![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
- kuruvikal - 03-23-2004 இது தொடர்பில் எங்கள் சிந்தனையை இன்னொருவரில் புகுத்துவதிலும் பார்க்க அவரவரே தங்கள் மனச்சாட்சியை முன்வைத்துச் சிந்திக்கட்டும் தெளிவு கண்டு தமிழ்நாதத்தின் சிந்தனைக்கு சிறப்பளிக்கட்டும்....சிறப்புப் பெறட்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- Mathan - 03-24-2004 BBC Wrote:முகம் கிழித்து இன்னொன்று நிர்வானியின் இந்த கவிதை பற்றிய உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். - sOliyAn - 03-24-2004 முற்போக்குவாதி சிந்தனையாளன் வாசிப்பவன் ஆராய்ந்து பேசுபவன் இதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றி சொன்ன வா£¢த்தைகள் மேதாவி என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்ள யாருக்குப் பிடிக்காது ? தன்னைப்பற்றி எதற்காகச் சொல்கிறார்? மற்றவன்மூலமாக சுயவிளம்பரமா? ஆக இந்தவேளையில் மற்றவன் இவருக்கு முகமூடியாகிறானா?! முகமூடி கிழிந்து முகம் தொ¤ய உனக்காக பொய்முகத்தோடு கவிதை புனைபெயர் கூட்டத்தில் கத்தல் எதுவுமே இனி சாத்தியமில்லை எனக்கு இந்த பந்திக்கான காரணம் எனக்கு புரியவில்லையே.. ஆக.. எதிலோ தொடங்கி எதையோ சொல்லி எதிலோ வந்து நிற்கிறதைத்தான் இது காட்டுகிறது என நினைக்கிறேன். - Mathan - 03-24-2004 sOliyAn Wrote:முற்போக்குவாதி அவர் தன்னையே முகமூடி போட்டு மேதாவித்தனம் ஒருவராக உருவகித்துதான் இந்த கவிதையை எழுதி இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். ஒரு சுய விமர்சனமாகவும் அதே நேரத்தில் மற்றவர்களையும் சுயவிமர்சனம் செய்ய வைக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம் அல்லவா? அவர் மற்றவர்களை குறிப்பிட்டு எழுதினால அவர்கள் நீ மட்டும் என்ன யோக்கியமா என்று கேட்கலாம் தானே? தன்னையும் விமர்சனம் செய்து மற்றவர்களையும் அப்படி செய்யாதீர்கள் என்று சொல்லும் போது அது நல்ல பண்பு தானே? - Paranee - 03-24-2004 தன்னை தாழ்த்திக்கொள்வதில் சற்று மனப்பலம் பெறுகின்றார் போல தோன்றுகின்றது. கவிதை அருமை இன்னொருவரை குறிப்பிட்டு எழுதும்போது முதலில் எம்மை நாம் நோக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாகவும் அமைகின்றது. நண்பர் பிபிசி கூறியது சரியாகவே இருக்கின்றுது - Mathan - 03-24-2004 அர்த்தமற்ற வார்த்தை அப்பாவும் அம்மாவும் கவனிப்பாரற்று காலத்தைக்கடத்துகிறார்கள் அடிப்படை வசதியுமற்ற என் கிராமத்தில்! எனக்கிணையானவளும் வெளியிலும் சொல்லமுடியாமல் வெட்கி வெட்கி சோகத்தில் கழிக்கிறாள் தன் விடியாத இரவுகளை ! வாரிசுகளும் நாலு இடம் அழைத்துச்செல்ல நல்லது கெட்டதுகளைச் சொல்லித்தர ஆளின்றி புழுங்கி புழுங்கி நகர்த்துகிறார்கள் நாட்களை ! எனக்கும் எவருமில்லை இந்த அந்நிய மண்ணில் இருந்தும் வெட்கமற்று சொல்லிக்கொள்கிறேன் "நான் குடும்பக்காரன்' நன்றி - இ.