![]() |
|
சினிமா சினிமா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிமா சினிமா (/showthread.php?tid=7402) |
- sWEEtmICHe - 05-01-2004 - sWEEtmICHe - 05-01-2004 [size=20][b]குத்து - சினிமா விமர்சனம் [size=15]எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மாறாகச் செய்யத் துடிக்கும் தில்லான இளைஞன் குருமூர்த்தி. தனது அப்பா, அந்த ஊருக்கே தாதா என்பது வெளியே தெரியாதபடி அடக்க ஒடுக்கமாக இருப்பவள் அஞ்சலி. குருவும், அஞ்சலியும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நட்பு ரீதியாக பழகுகிறார்கள். கல்லூரி விழா மேடையில் இருவரும் ஒரு சேர ஆடிப்பாடுவதையும் கண்ட அடியாள் ஒருவன், குரு மூர்த்தியிடம் நீ அஞ்சலி கூட பழகக் கூடாது என்று கண்டிஷன் போட... நான் அப்படித்தான் பழகுவேன். ஏன் காதலிக்கவும் செய்வேன் என்கிறார் குரு. சொன்னது போலவே அஞ்சலியை காதலிக்கத் தொடங்குகிறான். அஞ்சலியும் குருவை மனதாரக் காதலிக்கிறாள். விஷயம் அஞ்சலியின் தந்தையும் தாதாவுமான வீரபாகுவுக்கு தெரியவர ஆயுதங்களுடன் அடியாட்களை அனுப்பி வைக்கிறார். அவர்களை அடித்து துவைத்து டிராக்டரில் அள்ளிப் போட்டு அனுப்பி வைக்கிறான் குரு. <img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/miche%2Bkuttuimg1040414024_1_1.gif' border='0' alt='user posted image'> மகளை பாதுகாக்க நினைக்கும் வீரமாகு அவளது தாத்தாவான அண்ணாமலையின் ஊருக்கு அனுப்பி மறைத்து வைக்கிறான். அஞ்சலியை தேடிக் கண்டுபிடிக்கும் குரு, வீரபாகு மற்றும் அண்ணாமலையை எதிர்கொண்டு அவளது கரம்பிடிக்கிறான் என்பது கதை. குருவாக சிம்பு, அஞ்சலியாக புதுமுகம் ரம்யா, வீரபாகுவாக கலாபவன் மணி, அண்ணாமலையாக கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளனர். சண்டைக் காட்களிலும், பாடல் காட்சிகளிலும் சிம்பு இந்தப் படத்தில் ரொம்ப விசேஷமாகத் தெரிகிறார். ஊர் பேசுகிற மாதிரி இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பது தெளிவாகவே தெரிகிறது. ஒரு விரலைக் காட்டி இது தாயம். ஜெயிப்பதற்கு மட்டும்தான் என்கிற டயலாக் இளைய தலைமுறையினரை அசத்துகிறது. மற்றபடி நடிப்பில் வழக்கமான சிம்புதான். புதுமுகம் ரம்யா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அடுத்த கிரண். தாராளமாக இடை, முதுகை காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் விதம், விதமான உடைகளோடு வந்து ரசிகர்களை உசுப்பேற்றுகிறார். வீட்டுக்குள் புகுந்த சிம்புவை ஒரு முத்தம் கொடு என்று கேட்பதும், சிம்பு கண் முன்பே உடை மாற்றுவதும் இன்ப கிளுகிளுப்பு ஏற்றுகிறது. கலாபவன் மணி இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு கலக்கி இருக்கிறார். டென்ஷன் பேர்வழியாக புதிய கோணத்தில் நடித்திருக்கும ் கலாபவன்மணிக்கு "குத்து" மீண்டும் ஒரு திருப்புமுனை. கிளைமாக்ஸ் காட்சிகளில் அடியாட்களிடம் அவர் நடந்து காண்பிக்கிற கட்டம் உச்சகட்டம். <img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/miche%2Bkuttu.img1040414024_1_2~0.gif' border='0' alt='user posted image'> இதேப்போல் கருணாசுக்கும் குத்து படம் ஒரு முக்கிய திருப்புமுனை. கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதல் கடிதம் கொடுத்து விட்டு அவருடன் தனி அறைக்கு சென்று அடி உதை வாங்கியதை நண்பர்களிடம் சொல்லுகிற விதம் தியேட்டரில் சிரிப்பு வெடி வைத்தது போல் வெடித்து சிதறுகிறது. கோட்டா சீனிவாசராவ், இளவரசு, சுமன் ஷெட்டி, லிவிங்ஸ்டன், பெசன்ட் நகர் ரவி, மனோரமா, ஐஸ்வர்யா, குயிலி சிறப்பான பாத்திரம். நிறைவான நடிப்பு. மும்தாஜ், ரம்யா கிருஷ்ணன் தலா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். மும்தாஜ் பின்தங்கி ஆடுகிறார். ஸ்ரீகாந்த்தேவா இசையில் நிபுணா பாடல் தவிர