![]() |
|
புகைப்பட ஆர்வலர்கள் நட்புவட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: புகைப்பட ஆர்வலர்கள் நட்புவட்டம் (/showthread.php?tid=7094) |
- aathipan - 06-13-2004 அருவிகள், நீர்;வீழ்ச்சி, நீர் ஊற்று போன்றவற்றின் புகைப்படத்தைப்பார்த்து இருப்பீர்கள் அவற்றில் நீர் வீழ்வது அழகாக சீராக வெண்மையாக காட்சிதரும் ஆனால் நேராகச்சென்று பார்த்தால் சீராக இராது. ஆனால் வெண்மையாக இருக்கும். நீர் வீழ்;ச்சி அருவிகள் அழகுக்காக பொருத்தப்படும் நீர் பீச்சி பொன்றவற்றை புகைப்படமாக பதியும் போது ஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும் இதன் மூலம் அங்கே அசையும் பொருளான நீர் அழகாக சீராக வீழ்வது போன்று பதியமுடியும். இதற்கு புகைப்படக்கருவியை புகைப்படநிறுத்தியில் பொருத்தி காட்சியைப்பதிவது நல்லது. ஓளிவிடும் நேரத்தை சுமாhர் 1 செக்கண்டாக வைக்கலாம். கீழே அருவியானது ஒளியை உள்விடும் நேரம் 1 sec ஆகவும் ஒளிவிடும் துளைகள் f8 ஆகவும் தேர்வுசெய்யப்பட்டு பதியப்பட்டுள்ளது. <img src='http://www.macdevcenter.com/mac/2002/10/22/graphics/fig-7a-water.jpg' border='0' alt='user posted image'> - aathipan - 06-13-2004 அசையும் பொருள் ஒன்றை புகைப்படக்கருவியுடன் தொடர்ந்து சென்று ஒளி உள்விடும் நேரத்தை சிறிது அதிகப்படுத்தி புகைப்படம் எடுக்கும் முறையை ஆங்கிலத்தில் Panning என அழைப்பர். அதை தமிழில் சட்டம் வழியாகப் பின்தொடர்தல் என அழைக்கலாம். இத்தகைய காட்சிகளில் புகைப்படம் ஆக்கப்படும் பொருள் தெளிவாகவும் சுற்றி உள்ள பொருட்கள் தெளிவற்றும் காணப்படும். கீழே உள்ள புகைப்படம் ஒளிவிடும் துளைகள் f- 5.6 ஆகவும் ஓளி உள்விடும் நேரம் 1/125 ஆகவும் தேர்வுசெய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. <img src='http://www.mark-pedley.com/images/IMG_2358_border_400.jpg' border='0' alt='user posted image'> - aathipan - 06-13-2004 புகைப்படம் எடுக்கும் பொருளின் பின்னோ, நபரின் பின்போ இருக்கும் வண்ணம் மற்றும் காட்சி சாதாரணமானதாக இருக்கலாம் தவறில்லை. இது புகைப்படம் எடுக்கும் பொருளையோ நபரையோ எந்தவகையிலும் பாதிக்காது. புகைப்படம் எடுக்கும் பொருளுக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கும். <img src='http://wwwca.kodak.com/CA/images/en/consumer/guideToBetterPictures/quickTips/useASimpleBackground/hi/simpleBackgroundPortrait.jpg' border='0' alt='user posted image'> - aathipan - 06-14-2004 இரவு நேரத்தில் ஒளி உள்விடும் நேரத்தை அதிகரித்து கடந்து செல்லும் வாகனங்களை எடுத்த புகைப்படம். <img src='http://lightzone.smugmug.com/photos/642682-S-1.jpg' border='0' alt='user posted image'> |