என்ற உண்மை இன்று சிங்கள மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெரிந்த உண்மையாகிவிட்டது. போர் புரிய விரும்பினாலும் சிறீலங்காவின் பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்க மறுக்கின்ற இன்றைய புறச்சூழலிலேயே ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளார். சமாதானப் பேச்சு, அரசியல் தீர்வு என கதைத்தாலே பொங்கியெழுந்து இனவெறி கக்கி போர்முரசு கொட்டுகின்ற பௌத்த மத பீடங்களும், பிக்குகளும் இப்போது அடக்கி வாசிக்க முயல்கின்றார்கள். 7 வருடப் போரால் எதையும் சாதிக்கமுடியாது போனாலும், தொடர்ந்தும் தமது போர்க் கொள்கைக்கு ஆதரவு கேட்டு தேர்தலில் தோல்வி கண்ட பொ.ஐ.முன்னணியினர் புதிய அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளுக்கு புதிர் நிறைந்த மௌனத்தைக் காட்டி வருகின்றனர். ஜே.வி.பி.யினரும் சிகல உறுமயக்காரர்களும் சமாதானத்துக்கு விரோதமாகப் பேசி வருகின்றனர். 1950களில் சிங்கள மக்களிடம் இனவெறியைத் தட்டிஎழுப்பி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய எஸ். டபிள்யுூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் வழியில் அரசியல் பலம் பெற ஜே.வி.பி காரர்கள் முயல்கின்றார்கள். சிங்களதேசத்துப் பத்திரிகைகள் சமாதான சூழலுக்கு ஆதரவாகச் செயற்படவில்லை. 'ஐலண்ட்' நாளிதழ் தனது கட்டுரைகளிலும், ஆசிரியர் கருத்துரைகளிலும் இனவெறி கக்கி புலி எதிர்ப்புப்பிரச்சாரம் செய்து சிங்களவர் மத்தியில் பதட்டத்தை உருவாக்க முயல்கின்றது. இதேவேளை, ஐ.தே.முன்னணியின் ஆதரவுப் பத்திரிகை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் குடும்பத்தினரை பங்குதாரராகவும் கொண்டதெனச் சொல்லப்படும் 'சண்டேலீடர்' பத்திரிகை (30.12.2001) தனது ஆசிரியர் கருத்துரையில், சிங்களவரை வெருட்டிக் கிலிகொள்ள வைக்கும் நச்சுக்கருத்தொன்றுக்கு, வக்காலத்து வாங்கப்பட்டுள்ளது. "ஐ.தே. முன்னணி ஆட்சிக்கு வந்து நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டால் அதன் பிறகு பொ.ஐ.முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் பிரித்துக் கொடுப்பதற்கு நாடிருக்காது" என்று சிகல உறுமயவின் முன்னாள் தலைவர் எஸ்.எல்.குணசேகர கூறிய அர்த்தமற்ற வெறுப்புக்கருத்தை சரியானது என்று ஏற்றுக்கொண்ட சண்டேலீடர் ஆசிரியர் புதிய அரசு அவதானமாகச் செயற்படவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். இதேவேளை, விசேட அதிரடிப்படைக்கு பத்தாயிரம் பேரை திரட்டுவது என்ற முன்னைய அரசாங்கத்தின் திட்டத்திற்கு புதிய அரசாங்கமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது சமாதானப் பாதையில் ஒரு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, புதிய அரசாங்கம் ஒருவருடத்தைப் புூர்த்திசெய்தவுடன் நாடாளுமன்றை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடாத்தும் அதிகாரம் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு உண்டு. சந்தர்ப்பம் கிடைத்தால் தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க அவர் தயக்கம் காட்டமாட்டார் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த ஒரு வருடகாலத்துள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரையே பதவி கவிழ்க்கும் ஏது நிலைகளும் தென்படுகின்றன. இந்த அரசியல் சதுரங்கத்திற்குள் சமாதான முயற்சிகள் ஒரு பகடைக்காயாகி செத்தழித்து விடுமோ! என்ற அச்சமும் தமிழ் மக்களிடம் உண்டு. சமாதானப் பாதைக்குக் குறுக்கே சிங்களப் பேரினவாதிகளும், சிங்களத் தீவிரவாதிகளும் திரண்டெழும் நிலைவந்தால் அவற்றைத் துணிச்சலாக எதிர்கொண்டு சமாதானப் பாதையில் உறுதிகாட்டும் தலைமைப்பண்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உண்டா! என்பது தெளிவாகத் தெரியவில்லை. "சமாதான முயற்சியில் பாரிய நம்பிக்கை கொள்ளவேண்டாம். படிப்படியாக முன்னோக்கிப் போவோம். மலர்கள் நிறைந்த பாதையல்ல இது. இறுக்கமான கடினமான பாதை இது. எல்லாத் தடைகளையும் அகற்றுவோம்" என மந்திர சுலோகம் போல ஐ.தே. முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா உரையாற்றியுள்ளார். தீர்வு என்ற கட்டத்திற்கு சமாதானப் பேச்சுக்கள் வளர்ந்து செல்லும்போது சிங்கள தேசத்தில் எழ இருக்கும் எதிர்ப்பலைகளை ஊகித்துவிட்டு பிரதமர் இவ வாறு தனது மனதைத் திறந்து கருத்துக் கூறியுள்ளார். எனினும் 'உறுதிப்பாடும் - விடாமுயற்சியும் - தெளிவான பாதையும்' அவசியம் என்றும் நம்பிக்கையுூட்டியுள்ளார். தனது நம்பிக்கைக்கு ஆதாரமாக பலஸ்தீனப் பிரச்சினையை உதாரணம் காட்டமுயன்றுள்ளார். "பத்து வருட காலத்திற்கும் மேலாக - சர்வதேசத்தின் ஆதரவுடன் மத்திய கிழக்கில் அமைதி முயற்சி நடைபெறுகின்றது. ஆயினும், அது வர வர மோசமான நிலையை அடைகின்றது. இருந்தாலும் அங்கே அமைதி முயற்சி இருந்தபடியேதான் உள்ளது" என்று பிரதமர் உதாரணம் காட்டியுள்ளார். படைபலம் என்பது அறவே அற்றநிலையில் பலஸ்தீன விடுதலை இயக்கம், பேச்சு-பேச்சு-பேச்சு என விரக்தியுற்ற நிலையில், வேறுவழிகளின்றிப் பேசிக்கொண்டே இருக்க முயல்வதற்கும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இங்கே புலிகள் இயக்கம் அரசியல் hPதியிலும்- இராணுவ hPதியிலும் பலமான அத்திவாரத்திலேயே உள்ளது. அமைதி வழியிலான அரசியல் தீர்வுக்கு சிறீலங்கா அரசு அனுசரணையாக இருக்கத் தவறும் பட்சத்தில் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். இதையேதான் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்ற மாவீரர் நாள் செய்தியிலும் முத்தாய்ப்பாகச் சொல்லியுள்ளார். "போர்ப்பாதையைவிட சமாதானத்திற்கான பாதை கடினமானது" என பிரதமர் கூறியுள்ளார். ஆனால், சமாதான வழிமுறைகளில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும்படி சிங்களவரும், தமிழரும் ஜனநாயக hPதியில் வழங்கியுள்ள மக்கள் ஆணை என்பது புதிய அரசாங்கத்தின் பிரதான பலமாகவுள்ளது. சர்வதேச ஆதரவும் பெருமளவில் அதற்குண்டு. புலிகள் இயக்கமும் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளது. இந்தநிலையில் சமாதானப் பாதை கடினமானது என்ற ஐயுறவு பிரதமருக்கு ஏற்படவேண்டிய அவசியமில்லை. பொறுமையும், சகிப்புத்தன்மையும், சமரசம் காணும் திறமையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் பிரத்தியேகப் பண்புகள் என அரசியல் ஆய்வாளர்கள் அவரை மதிப்பிடுகின்றனர். அதனால், சமாதான முயற்சி வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் என அரசியல் ஆரூடம் கூறவும் முனைகின்றனர். ஆனால், இந்த மனிதப் பண்புகளே- சில பிரத்தியேகமான புறச்சூழலில் அவரது பலவீனமாக மாறி நிலைமைகளைத் தலைகீழாக ஆக்கிவிடும் விபத்தும் நடக்கவாய்ப்புண்டு. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை வரலாற்றைப் பொறுத்தளவில் இத்தகைய முன்மதிப்பீடுகளும், அரசியல் ஆரூடங்களும் பொய்த்துப்போனதே முழுமையாக நடந்துள்ளது. தமிழருக்கு சமஸ்டி முறையில் அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என்று இலங்கைத்தீவு சுதந்திரத்தைப் பெறமுன்பே ஆணித்தரமாகக் கருத்துக்கூறிய எஸ்.டபிள்யுூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்களே சிங்கள-பௌத்த வெறிகொண்ட முதலாவது ஆட்சியாளராக இலங்கையில் இருந்தார். தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து சிங்கள நாடாளுமன்றில் "இரு மொழி ஒரு நாடு, ஒரு மொழி இரு நாடு" என தத்துவம் பேசி தமிழர்களது இதயத்தை வென்ற கொல்வின் ஆர்.டி. சில்வாவே 1972இல் அரசியல் அமைப்பு மாற்றத்தின் மூலம் தமிழருக்கு இருந்த ஒரு சிறு உரிமையையும் நீக்கி தமிழர்களை அடிமைகள் ஆக்கத் துணைபுரிந்தார். சமாதான தேவதை என்றும் வன்முறை அரசியலால் கணவனையும் தந்தையையும் இழந்த அபலைப்பெண் என்றும் - பல்லின உணர்வுகொண்ட ஜனநாயகவாதி என்றும் புகழப்பட்ட சந்திரிகா அம்மையார் மிகக்கொடூரமான சர்வாதிகாரியாகவும், கொலைகார ஆட்சியாளராகவும் மாறி மனிதாபிமானத்தையே காலில் போட்டு மிதித்து ஆட்சி புரிந்தார். இப்போது ரணில் விக்கிரமசிங்காவின் முறை வந்துள்ளது. ஆரம்பம் நம்பிக்கைதரும் விதத்திலேயே உள்ளது. ஆயினும், நம்பி ஏமாற தமிழ் மக்கள் இம்முறை தயாராக இல்லை. - sethu - 06-22-2003 சி றகுகள் முளைக்கும் வரை எந்தத் தாய்ப்பறவையும் தன் குஞ்சுகளைப் பறக்க அனுமதிப்பதுமில்லை. சிறகுகள் பலமடைந்த குஞ்சுகளைக் கூட்டிலேயே தங்கியிருக்க அனுமதிப்பதுமில்லை. இந்திய இராணுவக் காலத்தில் காட்டிலே தன்னோடிருந்த சொற்ப எண்ணிக்கையிலான பெண் போராளிகளை அப்போதே சண்டைகளுக்கு அனுப்பி இழப்புக்களை ஏற்படுத்த தலைவர் அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் பலத்தை அதிகரிப்பதிலேயே கவனமுடன் இருந்தார். இதைப் புரிந்துகொள்ளாமல், சண்டைக்குப்போகும் தம் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இவர்கள் ஒரு நாடகத்தைத் தலைவரின் முன் அரங்கேற்றியதைச் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோமல்லவா? சண்டையைப் போன்ற சண்டை நாடகம் முடிந்தது. சண்டைக்கான அழைப்பு வரலாம் என்று காத்திருந்தார்கள். ஆனால் அதற்கான அறிகுறிகளையே காணோம். தலைவர் தன் மனதுக்குள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று யாருக்குத் தெரியும்? ஒருவருக்கும் புரியவில்லை. திடீரென அழைப்பு வந்தது. எல்லோருக்கும் தலைகால் புரியாத சந்தோஸம். திட்டம் இதுதான். காலையில் காவலுலாப்போன இந்திய இராணுவ அணியொன்றை, அது திரும்பிவரும்போது இவர்கள் வழி மறித்துத் தாக்கவேண்டும். தாக்கிவிட்டால் போயிற்று! ஏற்கனவே காட்டுக்குள் சண்டைகளுக்குப் போய் வந்த ஆண் போராளிகள் இவர்களைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். ஓரிடத்தில் இவர்களை சூழலுக்கேற்ப உருமறைப்புடன் நிலைப்படுத்தி, இதுதான் எதிரிவரும் வழியெனத் திசையையும் காட்டி, ஓரிருவரை உயர்ந்தமரக் கொப்புகளில் ஏற்றி அவதானிப்புக்கென விட்டுலு} எல்லாம் தயார். இனி இந்திய இராணுவத்தைக் கண்டவுடன் முழங்க வேண்டியதுதான். காலையில் நிலையெடுத்தவர்கள் நீண்ட நேரமாகியும் தம் விழிகளில் கூர்மை குன்றாது உஸார் நிலையில் காத்திருந்தார்க்ள. இந்திய இராணுவ அணி வேறிடத்தில் நிலையெடுத்திருந்த ஆண் போராளிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் ஓசைகள் கேட்கத்தொடங்க, இவர்கள் தயாரானார்கள். ஆனால் இராணுவத்தினரின் எறிகணைகள் இவர்களை நெருங்கினவே தவிர, இராணுவம் நெருங்கவில்லை. இலவுகாத்த கிளி போலாயிற்று இவர்கள் நிலை. இவர்களின் ஏமாற்றத்தை அவதானித்த ஆண் போராளிகள் 'வாருங்கள்' என்று வேறு இடம் நோக்கிக்கூட்டிச்செல்ல, சண்டை பற்றிய கற்பனையோடும் உற்சாகத்தோடும் புறப்பட்டார்கள். வழிகாட்டிகளாக முன்னே போன ஆண்போராளிகள் மரங்கள், செடி, கொடிகளிடையே புகுந்து ஓட, இவர்களும் வேகமுடன் நகர்ந்தார்கள். கொஞ்சத்தூரம் போனதும் தெரிந்த சூழல் ஏற்கனவே எங்கோ பழக்கப்பட்டதுபோல் தோன்ற, உற்றுப்பார்த்தார்கள். ஆம், ஐயமில்லை. அவை தலைவரோடு இவர்கள் தங்கியிருந்த பாசறைக்கு அண்மையிலுள்ள, இவர்கள் ஏற்கனவே பலதடவை பார்த்துப் பழக்கப்பட்ட மரங்கள்தான். இந்திய இராணுவத்தை இடைமறித்துத் தாக்கும் நினைப்புடன் போனவர்கள் சற்றும் எதிர்பாராத வண்ணம் தமது பாசறைக்கே வந்துசேர்ந்தபோது அடைந்த மனவெப்பியாரத்தை வார்த்தைகளில் விபரிக்க இயலாது. கேலிப்புன்னகையை அணிந்த முகங்களோடு இவர்களை வரவேற்கவெனப் பாசறைகளிலுள்ள ஆண் போராளிகள் கூடிநின்றனர். 'சண்டை என்ன மாதிரி?' என்று உண்மையிலேயே சண்டை முடிந்து வருபவர்களிடம் விசாரிப்பது போன்று அக்கறையான குரலில், ஆனால் சிரித்த விழிகளுடன் அவர்கள் கேட்டது தம் காதுகளிலேயே விழவில்லை என்பது போன்ற முகபாவத்துடன் இவர்கள் தத்தம் குடில்களுக்குள் புகுந்துகொண்டார்கள். மறுநாள் காலை தன் குடிலைக் கடந்துபோன பெண் போராளியொருவரைக் கூப்பிட்ட தலைவர், 'என்ன மாதிரி? நேற்று எத்தனை 'ரவுணட்ஸ்' அடித்தீர்கள்?' 'மூன்று' மகசின் முடிந்துவிட்டது' என்று அவரின் பாணியிலேயே பதிலளித்தார் இவர். எல்லா விடயத்திலும் தங்களுக்குப் பக்க பலமாக, துணையாக இருக்கும் தலைவர் கூடத் தம்மை ஏமாற்றிவிட்டார் என்ற ஆதங்கம் எல்லோருக்கும். உண்மையில் அவர் ஏமாற்றவில்லை. தொடர் பயிற்சிகளில் இருந்த தங்களுக்கு அன்று நடந்தது கூட ஒரு மாதிரிப் பயிற்சிதான் என்பது புரிய சில காலம் எடுத்தது. கள நிலையைப் பரிச்சயப்படுத்துவதற்காகவே தாம் அன்று அனுப்பப்பட்டதை நாளடைவில் உணர்ந்ததும் அவர்கள் மறுபடி உற்சாகமாகிவிட்டார்கள். எண்ணிக்கையிலும் பலத்திலும் இவர்கள் வளர்ந்த பின்னர், இவர்களில்லாமல் சண்டையில்லை என்ற நிலையைத் தலைவர் உருவாக்கியதைப்பற்றி மறுபடியும் இங்கே சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. சிறகுகள் விரிந்தன தலைவரைத்தேடி இந்திய இராணுவம் செக் மேற் 1 நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நேரம் ஒருநாள் பெரும்பாலான ஆண்போராளிகள் வெளி நடவடிக்கைகளுக்குப் போய்விட்டார்கள். தலைவருடன் நின்ற நாலைந்து பேர் தவிர அன்று அந்தத்தளத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது பெண் போராளிகள் மட்டுமே. இவர்கள் கூட அதிகம் பேரில்லை. எனவே இவர்கள் எல்லோரும் வெளிப்புறக்காவலுக்கு வந்துவிட்டனர். வெளியே போயிருந்தவர்கள் எதிர்க்கப்பட்ட இந்திய இராணுவ அணி ஒன்றுடன் மோத சண்டையில் சிதறிய இராணுவ அணி எமது தளத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. இதைக் காவலில் நின்ற ஒரு பெண் போராளி கண்டுவிட்டார். அந்தக் காவல ரணில் அப்போது அவர் மட்டுமே தனித்து நின்றார். இப்போது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் அப்போது பெரியளவில் இருக்கவில்லை. எல்லாம் நேரடித் தொடர்புகள்தான். எதிரி நெருங்கிவிட்டான் என்று உள்ளே போய்ச் சொல்வதானால், இவருடைய இடம் வெற்றிடமாகிவிடும். உடனேயே அந்தப் போராளி இந்திய இராணுவத்தைச் சுடத் தொடங்கினார். காவலரணில் நின்று சுட்டார். உடனேயே சற்று விலகி நின்றுவிட்டார். ஓடிப்போய் இன்னோரிடத்தில் நின்று சுட்டார். ஆண் போராளிகளின் பெயர்களை சொல்லி, சுடு என்று கத்தியவாறு சுட்டார். நிலைகளை மாற்றியும் பெயர்களைக் கூப்பிட்டும் சுட்டு, நிறையப்பேர் நின்று சுடுவதுபோன்ற மாயையை ஏற்படுத்தினார். இந்திய இராணுவம் விலகிச் சென்றுவிட்டது. அபாயம் நீங்கியது. நிலைமைக்கேற்ப உடனடியாக முடிவெடுத்துச் செயலாற்றிய அவரின் திறமை தலைவரால் பாராட்டப்பட்டது. அவரோடு இராணுவத்தினர் சண்டையிட்டபோது கைவிட்டுச் சென்ற இராணுவப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுபோலவே செக்மேற் 1 இன்போது இன்னொரு நாள் காவலரணில் நின்ற பெண் போராளிகள் இந்திய இராணுவத் தேடுதல் அணி ஒன்றைக் கண்டுவிட்டார்கள். ஒருவர் உள்ளே ஓடிப்போய் நிலைமையைச் சொல்ல, அவர்கள் ஓடிப்போய் பன்றி சுடுவதற்காகப் பரணில் காத்துக்கொண்டிருந்த தலைவரைத் தடுத்து உள்ளே கூட்டிவந்துவிட்டார்கள். ஆனாலும் அவர்கள் அருகில் நிற்பது பெருத்த அபாயம் ஆயிற்றே. உடனடியாகத் திசை திருப்பியாக வேண்டும். உடனேயே நான்கு பெண் போராளிகளும் ஒரு ஆண் போராளியுமாக ஐவர் கொண்ட அணி ஒன்று புறப்பட்டது. எதிரியைத் திசை திருப்பி அனுப்பிவிட்டு வந்தது. 'அலேட்' மணி இயல்பாகவே காட்டிலே வாழ்கின்ற ஊர்வன, புூச்சிகள், விலங்குகள்போல இந்திய இராணுவமும், காட்டுக்குள் ஊரத்தொடங்கிவிட்டிருந்தது. இந்திய இராணுவத்தைக் காணாமல் நகருவதென்பது எங்களுக்குச் சாத்தியமற்றதாகிவிட்டிருந்தது. காட்டின் ஒரு குறிப்பிட்ட புள்ளிவரை தேடுதல் (ஊடுநுயுசுஐNபு) செய்யும் ஒரு அணி, அதே புள்ளியை நோக்கி வேறொரு திசையிலிருந்து வரும் இன்னொரு இராணுவத்தேடுதல் அணிக்குத் தாம் வந்து போனதைத் தெரியப்படுத்தும் விதமாக (PடுயுலுஐNபு ஊயுசுனுளு) சீட்டுக் கட்டிலுள்ள 'கிங்' (முஐNபு) அட்டையை மரமொன்றில் சொருகிவிட்டுச் செல்லும். அவர்களின் நடவடிக்கையின் பெயரும் 'செக்மேற்' தானே. நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ வொரு அடியையும் சற்று முன்னர் ஒரு இராணுவ அணி கடந்திருக்கும். இன்னொரு அணி நெருங்கிக்கொண்டிருக்கும். - sethu - 06-22-2003 க.வே.பாலகுமாரன் பாகம் இரண்டு வரலாற்றின் வலிய இரும்புக் கரங்கள் சிங்களத்தின் குரல்வளையை இறுகப் பற்றி நெரிப்பதை இப்போது நாம் காண்கின்றோம். முழிகள் பிதுங்க சிங்களம் ஒப்புதல் வாக்குமூலங்கள் அளிப்பதைப் பார்க்கின்றோம். இதனிடையே ஒருகுரல் மட்டுமே வேறுபட்டும் மாறுபட்டும் சுருதி பிசகியும் இடைவிட்டு ஒலிப்பதையும் கேட்கின்றோம். அக்குரல் பண்டா குடும்பத துக்குரல் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். சிங்களத்தையே நாசம் செய்யும் பண்டா குடும்பத்தின் பாவங்களை இக்கணத்தில் நினைத்துப்பார்க்கின்றோம். தந்தை தாய் மகள் என விரியும் பண்டா குடும்பத்து ஆட்சியிலே 'தந்தை' இனமானம் என்றால் என்ன என எமக்குரைக்க, தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தினை தாயோ முகிழ்க்கச் செய்ய, மகள் என்ன செய்தார்? என்ன செய்கின்றார்? 1996ம் ஆண்டு ஆனி மாதத்து விடுதலைப் புலிகள் ஏட்டிலே 'பண்டா குடும்பம் போல் உண்டா உலகில்' என எழுதப்பட்ட கட டுரையை மீளவும் புரட்டினோம். இப்போது 'பண்டாவின் குடும்பத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் சந்திரிகா அம்மையாருக்கு வரலாறு வழங்கப்போகும் தண்டனை எவ விதம் இருக்குமென எமக்கு தெரியாவிட்டாலும் அது உச்சத் தண்டனையாக அமையும் என்பதற்கான அறிகுறிகள் இப்போது மிகத் தெளிவாகத் தெரிகின்றன' என்கிற வரிகளை மீள் வாசிப்புச் செய்தோம். 1996ம் ஆண்டின் பின்னால் அவர் செய்த இமாலயத் தவறுகளுக்கான தண்டனைகளையும் சேர்த்தால்? அவை என்னவாக இருக்கும்? சிந்தித்தோம். அதேவேளை, பண்டா குடும்பத்தினரின் (சுனேத்திராவை விலக்கி) ஆளும் ஆசை அதாவது நாட்டை நாசம் செய்யும் ஆசை இப்போது அநுராவையும் விட்டபாடில்லை என்பதை அறியும்போது சிங்கள மக்களுக்காக ஒன்றல்ல இரண்டு சொட்டுக் கண்ணீர் உதிர்க்க நாம் தயாராகவுள்ளோம். உண்டுகொழுத்து உலகெல்லாம் அலைந்து எப்பதவி கிடைத்தாலும், அதை எவர் தந்தாலும் மகிழ்ந்து கிடைக்காவிட்டால் கண்ணீர் சிந்தி அழும் சிங்கள அரசியலின் உதவாக்கரை செல்லப்பிள்ளை அண்மையில் கூறிய கருத்துக்களிவை. 'எனக்குப் பிள்ளைகள் கிடையாது. எனது சகோதரி சுனேத்திராவிற்கும் பிள்ளைகள் கிடையாது. சிறிய சகோதரியின் பிள்ளைகளோ அரசியலிற்கு வரப்போவதில்லை. எனக்குப்பின் எவரும் சுதந்திரக்கட்சியின் தலைவராக வரமுடியும். அதற்கு இன்னொரு பத்தாண்டுகள் பொறுக்குமாறு கட்சி உறுப்பினர்களை வேண்டுகிறேன். அதுவரை தலைமைப் பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. 2006ம் ஆண்டில் சனாதிபதித் தேர்தலில் நானே போட்டியிடுவேன். கட்சி சென்ற தேர்தலில் தோற்றால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருவதாகக் கூறிய வாக்குறுதியை அக்கா நிறைவேற்றவில்லை' என அவரின் மன ஆதங்கம் நீள்கின்றது. உண்மையிலை அனுராவிற்கு நிலைமைகள் விளங்கவில்லையா? தமக்கையாரோடு தமது குடும்பக்கட்சிமுறை, முடிவிற்கு வருவதை அவர் உணரவில்லையா? அவரது அக்கா வகித்திருக்கவேண்டிய வரலாற்றுப் பாத்திரத்தை இப்போது ரணில் அச்சொட்டாக வகிப்பதை அவர் அறியாரா? இக்கட்டத்தில், சந்திரிகா வேடமேற்று நடித்திருக்க வேண்டிய பாத்திரம் பற்றி சுருக்கமாகக் கூறுவதன் மூலம் ரணில் நுழைந்திருக்கும் புதிய பாத்திரத்தின் தன்மையை எமது வாசகர்கள் உணரமுடியும். 20ம் நூற்றாண்டிற்குரிய பேரினவாதத்தினை கைவிடமுடியாததால் 21ம் நூற்றாண்டின் 'எல்லா எல்லைகளும் கடந்த' புதிய வேடத்தினை ஏற்று நடிக்க சந்திரிகாவால் முடியாமற்போனது. ஆனால் ரணிலின்போக்கு வேறுபட்டது. தனது முன்னோர் விட்ட தவறினை அவர் இம்முறை விடத் தயாராகவில்லை. சூழலின் சூழமைவை தன்னைச் சூழ்ந்துள்ள காரிருளை அவர் எவ வாறோ புரிந்ததால் சிங்களவரின் தலைவனாக இருப்பதைவிட, தமிழ் மக்களின் நேசனாக இருப்பதன் மூலமே தனது இலக்கினையும் உலகத்தின் இலக்கினையும் அடையும் பாதைகளில் தடையின்றி பயணிக்க முடியும் என அவர் நம்புகின்றார். அவரது இலக்கும் உலகின் இலக்கும் வேறுபடவில்லை. ஆனால், மெத்தப்படித்த பண்டாகுடும்பத்து மகளுக்கு இது புரியவில்லை. புரிந்தால் அதை ஏற்க அவர் சிங்கள மனம் விடவில்லை. இந்த இடத்தில் இக்கட்டுரையின் மையப்புள்ளியிலிருந்து நாம் சற்று விலகி இடைச் செருகல் என்கிற தவறினை செய்வதற்கு வாசகர் எம்மை பொறுக்க வேண்டும். உலகிலுள்ள எல்லா நாடுகளினதும் பொருண்மியங்கள் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் நிலையை அதிகரித்தல், சர்வதேச முதலீட்டுப் பொதித்திட்டங்கள், பொருட்கள், சேவைகள், தொழில்நுட்பங்கள் என்பவற்றிலுள்ள தடைகள், எல்லைகள் யாவற்றினையும் நீக்கி நாடுகளின் தேசிய சந்தைகளை ஒன்றிணைத்தலே இவ வுலகின்போக்கு. இதனையே உலகமயமாக்கல் என்கிறார்கள். (இவ விடத்தில் உலகமயமாக்கலின் தொடக்கநிலையே தாராளமயமாக்கல் என்பதையும் இதனை ஜே.ஆர். 1977 களில் தொடக்கினார் என்பதையும் வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்) இங்கு தேசிய சந்தைகளை ஒன்றிணைத்தலில் ஏற்படும் தடைகளில் சிங்களப் பேரினவாதம் முதன்மைத் தடை என்பதனையே ரணில் புரிந்துள்ளார் என்பதும் தமிழ் மக்கள் மீதான பொருண்மியத் தடை, பாதைத்தடை, உயிர்காக்கும் மருந்துப்பொருட்கள் தடை என நீளும் பல தடைநீக்கமும் உள்ளடங்கும் விதத்தினையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே சந்திரிகா தடைகளிட்டார், ரணில் நீக்குகிறார். தமது இலக்கினை பாழ்படுத்தியதற்காக சர்வதேசம் சந்திரிகாவிற்கு வழங்கிய தண்டனை அவரை முற்றிலுமாக புறக்கணித்து அவர் மீது இடும் அழுத்தம் என்றாகின்றது. இங்குள்ள முரண்நகை என்னவென்றால், சர்வதேசம் புலிகள் மேல் அழுத்தம் போடவேண்டும் என்கிறநோக்கும், அம்மையார் பயன்படுத்திய கதிர்காமரையே இப்போது சர்வதேசம் அம்மையார் மீது அழுத்தம் போட பயன்படுத்துவதும் விந்தைதான். இரண்டும்கெட்டான் நிலையிலுள்ள கதிர்காமரோ தலைவியின் தாளைப் பணிவதா மேற்குலகின் வெறுப்பை சம்பாதிப்பதா, தெரியாமல் திண்டாடுகின்றார். எது தன் அடிமைச் சேவகத்திற்கு உகந்ததோ அதை அவர் செய்வார். ஆனால், சீற்றத்தின் உச்சியிலும் இயலாமையின் பிடியிலும் சிக்கியிருக்கும் சந்திரிகா என்ன செய்வார்? நாட்டிற்குள் வரும் பிரதி அமைச்சர்மாரை சந்திப்பதுதான் சனாதிபதியின் வேலையா என தன் பேச்சாளரை விட்டு அறிக்கைவிடுவார். எந்தவொரு நாட்டிலும் இத்தகையதொரு பாரிய (அவ) மரியாதையை அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பகுதி உதவிச் செயலாளர் கிறிஸ்ரினா றொக்கா பெற்றிருக்க மாட்டார் என்பது திண்மை. இவர் சி.ஐ.ஏ.யிலும் 15 வருடங்கள் பணிபுரிந்தவராம். அம்மையாருக்கு உதவியோருக்கு கூட அவமதிப்பு சூழும் காலம் இக்காலம். திரும்பவும் பண்டாகுடும்ப அரசியலுக்குள் வருவோம். தென்னாசியாவில் பண்டா குடும்பம் போல் உண்டா? இந்தியாவின் நேருக்கள், பாக்கிஸ்தானின் புூட்டோக்கள், பங்களாதேசத்தின் ரகுமான்கள் இவர்கள் எல்லோருக்கும் இல்லாத பெருமை பண்டா குடும்பத்திற்கு உண்டு. ஒரு குடும்பத்திலேயே இரண்டு பிரதமர், ஒரு எதிர்க்கட்சித் தலைவர், ஒரு சனாதிபதி என எத்தனை பதவிகள்? ஒரு சனாதிபதியென்கிற எண்ணிக்கையை அதிகரிப்பதே அநுராவின் நோக்கம். ஆனால் தனக்குத் தரப்பட்ட வாக்குறுதியொன்றினை சகோதரியார் நிறைவேற்றவில்லையென குறைபடும் அநுராவிற்கு வாக்குறுதிகளைக் காப்பாற்றாது, விடுவதே பண்டாவின் குடும்பத்து பரம்பரைத் தொழில் என்பது தெரியாது போய்விட்டதா? அல்லது அதற்காக வழங்கப்பட்ட தண்டனைகளையும் அவர் மறந்துவிட்டாரா? ஆனால் நாம் மறக்கமுடியுமா? 