அனைத்தும் குத்தாட்ட பாடல்கள். குத்து குத்து, போட்டுத் தாக்கு பாடல்கள் ஜனரஞ்சகம். அருமையான பின்னணி இசை. வி. பிரபாகரின் வசனங்கள் கைகொடுத்துள்ளன. நறுக்தெரித்தாற்போல் சுருக்கமான வசனங்கள். சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் கிராபிக்ஸ் யுக்திகளுடன் பிரம்மிக்க வைக்கின்றன. வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். அழகான பிலிம் மேக்கிங் என்றாலும் கதையில் புதுமை இல்லை. யூத்தையும் காதலையும் எதிர்க்க முடியாது என்று சொல்லும் வெங்கடேஷ் சிம்புவுக்காக மாணவர்கள் பெருவாரியாக திரள வேண்டிய அவசியம் பற்றி சொல்லவில்லை. இருந்தாலும் காதல், ஆடல், பாடல், பைட் என்று ஜனரஞ்சகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பட்டி, தொட்டிகளில் எல்லாம் பட்டையை கிளப்பலாம். குத்து - புதிய மொந்தையில் பழைய கள்ளு! நன்றி - தமிழ் சினிமா அன்புடன் மிச்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- AJeevan - 05-04-2004 [align=center:5f41ad1ecd]<img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/gilli-tit.jpg' border='0' alt='user posted image'>[/align:5f41ad1ecd] கேரளாவில் பரபரப்பாக ஓடி சக்கை போடு போட்ட படம் 'குஞ்சுகூனன்'. மலையாளத்தில் திலீப், நவ்யா நாயர், மான்யா இணைந்து நடித்த இந்தப் படம் பல்வேறு பகுதிகளில் 100 நாட்கள் ஓடி தயாரிப்பாளரின் கஜானாவை நிரப்பியது. அந்தப் படத்தைத்தான் ஏவி.எம். நிறுவனம் 'பேரழகன்' என்ற பெயரில் தயாரிக்கிறது. சூர்யா, ஜோதிகா, விவேக் என்று ஏகப்பட்ட பாப்புலர் நட்சத்திரங்கள் படத்தில் உண்டு. கேரளாவின் கொடுபுழா, கோலப்பறா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இதில் சூர்யாவுக்கு சின்னா, கார்த்திக் என்ற இரட்டை வேடங்கள். சின்னா கேரக்டருக்கு முதுகில் கூன் விழுந்து, கால்கள் வளைந்து, பல் நீண்ட வித்தியாசமான தோற்றம். கார்த்திக் பாத்திரத்திற்கு மார்டன் கெட்டப். [align=center:5f41ad1ecd] <img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic3.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic4.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic5.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/lightsonline/perazhagan/Pic8.jpg' border='0' alt='user posted image'>[/align:5f41ad1ecd] அதேபோல் ஜோதிகாவுக்கு இரட்டை வேடம். கண் தெரியாத கேரக்டர், காலேஜ் கேர்ள் என்று நடிப்பில் புதுமை செய்திருக்கிறாராம் ஜோத். குழந்தைவேலு என்கிற கல்யாண புரோக்கர் காமெடி ரோலில் வருகிறார் விவேக். 'அடேங்கப்பா' டீ ஸ்டால் உரிமையாளராக இயக்குநர் மனோபாலா வருகிறார். ஆச்சி மனோரமாவும் தன் பங்குக்குத் திறமையைக் காண்பித்து இருக்கிறார். கூனன் பாத்திரம் என்றாலும் முழுக்க காமெடியில் பின்னி எடுத்திருக்கிறாராம் சூர்யா. மே 6_ம் தேதி திரைக்கு வருகிறான் 'பேரழகன்'. வரவேற்கத் தயாராகுங்கள். _ வீ.மீனாட்சிசுந்தரம் படங்கள் : சித்ராமணி kumudam.com - Mathan - 05-14-2004 பேரழகன் படம் பார்த்தேன், கூனன் வேடத்தில் சூர்யா நன்றாகவே நடித்திருக்கின்றார். - Mathan - 05-14-2004 பேரழகன் - விமர்சனம் <img src='http://www.tamilcinema.com/cinenews/review/2004/perazhagan.jpg' border='0' alt='user posted image'> படத்தின் முதல் ஆச்சர்யமே சூர்யாதான். முன் தள்ளிய பற்கள். முதுகை வளைக்கும் கூன். எக்ஸ் டைப் கால்கள். ஆள்தான் இப்படியே தவிர, மனசுக்குள் இவர் ஒரு மன்மதன்! ஒவ்வொரு முறை குளிக்க போகும்போதும் நாலு லைப்பாய் சோப் தேவைப்படுகிறது இந்த அழகனுக்கு. வாயை திறந்தால் பயங்கர சவடால் பேர்வழி. சின்னானாக அவதாரம் எடுத்திருக்கும் சூர்யா.... ஜோர்யா! அழவைக்கிற அளவிற்கு ஆயிரம் காரணங்களை இந்த கேரக்டர் சுமந்திருந்தாலும், அப்படியரு சங்கடத்தை ரசிகர்களுக்கு கொடுக்காத இயக்குனருக்கு ஒரு ஜே! இன்னொரு சூர்யா பயங்கர மிடுக்கு. டி.