Yarl Forum
புகலிடத் தமிழர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புகலிடத் தமிழர் (/showthread.php?tid=7326)

Pages: 1 2 3 4 5 6


- Mathan - 03-16-2004

sOliyAn Wrote:புலம்பெயர் தமிழர்கள் வெறும் வசதிகளுக்காக வந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது... ஏதோ ஒரு விதத்தில் தமது வாழ்வைத் தீர்மானிக்க முன்னரே தமது குடும்பத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் இளம்பிராயத்தியே நகர நிர்ப்பந்தமானவர்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை.
அதன் பிறகு, ஒவ்வொருவர் ஒவ்வொரு போக்கில் தமது அறிவுக்கெட்டியவரையில் வாழ்க்கையை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முக்கிய வழிகாட்டிகளே அவர்கள்தான். அதிலே தவறுகளும் ஏற்படலாம். ஆனால், தாயக உறவுகளை நினைத்து தமது அல்லாடும் நிலையிலும் பங்களிக்கிறார்களே! அவர்களைக் கொச்சைப்படுத்தவோ.. குறைத்து மதிப்பிடவோ எவருக்கும் அருகதை இல்லை என்பதை நான் ஓங்கிச் சொல்ல விரும்புகிறேன்.

அவர்களில் ஒரு பகுதி இளம்பிராயத்திலேயே நகர நிர்பந்தமானவர்கள் என்பது உண்மைதான் அது எதற்காக நீங்கள் சொன்ன மாதிரியே குடும்பத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்துக்காக. இது பொருளாதார தேவைக்காக தானே? நான் கொச்சைப்படுத்த முயலவில்லை. வட கிழக்கில் அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தோட இதை ஒப்பிடவே முடியாது.


- sOliyAn - 03-16-2004

முதுமைக்கு ஏற்ற இடம் தாயகம் என்று உணர்ந்ததால் வந்தார்கள். சிலர் வசதியாக வாழும்போது.. வசதியில்லாதவனுக்கு அது எப்படியெல்லாமோ தெரிவது சாத்தியமே! ஆக, முதுமை வருத்தும்போது தாயக அவா வரும். அதாவது இடம்பெயர்ந்தவர்களை கூறுகிறேன்.. அவர்களது வாரிசுகளை அல்ல!


- Kanani - 03-16-2004

அப்ப இங்கு வாழ்ந்து முடித்தவர்கள்தான் வருவார்களா?
அப்படியானால் ஈழம் என்ன முதியோர் இல்லமா?


- sOliyAn - 03-16-2004

அது அவரவர்களின் ஈழத்தின்பாலுள்ள உரிமை.. உறவு. அவர்கள் பிறக்கவோ வளரவோ நகரவோ யார் வழிகாட்டினார்கள்?! அவர்களுக்கே வெளிச்சம்!


- Mathan - 03-16-2004

sOliyAn Wrote:முதுமைக்கு ஏற்ற இடம் தாயகம் என்று உணர்ந்ததால் வந்தார்கள். சிலர் வசதியாக வாழும்போது.. வசதியில்லாதவனுக்கு அது எப்படியெல்லாமோ தெரிவது சாத்தியமே! ஆக, முதுமை வருத்தும்போது தாயக அவா வரும். அதாவது இடம்பெயர்ந்தவர்களை கூறுகிறேன்.. அவர்களது வாரிசுகளை அல்ல!

வாரிசுகள் வருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. பொருளாதார நிலையில் கிழே இருப்பதால்தான் அப்படி சொல்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்களா?


- sOliyAn - 03-16-2004

அவர்களுக்கு ஏதாவது தாக்கமோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் தாயகத்தைப்பற்றி சிந்திக்கலாம். மற்றும்படி.. பொருளாதாரம் என்பதைவிட, வசதி பழக்கதோசம் சூழல் எனக் கூறலாம்.