1959ம் ஆண்டு செப்ரம்பர் 28ம் திகதி காலையில் அலரிமாளிகைக்குள் புகுந்த சோமராம தேரர் பண்டார நாயக்காவை நேருக்கு நேர் சுட்டதற்கு என்ன காரணம்? விகாரைக்குள் முடங்கிக் கிடந்த பிக்குகளை வீதிக்கு இறக்கித் தனது தலைமையில் பிக்குகள் முன்னணியை உருவாக்கி பதவிக்குவர தன்னைப் பயன்படுத்திய பின் தனக்கு தரப்பட்ட வாக்குறுதிகளை பண்டா நிறைவேற்றவில்லையென, புத்தரகித்தரதேரர் கொதித்ததே காரணம். சிறிமாவை பதவிக்கு கொண்டுவரப்பாடுபட்ட இளைய ஜே.வி.பி.யினர், பதவிக்கு வந்தபின் சிறிமா தமக்குத்தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையும் ஒரு காரணமாகக்கொண்டே 1971இல் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஜே.ஆர். தன் பங்கிற்கு தண்டனையாக பின்னர் சிறிமாவோவின் குடியியல் உரிமைகளைப் பறித்து இழிவுபடுத்தினார். எனவே இவர்களின் மகளுக்கு வரலாறு இனிவழங்கப்போகும் தண்டனை என்ன? இங்கே நாம் எழுப்பும் கேள்வி இதுதான். தந்தை, தாய் மகள் என இவர்கள் தமிழினத்தை ஏமாற்றிய துரோகத்தனத்திற்கு, அழிவிற்கு, குடிகெடுப்பிற்கு, நாசத்திற்கு எல்லாவற்றிற்கும் ஒட்டுமொத்தமான தண்டனையை பண்டா குடும்பத்தின் சார்பாக பெறப்போவது யார் என்பதே. அது சந்திரிகாவே என்பதே வரலாற்றின் தீர்ப்பு. ஏற்கனவே அம்மையாருக்கு தண்டனை வழங்கும் பணியை வரலாறு ஆரம்பித்துவிட்டது. தோல்விக்கு மேல் தோல்வி, அவமானத்திற்குமேல் அவமானம், அம்மையார் தீயிலிட்ட புழுப்போல துடிக்கின்றார். யாப்பில் அவருக்குள்ள அனைத்து அதிகாரங்களையும் அவர் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றார். அரசாங்கத்தின் தலைவராக நாட்டு நிருவாகத்தின் தலைவராக ஏன் முப்படைகளின் பிரதம தளகர்த்தராகக் கூட அவரால் செயற்பட முடியவில்லை. அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமைதாங்கப்போனால் கேலி செய்து எள்ளி நகையாடப்படுகின்றார். அவருக்கு அறிவிக்காமலேயே அமைதி பிரகடனப்படுத்தப்படுகின்றது. சனாதிபதி மாளிகையே கூண்டாக கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக அம்மையார் சிறகடிக்கின்றார். பண்டா குடும்பத்து பாவங்களுக்கெல்லாம் சேர்த்து மனவேதனையில் உழல்கின்றார். ரணிலுக்கு என்ன விளங்கும்? சிறீலங்காவின் பொருண்மியத்தை விலைக்கு வாங்கும் திறனும் புலிக்களுகுண்டு எனப் புலம்புகின்றார். அவரது பாதுகாப்பு வியுூகங்கள் உடைக்கப்படுகின்றன. அவரது துணைவர்கள் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். நிராயுத பாணியாக்கப்படுகின்றனர். மாமனைக்காப்பாற்ற முடியாத மருமகள் என்றாகிவிட்டார். அவரைச் சுற்றி வலை இறுக்கப்படுகின்றது. அவரது பாதுகாப்புப் பிரிவின் தலைவர் மீது மிகப் பாரதூரமான கொலை, சதிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இதற்குத் துணைபோனமைக்காக அவரது செயலரும், ஆயுதங்கள் வழங்க அனுமதி வழங்கியதற்காக அம்மையாருமே குற்றம் சாட்டப்படும் நிலை உருவாகின்றது. சட்டன ஏட்டின் ஆசிரியர் படுகொலை, மாமனிதர் குமாரின் அரசியல் படுகொலை இவற்றின் பின்னால் அவரிருந்தது ஊரறிந்த செய்தி. ஏயர் லங்கா, சனல் 9, ஈவான்ஸ், தவக்கால், துறைமுக இறங்குதுறையென அவரது ஊழல் பட்டியல் விசாரணைகள் வேகமாக தொடர்கின்றன. இவ வாறான பேரளவிலான ஆயத்தங்களோடு ரணில் அவர் மேல் இறக்கப்போகும் இறுதி இடி எத்தகையது? அவர் மீதான ஒழுக்கவழுவுரைப் பிரேரணைகளைக் கொணர்ந்து அவரைப் பதவி இறக்குவதா? அல்லது தான் ஆட்டுவிக்கும் போது ஆடும் பொம்மலாட்டப் பொம்மையாக அவரைக் கையாள்வதா? இது ரணிலின் முடிவிற்குரியது. இதில்கூட அம்மையார் சுயமாக முடிவெடுக்க முடியாத இக்கட்டான நிலையிலுள்ளார். அதனாலே அவர் ராவய விக்டர் ஐவன் எழுதியதுபோல 'சீறிப் படமெடுத்து புற்றைவிட்டு வெளியே வருவதும் வந்தவுடன் படத்தை மடக்கி புற்றுக்குள் போவதுமாக' இருக்கிறார். இவ வாறு அவர் படும்பாடு சொல்லுந்தரமன்று. இதனாலேயே வள்ளுவன் சொல்லிச் சென்றான். "ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ வுயிர் போம் அளவும் ஓர் நோய்" (செய்ய வேண்டியதை நல்லோர் சொன்னாலும் செய்யான் (ள்) தானும் அறிந்து செய்யான்(ள்) அவ்வுயிர் போகுமளவும் ஓர் நோய்) - sethu - 06-22-2003 விழி அசைவிலும், நடையிலும் ஒரு இயக்கத்தை கட்டுப்படுத்தி வைக்கக்கூடியவா தலைவர் பிரபாகரன் வழக்கறிஞர் அருள்மொழி தமிழீழத் தேசியத் தலைவரால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளா மாநாடு குறித்த ஒh திறனாய்வுக் கூட்டம் 13.04.2002 அன்று தமிழ்நாடு சென்னையில் நடைபெற்றது. தமிழ்முழக்கம் வெளியீட்டகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்கு திரு. பழ. நெடுமாறன் அவர்கள் தலைமை தாங்க பல தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்வில் வழக்கறிஞர் அருள் மொழி அவர்கள் ஆற்றிய உரையில் சில பகுதிகளை இங்கு தருகிறோம். எழுச்சியுரையாற்றவும் வரவில்லை, உணர்ச்சியுரையாற்றவும் வரவில்லை. கிளர்ச்சியுூட்டும், கோபமூட்டும் , எங்காவது தடுமாறி விழமாட்டாரா என்று எதிர்பார்த்து மாறி மாறி நிருபர்கள் கேட்டபோது விடுதலைப் புலிகள் தலைவா காட்டிய நிதானம், உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் காட்டிய அக்கறை, பழைய செய்திகளை கிளறுவதன் மூலம் புதியதாக ஏற்படவிருக்கும் தீர்விற்கு தடைபோட்டுவிடமுடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட கேள்விகளை அவர் நிராகரித்த அந்த நிதானம், அது இன்றைய தமிழர்களிற்கு தேவை என நான் கருதுகின்றேன். உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் இது முடிந்து விடாது, என்னுடைய கருத்தை ஒரு வழக்கறிஞராக நான் தமிழக முதல்வர் அவர்களிற்கு வைக்கிறேன். அதற்கு முன்பாக 'விடுதலை' இதழில் வெளியான தலையங்கத்தின் ஒரு பகுதியை மட்டும் நான் படிக்கிறேன். "உலகம் முழுவதிலும் இருந்து வந்த செய்தியாளா கள் உணர்ச்சியுூட்டும் கோபத்தை கிளறும் கேள்விகளை பல கோணங்களில் கேட்ட நிலையிலும், சற்றும் நிதானம் தவறாது அளந்து எடுத்த சொற்களில் கருத்தை வடித்துக் கொடுத்து விடுதலைப் புலிகளின் தலைவா}ன் முதிர்ச்சியை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிற்று" விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு இதில் மிகவும் குறிப்பிடும்படியான பெருமிதத்தை வெளிப்படுத்தியது. பிரச்ச}னைக்குரிய பழைய நிகழ்வுகளையும், கசப்பான அனுபவங்களையும் தோண்டித் தோண்டி கிளறிக் கிளறிச் செய்தியாளர்கள் கேட்டபோது, சுமூகமான ஒரு அமைதியான சூழல் உருவாகும் ஒரு பருவத்தில் அதற்கு இடையுூறு விளைவிக்கும் இவ வாறான கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று பிரபாகரன் தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டதானது தம் மக்கள் அனுபவித்து வரும் ஆழமான துன்பங்களிலிருந்து வெளியேறி அமைதியும், அர்த்தமும் சார்ந்த வாழ்வு பெறவேண்டும் என்பதில் இருந்த அக்கறையை வெளிப்படுத்தக் கூடியதாகும். கடந்த 30 ஆண்டுகளில், இலங்கைத்தீவின் நிலமையை ஒரு கணம் எண்ணிப்பார்த்தால் இருதரப்பு மக்களும் நிம்மதியான பொருளாதரம் செறிந்த நல்வாழ்க்கையை நடத்தினா என்று கூற முடியாது. அரசின் பொருளாதார வளம் முழுவதும் போரின் பக்கம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் அந்த நாட்டின் கதி என்னவாகி இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த சூழ்நிலையில் காலம் கடத்தாது இலங்கை அரசில் ஏற்பட்டுள்ள ஒரு நல்லெண்ணமும், அணுகுமுறையும், விடுதலைப் புலிகளின் 'மக்கள் நலன்' என்கின்ற உயர்ந்த எண்ணமும் இரு துருவங்களாக இருந்த நிலையை மாற்றியமைத்து ஒரு நெருக்கமான, ஒரு இணக்கமான இடத்திற்கு அழைத்து வந்துள்ளது என்றே கருத வேண்டும். வெண்ணை திரண்டு வந்திருக்கிறது தயவுசெய்து யாரும் தாளியை உடைக்க முயற்சிக்க வேண்டாம் என்பதே எமது அன்பு வேண்டுகோள். இந்த தாளியை உடைக்கும் முயற்சியில் சுப்பிரமணியசுவாமி ஈடுபடலாம். அவரிற்கு எந்தக் காலத்திலும் எந்தப்பொறுப்பும் இல்லை அவர் உலகம் முழுவதும் சுற்றிவரக்கூடிய ஒரு பொறுப்பற்ற மனிதர் அவர் வீசுகின்ற வாh த்தைகளிற்கு அர்த்தமும் இல்லை யாரும் அர்த்தத்தைக் கேட்டு அவர் பேச்சை கேட்பதும் இல்லை. ஆனால் தமிழகத்தின் முதல்வரிற்கு வாக்களித்த கோடிக்கணக்கான மக்களில் அந்த ஈழ மக்களின் வாழ்கையில் அமைதியை பெறவேண்டும் என விரும்புகிற மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த ஆபுசுஐ கதாநாயகனாகப பார்த்தார்களோ அப்படியே பிரபாகரனைப் பார்க்கிறவா களும் இருக்கிறார்கள். குற்றச்சாட்டுகள், ஒரு நீதிமன்றம் சொல்வதை இன்னொரு நீதிமன்றம் நிராகரிப்பதும் மாற்றியமைப்பதும் நிரந்தரத் தீர்வு அல்ல. உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் அது முடிந்த முடிவு அல்ல. அதற்குமேல் இல்லை என்பதைத் தவிர, இதற்கு இன்னொரு மேல்நீதிமன்றம் இருந்தால் இந்த தீர்வும் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் ஒரு வரலாற்றைப் பார்க்கிற பார்வையாக அது இருக்கக் கூடாது, புகழ்பெற்ற அரசியல் தலைவர்களுடைய வாழ்க்கை மரணத்தில் முடிவடையும்போது, கொல்லப்படும்போது, படுகொலைகள் நடக்கும்போது, முடிவுகள், பெரும்பாலும் தீர்ப்புகள் அறிவுவயப்படுவதைவிட உணா ச்சி வயப்பட்டுத்தான் வருகின்றன. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் கொல்லப்பட்டபோது யார் யார் நியாயமாக தண்டிக்கப்பட்டார்கள் என்பதை விட அழிக்க முடியாத கறையாக நின்றுவிட்டது கேகத் சிங் என்பவர் தூக்கிலிடப்பட்ட செய்தி. அவா எந்தக் குற்றமும் செய்யாத மனிதர். எந்த வகையிலும் அந்த சதிக்கு தொடர்பில்லாதவர், இந்திராகாந்தி இறந்த செய்தி வந்தபோது அவர் பணியாற்றிய அலுவலகத்தில் அந்த சேதி சொல்லப்பட்டது. அப்போது அவர் சொன்னராம் "இதை நான் எதிர்பார்த்தேன்" இதை சீக்கியரில் பாதிப்பேரிற்கு மேல் சொல்லியிருப்பார்கள் இதை நான் எதிர்பார்த்தேன் இது நடக்கும் என்பது எனக்குத் தெரியும் அத்துடன் இந்தப் படுகொலைக்கு சந்தேகிக்கப்படும் சிலர் அவரது வீட்டிற்கு வந்து போயிருக்கிறார்கள், அவர்கள் சார்ந்த சில கூட்டங்களிற்கும் அவர் போயிருக்கிறார். நமக்குத்தெரியும் இப்படிப பட்ட நிகழ்ச்சிகளில் தெரிந்தோ தெரியாமலோ பங்குபற்றுவர்களும் இருக்கிறார்கள் பங்கு பற்றாதவர்களும் இருக்கலாம், ஆனால் அந்த சதியில் அவரிற்கும் பங்கு என்று சொல்லி அதிகபட்ச தண்டனையான தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. டீநுNஐகுஐவு ழுகு னுழுருவுளு என்ற சொல் இருக்கிறதே, சந்தேகத்தின் பலன் கூட அந்த மனிதரிற்கு கொடுக்கப்படவில்லை, ஆனால் அவரின் மரணத்திற்கு பிறகு அந்தச்சேதி அதிகமாக பேசப்பட்டது. பிரபாகரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, ம}கக் கொடுமையான குற்றம் அந்த குற்றத்திற்கு வாதிட நான் வரவில்லை, அவரை வரலாறு விடுதலை செய்யும். ஆனால் தமிழக முதல்வர் அவர்களிற்கு நான் சில கோரிக்கைகளை வைக்கிறேன். சற்று நிதானமாக, நீங்கள் படித்த பெண்மணி உலக வரலாற்றை ஒரு நொடிப்பொழுதில் படிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர். போராட்டங்களையும், எதிர்ப்புக்களையும் வாழ்க்கையில் சந்தித்தவர் என்கிற நம்பிக்கையுடன் சொல்லுகின்றேன் இந்த நாட்டில் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் நீதிமன்றங்களிற்கும், சட்டங்களிற்கும் ஒரு நடைமுறை உண்டு அதை சந்தித்தவர் நீங்கள். வாழ்நாள் முழுவதும் ஒரு உயர்ந்த பகுத்தறிவு வாழக் கை வாழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் தரக்குறைவான மிகக் கேவலமான முறையில் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டதும், குற்றச்சாட்டில் அவர் இந்த தமிழ்நாட்டு சிறப்பு நீதிமன்றத்திலே குற்றவாளியாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதும் பின்னாளில் உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டாலும் கூட அவமானத்திலே மனம் நொந்து தனது இறுதிக் காலத்தை கழிக்க வேண்டி வந்ததும் உங்களிற்குத் தெரியும். எனவே தீர்ப்புகளும் அந்த கோட்டுகள் வழங்குகின்ற தண்டனைகளும் மட்டுமே ஒரு மனிதனைக் குற்றவாளி என்று சொல்வதற்கு முடிந்த முடிவு அல்ல. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் செய்திகள் மூலம் நாம் அறிந்துகொண்டது. இன்னொன்று, அப்படி பிரபாகரன் ஒரு குற்றவாளி என்றால், பிரபாகரனை தவிர்த்துவிட்டு இந்த பிரச்ச}னையைப் பாருங்கள், ஒருவேளை பிரபாகரனிற்கு பதிலாக அன்ரன் பாலசிங்கம் மட்டுமே பத திரிகை மாநாட்டை நடாத்தியிருந்தால் உங்களை இவ வளவு கோபப்படுத்தி இராதோ? ஒரு குற்றவாளியாக பார்க்கும் பிரபாகரன் நின்றதனால்தானோ உங்களிற்கு கோபம் வந்ததா? அவரை விடுத்து பாலசிங்கம் என்கிற நோயாளி இந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடாத்தியிருந்தால் இந்தபார்வையில் மாற்றம் இருக்குமா என சிந்தித்துப் பாருங்கள் இந்த பிரச்ச}னை என்பது என்ன, இருவர் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பா? அவர் சரியாக தயாரிக்கவில்லை, பிரபாகரன் யோசித்தார், பிரபாகரன் பக்கத்திலுள்ள பாலசிங்கத்துடன் பேசினார் ஐடுடு PசுநுPயுசுனுஇ Nழு ர்ழுஆநு றுழுசுமு என வுர்நு ர்ஐNனுரு பத்திh}கையுடைய விமர்சனம். அந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டது. இதுவா உண்மை? பிரபாகரன் என்ன மேடைப்பேச்சாளரா? சண்டப்பிரசங்கம் செய்பவரா? நாளுக்கொரு அறைகூவல் விடுபவரா? பத்திரிகையாளர் சந்திப்புகளிற்காக தயார்படுத்துவரா? அவர் விழி அசைவிலும் நடக்கிற நடையிலும் ஒரு இயக்கத்தை கட்டுப்படுத்தி வைக்கக்கூடியவா . பேசுகிற பேச்சு உரத்து எழுந்துவிட்டால் அந்த ஓசை எம்மை காட்டிக் கொடுத்துவிடும், மெதுவாக பேச வேண்டிய பறவைகளோடும், அந்த இலைகளின் அசைவுகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு மன}தன் முதன் முறையாக 400 பேரிற்கு முன்னால் எந்த சொல்லை சொன்னாலும் தப்பாகிப் போய்விடுமோ என்கிற யோசனையும், அச்சத்தோடு அல்ல யோசனையோடுலு} எந்தவொரு சொல்லிலும் நிதானத்தோடும் "சொல்லுக சொல்லை" என்று வள்ளுவன் சொன்னானே, அதனை வெல்லும் சொல் இன்னொன்று இல்லை என்பதை அறிந்துலு} ஒவ வொரு சொல்லிற்கும் பின்னால் இருக்கும் பொருள் என்ன? அது சொல்லாத சேதிகள் அதிகம். ஆங்கிலத்தில் சுநயனiபெ டிநவறநநn வாந டiநௌ என்பாh கள் வரிகளைப் படிக்காத்h கள், வரிகளிற்கு இடையிலுள்ள மௌனத்தைப் படியுங்கள், பேசப்படாத சொற்களைப் பாருங்கள். எதை நோக்கி இந்தப் பயணம் தொடர்கிறது 30 ஆண்டுகளாக கண்ணை இமைக்க முடியாமல், ஒரு துளி நேரம் கூட தூங்க முடியாமல், இந்த இடத்திலிருந்து புறப்பட்டால், ஒரு கல்தொலைவில் நடந்து போவோமா என்ற நம்பிக்கை இல்லாமல், சாமான்கள் வாங்க கடைக்குப் போனால் ஒன்றில் கடைக்காரன் செத்துப் போவான் அல்லது கடைக்குப் போனவர் செத்துப்போயிருப்பார் என்ற அளவிற்கு சாவு என்பது மரணம் என்பது அன்றாட வாழ்க்கையின் பகுதியாக மாறிவிட்ட ஒரு சமூகம், இன்று தான் விடிவை நோக்கி ஏதோவொரு தீர்வு அமைந்துவிடாதா என்கிற எண்ணத்தில் ஏக்கத்துடன் உலக நாடுகளிலிருந்து தமிழர்கள் எல்லாம் தமது தாய்மண் நோக்கிப் புறப்பட்டுவிட்ட இந்த நேரத்தில் இதற்கான ஆதரவுக் குரல் கொடுத்தால் அதையே நசுக்குவோம் என்று சொல்வது எந்த வகையிலும் அறமுகமாகாது, அரசியலுமாகாது, அரசியல் ஞானமுமாகாது. இந்த அடக்குமுறைகள் தமிழ்நாட்டிற்கு புதியவையல்ல, நுஆநுசுபுநுNஊலு காலத்தில் கலைஞர் அவர்களிற்கு கார் ஓட்டியவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டதை வரலாறாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். பேசிக்கொண்டுதான் இருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஒரு அரசில் தலைவர் பதவியை இழந்து விட்டால் அவரை பார்ப்பதற்கு ஒரு மரியாதைக்குக்கூட பார்க்கப் போகமுடியாத ஒரு ஜனநாயகம்தான் இந்த நாட்டின் ஜனநாயகம். அவர் பார்த்தால் அவர் பதவிபோய்விடும் அல்லது அவர் ராமநாதபுரம் போய்விடுவார். இதுதான் இதுவரை நாம் பார்க்கும் அரசியல் நாகாPகம். எனவே ஒவ வொருவரிற்கும் இந்த அனுபவம் உண்டு. இந்த எச்சரிக்கைகளாலும், மிரட்டல்களாலும் ஒரு சமூகத்தின் நியாயமான குரலை தன்னுடைய இனம் ஒரு விடிவை நோக்கி போகிறது என்பதை உற்சாகத்தில் நிமிர்ந்து பார்க்கும் அந்த குரல்வளையை நசுக்கி விடலாம் என ந}னைப்பதில் எந்தவகையிலும் அறிவுடமையாகாது. எனவே இந்த இடத்தில் இந்த வரலாற்று நெருக்கடியில் தமிழ இனம் ஒரு மலர்ச்சியை நோக்குகிறது. அந்த மலர்ச்சியில் உங்கள் பங்களிப்பை கொடுங்கள். வாஜ பாய் சொல்லுகிறார் "நாங்கள் பரிசீலிக்கிறோம், அன்ரன் பாலசிங்கம் சிகிச்சை அளிப்பதற்கு பரிசீலிக்கிறோம்" என்று. இந்த நாட்டிற்கு தலாய்லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததிற்காக சீனாவுடன் போர் நடாத்திய வரலாறு உண்டு, இது அடைக்கலம் கொடுக்கிற நாடு. அவர்கள் எல்லாம் பார்க்கும் ராமன் சொன்னாரோ என்னவோ, அந்த ராமனைப்பாட வந்த கம்பன் சொன்னான். இராமன் சொன்னதாக கம்பன் சொன்னான் "உடைந்தவர்க்கு உதவானாயின் உள்ளதொன்று ஈயானாயின் அடைந்தவர்க்கு அருளானாயின் அறமென்னாம் ஆண்மையென்னாம்" எனவே அறமும் தெரியும் அரசியலும் தெரியும் இந்த மிரட்டல்கள் வேண்டாம். ஒரு தாயாகவும், ஒரு பெண்ணாகவும் நானும்கூட கோபமாகத்தான் பேசவேண்டுமென்று நினைத்தேன். ஒருவேளை என்னைக் கைது செய்துகொண்டு போய்விட்டால் என் 9வயது மகள் என்ன ஆவாளோ என்கிற அச்சம். இந்த 5கோடி மக்களிற்கு தாயாக உங்களைப் பார்க்கிறோம். அந்தப் பொறுப்போடு சிந்தியுங்கள் பொறுப்போடு செயற்படுங்கள். - sethu - 06-22-2003 கரும்புலிகள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் உணர்வின் ஆழத்திலிருந்து பிறருக்காக தன்னை அர்ப்பணிக்கத்தூண்டும் ஊக்குவிசை எது? உலகில் இன்று பலரின் உணர்வுகளை குடைந்தெடுக்கும் வினாக்கள் இவை. இங்கே ஒரு கரும்புலி வீராங்கனை எழுதுகிறாள். அவள}ன் ஒருநாள் களவாழ்வின் கதை இது. படித்துப்பாருங்கள் தன் உணர்வுகளின் மென்மையை அவள் உங்களுக்குப் புரியவைப்பாள். அன்று 16.06.1997 நெடுங்கேணியில் ஒரு தேடியழித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். எமது பொறுப்பாளருடனும் வழிகாட்டியுடனும் வரைபடம், திசைகாட்டிகள் சகிதம் நகர்ந்துகொண்டிருந்தோம். திடீரென எதிரி எங்கள் மீது தாக்குதலைத் தொடுத்தான். கடும் சண்டை நாங்கள் எதிர்பார்க்காதபடி மூண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் எதுவும் செய்யமுடியாதபடி எமது அணியினர் இழப்புகளுடன் பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். எல்லோரும் பின்வாங்கிவிட்ட பின்னர் நானும் ஒரு அண்ணனும் மட்டும் எதிரிக்குள் சிக்கிக்கொண்டோம். எதிரி தாக்கியபடியே இருந்தான். எங்களை நோக்கி மேலும் மேலும் முன்னேறி வந்துகொண்டிருந்தான். நாங்கள் பாதுகாப்பான முறையில் அவதானமாக பின்வாங்கிக்கொண்டிருந்தோம். அப்போது அந்த அண்ணனின் தொடையில் எதிரியின் ரவைபட்டு கால்முறிந்து இரத்தம் ஓடியது. சற்றுநேரத்திலேயே இடதுகையையும் ரவையொன்று பிய்த்துவிட்டது. இந்நிலையில் ஒரு காப்பில (ஊழஎநச) நின்று இருவரும் சண்டைபிடித்தோம். அதைவிட்டால் அங்கு நிலையெடுப்பதற்கு வேறு பாதுகாப்பு இல்லை. எமது அணியினரும் எம்மை மீட்பதற்காய் விடாது முயன்றுகொண்டே இருந்தனர். அவர்களுக்கு அது கடினமாகவே இருந்தது. எனினும் தொடர்ந்து போரிட்டனர். எமக்கும் எதிரிக்கும் இடையே வெறும் 7 மீற்றர் இடைவெளிதான் இருக்கும்போல் இருந்தது. ஒன்றும் செய்யமுடியாதநிலை. என்னோடு காயப்பட்டுக்கிடந்த அண்ணன் 'குப்பி' கடிக்க முயன்றபோது நான் பறித்துவிட்டேன். எதிரி எம்மைக் கையில் பிடிக்கும் அளவிற்கு நெருங்கிவிட்டான். "நான் குப்பிகடிக்கப்போறன் நீ ஓடித்தப்பு" அந்த அண்ணன் மெதுவாகக் கத்தினான். நான் ஓட மறுத்துவிட்டேன். திடீரென அந்த அண்ணன் கூறினார். "குப்பிகடித்து அவன் தப்பவைத்துவிட்டால்லு}" சற்று மௌனமானவன் பிறகு தன்னை சுட்டுவிட்டு ஓடுமாறு தனது ரி-81-1 ஐ என்னிடம் தந்தான். அதில் எம் இருவருக்கும் சுடுவதற்காக இறுதிவரை வைத்திருந்த ஐந்து ரவைகள் மட்டுமே இருந்தன. எதிரி கிட்ட நெருங்கி எம்மை பிடித்துவிடப்போகிறானென்ற உணர்வு மேலும் மேலும் உந்தியது. திரும்பிநின்று என்னை நெஞ்சில சுட்டுப்போட்டு "நீ ஓடு!" அண்ணன் கத்தினான் நான் என்ன செய்ய? ஓட முடியாத நிலையிலிருந்த அந்த சகோதரனை நான் எதிரியிடம் பிடிபடவிடுவதா? எனது கையாலேயே அவரை சாகடிப்பதா? விசைவில்லில் விரலை வைத்தேன். சுடவில்லை. நான் அவரைச் சுடவே இல்லை. விக்கிவிக்கி அழ ஆரம்பித்துவிட்டேன். என்னை நான் சுடும் துணிவு என்னிடம் இருந்தது. அந்தப் போராளியைச் சுடும் துணிவு எனக்கு வரவே இல்லை. சிந்தித்தேன், அந்த அண்ணனை சுட்டுவிட்டு நான் தப்பிப்போவது சரியா? துவக்கை மண்ணில் குத்திவைத்துவிட்டு அண்ணனுடன் இருந்து அவரை 'குறோலில்' இழுத்து வர முயன்றேன். என்னால் முடியவில்லை. அண்ணனோ தன்னைச் சுட்டுவிட்டு ஓடும்படி என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தான். எதுவும் செய்யமுடியாது தோற்றுப்போய் இருவரும் குப்பியை வாயில் வைத்துக்கொண்டு இறுதி நம்பிக்கைக்காய் காத்திருந்தோம். சுமார் பதினைந்து நிமிடங்கள் இருக்கும் துர்க்கா அக்காவிடமிருந்து வந்த அணியினர் என்னையும், குருதிவழிந்து உயிருக்காய் போராடிக்கொண்டிருந்த அண்ணனையும் காப்பாற்றினர். மறுநாள் நயினாமடுவில் சுற்றிவளைத்து தாக்குதல் நடைபெற்றது. இரண்டு நாள் உணவோ தண்ணீரோ இல்லை. மறுநாள் இரவு சண்டை ஓய்ந்தது. சாப்பாடு வந்தது. கைகழுவக்கூட தண்ணி இல்லாது இரத்தக்கையால புட்டை பிடித்துப்பிடித்து தின்றோம். இவற்றையெல்லாம் என்னால மறக்கவும் முடியவில்லை. அப்படியே எழுதவும் முடியவில்லை. இதை எழுதிவிட்டுப் போனவள் கரும்புலி மேஜர் மீனா 25.12.1999 அன்று ஆனையிறவு படைத்தளத்துள் எதிரியின் ஆட்டிலறி தளங்களைத் தகர்ப்பதற்காக எம்மைப்பிரிந்து போனவள் இன்னும் இருதோழர்களுடன் வராமலே போய்விட்டாள். அவளது குறிப்பேட்டில் இன்னும் எழுதியிருக்கிறாள். - sethu - 06-22-2003 13.04.2002 அன்று, விடுதலைப் புலிகளின் அழைப்பை ஏற்று வன்னி சென்று, தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்தார் அமைச்சரும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ராவுூப் கார்கீம் அவர்கள். மூன்று மணிநேரமாக தேசியத் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினார் ராவுூப் கார்கீம் அவர்கள். தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான பிரச்சினை இருதரப்பும் இணைந்து பேசித்தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை. இதற்குள் மூன்றாம் தரப்பு தலையிடுவதானது, நிலைமையை மேலும் குழப்பி, இதனை தமது நலன்களுக்கு தீனியாக்கும் நோக்கம் கொண்டதாகும். தேசியத் தலைவரும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நடத்திய இப்பேச்சுவார்த்தை, இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றிற்கு வழிவகுத்தது. முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய நடைமுறைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதத்தில் தேசியத் தலைவர் அவர்கள் சில உத்தரவாதங்களை வழங்கினார். முஸ்லீம் தலைவர்கள் இச்சந்திப்புக் குறித்தும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்தும், தமது மகிழ்சியை வெளியிட்டிருக்கின்றனர். முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினைக்கும் தமிழீழத் தேசியத் தலைவரிடம் தீர்வை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை முஸ்லீம் மக்களிடத்தே இது உருவாக்கியுள்ளது. -------------------------------------------------------------------------------- இணையும் கைகள். 