![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- Mathan - 03-01-2004 <b>புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்த முறையும் வாக்குப்பதிவு இல்லை</b> <b>தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவிப்பு</b> வட, கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாக்குப்பதிவு இடம்பெறாதென தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கடந்த தேர்தலில் பின்பற்றப்பட்ட நடைமுறையைப் போன்று ஏப்ரல் - 2 தேர்தலிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வந்து பொது மக்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுமென அவர் கூறினார். யுத்த சூனியப் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் மாத்திரம் அங்கு வாக்குப் பதிவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுமென்று திசாநாயக்க கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் அரச படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து கொத்தணி வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்ய மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஒழுங்குகளை செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேர்தல் திணைக்களம் தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைய தன்வசமிருக்கும் சகல வசதிகளையும், வளங்களையும் கொண்டு தேர்தலை நீதியாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. நியாயமான தேர்தலை உறுதிப்படுத்த சர்வதேச மற்றும் உள்@ ர் கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்பு பெறப்படும். சட்ட மீறல்கள் இடம்பெறாமல் இருக்க அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பது அவசியம். வன்செயல்கள், மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு பொலிஸார், படையினரின் உதவிகள் பெறப்படும். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் பொது விதிமுறைகளுக்கமைய தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால், மாற்று வழிகளைச் கையாள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். தென்பகுதியைவிட, வடக்கு, கிழக்குப் பதிகளில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அப்பகுதி மக்களின் வாக்குரிமை தொடர்பாகவும், அவற்றுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. அரசாங்கமும், புலிகளும் கைச்சாத்திட்டிருக்கும் போர்நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் படையினர் சீருடை, ஆயுதங்களுடன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லமுடியாது. அதேபோன்று, புலிகளும் அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சீருடை, ஆயுதங்களுடன் பிரவேசிக்க முடியாது. இதன் காரணமாகவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்தலை நடத்தி, அதற்குப் பாதுகாப்புக் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைமைக்கு தேர்தல் திணைக்களம் தள்ளப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் ஒரே நேரத்தில் தேர்தல் இடம்பெறவேண்டியிருப்பதால், மாற்று வழியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் மக்கள், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து வாக்களித்துவிட்டு செல்லுமாறு கோரப்பட்டுள்ளனர். இந்த நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆணையாளர் கூறினார். நன்றி- தினக்குரல் - Mathan - 03-01-2004 <!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-BBC+--><div class='quotetop'>QUOTE(BBC)<!--QuoteEBegin--><img src='http://www.thinakkural.com/2004/March/01/sanakiyan.jpg' border='0' alt='user posted image'> நன்றி - தினக்குரல்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நம்ப நட நம்பி நடவாதே?????