- Mathan - 03-16-2004

sOliyAn Wrote:அப்படி இங்கே இல்லை.. பாடங்களில் சராசரியாக 3 புள்ளிகள் பெற்றால் அந்த மாணவன்'ஜிம்னாசியம்' என்ற பிரிவுக்கு தகுதியாகிறான்.. இங்கே மொழி முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. நான் தெரிய சராசரியாக 1 தொடக்கம் 2 புள்ளி பெற்ற எத்தனையோ மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. ஒரு மாணவனுக்கு.. அவர் தானாக படித்திருக்க முடியாது.. மேலதிகமாக 'ரியூசன்' எடுத்திருக்க வேண்டும்.. அதனால் அனுமதிக்க முடியாது எனக் காரணம் கூறப்பட்டுள்ளது.. இன்னொருவருக்கு 'நீர் தொடர்ந்து படிக்க உமது பொருளாதாரம் இடம் கொடுக்காது.. அதற்கு உத்தரவாதமில்லை' என்று கூறப்பட்டுள்ளது.. இப்படி நொண்டிக் காரணங்கள் பற்பல. ஆகவே, மேலெழுந்தவாரியாக பெற்றோர்களை குறைகூற முடியாது.. அதுவும் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் அக்கறையாகவே உள்ளார்கள்.

ஜெர்மன் கல்விமுறை கொஞ்சம் சிக்கலானது தான். அதுவும் பிரித்தானிய கல்விமுறையை பின்பற்றுகின்ற எங்கள் நாட்டில் இருந்து அங்கு சென்றவர்களுக்கு அந்த கல்விமுறை இன்னும் சிக்கலாக தெரியும். மொழி நன்றாக தெரியாதுதான் முதல் பிரைச்சனை. பெற்றோர்களால் அந்த கல்விமுறையை சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை.

ஜெர்மன் கல்விமுறையில் நிறைய நல்ல விடயங்களும் இருக்கின்றன, அது ஒரு தொழில்நுட்ப நாடு என்பதால் அவர்களது கல்விமுறை தொழில் கல்வியை அடிப்படையாக கொண்டது. எந்த வேலை செய்தாலும் அதை முறையாக கற்பித்து ஒரு சான்றிதழ் கொடுத்து சரியான வழிமுறையில் செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்கள். அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா போல இல்லாமல் அவர்களுடையது இலவச பல்கலைக்கழக கல்வி.

ஆரம்பத்தில் பிள்ளைகள் பாலர் பாடசாலைக்கு (Kindergarten) செல்கின்றார்கள். இது மூன்று வயதிலிருந்து ஐந்து வயதுவரை. அதற்கு பின்பு ஆரம்ப பாடசாலை (Grundschule). இது இது ஆறு வயதிலிருந்து ஒன்பது வயதுவரை. இந்த ஆரம்ப நிலைக்கு அப்புறம் இடைநிலையில் சோழியன் சொன்ன ஜிம்னாசியம் (Gymnasium) தவிர இன்னும் Gesamtschule, Realschule,Hauptschule போன்ற இடைநிலை பாடசாலைகள் இருக்கின்றன. ஆரம்ப பாடசாலையில் பெற்ற புள்ளிகளையும் ஆசிரியரின் பரிந்துரையும் வைத்துதான் பத்து வயதில் எந்த இடைநிலை பாடசாலைக்கு பிள்ளை செல்லலாம் என்று தீர்மானிக்கின்றார்கள். அப்படி தீர்மானிக்கும்போது பெற்றோர் ஆலோசனையும் கேட்பார்கள். பிள்ளையின் ஆற்றலுக்கு ஏற்ற வகையில் பாடசாலையை தீர்மானிப்பது நல்லது தானே. மெதுவாக கிரகிக்கும் தன்மையுள்ள் ஒரு பிள்ளை வேகமாக கற்பிக்கும் பாடசாலைக்கு சென்றால் அந்த பிள்ளைக்கு தானே கூடாது? அதிக புள்ளிகள் பெற்றவர்கள் ஜிம்னாசியம் பாடசாலைக்கு செல்லலாம். நமது இலங்கை தமிழர்கள் எல்லாம் தமது பிள்ளை ஜிம்னாசியம் பாடசாலைக்கு செல்லவேண்டும் இல்லை என்றால் படிப்பே இல்லல என்று நினைக்கின்றார்கள். அங்குதான் தவறு நிகழ்கின்றது. பாடசாலையை பிள்ளையின் திறனை வைத்தே தீர்மானிக்கவேண்டுமே தவிர பெற்றோர்களின் சுய விருப்பு வெறுப்பை வைத்து அல்ல. ஜிம்னாசியம் பாடசாலைக்கு போகாவிட்டால் வேலை கிடக்காதா இல்லை தொழில் கல்விதான் பெறமுடியாதா? அந்தந்த தகுதிக்கு ஏற்றவாறு வேலை கொடுக்கின்றார்கள் தானே? அப்புறம் அந்த கல்விதிட்டத்தில் என்ன பிரைச்சனை?