14.04.2002 அன்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களும், மலையக மக்கள் முன்னணித் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் அவர்களும் வன்னி சென்று தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்தனர். இரண்டு மலையகத் தலைவர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்றபோதும், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராடத்திற்கு அதரவு வழங்குபவர்கள். இதில், பெ. சந்திரசேகரன் அவர்கள், விடுதலைப் புலிகளுக்கு மலையகத்தில் உதவி ஒத்தாசை புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டவர். தற்போதைய சமாதான சூழ்நிலையில், இச்சந்திப்புக்கள் எளிதாய் அமைந்திருக்கின்றன. மலையகத்தில் உள்ள அரசியல் தலைமைகள் பிளவுபடாமல் ஒரேசக்தியாக இணைந்து இந்த மக்களின் உரிமைக்காகப் போராடவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட தேசியத் தலைவர் அவர்கள், மலையகத் தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராக இருப்பதாக உறுதி தெரிவித்தார். இலங்கைத்தீவில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இணைந்து செயற்படுவது குறித்து அங்கு ஆராயப்பட்டது. -------------------------------------------------------------------------------- ஒரே தலைமையின் கீழ் பலம் பெறும் தேசியம். 12.04.2002 அன்று, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே எனவும், விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி, தமிழர் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் எனவும், தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் என்றும் தமது பொது நிலைப்பாட்டை வலியுறுத்தி மக்கள் மத்தியில் தேர்தலுக்குநின்று அமோக வெற்றியைப் பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியத் தலைவர் அவர்களைச், சந்தித்து தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதுடன் மேற்கொண்டு தாம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் தேசியத் தலைவரின் கருத்தறிந்துகொண்டனர். ஒரே தலைமையின்கீழ், ஒரே இலட்சியத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் ஒன்றிணைந்து, தேசியத் தலைமையின் வழிகாட்டலில் செயற்படுவதென தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் இணக்கம் தெரிவித்தனர். -------------------------------------------------------------------------------- தமிழீழத் தேசியத் தலைவர் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு. விதார் கெல்கேசன் அவர்கள் 17. 04.2002 அன்று வன்னி சென்று, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களும் கைச்சாத்திட்ட வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலுக்குவந்து இரு மாதங்களை நெருங்கிய நிலையில், இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சமாதான முயற்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து ஆராய்வதே இச்சந்திப்பின் நோக்கமாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளை நடைமுறைப்படுத்துவதில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழர் மத்தியில் தொடர்ந்து சந்தேகங்களை உண்டுபண்ணும் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவருவது அடுத்த கட்ட சமாதான முயற்சிக்கு இடையுூறாக இருக்கும் என்பது விடுதலைப் புலிகளின் கருத்தாக இருக்கின்றது. இந்தச் சந்திப்பில், தேசியத் தலைவர் அவர்கள் இதனை தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். கட்டம் கட்டமாக முன்னேற்றம் காணப்படவேண்டியிருக்கும் இச்சமாதான முயற்சியில், முதல்கட்டமாக ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பல விடயங்களை நிறைவேற்றிக்கொள்ளாமல், அதற்கொரு உறுதியான தீர்வை முன்வைக்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பது, அத்திவாரத்தை சரியாக இட்டுக்கொள்ளாமல் கட்டடம்கட்ட அவசரப்படுவதற்கு ஒப்பானது என்பது விடுதலைப் புலிகளின் நியாயமான நிலைப்பாடு. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல விடயங்கள், உரிய காலத்தில் நிறைவேற்றப் படவில்லை என்பதை தலைவர் அவர்கள் இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார். மீன்பிடித்தடை முற்றாக நீக்கப்படவில்லை என்பதையும், பொதுமக்களின் போக்குவரத்திற்கு இருக்கக்கூடிய தடைகள் முற்றாக நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய தலைவர் அவர்கள், பொதுமக்களின் வீடுகள், வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகள், பொது இடங்களில் இருந்து இராணுவம் வெளியேறவில்லை என்பதையும், இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை வழமைக்குத்திரும்புவதில் தடங்கல்கள் தாமதங்கள் ஏற்பட்டிருப்பதையும் தலைவர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார். யுூன் மாதம் நடுப்பகுதியில், தாய்லாந்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நேரடிப்பேச்சுவார்த்தைக்கு முன்னராக, புரிந்துணர்வு ஒப்பந்த விதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதும், அதேவேளை, நேரடிப்பேச்சுவார்த்தைக்கு முன்னராக விடுதலைப் புலிகள் மீதான தடையை சிறீலங்கா அரசு நீக்கவேண்டும் என்பதும் தேசியத் தலைவர் அவர்களால் வலியுறுத்தப்பட்டது. 17.04.2002 அன்று வன்னியில் நடைபெற்ற இச்சந்திப்பில், திரு. விதார் கெல்கேசன் அவர்களுடன், சமாதான சிறப்புத் தூதுவர் திரு. எரிக் சுல்கைம், இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் திரு. ஜோன் வெஸ்பேர்க், நோர்வே வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் உடனிருந்தனர். தமிழீழத் தேசியத் தலைவருடன், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன், திருமதி. அடேல் பாலசிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர். சரியான திசையில் எதிர்பார்த்ததைவிட வேகமாக சமாதான முயற்சிகள் செல்வதாக நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு. விதார் கெல்கேசன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குறிப்பிடும்படியாய், இருதரப்பு நகர்வுகளும் சமாதாந்தரமாக ஆரோக்கியமானவகையில் சரியான திசையில் பயணப்படுவதாகவே கருதப்படுகின்றது. எனினும், சில தாமதங்கள் தடங்கல்கள் சிறீலங்கா தரப்பில் இருப்பது உணரப்படுகின்றது. - sethu - 06-22-2003 தாயகம் - தேசியம் - தன்னாட்சி நிரந்தரத் தீர்விற்கான அடிப்படைகள் தேசியத் தலைவர் பிரபாகரன் தெரிவிப்பு கிளிநொச்சியில் 10.04.2002 அன்று நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தெரிவித்திருந்தார். 700ற்கும் மேற்பட்ட செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர் அவர்கள் சுமார் இரண்டரை மணிநேரம் செய்தியாளர் மாநாட்டை நடாத்தியிருந்தார். அங்கே பலதரப்பட்ட கேள்விகளுக்கும் அவர் விரிவான பதில்களை வழங்கியிருந்தார். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதான முயற்சிகள் பற்றியும் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடுகள் பற்றியும் ஊடகவியலாளர்கள் தொடுத்த வினாக்களுக்கு விடையளித்தார். இச் செய்தியாளர் மாநாட்டில் தலைவர் பிரபாகரனுடன், அரசியல் ஆலோசகர்திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களும், அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களும், மட்டு-அம்பாறை தளபதி கேணல் கருணா அவர்களும், திருகோணமலைத் தளபதி கேணல் பதுமன் அவர்களும், திருமதி அடேல். பாலசிங்கம் அவர்களும் உடனிருந்தனர். செவ வியின் முக்கிய அம்சங்களை கீழே தொகுத்தளித்துள்ளோம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சமாதான முயற்சிகளில் புலிகள் இயக்கத்தின் நேர்மை மற்றும் உண்மைத்தன்மை பற்றிக் கேட்டபோது தலைவர் பிரபாகரன் கூறினார் "நாங்கள் உண்மையாகவும், நேர்மையுடனுமே சமாதான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். நாங்கள் ஒரு உண்மையான சமாதானத்தை விரும்புகின்றோம். ஆரம்பத்தில், ஒருதலைப்பட்சமாக நான்கு மாதங்களாக நாம்தான் போர்ஓய்வைக் கடைப்பிடித்திருந்தோம், அது மட்டுமல்லாது சமாதான சூழலை உருவாக்குவதற்காக தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம்" இலங்கையிலிருந்து அதிகதொலைவிலுள்ள நோர்வே நாட்டை பேச்சு அனுசரணையாளராக தேர்ந்தெடுக்க எவை காரணம் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது தலைவர் பிரபாகரன் சொன்னார் "அரசியல் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் நோர்வே பிரபல்யம் பெற்றுள்ளது. பல நாடுகளில் மக்கள் இனங்களுக்கு இடையேயான பிணக்குகளை தீர்த்துவைக்கும் முயற்சிகளில் நோர்வே ஈடுபட்டு வருகின்றது, நோர்வேயின் அனுசரணையை முதலில் சிறீலங்கா அரசே கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது, நோர்வே ஒரு நடுநிலையான நாடு. இந்தப் பிராந்தியத்தில் அதற்கென எந்தவொரு மூலோபாயநலனும் இல்லை. இந்தவகையில் சிறீலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்குவதற்குப் பொருத்தமான நாடு நோர்வே என்று நாமும் கருதியதால் அதை அனுசரணையாளராக எமது இயக்கமும் ஏற்றுக் கொண்டது" அமெரிக்க நகரங்களை தாக்கிய தற்கொலை விமானத்தாக்குதல் நடந்த ' செப்டெம்பர்-11' சம்பவத்தின் விளைவாக எழுந்த உலக அரசியற் சூழலே புலிகள் இயக்கத்தை சமாதானப்பாதைக்கு இழுத்துவந்தது என்று கூறப்படுவதுபற்றி தலைவரிடம் ஒரு செய்தியாளர் கேட்டபோது அவர் சொன்னார். "அவ வாறு இல்லைலு} அந்த சம்பவம் நடக்க நாலுமாதங்கள் முன்னரே நாம் ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்திக் கடைப்பிடித்திருந்தோம், அதுமட்டுமல்ல, நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்கெய்ம் வன்னி வந்து எம்மைச் சந்தித்திருந்தார். அவரிடம் நாங்கள் சமாதானத்தை விரும்புகின்றோம் என்றும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் கூறியிருந்தோம், எனவே செப்-11 சம்பவத்தின் விளைவாகவே நாம் சமாதானப் பாதைக்கு வந்தோம் என்று கூறுவது தவறு" என்று தலைவர் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார். அப்படியானால், புலிகள் இயக்கம், சமாதான வழிமுறையை நாடியதற்கு என்ன காரணம் என்று செய தியாளர் கேள்வி எழுப்பிய போது தலைவர் கூறினார்லு} " எமது மக்களின் அரசியல் போராட்டம், முதலில் சாத்வீக வழியிலேயே ஆரம்பமானது, முன்னைய தமிழர் தலைமைகள் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எமது மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என நம்பினர், ஆனால், அவர்களது அகிம்சைப் போராட்டத்தை சிங்கள அரசு ஆயுதபலம் கொண்டு நசுக்கியபோது, ஆயுதங்களைக் கையிலெடுத்த நாம் எம்மைத் தற்காத்துக் கொள்ளப் போராடினோம். எனவே, புறச்சூழலின் நிர்ப்பந்தத்தால்தான் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம், எனினும் சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம், தமிழரின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சிங்கள அரசுடன் நாங்கள் பேச்சுவர்த்தைகளை நடாத்திவருகின்றோம்" இந்தச் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டியதன் நோக்கமென்ன என்று கேட்டபோது தலைவர் சொன்னார்லு} "புலிகள் இயக்கம் அமைதி முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறான தப்பபிப்பிராயங்கள் பரப்பப் பட்டுவருகின்றன. ஆகவே, சர்வதேச ஊடகவியலாளர்களை இங்கு வரவழைத்து சமாதான முயற்சிகள் தொடர்பான எமது இயக்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்கூறி, சமாதானவழியில் அரசியல் தீர்வுகாணும் உறுதிப்பாட்டுடன் புலிகள் இயக்கம் உள்ளது என்பதையும் அதற்காக நேர்மையுடனும், உண்மையுடனும் நாம் செயற்பட்டு வருகின்றோம் என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறுவதே இந்தச்செய்தியாளர் மாநாட்டின் நோக்கமாகும்" என்று பதிலளித்தார். முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போலவே இப்போது நடைபெறும் சமாதான முயற்சியும் தோல்விகாணுமா! அல்லது வெற்றிகரமாகத் தொடருமா! என்று கேட்டதற்கு தலைவர் பிரபாகரன் கூறினார்லு} " முன்னைய பேச்சுவார்த்தைகளை விட இது முற்றிலும் வேறுபட்டது, ஏனெனில், இங்கே மூன்றாம்தரப்பு அனுசரணையாளராக நோர்வே செயற்படுகின்றது, எனவே, இம்முறை பேச்சுவார்த்தைகள் நல்லமுறையில் நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்குண்டு" அப்படியாயின், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு சமஸ்டி முறைபோன்று அரசியல் வடிவத்தை ஒரு நிரந்தரத்தீர்வாக ஏற்றுக் கொள்வீர்களா எனக்கேட டபோது தலைவர் பிரபாகரன் சொன்னார்லு} "அதற்கான ஒரு அவசியம் ஏற்படவில்லை, தனிநாட்டுக்கோரிக்கையானது தமிழ்மக்களால் முன்வைக்கப்பட்ட ஒரு அரசியல் ஆணையாகும். 1977ம் ஆண்டு நடத்த பொதுத்தேர்தலில் தமிழீழத் தனிஅரசை அமைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் வாக்களித்து மக்களாணையை வழங்கியிருந்தனர். அந்த மக்களாணை மனுவை ஏற்றுக்கொண்ட நாம் எமது மக்களின் அரசியல் சுதந்திரத்திற்காகவும் தனி அரசிற்காகவும் போராடிவருகின்றோம். தாயகம், தேசியம், தன்னாட்சி என்பன தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் அபிலாசைகளாகும், இந்த முப்பெரும் அரசியல் ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஓர் அரசியல்தீர்வு முன்வைக்கப்படுமானால், அதை எமது மக்களும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தனி அரசுக்கோரிக்கையை மறுபரிசீலனை செய்வதுபற்றி நாம் பரிசீலிப்போம்" ஈழத்தைத் தவிர மற்றைய விடயங்கள் பற்றிப்பேச தான் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறுயுள்ளார், இப்படியான நிலைப்பாட்டுடனேயே தாய்லாந்து செல்ல உள்ளீர்களா? என்று கேட்டபோது தலைவர் சொன்னாh லு}. "இப்போதைக்கு ஒருமுடிவும் எடுக்கப்படவில்லை, முடிவான தீர்வுகளும் எட்டப்படவில்லை இடைக்கால நிருவாகத்தை நடாத்துவது தொடர்பாகப் பேசத்தான் நாம் தாய லாந்து செல்ல முடிவெடுத்துள்ளோம்" இடைக்கால நிருவாக அலகு பற்றிக் கேட்டபோது "தாய்லாந்தில் நடைபெறவுள்ள பேச்சுக்களின் போதுதான் அதற்குரிய அதிகாரங்கள் பற்றிப் பேசி முடிவெடுக்கவுள்ளோம். எனவே, இடைக்கால அரசு எப்படி இருக்கும் எவ வாறு செயற்படும் என்று இப்போதைக்கு எதுவும் கூறமுடியாது" சமாதான முயற்சிகளின் முன்னேற்றம்பற்றித் திருப்திப்படுகின்றீர்களா? என்று கேட்டதற்கு தலைவர் சொன்னார்.. "ஆம், நான் திருப்திப்படுகின்றேன். அத்துடன், சமாதானப் பாதையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் துணிச்சலான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்" ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் சமாதான முயற்சிகளைக் குழப்பமுனைவாரா? என்று கேட்தற்கு "நாங்கள் அப்படி நினைக்கவில்லை" என்று பதிலளித்த தலைவர் அவர்கள் "அவ விதம் அவர் முயற்சிப்பாரேயானால் அதைக் கையாளவேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினுடையதாகும்" என்றார். தமிழர் தாயகம் -தேசியம் -தன்னாட்சி என்பவற்றை ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்வைக்குமா? என்று கேட்டதற்கு தலைவர் பிரபாகரன் கூறினார்லு} "இத்தகையதொரு நிரந்தரத் தீர்வை முன்வைக்கும் அரசியல் அதிகாரம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திடம் இப்போதைய நிலையில் இல்லையென்று நாங்கள் கருதுவதாலேயே ஒரு இடைக்கால நிருவாகத்தை சிபார்சு செய்துள்ளோம். இந்த இடைக்கால நிருவாகத்தால் வடக்கு கிழக்கு அபிவிருத்தி அடையும். அதுபோல தென்இலங்கையை பொருளாதார hPதியாக அபிவிருத்திசெய்ய ரணில் விக்கிரமசிங்கவால் முடியும். எனவே, தமிழரைப் போலஇடைக்கால நிருவாக நடைமுறையால் சிங்களவரும் நன்மைபெறுவர், இதேசமயம், இந்த இடைக்கால நிருவாத்தால் தேவையான நேரத்தையும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பெற்றுக்கொள்ளும். அதன்பிறகு நிரந்தரத்தீர்வு பற்றி அவரது அரசாங்கத்துடன் நாங்கள் பேசமுடியும்" புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய அரசு விலக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது தலைவர் சொன்னார்லு} "அதை நாங்கள் விரும்புகின்றோம் தகுந்த நேரம் வரும்போது எமது இயக்கம் மீதான தடையைநீக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்வோம்". ராஜீவ காந்தியின் கொலைபற்றிக் கேட்டபோது பத்துவருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு துன்பியலான சம்பவம் அதுவாகும் மேலும், இதைப்பற்றிக் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பவில்லை" என்று தலைவர் பதில்கூறினார். புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என உலகின் சிலநாடுகள் பிரகடனப்படுத்தியிருப்பது பற்றிக் கேட்டபோது "சில நாடுகள் அவ விதம் செய்திருப்பது உண்மைதான். சிங்கள அரசின் சதித்தனமான பரப்புரை காரணமாக சில நாடுகள் எமது இயக்கத்தை தடைசெய்துள்ளன. எனவேதான், பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படமுன்னர் எமது இயக்கம் மீது சிறீலங்கா அரசு விதித்த தடையை அது அகற்றவேண்டும் என்று நாம் சிறீலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளோம். எமது இயக்கம் மீதான தடையை சிங்கள அரசு நீக்கும்போது எமது இயக்கத்தை தடைசெய்த ஏனைய நாடுகளும் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கும்படி நாம் பிரச்சாரம் செய்வோம்" என்று தலைவர் பிரபாகரன் பதில் கூறினார். செம்மணி. கோணேஸ்வரி போன்ற வழக்குகளை பேச்சுவார்த்தைக்காக விட்டுக்கொடுக்கவிரும்புவீர்களா! என்று கேட்டபோது தலைவர் சொன்னார். "இந்தப் படுகொலை கள் பற்றிய வழக்குகள் தொடர்ந்து நடக்கவேண்டும். இந்த மனிதப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதியின்முன் நிறுத்தப்படவேண்டும்" சிறீலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ}ளைஞர்களது விடுதலைக்காக புலிகள் இயக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றிக்கேட்டபோது "தமிழ்இளைஞர்களது விடுதலை பற்றி நாம் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வருகின்றோம் இவர்களில் பெரும்பாலானோர் புலிச்சந்தேகநபர் என்றுகூறி பயங்கரவாததடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் கொடும் சட்டம் நீக்கப்படவேண்டும் என்று சிறீலங்கா அரசை பேச்சுவார்த்தைகளின்போது கோரப்போகின்றோம். இதேவேளை, இவர்களது விடுதலை தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்களைக் கோரியுள்ளோம்" என்று தலைவர் பிரபாகரன் பதிலளித்தார். - sethu - 06-22-2003 சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... கல்வியறிவின்மை, தொழிலின்மை, தன்கையில் பொருளாதாரப் பலமின்மை இவற்றோடு இவற்றால் ஏற்படும் தன்னம்பிக்கையின்மை என்பன ஒரு பெண் ஆணில் தங்கி வாழ்வதற்கான பிரதானமான காரணங்களாக அமைகின்றன. தன்னையும் பிறக்கப்போகும் தன்பிள்ளைகளையும் பேணிப்பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் தன்தங்கி வாழ்தலை ஆரம்பிக்கும் பெண் தன்கனவுகள் பொய்த்து குடும்பம் சீரழியும் நிலையை அடையும் போதும்கூட அத்தங்கிவாழ்தலிருந்து மீள முடியாமல் போவதுதான் மிகக்கொடுமை. சில பெண்கள் அதற்கும் மேலே போய் பொறுப்பற்றிருக்கும் கணவனின் சுமையையும் சேர்த்து இளம்பிள்ளைகளின் கைகயில் கொடுப்பதும் இன்று சமூகத்தில் மலிந்து போய்க்காணப்படும் ஒரு விடயமாகிவிட்டது. 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்' என்ற சொற்பதம் வழக்கொழிந்துதான் போய்விட்டது. எனினும் வெறும் கல்லாகவும் பதா புல்லாகவும் இருப்பவா களையெல்லாம் கணவன் என்று தொழுது நிற்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம்தான் இல்லை. கல்வியறிவின்மை, தொழிலின்மை, தன்கையில் பொருளாதாரப் பலமின்மை இவற்றோடு இவற்றால் ஏற்படும் தன்னம்பிக்கையின்மை என்பன ஒரு பெண் ஆணில் தங்கி வாழ்வதற்கான பிரதானமான காரணங்களாக அமைகின்றன. தன்னையும் பிறக்கப்போகும் தன்பிள்ளைகளையும் பேணிப்பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் தன்தங்கி வாழ்தலை ஆரம்பிக்கும் பெண் தன்கனவுகள் பொய்த்து குடும்பம் சீரழியும் நிலையை அடையும் போதும்கூட அத்தங்கிவாழ்தலிலிருந்து மீள முடியாமல் போவதுதான் மிகக்கொடுமை. சில பெண்கள் அதற்கும் மேலே போய் பொறுப்பற்றிருக்கும் கணவனின் சுமையையும் சேர்த்து இளம்பிள்ளைகளின் கைகயில் கொடுப்பதும் இன்று சமூகத்தில் மலிந்து போய்க்காணப்படும் ஒரு விடயமாகிவிட்டது. கல்வியறிவும், பொருளாதாரப்பலமும் இன்மையால் வாழ்வதற்கான தன்னம்பிக்கையற்று பெரும்பாலான பெண்களிருக்க கல்வியறிவும், பொருளாதாரப் பலமுமிக்க பெண்களும் வாழ்வதற்கான தன்னம்பிக்கையை இழப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது அடிப்படையிலேயே பெண்ணுடைய மனதில் 'நான் பெற்றோரிலும் சகோதரர்களிலும் பின்னர் கணவனிலும் சார்ந்து வாழவேண்டியவள்' எனும் எண்ணக்கரு ஊட்டப்படுதல் காரணமாகவே ஏற்படுகிறது. பெண்களின் கருத்தமைவில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலமே இந்நிலைமையை மாற்றியமைப்பது சாத்தியமாகும். இளம் பெண்களின் மத்தியில் கருத்து மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாளைய சந்ததியை சிறந்த தன்னம்பிக்கை மிக்க சந்ததியாக உருவாக்க வேண்டும். ஏனெனில், ஒரு தாயே குடும்பத்தில் சகலதுமாகிறாள். அப்பெண்ணின் முன்னைய கர்ப பசரிதைகள் 'பாரப்பெண்' என நிமிர்ந்து பார்க்கவைத்தது. 