இசாக் - Mathan - 03-24-2004 Paranee Wrote:தன்னை தாழ்த்திக்கொள்வதில் சற்று மனப்பலம் பெறுகின்றார் போல தோன்றுகின்றது. கருத்துக்கு நன்றி பரணி. மற்றவர்கள் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். - Eelavan - 03-24-2004 சுய விமர்சனங்கள் ஒருவரை புடம் போடும் என்பது உண்மைதான் ஆனால் அதனை எமக்குச் சொல்ல வேண்டிய காரணம் என்ன ஆக கவிஞர் எமக்கு ஒன்றை சொல்லவருகிறார் உடனேயே நீ எப்படி இப்படிச் சொல்லலாம் என்றால் யதார்த்தத்தின் சூடு தாங்காமல் உடனேயே திருப்பிக் கேட்போம் ஏன் நீ மட்டும் திறமா என்று அந்தக் கேள்வி எழாது கவனமாகக் கையாளுவதற்கான உத்திதான் தன்னைப் பற்றிய சுயவிமர்சனமும் மற்றவர்கள் தன்னைப் பற்றிச் சொல்வதாக தானே சொல்வது இதன் மூலம் கவிஞர் தன்னை இரத்தமும் சதையுமான ஒரு அயல்வீட்டுக்காரனாகவோ அல்லது எதிரில் போகும் ஒருவனாகவோ வாசிப்பவனுக்கு உருவகிக்கப் படுகின்றார் அதன் மூலம் அவர் சொல்ல வந்த விடயம் அழகாகச் சொல்லி முடிக்கப் படுகின்றது - sOliyAn - 03-24-2004 முகமூடி கிழிந்து முகம் தொ¤ய உனக்காக பொய்முகத்தோடு கவிதை புனைபெயர் கூட்டத்தில் கத்தல் எதுவுமே இனி சாத்தியமில்லை எனக்கு இந்த முடிபுக்கு என்ன காரணம் சொல்கிறார் கவிஞர்? எதுவுமே சாத்தியமில்லை என்பதுற்கு பதிலாக எதுவுமே இனி சாத்தியமில்லை என எதிர்காலத்தைப்பற்றி எதற்காக சொல்கிறார்? அப்படியாயின் இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் சாத்தியமானது எதிர்காலத்தில் சாத்தியமாகாததற்கு என்ன காரணம் சொல்லியிருக்கிறார்?! தெரிந்தவர்கள் கூறவும். அறிய ஆவலாயுள்ளேன். - kuruvikal - 03-24-2004 நிர்வாணி நீ ஒரு நிர்வாணம் இன்றைய நிர்வாணிகள் இப்படித்தான் புதிய வடிவில் உலகை ஏமாற்ற நினைக்கும் கோமாளிகள் தாம் மெய்யின் வடிவமென்று தம் நாலு கெட்டது சொல்லி நாலாயிரம் கெட்டது மறைத்து தமக்கும் நல்லது தெரியுமென்று காட்ட நாற்பது நல்லது சொல்லி தம்மை நிர்வாணமாய்க்காட்டும் கோமாளிகள்...! உன்னால் உன்னையும் சரிவர உணர முடியவில்லை உளறாமல் இருக்கவும் முடியவில்லை உலகை ஏமாற்ற இரட்டை வேடம் மட்டும் நல்லாப் போடுகிறாய் அது உன்னை நிர்வாணமாய்க் காட்டுது எனியேன் உனக்குப் போர்வை போதிமரத்தில் ஆசை...! கிழிந்தது உன் முகத்திரை திருந்து அல்லது ஓடித்தப்பு...! பாவம் வேசம் கலைந்த