<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> யாரை நம்ப நட நம்பி நடவாதேன்னு சொல்றீங்க? - Eelavan - 03-01-2004 யார் குழம்பிப் போயிருக்கிறாரோ அவருக்கு - Mathan - 03-01-2004 குழம்பிப்போய் இருக்கிறாரோ நடிக்கிறாரோ யாருக்குக்கு தெரியும். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - Mathan - 03-01-2004 சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் தமிழர் பிரதிநிதிகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார் தமிழர் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சமான 'விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்" என்ற கருத்தைத் தான் நிராகரிப்பதாகவும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் அல்ல என்பதை தனது தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபிக்கவுள்ளதாகவும் சவால் விடுத்துள்ளார் ஆனந்தசங்கரி. விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதை யாழ். மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், இத்தேர்தலில் தன்னைத் தெரிவு செய்வதன் மூலம் இதை அவர்கள் தெளிவு படுத்துவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனந்தசங்கரி, யாழ். தேர்தற் தொகுதியில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி - புதினம் - Mathan - 03-01-2004 மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் பிரசாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 14 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் 8 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்ற போதிலும் தமிழ் பிரதேசங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புவேட்பாளர்கள் ஏட்டிக்குப் போட்டி யாக பிரசாரங் களை மேற்கொண்டு வருகிறார்கள். படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் தாராளமாக நடமாடி பிரசார வேலைகளில் ஈடுபட்டு வரும் <span style='color:#ff0051'><b>தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களில் அநேகர் கொள்கைகளை வலியுறுத்துவதற்கு பதிலாக தனிப்பட்ட ரீதியில் ஆதரவு திரட்டுவதையே காணமுடிகிறது</b>. தெருக்களில் வீட்டுச் சின்னமும், விருப்பு இலக்கமும் வேட்பாளர்களின் பெயர்களுமே காணப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளை வலியுறுத்தி எந்த சுலோகங்களும் காணப்படவில்லை. <b>சில வேட்பாளர்கள் தமது கட்சியின் சக வேட்பாளர்களை விமர்சித்து பிரசாரம் செய்வதாகவும் </b>நியமனப் பத்திர தினத்தன்று முக்கிய வேட்பாளர் ஒருவர் ஆதரவாளர்களை குஷிப்படுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. நியமனப் பத்திரம் தாக்கல் செய்து எட்டு தினங்களாகியும் தமிழ் தேசிய கூட்டமைப்போ வேறு தமிழ்க் கட்சிகளோ வேட்பாளர் அறிமுக கூட்டங்களையோ கருத்தரங்குகளையோ இதுவரை நடத்தவில்லை.இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி என்பன பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அநேகர் புதுமுகங்களாக இருப்பதால் தமது பிரதேசத்திற்கு வெளியில் பிரசித்தமானவர்களாக இல்லாததால் பரவலாக பிரசாரச் கூட்டங்களை நடத்த வேண்டுமென ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.</span> நன்றி - வீரகேசரி - Mathan - 03-01-2004 இந்த அரசியல்வாதிகளின் குணம் மாறவே மாறாதா? ஏந்த கட்சியாயிருந்தாலும் இப்படிதானா? அப்போ கூட்டமைப்பும் குட்டையில ஒரு மட்டைதானா? இப்பிடி இருந்தால் இவர்களுக்கு வாக்களித்து என்ன பயன்? உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Mathan - 03-01-2004 <img src='http://www.dailymirror.lk/2004/03/02/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'> நன்றி - டெய்லி மிரர் - Mathan - 03-02-2004 ஐனாதிபதி முறைமையை ஒழிக்க முனைந்தால் நாம் எதிர்ப்போம்: ரவூப் ஹக்கீம் எந்த அரசியல் கட்சியாவது நிறைவேற்று அதிகாரம் கொண்டஐனாதிபதி முறைமையை ஒழிக்க முனையுமானால் அதை தாம்எதிர்ப்பதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாவத்தகமவில் இடம்பெற்ற தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர்இதனைக் கூறியுள்ளார். <b>நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையானது,சிறுபான்மை இனங்களிற்கு பாதுகாப்பை தருவதாக இருப்பதாகதனதுரையில் குறிப்பிட்ட அவர், இத்தகைய முறைமையை ஒழிக்கமுயல்வதானது சிறுபாண்மையினரை பொறுத்த வரையில்நியாயமற்றதாகும்</b> எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறைமையை ஒழிப்பதற்கு மிகுந்தஉற்சாகத்தோடு செயற்படும் ஐனாதிபதி, 1994 ஆம் ஆண்டில், தான்ஆட்சிக்கு வந்த போது ஏன் அவ்வாறு செய்யத் தவறினார் என்றும்அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறைமையை ஒழிப்பேன் எனவும், அதற்கு மக்கள் ஆணையைத்வழங்க வேண்டும் எனவும் கூறும் ஐனாதிபதி, பின்னர் அதனைசெய்யத் தவறுவது ஐனாதிபதிக்கு ஒன்றும் புதிதல்ல என்றும்சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். இம்முறைமையை ஒழிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,தனது கட்சியின் ஆதரவை வழங்க முன்வந்த போதும்,ஐனாதிபதியால் அது மறுக்கப்பட்டதையையும் அமைச்சர் ரவூப்ஹக்கீம் தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்மக்களது பாதுகாப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே உறுதிப்படுத்த முடியுமென சம்மாந்துறையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரசின் முதலாவது உத்தியோகபூர்வ பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி - புதினம் - adipadda_tamilan - 03-02-2004 BBC Wrote:ஐனாதிபதி முறைமையை ஒழிக்க முனைந்தால் நாம் எதிர்ப்போம்: ரவூப் ஹக்கீம் இந்த ஆள் ஒரு அடிமட்ட ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதி என்பதை இப்போதாவது விளங்குதா?? ஏன் நேரத்திற்கு நேரம் மாறி மாறி கதைக்கிறார் என்டது அந்த அல்லாவுக்கே வெளிச்சம். அதற்காக நான் மற்றவர்களை நல்லவர்கள் என்றும் சொல்லவில்லை. தம்பு ராசா எங்கப்பா உம்மைக் காணவேயில்லை. இங்த சுத்துமாத்த எதுக்குள்ள சேர்க்கப் போறியள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eelavan - 03-02-2004 B.B.C ரவூப் அரசியல் லாபத்திற்காகச் சொன்னாரோ என்னவோ தெரியவில்லை ஆனால் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பு பற்றிய உண்மையை ஒப்புக்கொண்டதற்காக அவரைப் பாராட்டத் தான் வேண்டும் ஆனால் ஜனாதிபதி முறமை பற்றிய கூற்றுத் தான் உதைக்கிறது - Eelavan - 03-02-2004 விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் தொடரும் என்ற கதிர்காமரின் கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தால், தொடரும் பேச்சுவார்த்தைகள், விடுதலைப் புலிகளின் இடைக்கால நிர்வாகசபை யோசனைகளின் அடிப்படையில், விடுதலைப் புலிகளுடன் மட்டுமே தனியாக நடாத்தப்படும் என்று லக்ஷ்மன் கதிர்காமர் கொழும்புப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி, தற்போது சர்ச்சையைக் கிழப்பியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கியுள்ள ஈ.பி.டி.பி., ஆனந்தசங்கரி கட்சி ஆகியன உட்பட இதர முஸ்லிம் கட்சிகளும், சிறிய இடதுசாரிக் கட்சிகளும், சில பௌத்த அமைப்புக்களும், ஏனைய சிங்கள இனவாத அமைப்புக்களும் கதிர்காமரின் இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், இதற்கு ஐனாதிபதி சந்திரிகாவிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடாத்தியபோது, எதிர்க்கட்சியை இணைத்துக் கொள்ளாததனாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட நேர்ந்தது என்று ஐனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஐபக்ஷவும் தெரிவித்து வந்த