குறிப்பு - எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன். தவறு இருந்தால் திருத்துங்கள்.


- sOliyAn - 03-16-2004

நீங்கள் எழுதியது எல்லாமே தவறு.. எதற்கும் ஜேர்மன் தமிழர்கள் எவருடனாவது இதுபற்றி உரையாடிவிட்டு எழுதுங்கள். மற்றும் பெரும்பாலும் இங்கு பிறந்து வளரும் சிறார்கள்தான் கல்வி கற்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு தாயகக் கல்விச் சூழல் எவ்வித பாதிப்பையும் எற்படுத்தப் போவதில்லை.


- Mathan - 03-16-2004

sOliyAn Wrote:நீங்கள் எழுதியது எல்லாமே தவறு.. எதற்கும் ஜேர்மன் தமிழர்கள் எவருடனாவது இதுபற்றி உரையாடிவிட்டு எழுதுங்கள். மற்றும் பெரும்பாலும் இங்கு பிறந்து வளரும் சிறார்கள்தான் கல்வி கற்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு தாயகக் கல்விச் சூழல் எவ்வித பாதிப்பையும் எற்படுத்தப் போவதில்லை.

எனக்கு தெரிந்ததை எழுதினேன். சரி தவறாக இருக்கட்டும். நீங்களும் ஜேர்மனியில் இருப்பதாக எழுதியிருக்கின்றீர்கள். எது தவறு மற்றும் ஜேர்மன் கல்விஅமைப்பு எப்படி என்று சொல்லுங்கள் நான் மேலே இடைநிலைவரைதான் எழுதியிருக்கின்றேன்.

மற்றும் தாயக கல்விசூழல் பிள்ளைகளை குழப்பவில்லை அவர்களை வழிநடத்தும் பெற்றோர்களை குழப்புகின்றது. ஏன் என்றால் அவர்கள் தாயக கல்விசூழலில் கல்வி கற்றவர்கள் தானே?


- anpagam - 03-17-2004

அருமையான கருத்துக்கள் ஆனால் கருத்தாடுபவர்கள் தொகை காணமல் உள்ளது...... எது என்னவோ தெரிந்தவர்கள் தெரிந்த விசயங்களை கருத்தாடுவதால் தெரியாதவர்களுக்கும்..... தெரிந்தவர்கள் கூட அக்கருத்துக்களை மற்றவர்களுடன் கலந்தாலோசிப்பதால் அல்லது உண்மை நிலையை அறிவதால் ஆளாமாக ஊண்டி சொல்ல நல்ல வாய்ப்பு இங்கே...
நன்றி


- sOliyAn - 03-17-2004

Quote:மற்றும் தாயக கல்விசூழல் பிள்ளைகளை குழப்பவில்லை அவர்களை வழிநடத்தும் பெற்றோர்களை குழப்புகின்றது. ஏன் என்றால் அவர்கள் தாயக கல்விசூழலில் கல்வி கற்றவர்கள் தானே
தவறான வழிநடத்தலுக்கு பெற்றோர் சென்றுவிட சந்தர்ப்பம் மிகவும் அரிது. ஆகக் குறைந்தது 3 மாதத்துக்கு ஒருமுறையாவது ஆசிரியர்கள் பெற்றோரை வரவழைத்து உரையாடுகிறார்கள். குறையுள்ள பிள்ளைகளை வேறு விசேட பாடசாலைக்கு அனுப்புகிறார்கள் அல்லது மருத்துவ மனோதத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துகிறார்கள். ஆகவே, சாப்பாட்டைப்போல பிள்ளைகளுக்கு தமது இஸ்டங்களைக் கல்வியில் திணிக்க பெற்றோர்களுக்கு சந்தர்ப்பமில்லை.