33 வயது தோற்றமோ, நாற்பதைத் தாண்டி நின்றது. ஏழாவது கர்ப்பம். ஏழ்மையும் ஏழ்மையினால் அதிகரித்துக் காணப்பட்ட முதுமையும் முகத்தில் கோலமிட்டன. பரிசோதனை முடிவுகளோ ஆபத்தின் அறிகுறிகளாக இருந்தன. உயர்குருதியமுக்கம், கணுக்கால்களில் அதிகவீக்கம், சலத்தில் புரதவெளியேற்றம், மங்கிய கண் பார்வை என அவற்றின் தாக்கம் அதிகளவில் இருந்தது. உடனடியாக அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியத்தை மருத்துவ மாதுக்கள் உணர்ந்தனர். "அம்மா! உடனை ஆஸ்பத்திரிக்குப் போங்கோ" என்று அம்மாவை அவசரப்படுத்தினர். "இல்லைப் பிள்ளை. நான் போய் ஆஸ்பத்திரியிலை இருக்க ஏலாது" என்ற அத்தாயின் பதில் அனைவரிற்கும் அதிர்ச்சியாக இருந்தது. "அம்மா உங்களுக்கு என்னென்ன பிரச்சினை இருக்கென்றும் அதாலை முன்சூல்வலி என்ற நோய் வர இருக்கென்றும் வடிவா விளக்கமாகச் சொல்லிப்போட்டம். உடனை நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்" "எனக்குப் பிள்ளைகளைப் பார்க்க ஆளில்லை. எனக்குப் போக ஏலாது" என்ற அத்தாயின் நிலை மனதை வருத்தினாலும் அவர்கள் விடவில்லை. "அம்மா, உங்கடை அவரோடை விட்டிட்டுப் போங்கோ" என வழிகாட்ட முனைந்தனர். "அவர் பார்க்க மாட்டாருங்கோ. அவர் ஒரே குடி. இப்ப இரத்தமாகவும் போகுது. உழைப்புமில்லை. என்னை ஓரிடமும் போக அவர் விடமாட்டார்" "உங்கடை மகள் பார்ப்பாதானே. விட்டுட்டுப்போங்கோ" என்று கூறியபோதும் பதின்நான்கு வயதுச் சிறுமி பிள்ளைகளைப் பார்ப்பாளா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. எனினும் அச்சந்தேகத்தைத் தகர்த்தது அத்தாயின் பதில். "அவதான் விறகுகட்டிக் கொண்டுவந்து குடுத்து உழைக்கிறவா" தீர்க்க முடியாத பல சிக்கல்களை அத்தாய் பதிலாகத் தருவதை உணர்ந்தும், "அம்மா, உங்கடை பிள்ளையளை நீங்கள் ஆஸ்பத்திரியாலை வரும்வரைக்கும் பராமரிக்க நாங்கள் ஒழுங்கு பண்ணுறம் நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போங்கோ" எனும் பெரும் உதவியைச் செய்ய மருத்துவ மாதுக்கள் முன்வந்தனர். "இல்லையுங்கோ, அவர் விடார். சொந்தக்காரர் வீட்டை போகவே விடமாட்டார்" என்ற பதில் முகந்தெரியாத அக்கணவன் மீது கோபத்தை ஏற்படுத்தியபோதும் அப்பெண்ணின் நிலைக்கு இரங்கி "அப்ப நீங்கள் என்னம்மா செய்யப்போறீங்கள்?" என்ற கேள்விக்கு, "அது எனக்கு ஒன்றும் நடக்காதுங்கோ. கடவுள்விடார்" எனும் அறியாமை மிக்க பதிலைச் சொல்லி சலிப்புடன் வாயை மூடவைத்த பெண்ணின் நிலை என்ன? பொறப்பற்று, பிஞ்சு மகளை உழைப்பிற்கனுப்பி, குடித்து, கௌரவம் என்ற பெயரில் தன் சுயநலத்திற்காய் மனைவி பிள்ளைகளை அடிமையாய் வைத்திருக்கும் அக்கணவனை இனங்காணத் தெரியாத, சுயமாய் முன்னின்று உழைத்துக குடும்பத்தைச் சீரழிவிலிருந்து காக்கத் தெரியாத அப்பெண் தன் மகளுக்குக் கற்றுக் கொடுக்கப் போவது எதனை? பதின்நான்கு வயதில் விறகு சுமக்கும் அச்சிறுமி அச்சுமையிலிருந்து விடுபடவென பதினாறு வயதில் திருமணம் செய்து, தான பெறப்போகும் மகளுக்கும் இதையேதான் கற்றுக்கொடுக்கப் போகிறாள். சங்கிலித் தொடராய் சந்ததிகளுக்குக் கடத்தப்படும் இவ வெழுதா மரபை எங்கே? யார்? முறித்தெழுதப் போகிறார்கள்? தான் தனது சொந்த மச்சானையே மணந்ததையும், அவனது அடி, உதை தாங்காமல் மூன்றாம் மாதமே புூநகரியிலிருந்து கால்நடையாய் புதுக்குடியிருப்பு வந்ததையும் கதைகதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள் அவ விளம்பெண். பசியோட தான் நடந்து வந்த கதையை அவள் கூறக்கேட்டு நான் "பாவம் வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்டுவிட்டாள். இனித்திருமணமே செய்து கொள்ளமாட்டாள்" என மனதுள் எண்ணிக் கொண்டேன். இதன்பின்னர் இரண்டு மாதங்களே சென்றிருக்கக்கூடும். ஒரு நாள் நள்ளிரவில் அப்பெண் ஒருவனோடு வீட்டைவிட்டு வெளியேறியிருந்தாள். கையில் பச்சைக் குழந்தையுடனும், அருகில் இரண்டு வயதுக் குழந்தையுடனும் கண்ணில் நீருடனும் வந்திருந்த பெண் அவனின் மனைவியென அறிந்து நான் திகைத்துப் போயிருந்தேன். வீடுவீடாக "அவரைக் கண்டனீங்களோ" என வெட்கமும் துக்கமும் அலைமோத அப்பெண் கேட்டுத்திரிந்தாள். குழந்தைகளையும் தன்னையும் நட்டாற்றில் விட்டுப்போனவனை உதறித்தள்ளித் துணிந்து வாழும் மனப்பலமில்லாது வீடு வீடாகத் திரியும் இப்பெண் ஒருபுறம், நன்கறிந்த ஒருவனே பொய்த்துப் போனபின்பும் அண்மையிலே அறிமுகமான, குடும்பஸ்தன் என நன்கறியப்பட்ட ஒருவனோடு வெளியேறி தன் தங்கிவாழ்தலுக்குத் துணை தேடிக்கொண்ட பெண் ஒருபுறம், பெண்ணெனப்படுபவளின் வாழ்க்கை திருமணத்தில் முடியவேண்டும், திருமண வாழ்க்கையிலும் ஆணே பற்றுக்கோலாக இருக்க வேண்டும், ஆணின்றி வாழ்க்கை இல்லை எனக் காலங்காலமாய் ஊறிப்போன உணர்வுகளுடன் அழுந்தி, அழிந்து கொண்டிருக்கும் பெண்களை வெளிக்கொணர்வது எப்படி? அறிவும், அழகும் ஒருங்கே பெற்ற பெண் ஒரு சிறந்த ஆசிரியை, பல்கலைக்கழக அனுமதி பெற்றும் அவர் செல்லாததற்குக் காரணம் காதல். ஏற்கனவே திருமணமாகிய, பல பெண்களுடன் தொடர்புடையவன் என்று பலரால் கூறப்பட்ட ஒருவனைத் திருத்தி வாழவைப்பேன், வாழுவேன் என்ற நம்பிக்கையுடன் கோலாகலத் திருமணத்துடன் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சில வாரங்களின் முன் தனது திருமணப்படங்களைக் காட்டிச் சென்ற அப்பெண் தற்கொலை செய்துகொண்டார் எனும் செய்தி என்னைத் திகைக்க வைத்தது. பல வருடங்களாகக் காதலித்து இப்படிப்பட்டவன்தான் என்று அறியப்பட்ட ஒருவனைத் திருத்தி வாழலாம் என்ற நம்பிக்கையைக் கைவிட்டமை ஒருபுறமிருக்க, தகுதியற்ற ஒருவனைத் தன்வாழ்வின் மையமாகக் கொண்டு, அந்த மையம் திசை மாறியமைக்காகத் தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் அறிவு எங்கே சென்றுவிட்டது? திருமணமென்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதைவ}டவும் கல்வி, தொழில், இலட்சியங்கள் வாழ்க்கையாக அமையலாம் என்றும் அப்பெண்ணுக்கு அறிவுூட்டத்தவறியது கல்விமுறைமையின் குற்றமா? சமூகத்தின் குற்றமா? கல்வியறிவு, தொழில், பொருளாதாரம் அனைத்துமிருந்தும் வாழ்வதற்கான நம்பிக்கை இப்பெண்ணிற்கு ஏன் இல்லாமற் போனது? இளம் சந்ததியினரை வழிகாட்டும் தலையாய பணியைச் செய்யும் ஒரு ஆசிரியை தன் மாணவர்களுக்கு விட்டுச்சென்ற செய்தி அவர்களை எவ வாறு வழிநடத்தப் போகின்றது? நாட்டின் குடிமகன் ஒருவனை உருவாக்குவதில் பெரும்பங்குவகிக்கும் ஆசிரியர்கள் இதையிட்டுச் சிந்தித்தால் என்ன? கு. தீபா - sethu - 06-22-2003 புூகம்பத்தில் கட்டப்படும் புத்தம்புது மாளிகை தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகள் நம்பிக்கை தரும் வகையில் நடந்தேறி வருகின்றன. சமாதான வழியில் அரசியல் தீர்வுகாணும் திடசிந்தையுடன் தலைவர் பிரபாகரனும் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேர்மையுடனும், நிதானத்துடனும் செயலாற றி வருகின்றனர். இந்தச் செயலுறுதி காரணமாக இவர்கள் உலகத்தலைவர்களின் பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றுவருகின்றனர். எனினும், இலங்கை அரசியலில் உச்ச அதிகாரத்தை தன்வசம் கொண்டுள்ள சனாதிபதி சந்திரிகா அம்மையார் இந்த சமாதான முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பையும் ஒத்துழையாமையும் வெளிப்படையாகக்காட்டி வருகின றார். இராணுவவழியில் தமிழரின் இனப்பிரச்சினையைத் தீர்க்க மக்களாணைகேட்டு கடந்த நாடாளுமன்றத்தோ தலில் பரப்புரை செய்த அம்மையாரின் கட்சியை நிராகரித்த மக்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கட்சிக்கு சமாதான ஆணை வழங்கிய பின்னரும் மூட அம்மையார் தனது போர்வெற்றியைத் தணித்தபாடில்லை. முப்படைத்தளபதிப் பதவியையும் அனைத்து விவகாரங்களிலும் நிறைவேற்று அதிகாரத்தையும் உடைய சனாதிபதி ஒருவர் தனது ஆட்சிவரம்பின் கீழ நடைபெற்று வரும் சமாதான முயற்சிகளுக்கு எதிராக கருத்துக்கூறுவது சாதாரண விடயமல்ல. அவர் கூறித்திரிவது போல, அவர் நினைத்தால் ஒரு நொடியில் அமைதி முயற்சியை தலைகீழாகப் புரட்டிப் போடக்கூடிய அதிகாரபலம் அவரிடமுண்டு. இந்த உச்ச அதிகாரத்தை சனாதிபதிப்பதவிக்கு ஒதுக்கியவரும் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய சனாதிபதியாகப் பதவி வகித்த Nஐ. ஆர் nஐயவர்த்தனா அவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திச்செய த ஐனநாயக விரோத நடவடிக்கைகள் ஏராளம், தனது அரசியல் எதிராளிகளை அநாகரிகமான வழிவகையில் பழிவாங்க தனது உச்ச அதிகாரங்களை அவர் பயன்படுத்தியது உலகறிந்த செய்திகள், இதே பதவிகொடுத்த அதிகார பலத்தைப் பயன்படுத்தி 60ஆயிரம் சிங்கள மக்களை பிரேமதாச இலகுவாகக் கொன்றொழித்தார். கடந்த ஏழுவருட காலத்தில் தமிழ் மக்கள் மீது ஒரு இனஅழிப்புப்போரைத் தொடர்ச்சியாக நடாத தி தமிழரின் வரலாற்றில் இரத்தம் தோய்ந்த ஒரு அத்தியாயத்தைப் படைக்க சனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு இதே அதிகாரம் உறுதுணையாக இருந்தது. இப்போது, அதே உச்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி உருவாகிவரும் சமாதான சூழலை அம்மையார் கெடுக்கக்கூடிய ஆபத்தும் உள்ளதை மறக்க முடியாது. சமாதானத்திற்கான போர் என்ற போர்வையில் அம்மையார் முன்னர் நடாத்திய இனஅழிப்புப் போருக்கு தமிழ் மக்களின் பக்கபலத்துடன், புலிகள் இயக்கம் தக்க பதிலடி கொடுத்திருந்தது. ஆரம்பத்தில், அம்மையாரின் சதிச்சித்தாந்தத்தால் ஏமாற்றப்பட்ட சர்வதேச சமூகம் அவரது போர்முயற்சிகளுக்கு ஆதரவளித்தது. பின்னர், அம்மையாரின் சுயரூபம் வெளிப்படத்தொடங்கியபோது அவரைக் கைவிட்டொதுங்க அவை முயல்கின்றன. முன்னர், அவரை சமாதான தேவதை என்றும் பல்லினத்தலைவி என்றும் புகழாரம் சூடிய உலக நாடுகள் இப்போது, அம்மையாரை தீண்டத்தகாதவர்போல பார்க்க முற்படுவதும் சுவையானதொரு காலமுரண் சமாதான முயற்சிகளுக்கு எதிரான அம்மையாரின் சொல்லும் செயலும் உலக சமூகத்தால் சினத்துடன் நோக்கப்படுகினறன. நாட்டின் அதிஉயர் தலைவியான அவரை இப்போது எந்தவொரு நாடும் அரச விருந்தினராக அழைப்பதைத் தவிh த்து வருகின்றன. அதேவேளை, கிடைத்த சந்தர்ப்பங்களிலிருந்தும் அம்மையார் தானாகவே விலகிவருகின்றார். உலகத்தலைவர்களால் ஒதுக்கப்பட்டு தனிமைப்பட்டு வரும் ஒரு நாட்டின் தலைவியாக சந்திரிகா அம்மையாரின் நிலை மாறிவருகின்றது. உள்நாட்டில் மக்கள் செல்வாக்கை இழந்தாலும் சர்வதேச அளவில் கீர்த்தியிழந்தநிலை எழுந்தாலும் அம மையாரின் அதிகாரமமதை -கா வம் இன்னும் குறைவடையவில்லை. அண்மையில் அமெரிக்காவிலிருந்து சமாதானப்பயணம் மேற்கொண்ட தென்னாசிய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா றொக்காவைச் சந்திக்க மறுத்து அமெரிக்க அரசை உதாசீனம் செய்து அவமானப்படுத்தியுள்ளார். ஆணவத்திமிருடன் அவர் எதையும் செய்யத்தயங்கமாட்டார் என பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். எதையும் சாதிக்கக்கூடிய அதிகாரத்தையும் எதையும் செய்யக்கூடிய குணவியல்பையும் கொண்ட சனாதிபதி சந்திரிகா அம்மையாரின் அங்கிகாரமும் -ஆதரவும் இல்லாமல் ஒரு சமாதான முயற்சி இலங்கைத்தீவில் அரங்கேற்றப்பட்டு வருவது ஒருபுதுமையான விடயம்தான். இருந்தாலும், புூகம்பத்தின்மேல் கட்டப்பட்டுவரும் புத்தம்புது மாளிகைபோல இலங்கையின் சமாதான முயற்சிகள் அமைந்துவிடுமோ! என்ற பேரச்சம் நிலவவே செய்கின்றது. - sethu - 06-22-2003 நாம் இங்கு பிரஸ்தாபிக்கப் போகின்ற விடயம் . புதிய அரசால் தளர்த்தப்பட்டிருக்கும் பொருட்கள் மீதான தடையினால் எம்மக்கள் மத்தியில் புூரண பயன்பாட்டை ஏற்படுத்திவிட முடியுமா? அத்தோடு கிடைக்கப்பெறும் பொருட்களை எமது பகுதிகளிலேயே நுகரவும், கொள்வனவு செய்யவும் தகுந்த வசதி வாய்ப்புக்கள் உண்டா? அன்றி பொருட்களை எமது பிரதேசங்களில் பயன்படுத்தக்கூடிய ஏதுவானதொரு நிலமை உள்ளதா? இதுவே எம்முன் எழுந்துள்ள கேள்விகளாகும். 'புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கு தடைநீக்கப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி' 'இதுவரையில் அமுல்ப்படுத்தப்பட்டு வந்த பொருளாதாரத்தடையானது தளர்த்தப்பட்டது. இனி தமிழர் வாழ்வில் விமோசனம் உண்டாகும்' 'வன்னிப் பகுதிக கு ஒரு லொறியில் சீமெந்து அனுப்பி வைப்பு' 'தடைநீக்கப்படாத பொருட்களில் பற்றரிகளும், முட்கம்பிகளும், போர்ப்பயன்பாடுடைய பொருட்களும் அடங்கும். சீமெந்து, கட்டிடப் பொருட்களும் மட்டுப்படுத்தப்பட்டஅளவிலேயே கொண்டு செல்ல அனுமதி' இவையெல்லாம் இன்று வெளியுூர், உள்@ர் சர்வதேச ஊடகங்களினதும், பத்திரிகைகளினதும் முக்கியமான தலைப்புச் செய்திகளாகவும் பல்இன மக்களால் பிரஸ்தாபிக்கப்படுகின்ற முக்கியமானதொரு விடயமாகவும் நோக்கப்படுகின்றது. கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் மூர்ச்சையாகி நின்ற மக்கள் நிம்மதியானதொரு விடிவைத்தேடி நின்றனர். இலங்கையின் ஒவ வொரு காலகட்ட அரசியல் தலைமை மாற்றங்களின் போதும் அவர்களது எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருந்தன. அந்தவகையிலேயே தற்போது இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னாலும் மக்களினது எதிர்பார்ப்புக்கள் பலவாறாக இருந்தன. அதிலொன்றே கடுமையான முறையில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தமிழர் தாயகப் பிரதேசங்களிற்கான பொருளாதாரத் தடையானது நீக்கப்படுமா எனும் மேற்படி எதிர்பார்ப்பு ஆகும். கடந்த வருட இறுதியில் இலங்கையின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட ஐ. தே. முன்னணியானது சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் இனச்சிக்கலைத் தீர்த்துக் கொள்ள முன்வந்தது. அதற்கான முன்னோடி முயற்சியாக பொருளாதாரத் தடையில் தளர்வை ஏற்படுத்தவும் முன்வந்தது. இது எம்மக்களின் மத்தியில் மாத்திரமன்றி பெரும்பான்மை இனத்தவர்கள் மத்திய}லும் மன ஆறுதலை ஏற்படுத்தியது. அவர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால், நாம் இங்கு பிரஸ்தாபிக்கப்போகின்ற விடயம் இதுவன்று. புதிய அரசால் தளர்த்தப்பட்டிருக்கும் பொருட்கள் மீதான தடையினால் எம்மக்கள் மத்தியில் புூரண பயன்பட்டை ஏற்படுத்திவிட முடியுமா? அத்தோடு கிடைக்கப்பெறும் பொருட்களை எமது பகுதிகளிலேயே நுகரவும், கொள்வனவு செய்யவும் தகுந்த வசதி வாய்ப்புக்கள் உண்டா? அன்றி பொருட்களை எமது பிரதேசங்களில் பயன்படுத்தக்கூடிய ஏதுவானதொரு நிலமை உள்ளதா? இதுவே எம்முன் எழுந்துள்ள கேள்விகளாகும். அவை சார்ந்த விடயங்கள் தொடர்பாக இனி ஆராய்வோம். போரில் பாதிக்கப்பட்ட தமிழினத்தின் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகள் பல இன்றும்கூட தீர்க்கப்படாதிருக்கும் நிலையே உள்ளது. தொடங்கப்பட்டிருக்கும் சமரசப் பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெற்று முன்னேற்றம் காணப்படும் பட்சத்திலேயே அடுத்தகட்டப் பிரச்சினைகள் கவனத்திலெடுக்கப்படும் எனும் போக்கே நிலவுகின்றது. நிலமை இவ வாறிருக்க வெறுமனே பொருட்களை அனுப்புவது மட்டும் பெரியளவிலான பயன் எதையும் எமக்குத் தந்துவிடப் போவதில்லையென்பதனையே நாமிங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதற்காக பொருட்கள் மீதான தடை நீக்கம் என்பது வேண்டாத ஒன்றாக நாம் கருதவில்லை. அது எம்மக்களின் அடிப்படை வசதி வாய்ப்புக்களில் தேவையானதொன்று. ஆனால், அதற்கு முன்னர் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையாக இருக்கும் போது அவற்றைத் தீர்த்துக் கொள்ளாது பொருட்கள் மீதான தடைதளர்வினை ஏற்படுத்தினால் மக்களாகிய நாம் எவ வாறு தகுந்த முறையில் இந்நடவடிக்கையால் பயனடைய முடியும். முதலில் பொருளாதாரத்தடை நீக்கமென்றால் என்னவென்று பார்ப்போம். இரு நாடுகளுக்கிடையில் தடைப்பட்டிருக்கும் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் ஏற்படுகின்ற சுமூகமான ஓர் நிலையே பொருளாதாரத் தடைநீக்கம் எனப்படும். அதாவது, சிங்களப் பகுதிகளிலும் அன்னிய தேசத்திலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களைத் தமிழீழப் பகுதிகளுக்கு அனுமதிப்பது போன்று எமது தாயகப்பகுதிகளிலும் காணப்படும் மூலப்பொருட்களை உற்பத்திசார் பொருட்களையும் தென பகுதிகளுக்கும், இதர பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்ய சிங்கள அரசு முன்வர வேண்டும். எனவே, பொருளாதாரத் தடை எதுவுமற்று இந்நடவடிக்கையானது எதுவித தடங்கலுமின்றி சுமூகமான முறையில் பரிமாற்றம் செய்வதான நிகழ்வே உண்மையில் பொருளாதாரத் தடைநீக்கமெனப்படும். இந்நிலமையானது சரியான முறையில் பேணப்படும் போதிலேயே இருசாரார் மட்டத்திலும் பணப்புழக்கம் ஏற்படும் ஏதுநிலையுண்டாகும். அத்தோடு இருபக்க வர்த்தக நலன்களும் பேணப்படும். எனவே, ஐ. தே. முன்னணி அரசு பொருட்கள் மீதான தடை தளர்வினை ஏற்படுத்தி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது போன்று பல வருடங்களக எமது தாயகத்தில் ஏற்றுமதிகளின்றி தேக்கநிலை கண்டுள்ள உற்பத்திப் பொருட்களை தென்பிரதேசங்களிற்கு எம்மக்கள் ஏற்றுமதி செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். அவ வேளையில்தான் எம்மக்களில் அதிகூடிய கொள்வனவுச் சக்தியுடையவர்களாக இனம் காணப்படும் அத்துறை சார்ந்த மக்கள் தடை நீக்கப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குரிய வசதி வாயப்பு உண்டாகும். அத்தோடு அவர்களைச் சார்ந்துள்ள சாதாரண மக்கள் மத்தியிலும் பணப்புழக்கம் ஏற்படும். தமது தேவைகளைப் புூர்த்தி செய்து கொள்வதற்கு வேறோருவருடைய உதவிகளை எதிர்பார்த்திராது தமது வருமானங்களைக் கொண்டே தமது தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் நிலையுண்டாகும். போரில் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களில் பெரும்பலானோர் இன்றும் கூட பசி பட்டினியால் வாடுகின்ற நிலை ஒழிக்கப்படவில்லை. தொடரும் இந்நெருக்கடி நிலைகளை முதலில் புதிய அரசு அகற்றுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். முற்று முழுதாய் கொள்வனவுச் சக்தியை இழந்திருக்கும் எம்மக்கள் மத்தியில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டியது நிவாரணப் பணியேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டு அவர்களது வாழ்க்கை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியதன் பின்னர் போரில் அவர்கள் இழந்த அனைத்திற்குமான இழப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டும். அதன் பின்னர் அதனோடிணைந்த செயற்பாடுகளாகக் கருதப்படுகின்ற மேலதிகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதுவே நல்லதெனப்படுகின்றது. அதுவே ஆரோக்கியமானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும். இன றுவரை எமது மண்ணில் நடைபெற்றது போர். எனவே போர் நடந்த பிரதேசத்தில் என்ன நடந்திருக்குமென்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதல்ல. மக்கள் ஒவ வொருவரும் ஏதோ ஒருவகையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடும்பங்களில் குடும்பத்தலைவர்களை போர் சாய்த்தது. பலரை அங்கவீனராக்கியது. இப்படியாகப் பலரும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றபோது பொருட்களைக் கொள்வனவு செய்யவும், சுயதொழில் வாய்ப்புக்களைத் தேடிக் கொள்ளவும் எப்படி அவர்களால் முடியும்? எங்கிருந்து அவர்களுக்கு செலவு செய்வதற்குரிய பணம் கிடைக்கும்? இராணுவ நவடிக்கைகளின் போதெல்லாம் நாம் பயன்தரும் சொத்துடமைகளையும், விளைநிலங்களையும் கடலையும் விட்டுக் குடிபெயர்ந்தோம். வேலை வாய்ப்பையிழந்தோம். தொழில் புரிவதற்கான அடிப்படைக் கருவிகளையும் அதனைக் கொள்னவு செய்வதற்கான மூலதனங்களையும் இழந்தோம். இடம்பெயர்ந்த இடங்களிலிருந்தபடி சிறு கைத்தொழில் முயற்சிகளையாவது மேற்கொள்வோம் என்றாலும் அதற்கான கருவிகள் தடை செய்யப்பட்டதனால் முடக்கம் ஏற்பட்டது. விவசாயம் செய்யவோ அன்றி கடல்சார் தொழில்களைச் செய்யவோ தகுந்த வசதி வாயப்புக்களின்றி எம்மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர். ஒவ வொருநாள் பொழுதையும் ஏதோ கிடைப்பதைக் கொண்டு வாழப்பழகிக் கொண்டார்கள். அத்தோடு தற்போது தத்தமது சொந்தத் தாயகப் பிரதேசங்களில் குடியமரத் தொடங்கியுள்ள எம்மக்களுக்கு உடனடி நடவடிக்கையாக நிவாரணப்பணிகளை ஒழுங்குபடுத்திக் கொடுக்க வேண்டும். கடந்த கால சந்திரிகா அரசால் தடைப்படுத்தப்பட்டு இன்றுவரை ஒழுங்குபடுத்தப்படாதிருக்கும் நிவாரணப் பணிகளால் வெட்டுகள், தளர்வுகள் போன்றவற்றை மீளப் பெறக்கூடிய ஒழுங்குகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உணவாகவும், பண உதவிகளாகவும் இந் நிவாரணப் பணிகளைச் செய்து முதலில் எம்மக்களை மீண்டும் தெம்புள்ள சமூகமாக மாற்றியதன்பின் பிற ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளும் போதிலேதான் நல்ல பயனை உண்டாக்க முடியும் என்பது எமது கருத்தாகும். இதைப் புதிய அரசு கவனத்தில் எடுக்குமா? ஏனெனில், போர் நடந்து முடிந்த எந்தவொரு நாட்டிலும் நிலைமை சுமுகமானதொரு நிலைக்குத் திரும்பியதன் பின்னர் முதலில் அங்கு நடைபெறுவது றேம்கூறப்பட்ட நிவாரணப் பணிகளும் அதனோடிணைந்த இழப்பிற்கான புனரமைப்புப் பணியுமேயாகும். அதன் அடிப்படையிலேயே அரசு இந்நடவடிக்கைகளை எமது பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். அதில் தவறுமில்லையே. அழிக்கப்பட்டவையும், இழக்கப்பட்டவையும் அனைத்தும் எம்மக்களினது. அழித்தவர்கள் அரச படைகள். எனவேதான் இதை அரசு பக்கமிருந்து எதிர்பார்க்கின்றனர். புதிய அரசால் வழங்கப்படுகின்ற 'செய்து கொடுக்கப்படும்' எனும் பழைய பாணியிலான வாக்குறுதிகள் எதனையும் எம்மக்கள் நம்பமாட்டார்கள். ஏனெனில், கடந்த அரச தலைமைகளின் வாக்குறுதிகள் யாவும் காற்றோடு பறந்து போனது இன்றும் அவர்கள் நினைவில் நிலைத்துள்ளது. அவ வரலாற்றுத்தவறை தற்போதைய அரசும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதுதான் அவர்களது விருப்பமாகவுள்ளது. முதலில் எம்மக்கள் அரசின் இந்நடவடிக்கை மீது நம்பிக்கை கொள்ளக்கூடியவாறு முன் முயற்சிகளை ஏற்படுத்த முன்வரவேண்டும். மக்கள் இழந்த அனைத்திற்குமான இழப்பீடுகளை வழங்கியுதவ முன்னோடி முயற்சிகளையாவது செய்துகொள்ள வேண்டும். அரச படைகளினால் நிர்மூலமாக்கப்பட்ட அரச, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்பனவற்றை மீள்புனரமைப்புச் செய்துவைத்து அவையாவும் தகுந்த முறையில் மீண்டும் இயங்குவதற்குரிய ஒழுங்குகளைச் செய்ய வேண்டும். அப்போது அத்துறைசார்ந்த தொழிலாளர்கள் அனைவரிற்கும் மீண்டும் தொழில்வாய்ப்புக் கிடைக்கும். அதன்மூலம் வாழ்வுநிலைச் சிக்கலைத் தீர்த்துக் கொள்ள ஏதுவானதாக இருக்கும் காரணிகளில் ஒன்றான பணப்புழக்கம் என்பது உண்டாகும். சாதாரண தொழிலாளி முதல் விவசாயிகள் வரை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தமிழர் வாழ்வியல}ல் விவசாயம் என்பது இன்றியமையாததொன்று. ஆனால், ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட எமது பிரதேசங்களிலும் சரி அவர்கள் வாழும் பகுதிகளிலும் சரி இன்று விவசாயத்தை மேற்கொள்ளக் கூடியதொரு ஏதுவான நிலை உண்டா? அன்றில் வாழ்கூடிய ஏதுநிலை உண்டா? இல்லையோ. ஆக்கிரமிப்புக்குட்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட விளைநிலங்கள் உட்பட குடியிருப்புப் பிரதேசங்களில் அரச படையினரால் விதைக்கப்பட்ட இலட்சக்கணக்கான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாத நிலையேயுள்ளது. அதை அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மக்கள் மீளக் குடியேறவும், தமது தொழில களை மேற்கொள்ளவும் அந்நிலங்களில் உள்ள உயிராபத்தை விளைவிக்கக் கூடிய கண்ணிவெடிகளை அகற்றுவதற்குரிய நவீன கருவிகள் எதனையும் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையில் தடைநீக்கப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்து என்ன செய்வது? அது மாத்திரமின்றி விவசாயத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற குளங்களும், அங்கிருந்து நீரைக் கடத்துகின்ற