![]() |
|
சினிச் செய்திகள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிச் செய்திகள்... (/showthread.php?tid=8292) |
- AJeevan - 08-25-2003 sOliyAn Wrote:எப்படியும் கருத்து எழுதலாம்.. இப்படியும் எழுதலாம்.. கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதே!! <!--emo& <b>யாருக்கு தலைவா?</b> - AJeevan - 08-25-2003 சுரதா/suratha Wrote:நல்லதொரு விடயம் பற்றி பேசுகிறீர்கள்.நிறைய விடயதானங்கள் கிடைக்கின்றன.ஒதுங்கி நின்று உள்வாங்கிகொள்கிறேன். நன்றி சுரதா, அமைதியாக உள்வாங்குவதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. எப்போது கொட்டித் தீர்க்கப் போகிறீர்கள்?.......................... கிடைத்த நட்புக்கு நன்றி.வாழ்த்துகள்.............. AJeevan - Paranee - 08-25-2003 வணக்கம் திரு.அஜீவன் இலங்கையைப்பொறுத்தவரையில் சிங்கள மக்களிற்கு தமிழ்சினிமாவைவிட கிந்தி சினிமாமீதான ஈடுபாடு அதிகமாக உள்ளது. இதற்கான காரணம். ஆங்கில சினிமாவுடன் ஓப்பிடும்போது கிந்திசினிமாதான் அதிகமாக இருக்கின்றது. தமிழர்களைப்பொறுத்தவரையி;ல் அவர்களிற்கு தமிழைத்தவிர வேறு எந்த மொழிப்படங்களும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். ஆங்கிலப்படமும்தான். அப்படி ஆங்கிலப்படம் அறிந்ததாயின் அது பாலியல் சம்பந்தப்பட்ட படங்களாகவும் யுத்தம் சம்பந்தமான படங்களாகவும் காணப்படுகின்றன. - AJeevan - 08-25-2003 அன்பு நிறை பரணி, உங்கள் பதில் கண்டு மகிழ்ந்து நிற்கிறேன்.உங்களைப் போன்றவர்கள் எமக்கு கிடைக்கும் அரிய சொத்துக்கள் பரணி. அன்று நாங்கள் வழி தவறிய போதும் , தப்பான எண்ணங்களை முன் வைத்த போதும் , எவருமே அன்புடன் எம்மைத் திருத்தவோ , விளக்கம் தரவோ முயலவில்லை. ஒன்று எங்கள் மேல் எரிந்து விழுந்திருப்பார்கள் அல்லது விட்டு விடுங்கள் அவன் எங்காவது போய் மாட்டுப்படட்டும்.................. என்று ஒதுங்கினார்கள். அதை நாங்கள் செய்யவே கூடாது. அதனால்தான் நாங்கள் செய்த அதே தவறை அடுத்தவர் செய்யக் கூடாதென நினைத்து எழுதினேன். எமது பிரச்சனைகளை வைத்து நாம் ஏதாவது சில சினிமா செய்ய வேண்டுமென்றால் அதற்கு சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கக் கூடிய பொறுமையும், இச் சந்தர்ப்பத்தில் எதை முன் வைப்பது , எதை முன் வைக்கக் கூடாது எனும் தொலை நோக்கும் தேவை. இவை தவறும் போது ........................ என்ன நடக்கும் என்பதை எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு உதாரணத்துக்காக யாழில் நான் எழுதத் தொடங்கிய போது எனக்கு வந்த ஒரு உடன் பிறப்பின் மடலையும் , அதற்கு நான் கொடுத்த பதிலையும் பாருங்கள். நமது நிலை என்ன? எங்கே இருக்கிறோம் என்பது விளங்கும். <b>கடிதமும்;பதிலும்:-</b> <b>X:</b>வணக்கம் அஜீவன் அண்ணா உங்கள் போண்ற உன்னதமாண கலைஞர்கள் இங்கு வந்திருப்பது எனக்கு சந்தோசமாகவுள்ளது. உங்கள் பற்றி பலதடவை அறிந்துள்ளேன். இன்று தான் உங்களுக்கு எழுதமுடிகிறது. அதற்காக மண்ணிக்கவும். நீங்கள் நடித்த ஒருபடமும் நான் இன்னும் பார்க்கஇல்லை. எப்போது மீண்டும் தீபத்தில் உங்ள் படம் வரும். பதிலுக்காக எதிர்பார்கிகிறேன். பாசமுடன் X. <b>AJeevan பதில்:</b> அன்புடன் சகோதரி X க்கு உங்கள் மடலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. நான் வேறோர் நாட்டில் வாழும் போது நடித்ததுண்டு.யேர்மன் படமொன்றில் நடித்துள்ளேன். தமிழ் தொலைக்காட்சிகளில் சில சமயங்களில் எனது குறும் படங்கள் ஒளிபரப்பப் பட்டதுண்டு. இனி எப்போது வரும் என்பது தற்போதைய ஒரு குறும் படத்தின் வேலை முடிந்த பிறகுதான் தெரியும். ஏற்கனவே செய்யப் பட்ட படங்கள் தேவையெனில் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி போன்ற விபரங்களுடன் எழுதினால் அணுப்ப முடியும். வளம் பெற வாழ்த்துகள். பணிவன்புடன் அஜீவன் <b>X:</b> உங்களில் நான் வைத்திருந்த நமிபிக்கையை பாழாக்கிவிட்டிங்கள். காசுக்காக வெள்ளைக்காரருடன் கேவலமாக படம் நடிக்க கூடியவர் என்று நான் நினைத்திருக்வில்லை. காசு வரும் போகும் ஆனால் மானம் போனால் வராது. எமது இடத்திலும் காம்பில இருந்த 2 பேர் இப்படித்தான் காசு ஆசையில் வெள்ளைக்காரருடன் வுளுபிலிம்மில் நடித்தனர். அவர்கள் நிலமை இன்று படுகேவலம். அவர்களுக்கு எயிட் இருக்குமென்ற எவரும் கிட்டே செல்வதில்லை. இப்போது உங்களை பாராட்டு எழுதுகிறவர்கள் உங்களுக்கு ஏதாவது வருத்தம் வந்தால் தங்களுக்கும் தொத்தழவிடும் என்று கிட்டே வரமாட்டார்கள். <b>AJeevan பதில்:-</b> வெள்ளைக்கார நாட்டுக்கு வரலாம்இவெள்ளைக்காரருடன் வாழலாம்.வெள்ளைக்கார் செய்த பொருட்களை பாவிக்கலாம்(கணணி உட்பட). ஆனால் இப்படிக் கேவலமான எண்ணமுள்ள ஒருவர் X என்பது ? உம்........................ வெள்ளைக்காரருடன் படம் செய்வது, அவர்களுடன் படுக்கை இன்பம் அனுபவிப்பதற்கல்ல.அதனால்தான் இன்னும் தேறாமல் நாங்கள் இருக்கிறோம். இலங்கைத் தமிழன் யார் என்பது இலங்கைத் தமிழனுக்குத் தெரிவதில் பலனில்லை.உலகத்துக்கு தெரியப்படுத்துங்கள்.................... வாழ்த்துகள் <b>X:</b> நான் 16 வயதில் இங்குவந்து பாடசாலையில் படித்தனான். எனக்கு வெள்ளைக்காரர் பற்றி சொல்லாதீர்கள். நான் உங்கள் நன்மைக்குத்தான் சென்னேன். அதைக்கூட புரிந்து கொள்ளாமல் என்னுடன் சண்டைக்கு வருகிறீர்கள். உங்களுக்கு அறிவுரை சொன்னதற்கு எனக்கு செருப்பால் அடிக்க வேண்டும் <b>AJeevan பதில்:-</b> உங்களுக்கான அனுபவம் எனக்கேற்படவில்லை. தான் செய்த தவறுக்கு தான்தான் தண்டித்துக் கொள்ள வேண்டும். தாராளமாக அடித்துக்கொள்ளுங்கள். ஆசீர்வாதங்கள் <b>X:</b>நான் பாடசாலையில் படித்தபோது