Yarl Forum
காதல் காதல் காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: காதல் காதல் காதல் (/showthread.php?tid=7279)

Pages: 1 2 3 4


- shanthy - 04-03-2004

BBC Wrote:அதை கலப்படம் என்று நான் நினைக்கவில்லை. காதல் என்ற பெயரில் சில அசிங்கங்கள் நிகழ்வது உண்மைதான், அதற்காக காதலே கலப்படம் என்று சொல்ல முடியாது.

http://www.yarl.com/articles.php?articleId=234 <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ishwari - 04-03-2004

BBC Wrote:
Eelavan Wrote:காதலில் காமம் என்பது ஒரு பிற்சேர்க்கை அல்லது ஒரு இடைச்செருகலே அன்றி அதனை காதலுடன் கலக்கும் மாசு என்பது தவறு

அதே போன்று காதல் தூய அன்புதான்

காமம் கலக்காத காதல்தான் தூய அன்பு என்பது புதிய விளக்கமாக இருக்கிறது

ஆண் பெண் காதலில் காமம் கலப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
உண்மை தான். ஆனால் அங்கு அது வெறியாக மட்டும் மாறக்கூடாது.


- manimaran - 04-03-2004

nalayiny Wrote:அன்பு என்பது கடவுள்.

அப்போ கடவுள் என்பது??


- shanthy - 04-03-2004

manimaran Wrote:
nalayiny Wrote:அன்பு என்பது கடவுள்.

அப்போ கடவுள் என்பது??

அருமையான கேள்வி மணிமாறன். குருவி எங்கை காணேல்ல பதிலை ??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 04-03-2004

அன்பு என்பது தெய்வம்...அதை எப்பவோ சொல்லிவிட்டார்கள்...காதல் என்பது சிறிதளவு அன்பு கலந்து (அந்தச் சிறிதளவும் ஆளாளுக்கு வேறுபடும்) வேறு பல மாசுக்களும் கலந்த ஒரு விருப்ப உணர்வு....அதாவது புலனுக்குள் மனிதனை அடக்கும் உணர்வு...ஆனால் அன்பு புலன் கடந்தும் உணரத்தக்கது...காதல் இன்றி மனிதன் வாழலாம்...அன்பின்றி மனிதன் வாழ முடியாது....ஆனால் தூய அன்பை ஒரு உள்ளம் உணர முடிந்தால் வெளிப்படுத்த முடிந்தால் அதுவே தெய்வத்தின் நிலையில் மனிதனை வைக்கும்...அது அசாத்தியமல்ல சாத்தியம்...முயன்றுதான் பார்ப்போமே...அதற்காக மாசுறை காதல் கொண்ட அர்ப்ப அன்பைத் தேடாமல் உள்ளத்தில் இயன்றவரை எதிர்பார்பிலான குணங்கள் களைந்து அன்பு நிறைத்து தூயதாக முடியாவிட்டாலும் உயர்ந்த பட்ச அன்பு செலுத்தி வாழுங்கள்....அதுவே எமது முயற்சி....காதலின்றி மனிதம் வாழும்.....!முயன்றால் மனிதனும் வாழலாம்....முயற்சிப்போம்....!

அன்பே நீ என்றும் மனிதத்தின் உயிர் மூச்சு....காதல் நீ என்றும் மனிதனில் கோமாளி....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- vasisutha - 04-03-2004

<img src='http://www.mostlytamil.com/feature/kadhal_ps.gif' border='0' alt='user posted image'>

<img src='http://www.mostlytamil.com/feature/kadhal.gif' border='0' alt='user posted image'>

<img src='http://www.angelfire.com/poetry/raaji/images/kaamam.gif' border='0' alt='user posted image'>


- AJeevan - 04-05-2004

[Image: lovers.jpg] <b>காதல் வாசல்</b>


<span style='color:green'><b>முழு விடுதலையைச் சுவாசித்து பூப்பதுதான் காதல். அது சிறைக்குள்ளும், எந்த விலங்குக்குள்ளும் அடைபட்டு, கட்டுப்பட்டு இருக்கச் சம்மதிக்காது</b>
[align=center:599b1897d1] - கவிஞர் அறிவுமதி[/align:599b1897d1]

[size=15]அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது விஞ்ஞானம். உயிர்சமூகம் தன்னை ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது.

இந்த இனிய உணர்வை 'காதல்' என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆதிமனிதர்கள் கட்டுப்பாடுகளற்று காதலித்தார்கள். அவர்கள் வாழ்தலின் முக்கிய குறிக்கோள் காதலாக மட்டுமே இருந்தது.