ஆரோ ஒரு பாவி...! வேடதாரிகள் கதி இதுதான்...! மற்றவனுக்காய் அன்றி உன் உள்ளத்துக்கு உண்மையாய் இரு நிர்வாணியாய் நிர்வாணமாய் பரிதவிக்கத் தேவையில்லை...! நல்லவன் என்றும் நல்லவன் தான் கெட்டவன் என்னதான் நல்லவன் வேடம் போட்டாலும் கெட்டவன் கெட்டவன் தான்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->முகமூடி கிழிந்து முகம் தொ¤ய உனக்காக பொய்முகத்தோடு கவிதை புனைபெயர் கூட்டத்தில் கத்தல் எதுவுமே இனி சாத்தியமில்லை எனக்கு இந்த முடிபுக்கு என்ன காரணம் சொல்கிறார் கவிஞர்? எதுவுமே சாத்தியமில்லை என்பதுற்கு பதிலாக எதுவுமே இனி சாத்தியமில்லை என எதிர்காலத்தைப்பற்றி எதற்காக சொல்கிறார்? அப்படியாயின் இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் சாத்தியமானது எதிர்காலத்தில் சாத்தியமாகாததற்கு என்ன காரணம் சொல்லியிருக்கிறார்?! தெரிந்தவர்கள் கூறவும். அறிய ஆவலாயுள்ளேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அவர் தன்னுள் இருக்கும் இன்னொரு மனிதன் வெளிப்பட்டதுதான் காரணம் சொல்கின்றார். இல்லை அப்படித்தான் நினைக்கின்றேன். அதை அவர் உணர்ந்ததும் எதிர்காலத்தில் முகமூடி போட்டு பொய் பெயரில் கவிதை போன்றவை இனி சாத்தியமில்லை என்று சொல்கின்றார், இப்படித்தான் நினைக்கின்றேன் சோழியான். தவறாக இருந்தால் திருத்துங்கள். - Mathan - 03-24-2004 மறக்கத்தான் முடியுமோ சொல் மனமே மனிதமனத்தின் வேதனைக்கு மறதியொன்றே நல் ஒளடதம் என்பார் மனதில் வலிப்பதை மறந்திடலாம் மற்றோர் பிழைகளையும் மன்னித்து மறந்திடலாம் மதியாதோர் முற்றம் வேண்டாமெனவும் மறந்திடலாம் மமதையுணர்வு கொண்டோர் பேதமையையும் மறந்திடலாம் மண்ணின் நேசத்தை மறக்கத்தான் முடியுமோ சொல்மனமே அன்னை மொழி மறக்கின்ற அநியாயம் இங்கு வேண்டாம் அடுத்த மொழி மோகம் எங்கள் கண்ணை மறைக்கலாமோ அறிவாளி என்று நாம் அடிக்கடி பீற்றிக் கொண்டாலும் அருமையான தாய்மொழி அறிவு இல்லாத அறிவீனம் அவைதனில் எங்களை இனம்காட்டும் அழகு தமிழை அன்பர்கள் நாம் மறக்கத்தான் முடியுமோ சொல்மனமே நாம் நாமாக இருந்தால் நலமாக என்றும் இருப்போம் நாடு மாறியதால் நம் கோலங்களும் மாறலாமோ நாசமாகி விடலாமோ நாம் கட்டிக்காத்த கலாச்சாரங்கள் நாவடக்கம் நம்மை விட்டு தொலைதூரம் போகலாமோ நாளும் பொழுதும் கட்டிக்காத்த நம் கலாச்சாரங்களை நாம் இந்த மண்ணில் மறக்கத்தான் முடியுமோ சொல்மனமே நன்றி - ஏ.ஜே.