ஒரு விளையாட்டுபோட்டியில் முதலாவதாக வந்தபோது ஒரு பெடியன் வாழ்த்து சொல்லும் சாக்கில் என்னை கொஞ்சினார் உடனேயே அந்த இடத்தில்வைத்து அவனுக்கு கன்னத்தில் அறைந்தேன். நாங்கள் தன்மானக்காரர் உங்களுக்கு அது எங்கே விளங்கர்போகிறது. தமிழர் ஒருத்தரும் இல்லாமல் பரிசு வாங்கினேன் என்று அழுது எழுதி இருந்தீர்கள். ஏன் உங்களுக்கு பக்கத்தில் தமிழர் ஒருவரும் வரவில்லை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். <b>மீண்டும் X:- </b> மவுனத்தின் அறிகுறி சம்மதம் என்று அர்த்தம் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் நீங்கள் முதலில் இப்படி பேசியிருக்ககுடாது அதை வீடுவோம் மன்னிப்போம் மறப்போம். உங்கள் மனைவியையும் விசாரித்ததாக சொல்லுங்கள் நான் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும் பாசமுடன் X. <b>AJeevan பதில்:</b> மவுனத்தின் அறிகுறி சம்மதம் என்று யார் சொன்னது? மன்னிக்க யாரும் தவறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு ஏற்பட்ட நிலை எனக்கு வராமலிருக்க அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள். நான் கொஞ்சம் அவதானமாக இருக்க யோசித்துக் கொண்டிருக்கிறேன்? அவ்வளவுதான்............................. இல்லாத மனைவியை எப்படி விசாரித்ததாக சொல்லுவது? நீங்கள் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கலாம்இ அப்படி எதுவும் நடக்கவில்லையே? உங்கள் வைத்தியர் பரவாயில்லையா? எதற்கும் தவறாமல் நேரா நேரத்துக்கு மருந்து எடுங்கள். உங்களைப் போன்றவர்கள் வளமாக வாழவேண்டும். பாசமான X க்கு AJeevan <b>X:-</b> உமது பதிலை பார்க்கும் போது உமக்கு சரியான திமிர் என்று தெரிகிறது. நீர் ஒன்றும் அஜீத் விஜய் இல்லை இப்படி திமிர் பிடித்து திரியாதேயும். தலையைப்ர்த்தால் மொட்டை விழுந்துவிட்டது. 50 வயது வரும் போல் உள்ளது இன்னும் கல்யாணம் செய்யவில்லையா? உமக்கு எங்கு நிரந்தமாக மனைவி இருக்கும் உம் போன்றவர்களுக்கு யார் பெண் தருவார்கள்.. நாம் அறிவுரை சொன்னால் கூட உமக்கு விளங்குதில்லை. இப்பவும் பிரச்சினை இல்லை இந்த வுளுபிலிமுக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்தியா போனீர் என்றால் சேரியில் உள்ள பெண்களை கல்யாணம் செய்யலாம். ஆசீர்வாதங்கள் X குடும்பம் <b>AJeevan பதில்:-</b> சேரியில் உள்ள பெண்களும் மனிதர்கள்தான். அவர்களுக்குள்ள பெரிய மனசு உங்களுக்கு இல்லாமல் போய் விட்டது, வருத்தம்தான். (நாட்டில் இப்படியான எண்ணங் கொண்டவர்கள் , ........ ஓடினார்கள் என்பது தெரியும்தானே?) உடனடியாக பக்கதிலிருக்கும் டாக்குதரை பாரும். உமது பதிலை பார்க்கும் போது உமக்கு சரியான திமிர் என்றும் , நீர் ஒன்றும் அஜீத் விஜய் இல்லை இப்படி திமிர் பிடித்து திரியாதேயும் என்றும் எழுதியிருக்கிறீர். உதாரணத்தக்கும் உமக்கு கிடைப்பவர்களைப் பார்த்தால் நீர் ஒரு முழு வ.......... என்று தெரிகிறது. உமது முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை தாரும். நீர் சரியான ஒருவராக இருந்தால். மற்றவர்களைத் திருத்த முயல்வதை விட உம்மைத் திருத்த முற்படும். நாம் திருந்தினால் அதுவே உலகத்தின் ஒரு பெரிய பகுதியை திருத்தியதாகி விடும். எனக்கு என்ன சொன்னாலும் : நான் கணக்கெடுப்பவனல்ல. நண்ர்களாக இருந்து துரோகம் செய்வர்களை விட எதிரிகளை நம்பலாம். உமது கருத்துகளைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது............................ மேலே பார்த்து உமிழ்வதை தவிர்த்துக் கொள்ளும், அது உமது முகத்தில்தான் படியும். <b>X:</b>சேரிப்பெண்களுக்கு மனம் பெரிதல்ல உமது ஜில்மாலுகளை புரிந்து கொள்ளமாட்டார்கள். அதனால் பிரச்சினை குறைவு. மற்றது விஜய் அஜித்தை ஏன் சொன்னேன் என்றால் அவர்களை உமக்கு தெரியுமென்பதால் விஜய் திருமணம் முடித்திருப்பது தாயகத்தில் எனது பக்கத்து ஊர் பெண்தான். அஜித் வெளிநாடு வந்திருந்தால் அவரும் எங்கள் பெண்ணைத்தான் கல்யாணம் செய்திருப்பார். உமக்;கு ஈழத்து கலைஞர்களை தெரியுமா? உமக்;கு தெரியாது என்பதாலேயே அவர்களின் பெயரை சொல்லவில்லை. உமக்கு Ram.த்தெரியுமா? Tத் தெரியுமா? அல்லது Ra அண்னனைத்தெரியுமா? இவர்கள் பற்றி உமக்குதெரிந்திருந்தால் தானே அவர்கள் பெயரை உமக்கு நான் சொல்லலாம். Rடன் தனிப்பட்ட ரீதியில் நான் பேசியிருக்கிறேன் என்பது உமக்குத்தெரியுமா? அவரின் கைத்தொலைபேசி இலக்கம் கூட என்னிடமுள்ளது. உமது நன்மைக்கு அறிவுரைச்சென்னது எனது தப்பு என்னை டாக்குதரிடம் போகசொல்லும் அளவுக்கு எனது மனதை புண்படுத்திவிட்டீர். நான் முதல் மெயில் அனுப்பும்போது உம்மைப்பற்றி எவ்வளவு அக்கறை எனக்கு இருந்து. Rக்கு உம்மை பற்றி சொன்னேன். அறிமுகம் இல்லாத படிப்பறிவு இல்லாதவர்களுக்கு ஏன் அறிவுரை சொல்கிறீர்கள் என்றார். நான் உமக்கு அனுதாபபட்டது தவறு தான் என்னை மன்னித்துவிடுங்கள். நான் டாக்கரிடம் போகவுமில்லை உங்களுக்கு பதிலும் எழுதவில்லை. நீங்களும் எனக்கு பதில் எழுதவேண்டாம். இது கடைசி மெயிலாய் இருக்கட்டும். உங்களுக்கு மெயில் எழுத வெளிக்கிட்டு நான் அழுதது போதும். <b>AJeevan பதில்:-</b> Dear X, உங்கள் மனதை புண்படுத்தியதற்கு Very sorry? Take Care and all the best. AJeevan <b>X:-</b> உங்களுக்கு மெயில் எழுதி இன்னுமொருமுறை வீணாக சண்டையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. உங்களுக்கு மெயில் எழுதவே பயமாய் இருக்கு நான் ஏதொ எழுத மீண்டும் நீங்கள் தவறாக எண்ணிவிடுவீர்களே என்று. நீங்கள் மனம் வருந்தியபோது அதற்காக நான் பதில் எழுத வேண்டும் என்று எழுதுகிறேன். நானும் ஏதாவது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னியுங்கள். இத்துடன் முடிப்போம் - Paranee - 08-25-2003 வணக்கம் நன்றி நன்றி திரு.