![]() |
|
ஈ என் டி எல் எப்f - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஈ என் டி எல் எப்f (/showthread.php?tid=8288) |
- sethu - 07-28-2003 மற்றது அவர் திரும்ப வருவதாயின் 5 வருடம் எண்டால் வானொலி இருக்கோணும் 5 வருடம். - GMathivathanan - 07-28-2003 சாத்திரம்.. சொல்லத்தெரியுது.. சண்டை.. தெடங்கிற.. பிளானிலை.. ஓடித்திரியிறியள்.. எண்டபடியால்.. பலகாலம்.. இருக்குமெண்டு.. நினைக்கிறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 07-29-2003 சண்டைக்கு யாரப்பா அம்ரிக்காவுக்கும், இச்சுரவேலுக்;கும் ஓடித்திரியிரது அதோட. புலிகளா? சண்டைக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. உங்க சில காட்டிக் கொடுக்கிறதுகள் தான். சமாதானமென்றால் வந்து சேரவேணும் என்ற பயம். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 07-29-2003 P.S.Seelan Wrote:சண்டைக்கு யாரப்பா அம்ரிக்காவுக்கும், இச்சுரவேலுக்;கும் ஓடித்திரியிரது அதோட. புலிகளா? சண்டைக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. உங்க சில காட்டிக் கொடுக்கிறதுகள் தான். சமாதானமென்றால் வந்து சேரவேணும் என்ற பயம்.87 ம்.. ஆண்டிலையிருந்து.. சண்டைபிடிச்சது.. அவங்கள்தானாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-29-2003 ஈ.என்.டி.எல்.எவ் ஐப்பான் து}துவர் பின்னணயில் யார் ? இரகசியப் பேச்சுவார்த்தை ! - நிதர்சன் - ---------------------------------------------------------- இந்தியாவிற்கான ஐப்பானிய பிரதித்து}துவர் ஈ.என்.டி.எல்.எவ் என்கின்ற குழுவின் தலைவரான 'பரந்தன் ராஜனை! சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் சிலதினங்களுக்கு முன் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்பாக சென்னையில் வைத்தும் ஒரு சந்திப்பு இருதரப்பினருக்குமிடையே நடந்ததாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விபரம் வெளிவரவில்லை. இரகசியமான முறையில் இப்பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்ததாகச் செய்தி மட்டுமே வெளிவந்தது. இலங்கையில் அரசியலில் தற்போது நேரடித்தொடர்புளெதுவுமற்ற ஈ.என்.டி.எல்.எவ் (ஈழத்தேசிய சனநாயக விடுதலை முன்னணி) குழுவுடன் ஐப்பானுக்கு அப்படி என்ன இரகசியப்பேச்சு வார்த்தை ? என்பது தமிழ் மக்கள் மனங்களில் இப்போது எழுந்துள்ள கேள்வி. 'பரந்தன் ராஜனை" மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்காக வரும்படி ஐப்பான் அழைப்பு விடுத்ததாகவும் அறிய முடிகிறது. 1983இல் நடந்த இன வன்முறைச் சம்பவங்களின் பின் பல புதிய தமிழ் குழுக்கள் பல்வேறுபட்ட பெயர்களில் தோற்றம் பெற்றன. ஆயினும் ஈ.என்.டி.எல்.எவ் என்ற குழு. 'இந்திய அமைதிப்படை"யின் வருகையுடனேயே தோற்றம் பெற்றதெனலாம். குழுவின் பெயர்தான் புதியதெனினும் அதன் அங்கத்தவர்கள் பழைய ஆட்களே. இதன் தலைவரான 'பரந்தன் ராஜன்" என்றழைக்கப்படும் ஞானசேகரன் புளொட் அமைப்பிலிருந்து வெளியேறியவர். புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு காரணத்தால் சில சகாக்களுடன் வெளியேறி புதிய குழுவை ஆரம்பித்தார். இந்திய இராணுவத்தோடு இந்தியாவிலிருந்து வந்த இக்குழுவின் தலைமையகம் கிளிநொச்சியிலே அமைந்திருந்தது. 1990ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறியதுடன் ஈ.என்.டி.எல்.