காரணத்தை மறந்து, எதிர்க்கட்சியின் பிரதிநிதித்துவமின்றி, ஆளும்கட்சி விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்ற கதிர்காமரின் கருத்தும், மேலதிக சிக்கலையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், தேர்தல் முடியும்வரை, இனவாதக் கருத்துக்களை மறைத்து, சமாதானம், பேச்சுவார்த்தை, புனரமைப்பு, மக்களாட்சி போன்றவை குறித்து அதிகமாகப் பிரச்சாரம் செய்யும்படி, தனது கூட்டணியின் அங்கத்தவர்கள் அனைவரையும் ஐனாதிபதி சந்திரிகா, கடுமையாகப் பணித்துள்ளதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் தமிழர் பிரதிநிதிகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார் தமிழர் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சமான 'விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்" என்ற கருத்தைத் தான் நிராகரிப்பதாகவும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் அல்ல என்பதை தனது தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபிக்கவுள்ளதாகவும் சவால் விடுத்துள்ளார் ஆனந்தசங்கரி. விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதை யாழ். மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், இத்தேர்தலில் தன்னைத் தெரிவு செய்வதன் மூலம் இதை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தாங்கள் வென்றால் இவர்களுடன் பேசமாட்டோம் என்பது கதிர்காமர் கருத்து தான் வென்றால் தன்னோடும் பேசவேண்டும் இது சங்கரி இதில் யார் சொல்வது சரி? செய்திகள் புதினம் இணையம் - kuruvikal - 03-02-2004 இலங்கையில் ஈ.பி.டி.பி. தொண்டர் சுட்டுக் கொலை இலங்கையில் ஈழ மக்கள் விடுதலைக் கட்சியின் தொண்டர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்மூலம் இலங்கை மக்களவைத் தேர்தல் தொடர்பான வன்முறையில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பட்டிகலூவாவில் தேர்தலில் போட்டியிட்ட சின்னதம்பி சுந்தரபிள்ளை நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்காவிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்தக் கொலைக்கு புலிகளைக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு போல செயல்படுவதாகக் கூறியுள்ளது. (சிறிலங்கா பொலீஸின் ஆரம்பக்கட்ட விசாரணையே புலிகளுக்கும் ஐ தே க வேட்பாளர் கொலைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து மறுதலித்துள்ளது...ஆனால் அமெரிக்கத் தூதரக விசாரணைகள் மட்டும் அதற்கிடையில் முடிந்துவிட்டது...அது புலிகள் மீது சந்தேகத்துக்கு அப்பால் குற்றமும் சாட்டுகிறது.... ஆனால் பிடிக்கப்பட்ட சதாம் குசைன் பற்றிய விசாரணைதான் இன்னும் முடியவில்லை....! -our view) இந் நிலையில் நேற்றிரவு பட்டிகலூவாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அக் கட்சியின் தொண்டரான பொன்னையா யோகேந்திரன் (28 ) சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்ததாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் எதிரிகளை கொன்று குவித்துவிட்டு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக வன்முறை மூலம் அங்கீகாரம் பெற புலிகள் இயக்கம் முயல்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு கொலைகளுக்கும் புலிகளோ அல்லது வேறு இயக்கமோ இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. thatstamil.com....! இது குறித்து தமிழ் நெற் கூறுகையில்...An LTTE official in the east, however, vehemently denied the charge. ''This is part of a premeditated plan to discredit the inevitable outcome of the elections'', he said..... குறிப்பிட்ட அந்நிய சக்திகளுக்காக செயற்படும் தமிழ் ஆயுதக் கும்பலின் குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் வன்மையாக மறுத்திருப்பதுடன் இது உள்வீட்டு வேலை என்றும் கூறி உள்ளனர்... தேர்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள இவர்களின் பீதியின் வெளிப்பாடுதான் இது என்றும் கூறிச் செல்கிறது அச் செய்தி....! இப்படிப்பட்ட கும்பல்கள் கடந்த காலங்களின் போதும் தங்கள் ஆட்களைத் தாங்களே கொலை செய்துவிட்டு புலிகள் மீது குற்றம் சாட்டுவதும் இதனால் மக்கள் மத்தியில் புலிகள் தொடர்பில் தவறான பார்வையை தோற்றுவிக்கவும் செயற்பட்டனர்....