அஜீவன். தங்கள் பதிலால் எனக்கு பெரியதொரு மகிழ்வு ஏற்பட்டது. பல சந்தேகங்கள் உங்கள் பதிலால் எனக்கு தெளிவுற்றது. தாங்கள் இணைத்துள்ள அந்த சகோதரியின் கேள்வி பதிலை பார்த்தேன். மனது வேதனையாகத்தான் இருந்தது. தமக்கு கிடைக்காத ஓன்று மற்றவர்களிற்கு கிடைக்கின்றது என்ற ஆதங்கத்தில் கதைக்கின்ற ஒரு நிலையாகத்தான் அவருடைய நிலைப்பாடு இருக்கின்றது. அவருடைய முதல் கேள்விக்கும் உங்களுடைய பதிலிற்கும் அவருடைய இரண்டாம் பாகம் பொருத்தமானதாக தெரியவில்லை. படத்தில் நடித்துள்ளதாக நீங்கள் கூறியதற்கு அவர் பல கற்பனைகள் எடுத்துள்ளார். என்ன செய்வது இன்றுவரை நாம் திருந்தவில்லை. - Mathivathanan - 08-25-2003 Karavai Paranee Wrote:வணக்கம்நன்றி பரணி.. நன்றி அஜீவன்.. உங்களுக்கு அந்த நகல்களின் நோக்கு புரியாதிருப்பது வேதனைக்குரியது. மீண்டும் ஓரிருமுறை படித்துப்பாருங்கள். அஜீவனுக்குப் புரிந்தும் புரியாமலிருக்கலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- AJeevan - 08-25-2003 அன்பின் பரணி, மதிவதனன், உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த மடல்களின் தொடரை இணைத்ததற்கான நோக்கம், யாரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது பழிவாங்கவோ அல்ல. இதிலிருந்து கற்க வேண்டியதும்,எடுத்துக் கொள்ள வேண்டியதுமான பாடம் ஒன்று இருக்கிறது. அதாவது எமக்கு இருக்கும் ஒரு பெரிய குறை எமது சினிமாவுக்காக ஒரு திறமையான நடிகையை தேர்வு செய்வது. நான், எனது 13வது வயதில் இலங்கையின் சிங்கள சினிமாவில் ஒரு சிறுவனின் பாத்திரமேற்று நடிகனாக கலையுலகத்தில் நுழைந்தேன். அதற்கு காரணமானவர் எனது தந்தையின் நண்பரான இலங்கை திரைப்பட வரலாற்றின் முதலாவது தமிழ் திரைப்படத்தை உருவாக்கிய ஹென்றி சந்திரவங்ச அவர்கள். அதுவும் ஒரு விபத்தாகவே நடந்தது நான் பார்த்த படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகளை அப்படியே செய்து காட்டி அம்மாவின் அடி உதைக்கு ஆளாவேன். அம்மாவின் ஆதங்கமும், கோபமும் இவன் படிக்காமல் மனதை வேறெங்கோ செலுத்துகிறான் என்பது. ஒரு முறை என் குறும்புகளைப் பார்த்த ஹென்றி அங்கள், என்னிடம் படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டார். அம்மா கேட்டால் கொண்டே போடுவார்கள் என்றேன். ஆனால் அவர் என்னை பாடசாலை ஓய்வு காலத்தில் அவரது "வனகத்த கெல்ல" (தமிழில் "சுமதி எங்கே" என்று பின்னர் மொழி மாற்றம் செய்யப் பட்டது.) படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்று ஒரு சிறு பகுதியில் நடிக்க வைத்தார். ஒரு வாரமாக நடித்தேன். ஆனால் படத்தில் நான் வந்ததென்னவோ 2 நிமிடத்துக்கும் குறைவுதான். என்னாலேயே