- Rajan - 03-18-2004

பணதையும் கூடுத்து.................. :roll: ..........பிரிச்சும்போட்டாங்கள் :evil:


- nalayiny - 03-18-2004

என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்து நாடு பிள்ளைகளிற்கு சகல வழிகளிலும் மிகுந்த பாதுகாப்பு நாடே. அத்தகைய வசதிகளை பெற்றோரே செய்து கொள்ளக் கூடிய நிலையில் உள்ளது.( பெற்றோர் எந்த வகையிலும் சுவிற்சலாந்து அரசை சாராதவகையில் மட்டுமே . அதாவது சார்ந்து வாழ்தல் அற்ற நிலை) சோழியான் கூறியது போல் பெற்ரோரின் வருவாய் போதாத நிலையில் பிள்ளைகள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது தான். சுவிற்சலாந்து பிரiஐகளிற்கே மேற்படிப்பிற்கான செலவு பாற்தே விடுகிறார்கள். சுவிற்சலாந்து பிரiஐகளே பணாPதியாக படிக்க முடியாத போது தற்காலிகமாக பல்கலைக்கழக நுழைவை ஒத்திவைத்து 3 ஓ 4 கோ வருடங்கள் வேலைசெய்து உழைத்து அப்பணத்தை வைத்தே படிப்பதை அறிய முடிகிறது. வெளிநாட்டவர் எனும் பாகு பாடு பாற்பதாய்தெரியவில்லை. இங்கு வாழும் பலரும் பிள்ளைகளின் உயர்கல்விக்கு என சேமித்து வருவதை காணமுடிகிறது. அதற்கான சேமிப்புத்திட்டங்கள் கூட உண்டு.

அத்தோடு ஒரு பிள்ளை அதிக குழப்படி மிகுந்ததாக காணப்படுமாயின் மிகுந்த அக்கறையோடு அணுகி நல் வழிப்படுத்த முனைகிறார்கள். அப்படி நல்வழிப்படுத்த முடியாத போது இதற்கென பிரத்தியேக பாடசாலைகளில் வைத்து கற்பிக்கிறார்கள். அதிஓலும் அப்பிள்ளையை திருத்த முடியாத போது அதனிலும் விட பிரத்தியேக பாடசாலையில் வைத்து கற்பிக்கிறார்கள். அப்படியும் அந்த பிள்ளையை திருத்த முடியாத போது அதற்பகான காரண காரியங்கள் ஆராயப்பட்டு அப்பிள்ளை நாட்டிற்கே உருப்படியாகாத பிள்ளை என கணித்து( அது பெற்றோரது குறைபாடே அதாவது அதிமதுபோதைக்கும் போதை வஸ்த்துக்கும் ஆளான பெற்றோர் அலஇலது ஆழான பிள்ளை என மருத்தவ பரிதோதனை அறியுமிடத்து அப்பிள்ளையின் முரட்டுத்தனங்களை படிப்படியாக குறைத்து பலமின்றி ஆக்க தொடற்சியாக ஒரு குறிப்பிட்ட மருந்தை பாவித்து வருகிறார்கள் அக்குழந்தை படிப்படியாக தனது பலத்தை இழக்கிற நிலை ஏற்படுகிறது.( ஒரு முட்டையை கூட உடைக்க முடியாத வாறு அக்குழந்தையின் பலம் குறைக்கப்படுகிறது. ( அதற்கு இவர்கள் கூறும் காரணம் அக்குழந்தையால் தமது நாடு அசிங்கப்படுவதை அடிதடி ரௌடியாவதை தாம் விரும்பவில்லை என கூறுகிறது. அதுவும் உண்மைதானே. எமது நாட்டில் மக்கோனா ( அச்செழு அச்சு வேலியில்) என ஒரு பாடசாலை உண்டு தானே. முரட்டுகளுக்கு.