எஸ்.பி பெண்ணை காதலிக்கும் கான்ஸ்டபிள் மகன். பாக்சரான இவர், காதலியின் மரணத்திற்கு பின்பும் அதே முரட்டுத்தனத்தை தொடர்வது பொருத்தம். ஒரு கட்டத்தில் பெற்ற அப்பனுக்கே விழுகிறது ஒரு அடி! அடியா அது, இடி! இறந்து போன தன் காதலியின் கண்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, பரவசத்தோடு ஜோதிகாவை அணைத்துக் கொள்ளும் சூர்யா, எல்லா நேரமும் அந்த கண்களை பார்த்தபடியே அவரை விரட்டி விரட்டி துரத்துவது பரிதாபம். அதே நேரத்தில் பகீர்! சூர்யாவை போலவே இரண்டு வேடங்களில் ஜோதிகா. வழக்கம் போல உதட்டை சுழித்து அழகு காட்டும் ஜோதிகாவை, அந்த பார்வையில்லாத ஜோதிகா, முந்தியிருக்கிறார் பல காட்சிகளில். குறிப்பாக, முதன் முதலாக பார்வை வரும் நேரத்தில் சின்னான் என்று நினைத்துக் கொண்டு சூர்யாவின் மார்பில் முகம் புதைப்பதும், பின் அவரல்ல இவர் என்பதை தெரிந்து கொண்டு குற்ற உணர்ச்சியால் தவிப்பதும்... மேரேஜ் அரேன்ஜர் விவேக் வரும்போதெல்லாம் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. சின்னானும், விவேக்கும் சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டிகள் விலா நோக வைக்கிறது. அதிலும் ஒரு அடி சைஸ் உயரத்திற்கே இருக்கும் சினேகா, ''என்ன கிண்டலா பண்றீங்க? பெண் போலீஸ்கிட்டே சொல்லி பொடாவுல உள்ளே தள்ளிடுவேன்'' என்று மிரட்டுவதையும், ''என் பின்னால எத்தனை தடவை சுத்தினாலும் மனசு இறங்க மாட்டேன்'' என்று அலட்டுவதையும் கேட்டால் ''அட ஆழாக்கே...'' என்று அடி வயிற்றிலிருந்து கிளம்புகிறது சிரிப்பு! இந்த லட்சணத்தில் எஸ்.டி.டி பூத் வைத்திருக்கும் சின்னான் போடுகிற ஒரு டம்மி அழைப்பு சினேகா வீட்டுக்கு போய் தொலைப்பதை எப்படி சிரிக்காமல் ரசிப்பதாம்? ஆனாலும், விவேக்கின் வாயிலிருந்து வருகிற பல வார்த்தைகள் ஊனமுற்றவர்களின் உள்ளத்தை நோக வைப்பது மட்டும் வெளிப்படையான சோகம்! ஜோதிகாவின் வீட்டின் உள்ளேயே தைரியமாக நுழைந்து பெண் பார்க்க வந்தவர்கள் முன்னிலையில், அவரை தன் காதலி என்று சொல்லும் சூர்யா, அந்த அர்த்த ராத்திரியில் ஓடிப்போக முடிவெடுப்பதும், அதற்காக அவரை சின்னான் உதவியுடன் காட்டுப்பகுதிக்கு வரச் சொல்வதும், நம்பும்படியாகவா இருக்கிறது? குறிப்பிட்ட சொல்லப்பட வேண்டியவைகளில் சண்டைக்காட்சிகளும் ஒன்று. ஸ்டண்ட் சிவா, தியாகராஜன், பாராட்டுக்குரியவர்கள். ரத்னவேலுவின் ஒளிப்பதிவு, கண்ணாடி! இசை- யுவன்சங்கர்ராஜா. அம்புலிமாமா பாடல் அசத்தல்! புஷ்பவனம் குப்புசாமியின் வெண்கல குரலில் தலைவாசல் விஜய் பாடும் பாடல், கம்பீரம்! சிவாஜிக்குப் பின் கமல்! கமலுக்குப் பின் விக்ரம் என்பவர்கள் சற்றே குழம்பக்கூடும். குழம்ப வைத்திருக்கிறான் சின்னான். நீண்ட வரலாற்றை சுமந்து கொண்டு பயணிக்கும் தமிழ்சினிமா என்ற பஸ், சின்னானுக்காகவும் ஒரு 'பிரேக்' அடித்திருக்கிறது. பிறகென்ன... ஏறிக்கொள்ளுங்கள் சூர்யா! நன்றி - தமிழ் சினிமா - Mathan - 05-14-2004 அண்மையில் வெளிவந்த படங்களில் கில்லியை விறுவிறுப்புக்காகவும் பேரழகனை நடிப்புக்காகவும் பார்க்கலாம். அருள் மற்றும் ஜனா இரண்டும் வேஸ்ட். - Eelavan - 05-14-2004 உண்மைதான் அருள் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை விக்ரமின் முகத்திலும் வழமையாக இருக்கும் புத்துணர்ச்சி குறைகின்றது. பேரழகன் நடிப்புக்காக மட்டுமன்றி நகைச்சுவை பாடல்கள் போன்றவற்றிற்காகவும் பார்க்கலாம் மந்த்ரா பேடியும் சிம் - Mathan - 05-19-2004 மந்த்ரா பேடியும் சிம்புவும் <img src='http://www.thatstamil.com/images22/cinema/manthrabedi-450.jpg' border='0' alt='user posted image'> சிம்புவின் மன்மதன் படத்தில் மும்பை கவர்ச்சிப் புயல் மந்திரா பேடி