![]() |
|
பிருந்தனின் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பிருந்தனின் கவிதைகள் (/showthread.php?tid=3637) |
- sabi - 11-22-2005 கவிதை நல்லாயிருக்கு பிருந்தன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கவிதைப் போட்டிக்கு எழுதேல்லையா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வன்னியன் - 11-22-2005 ஜோவ் ஆருய்யா? கடவுளை வாழ்த்தவேணுமா.? அவர் எங்களை வாழ்த்தினால் போதாதா? - கீதா - 11-22-2005 பிரிந்தன் அண்ணா கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-23-2005 பிருந்தன் உங்கள் இயந்திர மனிதன் கவிதை நன்றாக உள்ளது, ம்ம்ம் புலம்பெயர் நாடுகளில் இயந்திர வாழ்க்கைதனே வாழுகிறோம் - RaMa - 11-23-2005 மனிதன் மட்டும் போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்! அவனை எழுப்ப வேண்டும் கடிகார சத்தம்! இன்ப ஓசையில் எழும்பாத அவன் இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான் ம்ம் இது எனக்கும் நல்லாய் பொருந்துகின்றது. நிஐமாக எழுதியுள்ளிர்கள். நன்றி - மேகநாதன் - 11-23-2005 பிருந்தன், சோக்காயிருக்கு...வாழ்த்துக்கள்.... இன்னும் நிறைய வித்தியாசமாய்த் தாங்கோ.... ".....இன்ப ஓசையில் எழும்பாத அவன் இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான். " என்ற வரிகள் "டக்" என்று பிடிச்சிட்டுது... - Birundan - 02-20-2006 <b>கவிதைக் காதல்</b> காதல் என்பது இயற்கையானது அது எல்லோருக்கும் சொந்தமானது! எனது காதல் மாறுபட்டது மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது! என் காதலியின் இளமை மறைவதில்லை எனக்கு அவளிடத்தில் அன்பு குறைவதில்லை! எனது காதல் இலக்கணத்துக்கு அப்பாற்பட்டது அவளோ இலக்கணத்துக்கு உட்பட்டவள்! அன்று பலர் அவளுடன் காதல் புரிந்தனர் இன்றும் பலர் அவளுடன் காதல் புரிகின்றனர்! அவள் தேவர்குல தாசியுமல்ல பூவுலக மாதவியுமல்ல! அவளின் காதலில் முதன்மையானவன் கம்பன் அவன் சரியான வம்பன்! கண்ணதாசன் கூட காதலித்ததுண்டு கம்பதாசன் கூட போட்டி போட்டதுண்டு! பாரதி அவளுக்கொரு தாசன் பாரதிதாசன் அவளுக்கொரு நேசன்! வாலி போடுவார் அவளுக்கு வேலி முத்துக்கள் பல கொடுத்தார், வைரமுத்து! அவளே என்றும் எனது பெரிய சொத்து! அவளை வரையும்போது சிலிர்க்குது எனது சித்து! அவளே கவிதை நாயகி எனது காதல் நாயகி. - RaMa - 02-20-2006 காதல் என்பது இயற்கையானது அது எல்லோருக்கும் சொந்தமானது! எனது காதல் மாறுபட்டது மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது! இந்த வரிகளை பார்த்தவுடன் வழமையான காதல் கவிதை என்று தான் நினைத்தேன். ஆனால் அழகாக நீங்கள் உங்கள் காதலியை அட கவிதையை பற்றி எழுதியிருக்கிறீர்கள். சிறிது இடைவெளிக்கு பின்னால் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். - சந்தியா - 02-22-2006 அண்ணா இன்று தான் உங்கள் கவிதைகள் பார்த்தேன் வாழ்த்துக்கள் எல்லாம் நன்றாக உள்ளது - Birundan - 02-23-2006 வணக்கம் ரமா, சந்தியா உங்கள் வாழ்த்துக்கு நன்றி, ஆம் ரமா சிறிதுகாலம் களத்துக்கு வரமுடியவில்லை. - அனிதா - 02-24-2006 ஆகா கவிதைக் காதலா... நான் கவிதை தலைப்பை முதல் வாசிக்கயில்லை கவிதையை வாசித்துக் கொண்டு போக என்ன புதிர் மாதிரி போகுதே எண்டு நினைச்சிட்டு பேந்து தான் கவிதை தலைப்பை பார்த்தன் ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: கவிதையை நன்றாகத்தான் காதலிக்குறீங்க பிருந்தன் அண்ணா ....தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வடிவேலு - 02-24-2006 Birundan Wrote:வணக்கம் ரமா, சந்தியா உங்கள் வாழ்த்துக்கு நன்றி, ஆம் ரமா சிறிதுகாலம் களத்துக்கு வரமுடியவில்லை.அ அடெ பெடியா என்னை மாதிரியே நீரும் கவிதை எல்லாம் நல்ல எழுதிறிர் எப்படி? - sankeeth - 02-24-2006 பிருந்தன் உங்கள்கவிதை கனக்க போயிருக்கும் என்று நினைத்தேன். நல்ல காலம் அதிகம் போகவில்லை. நானும் களம் அதிக நாட்கள் வரவில்லை. உங்கள் கவிதையை தொகுத்து வையுங்கோ. பிறகு நூலாய் வெளியிடலாம். சஸ்பென்ஸ் கவிதை சூப்பர். - வடிவேலு - 02-24-2006 கீதா Wrote:பிரிந்தன் அண்ணா கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் <!--emo& நல்லா இருக்கிறதல தானே போடு இருக்கார் :twisted: :twisted: - இளைஞன் - 02-24-2006 கவிதைக் காதலை சுவைத்தோம் பிருந்தன். தொடருங்கள். "வாலி போடுவார் அவளுக்கு வேலி" என்கிற வரிகளின் கருத்தோடு உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? கவிதைக்கு வேலி போட முடியுமா? வாலி என்கிற சொல்லுக்காக வேலியை பயன்படுத்தியிருக்கிறீர்கள், ஆனால் கருத்து பொருத்தமாக இருக்குமா என்பது குழப்பமாகவே உள்ளது. நன்றி. - Birundan - 02-25-2006 வடிவேலு Wrote:Birundan Wrote:வணக்கம் ரமா, சந்தியா உங்கள் வாழ்த்துக்கு நன்றி, ஆம் ரமா சிறிதுகாலம் களத்துக்கு வரமுடியவில்லை.அ எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் அண்ணா. வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். - Birundan - 02-25-2006 இளைஞன் Wrote:கவிதைக் காதலை சுவைத்தோம் பிருந்தன். தொடருங்கள். அந்த வார்த்தைகள் எதுகைமோனைக்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒவ்வொருகவிஞனும் கவிதை தம் வசப்படவேண்டும் என்றே விரும்புகிறான் எழுதுகிறான், எமதுகாணியை சுற்றி வேலிபோட்டால் அது எமக்கு சொந்தம், காணிக்குபோடலாம் கவிதைக்கு போடலாமா? போட்டாலும் அது அடங்குமா? என்பதுதான் நான் சொல்லவந்த கருத்து. உங்கள் கருத்துக்கு நன்றி இளைஞன். - வெண்ணிலா - 02-26-2006 மீண்டும் களத்தில் பிருந்தன் அண்ணாவை கண்ணுற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. அண்ணா நலமா? கவிதையோடு வந்திருக்கிறீங்க. உங்கள் காதல் கவிதை நாயகியோடு சந்தோசித்திருக்க வாழ்த்துகிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Jenany - 02-27-2006 கவிதை அழகா இருக்கு பிருந்தன்........தொடர்ந்து எழுதுங்க.... - mathavan - 02-27-2006 பிரிந்தன் உங்கள் கவி நல்லாயிருந்தது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். |