அதனால் காதலை விருப்பம்போல் அனுபவித்தார்கள். மனிதன் தங்களுக்கான ஒலி, ஓசை, மொழி, எழுத்து இவை எதுவும் அறியப்படாததற்கு முன்பே அவர்களால் அறியப்பட்டது காதல்; காதல்; காதல் மட்டுமே. கட்டுப்பாடுகளற்று காதலித்த ஆதிமனிதர்களின் மீது மெல்ல மெல்ல நாகரிகம் படர்ந்தபோது அவர்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டார்கள். உறவுகள், குடும்பங்கள், இனக்குழுக்கள் எனப் பிரிந்து எல்லைக் கோடுகளை விரிந்தன. விரிந்த எல்லைக் கோடுகள் முதலில் காவு கேட்டது காதலைத்தான்; காதலர்களைத்தான். நாகரிகம் வளர வளர தேசம், மதம், இனம், மொழி என காதல் சுவர்கள் பல எழும்பின. இருப்பினும், காதல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டே வந்திருக்கிறது. தங்களை அழித்துக் கொண்டு காதலை வாழவைத்தவர்களின் பட்டியல் மிக நீளமானது.

சிலர் சரித்திரமாகவும் நிலைத்துவிட்டார்கள். சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் தன் காதலியை அடையாமலே தூக்கிலிடப்பட்ட தினத்தைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகத்திலும் காதல் என்பது சமூகக்குற்றம் என்பது போன்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது. தங்களது வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த சமூகம் இன்னும் இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கவில்லை.

காதல் சாமான்யனையும் சாதனையாளனாக்கிவிடும். காதல்தான் மிகப்பெரும் ஊக்கச் சக்தி. வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் எல்லாம் காதலித்தவர்களாகவும், காதலிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

வாழ்க்கையின் முழுமையான வெற்றி என்பது காதலையும் உள்ளடக்கியதுதான். இந்த உலகம் எப்போதும் காதலால் நிரம்பியே இருக்கவேண்டும். காதல் இல்லாத உலகம் சூன்யமானது.

காதலர்கள் நிறைந்த பூமியே சொர்க்க பூமி. அத்தகைய சொர்க்கபூமியை உருவாக்க வேண்டும் நாம். அதற்காக, காதலிக்கலாம் வாங்க.</span>

Koodal.com


- Mathan - 06-29-2005

காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?

[size=13]1. ஆண்களைக் கவர்வதில் உங் களுடைய டெக்னிக்....
அ. இயற்கையான தோற்றத்தின் மூலம்.
ஆ. அழகாகக் காட்சியளிப்பதன் மூலம்.
இ. மனதால்.
ஈ. நல்ல சாப்பாட்டின் மூலம்.

2. தோற்றுப்போன உங்கள் பழைய காதல் அனுபவங்கள், ஆண் களைப் பற்றி உங்கள் மனத்தில் உருவாக்கி யுள்ள எண்ணங்கள்....
அ. பெண்ணுக்கு மனசு உண்டு எனப் புரியாதவர்கள்.
ஆ. முடிவெடுக்கத் தெரியாத கோழைகள்.
இ. அதிகார மனப்பான்மை கொண்டவர்கள்.
ஈ. உங்களைக் குழந்தை மாதிரி நடத்துபவர்கள்.

3. உங்கள் காதலருக்கு எது பிடிக்கும்?
அ. அவருடைய இடத்தில் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது.
ஆ. புதுமையான இடத்தில் உங் களுடன் சாப்பிடுவது.
இ. விலை உயர்ந்த ஹேhட்டலில் உங்களுடன் சாப்பிடுவது.
ஈ. உங்கள் இடத்தில் சாப்பிடுவது.

4. கீழ்க்கண்டவற்றில் நீங்கள் எந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறீர்கள்?
அ. பெண் என்பவள் தனி மனுஷி.
ஆ. வீடு மட்டுமே அவள் உலகம்.
இ. பெண்கள் பலசாலிகள்.
ஈ. ஆண்கள் சிறுபிள்ளைத் தன மானவர்கள்.

5. உங்களுக்கே நீங்கள் கொடுத்துக் கொள்ள நினைக்கிற பரிசு?
அ. நல்ல டிரெஸ்.
ஆ. நல்ல, புதிய மாடல் செருப்பு.
இ. நவீன கைப்பை.
ஈ. வேறு ஏதாவது.

6. ஒரு ஆண் கீழ்க்கண்ட எந்த விஷயத்தில் உங்களைக் குறைத்து மதிப்பிட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள்?
அ. திறமையை.
ஆ. உடையணிகிற ஸ்டைலை.
இ. நடத்தையை.
ஈ. சமையலை.