நடிக்கிறார். சிலம்பரசனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மன்மதன் படத்தில் சிம்புவுக்கு பிளேபாய் கேரக்டராம். ஏகப்பட்ட அழகிகளுடன் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார் சிம்பு. <img src='http://www.thatstamil.com/images22/cinema/manthra-simbu-325.jpg' border='0' alt='user posted image'> ஜோதிகா சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தற்போது மந்திரா பேடியும் நடிக்கவுள்ளார். உலகப் கோப்பை கிரிக்கெட் நடந்தபோது, காம்பியரிங் பண்ணுகிறேன் பேர்வழி என்று அரைகுரை ஆடையுடன் தோன்றி, ரசிகர்களை குண்டக்க மண்டக்க ஜொள்ளு விட வைத்தவர் மந்திரா பேடி. இவரை சிம்பு முதன் முறையாக தமிழுக்கு அழைத்து வருகிறார். மாடலிங், காம்பியரிங், பாலிவுட் என படு பிசியாக இருக்கும் மந்த்தரா தென்னிந்தியப் படங்களில் நடிக்க மறுத்தவர். ஆனாலும் சிம்பு மும்பை சென்று, மந்த்ராவைச் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்டதும் மந்த்ரா பேடி ரொம்பவும் இம்ப்ரஸ் ஆகி விட்டார். இந்த சின்ன வயதில் இவ்வளது திறமையா என்று சிம்புவை பாராட்டியதோடு உடனே கால்ஷீட்டும் கொடுத்து விட்டார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறாராம் மந்த்ரா பேடி. மனநல டாக்டர் வேடமாம். <img src='http://www.thatstamil.com/images22/cinema/mantra-simbu-450.jpg' border='0' alt='user posted image'> இதற்காக சென்னை வந்திருந்த மந்திரா பேடி, சிம்புவுடன் படுநெருக்கமாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். கவர்ச்சியில் எப்போதும் குறை வைக்காத மந்த்ரா பேடி ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்பது வாசகர்களுக்கு ஒரு 'துயரமான' செய்தி. சின்ன வயதில் இருந்தும் நடித்து வந்தாலும் இன்னும் பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு படம் சிம்புவுக்கு இதுவரை அமையவில்லை. அண்மையில் வெளியான 'குத்து' படமும் சுமாராகவே போனது. இப்போது தானே சொந்தமாக கதை, வசனம், திரைக்கதை எழுதி இந்தப் படத்தில் நடிக்கிறார். படம் ஓடியே ஆக வேண்டும் என்பதற்காக கவர்ச்சி அதிகம் இருக்கும்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மந்த்ராவை பிடித்ததும் அதற்காகத்தான். தற்ஸ் தமிழ் - Mathan - 05-29-2004 "கில்லி" மீது அஜீத் கடுப்பு கில்லி பட வசனங்களால் அஜீத் ஏகத்துக்குக் கடுப்படைந்துள்ளார். விஜய்யின் சமீப கால படங்களில் தன்னைத் தாக்கி வசனம் வைப்பதாக குமுறிக் கொண்டிருக்கும் அஜீத், சமீபத்திய விஜய் ரிலீஸான கில்லியிலும் பல வசனங்கள் தன்னைக் குறி வைத்து இருப்பது குறித்து டென்ஷனாகியுள்ளாராம். விஜய் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திருமலை படத்தில் யாருடா உன் தலை, தலை மட்டுமில்லை, வாலையும் சேர்த்துக் கூட்டி வா, அடக்குறேன் என்று விஜய் வசனம் பேசுவார். தீனா படத்தில் அஜீத்தை அவரது ஆட்கள் செல்லமாக தலை என்று கூப்பிடுவது வழக்கம். திருமலையில் இடம் பெற்ற வசனம் தன்னைக் குறி வைத்தே வைக்கப்பட்டதாக அஜீத் தரப்பு கடுப்படைந்தது. ஆனால் இதை விஜய் மறுத்தார். தற்செயலாக வந்த வசனம் அது என்று விளக்கினார். இருப்பினும் அஜீத் தரப்பு சமாதானம் ஆகவில்லை. இந் நிலையில் கில்லி படத்திலும் சில வசனங்கள் தனக்கு எதிராக இருப்பதாக அஜீத் நினைக்கிறாராம். படத்தை ரகசியமாக சென்று பார்த்த அவர் பல வசனங்கள் தன்னை குறி வைப்பதாக நினைக்கிறார். இதனால் தனது அடுத்த படத்தில் விஜய்யை கடுமையாக விமர்சிக்கும் வகையில் வசனங்களை வைக்க முடிவு செய்துள்ளாராம். விக்ரம், சூர்யாவின் கிடுகிடு வளர்ச்சியால் விஜய்யும், அஜீத்தும் கலங்கிப் போயிருந்தனர். ஆனால் திருமலை, கில்லி பட வெற்றிகளால் விஜய் சற்று தெம்பாகிவிட்டார். ஆனால் அஜீத்துக்கு சமீபத்தில் வெளியான ஜனா படம் காலை வாரிவிட்டது. இதனால் கட்டாயம் ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அஜீத். ஏற்கனவே கைவசம் அட்டகாசம், ஜி, மிரட்டல் படங்களை வைத்திருக்கும் அஜீத், அவற்றை முடிக்காமலேயே அடுத்து கதை கேட்க முடிவு செய்துள்ளாரõம். இது ஏற்கனவே பாதி முடிந்த நிலையில் இருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது - Eelavan - 05-29-2004 வசனங்களிலேயே வாழும் இன்னொரு super star? - Mathan - 05-30-2004 அப்படித்தான் ஆக ஆசைப்படுகின்றார் போல் இருக்கின்றது - Mathan - 05-30-2004 கமல் நடிக்கும் "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' <img src='http://www.cinemaexpress.com/images/01kamal3.jpg' border='0' alt='user posted image'> மாபெரும் வெற்றி பெற்ற "முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' இந்திப் படத்தின் கதை உரிமையை பலத்த போட்டிக்கிடையே ஜெமினி பிலிம் சர்க்யூட் பெற்று ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் அத்திரைப்படத்தை தயாரிக்கிறது. "வசூல் ராஜா ஙஆஆந', என்று வித்தியாசமான பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை "ஜே.ஜே' வெற்றிப் படத்திற்குப் பின் அஜித் நடிக்கும் "அட்டகாசம்' படத்தை இயக்கி வரும் சரண் இப்படத்தின் திரைக்கதையினை அமைத்து இயக்க, வசனங்களை "கிரேஸிமோகன்' எழுதுகிறார். <img src='http://www.cinemaexpress.com/images/01kamal4.jpg' border='0' alt='user posted image'> டாக்டருக்கு படிக்க ஆசைப்படும் ஒரு தாதா வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க, அவருக்கு நண்பராக ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பிரபு முன்வந்திருக்கிறார். இதன் தெலுங்குப் பதிப்பில் இதே வேடத்தில் முன்னணி தெலுங்கு ஹீரோ ஸ்ரீகாந்த் நடிப்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் - பிரபு கூட்டணி "வெற்றி விழா' திரைப்படத்திற்கு பிறகு இதில் இணைகிறது. இதில் வரும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இதற்காக பிரகாஷ்ராஜ் சில தெலுங்கு, தமிழ் படங்களை தவிர்த்திருக்கிறார் கமல்ஹாசன். பிரகாஷ்ராஜ் இணையும் முதல் படம் இது... அதைப் போல கமல் படத்திற்கு பரத்வாஜ் முதன்முதலாக இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. <img src='http://www.cinemaexpress.com/images/01kamal1.jpg' border='0' alt='user posted image'> கமல்ஹாசன் ஜோடியாக சினேகா நடிக்கிறார். அன்பும் பண்பும் நிறைந்த குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கும் சினேகா முதன்முறையாக கமல்ஹாசனுடன் கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் மிகப் பிரபலமாக விளங்கும் ஒரு முக்கிய யயஐட-யை கமல்ஹாசனின் தந்தை வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. அது திரையுலகில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருக்கும். இவர்களுடன் "காக்கா' ராதாகிருஷ்ணன், கருணாஸ், எம்.எஸ். பாஸ்கர், சிஸர் மனோகர், சித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். <img src='http://www.cinemaexpress.com/images/01kamal5.jpg' border='0' alt='user posted image'> நகைச்சுவையுடன், மனித உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பொதுநல நோக்கத்தில் கதையம்சம் அமைந்திருக்கும் இந்த "வசூல்ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மாபெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட காட்சி அரங்கங்களில் மே 14ஆம் தேதி துவங்கி, சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டு ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது. தினமணி - Mathan - 05-30-2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்! -தனுஷின் கடைசி நேர சறுக்கல்! வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலுக்கு அப்பாவாக நடிக்க பாலசந்தரை கேட்டார்கள். பிடிவாதமாக அவர் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அமிதாப்பச்சனை கேட்க, அவரும் நோ சொல்லிவிட்டார். இப்போது அந்த வேடத்தில் கே.