வாய்க்கால்களும், வடிகால்களும் சிதைவடைந்தும், தகுந்த பராமரிப்பின்றியும் இருக்கின்றது. இவற்றைப் புனரமைப்புச் செய்து மீள் ஒழுங்கமைப்பு செய்வதற்கு அத்துறை சார்ந்த திணைக்களங்களுக்கு நிதியொதுக்கீட்டை செய்து கொடுக்க வேண்டும். அத்திணைக்களத்திற்கென நவீன கருவிகளையும் அதற்கான பயிற்சிகளையும் இங்கு பணியாற்றுபவர்களுக்கு வழங்கி அது சிறந்த முறையில் எம்மக்களைச் சென்றடையக் கூடிய ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும். இவை கருத்திலெடுக்கப்படாது உழுவதற்கு வாகனங்களையும் பின்னர் தேவைப்படும் இரசாயனப் பொருட்களையும் உரவகைகளையும் அனுப்பி என்ன பயன் ஏற்படப் போகின்றது. இது 'வாலுமின்றி நு}லுமின்றி பட்டத்தைக் கையளித்து பறக்க விடலாம்வா' வென அழைப்பதற்கு சமமான தொரு நிகழ்வாகவே இருக்க முடியும். இது இல்லாதிருக்க தற்போது தடை நீக்கப்பட்ட இரசாயனப் பொருட்களையும், வாகனங்களையும், உரவகைகளையும் கொள்வனவு செய்து உரிய பயனேதும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில், இது அறுவடைக் காலமாகையால் இனி அடுத்தகட்டப் பயிர்ச்செய்கையின் போதே இவை மக்களுக்குத் தேவைப்படும். ஆகவே, எமது பகுதிகளிலேயே தற்போது கிடைக்கும் இவற்றைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்குரிய கட்டிட வசதிகளும் எங்கள் பகுதிகளில் இல்லை. அதைவிட உரவகைகளையும், இரசாயனப் பொருட்களையும் நீண்ட காலத்திற்குத் தேக்கிப் பாதுகாத்து வைத்திருக்கவும் முடியாது. எனவேதான், மனிதாபிமான முறையில் புதிய அரசு பொருளாதாரத்தடை நீக்கம் மேற்கொண்டது என வைத்துக் கொண்டால் அதற்கான முன்னோடி முயற்சிகளாக எமது மக்களின் அடிப்படை வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முன்வரவேண்டும். அத்தோடு நாம் இங்கு இன்னொன்றையும் கருத்திலெடுக்க வேண்டும். மனிதர் வாழ்கின்ற ஓர் புூமியில் அவர்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவைகளாக அமைவன கல்வி, மருத்துவம், போக்குவரத்து வசதி வாய்ப்புக்களாகும். ஆனால், இவையே எம்மண்ணில் போரின்போது சிதைவடைந்த மிக முக்கிய துறைகளாக உள்ளன. கொழும்பிலோ அன்றி பிற சிங்களப் பகுதிகளிலோ மழை என்றால் குடைபிடிக்க முண்டியடிக்கும் வெளிநாடுகள் பலதும் போரில் சிதைவடைந்து போயுள்ள இத்துறைசார்ந்த இழப்புக்களுக்கான புனரமைப்பை எமது பகுதிகளிலும் மேற்கொள்ள நிதியுதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். அப்படி ஒதுக்குகின்ற பணம் முழுமையான முறையில் எமது பகுதிகளில் புனரமைப்பு பணிக்கும் நிவாரணப் பணிக்கும் செலவழிக்கப்பட வேண்டும். எமது பகுதிகளில் மீள் போக்குவரத்து துறையினை விஸ்தரிப்பதற்குரிய வாகனங்களையும், அவற்றுக்கான உதிரிப்பாகங்களையும் போதியளவு கொள்வனவு செய்யவும் எமது பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நவீனரக மருத்துவ சாதனங்களை அறிமுகப்படுத்தியும் வைக்கவேண்டும். போக்குவரத்துக்குரிய வீதிகளைச் சீர்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் முதலில் அத்தொழில்சார் நிறுவனங்கள் இயங்குவதற்கு அழிந்துபோன கட்டிடங்களை மீளக் கட்டியெழுப்ப போதியளவு சீமெந்துகளையும், இதர கட்டிடப் பொருட்களையும் அனுப்பி வைப்பதற்குரிய அனுமதியினை வழங்க வேண்டும். கோடிக்கணக்கான புனரமைப்பதற்கான சீமெந்து தேவைப்படும் போது அனுமதிக்கப்பட்டளவிலேயே சீமெந்து அனுப்பி வைக்கப்படும் என தளர்வுகளிலும் சிறு தடைகளை ஏற்படுத்தினால் அது ஆரோக்கியமாயிருக்காது. இது 'ஆனைப்பசிக்கு சோளப்பொரி'இட்டதொரு செயலாகவே கருதமுடியும். இது விரும்பத் தக்கதான செயற்பாடாகவும் இருக்க முடியாது. மீனவ சமுதாயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள்- கடந்த ஓரிரு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் நடக்கின்றபோரின் போது பெரியளவில் பாதிக்கப்பட்டவர்களில் மீனவ சமூகமும் அடங்கும். அடிக்கடி நிகழும் இடப்பெயர்வுகளின் போது தொழில்சார் உபகரணங்களை விட்டு வந்தனர். இடம்பெயர்ந்த இடத்திலும் கடல்சார் தொழிலை மேற்கொள்ள இன்றுவரை நீக்கப்படாதிருக்கும் கடல்வலய தடைச் சட்டமும் கடற்படையினரின் அச்சுறுத்தலும் தடையாகவுள்ளது. இன்றும்கூட தொழிலுக்கு ஏற்ற இயந்திரம், வள்ளம் செய்யப்பயன்படும் கனியங்கள் என்பன தடை நீக்கப்படாத பொருட்களாயிருக்கின்றனவே. அத்தோடு தமிழர் பொருண்மிய மூலவளங்களில் ஒன்றான உப்பு உற்பத்தியை அதற்குத் தகுந்த இடங்களில் இன்றும் மேற்கொள்ள முடியாதுள்ளதே. நிலைமை இவ வாறிருக்க பொருளாதாரத்தடை நீக்கம் என்பதன் அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுகின்றதல்லவா? அப்படித்தான் கடல்சார் தொழிலின் மூலம் தேடிக்கொண்ட போதியளவு உணவு வகைகளையும் தேவைக்கதிகமாக சேகரிக்கப்படும் உப்பு போன்ற பொருட்களையும் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடிகிறதா? அப்படி ஓர் நிலை உருவாக்கப்படும் போதுதான் அத்துறைசார் தொழிலாளருக்கு பணப்புழக்கம் ஏற்படுமல்லவா? அவ ஏற்றுமதி நிலையினால் கிடைக்கப்பெறும் பணத்தைக் கொண்டு தேவையான தடைநீக்கப்பட்ட பொருட்களையும் கொள்வனவு செய்ய ஏதுநிலையுண்டாகும். இதனை அடிப்படையாக வைத்தே முதலில் கண்முன்னே தெரியும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டுவிட்டால் வாழ்வு நிலைக்கு சிக்காகவுள்ள மேலதிக சிக்கல்களைத் தீர்த்து வைக்க முடியுமென்பதை புதிய அரசுக்கு அறிவுறுத்த விரும்புகின்றோம். இன்றும் எமது பகுதியில் திரவப் பணத்திற்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. வெளியிடங்களில் இருந்து அனுப்பப்படும் காசோலைக்கான பணத்தினை எமது பகுதி வங்கிகளில் பெற முடியாமலுள்ளது. அப்பணங்களை வடபகுதிக்கு வெளியிலிருந்து பெற்றுவரச் சொல்லும் எமது மக்கள் அங்கேயே தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து வருவரல்லவா? எனவே மேலும் எமது பகுதிகளில் திரவப் பணத்திற்குத் தட்டுப்பாடு நிலவும். இதனால் மக்களின் வசதி கருதி தடை நீக்கப்பட்டு எமது பகுதிகளுக்குக் கொண்டு வரப்படும் பொருட்கள் யாவும் இங்கு தேக்கி வைக்க வேண்டிய நிலை உண்டாகும். நவீன உலகப் போக்கிற்கு இசைவாக நாமும் முன்னே நினைப்பதில் தவறு இல்லைத்தானே. அதற்கான தேடலில் எமது மாணவர் சமூகம் உள்ளடங்கலான இளைஞர் சமூகம் ஆர்வம் கொள்வதில் தப்பில்லை. ஆயினும், வானம் தெரியும் கூரையின் கீழும், கூரையே அற்ற இடிந்த கட்டடத் தொகுதிகளிலும், மரநிழலின் கீழ் 'யுனிசெப்' கையளித்த பாய்களிலும் கல்வி கற்கும் எமது மாணவ சமூகத்திற்கு அடிப்படை வசதிவாயப்புக்களை முதலில் அரசு ஏற்படுத்திக் கொடுக்க்டும்? நவீன கலாச்சாரத்திற்கு மிகவும் அத்தியாவசிய தேவையான மின்சார இணைப்பிற்கான முன்னோடி முயற்சிகளையும் செய்ய முன்வரட்டும். இவையனைத்தும் எம்மவர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதன் பின்னர் கணனிகளையும் அதற்கான உசாத்துணைப் பொருட்களையும் கொண்டுவர மக்கள் ஆர்வம் கொள்வர். அதன் பின்னான நடவடிக்கைகளிலும் புூரண தெளிவும் பயன்பாடும் இருக்க முடியும். எனவேதான் முன்னர் குறிப்பிட்டது போன்று பொருட்களுக்கான தடை தளர்த்துவதற்கு முன்பு எமது பிரதேசங்களில் அழிந்து போயுள்ள அனைத்திற்குமான புனரமைப்பும் மீள் சீரமைப்பும் நடைபெற வழி செய்து கொடுக்க தற்போதைய ஐ. தே. முன்னணி அரசு முயல வேண்டும். எம்மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறியதன் பின்னர் தடைதளர்வு பற்றியும், மேலதிகச் சிக்கல்கள் பற்றியும் ஆராயலாம். அன்றி முதலில் பேச்சு நடக்கட்டும் பின்னர் மீதியைப் பார்ப்போமெனும் போக்கில் அரசு நடந்துகொள்ளுமேயானால் 'மணற்காட்டில் பாத்திகட்டி தண்ணீர் பாய்ச்சியதொரு' நிகழ்வுக்கு ஒப்பானதொன்றாகவே பொருளாதாரத் தடைநீக்கம் அமையுமென்பதை மீளவும் ஒருமுறை நினைவுூட்டிக் கொள்ள விரும்புகிறோம். அ. அன்ரனி - sethu - 06-22-2003 யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு முப்பெரும் பேரணிகளாய் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மைதானத்தை வந்தடைந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ஒன்று திரண்டு உரிமைக்குரல் எழுப்பினர். யாழ்ப்பாண வரலாற்றில் குறித்து வைக்கப்படவேண்டிய நாளாக, 17.04.2002 அன்றும் இடம்பிடித்திருக்கின்றது. பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வானது தமிழீழ வரலாற்றில் தனக்கென்றோர் இடத்தைப் பதித்துநிற்கின்றது. தமிழர் தாயகத்திலும், அதற்கு வெளியே தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம், பற்றிப்படரும் பொங்குதமிழ் பேரெழுச்சியின் தாய்வீடு யாழ் பல்கலைக்கழகம் என்பது மிகையாகாது. ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், அடக்குமுறையாளனின் இறுக்கமான கொடுங்கரங்களுக்கு மத்தியில் நின்றபடி, அஞ்சாத்துணிவுடன், கடந்த ஆண்டு பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வை, யாழ் பல்கலைக்கழக சமூகம் நடத்தியது. அன்று அந்த மாணவ சமூகத்தால், வரலாற்றுப் பொறுப்புடன், விதைக்கப்பட்ட அந்த எழுச்சிக்கான விதை இன்று, மரமாகி விருட்சமாகி நிற்கின்றது. யாழ் குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் எழுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். சிங்களத்தின் துப்பாக்கி முனைகளுக்கு மத்தியில் அன்று நடந்த பொங்குதமிழ் எழுச்சி நிகழ்ச்சிக்கும் இன்று நடைபெற்றுள்ள பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுக்கும் இடையே பாரிய வேறுபாடு. சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் பிடிக்குள்ளே புலிகள் வந்து பகிரங்கமாக உறுமும் அளவிற்கு நிலைமை இன்று மாறிவிட்டது. வன்னியில் இருந்து சென்று கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் இதில் கலந்துகொண்டார் என்பதும், விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் செல்வி தமிழினி அவர்கள் உட்பட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதும் இப்பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வின் மற்றுமொரு சிறப்பு. தமிழர்களின் தேசிய அபிலாசைகளை வலியுறுத்துவதுடன், தமிழர்தம் ஏகபிரதிநிதிகள் யார் என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு ஓங்கி உரைக்கும் ஒரு சனநாயக எழுச்சியின் வெளிப்பாடாக பரிண மித்திருக்கும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள், தமிழர் விரோத சக்திகளின் இதயங்களில் இடியாய் இறங்குகின்றன. தமிழ்மக்களால், மேற்கொள்ளப்படும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் சிங்களப் பேரினவாத சக்திகளை கிலிகொள்ள வைத்திருக்கின்றன என்பது, மேற்படி சக்திகளின் அண்மைக்கால ஆத்திரமூட்டும் பேச்சுக்களில் வெளிப்பட்டு நிற்கின்றன. வரலாற்றுப் பொறுப்புடன், இளம்சந்ததி ஆரம்பித்திருக்கும் இவ விடுதலைப்பணி, போற்றுதற்குரியது. இன்னும் அது உறுதிபெறும், வேகம்பெறும் எனநம்பலாம். தேசியத்தலைமையின் கீழ் அணிவகுத்துள்ள எம் தேசம் இனிமேல் தூங்காது. விடுதலையின் சுமையை இனிமேல் தன்தோழில் தாங்கும். - sethu - 06-22-2003 மூன்றாம் கட்ட ஈழப்போரும் விடுதலைப் புலிகளும் கடற்புலிகளுக்கு தாக்குதல் திட்டங களை வகுக்கும் தேசியத் தலைவர் மூன்றாம் கட்ட ஈழப்போரானது தரையில் நிகழ்ந்ததற்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைவில்லாமல் கடற்பரப்பிலும் நிகழ்ந்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் இருபெரும் தாக்குதல்கள் திருமலைத் துறைமுகத்தினுள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட அதேவேளை தொடர்ச்சியாக நடந்த ஆழ்கடற்சமர்கள் பெரும்பாலும் விநியோகமார்க்கத்தை மையமாகக் கொண்டவையாகவே இருந்தன. மேலும், கடற்புலிகளின் தாக்கி அழிக்கும் திட்டத்தின் அடிப்படையிலும், தரைத்தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற hPதியிலும் இச்சமர்கள் இடம்பெற்றன. இறுதியில் யாழ்.குடாநாட்டிற்கான விநியோகத்தை மட்டுப்படுத்தும் அளவில் வட-கிழக்குக் கடற்பிராந்தியத்தில் கடற்புலிகளின் கை மேலோங்கியதாக இருந்தது. இது யாழ். குடாநாட்டில் நிலை கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினரை அச்சம் ஊட்டும் வகையில் காணப்பட்டது. இவ அச்சுறுத்தல் பற்றி இராணுவ ஆய்வாளர்களால் வெளிப்படையாகப் பிரஸ்தாபிக்கவும்பட்டது. மூன்றாம் கட்ட ஈழப்போரில் இராணுவமும், கடற்படையும் முனைப்பாகப் பயன்படுத்தப்பட்டது போன்று விமானப்படையும் முனைப்பாகவே பயன்படுத்தப்பட்டது. ஒரு வகையிற் பார்த்தால் மற்றைய இரு படைப்பிரிவுகளையும் விட விமானப்படைக்கு முதன்மை அளிக்கப்பட்டது என்றே கூறலாம். இக்காலப்பகுதியிலேயே கிபீர், மிக்-27 ரக தாக்குதல் உலங்குவானு}ர்திகள் பயன்பாட்டுக்கு வந்ததோடு அவை போர்க்களத்தில் முக்கிய பங்கும் ஏற்றன. இதேசமயம், விடுதலைப் புலிகளும் விமான எதிர்ப்புச் சாதனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தனர். இதன் காரணமாக சிறீலங்கா விமானப்படை பல தாக்குதல் வான் கலங்களை இழக்க வேண்டி வந்தது. ஏனைய ஆயுதப் படையினர் போன்றே விமானப் படையும் மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் பெரும் இழப்பைச் சந்தித்தது. இவ விழப்பானது ஒரு கட்டத்தில் விமானப் படையைச் செயலிழக்கச் செய்யும் அளவுக்குக் கொண்டு சென்றது. இந்த வகையில் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தால் பெரும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போர் முடிவடைந்த வேளையில் சிறீலங்கா ஆயுதப் படையினர் தமது அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க முடியாத குழப்பமானதொரு நிலையிலேயே இருந்தனர். ஏனெனில், இராணுவச் சமநிலை விடுதலைப் புலிகளுக்குச் சாதகமானதாக - யாழ்குடாநாட்டில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தது. இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வொன்று காணப்படும் என்ற hPதியில் ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி சந்திரிகாவும், அவரது பொ. ஐ. முன்னணியும், விடுதலைப் புலிகளுடனான மோதல் தொடங்கியதும், தமது நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஒன்றைச் செய்தனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதே அவர்களின் இந்நிலைப்பாட்டு மாற்றமாகும். இதேநேரம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்குத் தத்துவார்த்த விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டது. அதுவே 'சமாதானத்துக்கான யுத்தம்' என்ற ஜனாதிபதி சந்திரிகாவின் பிரசித்தமான கோட்பாடாகும். இக்கோட்பாட்டுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முனைப்புப்படுத்திய சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம், விடுதலைப் புலிகள் இராணுவ hPதியில் தோற்கடிக்கப்படும் வரை அவர்களுடன் பேச்சு வார்த்தை என்பதற்கு இடமில்லை எனவும் பிரகடனம் செய்தது. ஆயினும், இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு என்ற தனது நிலைப்பாட்டிற்கு எதிராக எழக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு அபிப்பிராயங்களை மழுங்கடிக்கும் வகையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பும் அரச தரப்பால் அடிக்கடி வெளியிடப்படும் ஒன்றாக இருந்தது. இந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதி என்ற hPதியில் 1995 ஆகஸ்டில் அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்று அன்றைய நீதி, அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அவர்களினால் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது. ஆனால், இவ அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட்டதாக இல்லை. இவ வாறு கசியவிடப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் திட்டமானது பௌத்த அமைப்புக்களினதும், பௌத்த-சிங்கள அடிப்படைவாத அமைப்புக்கள், பேரினவாத ஊடகங்களின் கடும் கண்டனங்களுக்கும் உள்ளாகியது. பல திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தரப்பும் அவற்றை ஏற்றுக்கொண்டாற்போல் அறிவிப்புக்களை வெளியிட, அத்திட்டமானது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் ஆகியது. அதன் பின்னர் இத்தீர்வுத்திட்ட யோசனையானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பரிசீலனைக்கு விடப்பட்டது. ஆனால், இது முனைப்புப்படுத்தப்பட்ட ஓர் நடவடிக்கையாக இருக்கவில்லை. அரசாங்கம் யுத்தத்திலேயே தீவரப்போக்குக் காட்டியமை காரணமாக இவ விடயமானது இரண்டாம் பட்சமான விடயமாகியது. இதேசமயம், விடுதலைப் புலிகள் இயக்கமோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயத்தில் உறுதியானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தது. இந்த வகையில் புலிகளின் நிலைப்பாட்டில் சில அம்சங்கள் முக்கிய இடம்பிடித்தன. 1. இராணுவ hPதியான அழுத்தங்களுடன் கூடிய நிலையில் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகப் போவதில்லை. 2. சர்வதேசத்தின் மத்தியஸ்த்துவத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகளே அரசியல் தீர்வுக்கு வாய்ப்பளிப்பதாக அமையும். 3. விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் அரசியல் தீர்வொன்றைக் காணவும் எவ வேளையிலும் தயாராகவே உள்ளது. ஆனால், மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப காலத்திலும், இடைப்பட்ட காலத்திலும் விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள், அரசியல் தீர்வு, சர்வதேச மத்தியஸ்துவம் என்பன குறித்துப் பேசியவை யாவும் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்ற நிலையிலேயே சிறீலங்கா ஆட்சியாளர்களினால் விமர்சனம் செய்யப்பட்டன. உலக நாடுகள் சிலவும் இதை மறைமுகமாகவேனும் ஏற்றுக்கொண்டிருந்ததோடு இராணுவ hPதியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதான சிறீலங்காவின் முயற்சிகளுக்கு உதவியும் வழங்கி வந்தது. இதன் காரணமாக அதிகாரப் பரவலாக்கல் திட்டம் என்பதும் அரசியல் தீர்வென்பதும் கிடப்பில் போடப்பட்ட தொன்றாகியிருந்தன. ஆனால், 'ஜயசிக்குறு', 'ரணகோஸ' நடவடிக்கைகள் சந்தித்த பெரும் இழப்புக்களும், தடங்கல்களும் விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையும் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்துக்கும், அதன் தலைமைக்கும் இனப்பிரச்சினைக்கன அரசியல் தீர்வு பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தோற்றுவித்தன.இதன் விளைவாகவே புலிகளுடன் பேச்சுவார்த்தை, வெளிநாட்டு மத்தியஸ்துவம் என்பனவற்றை நிராகரித்து வந்த சந்திரிகா குமாரதுங்க, நோர்வே அரசின் மத்தியஸ்துவத்துக்கு அழைப்பு விடுத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே சர்வதேச மத்தியஸ்துவத்துடன் பேச்சுக்களை நடாத்துவதற்குத் தயாராக இருந்தமை காரணமாக நோர்வே அரசின் முயற்சி விரைவாகவே ஆரம்பித்தது. நோர்வேயின் விசேட து}துவரான எரிக்சொல்கெய்ம் 2000 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து விடுதலைப் புலிகள் தரப்பினரையும், சிறீலங்கா தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தகளை நடாத்தினார் இதன் பிரகாரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை எரிக்சொல்கெய்ம் வன்னியில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அத்தோடு, சமாதான முயற்சிகளுக்கும் தமது புூரண ஒத்துழைப்புகிடைக்கும் எனவும் புலிகளால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சந்திரிகா குமாரதுங்காவோ அன்றி பொ. ஐ. முன்னணி அரசாங்கமோ இச்சமாதான முயற்சிகளுக்குத் தமது மனப்புூர்வமான சம்மதத்தை வழங்கத் தயாராக இருக்கவில்லை. முதலில் சமாதான முயற்சிகள் தொடர்பாக இழுத்தடிப்பைச் செய்த அவர்கள், இறுதியில் எரிக் சொல்கெய்ம் விடுதலைப் புலிகளின் சார்பாகச் செயற்படுவதாகக் கூறி நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையைத் தோற்றுவித்தனர். அதுமாத்திரமல்ல, விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அறிவிப்புச் செய்திருந்த நான்கு மாதகால ஒருதலைப்பட்சமான போர் ஓய்வையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். யாழ்.குடாநாட்டில் சில பகுதிகளை மீள ஆக்கிரமித்துக் கொண்ட அதேவேளை, பாரிய படை நடவடிக்கைக்கும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். அன்றைய நிலையில் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தின் ஒரே குறிக்கோள் விடுதலைப் புலிகளிடம் இழந்துவிட்ட ஆனையிறவுப் பிரதேசத்தை எவ வாறேனும் மீட்டெடுத்து விட வேண்டும் என்பதாகவே இருந்தது. இதன் காரணமாக நோர்வேயின் சமரச முயற்சிகள் கூட இரண்டாம் பட்சமானவையாகப் புறம் தள்ளப்பட்டன. ஆயினும், பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தின் முதலாவது பதவிக்காலம் முடிவடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தமையால் மீண்டும் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அதிகாரப் பரவலாக்கல் பற்றிப் பேசத் தொடங்கியது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து பெறப்பட்ட அதிகாரப் பரவலாக்கற் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு விவாதத்துக்கான நாளை ஒதுக்கீடும் செய்தது. பெரும் சவால்களைக் கொண்டதாக இருந்திருப்பினும் மூன்றாம் கட்ட ஈழப்போரானது தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை உறுதியானதொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தியுள்ளது. ஆனால், பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலம் முடிவுற்றுப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதினால், இவ வதிகாரப் பரவலாக்கற் திட்டமும் அர்த்தமற்றதாகியது. இதுகூட தேர்தலை இலக்குக் கொண்டே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருப்பினும், அவ வதிகாரப் பரவலாக்கற் திட்டத்தைக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இனத்துரோகத் தலைமையை உருவாக்கும் சந்திரிகாவின் அரசியல் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. பொ. ஐ. முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் எத்தகைய முனைப்புக் காட்டியதோ அதற்கு எந்த வகையிலும் குறையாத அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தையும் சர்வதேச hPதியில் முன்னெடுத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்ற hPதியில் சித்தரிக்க முனைந்த சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் இதனையே வெளிவிவகார அமைச்சின் முக்கிய இராஜதந்திரபணி ஆக்கியது. சந்திரிகா குமாரதுங்காவின் இத்திட்டத்துக்கு வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் செயல்வடிவம் கொடுக்க முனைந்தார். மேற்கு நாடுகளில் உள்ள சிறீலங்கா து}துவராலயங்களின் முழுநேரப் பணியாக இப்பிரச்சார நடவடிக்கை அமைந்திருந்தது. லக்ஸ்மன் கதிர்காமரின் பல நாட்கள் இப்பிரச்சாரத்துக்கென வெளிநாடுகளிலேயே கழிந்தன. ஒருவகையிற் பார்த்தால் இம்முயற்சியில் கதிர்காமரும், சந்திரிகா குமாரதுங்கவும் ஓரளவு வெற்றி பெற்றனர் என்றே கூறலாம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதன் மூலம் இவ வெற்றி பெறப்பட்டது. இது சந்திரிகா அரசின் மிகப்பெரும் இராஜதந்திர வெற்றியாகவும் சித்தரிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை சிறீலங்கா அரசின் கோரிக்கை காரணமாகவோ அன்றி அழுத்தத்தின் காரணமாகவோ உருவாகவில்லை என்ற இந்நாடுகளின் அறிவிப்புகள் இவ வெற்றி கூட சிறீலங்காவுக்குரியதல்ல என்பதையே வெளிப்படுத்துவதாயிருந்தது. ஆயினும், சிறீலங்கா அரசுக்கு இத்தடைகள் தெம்புூட்டுபவையாக இருப்பினும்கூட, மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்திருந த நாடுகள் கூட இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுதல் வேண்டும் என வலியுறுத்தியமையானது - அரசின் எதிர்பார்க்கைகளுக்கு எல்லையிடுவதாகவே இருந்தது. இந்நிலையிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்கா மீது நடாத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து தானும் அனுகூலம் அடைவதற்கான நடவடிக்கையில் சிறீலங்கா அரசு இறங்கியது. ஆனால், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற நிலைப பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமோ அன்றி இந்தியாவோ மாற்றிக்கொள்ளாமை விடுதலைப் புலிகள் மீதான தடைமூலம் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் இராஜதந்திர இராணுவ அனுகூலங்களை ஈட்ட முடியாததொரு நிலையையே ஆட்சியாளர்களுக்கு கொடுத்தது. இந்நிலையில் மூன்றாம் கட்ட ஈழப்போரினால் ஏற்பட்ட பெரும் சுமையைத் தாங்க முடியாத பொ. ஐ. முன்னணி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை அற்ப ஆயுளிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதாகியது. இரண டாம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்ததுபோல், மூன்றாம் கட்ட ஈழப்போரும் அடுத்து நடந்த ஆட்சி மாற்றத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால், இரண்டாம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தபோது சிறீலங்கா அரசாங்கம் எதிர்கொண்ட நெருக்கடியைவிட மிக மோசமான அரசியற் பொருளாதார இராணுவ நெருக்கடியை மூன்றாம் ஈழப்போர் முடிவடைந்தபோது எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருபுறம் நாட்டின் பொருளாதாரம் சிதைந்து அதன் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. மறுபுறத்தில் யுத்ததுக்கும், இனப்பிரச்சினைக்கும் உடன் தீர்வு காண வேண்டிய அவசியமும் இருந்தது. இதனை நன்கு புரிந்துகொண்டிருந்த புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் தெளிவாகக் குறிப்பிட்டார். அவரின் இவ வுரையில் முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை குறித்து பின்வரும் அம்சங்கள் வலியுறுத்துப்பட்டன. 1. இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது. 2. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும். 3. அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் சர்வதேச சமூகத்தின் முன்னால் தோல்வியைத் தழுவித் தலைகுனிய வேண்டி ஏற்படும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இவ அறிவிப்பானது சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கம் இப்பிரச்சினை தீர்வு குறித்து மேற்கொண்ட இராணுவ - அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் அனைத்தும் தோல்வி கண்டுவிட்டன என்பதைத் தெளிவாக அறிவிப்புச் செய்வதாகவும் இருந்தது. அது மாத்திரமல்ல, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய சர்வதேச நிர்ப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதையும் வெளிப்படுத்தியது. சமாதானத்திற்கும், அரசியல் தீர்விற்கும் எவ வேளையிலும் நாம் விரோதிகள் அல்ல என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இராணுவ hPதியிலான அடக்கு முறைக்கோ அன்றி அழுத்தத்திற்கோ பணியப்போவதில்லை என்பதையும் வலிறுத்தியே வந்தார். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்திற்கு இத்தகையதொரு பாரிய தோல்வி பின்னடைவு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் கொடுக்கப்பட்டது என்பதே நிதர்சனமானதாகும். இம்மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் சந்திரிகா குமாரதுங்கா அரசாங்கம் சிறீலங்கா அரசின் அனைத்து வளங்களையும், சக்தியினையும் பயன்படுத்தி மேற்கொண்ட இராணுவ அரசியல் இராஜதந்திர முயற்சிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் திறம்பட எதிர்கொள்ளப்பட்டு வெற்றி பெறப்பட்டன. - sethu - 06-22-2003 மனித வரலாற்றின் மனிதத்தன்மை தொலைந்த பக்கங்களில் சில.. ஒரு முழுமையான பார்வை பெண்கள்தான். 'உலகம் எங்கும் பெருக்கெடுத்து ஓடும் யுத்தகால அழிவுவெள்ளம் பெண்ணின் இரத்தத்தால் உருவானதொன்றே' என்ற அமெரிக்கப் பெண் கவிஞர் எடிற் சிற்வெல்லின் கூற்றும் தமிழ் மண்ணும் விதிவிலக்கல்ல. மனித குலத்தின் மனச்சாட்சி மனிதனாலேயே மிதிக்கப்படும் அவலம் மனித குலத்திற்கு மட்டுமே தனித்துவமானதொன்று என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் இவர்கள்லு}. உடலைக் களமாக்கி உயிர் கொடுத்தவளை, உதிரத்தை உணவாக்கி சமையங்களை, உணர்வை, உறவை, அன்பை, அறிவை பயிராக்கி வளர்த்து விட்டவளை மிதிக்கும் விந்தையை மனித இனம் கற்றுக்கொண்ட போதே தொடங்கிவிட்டது. மானுடத்தின் அழிவு பகை முடிக்கவும் பலத்தைக் காட்டவும் அடக்கியொடுக்கவும் ஆளுமை சிதைக்கவும் இங்கே சிங்கள இனவெறி அரக்கர்களின் இலக்காக ஆகிப்போனது தமிழினத்தின் விழுதுகள் மட்டுமல்லலு}. வேர்களும் கூடவே. நல்லுறவு வேண்டி நாளெல்லாம் கனவு கண்ட நங்கையர்கள் வல்லுறவால் வாழ்வழிந்து, வாழ்விழந்து, உடல்சிதைந்து, உணர்விழந்து நிற்கக் காரணம் யார்? மனித வாடைக்கு மருளும் மானினமோ, மனித வேட்டையாடும் கொடிய விலங்கினமோ அல்லது மனிதனை அண்டிவாழும் மந்தை இனமோ செய்யாத இந்த இழிசெயலை ஆற்றலால் தன்னை மேம்படுத்திக் காட்டும் மனித இனம் எங்கிருந்து கற்றுக்கொண்டது? உயிர் கொடுத்தவளை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும் மனுஸஎதிரியை தேடி உலக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி கைகள் தேய்ந்ததே கண்ட பலன். ஆனாலும். உலக வரலாற்றை அகலக் கண்கொண்டு நோக்கும் போதுதான் பிறந்த மண்ணின் மகத்துவம் புரிகின்றது. தமிழீழப் பெண் தன் தாய்மண்ணில் உயர்ந்து நிற்பது புரிகின்றது. தமிழீழ மண் காக்கும் மைந்தர் தம் பெண்ணை மட்டுமன்றி மாற்றார் பெண்ணையும் மதிக்கும் குணம் புரிகின்றது. இந்த உயர் நிலைக்கு குழிபறிக்கவென்றே கங்கணம் கட்டி நிற்கிறது சிங்களத்தின் இன அழிப்பு அரசியல், சிங்கள இனவாதம் தமிழீழத் தேசியத்தை அழிக்க முயன்ற போதெல்லாம் அதிகம் பலியானது அப்பாவித் தமிழ்ப் பெண்கள்தான். 'உலகம் எங்கும் பெருக்கெடுத்து ஓடும் யுத்தகால அழிவுவெள்ளம் பெண்ணின் இரத்தத்தால் உருவானதொன்றே' என்ற அமெரிக்கப் பெண் கவிஞர் எடிற் சிற்வெல்லின் கூற்றும் தமிழ் மண்ணும் விதிவிலக்கல்ல. சுதந்திர இலங்கையின் வரலாற்றுக் கறைபடிந்த அத்தியாயங்கள் இவை. ரயர் கலாச்சாரத்தில் தொடங்கி புதைகுழி அரசியலாக மாறிவிட்ட இக்காலம் வரை, உருக்கப்பட்ட, புதைக்கப்பட்ட உடல்கள் கணக்கற்றவை என்றால் குற்றுயிராகவும் குலையுயிராகவும் தப்பியபோதும் குடும்ப மானத்தைக் காக்க வாய்மூடி மௌனித்தவர்கள் அதைவிட ஏராளம். தமிழ்ச்சி சிந்திய இரத்தத்தின் எழுத்து மூலமான முதற் பதிவுகளிற் சில இவை. 58 அவலத்தை அப்படியே பார்த்த உயிருள்ள சாட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆவணி அமளி தமிழ்ப்பெண் சிதைக்கப்பட்ட, வரலாற்றை கணிசமாய்க் காட்டியது, ஒன்றல்லலு}. இரண்டல்ல 24 சேர்ந்து கர்ப்பிணிப் பெண்ணை சிதைத்ததை ஆழப்படுத்தியது. தனக்கு நேர்ந்த அவலத்தை தானே சொல்லும் மனத்துணிவைப் பெற்றுவிட்ட உயிருள்ள சாட்சிகள் எம்முன்னே இருந்தாலும் முகம் காட்டும் துணிவு இன்னும் அவர்களுக்கு வரவில்லை களங்கப்பட்டவள் என்று கணவனே கைவிட்ட பின்னர் தன்னை இனங்காட்டும் திடம் எப்படி வரும் அவளுக்குலு}? தொடர்ந்து கறுப்பு யுூலை சாட்சி சொல்ல எவரையும் விட்டு வைக்காத அளவிற்கு மிகவும் கோரமாக சிங்கள இனவெறியர்களால் நடந்தேறச் செய்யப்பட்டது. புத்தனை வணங்கும் மண்ணின் மைந்தர்களை மக்களாக்கி, அன்று இன அழிப்பை மேற்கொண்ட அரசும் அரசின் காவலர்களும், இப்போது நேரடியாகவே களத்தில் இறங்கியபோது தமிழ்ப் பெண்ணின் அவலம் உச்சக்கட்டத்தை அடைந்தது. துப்பாக்கியின் துணைகொண்டு சாதிக்க முடியாதவன் இந்த இழப்பீட்டை தன் உடலால் நிரப்ப முனையும் காடைத்தனத்திற்கு பேர் போன சிறீலங்காவின் அரசியலை உலகம் பார்த்தது. அகிம்சையைப் போதிக்கும் மண்ணின் அடாவடித்தனமா இதுலு}? அல்லது அட்டூழியமே சிங்கள இனவெறி அரசின் கலாசாரம்தானா என்று முகத்தைச் சுழித்தது உலகம். 'தமிழ்ப் புலிகளை முற்றாக அழித்து தமிழ்ப்பெண்களை சிங்கள சிங்கங்களால் நிரப்புவோம்' 1984இல் யாழ். மண்ணை ஆக்கிரமித்த சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியபோது எழுப்பிய யுத்தக் கூச்சல் இதுதான். தனி மனித வக்கிரமும் இனத்தையே அழித்துவிடும் அரசியல் தந்திரமும் இணைந்தபோது அப்பாவித் தமிழ்ப் பெண்கள் அலங்கோலப்படுத்தப்பட்டார்கள். தென்தமிழீழம்லு} இன அழிப்பை அணுஅணுவாக அனுபவித்த மண் மனித வேட்டையையும் மனிதப் புதைகுழிகளையும் அதிகமதிகமாய் உள்வாங்கிய மண் பொஸ்னியாவில், ருவாண்டாவில், கிழக்கு திமோரில் அரங்கேறிய 'இனச் சுத்திகரிப்பு' சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் அதிகம் பாPட்சித்துப் பார்க்கப்பட்டது மட்டக்களப்பு பெண்களில்தான். வரலாறு இன்று தமிழன் பக்கம் திரும்புவதற்கு வலுச்சேர்த்தவர்கள்தான் அன்று தமிழனுக்கு எதிராக எழுதப்பட்ட இனஅழிப்பு வரலாற்றின் பதிவுகள் ஆயினர். இரண்டாம் ஈழப்போர் காலகட்டத்தில் இன்னும் இன்னும் உரத்து ஒலித்தது மட்டக்களப்பு தமிழ}ச்சியின் குரல். சிறீலங்கா பயங்கரவாதத்தின் பெண் அழிப்பு, வேட்டைகள் மூன்றாம் ஈழப்போரில் கிருசாந்தியில் தொடங்கி இப்போது விஜயகலா சிவமணி வரை நீண்டிருக்கின்றது. ஆனாலும் புதிய மாற்றமொன்று வெளித்தெரிகின்றது. மானத்திற்குப் பயந்து மௌனித்திருந்த மனச்சாட்சிகள் மெல்ல மெல்ல வாயைத் திறக்கின்றன. உறங்கிக் கிடந்த உண்மைகள் உரத்துப் பேசப்படுகின்றன. அத்தாட்சிகள் அழிக்கப்பட்டு கருகிய உடல்கள் கதைசொல்லத் தொடங்கிவிட்டன. முகவரிகள் மறைக்கப்பட்டு மூடியிருந்த புதைகுழிகள் தம்வரலாற்றைச் சொல்கின்றன. இன்னும் பல தமது முறைக்காகக் காத்திருக்கின்றன. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பு படையினர் புரிந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள். 1996 செப். 10ம் திகதி திருநெல்வேலியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணொருவர் படையினர் பலரால் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார். 1996 செப். 08ம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாசுகி என்னும் பெண்ணை அவரது வீட்டில் புகுந்த ஆறு படையினர் வல்லுறவிற்குள்ளாக்கி முயற்சித்தபோது அயலவர்களால் காப்பாற்றப்பட்டார். 1996 மார். 07ம் திகதி தியாவெட்டுவா என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணை, அவரது கணவனை துப்பாக்கியால் தாக்கிவிட்டு படையினர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினர். 1996 பெப்.11ம் திகதி குமரபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய தனலெட்சுமி, 24 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தன்று படையினரால் வல்லுறவுக்குள்ளாக்கிய பின் கொல்லப்பட்டார். 1996 ஓகஸ்டில் திருகோணமலையைச் சேர்ந்த லக்ஸ்மிப்பிள்ளை எனும் பெண்ணை 03 பொயின்ற் படைமுகாமில் வைத்து வல்லுறவு புரியப்பட்டது பற்றி பகிரங்கமாக கூறியதற்கு பழிவாங்கும் பொருட்டு இருமகன்மார் முன்னிலையில் வைத்து மீண்டும் வல்லுறவு. 1996 மே 19ம் திகதி சரசாலை என்னும் இடத்தில் சிறீரஞ்சினி (18) புவனேஸ்வரி (36) ராஜேஸ்வரி (38) ஆகிய மூவரையும் படையினர் வல்லுறவிற்கு உட்படுத்தியபோது, அவர்கள் எதிர்த்துப் போராடியதால் ஏற்பட்ட காயத்தினால் வைத்தியசாலையில் மரணமடைந்தனர். 1996 மே 19ம் திகதி கொடிகாமத்தில் தேவாலயத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு. 1995 மே 12ம் திகதி மட்டக்களப்பில் 06 தமிழ்ப் பெண்களை கடத்திச் சென்ற படையினர் மாறி மாறி வல்லுறவு புரிந்தனர். 1996 செப்.07ம் திகதி கைதடியைச் சேர்ந்த கிருசாந்தி குமாரசாமி (18) இராணுவத்தினரால் வல்லுறவிற்கு பின்கொலை, தேடிச்சென்ற தாயார், சகோதரன், பக்கத்து வீட்டார் ஆகியோரும் கொல்லப்பட்டனர். 1996 செப். 30ம் திகதி உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த ரஜனி வேலாயுதபிள்ளை (22) கனடாவுக்கு செல்வதற்காக நண்பியுடன் விடைபெற்றுத் திரும்பியவேளை கோண்டாவில் காவலரணில் படையினரால் தடுக்கப்பட்டு வல்லுறவின் பின் கொலை. சடலம் நிர்வாணமாக தோட்டத்தில் கண்டெடுப்பு. 1997யுூலை 12ம் திகதி அளவையைச் சேர்ந்த சந்திரகலா கிருஸ்ணபிள்ளை (20) என்ற ஆசிரியையை தாக்கிய படையினர் கூட்டு வல்லுறவு புரிந்துள்ளனர். 1997 ஒக்19ம் திகதி வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ். ராஜினி துறைமுகப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இவர் இப்போது உடல் உளபாதிப்புற்ற நிலையில் உள்ளார். 1997ஒக் 05ம் திகதி மாவடிவேம்பு என்னும் இடத்தைச் சேர்ந்த சின்னப்பு பாக்கியம் (37) என்ற தாய் படையினரின் பாலியல் வல்லுறவிற்கு ஆளானார். 1997யுூலையில் அராலி என்னும் இடத்தைச் சேர்ந்த விஜயராணி (17) பாடசாலை வரும்போது படையினரால் கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு தற்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். 1997 மே19ம் திகதி மட்டுவில் வடக்கை சேர்ந்த கிருபாதேவி (37) இவரின் கணவரையும் இருபிள்ளைகளையும் வெளியே விரட்டிவிட்டு அவரது வீட்டில் வைத்து படையினர் பாலியல் வல்லுறவு. 1997 செப். 05ம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த ஆறு வயதுடைய பாலந்தி என்னும் சிறுமியை படையினர் கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கியதால் ஆபத்தான நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 1997 நவம்06ம் திகதி பளையைச் சேர்ந்த ஸியாமளா (17) என்னும் மாணவி இராணுவ சிப்பாயால் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டார். 1998 யுூன் 22ம் திகதி பனிச்சங்கேணியைச் சேர்ந்த காளிக்குட்டி ராகினி (23) படையினரால் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார். 1998 யுூலை 01ம்திகதி திருநெல்வேலியைச் சேர்ந்த நாகலிங்கம் பவானி (48) இவரின் வீட்டுக்கருகில் இருந்த காவலரண் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதன் பின்னர் கொல்லப்பட்டார். 1996 ஏப்.29ம் திகதி கச்சாய் வீதி நாவற்குழியில் குடிசையொன்றிற்குள் புகுந்த படையினர் கணவனை வெளியில் இழுத்துவந்து கொலைசெய்துவிட்டு மனைவியை வல்லுறவிற்குள்ளாக்கினர். 1996 யுூன் 17ம் திகதி மந்துவிலைச் சேர்ந்த புவனேஸ்வரியும் (36) அவரது சகோதரியும், சிவகுரு, நாகலிங்கம், ரவீந்திரன் ஆகிய மூவரையும் கொலை செய்த படையினரால் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டனர். 1996 மே 04ம் திகதி கச்சாயைச் சேர்ந்த புஸ்பமலர் (22) கணவனுக்கு தேனீர் கொண்டு வயலுக்குச் சென்ற வேளை வயலில் வைத்து படையினரால் இவரது கணவன் கொல்லப்பட்டதுடன், இவரும் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டார். இருவரின் சடலமும் வயலிலிருந்து மீட்கப்பட்டது. 1996 யுூலையில் மந்துவிலில் சிவில் உடையில் வீடொன்றுக்குள் புகுந்த படையினர் பெண்ணை வெளியில் இழுத்துவந்து வல்லுறவு புரிந்தனர். 1996 ஒக் 09ம் திகதி கெருடாவில் என்னும் இடத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி கார்த்திகேசன் (22) எனும் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய படையினர் அவரின் தந்தையையும் வாளால் வெட்டிக்கொலைசெய்தனர். 1998 யுூலை 16ம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாகலிங்கம் பவானி (46) என்னும் பெண்ணையும் இன்னொருவரையும் படையினர் வல்லுறவின் பின் கொலை செய்தனர். சடலங்கள் நிர்வாணமான நிலையில் திருநெல்வேலியில் கண்டெடுப்பு. 1998 மே 07ம் திகதி நொச்சிக்குளம் மன்னாரைச் சேர்ந்த 35 வயதுடைய மனநோயாளியான பெண்ணொருவரை படையினர் மன நோயாளி என்று தெரிந்தும் வல்லுறவு. 1998 ஒக் 27ம் திகதி அரியாலையைச் சேர்ந்த பாலகுமார் அஜந்தனா (17) பொலிசாரால் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு இரத்தக்கசிவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 1998 மார்ச் 16ம் திகதி மீசாலையைச் சேர்ந்த செல்வராணி (28) நண்பியைச் சந்திக்கச் சென்றவேளை வீதியில் வைத்து இராணுவத்தினரால் கூட்டு பாலியல் வல்லுறவு. 1998 மார்ச் 15ம் திகதி திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று மாதக் கர்ப்பிணியொருவர் பொலிஸ் கான்ஸ்டபிளால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார். 1997 ஒக் 27ம் திகதி சொறிக்கல்முனையைச் சேர்ந்த சவரி மெற்றலின் (31) எஸ்.டி.எப் விசேட படையினரால் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். 1997 டிச.25ம் திகதி விடத்தல்தீவைச் சேர்ந்த கந்தையா அமுதா பொலிசாரால் பாலியல் வல்லுறவு. 1997 நவ. 23ம் திகதி நாயன்மார்க்கட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை கைகால்களை கட்டிய நிலையில் பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இராணுவத்தினர் சுயநினைவிழந்த நிலையில் விட்டுச்சென்றனர். 1997 ஒக். 28ம் திகதி மந்திகையைச் சேர்ந்த 40 வயதுப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய படையினர் பாலியல் சித்திரவதைகளை மேற்கொண்டனர். 1997 ஒக் 16ம் திகதி அம்பாறையைச் சேர்ந்த தங்கநாயகி (49) எனும் பெண்ணை பொலிசாரும் ஊர்காவற்படையினரும் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் பெண்குறியை வெட்டி சிதைத்து கொலைசெய்துள்ளதாக அவரின் மகன் தெரிவிப்பு. 1997 மே 17ம் திகதி அம்பாறையைச் சேர்ந்த முருகேசப்பிள்ளை கோணேஸ்வரியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய பொலிசார், அவரின் பெண்குறியினுள் கிரனைட்டை திணித்து வெடிக்கவைத்து படுகொலை செய்தனர். 1997 யுூலை 17ம் திகதி அராலி தெற்கைச் சேர்ந்த 17 வயது மாணவியை மோசமாக தாக்கி மயக்கமடைந்த நிலையில் பாலியல் வல்லுறவு. 1997 மார்ச். 17ம் திகதி மயிலம்பாவெளி மட்டக்களப்பைச் சேர்ந்த வேலன் ராசம்மா (39) வேலன் வசந்தா (28) ஆகிய இரு சகோதரிகளை நான்கு படையினர் வீட்டினுள் புகுந்து மாறி மாறி பாலியல் வல்லுறவு. 1997 டிச. 31ம் திகதி மண்டூரைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் எஸ்.டி.எப். விசேட படையினரால் தாக்கப்பட்டு காயங்களுடன் பாலியல் வல்லுறவு. 1996 நவ. 22ம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த செல்வராஜா தேனுஜா (10) என்ற சிறுமி மீது புத்தூர் காவலரணில் இருந்த படையினர் பாலியல் வல்லுறவு. 1996 யுூலை 31ம் திகதி மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த இடா காமலிற்றா பள்ளிமுனை இராணுவத்தினரால் வல்லுறவு. 1999 டிச.17ம் திகதி மன்னாரில் வைத்து திருமதி நந்தகுமார் விஜியகலா (22) நாசகாரத் தடுப்புப் பிரிவினரால் பாலியல் வல்லுறவும் சித்திரவதையும். 1999 டிச.28ம் திகதி புங்குடுதீவைச் சேர்ந்த திருமதி சரவணபவான் சாரதாம்பாள் (20) நான்கு கடற்படைச் சிப்பாய்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை. 2000 யுூன் 21ம் திகதி நீர்கொழும்பில் யோகலிங்கம் விஜிதா பொலிசாரால் சோதனைச் சாவடியில் வைத்து பாலியல் துன்புறுத்தலும் சித்திரவதையும். 2001 பெப். 01ம் திகதி செட்டிப்பாழையத்தைச் சேர்ந்த கி. ஆனந்தி (28) எஸ்.ரி.எப். படையினரால் பாலியல் வல்லுறவு. 2001 மார்ச்.19ம் திகதி உப்புக்குளம் மன்னாரைச் சேர்ந்த சின்னத்தம்பி சிவமணி (22) கடற்படையினராலும் சி.எஸ்.யு படைப்பிரிவினராலும் பாலியல் வல்லுறவு. 2001 மே 19ம் திகதி பம்பலப்ப}ட்டியைச் சேர்ந்த சிவரஜனி, விமலாதேவி ஆகிய இருவரும் சிங்கள விடுதி உரிமையாளராலும் பொலிசாராலும் தாக்கப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவு. 