என்னை சரியாக படத்தில் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அப்போதெல்லாம் வீடியோ தொழில் நுட்பம் வளராத காலம். எனது நண்பர்களுடன் படம் பார்க்க போனால் " இந்த கொஞ்ச நேரத்துக்கா எங்களைக் கூட்டி வந்தாய், MGR போல படம் முழுக்க வர வேணும் " என்று கிண்டலடித்து, அடிபிடிப்பட்டது எவ்வளவு முட்டாள் தனம் என்று பின்னர்தான் விளங்கியது. இத் தாக்கத்தின் காரணமாக திருட்டுத் தனமாக சினிமா - நாடக (சனி-ஞாயிறு) வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமா ஒன்றை உருவாக்குவதில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை நடிகைகளை தேடுவது. இம் மடல் மூலம் நாம் பார்க்க வேண்டியது, ஒரு ஆணுக்கே இப்படியென்றால் ? பெண்கள் எப்படி வருவார்கள்? என்பதைத்தான். நாம் இப்படியே இருந்தால் எப்போது நமக்கென்று ஒரு சினிமாவை உருவாக்குவது? நான் குறும்படங்கள் பகுதியில் எழுதினேன் யாரும் விரும்பினால் "குறும்பட பயிற்சிப் பட்டறை" ஒன்றை ஒழுங்கு செய்யுங்கள். வந்து தெரிந்ததை சொல்லித் தருகிறேன் என்று. எவருமே அதைப் பொருட்படுத்தவில்லை. 5 பேர் பயணம் செய்யும் காரை ஓட்டுவதற்கு சாரதி வகுப்புக்குப் போய் , எழுத்துப் பரீட்சை எழுதி சித்தியடைந்து, பின்னர் 20 முதல் 80 மணித்தியாலம் ஓடி சித்தியடைந்த பிறகுதான் காரையே ஓட்ட உங்களுக்கு அனுமதி கிடைக்கிறது:முடிகிறது. கார் விபத்துக்குள்ளாகி செத்தால் 5 பேர்தான். ஆனால் ஒரு திரைப்படத்தை எடுக்க சினிமா பற்றிய அடிப்படை அறிவே இல்லாதவர்கள் இறங்குவதுதான் பெரும் ஆபத்து. இதனால் ஒரு சமுதாயமே விபத்துக்குள்ளாவதை எண்ணியவர்கள் எத்தனை பேர்? இனி என்ன செய்யலாம் நீங்கள் கருத்துகளை முன் வைக்கலாம். முன் வைக்க வேண்டும்.............................. (X ன் மடலை தயவுடன் மறந்து விடுங்கள். அது நமக்கு கிடைத்த அன்பின் தீப்பொறி. அவருக்கு என் சிரம் தாழ் நன்றிகள்) பணிவன்புடன் உங்கள் அஜீவன் - sethu - 08-25-2003 லண்டனில் பல நடிகர்கள் நடிகைகள் இருக்கிறார்கள். - Mathivathanan - 08-25-2003 sethu Wrote:லண்டனில் பல நடிகர்கள் நடிகைகள் இருக்கிறார்கள்.ஏன்ராப்பா சேது.. கலைஞர்கள் நடிகைகள் என்று ஒருவருமில்லை எண்டு காரசாரமா எழுதினது ஞாபகமிருக்கு. இப்ப இப்பிடிச் சொல்லுறியள். அடிக்கடி மாறுறியள் கவனம். - கண்ணன் - 08-25-2003 என்ன அஜீவன் ஜனரஞ்சக படம் ஒன்றும் தயாரிக்கமாட்டேன் என்றீர்கள் திரைக்கதை வசனம் எழுதியமாதிரி இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 08-25-2003 இதே சாயலில் திரைக்கதை வசனத்தை படித்திருக்கிறேனே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 08-25-2003 அஜீவன்.. இப்படியான விமர்சனங்களைக் கடந்தும்.. உண்மையான கலை