ஞானேந்திரன் - Mathan - 03-24-2004 சுமை இறக்கி வைக்க என் மடி உண்டு இந்தக் குழந்தை நாமிருவரும் இணைந்து எழுதத் துவங்கிய கவிதை தான்.. ஆனால் பத்து மாதம் நீ இருக்கும் தவத்திற்கு நம் இருவருக்கும் வரம்..!! நியாயம் தானா என்று சில நேரம் சிந்திக்கிறேன்.. இறைவனும் ஆணோ..? அவன் செய்த சதியோ?? அல்லது இயற்கை வகுத்தளித்த விதியோ..?? உன் சுமை கருதி, 'பத்து மாதம் எதற்கு, பத்து நாட்களில் குழந்தை பிறந்திட வழியுண்டா?' என விசாரித்துப் பார்த்தேன்.. குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரக் குழுவினர் தேடி வந்து அடித்துப் போயினர்..!! முதன்முதலாய் நம் குழந்தை உன் வயிற்றில் உதைத்ததாய்ச் சொன்னபோது உன் கண்ணிலும் குரலிலும் எத்தனை இன்பம்.. எத்தனை உற்சாகம்..?? அதெல்லாம் எனக்கு எப்போதும் எட்டாக் கனி தானா..?? உன்னைத் தினந்தோறும் கோவிலுக்குக் கூட்டிச் செல்லும் போது நான் வேண்டிக் கொள்வேன்.. இரவில் கனவில் கடவுள் வந்து உன் சுமையை எடுத்து எனக்கு மாற்றிப் போக வேண்டுமென்று.. இன்று வரைக்கும் கனவு மட்டும் தான் வருகிறது.. கடவுளைக் காணோம்..!! நீ சில மணி நேரம் ரத்தத்தில் மிதந்து உன் உயிரைக் கொடுத்து இன்னொரு உயிரைப் பெற்றெடுப்பாய்.. அறை வெளியே காத்திருக்கும் நான் இழப்பதெல்லாம் கை விரலின் சில நகங்கள் மட்டுமே.. அதனால் தான் முடிவு செய்தேன்.. உன் பெயரின் முதலெழுத்து தான் நம் குழந்தைக்குத் தலைப்பெழுத்து..!! சின்னச் சின்ன வேலைகளுக்காவது என்னை அடிக்கடி ஏவு.. சாய்ந்து கொள்ள என் தோள் வேண்டுமென்று தைரியமாய் அடம்பிடி.. தினந்தோறும் வயிற்றில் காது வைத்துக் கேட்டு நெற்றியில் முத்தமிட வேண்டுமென்று உரிமையோடு கட்டளையிடு.. இதைப் போல இன்னும் நிறைய என்னைச் செய்யச் சொல்லிக் கட்டாயப் படுத்து..!! அணில்கள் சின்னச் சின்னதாய்க் கற்களை எடுத்துப் போட்டிருந்தாலும் அவைகளும் பாலம் கட்டியதாய் இன்றைக்கும் காப்பியத்தில் உண்டு..! கடைசியாய் ஒன்று.. எனக்கு மகள் தான் வேண்டும்.. என்னுள் இருந்து வருவதைக் காட்டிலும் உன்னுள் இருந்து வந்தால் நம் மகள் பரிபூரணமாய் உன்னைப் போலவே இருப்பாள்.. அதனால் தான் இந்த அநீதியை நான் கொஞ்சம் பொறுத்துக் கொள்கிறேன்..!! நன்றி - மீனாக் - sOliyAn - 03-24-2004 BBC Wrote:sOliyAn Wrote:முகமூடி கிழிந்து முகம் தொ¤ய திருத்துவதற்கு எனக்கு தகுதி இல்லை பிபிசி.. ஆனால் கவிதையைக் குறித்து நாங்களே எமக்குத் தகுந்தமாதிரி முடிவெடுப்பதாயின்.. அதற்கேன் நிர்வாணி. அதற்கேன் கவிதை?! ஒரு ஆக்கமென்றால் அது எதற்காக, எதைக் குறிதது எழுதப்படுகிறது.. வாசகனுக்கு அதனூடாக எழுதுபவர் எதைக் கூற வருகிறார் என்பதில் தெளிவிருக்க வேண்டும். இல்லையா?! ஏதோ எழுதுகிறேன்.. வாசகர்கள் எதையாவது தமக்கேற்றவாறு நினைத்துவிட்டு போகட்டும் என்றால்.. அது ஆக்கமல்ல. அரைகுறை! - Mathan - 