எவ் குழுவும் வெளியேறி இந்தியாவிற்கு ஓடிவிட்டது. இந்திய இராணுவத்தின் கையாட்களாகவே செயற்பட்ட இக்குழுவினர் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தமிழ்ப்பிரதேசங்களில் மக்களுக்கு பல விதங்களில் இம்சைபுரிந்து வந்தனர். கொலை , களவு , பாலியல் வன்முறை என இக்குழுவினர் செய்த தீய செயல்களை குறிப்பாக கிளிநொச்சி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஈ.என்.டி.எல்.எவ் அப்போதிருந்த வரதராஜப்பெருமாள் தலைமையிலான மாகாண சபையிலும் அங்கம் வகித்தது. இங்கு வந்ததும் , மக்கள் மத்தியில் தம்மைப் பிரச்சாரம் செய்கையில் , புளொட் , ரெலோ , ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இயக்கங்களின் கூட்டிணைப்பே ஈ.என்டி.எல்.எவ் என தம்மை அறிமுகம் செய்து கொண்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட மூன்று இயக்கங்களில் இருந்தும் விலக்கப்பட்ட அல்லது வெளியேறியோர் உதிரிகளாக வந்து இணைந்து கொண்ட குழுவே இது என்பது பின்னர் தெரியவந்தது. 90இல் தமிழ் பிரதேசங்களில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறிக் கொண்டிருக்க - புலிகள் காடுகளில் இருந்து உள்ளே வந்து கொண்டிருக்க - அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடிக்கொண்டிருந்த குழுக்களில் ஈ.என்.டி.எல்.எவ் குழுவும் அடங்கும். இந்திய இராணுவத்துடனேயே இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற இக்குழுவினர் பல உறுப்பினர்கள் கலைந்து போனநிலையில் , ஒரு சிலருடன் இந்தியாவில் செயற்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான உதவிகளை இந்தியப் புலனாய்வு அமைப்பான 'றோ" வே(சுயுறு) செய்துவருகின்றது. 'றோ"வின் பணஉதவியுடன் 90களில் இக்குழு 'அக்கினி புத்திரன்" என்ற பெயரில் இனப்பிரச்சனையை தொடர்புபடுத்தி திரைப்படம் ஒன்றைத் தயாரித்து வந்தது. தமிழீழ ஆதரவாளர்களால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் காரணமாக இத்திரைப்படம் நின்று போனது. பெங்களுரில் தற்போது மறைந்த இந்திரா காந்தியின் பெயரில் கல்லு}ரி ஒன்றை இக்குழு நடாத்தி வருகின்றனர். தமிழ்ப்பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றனர். அத்துடன் இக்குழுவினர் ஐரோப்பிய நாடொன்றில் தமிழ் வானொலி நிலையம் ஒன்றையும் நடாத்திவருகின்றனர். தமிழ் நாட்டில் புலம்பெயர்ந்த தமிழீழ மாணவர்களுக்கு பலவிதமான உதவிகளை சந்திரகாசன் தலைமயிலான 'புரொக்டெக்ட்" (Pசுழுவுநுஊவு) என்ற அமைப்பு வழங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த மாணவர்களுக்கு 'புலி" எதிர்ப்புக் கல்வி யும் புகட்டப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு நிதியுதவிகளை 'றோ" அமைப்பே வழங்கிவருவதாகவும் அறிய முடிகின்றது. இலங்கையின் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அனுசரணையாளர்களாகப் பணிபுரியும் நாடுகளஆ இலங்கை அரசியலோடு நேரடியாகப் பங்கு கொள்ளும் எந்தக்குழுக்களுடனும் பேசுவதைப்பற்றி யாருக்கும் பிரச்சனையில்லை. 'றோ" வின் வளர்ப்புக்குழுவான இலங்கை அரசியலோடு நேரடித்தொடர்புகளெதுவுமற்ற , ஒரு குழுவோடு இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பின்னணியில் நிற்பவர்கள் யார் என்பது பல சந்தேகங்களை உண்டுபண்ணும் கேள்வியாக உள்ளது. ஒருபக்க சர்வதேச பாதுகாப்பு வலை , வௌ;வேறு பக்கங்களில் இருந்தும் வௌ;வேறு விதமானவலைகள் ! மலிந்தால் சந்தைக்கு வராமலா போகும். நன்றி - ஈழநாதம் 11-17.07.2003.தமிழ் வெப்றேடியோ[/size] |