ஆர்வத்தடன் முன்வரும் பெண் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனால் புகலிட வாழ்வில் தனித்தியங்க வேண்டிய சுமை அவர்களின் நேரத்தை விழுங்கினாலும்... வெகுவிரைவில் அப்படியானவர்களின் நடிப்பை தங்களுக்கு காண்பிக்க முயற்சிக்கிறேன். எப்போதென்று கேட்காதீர்கள்.. காலம் சொல்லி கோலம் கெட்ட சங்கதிகள்தான் நிறையவே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Manithaasan - 08-26-2003 அஜீவன் இது தொடர்பாக எழுத நிறைய இருக்கிறது ..எழுதிவருகிறேன் காத்திருங்கள். - AJeevan - 08-26-2003 வயிற்றினுள் இருந்தால், எச்சிலாக அல்லது ம....மாக,மூ......மாக, வியர்வயாக வரவேண்டும். உங்கள் அணுபவங்களை (உங்கள் சென்சரோடு) வாந்தியாவது எடுங்கள்.............. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்................................................... இவற்றைக் கூட படமாக்கும் எண்ணமுண்டு. - kuruvikal - 08-26-2003 <img src='http://thatstamil.com/images12/cinema/vijayakanth-3-300.jpg' border='0' alt='user posted image'> முன்னாள் முன்னணி நடிகரும் இந்நாள் நடிகர் மன்றத் தலவருமான நடிகர் விஜயகாந் தந்து 25 வது வருட நடிப்புலக பிரவேசத்தை இவ் வருடத்துடன் கொண்டாடுகிறாராம்.....! அத்துடன் ஆவணித்திங்கள் 25ம் நாள் தனது பிறந்த நாளையும் ஏழை எளிய மக்களுடன் கொண்டாடினாராம்....! இரண்டுக்குமாக அவருடைய நடிப்புக்களை கண்டு ரசித்தவர்கள் என்ற வகையில் எமது வாழ்த்துக்கள்...! தகவல் தந்தது தற்ஸ் தமிழ் டொட் கொம் - kuruvikal - 08-26-2003 திருத்தம்... தந்து----தனது - AJeevan - 08-26-2003 kuruvikal Wrote:<img src='http://thatstamil.com/images12/cinema/vijayakanth-3-300.jpg' border='0' alt='user posted image'> இவர் தனது பிறந்த நாளை தமிழ் ஈழம் கிடைக்கும் வரைக் கொண்டாட மாட்டேன் என்றாரே? - Mathivathanan - 08-26-2003 AJeevan Wrote:லண்டனிலை குடுத்த வரவேற்பு அதிர்சியிலை மறந்து கொண்டாடுறாராக்கும்.kuruvikal Wrote:<img src='http://thatstamil.com/images12/cinema/vijayakanth-3-300.jpg' border='0' alt='user posted image'> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-26-2003 என்ன அவரையும் உங்கள மாதிரி எண்டு நினைச்சியலே தனிப்பட்ட லாப நஸ்டத்துக்காக சுயநலத்துக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்குற ஆக்கள் மாதிரி எண்டு...அந்தாள் எளிமையாக ஏழை எளிய மக்களுடன் தனது பிறந்தநாளை கழித்திருக்கிறது.....உங்களை மாதிரி நன்றி கெட்ட......?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 08-26-2003 என்ன குருவிகளே அவரையும் என்ற உயர்திணையில் தொடங்கி கழித்திருக்கிறது என அஃறினையில் முடித்திருக்கிறீர்.. அதுசரி யாரை இவ்வளவு கோபத்துடன்.. நன்றியுடன்.. ?? |