![]() |
|
மகேஸ்வரன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மகேஸ்வரன் (/showthread.php?tid=7966) |
- தணிக்கை - 11-23-2003 பரனி ஒருவரை ஆதரிப்பதற்கும் எதிர்பதற்கும் சரியான நியாயங்கள் வேன்டும் உதாரனம் நான் இவரை ஆதரிபதற்கு அதில் காரனம் இருக்கு மோகன் எளுதியதை அளித்தார். ஆனால் அதை நீங்கள் அறிந்திருக்கவேன்டும் குடிவரவுக் குடியகள்வுத்தினைக்களத்தால் இவர் ஆட்சி மாறிநால் கைது செய்யப்படலாம் காரனம் (ஒரு) தலைவரின் மகனக்கு கடவுச்சீட்டு எடுத்து கொடுத்தமை. - P.S.Seelan - 11-24-2003 இத்தனையும் செய்தபின் அந்தக் கடவுள்கள் கூட இவர்களைத் திரும்பிப் பார்க்குமா என்பது சந்தேகம்? ஐயா மகேசுவரா ஈஸ்வராவுக்கெல்லாம் தேரும் கோயிலும் கட்டிக் கொடுத்தால் செய்த பாவங்கள் தீருமா? கோயிலுக்குப் பக்கத்தில் பார்க்கவில்லயா மரத்தின் கீழ் இருந்து வெய்யில் மழையை பொருட்படுத்தாமல் பிள்ளைகள் படிப்பதை. அதற்குப் பக்கத்தில் காணவில்லையா பல குடும்பங்கள் சுற்றியுள்ள மரத்மதடியில் வேட்டியை விரித்து மறைப்பாக்கிக் கொண்டு வாழ்வதை. மோட்டார் வாகனத்தில் போகும் போது இது எல்லாம் காணமுடியாதா? பாவம் சிவனும், முருகனும் கஸ்டப்படுவதை மட்டுமா காண முடிகின்றது. யாரை ஏமாற்ற? ஏதோ தமிழருக்குச் செய்யப் போகிறார் என்று ஆவலுடன் இருந்த பத்திரிகைகள் எல்லாம் மேய்துபார்த்ததில் வெளிச்சத்திற்கு வந்தது, இது தான் ஆச்சியின் கையால் முதுகில் தட்டுவாங்கப் பாடுபடுகின்றாரே ஒழிய தமிழருக்கல்ல. அது சரி இந்த இரண்டுவருடம் இருந்த கதிரை என்ன ஆடுகின்றதா? புதிதாக கதிரை தேட. சரி ஐதேகா தான் இரண்டு வருமாக ஒன்றும் செய்யவில்லை. ஆச்சியின் இத்தனை வருட ஆட்சியில் என்ன கிழித்து விட்டார் என்று இந்தத் துள்ளல். வங்கிக் கணக்குகளுக்கு புனர் வாழ்வு அளிக்கவோ இந்த வேசம். எல்லாம் அவனுக்கே வெளிச்சம். ஐயா அமைச்சரே ஏமாற்றாதே ஏமாறாதே என்றுதான் பாடத் தோன்றுகின்றது. வலக்கை கொடுக்க இடக்கை வ(h)ங்கிக் குவிக்கும் முயற்சிதான். அன்புடன் சீலன் - தணிக்கை - 11-24-2003 <img src='http://www.virakesari.lk/20031124/PICS/24-2.jpg' border='0' alt='user posted image'> - sethu - 12-01-2003 12 வரட இறானுவ ஆக்கிரமிப்பில் இருந்து சுமார் 150 வீடுகள் இன்று அமைச்சர் மகேஸ்வரன் உயர்பாதுகாப்புவலயத்தில் இருந்து பிரித்தெடுத்து பொதுமக்களிடம் கொடுத்துள்ளார். 