![]() |
|
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376) |
- Aalavanthan - 07-17-2004 காதல் கல்யாணம் நல்லதா? இல்லை வீட்டுல பார்த்து வைக்கிற கல்யாணம் நல்லதா??? -- ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.. ஒண்னு தற்க்கொலை. இன்னொண்னு கொலை...அவ்ளோதான்' ஜோசியர்: உனக்கு ஒரே ஒரு தோஷம் இருக்கு, கல்யாணம் பண்னினா அந்த தோஷம் போய்டும்.. ராசா:அதென்னங்க தோஷம்... ஜோசியர்: வேறென்ன சந்தோஷம் தான்... - shanmuhi - 07-17-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- aathipan - 07-18-2004 என்ன இன்றைக்கு வீட்டில் சமையல் செய்யவில்லையா? உடம்பு சரியில்லை. அதுதான் பாத்ததெரியவில்லையே நல்லாத்தானே இருக்கிறீங்கள். அவருக்குத்தான் உடம்பு சரியில்லை. அதுதான் பாவப்பட்டு ஒரு நாள் விடுமுறைவிட்டிருக்கிறன் - aathipan - 07-18-2004 கணவன்: எனக்கு நல்லா நினைவிருக்குது அந்த சந்தோசமான நாட்கள். அது ஒரு அழகிய நிலாக்காலம். மனைவி: ஓ எங்க கல்யாணமான நாளைசொல்லுறீங்களா? கணவன்: இல்லை கல்யாணத்திற்கு முதல் வாழ்ந்த நாட்களைச்சொன்னேன். - aathipan - 07-18-2004 (நடு இரவு) மனைவி: ஐயோ நான் தீபாவளிக்குச் ஆசை ஆசைய செய்த பலகாரம் எல்லாத்தையும் எவனோ கள்ளன் இரவோடு இரவா வந்து சாப்பிட்டானே. கணவன்: கவலைப்படாத. விடியக்காலமை பாப்பம் எங்கை போயிடப்போறான். இங்கை தான் பக்கத்தில எங்கையும் செத்துக்கிடப்பான். - aathipan - 07-18-2004 இண்டைக்கு முழுக்க என்மனைவி அழுதபடிதான். சமைக்கக்கூட இல்லை. ஏன் யாரும் சொந்தக்காரர் செத்துப்போயிட்டினமே. இல்லை ஏதோ டிவி நாடகத்தில யாரோ செத்துப்போட்டினமாம் . - aathipan - 07-18-2004 DR: டொக்டரிட்டை வெளிப்படையா பேச வேண்டும் எதையும் மறைக்கக்கூடாது Patient: (ஓ அப்படியா.)டொக்டர் உங்கடை ஆஸ்பத்திரில வேலை செய்ற அந்த நேர்ஸ் வடிவா இருக்கிறா. - aathipan - 07-18-2004 மனைவி: எதுக்கு இல்லாத மோட்டசைக்கிளுக்கு கெல்மெட் வாங்குறியள் இப்ப. கணவன்: நீமட்டும் 'பிரா' வாங்கிறாய் - aathipan - 07-18-2004 மாணவன்: டீச்சர் நான் செய்யாத ஒன்றுக்காக எனக்கு தண்டனை குடுப்பீங்களா? ஆசிரியர்: இல்லை. நிச்சயமா இல்லை. மாணவன்: நான் இண்டைக்கு கோம்வேர்க் செய்யவில்லை. ஒண்டும் செய்யமாட்டியள் தானே. - aathipan - 07-18-2004 மனைவி: கொஞ்ச நாளா அலுவலகத்தில் என் படத்தை மேசை மேல வைத்திருக்கிறீங்களாமே. என் மேல் அவ்வளவு அன்பா. கணவன்: ஓம் உன்படத்தைப்பார்த்த உடனே எனக்கு அலுவலகவேலைக்கஸ்டம் எல்லாம் சின்னதாதெரியுது.( எல்லாத்தையும் விட பெரிய கஸ்டம் நீதானே) - aathipan - 07-18-2004 நிருபர்: உங்கள் எதிர் கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்;கள்? நடிகை: என் கணவர் நிறைய பேசுபவராக இருக்க வேண்டும். அப்பப்போ பாட வேண்டும். நகைச்சுவைகளை அள்ளி விடவே;ணடும். அவர் பிரகாசமானவரா இருக்க வேண்டும். நாட்டு நடப்பைதெரிந்து சொல்ல வேண்டும். என்னுடன் இரவு தங்குபராக இருக்கவேண்டும். நிருபர்: (அப்படிப்பார்த்தா டிவிதான் சரியா இருக்கும்.) - aathipan - 07-18-2004 ஒருவன்: அதோ போறானே அவன் தான் என் குடியைக்கெடுத்தவன் மற்றவன்: அடப்பாவி எப்படிக்கெடுத்தான். ஒருவன்: நேற்று என் கிளாசை தட்டிவிட்டான் - aathipan - 07-18-2004 நான் சந்தோசமா இருக்கிறது என் மனைவிக்குபிடிக்குது இல்லை. ஏன் என்னாச்சு.. நானும் டிவி நாடகம் பார்த்து அழனுமாம் கூட சேர்ந்து. - aathipan - 07-18-2004 ஆப்ரேசன் முதல் நோயாளி: டாக்டர் எனக்கு சொந்த பந்தம் யாருமே இல்லை டாக்டர். டாக்டர்: கவலைப்படாதுங்க. அது தெரிந்து தான் ஈமச்சடங்கு செய்ற செலவும் அப்ரேசன் செலவோடசேர்த்து வாங்கிட்டம். - aathipan - 07-18-2004 நாங்க காதலிக்கிறது எங்க வீட்டில தெரிஞ்சு போச்சு ஐயய்யோ என்னை ஆளுவச்சு அடிப்பாங்களா? பயமுறுத்துறியே. இல்லை ஒரு மாசத்தில கல்யாணபத்திரிகை அடிப்பாங்க. எங்க எல்லா அக்காவுக்கும் இப்படிதான் பண்ணினாங்க. - vasisutha - 07-19-2004 பெண்களும் குழந்தைகளும் இந்தக் களத்துக்கு வருகிறார்கள் என்பதை நினைவில் வைத்து சில A நகைச்சுவைகளை (?!) இங்கு போடாமல் தவிர்க்கலாமே. :roll: - Kanani - 07-19-2004 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என ஈ.பி.டி.பி கோரியுள்ளது. இவ்விடயம் குறித்து தாம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் கருணாவின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய மாறன் என்ற சச்சி மாஸ்டர் கொலை செய்யப்பட்டதையடுத்தே இக்கோரிக்கையை தாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக ஈ.பி.டி.பி கூறியுள்ளது. - kuruvikal - 07-19-2004 <!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என ஈ.பி.டி.பி கோரியுள்ளது. இவ்விடயம் குறித்து தாம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் கருணாவின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய மாறன் என்ற சச்சி மாஸ்டர் கொலை செய்யப்பட்டதையடுத்தே இக்கோரிக்கையை தாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக ஈ.பி.டி.பி கூறியுள்ளது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 07-19-2004 EPDP க்காரன் பார்த்திட்டு அடே எனக்குத்தெரியாமல் நான் அறிக்கை விட்டிருக்கிறன் எண்டு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.. - Kanani - 07-19-2004 அதுதானே தாத்ஸ் உங்களுக்குத் தெரியாமல் உங்கட ஆக்கள் அறிக்கை விடாயினமே...நீங்கள்தான் ஆலோசகராமே :wink: |