Yarl Forum
சிவராமைப் படுகொலை செய்தவர் சுட்டுக்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிவராமைப் படுகொலை செய்தவர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=4183)

Pages: 1 2 3 4


- MUGATHTHAR - 06-04-2005

சாத்திரி இந்த வியாதி வேப்பிலை அடிச்சு சுகப்படுத்த எலாது என்னட்டை ஒருக்கா அனுப்பி வை.. ஒருத்தியை பிடிச்சு கட்டி வைச்சா முதல் நாளிலேயே எல்லாம் தெளியும்


- tamilini - 06-04-2005

அன்பகம் நல்லாய் தான் இருக்கு.. பாவம் நீங்கள் தான் எல்லாரும் குழம்பிப்போன மாதிரித்தெரியுது அப்படியா..?? :mrgreen: :mrgreen:


- ஊமை - 06-04-2005

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முதலாவது உயர் கட்டளை அதிகாரி மேஜர் முத்தாலிப் சுட்டுக்கொலை இதுதானே தலைப்பு ?? இது வேறு எங்கேயோ போகிறமாதிரி தெரிகிறது


- eelapirean - 06-05-2005

சிவராமைக் கொன்றவர்கள் அகப்பட்டனர்!

ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரட்ணம் சிவராமைக் கொலை செய்தவர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் என்று தெரியவருகிறது.


அரசுக்கு சார்பான அரசியல் கட்சியொன்றே சிவராமைக் கொலை செய்துள்ளது என்றும் இக்கொலையுடன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இன்னொரு அரசியல் கட்சிக்கும் தொடர்பு என்றும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

ஆனால் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்யும்வரை பொலிசார் இது விடயத்தை இரகசியமாக வைத்துள்ளனர் என்றும் விசாரணைகளை இரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவை மேலும் தெரிவித்தன.

கொலையாளிகள் விட்டுச்சென்ற ஒரு தடயமே இக்கொலை தொடர்பான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு பாரியளவில் பொலிசாருக்கு உதவியுள்ளது என்றும் தெரியவருகிறது.

கடந்த 29 ஆம் திகதி இரவு பம்பலப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் சிவராமை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் கடத்திச்சென்றனர். பின்னர் அடுத்த நாள் நாடாளுமன்ற வளாகத்தில் ஜப்பான் நட்புறவுப்பாலத்துக்கு கீழ் சிவராமின் குண்டுதுளைக்கப்பட்ட உடல் மீட்கப்பட்டது.


புதினம்


- ¦ÀâÂôÒ - 06-06-2005

tamilini Wrote:பெரியப்பு. தணிக்கை எல்லாம் வேண்டியிருக்கார். :mrgreen:
´õ À¢û¨Ç ¾Á¢ú, ¦¸¡ïºõ ¯½÷źôÀðÎð¼ý. "¦À¡ò¾¢ì¦¸¡ñÊÕ" ±ñ¼ źÉò¨¾ À¡Å¢îÍ §À¡ð¼ý. ºÃ¢§Â¡ ¾ô§À¡, ÀħÀ÷ ºó¾¢ìÌõ þ¼ò¾¢Ä źÉí¸û ¸ÅÉÁ¡ô À¡Å¢ì¸ §ÅñÎõ. þøÄ¡?


- anpagam - 06-06-2005

<img src='http://tamillachapelle.free.fr/joke/anpagam.gif' border='0' alt='user posted image'>


- eelapirean - 06-06-2005

என்ன அன்பகம் டப்பென்று வளரந்துவிட்டீர்


- hari - 06-06-2005

<b>புளொட் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் பீற்றர், ஊடகவியலாளர் சிவராம் படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </b>

அமைப்பின் தலைவர் சித்தார்த்தனுக்கு அடுத்தபடியாக கட்சியின் பதவி நிலை வகிக்கும் இவர், சுமார் 90 ஆயிரம் ரூபாய்கள் விலைமதிப்புடையதாகத் தெரிவிக்கப்படும், இன்டர் நெற், ஈ-மெயில் போன்ற சகல வசதிகளையும் கொண்ட ஊடகவியலாளர் சிவராமுடைய கையடக்கத் தொலைபேசியை எறிய மனமின்றி பாவித்து வந்தபோதே இலங்கை பொலிசாரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமது அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் பீற்றர் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை குறித்து அதிர்ச்சி வெளியிட்டிருக்கும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், இந்த விடயம் குறித்து தமது அமைப்பு எந்தவகையிலும் அறிந்திருக்கவில்லையெனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சியின் பெயருக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள், பீற்றரின் இந்த நடவடிக்கையால் கட்சியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஊடகவியலாளர் சிவராம் கொலைச் சம்பவத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான மங்கள சமரவீரவும், ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்சவும் தொடர்புபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தில், அமைச்சர் மங்கள சமரவீர ~~மட்குறூப்|| என்கின்ற பெயரில் பாதாள உலகக் குழுவொன்றை வைத்திருந்ததாகவும், இதன் மூலம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திவந்ததாகவும் மேலும் செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியொன்றும், அதில் அமைச்சுப் பதவி வகிக்கும் கட்சியொன்றும் ஊடகவியலாளர் சிவராம் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்த சண்டே லீடர் வாரப்பத்திரிகை, கொலையாளிகள் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்கள் சில அரசியல் முக்கியஸ்தர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் விசாரணைகள் முடக்கப்படுமானால், அடுத்தவாரம் இதுதொடர்பான முழுமையான விபரங்கள் தமது பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

பேராசை பெரும் நட்டம்!