Yarl Forum
புலத்தில் தமிழர் கூத்துக்கள்..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புலத்தில் தமிழர் கூத்துக்கள்..! (/showthread.php?tid=3573)

Pages: 1 2 3 4 5


- vasisutha - 08-30-2005

இப்ப நிறுத்தியிட்டாங்கள் தானே? அப்பாடா நாம தப்பியிட்டம்


- SUNDHAL - 08-30-2005

நல்ல காலம் உந்த பிரச்சனை ஒன்டும் இங்க இல்ல...


- Danklas - 08-30-2005

லண்டனுக்கு ஹிப்ட் ஆகிட்டாங்கள் எண்டு ஒரு கேள்வி.. பட் எந்த எந்த வயசில அங்க உலாவிறாங்க எண்டது மட்டும் புரியாத புதிர்.... :? :wink:
(ரவுடிகளையெல்லாம் அவங்க ஒண்டும் செய்யமாட்டங்கள் எண்டு ஒரு கேள்வி. ஏனெண்டால் சுவிசில இருக்கிற நம்ம சின்னாவில என்னம் கை வைக்கவில்லையே.. ஜோவ்வ் எவனுக்காவது தை**ம் இருந்தால் சின்னா மேல கை வச்சு பாருங்க அப்புறம் தெரியும்.... ஜயோ அண்ணே ஏதோ ரங்க் சிலிப்ப ஆயி சொல்லிப்புட்டேன்,, அந்த ஆள் வாயில்லா பூச்சியண்னே.. எனக்காண்டி மன்னிச்சு விட்டுடுங்கோப்பா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )


- AJeevan - 08-30-2005

Danklas Wrote:பிரான்சில இருந்த பாம்பு படை இப்ப சுவிசுக்கு இடம் மாறிவிட்டதா?? 1995/1996 (வடிவாக தெரியவில்லை) காலப்பகுதியில் ஒரு படை எண்டு ஒண்டு இருந்தது.. பிரன்ஸ் பொலிஸ்ஸே அந்த படைய பார்த்து பயந்திருக்காம்...(எண்டு சொல்லுறாங்கள்,, யாரு நம்புறது) அவையிண்ட சேவை ஒன்லி பிரான்ஸில மட்டும் இல்லை.. யூரோப் பூரா.. சொல்லபோனால் ஜேர்மன், நெதர்லாந்த், பெல்ஜியம், சுவிஸ் எண்டு பரந்து பட்ட சேவையாம்.. இவையளுடை சேவை என்ன தெரியுமா?? ஒரு பையன் தண்ட குறூப்பில இருக்கிற பையன் காதலிக்கிற பெண்ணை காதலித்தால் அல்லது அவர்களுக்கு தெரிந்த யாரவது ஒரு பெடியண்ட காதலியை வேறொருவன் மசேஞ்சர், காதலா எண்டு கதைச்சு லொள்ளூ பண்ணினால் இந்த கூறுப் அந்த பெடியனின் (லொள்ளு பண்ணீன) நாட்டில் ஆஜராகி அந்த பெடியனன ஒரு கை பார்க்காமல் போகாதாம்..அதைவிட கலாபம், காதலாவில, MSN YAHOO எண்டு வந்து அதில கனக்க கதைச்சால் (அவர்களுடனோ, அல்லது அவர்களுக்குவேண்டப்பட்டவர்களுடனோ),,, அந்த குறுப்பில் இருக்கிறவங்களை பார்த்தாலே பயம் வரும்.. பருத்த உடம்பு, ஆப்பிரிக்கன் சேப்பில முகம், மயிர் வெட்டு.. இப்ப எல்லாம் ஒண்டு ஒண்டா பிரிஞ்சு, பிரான்ஸ் பொலிஸ் இவர்களை போடுவதற்கெண்டு வெளிக்கிட இவர்கள் கனடா, லண்டன் எண்டு மாறி அந்த குறுப் யூரோப்பில் தனது அட்டகாசத்தை நிறுத்தி விட்டது.. Idea :wink:

<span style='font-size:21pt;line-height:100%'>இவர்களில் பலர் திருமணம் செய்ததும் மாறிட்டாங்க.
இதில மாட்டிக் கொண்டவங்க பலர் அப்பாவிகள்..................
ஆப்பிழுத்த குரங்கு மாதிரி........................

பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டும் - நாடு கடத்தப்பட்டும் இருக்கிறார்கள்...............
நாடுகளுக்கு மாறியும் இருக்கிறார்கள்.................

பலருக்கு கதாயநாகர்களாக உதவப் போய் மாட்டிக் கொண்டு பின்னர் வில்லன் ரோலான அப்பாவிகள்..............

எனக்கு பல நண்பர்களைத் தெரியும்.
இப்பவும் எல்லா குறுப்புகளிலும் இருந்தோர் நண்பர்களாக இருக்கிறாங்கள்.
நான் யாரையும் எதிரிகளாய் பார்ப்பதில்லை.
அதனாலோ என்னவோ சில சமயம் தொலைபேசியில் பேசுவார்கள்.
எனது வீடு எரிந்த போது பலர் உதவி தேவையானால்
எப்பவும் கூப்பிடுங்க அண்ணா என்று சொல்லி விட்டுப் போனார்கள்.
இப்படியான நல்ல மனங்கள் ......................... இப்படிப் போனது ஏன் என்று கேட்டால்.............................
சும்மாயிருங்க அண்ணா என்று மழுப்புவது ஏன் என்று தெரியவில்லை.
முன்ன மாதிரி இயக்கமில்லை..........................

இவர்களை உருவாக்கியவர்கள்
இதற்கு பொறுப்பேற்பதில்லை...........................
நல்லவர்களாக மாற வேண்டும்.</span>


- வன்னியன் - 08-30-2005

சுவிஸ் வானொலி பத்திரிகை தொலைக்காட்சியெல்லாம் இந்த செய்தி வந்ததாம். சம்மந்தப்பட்ட பெண்ணின் தகப்பனார் முன்னாடி வரதராஜப்பெருமாள் இயக்கத்தில் இருந்தவராம். பாம்புபண்ணையில் சீச்சீ பாம்புபடையில் அவரும் ஒரு உறுப்பினராம். அவருடைய பெண் ஒரு சாதிகுறைந்த பையனை காதலித்தாராம். அதை தகப்பன் தடுத்திருக்கின்றார். கோபம் கொண்ட தகப்பன் மகளை எச்சரித்திருக்கின்றாராம் அவனை மறக்கும்படி. மகள் மறுக்கவே நாலு சாத்து சாத்த மகள் பொலிசாரை நாடியிருக்கின்றார். அதனால் மகள் வீட்டைவிட்டு வெளியேறி தனியே இருந்திருக்கின்றார்.
ஆசாமி மகள் காதலிக்கும் பெடியனுடைய வீட்டுக்குசென்ற துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கின்றார். மகள் தன்னுடைய சொல்லைக் கேட்கவில்லையென்ற ஆத்திரத்தில் தன்னுடைய பாம்புபடையின் உதவியுடன் கடந்த வியாழக்கிழமை கடத்தியிருக்கின்றார். (அவர்போகவில்லை)
காலை நேரம் 8மணியளிவில் அவர் வேலைக்கு போகின்ற வேளையில் ஒரு கறுத்த காரில் சென்று காரைநிறுத்தி அந்த யுவதியை பா.படையினர் இழுத்து பலவந்தமாக காரினுள் நுழைத்து ஒரு காட்டுக்குள் கடத்தி சென்று படையினர் சுற்றவர நின்று நையப்புடைத்தனர். அடியினால் அந்தபெண் மயங்கி விழ இறந்துவிட்டதாக நினைத்து விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அந்த பெண் மயக்கம் தெளிந்ததும் பொலிசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளார்


- Danklas - 08-30-2005

ஜயோ,, கிழிஞ்சுது லம்பட லுங்கி.... அஜீவன் சார் இவ்வளவும் நாளும் நான் உங்களை திட்டி இருந்தாலோ அல்லது அஜீவன் எண்டு மரியாதையா கூப்பிடாட்டியோ,, அல்லது ஹரியிண்ட கலியாணவீட்டில உங்களுக்கெண்டு கொண்டுவந்த ஜூஸ் எடுத்து நான் குடிச்சனே அதெல்லாத்தையும் மனதில வச்சிருந்தால் மறந்துடுங்க.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- SUNDHAL - 08-30-2005