அதை விட இங்கு தனித்து டொச் மொழி பிரெஞ்சு மொழி என இல்லை ஆங்கிலத்திற்கும் மறஇற மொழிகளிற்கு கொடுக்கும் உரிமை கொடுக்கப்படுகிறது. இங்கள்ள குழந்தைகள் ஆங்கிலத்தில் கூட அதி சிறப்பு சித்தி பெற்றே வளர்கிறார்கள்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிபிசி கூறியது போல இங்கு 2 ஆம் வகுப்பில் இருந்தே கிரகித்தலின் அடிப்படையில் குழந்தைகளின் வகுப்பு பிரிக்கப்படுகிறது. அதிவேகம் சாதாரணம் என. ஒவ்வொரு வருடமும் கற்பிக்கப்படுகிறபோது பெற்றோர் அதனை பார்வையிட அழைக்கப்படுவார்கள். உண்மையிலேயே அதிவேக வகுப்பு யாழ் பல்கழைக்கழக கற்கை நெறிபோன்று மிகுந்த கடுகதியாக போவதை அவதானிக்க முடிந்தது. பார்த்துக்கொண்டு இருந்த எமக்கே மிகுந்த கழைப்பு வந்து விட்டது. என்றாhல் பாற்துக்கொள்ளுங்களேன். எப்படித்தான் எமது மகள் கிரகித்து விழங்கி கொள்கிறாவோ என மிகந்த பயம் இன்றும் உள்ளது. ஆனால் மகளை கேட்டால் தோழை ஒரு உலுக்கு உலுக்கி விட்டு விலகுவதை காணமுடிகிறது.ஆசிரியரிடம் இது குழந்தைகளிற்கான உயர்கல்விக்கு பாதிப்பை தராதா என கேட்டபோது உங்களய் குழந்தையை நாம் கின்ர காடினில் இருந்த அவதானிக்கிறபோது அவருக்கு உரிய வேகம் இவ்வகுப்பே என கூறுகிறார்.( புள்ளிகளை பாற்கிரபோது எமது தலையீடின்றி அதிவிசேட புள்ளிகளே.)

பிபிசி கூறியது போலவே சுவிற்சலாந்து கல்வி முறையும். இங்குள்ள கற்கை நெறி சிலசமயம் எமக்கு புரிவதில்லை. ஆனால் நான் விட்டு வைப்:பதில்லை அதற்கான விளக்கத்தை பாடசாலை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கௌ;வேன்.அதில் எனக்கு ஏற்படும் சிக்கல்களை எனக்கான சந்தேகங்களை ஆசிரியரியரோடு கலந்தாலோசிப்பேன்.ஃ (எனது பிள்ளைக்கு அது கடினமாக இருக்குமோ என எனக்கு தோன்றும் சந்தற்பத்தில் மட்டுமே. ) அதற்கான நேரத்தை சகலருக்கும் ஏற்கனவே பாடசாலை ஒதுக்கி தந்துள்ளது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் ஆலோசனைகள் அறிவுறுத்தல்கள் நன்மை தீமைகள் என)

மகளைக் கடினமா எனக்கேட்டால் உங்களுக்கு கடினம் என்றால் எனக்கும் கடினமா என்பார். இதற்கு காரணம் எமது கல்வி முறையைப்போல் இவர்களது கல்வி முறையல்ல என்பதே.சுகமாக கற்பிப்பதை ஏதோ கடினமாக கற்பிப்பதாக தோன்றும். ஆனால் அவ்முறையை நன்கு ஆராய்கிறபோது அதன்பலாபலன்கள் சிந்தனைத்திறனை கிரகித்தலை ஞாபகசக்தியை அதிகம் விருத்தி செய்வதாக காணப்படும்.


- nalayiny - 03-18-2004

Kanani Wrote:அப்ப இங்கு வாழ்ந்து முடித்தவர்கள்தான் வருவார்களா?
அப்படியானால் ஈழம் என்ன முதியோர் இல்லமா?

இப்போ போக முடியாதவர்கள் தானே நாளைய முடியாத முதியோர்கள். அவர்களால் எப்படிபோக முடியும்.??? பகுத்தறிவு கொஞ்சம தேவையாகவே உள்ளது...!!!?????? Idea Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இஙகு வாழும் இன்றய முதியோரோ அங்கு தமது நண்பர் நண்பிகள் இல்லையே என வருத்தப்பகடுகிறார்கள்( அங்கிருந்து வரும் ஒவ்வோரு மரணச்செய்தியின் போது) நாம் போகிறபோது எமக்கு அறிமுகமில்லாதவர்களே தமது கிராமத்தில் வ
Hழ்கிறார்களே என நினைத்து ..!!? என்ன செய்யலாம்??..!! ஒன்றுமே செய்ய முடியாது. Idea <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ...! இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..!!??

[size=18]இவ்வுலகில் பிறந்த அனைவருமே நிம்மதியாக சுவாசிக்கவே விருப்புகிறார்கள்.