விஸ்வநாத் நடிக்கிறாராம். இதற்கிடையில் இளவயது பேஷண்ட் கேரக்டரில் நடிக்க தனுஷிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். கதைப்படி இளம் வயதிலேயே மரணத்தின் பிடியில் இருக்கும் இளவயசு பையன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் அவனுக்கு விதிக்கப்பட்டிருப்பதோ தப்பிக்கவே முடியாத மரணம். அவன் மீது அனுதாபப்படும் டாக்டர் கமல், இளம் வயது பெண் ஒருத்தியை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறார். சாகப்போகிற அந்த கடைசி காலங்களில் அவன், அவளோடு இன்பத்தை அனுபவிக்கிறான்... இப்படி போகிறது கதை! முதலில் ஓ.கே சொன்ன தனுஷ், நான்கு நாட்கள் கால்ஷீட் தருவதாகவும் சொன்னாராம். கடைசி நேரத்தில் யார் அட்வைசித்தார்களோ, கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். திமிங்கலத்திற்கு தூண்டில் போடுகிறார்கள். சிக்குவதெல்லாம் சின்ன மீன்களாகவே இருக்கிறதே...? Tamil Cinema - Mathan - 05-30-2004 ரஜனியை இன்னும் ஆராதிக்கும் சிலரின் வெப்தளம் ... http://rajinifans.blogspot.com/ - Mathan - 06-01-2004 கமல் படத்தில் நடிக்க கே.பி மறுப்பு <img src='http://www.thatstamil.com/images22/cinema/kamal-sneha-325.jpg' border='0' alt='user posted image'> கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் அவருக்கு தந்தை வேடத்தில் நடிக்க இயக்குநர் கே.பாலச்சந்தர் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படம் தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் தயாராகிறது. முற்றிலும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் கமல்ஹாசனும், பிரபுவும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், ஸ்னேகா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு ஸ்னேகா அந்த வாய்ப்பைப் பறித்துக் கொண்டார். இதற்காக இரு தெலுங்கு படங்களையும் தியாகம் செய்துவிட்டார். படத்தின் கதை என்னவென்றால், பிரபல தாதாவான கமல் தனது அப்பாவிடம் தான் ஒரு டாக்டர் என்று பொய் சொல்கிறார். இது தெரியாத அவரது அப்பா தனது பால்ய நண்பரின் டாக்டர் மகளை கமலுக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இதை கமல் எப்படி சமாளிக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் சொல்லப் போகிறார்கள். படத்தில் தந்தை வேடம் முக்கியமானது என்பதால், அந்த வேடத்தில் நடிக்குமாறு கே.பாலச்சந்தரை இயக்குநர் சரணும், கமலும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த வேடத்தில் பிரபல தெலுங்குப் பட இயக்குநர் கே.விஸ்வநாத்தை (குருதிப்புனல் படத்தில் டி.ஐ.ஜியாக நடித்து தற்கொலை செய்து கொள்வாரே, அவர்தான்) நடிக்க வைக்கலாம் என்று சரணும், கமலும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் கிடைக்கவில்லை என்றால் நாகேஷûக்கு வாய்ப்பு போகலாம். இதற்கிடையே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் ஒரு நல்ல கேரக்டர் இருக்கிறது; நடிக்க முடியுமா என்று தனுஷிடம் கேட்டுள்ளார்கள். கமலுடன் நடிக்கக் கசக்குமா? தனுஷýம் சந்தோஷமாக சரி என்றிருக்கிறார். 