Danklas Wrote:ஜயோ,, கிழிஞ்சுது லம்பட லுங்கி.... அஜீவன் சார் இவ்வளவும் நாளும் நான் உங்களை திட்டி இருந்தாலோ அல்லது அஜீவன் எண்டு மரியாதையா கூப்பிடாட்டியோ,, அல்லது ஹரியிண்ட கலியாணவீட்டில உங்களுக்கெண்டு கொண்டுவந்த ஜூஸ் எடுத்து நான் குடிச்சனே அதெல்லாத்தையும் மனதில வச்சிருந்தால் மறந்துடுங்க.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->



<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதெல்லாம் முடியாதாம்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 08-30-2005

அதைவிட என்னொருமொரு விசயம் தெரியுமோ அஜீவனுக்கு.. சில பேரை (அந்த குறுப்பில இருந்த) போட்டுத்தள்ளினது.. காரல இடிச்சு, பிஸ்ரல், கத்தி எண்டு பாவிச்சு கொஞ்ச பேரை போட்டது,,, பிரான்ஸ் பொலிஸ் அதெல்லாத்தையும் மினக்கெட்டு விசாரிக்கெல்லை தெரியுமோ.. ஏனெண்டால் அவங்களால ஏலாம் போக அவங்களை அடக்கிறதுக்கெண்டு சில முக்கிஅ ஆட்களின் உதவியை கோரிய போது.. (விளங்கும் என்று நினைக்கிறேன்.. அவர்களை போட்டுதள்ளூற சக்தி யாருக்கு இருக்குமெண்டு) அவர்கள் அப்படி செய்ய செய்ய பொலிஸ் மரண விசாரனை இன்றி எடுத்து எடுத்து தகனம் செய்ததுதான்... Idea :? (அப்படி செய்யாதுவிட்டிருந்தால் ஒட்டுமொத்த பிரான்ஸ் தமிழருக்கு கலங்கம் வரும் என்று தெரிஞ்சுதான்) Idea


- ஊமை - 08-30-2005

பாரிஸ் நகரில் முன்னர் முக்காலா என்றொரு படை இருந்தது எல்லோரும் அறிவீர்கள். அவர்கள் ஜேர்மனியில் வந்து கேவெலார் தேவாலயத்தில் ஒருவரை கொலை செய்துவிட்டு பாரிஸ் சென்றதுதான் இவர்களில் கடைசி நடவடிக்கை. அதோடு ஜேர்மன் + இன்ரபோல் காவல்த்துறையினர் இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன் பின் அங்கு ஒரு சின்ன முக்காலா என்ற ஒரு படை இயங்குகிறது. அதனுடைய பாதி படை ஜேர்மனி மூல்கைம் என்ற நகரில் இருக்கிறது. இதற்கு ஒரு தலைவர் இருக்கிறார். அவரை இவர்கள் தல....... என செல்லமாக அழைப்பர். தல தாயகத்தில் வசாவிளான் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் பிரான்ஸில் யாரையும் தாக்கிவிட்டு ஜேர்மனியில் வந்து 2-3 கிழமைகள் நிற்பார்கள். அதே போல் ஜேர்மன் சின்ன முக்காலா இங்கு யாரும் அங்கவீனர்களை தாக்கிவிட்டு அங்கு சென்று 2-3 கிழமைகள் நிற்பார்களாம். இப்பொழுது ஜேர்மன் காவல்த்துறையினரின் கண்கள் இவர்கள் மேல் படுவதாக ஒரு சிறிய தகவல் சில நாட்களுக்கு முன் எனது காதில்பட்டது.

அதன் ஜேர்மனி தல தான் Go வே... Go வே... எனும் கிடைத்தற்கரிய பாடலை இசை அமைத்து பாடினார். :oops: :oops: :oops:


- AJeevan - 08-30-2005

காக்கைவன்னியன் சில தவறுகள் பெரியவர்களாலேயே நடக்கிறது.

எனக்குத் தெரிய ஒரு கதை.................................

ஒரு பையனை - ஒரு பிள்ளை காதலிச்சுது. இருவருக்கும் வயது 15 - 16.

பிள்ளையோட தகப்பானர் ஒரு இனத்திட பெயரில கதை கட்டி
பிரச்சனையை உருவாக்கி
அந்தப் பெடியனை உதை - உதையென்டு அடித்து
வீட்டாக்கள வேற மிரட்டிக் கொண்டேயிருந்தாங்க......................

பெடியனோட பகுதிஒரு குறூப்பை நாடினாங்க.......

பெட்டையோட
தகப்பன் - தாய்க்கு படத்தை இயக்க எல்லாம் சொல்லிப் போட்டு இலங்கைக்கு எஸ்கேப்.........................

கேட்டப்போ அவருக்கு மனநிலை சரியில்லாம ஊருக்கு போயிட்டார் என்று கதை......................
உள்ளாள பையனை வழி பாக்கிறதுக்கு தகப்பன், அம்மா வழி வேலைகள் நடந்தது.
பெட்டை சுவிசின் கெமைன்டையை (அரச உதவி) நாடியதும்
பிள்ளை அரச பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டது.
காதலைத் தடை செய்யும் உரிமை இங்கு இல்லை என போலீசார் பெற்றோரை எச்சரித்த போது
அவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாது
இது ஒரு குறூப்பெண்டு : உதவியா இருந்தவங்களை நோக்கி விரலை நீட்டிட்டாங்க.

பெடிகள் குறூப் கொதிச்சு என் பகுதிக்கு வந்தப்போ
எதிர்பாராத விதமா சந்திக்க நேர்ந்தது.
பிறகு அவங்க திரும்பிட்டாங்க..........................

அசம்பாவிதங்கள் நடக்க இல்ல......................

பிறகு தகப்பன் வெளிய வந்து
நீலிக் கண்ணீர் வடிச்சு - மகளை கூட்டிக் கொண்டு போய்
வீட்டில வச்சு இடைக்கிடை காதலனை பார்க்கவும் பேசவும் விட்டாங்க.

பிறகு இலங்கையில ஒரு நிகழ்ச்சிக்கு போறதா போய்
பிள்ளைய அங்க டம் பண்ணிட்டாங்க....................

:oops: வேற ஒருத்தருக்கு அங்க 16 வயசில பலவந்தமா கோயில்ல வச்சு கலியாணம் செஞ்சு வச்சிட்டாங்க.

பையன் இங்க...............

பெட்டை :oops: - பிரச்சனையோட குடும்பம் நடத்துது.

ஒரு மனநல மருத்துவரை ( என் நண்பரை) சந்திச்சப்போ
அவர் இந்த பெட்டையின் நிலை பற்றி சொல்லிக் கவலைப் பட்டார்.

இத்தனைக்கும் தகப்பனார்
இறையருள் கொண்ட சீர்திருத்தவாதி....................... :twisted:

எதிரும் - புதிருமா முறுகின பெடிகளுக்கிட்ட
அவங்கட முட்டாள் தனத்தை சொன்னன்....................
தேவையில்லாத வேலை.
அதுக்குத்தானே போலீசிருக்கு எண்டு.

பிரச்சனை தெரியாம சமூகத்துக்கு பயந்து மூடிமறைக்க
போலீசுக்கு நேரே போகம
சிலரை, சிலர் பாவிப்பதால் இப்படியானவர்கள் தொடர்ந்தும் உருவாகிக் கொண்டேயிருக்க வழி வகுக்கிறது.

ஆனாலும் இவை இன்னும் சில காலத்துக்குத்தான்.

சுவிசிலிலுள்ள போலீசைப் பத்தி தெரிஞ்சவங்களுக்கு தெரியும்................
ஐரோப்பாவோட நாடு சேரும் போது இவற்றை ஒடுக்க புதிய படையொன்று உருவாகிறது போலீசுக்குள்...................



- Danklas - 08-30-2005

அது ஏன் அஜீவன் சுவிசில மட்டும் பெண்கள் 18 வயது வந்தது ரன் பண்ணுறாங்கள்?? (யூரோப்பில் பொதுவாக சுவிஸில் அதிகமாம் எண்டு புள்ளி விபரம் கூறுதெ??)


- AJeevan - 08-30-2005

விளங்கேல்ல


- Danklas - 08-30-2005

ஜரோப்பாவில் கூடுதலாக சுவிஸில் நாட்டில் இருக்கு பெண்கள் தங்கள் பெற்றோர்களின் சொல்லை மதிப்பதில்லை.. 16,17 வயதிலேயே காதல்.. 18 வயதினிலே பெற்றோர்கள் எதிர்த்தால் காதலிச்ச பையனுடன் வீட்டை விட்டு ஓடுகிறார்கள்..


- AJeevan - 08-30-2005

Danklas Wrote:ஜயோ,, கிழிஞ்சுது லம்பட லுங்கி.... அஜீவன் சார் இவ்வளவும் நாளும் நான் உங்களை திட்டி இருந்தாலோ அல்லது அஜீவன் எண்டு மரியாதையா கூப்பிடாட்டியோ,, அல்லது ஹரியிண்ட <b>கலியாணவீட்டில உங்களுக்கெண்டு கொண்டுவந்த ஜூஸ் எடுத்து நான் குடிச்சனே </b>அதெல்லாத்தையும் மனதில வச்சிருந்தால் மறந்துடுங்க.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
நான் ஜூஸ் குடிக்கிறதில்ல.

இந்தப் பழம்புளிக்கும்................. fox story


- AJeevan - 08-30-2005

பணக்காரனாவதில ஆசை
ஊரில சொறி..................கொழும்பில வீடு வாங்கோணும்.............
சுவிசிலயும்தான்...............
இதே நினைப்பில பலர்.
இவங்க பிள்ளைகளை பார்க்கறதில்ல.
இதுகள் சுவிசின் டொச்சில போனில கதைச்சாலும் விழங்காது .............
ஓடின பிறகுதான் தெரியிறது...............
இதுவும் ஒரு காரணம்?

[quote]புலம் பெயர் நாடுகளில் நாம் பண முதலைகளாக அல்லது பெயர் எடுக்க வேண்டும் என்ற கருத்தில் வாழ்வதால் குழந்தைகளுக்கு நல்ல நட்பு ஒன்று வீடுகளில் இல்லை.


எனவே குழந்தைகள்
வெளியேயுள்ள நண்பர்களை, தொடர்புகளை நாடுகின்றன.
இது மறுக்க முடியாத ஒன்று.....................

நரகத்தை விட ஒரு நிமிட சொர்க்கத்தை நாடுவது................. மனித இயல்புதானே?

ஐரோப்பிய பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கும் பாலியல் சம்பந்தமான பாடதிட்டங்களைக் கூட விளங்கிக் கொள்ளாது
குழந்தைகளை திட்டித் தீர்த்த , தண்டித்த பெற்றேரை எனக்குத் தெரியும்.................
குழந்தைகள் தன் பெற்றேரை முட்டாள்களாக கருதவும் ,
எதையாவது மனம் விட்டுப் பேசவும் முடியாத நிலையில் இருக்கின்றனர்.

பிள்ளைகள் வீட்டுத் தொலைபேசியில் நண்பர்களோடு வேற்று மொழியில் பேசும் போது :
"அதுகள் பாடத்தில ஏதோ பிரச்சனைகளை பேசுதுகள்.............. " என்று விருந்தாளியான எம்மிடம் சொல்லும் போது
அதை செவிமடுக்கும் குழந்தைகள் மட்டுமல்ல ,
நாமும் குறுகி நளினப் பட வேண்டியிருக்கிறது.

அந்தப் பொய்யைச் சொல்லி எம்மை பார்க்கும் நளினமே...............அதை காட்டி விடுகிறது.


இவை மொழி விளங்காமலா?

எமது குழந்தைகள் நல்லவர்கள் என்று காட்ட எடுக்கும் நடிப்பா?

இப்படியான செயல்கள் குழந்தைகளையும் பொய் பேச வைக்கிறது.