- sOliyAn - 03-18-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான் எனது எண்ணத்தை சொன்னேன்.. இங்கு ஓய்வூதியம் எடுப்பதாயின் 65 வயதுவரை வேலை செய்ய வேண்டும். அல்லது முதலே எடுக்க வேண்டுமாயின் ஏதாவது நோய் பீடிக்க வேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 65 வயதுவரை வேலை செய்ய முடியுமா? இது நான் பார்க்கும் வேலையைக் குறித்த சந்தேகம்.. வேலை செய்யாமல் தாயகத்தைப்போல பிள்ளைகளில் தங்கியிருக்க முடியுமா?! இதற்கு அவர்கள் மேல் விழக் காத்திருக்கும் சுமைகள்தான் பதில் தரவேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆனால், தாயகத்துக்கு திரும்பிப் போவதானால்... எமுது வருமானத்தில் ஓய்வூதியத்துக்குச் செலுத்திய தொகையை எடுத்துக்கொண்டு போய், அதை ஒரு வங்கியிலிட்டு, அதன் வட்டியில் வாழ முடியும். ஆனால், அதற்கும் தாயக நிலை இடமளிக்குமா?! ஆக, முகவரியற்ற தபாலட்டையின் நிலைதான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 03-18-2004

கல்வியைப் பொறுத்தளவில் ஜேர்மனியின் பல நகரங்களில் 5ம் வகுப்பிலும், சில நகரங்களில் (பிறேமன் உட்பட) 7ம் வகுப்பிலும் 3 பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். இதை முறையே ஜிம்னாசியம் (அட்வான்ஸ் லெவலுக்கு ஒப்பானது), றியால் (எஸ்.எஸ்.சி.க்கு ஒப்பானது), கப்ற் சூல (இது ஜே.எஸ்.சி. எட்டாம் தரத்துகஇகு ஒப்பானது. இங்கே தொழிற் கல்விக்கு முன்னுரிமை). ஜிம்னாசியத்தில் படிப்பவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு செல்லலாம். றியாலில் கற்பவர்களில் திறமையானவர்கள்.. 11ம் வகுப்பில் ஜிம்னாசியம் போய்.. பின் பல்கலைக்கழகம் செல்ல முடியும். இது எனது அறிவுக்கெட்டிய விடயம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- anpagam - 03-18-2004

முகவரியற்ற தபாலட்டையின் நிலைதான்...
புலம்பெயர் தமிழரின் நிலை... :roll:
இருதோணியில் கால்வைப்பதால்... :roll: :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
யுூதர்களை பார்து படிக்க என்னம் கன்ன உண்டு புலம்பெயர்தமிழர்... :!: :|


- adipadda_tamilan - 03-19-2004

Kanani Wrote:அப்ப இங்கு வாழ்ந்து முடித்தவர்கள்தான் வருவார்களா?
அப்படியானால் ஈழம் என்ன முதியோர் இல்லமா?
----------------------
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- adipadda_tamilan - 03-19-2004

BBC Wrote:
sOliyAn Wrote:முதுமைக்கு ஏற்ற இடம் தாயகம் என்று உணர்ந்ததால் வந்தார்கள். சிலர் வசதியாக வாழும்போது.. வசதியில்லாதவனுக்கு அது எப்படியெல்லாமோ தெரிவது சாத்தியமே! ஆக, முதுமை வருத்தும்போது தாயக அவா வரும். அதாவது இடம்பெயர்ந்தவர்களை கூறுகிறேன்.. அவர்களது வாரிசுகளை அல்ல!

வாரிசுகள் வருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. பொருளாதார நிலையில் கிழே இருப்பதால்தான் அப்படி சொல்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்களா?

-------------------

இருக்கும் இப்போதய சந்ததியே வராது எனும் போது நீங்கள் என்னடா எனடா வாரிசுகள் பற்றி கதக்கிறியள்..
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- adipadda_tamilan - 03-19-2004

sOliyAn Wrote:அவர்களுக்கு ஏதாவது தாக்கமோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் தாயகத்தைப்பற்றி சிந்திக்கலாம். மற்றும்படி.. பொருளாதாரம் என்பதைவிட, வசதி பழக்கதோசம் சூழல் எனக் கூறலாம்.

----------------------

வசதி, பழக்கதோசம், புதிய சூழல் எல்லாம் பொருளாதாரத்திற்குள்தானே வருகிறது சொழியன்... Confusedhock: