Yarl Forum
எங்கள் நிலை எண்ன? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: எங்கள் நிலை எண்ன? (/showthread.php?tid=3980)

Pages: 1 2 3 4


- Thala - 07-10-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னக் குழந்தை புஷ்பாவை கைது செய்தனர். மாதவன், முத்துவை தேடிவருகின்றனர்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதுசரி சின்னக்குழந்தை புஸ்பாவை ஏன் கைது செய்தவை


- kuruvikal - 07-10-2005

வழக்குப் போட்டாச்செல்லா...கைது செய்யத்தான் செய்வினம்....! அதென்ன...காதலிக்கும் வரை...மண மேடை காணும் வரை இல்லாத ஆசை திடீர் என்று வந்திருக்கு....??! :roll: :?: Idea


- Malalai - 07-11-2005

குருவி அண்ணா அது காதல் மாதிரி தெரியலை....காதல் என்று தப்பா எழுதி போட்டினம் போல பேப்பர்ல.....:evil:


- Jude - 07-11-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
குருவி அண்ணா அது காதல் மாதிரி தெரியலை....காதல் என்று தப்பா எழுதி போட்டினம் போல பேப்பர்ல.....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து வேலை செய்து கொண்டிருந்த போது எம்மோடு படித்து முடித்த ஒருவருக்கு திருமணம் என்று எமக்கு அழைப்பு வந்தது. இவர் பல வருடங்களாக (பாடசாலைப்பருவத்திலிருந்தே) ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இருந்தார். அந்த திருமணத்திற்கான அழைப்பு தான் அது.

திருமண நாள் அன்று நாம் எல்லோரும் போகத்தயாரான போது திருமணம் நின்று போனதாக தகவல் வந்தது. ஏன் திருமணம் நின்று போனது? பெண்ணின் பெற்றோர் சொன்னபடி சீதனம் கொடுக்காததுதான் காரணம்.

மேற்படி முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் இன்று இலண்டனில் இருக்கிறார். பிறகு எப்படி திருமணம் யாருடன் நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை.


- அருவி - 07-11-2005

நீதி கிடைத்தால் இது பெண்களிற்கு முன்மதிரியாக இருக்கும்.
அப்பெண்ணிற்கு நீதிகிடைக்க என் வாழ்துக்கள்.


- Thala - 07-11-2005

சிவில் வளக்கு ஒண்டில நான் ஒருமுறை தமிழீழக் காவல்த் துறையால் கைது செய்யப்பட்டனான். குற்ரச்சாட்டு வந்து ஒரு பெண்ணை உந்துருளில கடத்திச்சென்றது. (எல்லாம் உயிர் நண்பனுக்கு திருமணம் செய்ய எண்டு என்ர உயிரவாங்கினவன்) அதில எனக்கு உந்துருளி தந்துதவிய என் மாமனாரும் கைது விசாரனையின் பின் மாமாவை விட்டுட்டினம். என்னை நீதிமன்றில் நிறுத்தினவை( பெண் 3 வருடமாய் காதலித்த நண்பனை திருமணம் செய்ய மாட்டன் எண்டுட்டா) நீதிபதி என்னை ரூ500/= Cry பிணையில் உடனேயே விட்டுட்டார்(நண்பனுக்கு ரூ1500/= <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) இந்த வழக்கு ஆரம்பித்து 4காவது நாள் தீர்ப்பு தீர்ப்பில் நண்பனுக்கு 5000/= ரூபாய் அபராதம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனக்கு என் எதிர்கால நலன் கருதி எச்சரிக்கை Cry (இன்னும் இரண்டு பேர் நண்பர்களும்) எந்தக்காரணம் கொண்டும் இப்படியான சம்பவங்களில் பங்கெடுக்க கூடாது..

ஏன் இதை இங்கு தெரிவிக்கிறன் எண்டால் ஒருவனுடய எதிர் காலம் 4 நாள்களில் முடிவெடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியாவில் நீதி கிடைப்பதுக்குள் நீதிபதி இறந்து விடுவார் குற்றம் சாட்டப்பட இளைஞன் கிழவனாகிவிடுவான்...


- வன்னியன் - 07-11-2005

நிதர்சன் உண்மைகள் கசக்கும். ஐரோப்பியநாடுகளில் வேலைகளில் ஏற்ற இறக்கம் பார்ப்பதில்லை. ஆனால் நம்மவர்கள் கோழி மேய்த்தாலும் கௌன்மேந்திலை மேய்க்கவேணும் எண்டு பார்க்கிறவை. சும்மா கிடைக்குது எண்டால் எல்லாரும் டொக்டர் எஞ்சினியர்தான் வேணுமென்பினம்.


- வன்னியன் - 07-11-2005

இளவரசியாரே காதல் எண்டால் என்ன? காமம் எண்டால் என்ன?
காமம் எண்டால் நிர்வாணமாக நிற்பது போல். காதல் எண்டுறது அதற்கு சட்டை போட்டமாதிரி. கொஞ்சம் கௌரவம் அவ்வளவுதான்


- அனிதா - 07-20-2005

Quote:வடபகுதியில் படித்த இளைஞர்கள் பலரும் தங்களுக்குப் புலம் பெயர் மணப்பெண்கள் தேவையென விளம்பரம் செய்கிறார்கள். தரகர்களையும் நாடி தங்களின் இவ்விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். `படித்த இளைஞர்கள் எல்லாரும் புலம்பெயர் பெண்களையே தேடிக் கொண்டிருந்தால், தமிழ் மண்ணையே நம்பிவாழும் எங்கள் கதி என்ன ஐயா?

தாயகத்தில்லுள்ள இளைஞர்கள் மட்டும் அல்ல இளம்பெண்களும் தங்களுக்குப் புலம் பெயர் மாப்பிள்ளை தான் தேவையென விளம்பரம் செய்கிறார்களாம் ... இதையும் கொஞ்சம் படித்து பாருங்கள்.


மணமன் தேவை 1. யாழ்.இந்து வேளார் 81ஆம் ஆண்டு A/L IAB படித்த, அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய லண்டன் மணமகன் தேவை.

மணமகன் தேவை 2 யாழ்.இந்து வேளாளர் 79ம் ஆண்டு சுவாதி... டொக்டர் மணமகளுக்கு தராதரமுடைய டொக்டர், எஞ்சினியர் லண்டன் மணமகன் தேவை.

மணமகன் தேவை 3 யாழ்.இந்து வேளாளர் 77ஆம் ஆண்டு 5'2' உயரம்.... கம்பியூட்டர் பிரிவில் படித்த அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய வெளிநாட்டு மணமகன் தேவை.

மேற்தரப்பட்டுள்ளவை. அண்மையில் எங்களுர் பத்திரிகைகளில் 'மணமகன் தேவை" என்ற தலைப்பின் கீழ் வெளிவந்த விளம்பரங்கள் சில. பெண்களின் வரிசையைப் பாருங்கள். ஒருவர் உயர்தரம் படித்தவர். இன்னொருவர் வைத்தியர். மற்றொருவர் கணினித்துறையில் கல்வி கற்றவர். வேறொருவர்.. இப்படியாக இன்னும் பலலை வரிசையாகக் சொல்லிக் கொண்டே வரலாம்.

இவர்களின் அல்லது இவர்களுடைய பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கள் அந்தந்த விளம்பரங்களில் தலை காட்டியபடி உள்ளன. என்ன எதிர்பார்ப்புக்கள்? வேறொன்றுமில்லை. <b>வெளிநாட்டுப் மாப்பிள்ளை. அவ்வளவுதான். அந்த மாப்பிள்ளை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதல்ல முக்கியம். அவர் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையோடு இருக்கிறாரா என்பதே முக்கியம்.</b>

அண்மையில் 34 வயதான கணினித்துறையில் பணிபுரியும் மகனை 'கன்னி அழியாமல் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு வயோதிப தம்பதியினரைச் சந்திக்க நேர்ந்தது.' என்ன மகனுக்கு முற்றாகவில்லையோ? என்று வேறு கதை பேசுவதற்குப் பதிலாய் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டதுதான்.. பரிதாபம்... அவர்களின் முகத்தைப் பார்க்க வேணுமே. 'அதையேன் கேக்கிறியள்" எத்தனையோ இடம் தேடிப் பாத்திட்டம்.. எல்லாப் பெடிச்சிகளும் வெளிநாட்டு மாப்பிள்ளையளையெல்லோ கேக்கிறாளவை. நேற்றுக்கூட ஒரு சாதகம் பொருந்தி... அந்த புரோக்கர் மூலம் பிள்ளையின்ரை வீட்டுக்கு போன் பண்ணினம், பிள்ளையின்ரை அப்பாதான் கதைச்சவர். அவருக்கு சந்தோஷம். அப்பாடி! இனித்தான் நிம்மதி என்று நினைச்சபடி 'அப்ப படத்தை ஒருக்கா எடுக்கலாமோ? என்று கேட்டம். அவரும் பின்னேரம் புரோக்கரிட்டை குடுத்தனுப்புகிறதென்று சொன்னார். பின்னேரம் புரோக்கரிட்டைப் போனா, அவரோ 'பிள்ளையின்ர அப்பா, அம்மாதான் சம்மதிச்சிருக்கினம், <b>பிள்ளை ஓமெண்டு சொல்லேல்லயாம். தன்னோடை படிச்ச சிநேகிதிப் பெட்டையளெல்லாம் லண்டன்,கனடா என்று சொகுசா வாழ்க்கை... தான் மட்டும் இஞ்சை நிண்டு என்ன குப்பை கொட்டுறதோ? பார்க்கிறதெண்டால் வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பாருங்கோ." என்று அடிச்சு வைச்ச மாதிரி சொல்லிப் போட்டுதாம் என்று சொன்னார். </b>'என்ன வழி? இப்ப திரும்பி குறிப்போடை திரியுறம்" என்று அந்த அப்பா சொல்லிச் சலித்தார்.

இந்தச் சம்பவம் சும்மா ஒரு மாதிரிதான். நூறு திருமண முயற்சிகளில் கிட்டத்தட்ட 95வீத திருமண முயற்சிகளின் நிலைமை இதுதான். இளம் பெண்கள் வெளிநாடுகள் என்றால் சொர்க்காபுரிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மணமகன்மார் அனைவரும் பொருளாதாரவசதி படைத்தவர்கள் என்றும், அவர்களைக் கட்டிவிடுவதால் சொகுசான இல்வாழ்க்கை கிடைத்துவிடும் என்றும் ஒரு மாயக் கற்பனை உலகை எங்கள் மணமகள்மார் உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மாய கனவுலக சஞ்சரிப்புக்கு அங்கிருந்து உறவினர்களால்/நண்பர்களால் அனுப்பப் பெறும் புகைப்படங்கள் பிரதான காரணங்களாக விளங்குகின்றன. 'பொலிஷ்" பண்ணித் துடைத்த 'பளிச்" சென்ற வீடுகள், புதிய ரக கார்கள், மகனின் அறைக்கோர் கணினி, மகளுக்கோர் கணினி, தனித்தனியே தொலைக்காட்சி என்று வீடு முழுவதும் நிரம்பியிருக்கின்ற பொருட்கள்- இவற்றை அங்கிருந்து வரும் புகைப்படங்களில் பார்க்கின்ற இளம் பெண்களில் மனசுகள் றெக்கை கட்டிப் பறப்பதிலும் நியாயமுண்டுதான். <b>எனினும், இந்த வண்ணங்களுக்குப் பின்னால் பாரிய வங்கிக் கடன் சுமை இருக்கென்றும், அந்தக் கடன் சுமைக்காக தாங்களும் கொட்டும் பணியில் வேலைக்குக் குதித்தோட வேண்டும் என்றும் அந்த கனவுலக இளம் பெண்களுக்கு தெரிவதேயில்லை.</b>

பெண்கள் வெளிநாடுகளே மேல் என்று தீர்மானிப்பதற்கு இன்னுமோர் காரணம், உள்நாட்டு மாப்பிள்ளையள் கேட்கிற பெருந்தொகைச் சீதனம் என்பதை மறந்து விடக்கூடாது. பொருளாதாரம் ஒரு பிரச்சினையே இல்லாமல் உழைத்து வைத்திருக்கின்ற <b>புலம் பெயர் மன்மதர்கள் இங்கு வந்து... எந்தவித சத செலவையும் பெண் பகுதிக்கு வைக்காமல் அழகிகளையும்... கொஞசம் படித்தவர்களையும் அள்ளிக்கொண்ட போய்விடுகின்றார்கள்.</b> இதனால் அந்த மன்மதர்களுடைய எதிர்பார்ப்பும் நிறைவடைகின்றது. பெண்களைப் பெற்றவர்களின் பொருளாதாரமும் பேணப்படுகின்றது.

இத்தகைய புலம்பெயர் மாப்பிள்ளைகள் வந்து உள்ளுர் பெண்களைக் கொத்திக் கொண்டு போய்விடுவதால், பாதிக்கப்படுவது உள்ளுர் மாப்பிள்ளை மட்டும் தான் என்றில்லை. புலம்பெயர் நாடுகளில் பருவ வயதினராய் கல்யாணக் கனவுலளோடு காத்திருக்கின்ற தமிழ்ப் பெண்களின் நிலையும் பரிதாபமே.

புலம் பெயர் நாடுகளில் வாழ்க்கின்ற நமது இளம் சந்ததியர் நமது தமிழ் கலாச்சார, பண்பாட்டின் படி வாழ்கின்றனர் என்றில்லை. திறந்த பொருளாதாரம் மாதிரி 'திறந்த" கலாச்சாரத்துக்கு அவர்கள் பழகிப் போய் விட்டார்கள். காதல் ஒருவனைக் கைபிடித்து அவரன் காரியம் யாவிலும் கைகொடுப்பது என்கிற தமிழர் அறம் அவர்களைப் பொறுத்தவரை சலித்துப் போன விஷயம். கண்டதே காட்சி, கொண்டே கோலம் என்றபதற்கு இளைய வயது எடுபட்டுவிடும் என்பதை சொல்ல வேண்டுமா, என்ன?



இவ்வாறு தமிழராகப் பிறந்து, இன்னொரு தேசியராக வாழ நேர்ந்;துவிட்ட, 'இரண்டுமிலி அலி" வாழ்க்கையில் பல வண்ணக் கனவுகளும் கரைந்து போக, பெரும்பான்மைய புலம்பெயர் குடும்பங்களில் விரிசல் விழுந்து விட்டிருக்கிறது. சகிப்பு, விட்டுக் கொடுப்பு என்பவற்றைக் கொண்டு 'குணம் நாடி" ஊடிப் பின் கூடி வாழ்ந்த தமிழ் வாழ்வை புலம்பெயர்ந்த குடும்பங்கள் தொலைந்துவிட்டன. யூதக் கண்ணாடி கொண்டு குற்றத்தை மட்டும் பரஸ்பரம் தேடுவதும், அதை ப10தாகரமாகப் பெருப்பித்துக் காட்டுவதும், பின் அதைக் காரணமாக்கி விவகாரத்துக் கோருவதும், பின் இன்னொரு வாழ்வைத் தேடுவதுமாகத் தொடர்கிறது புலத்தில் நமது இனத்து எச்சங்களின் வாழ்க்கை, இந்தப் பாதிப்பு தாயகத்தையும் தொடவில்லை என முடியாதபடி இப்போது..... இங்கேயும் மணப்பிரிவினைகள் சகஜமாகத் தொடங்கிவிட்டன.

மேலும் வாசிக்க .. http://sooriyan.com/index.php?option=conte...=1330&Itemid=37


- Malalai - 07-20-2005

Jude Wrote:
Quote:குருவி அண்ணா அது காதல் மாதிரி தெரியலை....காதல் என்று தப்பா எழுதி போட்டினம் போல பேப்பர்ல.....



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து வேலை செய்து கொண்டிருந்த போது எம்மோடு படித்து முடித்த ஒருவருக்கு திருமணம் என்று எமக்கு அழைப்பு வந்தது. இவர் பல வருடங்களாக (பாடசாலைப்பருவத்திலிருந்தே) ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இருந்தார். அந்த திருமணத்திற்கான அழைப்பு தான் அது.

திருமண நாள் அன்று நாம் எல்லோரும் போகத்தயாரான போது திருமணம் நின்று போனதாக தகவல் வந்தது. ஏன் திருமணம் நின்று போனது? பெண்ணின் பெற்றோர் சொன்னபடி சீதனம் கொடுக்காததுதான் காரணம்.

மேற்படி முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் இன்று இலண்டனில் இருக்கிறார். பிறகு எப்படி திருமணம் யாருடன் நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை.

பேசாமல் அவருக்கு சீதனத்தை திருமணம் செய்து வைக்க வேண்டியது தான் :twisted: :twisted: :twisted:


- Jude - 07-20-2005

திருமணங்கள் எங்கள் கலாச்சாரப்படி எப்படி தீர்மானிக்கப்படுகின்றன?
Anitha Wrote:மணமன் தேவை 1. யாழ்.இந்து வேளார் 81ஆம் ஆண்டு A/L IAB படித்த, அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய லண்டன் மணமகன் தேவை.

மணமகன் தேவை 2 யாழ்.இந்து வேளாளர் 79ம் ஆண்டு சுவாதி... டொக்டர் மணமகளுக்கு தராதரமுடைய டொக்டர், எஞ்சினியர் லண்டன் மணமகன் தேவை.

மணமகன் தேவை 3 யாழ்.இந்து வேளாளர் 77ஆம் ஆண்டு 5'2' உயரம்.... கம்பியூட்டர் பிரிவில் படித்த அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய வெளிநாட்டு மணமகன் தேவை.
<b>
சாதி
சமயம்
படிப்பு </b>
இவற்றுள் சொல்லத் தேவையில்லாமல் இடம்பெறுவது பணம். சாதியில் வேறுபாடு வரக்கூடாது. சமயம் வேறுபடலாகாது. படிப்புக்கு தக்க பணம். இந்த பண்பாட்டை ஏற்றுக்கொள்ளும் எவரும் திருமணம் பற்றிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் நாம் இரக்கப்படுவதில் அர்த்தமில்லை. இவர்களுக்கு இரக்கப்படுவது சிறிலங்காவில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கொடிகட்டி கலவரத்தில் தமிழன் என்ற காரணத்துக்காக அடிவாங்கியவருக்கு இரக்கப்படுவதற்கு ஒப்பானது.


- kuruvikal - 07-20-2005

Jude Wrote:திருமணங்கள் எங்கள் கலாச்சாரப்படி எப்படி தீர்மானிக்கப்படுகின்றன?
Anitha Wrote:மணமன் தேவை 1. யாழ்.இந்து 81ஆம் ஆண்டு A/L IAB படித்த, அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய லண்டன் மணமகன் தேவை.

மணமகன் தேவை 2 யாழ்.இந்து 79ம் ஆண்டு சுவாதி... டொக்டர் மணமகளுக்கு தராதரமுடைய டொக்டர், எஞ்சினியர் லண்டன் மணமகன் தேவை.

மணமகன் தேவை 3 யாழ்.இந்து 77ஆம் ஆண்டு 5'2' உயரம்.... கம்பியூட்டர் பிரிவில் படித்த அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய வெளிநாட்டு மணமகன் தேவை.
<b>
சாதி
சமயம்
படிப்பு </b>

இவற்றுள் சொல்லத் தேவையில்லாமல் இடம்பெறுவது பணம். சாதியில் வேறுபாடு வரக்கூடாது. சமயம் வேறுபடலாகாது. படிப்புக்கு தக்க பணம். இந்த பண்பாட்டை ஏற்றுக்கொள்ளும் எவரும் திருமணம் பற்றிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் நாம் இரக்கப்படுவதில் அர்த்தமில்லை. இவர்களுக்கு இரக்கப்படுவது சிறிலங்காவில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கொடிகட்டி கலவரத்தில் தமிழன் என்ற காரணத்துக்காக அடிவாங்கியவருக்கு இரக்கப்படுவதற்கு ஒப்பானது.

அதிலும்...தமிழ் தேசியம்..மற்றும் தமிழர் தேச, சமூக விடுதலை...என்பதற்கு புலிப் போராளிகளின் பின் எழுச்சி கொண்ட மக்கள் பின் அணிவகுத்து நிற்பதாகச் சொல்லும் பிரதேசவாதத்தை எதிர்க்கும் பத்திரிகைகள்....யாழ் இந்து வேளாள...என்று முக்குறியிட்டு (பிரதேசம்...மதம்...சாதியம்..) திருமண விளம்பரங்களை வெளியிடுவதும்...வெளிவிட இருப்பதும்...அவர்களின் கொள்கைகள் தொடர்பிலான இதய சுத்தி குறித்து பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...என்பதையும் கவனித்தல் நன்று...!

இப் பத்திரிகைகள் உண்மையில் சமூகத்தின் நன்மை கருதிச் செயற்படுவனவாயின் இப்படியான மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்ட மனித நாகரிக்கத்துக்கு அவசியமற்ற போலிக் குறியீடுகளை... முக்குறியீடுகளை... முற்றாக தவிர்க்க...தமது பத்திரிகை மூலம் அறிவுறுத்துவார்களா..???!அதுமட்டுமன்றி...இப்படியான விளம்பரங்களை உடனடியாக நிராகரித்து... பிரசுரிப்பதையும் தவிர்க்க முன்வருவார்களா....செய்வார்களா...????!

இல்லை என்றால்...இப்பத்திரிகைகளின் இரட்டை வேடத்துக்கு இது ஒன்றே போதும் சாட்சியாக அமைய...! இவர்கள் பிரதிநிதிப்படுத்தும் தமிழர் சமூகமும் பெரும்பாலும் இரட்டை வேடம் போட்டுத் தான் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை...! அதை இவர்கள் மறைமுகமாக வளர்க்கின்றார்கள் என்பதும் இதன் மூலம் நிதர்சனமாகும்...! Confusedhock: :roll: Idea