2001 யுூன் 24ம் திகதி மருதானையில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் பொலிசாராலும் இராணுவத்தினராலும் பாலியல் வல்லுறவு. சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் நடந்திருக்கும் எவ வளவோ சம்பவங்களில் வெளியில் வந்திருப்பவை மட்டுமே இவை. இப்படியாக ஆதாரங்களும் சாட்சிகளும் குவிந்து கிடக்கும்போது, எதுவுமே நடக்கவில்லை என்று தெரிவிப்பதால் அவற்றை மறைத்துவிட முடியாது என்பது ஒருபுறம் இருக்க, இவை மட்டுமல்ல இதைவிட மோசமானவை இனியும் நடக்க இடமுண்டு எனும் அச்சுறுத்தலையே விடுப்பதாக அமைகின்றது, எனவேதான் விழிப்படைந்து விட்டது தமிழ்ப் பெண்குலம். ஓங்கி ஒலிக்கும் குரல் கிருசாந்தி விவகாரத்துடன் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல்கள் ஒன்றுபட்டன. இலங்கை வரலாற்றில் முதன் முதலாக இப்போதுதான் தனித்த வாக்குமூலங்களாகவும், நீதியைப் பெற்றுத் தராத வழக்குகளாகவும் இருந்த நிலைமாறி இன்று இவை அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களாகவும் பரிணாமம் பெற்றிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக பாதிப்பை ஏற்படுத்திய ஆணினத்திலிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழும்புகின்றன. தன்னினத்தின் பாதிப்புக்காக குரலெழுப்பும் மனித உணர்வுகூட, இல்லாத பேரினவாதத்திற்கு துணைபோகும் பெண்ணியவாதிகளை சாட ஒட்டுமொத்தமாக புறப்பட்டு விட்டனவாய் மூடி மௌனித்ததுதானே வக்கிரம் பிடித்தவனுக்கு வாய்ப்பைக் கூட்டியது. இது ஓர் ஆரோக்கியமான மாற்றம். தமிழன் பக்கம் திரும்பும் வரலாற்றில் பெண்ணின் மேன்நிலை பார்த்து வியக்கும் மாற்றம். தனித்தனி மனக்குமுறல்கள் ஒன்றாகி உறுமலாய் உரத்து ஒலிக்கின்ற மாற்றம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி இருந்தவைகள் அடம்பன் கொடியாய் திரளும் மாற்றம். ஆண் பெண் என்று தனிப்பாதை தவிர்த்து மனிதம் என்ற பொதுப்பாதையில் ஆண்குரலும் பெண்குரலும் சேர்ந்து ஒலிக்கும் மாற்றம். பெண்ணுக்காய் நீதி கேட்டு நிரம்பும் பக்கங்களில் ஆணின் கரங்களே அதிகமாய் இருக்கும் மாற்றம். தமிழீழ மண்ணில் பாலியல் வல்லுறவுக்கு இறந்த காலம் இருந்தது போல் நிகழ்காலம் இருப்பதுபோல் எதிர்காலம் ஒன்றை இல்லாமல் தடுக்க ஒன்றாய் உழைக்கும் மாற்றம் இது. இன ஒடுக்குமுறை அடங்கிக் கிடந்த தமிழனை உசுப்பிவிட்டது. அந்த விழிப்புணர்வின் வெளிப்பாடே தமிழீழ பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் விடுக்கும் எச்சரிக்கையுடனான கண்டன அறிக்கை. சிங்களதேசமே ஒன்றை விளங்கிக் கொள் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியில் மேலோங்கி, மனித நேயம் மனித உரிமைகளை தமது நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பாதுகாக்கவென சட்டங்களும் அமைப்புக்களும் போட்டும் கூட பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் முதன்மைப் பதிவுகளைத் தமதாக்கிக் கொண்டிருக்கும் சில தேசங்களைப் போன்றதல்ல இந்த மண். அதுபோல கொலை, களவு, கலவரம் போல பாலியல் வல்லுறவை ஒரு குற்றமாகக் கருத முடியாது என்று கூறுகின்ற காவல்துறையும் எம்மிடம் இல்லை. பாலியல் வல்லுறவை பயங்கர குற்றமாகக் கருதி அதற்கு அதியுச்ச தண்டனை வழங்கும் மண் இது. யுத்தத்தின் பாதிப்புக்களின்றி அமைதியில் வாழ்ந்த காலத்திலும் சரி, யுத்தக் கொடுமைகளில் நலிந்து போனபோதும் சரி இந்த மண்ணில் விரல்விட்டு எண்ணிவிடக்கூட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றதாக வரலாறு இல்லை. தமிழ்ப் பெண்ணுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதிகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உலகம் இன்று நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அரசே! வெட்கக்கேட்டை வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற மெத்தனத்தில் இனியும் தமிழ்ப் பெண்கள் மீது உனது வக்கிரங்களைக் காட்டலாம் என்று எண்ணாதே. ஒரு பெண்ணில் கைவைத்தால் ஓராயிரம் குரல்களும் கரங்களும் இங்கு எழும். அநீதிகளைத் தட்டிக்கேட்கும் மனித உரிமை விழுமியங்களைப் பேணுபவர்களுக்கு சரியான தரவுகளைத் தந்து நிற்கும் தன்னினத்தையே பாதுகாக்கும் மன உணர்வையும் மனோதிடத்தையும் தமிழ்ப் பெண்ணிடம் மட்டுமன்றி இந்த மண்ணில் வாழும் ஒவ வொரு சமூகப் பிரஜையிடமும் கட்டியெழுப்பிவிட்டோம். அடக்குமுறைகளும் அராஜகங்களும் அதிககாலம் அரசாட்சி செய்ததாக எந்த ஒரு வரலாறும் இல்லை. - sethu - 06-22-2003 பிரதான யாழ் கண்டி வீதி(ஏ.9) திறப்பின்போது மக்கள் கலந்து கொண்ட உணர்வு புூர்வமான நிகழ்வில் இருந து சில காட்சிகள் நானிப்பொழுது ஒரு நெடுஞ்சாலை மட்டும் அல்ல இலங்கைத்தீவில் சமாதானத்திற்கான முதலடிகள் எடுத்து வைக்கப்படும் ஒரு சமாதானச் சாலையும்கூட. இலங்கைத்தீவிலேயே இப்பொழுது அதிகம் கதைக்கப்படும் ஒரு சாலை நான். ஈழப்போரில் அதிகம் குருதி சிந்தப்பட்ட சாலையும் நானே. ஏன் எனக்கு இத்துணை கவர்ச்சி? காரணம் இதுதான் நான் யாழ். குடாநாட்டை தீவின் பிறபாகங்களுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையாக இருப்பதுதான். யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் எந்த ஒரு அந்நியரும் அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்வதென்றால் என்னையும் பிடித்தாக வேண்டும். அதாவது யாழ்ப்பாணத்தின் மீதான வெற்றி எனப்படுவது என்னையும் பிடித்தால்தான் இறுதியானதாயும் உறுதியானதாயும் அமையும். என்பதினாலேயே நானெப்பொழுதும் யுத்தத்திற் சிக்கினேன் என்னை வழிமறித்து. எப்பொழுதும் சோதனைச்சாவடிகளும் முட்கம்பியரண்களும் இருக்கும். எத்தனை படையெடுப்புக்களிற்குச் சாட்சி நான்? எத்தனை ஆயிரம் உயிர்கள் எனக்காகக் கொடுக்கப்பட்டன? எத்தனை லட்சம் வேட்டுக்கள் எனக்காகத் தீர்க்கப்பட்டது? எவ வளவு குருதி எனக்காகச் சிந்தப்பட்டது. பாருங்கள். எனது மேனிமுழுதும் ராங்கிகளின் இரும்புப் பற்கள் பட்ட அடையாளங்களை. ஆனால் எந்த ஒரு அந்நியரும் யுத்த காலத்தில் என்னை முழுதும் தமது பிடிக்குள் வைத்திருந்ததேயில்லை. வெள்ளையர், இந்தியர், சிங்களவர் என்று படைகொண்டு வந்த அந்நியர் எல்லாருக் கும் பிடிபட மறுத்து தழுவிச் செல்லும் ஒரு புதிராகவே நானென்றும் இருந்தேன். எனது இதுவரைகால இருப்பில் என்னால் மறக்க முடியாத விசயங்கள் இரண்டு. முதலாவது யாழ்ப்பாணத்து இடப்பெயர்வு. மற்றது ஜயசிக்குறு இரண்டுமே என்னைப் பைத்தியக்காரி போலாக்கின. முதலாவது யாழ்ப்பாணத்து இடப்பெயர்வு. அது ஒரு கொடுமையான அனுபவம். எனது வாழ்நாளிலேயே நான் பார்த்திராத பயங்கரமான ஒரு ஊர்வலம் அது. முன்னெப்பொழுதும் அத்தனை சனங்கள் என்னைக்கடந்து போனதில்லை. அத்தனை வாகனங்கள் என்மீது ஊர்ந்து போனதில்லை. அன்றைய அந்த மழையிரவில் எனது சனங்கள் அழுதழுது ஊர்ந்து போன காட்சியை இலங்கைத்தீவில் மட்டுமல்ல புூமியிலேயே வேறெந்தத் தெருவும் கண்டிருக்காது. பிள்ளைகளைப் பெற்றும் மலடியாய்ப்போன ஒரு முதியதாயைப் போல தனித்திருந்தேன் நான். பிறகு ஆறு மாதங்கள் கழித்து சனங்கள் திரும்பி வந்தார்கள். ஆனால் ஆறுதலில்லை. செம்மணியில் கிருஸாந்தி கதறியபோது எனக்கும் கேட்டது. அவளைக் குறையுயிராக அவர்கள் புதைத்தபோது நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளது தாயை சகோதரனை அயலவரைலு}. இப்படிப்பலரை அவர்கள் அந்த ஊரிவெளியில் புதைத்த போது நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கையாலாகாத சாட்சியாக. போன சனங்களில் ஒரு பகுதியினர் இன்னும் வீடு திரும்பவில்லை. இனியெப்பொழுது அவர்கள் திரும்பி வருவார்களோ தெரியாது. ஆனால் அவர்களெல்லாரும் திரும்பிவரும் நாள்தான் எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாளாயிருக்கும். மற்றது ஜெயசிக்குறு. யாழ்ப்பாணத்தில் நானெனது சனங்களை இழந்தேன். வன்னியிலோ எனது காடுகளையும் சனங்களையுமிழந்தேன். எனது இரு மருங்கிலும் குடைபிடித்து நின்ற பெருவிருட்சங்களைத் தறித்துக்கொண்டு முன்னேறியது ஜெயசிக்குறு. ஜெனரல் ரத்வத்த தளபதிகள் புடைசூழ எனது மார்பின் மீது நின்று போஸ் கொடுத்தார். எனது மிருகங்கள் என்னைவிட்டு ஓடிப்போயின. எனது பறவைகள் என்னைப் பிரிந்து பறந்துபோயின. ஆனால் எனது பிள்கைள் எனது ரகசிய வழிக@டாக வந்து வெடிமருந்துகளை விதைத்து விட்டுப்போனார்கள். ஜெயசிக்குறு காலம் எனது வாழ்நாளிலேயே மிகப்பயங்கரமான ஒரு காலம். யாழ்ப்பாணத்திற்கான வசதியான ஒரு விநியோக வழியைத் திறப்பதுதான் ரத்வத்தவின் பிரதான இலக்கு. ஜெயசிக்குறுவை இன்னொரு விதமாகச் சொன்னால் ஒப்பறேஸன் கண்டிவீதி எனலாம். நான் வன்னிப் பெருநிலத்தைப் பிளந்துகொண்டு போகிறவள் என்றாலும் எனது முக்கியத்துவம் நான் முன்சொன்னபடி குடாநாட்டை தீவின் பிறபாகங்களுடன் தொடுப்பதுதான். நொச்சிமோட்டைக்குப் பிறகு எனது வழியில் பெரிதாக ஆறுகள் ஏதும் குறுக்கிடுவதில்லை. கனகராயன் ஆற்றுக்கு சமாந்தரமாகப் போகிறவள் நான். மழை நாட்களில் வன்னிப் பெருநிலத்தில் எந்த ஒரு காட்டாறும் என்னை அறுத்தோடுவதில்லை. இதுவும் எனது கவர்ச்சிகளில் ஒன்று. இப்படிபல காரணங்களிற்காக என்னைப் பிடிக்க ரத்வத்த படையெடுத்து வந்தார். இதிலொன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஜெயசிக்குறு, யாழ்ப்பாணத்துக்கு பாதை திறக்கும் அதேசமயம் வன்னியை எனது அச்சில் வைத்து இரண்டாகப் பிளத்து விடுவதையும் இறுதி இலக்காகக் கொண்டிருந்தது. ஆனால் என்னைப் பிடிப்பது என்பது முழு அளவில் வன்னியைப் பிடிப்பது அல்ல என்று நடைமுறையில் நிரூபிக்கப்பட்டது. ஏனென்றால், யாழ்ப்பாணத்துக்கான விநியோக வழி என்பதுதான் எனது முக்கியத்துவம், வன்னி வாழ்வின் அசைவியக்கத்தைப் பொறுத்தவரை எனது பாத்திரம் ஒப்பீட்டளவில் சிறியதே. வன்னி வாழ்வின் அசைவியக்கத்தைத் தீர்மானிக்கும் கிறவல் சாலைகள் என்னில் வந்து மிதந்தாலும் கூட வன்னிக்கிராமங்கள், பட்டினங்களின் அசைவியக்கத்தை நான் அதிகம் தீர்மானிப்பவள் அல்ல. உண்மையில் எனது முக்கியத்துவம் யாழ்ப்பாணம் சார்பாகத்தான். எனவே என்னைப் பிடிப்பதன் மூலம் வன்னிவாழ்வின் அசைவியக்கத்தை அவர்கள் நினைத்தமாதிரி சிதைத்துவிட முடியவில்லை. இதனால் ஜெயசிக்குறு இடையில் இறுகிப்போய் நின்றுவிட்டது. பிறகு ஓயாத அலைகள் மூன்று எழுந்து ஜெயசிக்குறுவின் வெற்றிகளை அள்ளிக்கொண டு போனது. தோற்றோடிய சிப்பாய்களுக்கும் ராங்கிகளுக்கும் சாட்சியிருந்தேன் நான். ஆனையிறவில் நூற்றாண்டுகளாய் வெல்லக்கடினமாயிருந்த கோட்டை தகர்ந்தபோது தோற்றோடிய கெமுனு குமாரர்களுக்கும் உப்புக்காற்றால் படபடத்தாடும் வெற்றிக் கொடிக்கும் சாட்சியாயிருந்தேன் நான். வன்னியில் என்னைப் பிடிக்கப் புறப்பட்டு வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமாக என்னை இழந்தார் ரத்வத்த. இழக்கப்பட்டு பிசாசுகளிடம் கையளிக்கப்பட்ட பட்டினங்களில் நான் தனித்துக்கிடந்தேன். மீட்கப்பட்டு சனங்கள் வீடு திரும்பிய பட்டினங்களில் நான் பொலிந்து கிடந்தேன். இப்பொழுது காட்சி மாறி விட்டது. யுத்தத்தின் காரணமாய் யுத்தத்தின் சாட்சியாய் இருந்தவள் நான் இப்பொழுது சமாதானத்தின் ஆரம்ப வழியாக மாறியிருக்கிறேன். கிளிநொச்சிக்கு வரும் ஹெலிகொப்ரர்கள் என் மீது தாழப்பறந்து வந்து தரையிறங்கிச் செல்லும் இத்தருணத்தில் எனக்கொரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. அது இந்தியாவின் பேரரசனாயிருந்த அக்பரும் நகைச்சுவை மேதை பீர்பலும் முதலில் சந்தித்தது பற்றிய கதை. ஒருமுறை அக்பர் வேட்டைக்குப் போன இடத்தில் வழியைத் தவற விட்டுவிட்டார். காட்டில் வழி தடுமாறிக்கொண்டிருந்த அவரும் மெய்க்காவலரும் இடையில் ஓரிடத்தில் பீர்பலைக் கண்டார்கள். அக்பரின் மெய்க்காவலன் பீர்பலிடம் கேட்டான். 'இந்தப் பாதை எங்கே போகும்?' பீர்பல் அமைதியாகச் சொன்னார். 'பாதை எங்கேயும் போகாது நீங்கள்தான் அதில் போகவேண்டும்' மெய்க்காவலனுக்குக் கோபம் வந்துவிட்டது. 'ஓய் பாதை கேட்பது யார் என்று தெரிகிறதாலு}? அவர்தான் பேரரசர் அக்பர்லு}.' என்றான். பீர்பல் இம்முறையும் அமைதியாகச் சொன்னார் 'பேரரசனாக இருந்தாலும் கூட பாதை எங்கேயும் போகாது அவர்தான் போகிற இடத்திற்குப் போகவேண்டும்' இப்பொழுது என்னுடைய கதையும் அப்படித்தான். பீர்பல் சொன்னது போல நானும்மொரு பாதைதான் தானாக எங்கேயும் போக முடியாத பாதை. நீங்கள்தான் போக வேண்டும். எங்கு வேண்டுமானாலும் போகலாம். யாழ்ப்பாணத்திற்கும் போகலாம், வன்னிக்கும் போகலாம், கண்டிக்கும் போகலாம், கொழும்புக்கும் போகலாம், யுத்தத்திற்கும் போகலாம், சமாதானத்திற்கும் போகலாம். - sethu - 06-22-2003 கனவுகள் மெய்ப்படும் காலம் ஒரு பாசமுள்ள தந்தையாக அவர் காட்டும் கண்டிப்பும் எம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு அன்னை போல் அவர் காட்டும் பரிவு அவரிடம் எந்தப் பிரச்சினையையுமே மனம் விட்டு உரிமையுடன் கதைக்க வைக்கும். எமக்குத் தாயுமாகி, தந்தையுமாகி வழிகாட்டும் அந்தப் பெருந்தலைவர் எம்மில் வைத்திருக்கும் நம்பிக்கையும், அக்கறையும் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வல்லமையையும், வெற்றியை விரைவிலேயே அடைவோம் என்ற உறுதியையும் எம்மில் உண்டாக்கும். ஒரு பாசமுள்ள தந்தையாக அவர் காட்டும் கண்டிப்பும் எம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு அன்னை போல் அவர் காட்டும் பரிவு அவரிடம் எந்தப் பிரச்சினையையுமே மனம் விட்டு உரிமையுடன் கதைக்க வைக்கும். எமக்குத் தாயுமாகி, தந்தையுமாகி வழிகாட்டும் அந்தப் பெருந்தலைவர் எம்மில் வைத்திருக்கும் நம்பிக்கையும், அக்கறையும் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வல்லமையையும், வெற்றியை விரைவிலேயே அடைவோம் என்ற உறுதியையும் எம்மில் உண்டாக்கும். அவர் எம்மில் வைத்திருக்கின்ற நம்பிக்கை உடையுமாறு நடந்து, அதன் மூலம் அவரையே மனம் நோகப் பண்ணக் கூடாதே என்ற சிந்தனையே எம்மைக் கடமையில் கண்ணும் கருத்துமாக மூழ்கவைக்கும். தலைவரின் பிள்ளைகள் இந்திய வல்லாதிக்கத்தின் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டி வைத்த தலைவர், இவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று உலக நாடுகளால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர் அந்த நேரம் காட டிலே போராளிகளுடன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார். எம்மை யாரிலும் சாராமல் தனித்து நிற்கப் பழக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அத்தனை பெண் போராளிகளுக்கும் தளபதியாக மேஜர் சோதியா அவர்களை நியமித்து நிர்வாகத்தை அவர் கையில் கொடுத்து, அவர்களுக்கெனத் தனியே ஒரு பாசறை அமைக்குமாறு கூறினார். தலைவரின் அந்தக் கனவுதான் பின்பு 'விடியல்' பாசறையாக உருவாகி, தொடர்ந்தும் பல புதிய பெண் போராளிகளை வளர்த்தெடுத்தது. தலைவரைச் சிறைப்பிடிக்கும் நோக்குடன் செக்மேற்1, 2, 3 என்றெல்லாம் பெயர் சூட்டிய இராணுவ நடவடிக்கைகளால் இந்திய இராணுவம் மணலாற்றுக்காட்டையே சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த காலத்தில்கூட, எம்மை எப்படி எப்படியெல்லாம் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவரின் கற்பனை சற்றும் குறையவில்லை. அவர் எம்மைக் கூப்பிடும்போதும் குறிப்பிடும்போதும் 'பிள்ளைகள்' என்ற சொல்லைப் பாவிப்பதிலும் காட்டுக்குள் எதுவும் புதிதாக, நல்லதாக வந்தால் "இதைப் பிள்ளைகளுக்குக் கொடு" என்று அவர் எங்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும், அந்த நேரம் தலைவருடன் கூடவே நின்ற ஆண் போராளிகள் அநேகருக்குப் பொல்லாத கோபம். ஒரு காலத்தில் தங்களுக்கே தங்களுக்கு மட்டும் சொந்தமாக இருந்த தலைவரை இடையில் வந்த நாங்கள் பங்குபோட்டது மட்டுமன்றி, அவரில் அதிக உரிமை எடுத்துக் கொள்வதையிட்டு சினமடைந்த அவர்கள் எங்களைக் கண்டாலே "அண்ணையின்ரை மக்கள்" என்று எங்கள் காதுபடச் சொல்லிக் காட்டுவார்கள். "அண்ணையின்ரை மக்கள்" என்பது காலப்போக்கில் வெறும் 'மக்கள்' ஆகி, அந்த நேரம் தலைவருடனேயே நின்றவர்கள் மிக அண்மைக்காலத்துக்கு முன்பு வரையில் எம்மைப்பற்றிப் பேசும்போது 'மக்கள்' எனக் குறிப்பிடும் பழக்கம் இருந்தது. இப்போது அது மருவி 'பிள்ளைகள்' என்ற சொல் நிலைத்துவிட்டது. இந்தச் சொல்கூடத் தலைவரிடம் இருந்தே தோன்றியது. "பிள்ளையளை வரச்சொல்லு" "பிள்ளையளுக்கு அதைக் குடு" என்று கதைக்கின்ற தலைவரின் பழக்கம் அவருடன் கூடவே இருக்கின்ற ஆண் போராளிகள், தளபதிகள் மட்டத்தில் பரவ, பின்னர் இவர்களைப் பார்த்து எல்லோருமே எங்களை பிள்ளைகள் என்று குறிப்பிடத் தொடங்க, இன்று அந்தச் சொல் நிலைத்துவிட்டது. ஒரு காலத்தில் பெண்கள் தொடர்பான தவறான, பிற்போக்கான கருத்துக்களில் ஊறிக்கிடந்த சமூகத்தில் எம்மைப் "பிள்ளைகள்" என்ற மதிப்பான, கௌரவமான நிலைக்கு உயிர்த்தி வைத்தது எங்கள் அன்புக்கும் மதிப்புக்குமுரிய தலைவர்தான். தாயுமாகி. காட்டுக்குள் நல்ல சாப்பாடே இல்லாத நாட்கள் அவை. ஆனால், எமக்குத் தேவையான அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டுக்குள் கொண்டுவந்து கொண்டே இருந்தோம். ஒருநாள் கூட இடைவெளியில்லாத சுமை து}க்கல், காலையில் பொருட்களைச் சுமந்து வருவதற்காக அணிவகுப்பது அந்த நாட்களில் நாளாந்த கடமைகளில் ஒன்றாகிவிட்டிருந்தது. பெண் போராளிகள் யாரேனும் தலை முழுகி ஈரத்துடன் வந்து நின்றால் அவர்களை அன்று பொருட்கள் எடுக்கப்போக தலைவர் அனுமதிக்கமாட்டார். காட்டுக்கு வெளியேயோ, வேறு எங்கேயோ போய் ஒருநாளில் திரும்பி வந்துவிடமுடியாது. அந்த நிலையில் பெண்கள் இயற்கையாக உடல் சோர்ந்திருக்கின்ற நாட்களில் அவர்களை நீண்ட பயணங்களில் ஈடுபடுத்த அவர் மனம் இடம் தராது. மேஜர் சோதியா அவர்களை அனைத்துப் பெண் போராளிகளினதும் பொறுப்பாளராக நியமித்த பின்னர் அடிக்கடி மேஜர் சோதியா அவர்களிடம் பொருட்களைச் சுமந்து வரப்போகும் அணியில் போகவிருக்கும் பெண் போராளிகள் தமக்கு வரக்கூடிய சிக்கல்களுக்குத் தயாராகப் போகிறார்களா, அதற்குரிய முறையில் தமக்குத் தேiவாயன எல்லாவற்றையும் கொண்டுபோகிறார்களா என்று கேட்பதற்கு அவர் தவறுவதேயில்லை. ஒரு முறை காட்டுக்குப்போன காவல் உலா அணியில் ஒரு பெண் போராளி பாதை மாறித் தவறிவிட்டார். தலைவர் கவலையடைந்தார்.அந்தப்போராளி சற்று உடல்நலக் குறைவாக இருந்தார் என்று அறிந்ததும் அவர் கவலை அதிகமானது. பொறுப்பாளராக இருந்த பெண் போராளியைக் கூப்பிட்டு அவர் தனக்குத் தேவையானவற்றைக் கையோடு கொண்டு சென்றாரா என்று விசாரித்தார். அவருக்குத் தேவைப்படக் கூடிய அனைத்துப் பொருட்களையும் கொடுத்தே தேடுவதற்கு ஒரு அணியை அனுப்பினார். பாதை மாறி அலைந்த அந்தப் பெண் போராளி இருள் சூழத் தொடங்கியதும் ஒரு மரத்தின் மீது ஏறி இருந்துவிட்டார். விடியும் தறுவாயில் மரத்திலிருந்தவாறே ஒரு சத்த வெடி வைத்தார். அந்த ஒற்றை வெடியோசையை எதிர்பார்த்துக் காத்திருந்த மீட்பு அணி திசைகாட்டியின் உதவியுடன் வ}ரைந்து அவரை கூட்டி வந்த பின்னர்தான் தலைவர் நிம்மதியடைந்தார். காட்டிலே சொந்த வீட்டிலேபோல் உண்மையில் இந்திய இராணுவக் காலத்தில் காட்டிலே தலைவருடன் வளர்ந்த பெண் போராளிகள் 'தந்தை மடியிலே செல்லப்பிள்ளைகள்' போலத்தான் வளர்ந்தார்கள். மிகவும் நெருக்கடியான, இறுக்கமான சூழ்நிலைகளில் கூட தலைவரின் கவனிப்பு அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்தது. காட்டுக்குள் உணவுப் பொருட்களைக்கூட கொண்டுவர முடியாதபடி இந்திய இராணுவம் வலை விரித்துத் தடுத்திருந்த நாட்கள் அவை. மிக நீண்ட தொலைவுக்கு அப்பால் இருந்து அரிசி, மா, சீனி, பருப்பு, மண்ணெண்ணை என்று எல்லாவற்றையுமே பெண், ஆண் என்ற பேதமின்றி எல்லோருமே சுமந்து வரவேண்டியிருந்தது. கொண்டுவருகின்ற சுலபத்துக்காக மூடைகளைத் தலையில் வைத்துப் பெண் போராளிகள் நடந்ததைக் கண்ட தலைவர் தலையில் சுமைகளை வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். தோள்களில்தான் து}க்கலாம் என்று சொன்னார். இந்தச் சம்பவத்தை மீள நினைவு படுத்திய ஒரு பெண் போராளி "மூடைகளைத் து}க்கித் தலையில் வைத்தால் இருகைகளையும் வீசி இலகுவாக நடக்கலாம். ஆனால், அண்ணை அதை அனுமதிக்கேல்லை. ஒரு தோளிலையிருந்து மற்றத் தோளுக்குப் பாரத்தை மாத்திற ஒவ வொரு முறையும் பேசாமல் தலையில் வைத்துவிட்டு கையை வீசி நடந்தாலென்ன என்ற யோசனைதான் வரும். ஆனா, அப்படிச் சொன்னதுக்குக் காரணம் இருக்கும். தலையில் பாரம் சுமக்கிறதால வரப்போகிற பின் விளைவுகளைப் பற்றி எல்லாம் யோசித்துத்தான் அவர் அப்படிச் சொல்லியிருப்பார் என்று நினைச்சுக் கொண்டு தோளிலேயே சுமந்து நடப்பம்" என்றார். ஒவ வொரு விடயத்திலும் தலைவர் தங்களில் எவ வளவு கவனமுடன் நடந்துகொண்டார் என்பதை அவர்கள் பெருமையுடன் சொல்வார்கள். அந்த நேரம் எல்லோரிடமும் ஒன்று அல்லது இரண்டு உடைகள் மட்டுமே இருந்தன. காட்டிலே கிணறு வெட்டினால் என்ன, பெரு மரங்களைத் தறித்து சுமந்து வந்தாலென்ன, கிலோ மீற்றர் கணக்காக முள் மரங்கள், தடிகள் உடைகளைக் கொழுவி இழுக்கின்ற கொப்புகளிடையே நடந்து பொருட்களைச் சுமந்து வந்தாலென்ன, எல்லாமே அந்த இரண்டு உடைகளுடனும்தான். அநேக பெண் போராளிகளின் தோள் சட்டைத்துணி வியர்வையில் ஊறியும், அழுத்தும் சுமைகளின் பாரத்தாலும் நைந்து போயிருந்தன. ஒரு கட்டத்தில் சிறு கொப்பு உடைகளில் கொழுவினாலும் 'டர்' என்று கிழிந்தன. முன்னும் பின்னும் ஆண் போராளிகள் தம் சுமைகளுடன் கூடவே வந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் சின்ன முட்களை எடுத்து, கிழிந்த இடத்தை இரண்டாக மடித்து குத்திவிட்டு மீண்டும் சுமைகளுடன் நடப்பார்கள். அநேகரின் உடையில் தோளில் தையல்கள் போடப்பட்டிருந்தன. காட்டிலே எல்லோருடைய நிலையுமே அதுதான். யாருக்காக யார் என்ன செய்யமுடியும் அந்தக் காட்டில்? இவ வளவு நெருக்கடிகளுக்கிடையிலும் காட்டுக்குள் ஒருவாறு உடைகள் வந்து சேர்ந்துவிட்டன. தலைவர் புதிய உடைகளுடன் ஒவ வொரு பெண்போராளியையும் கூப்பிட்டு அவரவருக்குப் பொருத்தமாக உள்ளதா என்பதைத் தானே பார்த்தார். எல்லாருக்குமே உடைகள் சரியாக இருந்தனவா என்று வீட்டிலே அம்மா கவனிப்பது போல் காட்டிலே அவர்தான் கவனித்தார். ஒருமுறை காட்டுக்குள் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்கள் முற்றாக கையிருப்பில் இல்லாமற் போயின. நிலைமை சிக்கலாகிவிட்டது. தலைவர் உடனேயே ஆண் போராளிகள் அனைவரிடமிருந்த பழைய சாறங்கள் எல்லாம் தனக்கு வேண்டும் என்று வாங்கி, கொதிநீரில் அவிக்க வைத்து, பெண் போராளிகளின் பாவனைக்குத் தந்து சிக்கலைத் தீர்த்துவிட்டார். சொந்த வீட்டிலே இருப்பதுபோன்ற உணர்வு காட்டிலும் இவர்களுக்கு தலைவரின் கவனிப்பினால் உண்டாயிற்று. கோழியின் இறகுக்குள் குஞ்சுகள் இந்திய இராணுவக் காலத்தில் காட்டில் தலைவருடன் இருந்த பெண் போராளிகளின் எண்ணிக்கை இன்றைய நிலையுடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமே. காட்டிலே அந்தநேரம் இடையிடையில் சண்டைகள் வரும். ஆனால், தலைவர் பெரும்பாலும் சண்டைகளில் ஆண் போராளிகளையே ஈடுபடுத்தினார். தன்னுடன் இருக்கின்ற குறைந்த எண்ணிக்கையிலான பெண் போராளிகளை அப்போதே சண்டைகளுக்கு அனுப்பி இழப்புக்களைச் சந்திக்காது, அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன், கவனமுடன் இருந்தார். பெண் போராளிகளுக்குப் புரியவில்லை. அவர்களுக்குப் பயிற்சிகள் நடந்தன. ஆண் போராளிகளுக்கும் அவர்களுக்குமிடையில் போட்டிகள் கூட நடந்தன. ஆனால், சண்டை மட்டும் அவர்களுக்கு இல்லை. என்ன இது? அவர்கள் தலைவரிடம் கேட்டார்கள். கெஞ்சினார்கள். அடம் பிடித்தார்கள். ஒன்றிலுமே பயனில்லை. கடைசியாக ஒருமுறை மாதாந்த கலை நிகழ்ச்சியின்போது, சண்டைக்குப் போகவில்லையே என்ற ஏக்கத்தில் பெண் போராளிகள் மனநிலை பாதிக்கப்பட்டு வாய் புலம்புவது போன்ற காட்சிகளைக் கொண்ட நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். நாடகம் பார்த்த தலைவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். இருப்பவர்களைப் பாதுகாத்து, அவர்களின் பலத்தை அதிகரிப்பதிலேயே கவனமுடன் இருந்தார். அவர்களின் ஒவ வொரு வேலைகளிலும் அக்கறையுடன் இருந்தார். எண்ணிக்கையிலும் பலத்திலும் அவர்கள் வளர்ந்த பின்னர் பெண் போராளிகள் இல்லாமல் சண்டையே இல்லை என்ற நிலையை அவர் உருவாக்கினார். இன்று பெண்கள் படையணிகள் வளர்ச்சியடைந்திருப்பதற்கான காரணங்களிலே, அன்று தன்னுடன் சிறிய தொகையில் இருந்தவர்களை அவர் சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தியதும் ஒன்றாகும். சிறகுகள் முளைக்கும்வரை எந்தத் தாய்ப் பறவையும் தன்குஞ்சுகளைப் பறக்க அனுமதிப்பதுமில்லை. சிறகுகள் பலமடைந்த குஞ்சுகளைக கூட்டிலேயே தங்கியிருக்க அனுமதிப்பதுமில்லை. இன்னும் வரும்..... - மலைமகள் - sethu - 06-22-2003 ஜே.வி.பி.யின் தொடக்கம் தமிழ் மண்: முடிவு வரலாற்றின் குப்பைத்தொட்டி ஜே.வி.பி.யினர் எந்தத் தாய்ப் போராட்டத்திலிருந்து தமது ஆயுதப் போராட்டத்திற்கான கருவையும் உந்தலையும் பெற்றனரோ அந்த மண்ணிலிருந்துதான் விடுதலைப் போராட்டமும் எழுந்துள்ளது என்பதை அறிவார்களாக. றோகண விஜேவீர தமிழீழ விடுதலைப் போராட்டத்தை 'ஏகாதிபத்தியத்தின் சதி' என வர்ணித்து ஒரு நூலெழுதினார். தன்னை ஒரு மாக்ஸிஸ புரட்சிவாத அமைப்பு எனப் பிரகடனம் செய்யும் ஜே.வி.பி. சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் தற்போது மிக வன்மையாக எதிர்க்கின்றது. ஜே.வி.பி. தத்துவத்திலிருந்துதான் ஒரு பாடத்தையும் கற்கவில்லை, என்றாலும் அது தன் கடந்த கால அனுபவத்தில் இருந்தும் கூட எந்தவித பாடத்தையும் கற்கவில்லை. 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது 14,000 சிங்கள இளைஞரை இந்திய இராணுவத்தின் உதவியுடன் சிறிமாவோ பண்டாரநாயக்கா கொன்று குவித்தார். தமிழரைக் கொல்வதில் பயிற்சி பெற்று அதில் கொலை ருசி கண்ட சிங்கள இனவாத இராணுவம் 1988-89 கால கட்டத்திலெழுந்த இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது ஒரு லட்சத்து இருபதினாயிரம் சிங்கள இளைஞரை கொன்று குவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இத்தனைக்குப்பின்பும் சிங்கள இனவாதத்தின் தன்மையை ஜே.