03-24-2004 sOliyAn Wrote:BBC Wrote:sOliyAn Wrote:முகமூடி கிழிந்து முகம் தொ¤ய நான் எடுத்த் கருத்தை சொன்னேன் சோழியன், அப்படித்தான் எனக்கு புரிந்த்து, எனக்கு நிர்வாணி யார் என்று தெரியாது, குறைகள் இருந்தால் படைப்பாளிகளிள் எழுத எழுத அவற்றை திருத்துவார்கள் என நம்புகின்றேன், - sOliyAn - 03-25-2004 நிர்வாணி புதிய படைப்பாளராக இருக்க முடியாது.. ஏனெனில் அவரது வார்த்தைப் பிரயோகங்கள் அப்படி உள்ளன. ஆனால் அவர் சொல்ல வருவதை தெளிவாகச் சொல்ல பயப்படுகிறார் என்பது மட்டும் புரிகிறது!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கண்ணன் - 03-25-2004 sOliyAn Wrote:நிர்வாணி புதிய படைப்பாளராக இருக்க முடியாது.. ஏனெனில் அவரது வார்த்தைப் பிரயோகங்கள் அப்படி உள்ளன. ஆனால் அவர் சொல்ல வருவதை தெளிவாகச் சொல்ல பயப்படுகிறார் என்பது மட்டும் புரிகிறது!! <!--emo& கடைசியில் கவிதையின் பொருளை கண்டபிடித்தவிட்டீர்கள் சோழியான். பயப்படாமல் அதை சொல்லுங்கள். - Mathan - 03-25-2004 ஆம். நீங்கள் எடுத்த கருத்தை எழுதுங்கள். - nalayiny - 03-25-2004 BBC Wrote:[color=orange]BBC Wrote:முகம் கிழித்து இன்னொன்று <span style='font-size:25pt;line-height:100%'>தன்னைத்தானே ஆய்வு செய்து இருக்கிறார்.தனக்குள் இருக்கும் தனக்காக அவர் மிகுந்த வருத்தத்தை தெரிவித்தக்கொள்கிறார் இந்த கவிதையுள்.</span> [u]<span style='font-size:25pt;line-height:100%'>முகமூடி கிழிந்து முகம் தொ¤ய உனக்காக பொய்முகத்தோடு கவிதை புனைபெயர் கூட்டத்தில் கத்தல் எதுவுமே இனி சாத்தியமில்லை எனக்கு</span> இந்த வரிகள் கொஞ்சம் கனம் கூடியதாக இருப்பதால் தனது சிந்தனை இப்படி போயிருக்கிறதே என நினைத்து வெட்கித்தலைகுனிகிறார் என்று கூட எடுத்தக்கொள்ளலாம். - nalayiny - 03-25-2004 sOliyAn Wrote:நிர்வாணி புதிய படைப்பாளராக இருக்க முடியாது.. ஏனெனில் அவரது வார்த்தைப் பிரயோகங்கள் அப்படி உள்ளன. ஆனால் அவர் சொல்ல வருவதை தெளிவாகச் சொல்ல பயப்படுகிறார் என்பது மட்டும் புரிகிறது!! <!--emo& நிர்வாணி பயந்ததாக தெரியவில்லையே. அவர் தெளிவாகவே தன்னை இக் கவிதையுூடாக வெளிப்படுத்தி உள்ளாரே. பின்னிரா வேளையில் ஒருபெண் வீதியால் போனால் அவளை அதுவாகத்தானிருக்கும் என்கின்ற தனது தவறான கணிப்பை அல்லது தான் ஏன் அப்படி நினைக்கவேண்டும் என நினைத்துதன்னைத்தானே நொந்து வருந்தகிறார் என்பது தான் உண்மை. பின்னிரா வேளையில் எவளோ ஒரு இளம் பெண் நடந்து செல்ல அவள் "அதுவாகத்தானிருக்கும்" <b>எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது</b> நன்றி நிர்வாணி. |