15 நாள் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். கால்ஷீட் டைரியை புரட்டிப் பார்த்தவருக்கு தலை சுற்றிவிட்டது. அப்படி இப்படி என்று அட்ஜெஸ்ட் செய்தாலும் நான்கு நாட்களுக்கு மேல் கால்ஷீட் தர முடியாத நிலை. இதை கமலிடம் விளக்கினாராம். பரவாயில்லை என்று கமலும் தட்டிக் கொடுத்து அனுப்பினாராம். இது ஒருபுறமிருக்க, பாடல் பதிவு, சூட்டிங் என்று சரண், பரத்வாஜ், வைரமுத்து, கமல், பிரபு, பிரகாஷ்ராஜ், கிரேஸி மோகன் என மொத்த யூனிட்டும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வசூல்பாயை மக்களிடையே களமிறக்கத் திட்டமாம். - Mathan - 06-01-2004 என் படத்தில் நடிக்க மறுத்தார் கமல்! ஷாருக்கான் புழுக்கம் கிரேட்! சிங்கப்பூரில் நடந்த விருது வழங்கும் விழாவை அந்த ஊரின் முன்னணிப் பத்திரிகையான ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் இப்படித்தான் வர்ணித்திருந்தது. வெளிநாடுகளில் இந்திய சினிமாவைப் பிரபலப்படுத்த வேண்டும். ஹாலிவுட் போல பாலிவுட்டையும் உலக அரங்கில் முன்னிறுத்தவேண்டும் என்பதே நோக்கம். அமிதாப்பச்சன் முதல் அமிர்தா அரோரா வரை, ஷாரூக்கான் முதல் ஷர்மிளா டாகூரின் பெண் ஷோஹா அலிகான் வரை... மும்பைத் திரையுலகமே ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரில்! சிங்கப்பூர் இன்டோர் ஸ்டேடியத்தில் அந்த நாட்டு ஜனாதிபதி நாதன் முன்கூட்டியே தனது அமைச்சரவை சகாக்களோடு வந்து, இந்திய நட்சத்திரங்களைக் கைகுலுக்கி வரவேற்றார். சிங்கப்பூர் அரசாங்கம் நம்மவர்களை வெறும் நட்சத்திரங்களாகப் பார்க்கவில்லை... கலாசாரத் தூதுவர்களாகவே பார்க்கிறது! <img src='http://www.vikatan.com/av/2004/jun/06062004/p12.jpg' border='0' alt='user posted image'> Ôவன் மெட்ராஸ் பையன் சார்! மணிரத்னத்தின் யுவா, ஆய்த எழுத்து இரண்டில் எது சூப்பர்? அடியாள் காரெக்டரில் மாதவன் நடிப்பு பிரமாதமா அல்லது அபிஷேக் பச்சன் பின்னியிருந்தாரா? ரொம்ப அழகு யார்? த்ரிஷாவா, கரீனா கபூரா? மணிரத்னத்தையே நடுவராக நடுவில் உட்காரவைத்து அவரது யுவா, ஆய்த எழுத்து படங்களில் நடித்த நட்சத்திரங்களைக் கொண்டே விறுவிறுப்பானதொரு பட்டிமன்றம் நடத்தியது மாதிரி இருந்தது, லீடோ மல்டிபிளக்ஸ் தியேட்டரில் நடந்த இந்தப் படங்களுக்கான பிரஸ்மீட்! ஆய்த எழுத்து க்காக வக்காலத்து வாங்கிப் பேச மாதவன், சித்தார்த் என இரண்டே பேர்தான்! (சூர்யா ஏன் வரவில்லை?) ஆனால், யுவாவுக்கோ அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன், விவேக் ஓபராய், ஈஷா தியோல், கரீனா கபூர், ராணி முகர்ஜி என்று ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. பிரஸ்மீட்டின் இடை இடையேவிவேக் ஓபராய் அசத்தலாக தமிழில் பொளந்து கட்ட, இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நிருபர்கள், Ôஎன்ன விவேக்... உங்களுக்குத் தமிழ் தெரியுமா? என்று கேட்டார்கள். விவேக் ஓபராயை முந்திக் கொண்டு ஈஷா தியோல், இவனுக்கு நான்தான் தமிழ் சொல்லித் தந்தேன் என்று பெருமை கொண்டாட, இல்லை சார்... ஈஷா டூப்பு விடுது! விவேக் நம்ம மெட்ராஸ் பையன்தான் சார்! என்று மாதவன் சிரித்தார். <img src='http://www.vikatan.com/av/2004/jun/06062004/p14.jpg' border='0' alt='user posted image'> க்ளைமாக்ஸ்... மூன்று நாட்கள் நடந்த இந்த பாலிவுட் திரு விழாவின் க்ளைமாக்ஸ்... சிறந்த நடிகையாக பிரீத்தி ஜிந்தாவையும் சிறந்த நடிகராக ஹிரிதிக் ரோஷனையும் தேர்வு செய்து விருது வழங்கி னார்கள். நாளை என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று சந்தோஷமாக இரு! என்று சொல்லும் கல்ஹோ நாஹோ படத்துக்கு, சிறந்த திரைப்படத் துக்கான விருது கிடைத்தது. Ôஎன்ன காரணமோ... தெரியவில்லை!ÕÕ ஸ்டைல், டான்ஸ், நகைச்சுவை..என்று சிங்கப்பூர் ரசிகர்களை மட்டும் அல்ல, நிருபர்களையும் கவர்ந்தவர் ஷாரூக்கான். பொண்டாட்டி, புள்ளைங்களோட கொஞ்சி விளையாடியே பல மாசம் ஆச்சு! பாருங்க, இன்னிக்கு என் பொண்ணுக்கு பர்த் டே! அவ இப்ப அவங்க அம்மாவோட லண்டன்ல இருக்கா. நான் இதோ இங்கே இருக்கேன். என்ன பண்றது..! என்று ஷாரூக் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு சொல்ல, கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் உச் கொட்டினார்கள். கமல்ஹாசனைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது, அவர் மாபெரும் கலைஞர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருடைய ஹே ராம் படத்தில் நடித்தேன். அதே போல் என்னுடைய மே ஹோ னா படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்டேன். என்ன காரணமோ தெரியவில்லை... இதோ அதோ என்று இழுத்தடித்துக்கொண்டே போனவர் கடைசியில் ஏதோ காரணம் சொல்லி, முடியாது என்று மறுத்துவிட்டார். அதில் எனக்கு மிகவும் வருத்தம்தான்! என்றார் ஷாரூக் தொண்டை கரகரக்க. <img src='http://www.vikatan.com/av/2004/jun/06062004/p15.jpg' border='0' alt='user posted image'> இந்திய சினிமாக்களைப் பற்றித் தெரிந்திராத சீன, மலாய் இன மக்களுக்கு, இந்தி சினிமா வளர்ந்த கதையை நான்கரை மணிநேரத்தில் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு நிகழ்ச்சி. அதன்படி அமிதாப் பச்சன், திலீப்குமார், ராஜேஷ்கன்னா, மதுபாலா என இந்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய மூத்த தலைமுறைக்குப் புகழ்மாலை அணிவிக்கும் விதமாக, அவர்களின் ஹிட் பாடல்களுக்கு அந்தந்த நட்சத்திரங் களின் பாணியிலேயே டான்ஸ் ஆடினார்கள் இளைய தலைமுறையைச் சேர்ந்த விவேக் ஓபராய், ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா ஆகியோர். கூடவே, பக்கவாட்டில் இருந்த ஒரு திரையில் சாதனை படைத்த அந்த சினிமா பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. தள்ளாடியபடி நடந்து வந்த அந்தக் காலத்து கவர்ச்சிக் கன்னி ஹெலனைக் கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்து வந்தார்கள். அவரது அந்தக் காலத்துப் பாடல்களுக்கு இன்றைய முன்னணி நடிகைகள் அத்தனை பேரும் டான்ஸ் ஆட, ஹெலனால் அந்தத் தள்ளாத வயதி லும் ஆடாமல் இருக்க முடியவில்லை. தயாராகிக்கொண்டிருக்கும் தங்கள் படங்களைப் பற்றி சிங்கப்பூர் ரசிகர்களுக்கு டிரெய்லர் போட்டுக்காட்டி விளம்பரம் செய்ய, இந்தியாவிலிருந்து ஆறு சினிமா டீம் ஸ்பெஷலாக சிங்கப்பூர் வந்திருந்தது. அனில் கபூர், சஞ்சய் தத், ஷமீரா ரெட்டி ஆகியோர் நடிக்கும் முசாப்பர் படமும் அவற்றில் ஒன்று. இந்த டிரெய்லரில் இடம்பெற்றிருந்த முத்தக்காட்சிகளைப் பார்த்துவிட்டு ஷமீரா ரெட்டியிடம் சீன நிருபர் ஒருவர், இந்தக் காட்சியில் நடிக்க எத்தனை தடவை ரிகர்ஸல் பார்த்தீர்கள்? என்று கேட்க, ஸாரி! எண்ணிக்கை நினைவில்லை! என்றார் ஷமீரா கூலாக! Vikatan - vasisutha - 06-03-2004 சினிமா makeup பற்றி அறிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் இந்த தளம் உதவியாக இருக்கும். http://www.cinemamakeup.com <img src='http://www.cinemamakeup.com/classes/master/images/master_main.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.cinemamakeup.com/classes/photographicHairstyling/images/photographicHairstyling_main.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.cinemamakeup.com/classes/specialEffects/images/specialEffects_main.jpg' border='0' alt='user posted image'> - Eelavan - 06-03-2004 வசி மேலே உள்ள,கடசியில் உள்ளவை பண்ண முதல் எடுத்த உங்கள் முகம் தானே? - vasisutha - 06-03-2004 முதலாவது நான், கடைசியில இருக்கிறது நீங்கள். (உங்கள விட நான் வடிவா இருக்கிறன்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 06-04-2004 சந்தேகம் அருமையான கருத்துக் கொண்ட அன்பே சிவம் தோக்குது முனா புனா கேனா புனா சாமி அருள் புரியுது தரமான திரைப்படம் என்னா? தமிழன் நிலை குழப்புது ஏகமா எதிரு பார்த்த திருடா திருடி ஏச்சுது அட்ரா சக்கை அப்படின்னா ஆட்டோகிராபும் கெலிக்குது தரமான திரைப்படம் என்னா? தமிழன் நிலை குழப்புது நன்றி - குசும்பன் |