ஆனால் தற்போது அது சாத்தியம் இல்லாததால்.... இப்படிச் செய்து புலிகளுக்கு எதிராக சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தி அந்நியசக்திகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மேற்கொள்வது போலத்தான் தெரிகிறது....!(our view) :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- mohamed - 03-02-2004 சூட்டு சம்பவம் நடந்த பகுதியானது சிறீலங்கா இராணுவ முகாம்களும் காவல் நிலையமும் அமைந்த உயர்பாதுகாப்பு வலயப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி புதினம். இப்பதானே சந்தரப்பம் கூட்டி கழித்து பெருக்க வேண்டியதை இப்பவே செ;தால்தான் அது அரசியலுக்கு நல்லது. ஒரு பிரபல பத்திரிகையாளர் கூட உந்த இயக்கம் தான் அவரை கொழும்பிலைவைச்சு சுட்டது ஆர் என்டு எல்லாருக்கும் தெரியும். இப்ப இவை முதலைக்கண்ணீர் வடிக்கிறதை பார்த்தால்.. 60 வாக்குகள் மட்டும் பெற்றவரை சுட்டுக்கொல்வதால் ஏதும் அரசியல் லாபம்? ஒரு வேட்பாளரே அல்லாத ஒருவரை சுட்டுக்கொல்வதால் ஏதாவது அரசியல் லாபம்? உலகஆம கூர்ந்து கவனிக்கையில் உந்த வேலையை செய்யிறதிலை ஏதாவது அரசியல் லாபம்? எங்கையே இடிக்குது!! சிலர் பகல் கனவு காணுகினம், இந்த கொலைகள் அனுதாப அலையை தீரப்பும் தமி; கூட்டுக்கு படுதோல்வி வரும் என்டு நல்லாதான் கனவு காணுகினம், பொறுத்திருந்து பாப்பம். - Mathivathanan - 03-02-2004 தேர்தலிலை வெண்டால் வருஷாவருஷம் 10 இடத்திலையாவது பொங்குதமிழ் வைப்பினம்போலை..? முந்தியெண்டால் தேர்தல் பிரச்சாரத்திலை ஏதாவது செய்வன் அது கிடைக்கும் இது கிடைக்கும் எண்டாவது சொல்லுவாங்கள.. இப்ப பார்த்தால் நான் புலியளுக்கு ஆதரவு பொங்குதமிழ் நிகழ்சியிலை பங்குபற்றினனான்.. முந்தினவை கதிரைக்குப் பாரமா இருந்தவை எண்டுதானே சொல்லுறினம்.. கடைசி உந்த நம் மக்களுக்குள் திணிக்கப்பட்ட **** கொண்டாடுவினமாம்.. பொங்குதமிழ்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->*** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathan - 03-02-2004 adipadda_tamilan Wrote:BBC Wrote:ஐனாதிபதி முறைமையை ஒழிக்க முனைந்தால் நாம் எதிர்ப்போம்: ரவூப் ஹக்கீம் அடிபடா தமிழன் நான் ஒருபோதும் ரவூப் ஹக்கீமுக்காக வக்காலத்து வாங்கவில்லை. ரவூப் ஹக்கீம் மட்டும் அல்ல பொதுவா எந்த அரசியல்வாதி மீதும் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. உதாரணத்துக்கு ஒரு விளக்கம் சொல்லுறேன் கேளுங்கள். இன்றைக்கு புலிகளை எதிர்க்கும் ஆனந்தசங்கரி போன தேர்தலில் புலிகள் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லியே வாக்கு கேட்டு நாடாளுமன்றத்துக்கு போனவர். இதேமாதிரி நாளைக்கு சம்மந்தனோ இல்லை சுரேஷ் பிரேமசந்திரனோ செய்யமாட்டார்கள் என்று நிச்சமாயாக சொல்லமுடியாது. அரசியல்வாதியோட நோக்கம் எல்லாம் பணம், பதவி, அதிகாரம்தான் இதற்காக எதுவேண்டுமானாலும் செய்வார்கள். ஹக்கீம், சம்மந்தன், ஆறுமுகம் தொண்டைமான், சந்திரசேகரன், ஹிஸ்புல்லா எல்லோருமே ஓரே குட்டையில் ஊறிய மட்டைதான். நல்ல அரசியல் தலைவர்கள் வராதது நம்ம தலைவிதி. இதற்காக ஜனநாயக முறையில் வாக்களிக்காமலும் விட முடியாது. அதை கள்ள ஓட்டா மாற்றி விடுவார்கள். அதனால உள்ள் கெட்டவர்களுக்குள் யார் குறைய கெட்டவர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியது தான். எப்படி அதை கண்டுபிடிப்பது? இதை பத்தி ரொம்ப அலட்டிக்காதீங்க. உங்க கருத்துன்படி யார் பரவாயில்லை