7. உங்கள் அப்பாவைப் பற்றிய உங்கள் அபிப்ராயம்?
அ. உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர்.
ஆ. பிரமிக்கத் தக்கவர்.
இ. நல்ல எண்ணத்துக்குரியவர் இல்லை.
ஈ. உங்களை அதிகாரம் செய்ய இயலாதவர்.

8. நீங்கள் மூட் அவுட் ஆகியிருக் கும் போது உங்களை எந்த விஷயம் அமைதிப்படுத்தும்?
அ. நல்ல, அமைதியான குளியல்.
ஆ. புதிய உடை.
இ. ஃபேஷியல்.
ஈ. புதிய அழகு சாதனங்கள்.

9. குழந்தை எப்போது தேவை என்பதில் உங்கள் அபிப்ராயம்?
அ. இருவரும் அதற்கான சரியான நேரத்தை உணரும்போது.
ஆ. உங்கள் கணவர் விரும்பும் போது.
இ. நீங்கள் விரும்பும் போது.
ஈ. தேவையே இல்லை.

10. உங்கள் காதலருடன் சேர்ந்து நீங்கள் வெளியே செல்ல நினைக்கிற இடம்?
அ. இருவருக்கும் பிடித்த, பொது வான விஷயங்களைப் பற்றிப் பேசக் கூடிய ஒரு இடம்.
ஆ. வேலையை மறந்து ரிலாக்ஸ் செய்கிற இடம்.
இ. நீங்களே சமைத்து சாப்பிடும் வசதியுள்ள ஒரு இடம்.
ஈ. கடல் அருகிலுள்ள இடம்.

<b>மதிப்பெண்கள்</b>

மேலுள்ள கேள்விகளுக்கான பதில் களில் அ, ஆ, இ, ஈ ஆகிய நான்கில் எது அதிகம் எனத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்கள் மன நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

<b>அ அதிகமிருந்தால்...</b>

காதலியைத் தனக்கு சமமாக நடத்தக் கூடிய நபரே உங்கள் விருப்பம். காதல் என்பது இருவழிப்பாதை என நினைப்பீர் கள்.உங்கள் கடமைகளைச் செய்யத் தவற மாட்டீர்கள். அதே சமயம் காதலரும் பொறுப் புணர்ந்து நடக்க வேண்டும் என நினைப்பீர்கள்.

<b>ஆ அதிகமிருந்தால்....</b>

காதலர் என்பவர் உங்களுக்காக முடி வெடுப்பவராக, உங்களுக்காகக் கவலைப் படுகிறவராக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்களைக் குழந்தை மாதிரி கவனித்து, உங்களுக்காக எல்லாம் செய்கிற நபரை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள். எல்லா வற்றுக்கும் ஒருவரை எதிர்பார்த்திருக்காதீர் கள். பிறரை சார்ந்திருப்பது பாதுகாப்பற்றது.

<b>இ அதிகமிருந்தால்....</b>

உங்களுக்கு வேண்டியது காதலர் அல்ல, ஒரு தலையாட்டி பொம்மை. நீங்கள் எடுக் கிற முடிவுகளுக்கு ஆமாம் சொல்கிற ஒரு நபரை எதிர்பார்க்கிறீர்கள். உங்களை எப் போதும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண் டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உண்டு. கவலைப்படாதீர்கள். மனைவி சொல்லே மந்திரம் என இருக்கிற ஆண்கள் நிறைய பேர் இருக்கிறhர்கள். உங்களுக்கு அவர்களில் ஒருவர் அகப்பட மாட்டாரா என்ன?

<b>ஈ அதிகமிருந்தால்....</b>

அம்மா இடத்திலிருந்து காதலரைக் கவனித்துக் கொள்ளவே உங்களுக்கு விருப்பம். வேலையிலிருந்து திரும்பும் கணவருக்கு ஷூவைக் கழட்டி விடுவதி லிருந்து, ஒவ்வொன்றுக்கும் அவர் குறிப் பறிந்து செயல் படவே உங்களுக்கு விருப்பம். அது சரி, அந்தப் பக்கத்திலிருந் தும் அதே மாதிரி அக்கறை உங்களுக்குக் கொஞ்சமாவது கிடைக்க வேண்டும் என நினைத்துக் கொள்ளுங்கள

நன்றி - தினகரன்

சுவாரசியாக இருந்தது இணைத்துள்ளேன். இதில் லொஜிக் இருக்கா இல்லையா என்று கேட்காதீர்கள்


- வெண்ணிலா - 06-30-2005

¿ýÈ¢Âñ½¡ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->