150 வீடுகளும் உரியவர்களிடம் கையளிக்ப்பட்டுவருவதாக அமைச்சர் தெரிவித்துமட்டுமல்லாமல் அமைச்சர் மகேஸ்வரனின் பாராளுமன்ற அட்டகாசத்தின் பிரதிபலிப்பு இதுவாக இருக்கலாம் என தெரியவருகிறது. - sethu - 12-08-2003 மகேஸ்வரன் பலாலி இறானுவத்தினரின் வாகனத்தை தனது வீட்டுக்கு முன்பாக நின்று இன்று பல மனித்தியாலமாக மறித்தாராம் பேந்து யுத்த நிறுத்த கண்கானிப்புப்பிரிவுதானாம் சமாதானப்படுத்தினது. பாவம் மனுசன் அரசாங்கத்திலை அமைச்சரா இருந்துகொன்டு அடியும் வாங்கி அதே அரசின் ஆமியை தடுக்கிறார் என்டாலும் வரவேற்கோனும் ஒட்டுன்னியாக இருப்பதைவிட மகேஸ்வரனாக மகேஸ்வரன் தொழில்படுகின்றமை வரவேற்கத்தக்கது. - சாமி - 12-29-2003 மகேஸ்வர ஜாலம்! தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் சர்வதேச மகாபாரத மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சென்றிருந்த இலங்கை இந்துசமய கலாசார அமைச்சர் தி.மகேஸ்வரன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த சமயம் இரண்டு விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார். ஒன்று - தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது போன்ற மதமாற்றத் தடுப்புச் சட்டம் அடுத்த வருட முற்பகுதியில் இலங்கையிலும் கொண்டுவரப்படும். மற்றது - இலங்கை, இந்திய இந்துசமய நட்புறவுக் கழகம் அநேகமாக அடுத்த பெப்ரவரியில் அங்குரார்ப் பணம் செய்துவைக்கப்படும். - இவையே அவர் வெளியிட்ட தகவல்கள். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் தாமே தமது அமைச்சின் ஊடாக நேரடி யாகவே செய்யப் போகின்றார் என்பதை சென்னையில் அவர் திட்டவட்டமாக தெரி விக்காவிட்டாலும் இந்த அறிவிப்பு, அவர் அடுத்த ஆண்டி லும் தொடர்ந்து தமது அமைச்சர் பதவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதில் உறுதியாக இருக்கின்றார் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதே அமைச்சர் ஐந்து வாரங்களுக்கு முன் நாடாளு மன்றத்தில் ஏற்படுத்திய பரபரப்பையும், விடுத்த அறிவிப் பையும் மக்கள் விரைந்து மறந்துவிடுவர் என அவர் எதிர்பார்க்கின்றார் போலும்! எனவே, அதை நினைவூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள - இன்னும் தீர்க்கப் படாத - பாதிப்புகளுக்கு உடனடியாக அரசு பரிகாரம் காணவேண்டும் என்று தெரிவித்து அதற்கு டிசெம்பர் 30ஆம் திகதிவரை காலக்கெடு விதித்திருந்தார் அமைச் சர் மகேஸ்வரன். அத்திகதிக்குப் பின்னர் ஐ.தே.மு. அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பதைத் தாம் தீர்மானிப்பார் என்றும் - தேவையேற்படின் எம்.பி. பதவியைக் கூட இராஜினா மாச் செய்யுவும் தாம் தயார் என்றும் - அவர் சூளுரைத் திருந்தார். அதுவும் வெளியில் சாதாரண கூட்டம் ஒன்றிலோ, நிகழ்வு ஒன்றிலோ அவர் இதைக் கூறவில்லை. நாடாளு மன்றத்தில் - அதுவும் வரவு - செலவுத் திட்டம் மீதான முக்கிய உரை ஒன்றிலேயே - இவ்வாறு அவர் முழங் கினார். அவர் கொடுத்த காலக்கெடு நாளையுடன் முடிவடை கின்றது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும் களேபரம் ஏற்படுத்தும் விடயத்தை - காலக்கெடு விதித்துத் தாம் முழங்கியதை - அவர் மறந்துவிட்டார்போல் படுகின்றது. இது விடயத்தில் அவரது மௌனத்தை அப்படித்தான் கருதவேண்டியுள்ளது. வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமயம் திடீர்ப் பொதுத் தேர்தல் நடக்கலாம் என்ற சூழ்நிலை. தேர்தல் கருமேகங்கள் கருக்கட்டி வந்த நிலைமை. எனவே, தேர்தல் வந்தால் யாழ். மக்களுக்கு எப்படி முகங்கொடுப்பது, அடுத்த தேர்த லில் போட்டியிடுவதற்கான இணக்க நிலையை எப்படி ஏற்படுத்துவது என்ற கணக்குகளை மனதில் போட்டுப் பார்த்துக் கொண்டுதான் அதற்கேற்ப அவர், உடைத்த சோடாப் புட்டி போல அப்போது அப்படி சீறினார் என்று பலரும் கருதினர். அவர்கள் எதிர்பார்த்தது போல திடீர்ப் பொதுத் தேர்தல் உடனடியாக நடக்கும் வாய்ப்பு இல்லை. அது தள்ளிப் போகும் என்ற சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டதும் உடைத்த சோடாப் புட்டி சீறி அடங்குவது போல அடங்கி, இப்போது ஷகாஸ் இழந்த சோடா|வாக அடங்கிப்போய் நிற்கின்றார். நாடாளுமன்றில் அதிர் வேட்டுக்களை முழங்குவதும், அரச நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அதிரடிப் பாய்ச் சல்களை நடத்துவதும், திடீரெனப் போய் எதிர்த்தரப் பில் உள்ள ஜனாதிபதியைச் சந்தித்து, அவருடன் புகைப் படத்துக்குப் ஷபோஸ்| கொடுத்து, பின்னர் ஊடகங்களில் அவரை வானளாவப் புகழ்ந்து தனது கட்சியின் தலை மைக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதும் - இவ்வளவும் செய்து, ஆட்சி - அரசு - தலைமையைக் குழப்பத்தில் ஆழ்த்திய பின்னர் அங்கிருந்து சுண்டி எறியப்படும் சலுகைகளை சுவீகரித்ததும் அடங்கிப் போவதும் - வழமையான ஷமகேஸ்வர மகிமைதான்!| கடைசியாக இவ்வருடம் அவரது அமைச்சுக்குப் பிரதமர் ஒதுக்கிய மேலதிக பத்துக் கோடி ரூபாவோடு அடங்கிப்போனவர் மீண்டும் நவம்பரில் குதித்து காலக் கெடு விதித்தார். இப்போது மீண்டும் காலக்கெடு விதித்ததையே மறந்து - அமைதிகாத்து - தாம் பிடித்துவைத்திருக்கும் ஷஅரை அமைச்சுப் பதவியை| கெட்டியாகப் பற்றிக்கொண்டு - மௌனம் பேணுகின்றார். காலக்கெடுவை மறந்து மௌனம் பேணுவதற்கு இப்போது அரசுத் தரப்பு தமக்குச் சுண்டி எறிந்த சலுகை எது, அல்லது எவ்வளவு என்பதை அவர் வெளிப்படுத் துவது நல்லது. இல்லையேல், தமது அறிவிப்பின்படி - தமக்குத் தாமே விதித்த காலக்கெடுவின் பிரகாரம் - அமைச்சுப் பதவி யையும், எம்.பி. பதவியையும் துறப்பதுதான் நியாயம். மேற்படி அறிவிப்பை அவர் நாடாளுமன்றத்தில் விடுத்த சமயம் பேரினவாதம் அவருக்கு எதிராகக் கிளம்பியது. தமிழ் எம்.பிக்கள் ஒன்றுபட்டு அவருக்காகக் குரல் எழுப் பினர். அப்படித் தமக்காகக் குரல் எழுப்பியோரின் போக்கை நியாயப்படுத்தும் விதத்திலாவது அமைச்சர் மகேஸ்வரன் நடவடிக்கை எடுக்கவேண்டும். உதயன் ஆசிரியர் தலையங்கம் 29-12-2003 |