என்றூ தோணுதோ அவருக்கே வாக்கை போடுங்க. அதுக்கப்புறம் கடவுளே இவர் கொஞ்சம் நன்மையும் செய்யிறமாதிரி பாத்துக்கப்பா அப்பிடின்னு வேண்டிக்கலாம். இவ்வளவு தான் நாம செய்ய முடியும். - Mathan - 03-02-2004 Eelavan Wrote:B.B.C ரவூப் அரசியல் லாபத்திற்காகச் சொன்னாரோ என்னவோ தெரியவில்லை ஆனால் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பு பற்றிய உண்மையை ஒப்புக்கொண்டதற்காக அவரைப் பாராட்டத் தான் வேண்டும் எல்லாம் அரசியல் லாபம் தான் ஈழவன். நமக்கு ரவூப் ஹக்கீம் என்ன நினைக்கிறார் என்பதை விட முஸ்லீம் மக்கள் என்ன நினைக்கிறார் என்பது தான் முக்கியம். இதற்கு முன்னால் முஸ்லீம் காங்கிரஸ் வலுவாக இருந்து பெரும்பான்மையான முஸ்லீம் மக்களோட ஆதரவையும் பெற்றிருந்தாங்க. அந்த சமயத்தில அங்க தனி அலகு கேட்டாங்க. அப்போ அது முஸ்லீம் மக்களோட குரல். அவங்க சேர்ந்து வாழ் விருப்பம் இல்லை தனி அலகு வேணுமுன்னு கேட்டா குடுக்கத்தான் வேணும் வேறு வழியில்லை. அதுதான் நியாயமும் கூட. இப்போ பாராளுமன்றம் கலைச்சாச்சு முஸ்லீம் காங்கிரசும் பிளவு பட்டு போயிருக்கு. இடைக்கிடை புலிகளின் தலைமையை ஏத்துக்கிறோமுன்னு சில குரலும் முஸ்லீம்கள் கிட்ட இருந்து கேக்குது. இதுல எது தான் பெரும்பான்மை முஸ்லீம்களோட குரல்? அவங்களுக்கு என்னதான் தேவை? ஒரே குழப்பமா இல்லையா? என்னதான் செய்வது? எல்லாத்துக்கும் தேர்தல் முடியும் வரைக்கும் பொறுத்திருக்கவேண்டியது தான். இப்போ எல்லாருமே தேர்தல் களத்தில இருக்காங்க புலிகளையும் சேர்த்து தான் சொல்லுறேன். நியாயமா தேர்தல் நடந்தா தமிழ் மக்கள் என்ன நினைக்கிறாங்க முஸ்லீம் மக்கள் என்ன நினைக்கிறாங்க எல்லாமே தெரியவந்துரும். புலிகள் அவங்களோட வேட்பாளரை களத்தில நிறுத்தி பிரச்சாரமும் செய்யிறாங்க. அவங்களோட தேர்தல் அறிக்கையில முஸ்லீம்கள், ஏக பிரதிநிதித்துவம், இடைக்கால நிர்வாகம் பத்தியும் சொல்லியிருக்காங்க. இதே மாதிரி முஸ்லீம் காங்கிரசும் அவங்களோட தனிஅலகு கோரிக்கைய தேர்தல் அறிக்கையில வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். (ஏற்கனவே வைச்சுட்டாங்களா?) இந்த தேர்தல்ல இருந்து முஸ்லீம்கள் சம்மந்தமா சில முக்கியமான கேள்விக்கு விடை கிடைச்சுரும் 1) வட கிழக்கு முஸ்லீம்கள் புலிகளோட தலைமையை ஏத்துக்கிறாங்களா? அப்பிடி ஏத்துக்கிறதா இருந்தா முஸ்லீம்கள் புலிகளோட வேட்பாளருக்கே வாக்களிப்பாங்க. இல்லைன்னா ஹக்கீம்க்கோ இல்லை அஷ்ரப் மனைவிக்கோ வாக்களிப்பாங்க. 2) ஏத்துக்கலைனா யார் அவங்களோட பிரதிநிதி? ஹக்கீம்அணி, ஹிஸ்புல்லா ? அஷ்ரப் மனைவி அணி? அப்பிடி யாரையாவது அவங்க தீர்மானிச்சாங்கன்னா அவங்களோட முஸ்லீம் மக்களோட உரிமைபத்தி பேசவேண்டியதுதான். அது தனி அலகா இருந்தாலும் சரி. வேறு வழியில்லை. என்ன சொல்றீங்க ஈழவன்? - Mathivathanan - 03-02-2004 [quote=Mathivathanan]தேர்தலிலை வெண்டால் வருஷாவருஷம் 10 இடத்திலையாவது பொங்குதமிழ் வைப்பினம்போலை..? முந்தியெண்டால் தேர்தல் பிரச்சாரத்திலை ஏதாவது செய்வன் அது கிடைக்கும் இது கிடைக்கும் எண்டாவது சொல்லுவாங்கள.. இப்ப பார்த்தால் நான் புலியளுக்கு ஆதரவு பொங்குதமிழ் நிகழ்சியிலை பங்குபற்றினனான்.. முந்தினவை கதிரைக்குப் பாரமா இருந்தவை எண்டுதானே சொல்லுறினம்.. கடைசி உந்த நம் மக்களுக்குள் திணிக்கப்பட்ட **** .. .. கொண்டாடுவினமாம்.. பொங்குதமிழ்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்குதிரையள்தானே.. மட்டையை கட்டுங்கோ.. உங்களுக்கென்ன..? வசூல்தானே முக்கியம்..? வரி கட்டுறவையளை முட்டாளாக்கி வசூலிப்பதுதானே முக்கியம்.. :oops: :oops: :oops: - sivajini - 03-02-2004 <img src='http://www.thinakural.com/2004/March/02/sanakkiyan.jpg' border='0' alt='user posted image'> - sivajini - 03-02-2004 <img src='http://www.thinakural.com/2004/March/02/moorthy.gif' border='0' alt='user posted image'> |