வி.பி.யினால் புரிந்துகொள்ள முடியவில்லையோ? புரட்சிவாதத் தன்மையற்ற ஜே.வி.பி. கிளர்ச்சிவாதத்தன்மையுடன் அரசியல் விவேகமற்ற hPதியில் முரட்டுத்தனமான கிளர்ச்சியில் ஈடுபட்டது. சிங்கள உயர் குழாத்தினால் புறக்கணிக்கப்பட்டு சமூக முன்னேற்றம் பின்தள்ளப்பட்டிருந்த தென்மாகாணத்து அப்பாவிக் கிராம இளைஞர்கள் விஜேவீராவின் அரை வேக்காட்டுத் தத்துவத்தை நம்பி உணர்ச்சி வசப்பட்டெழுந்தனர் அரசியலில் நரித்தனம் நன்கு வளர்ந்திருந்த சிங்கள உயர்குழாம் அந்த இளைஞர்களை தனது இரும்புக்கரம் கொண்டு கொடூரமாய் ஒடுக்கியது. விஜேவீர தனது அரைவேக்காட்டுத் தத்துவத்திற்கு புரட்சியையும் தென்மாகாண மக்களையும், தன்னையும் பலியிட்டார். முற்றிலும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் சோமவன்சக்களும், வீரவன்சக்களும் ஆயுதம் தாங்கிய புரட்சியை கைவிட்டு விட்டதாக அறிவித்து இனவாத ஆயுதத்தை தாங்குகின்றனர். தெற்கிற்கான புரட்சிக்கு துரோகம் செய்த ஜே.வி.பி. தற்போது வடக்கில் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிடக்கூடாது என்பதில் அதிகம் அக்கறையாய் உள்ளது. இலங்கையின் நுனியிலும் அடியிலும், வடக்கிலும் தெற்கிலும், இரு வரண்ட வலயங்களிலும் ஏறக்குறைய ஒரே காலத்தில் இருவேறு ஆயுதப் போராட்டங்கள் எழுந்தன. இலங்கை சுதந்திரமடைய வேண்டுமென்ற கருத்தை முதன் முறையாக முன்வைத்து அதை நோக்கி அமைப்பை உருவாக்கியவர் பொன் இராமநாதன் சகோதரர்களில் ஒருவரான அருணாசலம் எனும் தமிழன் ஆவார். அதேபோல ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் சோஸலிஸ அரசை ஸ்தாபிக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்து 1961 ஆம் ஆண்டு அதற்கான சீன கொம்யுூனிஸ் சார்புக்கட்சியை ஆரம்பித்துவரும் ஒரு தமிழா என். சண்முகதாசனாவார். சண்முகதாசன் அவ வாறான ஒரு கருத்தை முதல் முறையாக அமைப்பு hPதியாக முன்வைத்திருந்த போதிலும் அவர் அவ வாறு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஆயுதம் தாங்கிய நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆனால் 1967ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கெதிரான போராட்டத்தில் அவரது கட்சியினர் முனைப்புடன் ஆயுதம் தாங்கினர். இலங்கையில் 20ஆம் நூற்றாண்டு வரலாற்றில் ஆயுதம் தாங்கிய முதலாவது போராட்டம் தீண்டாமை ஒழிப்பிற்கான இப்போராட்டமேதான். கொம்யுூனிஸ்டுக்களினால் சாதிப்பாகுபாட்டைத் தீர்க்க முடியவில்லையேயாயினும் இந்த ஆயுதம் தாங்கிய போராட்ட நடவடிக்கையின் உதவி கொண்டு தீண்டாமையை பெருமளவு முடிவுக்குக் கொண்டுவந்தனர். அதாவது பொது இடங்களில் குறிப்பாக ஆலயம், தேனீh க்கடை, கிணறு என்பன திறக்கப்பட்டன. இத்தகைய பின்னணியில் சண்முகதாசனின் கொம்யுூனிஸ் கட்சி இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த றோகண விஜேவீர அந்த இளைஞர் அணியை அடிப்படையாக வைத்து ஜே.வி.பி.யை ஸ்தாபித்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் தயாரானார். றோகண விஜேவீராவினது ஆயுதப் போராட்டத்திற்கான முதன் நிலை உந்தல் சண்முகதாசனிடமிருந்தும் 1960 களின் மத்தியில் யாழ்ப்பாணத்திலெழுந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திலிருந்தும் பிறப்பெடுத்தது. வரண்ட வலய தென்மாகாணம் சிங்கள ஆட்சியாளரால் புறக்கணிக்கப்பட்டும், உயர் குழாத்து சிங்களவரால் சமூக பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்பட்டும் வந்தது. 1956ஆம் ஆண்டு உருவான தனிச்சிங்களச் சட்டத்தின் அறுவடையால் கிராமியச்சிங்கள இளைஞர்கள் உயர்கல்வி பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கும் வேலைவாய்ப்புக்கும் போட்டியிடலாயினர் 1956ஆம் ஆண்டுத் தனிச்சிங்களச் சட்டத்தின் அறுவடை வெளிவர பதினைந்து ஆண்டுகள் தேவைப்பட்டன. இவ வாறு பெருகிய இந்த மாணவர் தொகையில் தொடர் புறக்கணிப்பிற்குள்ளான இந்த வரண்ட வலய தென்மாகாண இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு தயாராகினர். இதுவே இலங்கையின் 1971ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன் எழுந்த முதலாவது ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாகும். இதை அண்டிய காலத்தில் வடக்கில் தமிழீழப் போராட்டம் ஆயுதபரிமாணத்துடன் எழத்தொடங்கியது. சிங்கள ஆட்சியாளர்களின் தொடர் உண்மை மறுப்புகள், பாரபட்சங்கள், ஏமாற்றங்களின் மத்தியில் பல்கலைக்கழகங்களுக்கான தரப்படுத்தலானது வட மாகாண இளைஞர்களை உடனடியாக ஆயுதம் தாங்கத் தூண்டியது. சிங்களக் குடியேற்றங்கள் கிழக்குமாகாண இளைஞர்களை உடனடியாக ஆயுதம் தாங்கத் தூண்டியது. மேற்படி ஒடுக்குமுறைகள் இனவடிவத்தில் அமைந்ததால் அவை ஏற்கனவே இருந்த பல்வேறு இன hPதியான பிரச்சினைகளுடனும் இணைந்து ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டமாக எழுந்தது. ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் இலங்கையின் ஆயுதம் தாங்கிய போராட்டங்களுள் மூன்றாம் கட்டத்தைச் சார்ந்தது. இலங்கையின் ஆயுதப் போராட்டங்களுக்கெல்லாம் தாய் யாழ்ப்பாணத்து தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டம்தான். சண்முகதாஸன் சாதி விவகாரத்தில் ஒரு நல்ல காரியத்தை தொடக்கினார். ஆனால் அதனை அவர் முடித்துவைக்காமல் ஏறக்குறைய தொடங்கிய இடத்திலேயே அதனை ஒரு சிறுவெற்றியுடன் விட்டுவிட்டுப் போய்விட்டார். இதில் அவருக்கு ஒரு நல்ல பாத்திரம் உண்டேயாயினும் தொடர் திட்டமற்ற வகையில் அதனை அவர் கைவிட்டமைக்காக வரலாறு அவரைக் கண்டிக்கும். ஜே.வி.பி.யினர் எந்தத் தாய்ப் போராட்டத்திலிருந்து தமது ஆயுதப் போராட்டத்திற்கான கருவையும் உந்தலையும் பெற்றனரோ அந்த மண்ணிலிருந்துதான் விடுதலைப் போராட்டமும் எழுந்துள்ளது என்பதை அறிவார்களாக. றோகண விஜேவீர தமிழரை அந்நிய சக்திகளின் கைக்கூலி என்றார். அவரது வாரிசுகளின் நிலைப்பாடும் ஏறக்குறைய அவ வாறுதான் உள்ளது. இவர்களின் கூற்று இவ வாறிருக்கையில் வரலாற்று நடைமுறை வேறுவிதமாய்த்தான் அமைந்தது. ஈழத்தமிழர் முன்னேறவேண்டிய தூரம் மிக அதிகமுண்டுதான். ஆனால் நீண்டகாலமாய் பல வழிகளாலும், பலவகைகளாலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுவரும் மக்கள் என்றவகையில், அதேவேளை அதிகம் விழிப்புள்ள மக்கள் என்றவகையில், இப்பிராந்தியத்தின் எல்லா முன்னுதாரணங்களினதும் கருப்பையாய் இந்த மக்கள் வாழும் மண் அமையும். இந்த யதார்த்தத்தை இப்போது ஜே.வி.பி. உள்வாங்கத் தயாரில்லை என்றால் நீண்ட காலத்தின் பின்பு மீண்டும் 'அ' விலிருந்து ஆரம்பிக்க வேண்டிவரும். - sethu - 06-22-2003 ஜெனரலின் கனவு -நிலாந்தன் என்ன சத்தம்? ஜெனரல் திடுக்குற்று விழித்தார். யாரோ கதவைத் தட்டுகிறார்கள். யாரது? அதுவும் இந்த நேரத்தில்.. சி.ஐ.டி. யோ.? இருக்காது. மருமகள் தானே இப்பவும் அரசி.? ஜெனரல் தடுமாறியபடி எழுந்து வந்து கதவைத்திறந்தார். யாரோ இருவர் தூய வெண் ஆடைகளோடு வாசலில் நின்றார்கள் சிரித்தார்கள். "என்ன ஜெனரல் யோசிக்கிறியள் நாங்கள்தான். முன்னாள் பாதுகாப்பு மந்திரிகள் நான் லலித் இவர் ரஞ்சன்." "ஓலு} நீங்களாலு} வாங்கோ வாங்கோ இருங்கோ. ஏது இந்தப் பக்கம்? "வருத்தமாயிருக்கிறியள் எண்டு கேள்விப்பட்டம். அதுதான் பார்க்க வந்தநாங்கள்" (1) நித்திரை வரவில்லை. ஜெனரல் புரண்டு புரண்டு படுத்தார். ஆஸ்பத்திரிக் கட்டில் உறுத்தியது. ஆஸ்பத்திரி விசிறி இரைந்து சுற்றியது. ஆஸ்பத்திரி நெடி நாசியை உறுத்தியது. ஜெனரலுக்கு நித்திரை வரவில்லை. இவ வளவு விரைவில் சிறைபோக நேரும் என்று ஒரு சோதிடன் கூட கூறிவைக்கவில்லை. சாத்திரிமாரை நினைக்க ஜெனரலுக்கு ஒரே ஆத்திரமாயிருந்தது. "உவங்கள நம்பித்தான் ஜெயசிக்குறுவும் தோற்றது இப்ப குடும்பத்தோட கம்பி எண்ணுற காலம்" ஜெனரல் நெடுமூச்செறிந்தார். "மொக்குப் பெடியளப் பெத்தால் இப்பிடித்தான் வரும். கொலை செய்யேக்க சாட்சியும் வைச்சுக்கொண்டு செய்திருக்கிறாங்கள். பேயன்கள், படு பேயன்கள். போகிற போக்கப் பார்த்தா குமார்பொன்னம்பலத்தின்ர கேசும் இறுகும்போல இருக்குலு}.ம்லு}" ஜெனரல் புரண்டு புரண்டு படுத்தார். நித்திரைக்கும் நித்திரையின்மைக்கும் இடையில் உடல் நெருப்பாய்த்தகித்தது. இயலாமை, கோபம், அவமானம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அவருக்கு ஆறுதலாயிருப்பது மருமகளின் நினைவு ஒன்றுதான். "அவளும் இல்லையெண்டா இப்ப என்ர கதி?" ஜெனரல் பெருமூச்செறிந்தார். "மருமகள் ஆட்சியில் இருக்கிறவரைக்கும் ஒருவரும் என்னை அசைக்கேலாது" என்று அடிக்கடி தன்னைத்தானே தேற்றிக்கொண்டார். அப்படி தேற்றிக்கொள்ளும் போதுதான் சில சமயங்களில் கொஞ்சமாவது நித்திரை கொள்ளமுடிகிறது. ஜெனரல் புரண்டு புரண்டு படுத்தார்லு} நித்திரை வருவதுபோல இருந்தது வராது போலவும் இருந்தது. (2) என்ன சத்தம்? ஜெனரல் திடுக்குற்று விழித்தார். யாரோ கதவைத் தட்டுகிறார்கள். யாரதுலு}? அதுவும் இந்த நேரத்தில்.. சி.ஐ.டி. யோ.? இருக்காது. மருமகள் தானே இப்பவும் அரசி.? ஜெனரல் தடுமாறியபடி எழுந்து வந்து கதவைத்திறந்தார். யாரோ இருவர் தூய வெண் ஆடைகளோடு வாசலில் நின்றார்கள் சிரித்தார்கள். "என்ன ஜெனரல் யோசிக்கிறியள} நாங்கள்தான். முன்னாள் பாதுகாப்பு மந்திரிகள் நான் லலித் இவர் ரஞ்சன்". "ஓலு} நீங்களா வாங்கோ வாங்கோ இருங்கோ. ஏது இந்தப் பக்கம்?" "வருத்தமாயிருக்கிறியள் எண்டு கேள்விப்பட்டம். அதுதான் பார்க்க வந்தநாங்கள்" "கட்சியால வேறதான் எண்டாலும் முன்னாள் பாதுகாப்பு மந்திரிகள் எண்ட வகையில் நாங்கள் எல்லாம் ஒரே கட்சிதானேலு}." "ஓம். ஓம் சந்தோசம் சந்தோசம் வாங்கோ இருங்கோ.." (இனிவரும் உரையாடல் ஒரு நாடகம் போல இருக்கும் இதில் ஜெனரல், லலித், ரஞ்சன் என்ற மூன்று பாத்திரங்களும் கதைப்பார்கள்) (3) லலித்: மெலிஞ்சு போனியள் வருத்தம் சுகமே ஜெனரல்: (அசட்டுச்சிரிப்போடு) விளங்குந்தானே சும்மா ஒரு நெஞ்சுக்குத்து ரஞ்சன்: முந்தியெண்டால் இப்பிடிப்பட்ட கேஸ்களுக்கு மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்கிறது கஸ்ரம். ஆனா இப்ப உடன கிடைக்குது. லலித்: விளக்கமறியல் கூடமே அப்பிடியே ஆஸ்பத்திரிக்குள்ள வந்திட்டு. எல்லாப் பெரியபுள்ளியளுக்கும், ஒரே மாதிரியெல்லே வருத்தம் வந்திருக்குலு} ஜென: (மனதுக்குள் கறுவியபடி) ஓமோம ஓமோம் ரஞ்சன்: பார்க்கப் போனா. உங்கட மருமகளின்ர ஆக்களில கனபேர் இருதய நோயாளியள் போல இருக்கு. ஜென: ஓமோம் ஓமோம் லலித்: பாருங்கோவன் எங்கட ஜே.ஆர். செய்த புண்ணியந்தான் இதெல்லாம். அவற்ற அரசியல் யாப்பாலதான் உங்கட மருமகள் நின்றுபிடிக்கிறா. உங்களயும் சிறைபோகாமல் குறைஞ்சது ஆஸ்பத்திரியிலயாவது வைச்சிருக்கிறா நீங்கள் எல்லாரும் ஜே.ஆருக்கு நன்றி சொல்லோணும் ஜென: மெய்தான் மெய்தான் சரியாச் சொன்னியள். அந்த மனுசன் பெரிய உதவி செய்திருக்கிறார். ஆனா இந்தச் சிங்களச் சனம் இருக்குதே நன்றிகெட்டதுகள் நன்றி கெட்டதுகள் ரஞ்சன்: ஒரு முன்னாள் பாதுகாப்பு மந்திரியையே பாதுகாக்கத் தெரியாத நாடு ஜென: ஆனால் நானாவது பரவாயில்லை நீங்கள் பதவியில் இருக்கேக்கையே உங்களப் பாதுகாக்கேலாமல் போயிற்று (திருப்பியடித்த திருப்தியோடு சிரிக்கிறார்.) ரஞ்சன்: ஓமோம் ஓமோம. மெய்தான். லலித்: ஆனால் சனத்தையும் முழுக்கப் பிழை சொல்லக் கூடாது. எங்கட சனம் நன்றி கெட்டதுகள் என்றத விடவும் மறதி கூடினதுகள் என்றதுதான் பொருத்தம். ஜென: ஏன் ஏனப்பிடிச் சொல்லுறியள்? லலித்: பாருங்கோவன் மாறி மாறி ஆட்சிக்குவந்த எல்லாரும் முதல் சமாதானம் எண்டு சொல்லுவினம். பிறகு சண்டையில் கொண்டுபோய் முடிப்பினம். கடைசியில் சண்டையில் தோத்து இலக்சனிலயும் தோற்பினம். பிறகு மற்றக்கட்சி வரும். அதுவும் சமாதானத்தில தொடங்கி சண்டையில் முடிக்கும் திரும்பவும் திரும்பவும் ஒரே கதைதான் ரஞ்சன்: மெய்தான் பைபிளில் ஒரு வசனம் இருக்கு சொல்லுறன் கேளுங்கோ எல்லாமே திரும்பத் திரும்ப நடக்கிறவைதான். இப்பொழுதும் நடக்கின்றன. இப்பொழுது நடப்பவைதான் இனியும் நடக்கப்போகின்றன. புூமியிலே சூரியனுக்குக் கீழே நூதனமானது எதுவுமேயில்லை. லலித்: சரியாச்சொன்னியள சிங்கள அரசியலில் எல்லாமே திரும்பத்திரும்ப நடப்பவைதான் ஜென: (எரிச்சலோடு) ஆனால், ஒரு முன்னாள் பாதுகாப்பு மந்திரி கம்பி எண்ணவேண்டி வந்தது முந்தி ஒருக்காலும் நடக்கேல.. லலித்: மெய்தான்லு} ஆனால் முந்தின பாதுகாப்பு மந்திரிகள் கொலை செய்யேக்க சாட்சியும் வைச்சுக்கொண்டு செய்யேல்ல.. ரஞ்சன்: ஜெனரல்லு}. நீங்களாவது பரவாயில்ல சிறைக்குத்தான் வந்திருக்கிறியள். ஆனால் நாங்கள் ரெண்டுபேரும் மேலயெல்லே போனனாங்கள். அவருக்கு மேடையில பரிநிர்வாணம் எனக்கு காரோட பரிநிர்வாணம். ஜென: (சீண்டப்பட்டவராக) நீங்கள் நக்கலடிக்கிறியள்லு}. சிறையில் வந்து கட்சி அரசியல் கதைக்கிறியள். லலித்தும் ரஞ்சனும்: இல்லை மெய்யாக இல்லை பிழையாக விளங்காதையுங்கோ. சமாதானம் அல்லது சிறை இரண்டும் உங்களுக்குப் பாதுகாப்பு எண்டு சொல்லத்தான் வந்தனாங்கள். ஜென: தேவையில்லை, உங்கட ஆலோசனை தேவையில்ல. நான் உங்கள் மாதிரி சாகிற ஆள் இல்ல. யாழ்ப்பாணத்தில் கொடியேத்தின சிங்கம் நான். உங்கட பைபிள் வசனத்தப் பொய்யாக்குறன் பாருங்கோ. லலித்தும் ரஞ்சனும்: உணர்ச்சி வசப்படுகிறியள் பிறகும் கூடப்போகுது எங்கட வசனம். பிழைக்குமெண்டால் சில சமயம் உங்களுக்கும் பிள்ளயளுக்கும் சிறையும் தீரலாம். கவனம ஜென: என்ன சிறையோலு}? எனக்கோ.? நடக்காது. மருமகள் நடக்க விடமாட்டாள.. நீங்க வீணா என்னச் சீண்டிறியள வெளியில போங்கோ போங்கோ வெளியில (நெஞ்சு உண்மையாகவே வலித்தது. திடீரெண்டு விழிப்பும் உண்டாகியது யாரோ கதவைப் பலமாகத் தட்டினார்கள்) 'யாரது?' 'நான்தான் சேர் உங்கட பொடிகாட் நித்திரையில் கனவு ஏதோ. கண்டு கத்தினனீங்கள் போல இருந்திது' 'எட இவ வளவும் கனவாலு}? உண்மையில்லையா?' ஜெனரல் நிம்மதியாகப் பெருமூச்செறிந்தார். - sethu - 06-22-2003 அமெரிக்காவின் எல்லா நன்றிகளும் பின்லாடனுக்கே ஜெ ருசலேம் சென்ற கிறீஸ்தவ யாத்திரிகர்களை துருக்கியரும் பாலஸ்தீனியர்களும் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டி 1095ஆம் ஆண்டு பாப்பரசர் கிறீஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான சிலுவை யுத்தத்தை பிரகடனப்படுத்தினார். இந்த யுத்தம் சுமாராக நூற்றிஐம்பது வருடங்கள் நீடித்தது. ஜெருசலேம் பிரச்சினை சிலுவை யுத்தப் பிரகடனம், சிலுவை யுத்தம் என்பன இரண்டாம் மிலேனியத்தை உலகளாவிய hPதியில் ஐரோப்பிய சக்கராதிபத்தியத்திற்கான மிலேனியமாக்கியது. இப்போது மூன்றாம் மிலேனியம். இரண்டாம் உலக மகாயுத்தம் 1945ஆம் ஆண்டு முடிந்ததைத் தொடர்ந்து கொம்யுூனிஸ ஆட்சியை 'சிவப்பாபத்து' எனப் பெயரிட்டு அதற்கெதிரான யுத்தத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்கத் தொடங்கியது. சிவப்பெதிர்ப்பு யுத்தத்தில் அமெரிக்கா முனைப்பான வெற்றியீட்டியதால் ஏறக்குறைய ரஸ்யா தவிர்ந்த அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பெரும் போக்காக அமெரிக்கத் தலைமையை ஏற்கலாயின. ஆனால், அமெரிக்காவின் உலகலாவிய தலைமைத்துவத்திற்கும், மேற்குலகின் வேகமான உலகளாவிய வர்த்தகப் பொருளாதாரத்திற்கும் இடைஞ்சலாக முதன் நிலை அர்த்தத் தில் இஸ்லாமும் இஸ்லாமிய அரசுகளும் காணப்படுகின்றன. 'சிவப்பாபத்து'க்கு எதிரான யுத்தம் முடிவடைந்ததும் இஸ்லாத்திற்கு எதிரான 'பச்சை ஆபத்து' என்றழைக்கப்படும் யுத்தமே அடுத்து நிகழுமென ஏற்கனவே அரசியல் ஞானிகளால் எதிர்வு கூறப்பட்டிருந்தது. ஆயினும் அயதொல்லா கொமெனியின் எழுச்சியிலிருந்தே அமெரிக்கா 'பச்சை ஆபத்து' எதிர்ப்பு யுத்தத்தை முழு அளவிற்கு சிந்திக்கத் தலைப்பட்டது. ஆயினும் 'சிவப்பாபத்து' அச்சுறுத்தல் தீரும்வரை அமெரிக்கா அதனை இரண்டாம் பட்சமாகவே வைத்திருக்க நேர்ந்தது. இதற்கிடையில் ரஸ்ய-அமெரிக்க பிரச்சினையைப் பயன்படுத்தியும், அமெரிக்க-ஈரானிய உறவு முறிந்ததைப் பயன்படுத்தியும் சதாம் உசைன் வளைகுடாவில் முன்னணிக்கு வந்தார். அமெரிக்காவுடனான போட்டியிலிருந்து 1989ஆம் ஆண்டு ரஸ்யா பின்வாங்கியதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது வெற்றிக்கொடியைக் கையிலேந்தியது. இஸ்லாமியப் பேருலகில், முதலடி போடப்படவேண்டிவராய் சதாம் உசைன் காணப்பட்டார். 1990ஆம் ஆண்டு பச்சை ஆபத்திற்கு எதிரான யுத்தம் வளைகுடாவில் வெடித்தது. ஆயினும் அந்த யுத்தம் உலகளாவிய பொருளில் பச்சை எதிர்ப்பு யுத்தமென முழு அளவில் பொருள்கொள்ளக் கடினமானதாகவும், அதேவேளை அந்தப் பச்சை எதிர்ப்பு யுத்தத்தைத் தொடர்ந்து விஸ்தரிக்க வழியற்றதாயும் இருந்தது. பச்சை எதிர்ப்பு யுத்தத்தை முழு அளவில் விஸ்தரிப்பதற்கான வழிகளை அமெரிக்கா தேடிக்கொண்டிருந்தவேளை வரப்பிரசாதமாய் பின்லாடன் வந்தார். அமெரிக்க பணயக் கைதிகளை கொமெனி வைத்திருந்ததைத் தவிர ஈரான் மீது அமெரிக்கா பாய வதற்கான வேறு சூழல்களை கொமெனி கொடுக்கவில்லை என்பதுடன் அவ வாறு பார்க்கக்கூடிய புறச்சூழலும் அப்போது அமெரிக்காவிற்கு இருக்கவில்லை. அச்சூழலைப் பயன்படுத்தி கொமெனி அமெரிக்க எதிர்ப்புச் சிந்தனையை ஈரானியர் மத்தியிலும் வேறு இஸ்லாமிய ஆர்வலர் மத்தியிலும் ஸ்தாபித்தும்விட்டார். ஆனால், சதாம் உசைனோ தனது ஆதிக்க வெறிக்கு இரையாக குவைத்தை கபளிகரம் செய்து தன் தேசத்து மக்களின் உரிமைதனை மீறுவதில் ருசிகண்ட சதாம் ஆதிக்க வெறிபிடித்து முன்யோசனையின்றி குவைத்தை கபளீகரம் செய்யவே இரட்சகர் வடிவில் அமெரிக்கா பச்சை எதிர்ப்பு யுத்தத்தை அழகாய் ஆரம்பித்தது. பச்சை எதிர்ப்பு யுத்தத்திற்கு தருணம் பார்த்திருந்த அமெரிக்காவிற்கு சதாம் வாய்ப்பளித்தது மட்டுமன்றி 'மீட்பர்' எனும் பெரும் பட்டத்தையும் அதற்கு வழங்கினார். 2001ஆம் ஆண்டு செப்டெம்பரில் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது பின்லாடன் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல் மூன்றாம் மிலேனியத்தை உலகளாவிய hPதியில் அமெரிக்காவிடம் தாரைவார்த்துக்கொடுப்பதற்கான முன்னேற்பாடாக அமைந்துவிட்டது. "ஒரு செயலை அதன் விளைவினாலேயே மதிப்பீடு செய்ய வேண்டும்" என்ற வரலாற்று ஆய்வு முறைக்கூடாகப் பார்க்கையில் பின்லாடன் செய்வித்ததாகக் கருதுப்படும் இச்செயலின் விளைவானது அமெரிக்காவிற்கு எல்லாவகையிலும் வாய்ப்பளித்து அதன் ஆதிக்கத்தை உலகளாவிய hPதியில் பெரிதும் ஸ்தாபிக்க உதவியது. இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந து வெளிப்படையாகவே சிலுவையுத்தம் என அறைகூவினார். குவைத்தின் மீதான சதாமின் கபளீகரம் வளைகுடாவை அமெரிக்கா இராணுவமயப்படுத்த உதவியது. ஆனால் அது உலகளாவிய விரிவுக்கு போதாமலிருந்தது. ஆனால் இரட்டைக்கோபுர தாக்குதல் அமெரிக்க ஆதிக்கவிஸ்தரிப்பிற்கான ஒரு தத்துவத்தை கொடுத்தது. சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பதே அத்தத்துவம். வளைகுடாவை அமெரிக்கா இராணுவ மயப்படுத்தியிருந்த நிலையிலிருந்து தற்போது தென்னாசியாவரை அந்த இராணுவமயத்தை விஸ்தரிக்க பின்லாடனைக் காரணங்காட்டி அமெரிக்கா முழு இந்து சமுத்திரத்தையுமே தன்பால் இராணுவமயப்படுத்தியுள்ளது. இது உலகளாவிய hPதியில் அமெரிக்காவிற்கு முழு அரசியற் பொருளாதார இலாபத்தையும் ஏற்படுத்த ஏதுவாய் உள்ளது. இந்திய சந்தை சுமாராக 80 வீதம்வரை உள்நாட்டுப் பண்டங்களால் நிரம்புகின்றது. நரசிம்மராவ பதவிக்கு வந்தபின் வெளிநாடுகளுடனான கூட்டுத் தயாரிப்புக்களுக்கு இந்தியா அதிகம் திறக்கப்பட்ட போதிலும் சந்தைப்பிடி இந்திய முதலாளிகளின் கையிலேயே உண்டு. ஆதலால் அமெரிக்கா தலைமையிலான உலக வர்த்தகமயமாக்கலுடன் இந்தியாவை இணைக்க அமெரிக்கா பெரும் எத்தனங்களைச் செய்யவேண்டியே இருந்த சூழலிற்தான் பின்லாடன் அமெரிக்காவிற்கு கைகொடுத்தார். யப்பான் போன்ற நாடுகளுடனான கூட்டுத்தயாரிப்புக்களுக்கு அப்பாலும் பலமான இந்திய முதலாளித்துவத்தைக் கொண்டதாகவே இந்திய அரசு இன்றும் காணப்படுகின்றது. சோவியத யுூனியனது வீழ்ச்சியின் பின்பும் இந்திய அரசு ரஸ்யாவுடனும் அமெரிக்காவுடனும் ஒரு விரோதமான உறவுக்கலவையைப் பேணுவதன் மூலம் இரண்டுக்கும் இடையே தனது முதன்மையை கட்டி வளர்க்கலாமென கனவுகண்டது. அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்களின் மத்தியிலும் ரஸ்யாவிடமிருந்து இந்தியா அண்டவெளித் தொழில் நுட்பங்களைப் பெற்றுக்கொண்டது. அதனை தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தியது. அமெரிக்க சீனலு} ரஸ்ய இழுபறிக்குள் இந்தியா இடையாக நுழைந்து தன்னை நிமிர்த்தலாமென நம்பியது. இந்நிலைப்பாடு ஆரம்பத்தில் இந்தியாவிற்கு குறிப்பிடக்கூடியளவு வெற்றிகளையும் கொடுத்தது. இந்நிலையில் இந்தியாவை தனது ஏகவர்த்தக மயமாக்கத்துக் குள் கொண்டுவரவும், தனது ஆதிக்கத்திற்கு இந்தியாவை சரணாகதியாக்கவும் தேவையான முன்னிலை வாய்ப்பை பாகிஸ்தானின் அணுகுண்டுப் பரிசோதனை அமெரிக்காவிற்கு கொடுத்திருந்தபோதிலும் முழுப்பிராந்தியத்தையும் வர்த்தக மயமாக்கல் செய்வதற்கான ஆதிக்கத்தைப் பெற அது போதாமலே இருந்தது. இராணுவ ஆதிக்கத்தை முழு அளவில் இந்து சமுத்திரத்திற் பெறுவதைத்தவிர வர்த்தக ஆதிக்கத்திற்கான அரசியல் நிலைமைகளை உருவாக்க முடியாதிருந்தது. அல்லது மெதுவாகவே பெறப்பட்டு வந்த வர்த்தக ஆதிக்கத்தை இந்த இராணுவ ஆதிக்கம் உடனடியாகத் துரிதப்படுத்துவதற்குரிய முன்நிபந்தனைகளை வழங்கியது. பாகிஸ்தானின் அணுப்பரிசோதனைப் பின்னணியில் பின்லாடனின் இஸ்லாமிய அடிப்படைவாதம், பின்லாடன் தத்துவாPதியாகவும், நேரடி இராணுவ hPதியாகவும் காஸ்மீர் போராட்டத்திற்கு உதவியமை, இந்திய உள்நாட்டு இஸ்லாமியர்களும் பின்லாடனால் ஈர்க்கப்பட்டுவந்தமை என்பவற்றின் பின்னணியில் இந்தியா இஸ்லாமியரை தோற்கடிக்க வேண்டிய பிரயத்தனத்துள் சிக்குண்டிருந்தது. அது இந்தியாவாற் தோற்கடிக்கப்படக் கூடியதாகவும் இருக்கவில்லை. இந்தப் பின்னணியில் பின்லாடன் அமெரிக்காவைக் குறிவைத்தபோது அமெரிக்காவைக் கையாண்டு இந்த இஸ்லாமிய சவாலை இந்தியா வெற்றிகொள்ள விரும்பியது. இந்தியாவின் இத்தகைய தேவையும் எண்ணமும் அமெரிக்காவிற்கு கைகொடுக்கவே அமெரிக்கா தனது இராணுவ மயத்தையும், வர்த்தகமயமாக்கலுக்கான அரசியலாதிக்கச் சூழலையும் கச்சிதமாய் நிறைவேற்றிவிட்டது, அமெரிக்காவை இந்தியா பயன்படுத்த நினைத்ததேயாயினும், விளைவு இந்தியாவை அமெரிக்காவிடம் முழு அளவிற் சரணாகதியாகிவிட்டது. உண்மையான அர்த்தத்தில் இன்னும் ஒரு பத்தாண்டில் இந்தியா அமெரிக்காவின் 51வது மாநிலம், இப்போது கிறிஸ்டினா ரொக்கா தென்னாசியாவிற்கான அமெரிக்க வைஸ்ரோய். 1980களில் இந்தியா சொல்லியது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாதென்று, ஆனால் கடந்த வாரம் வைஸ்ரோய் ரொக்கா யாழ்ப்பாணத்தில் ரணிலுடன் கூட்டாக நின்று மக்கள் முன் காட்சியளித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி தன் முனைப்புடன் பேசினார். வாஜ்பாயோ இப்போது வரவேற்பறிக்கை விடுபவரானார். இது இப்பிராந்தியத்தில் இந்தியாவை அமெரிக்கா மேவிவிட்டதற்கு ஓர் உதாரணம் மட்டுமே. இப்போது இந்து சமுத்திரத்தின் எந்த மூலைமுடுக்கிலும் அமெரிக்காவின் அரசியற் பொருளாதார இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவிய பின்லாடனுக்கே அமெரிக்காவின் எல்லா நன்றிகளும். மு. திருநாவுக்கரசு |