இது போன்ற பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.................


- SUNDHAL - 08-30-2005

serious ஆன பிரச்சனைகள் தான்....சரி இவற்றை தீர்க்க என்ன தான் வழி?


- வன்னியன் - 08-30-2005

நான் எதற்காக இதை எழுதினேன் என்றால் பெற்று 17 வருடங்கள் வளாத்துவிட்டு அடுத்தவர்களை கொண்டு கடத்திச்சென்று அடித்து துன்புறுத்தும் பெற்றோர்களும் இருக்கின்றார்கள் என்பதை தெரிவிப்பதற்காகத்தான். இதை சுவிசிலுள்ள என்னுடைய நண்பர் கூறியபோது வேதனையாக இருந்தது.
அதைவிட கொடுமை அந்த பெண்ணுடைய தகப்பனார் சிலகாலத்துக்கு முன்னர் பலரிடம் சீட்டு கட்டி 3 இலட்சம் சுவிஸ் பிராங்வரை மோசம் செய்தவராம். எல்லோருக்கும் பெரிதாக நாமம் போட்டுவிட்டாராம்.. சமீபகாலமாக அவர் தனக்கு ஒரு பெயர் சூட்டியுள்ளாராம் அதைக்கேட்டால் நீங்கள் எல்லோரும் அவருக்கு அடிக்க போய்விடுவீர்கள்

சின்னப்பு வந்து உதைப்பற்றிய விபரத்தை சொல்லலாம்தானே
அவருக்கு கட்டாயம் உதைப்பற்றி தெரிந்திருக்கும். ( அவரும் சேர்ந்துதான் கடத்தினாரோ என்னவோ களப்பக்கம் காணம்)


- Danklas - 08-30-2005

பேசாமல் 16 வயதிலேயே (நிலமை கட்டுக்கு அடங்காமல் போனால் 13லேயே செய்யலாம்) ஒரு பையனை பார்த்து அவங்கட குடும்பத்தோட பேசி ஒகே பண்ணீ விடவேண்டியதுதான்...(இப்ப கனடா, லண்டனில அதுதானெ நடக்குது).. ஆனால் பாருங்க சுண்டல் இப்பத்தகாலத்து தமிழ் சிறுசுகளுக்கு (18,19வயது பெண்களூக்கு) ஆணின் வயது எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?? குறைந்தபட்சம் 25லிருந்து 30க்குள்... இப்படி நிறைய திருமணம் (காதல் திருமணம்) யூரோப்பில் நடக்குது,, Idea பெண்களின் திருமண எல்லை 18-19... ஆண்களுக்கு 30-31... Idea


- SUNDHAL - 08-30-2005

அந்த வயதில்..ஆண்கள் இருந்தால் அன்பு அதிகமாக கிடைக்கம் என்றா?
இப்படியான பிரச்சனைகள் வர இன்னும் ஒர காரனம் அந்த பெண்கள் அதிகமாக அன்பையும் எதிர் பார்ப்பதனால்..
கட்டுபாடான குடும்ப வாழ்கைக்குள் இருக்கும் அவர்கள் ஆன் ஒருவனுடைய நட்ப கிடைக்கும் போது அந்த ஆண் அவர்கள் மீது அதிகமான அன்பு செலுத்தும் போது அவர்களுக்கு அது பிடித்து போய்விடுகிறது இல்லையா?


- Danklas - 08-30-2005

SUNDHAL Wrote:அந்த வயதில்..ஆண்கள் இருந்தால் அன்பு அதிகமாக கிடைக்கம் என்றா?
இப்படியான பிரச்சனைகள் வர இன்னும் ஒர காரனம் அந்த பெண்கள் அதிகமாக அன்பையும் எதிர் பார்ப்பதனால்..
கட்டுபாடான குடும்ப வாழ்கைக்குள் இருக்கும் அவர்கள் ஆன் ஒருவனுடைய நட்ப கிடைக்கும் போது அந்த ஆண் அவர்கள் மீது அதிகமான அன்பு செலுத்தும் போது அவர்களுக்கு அது பிடித்து போய்விடுகிறது இல்லையா?

அமா அமா 19வயது பெண்ணுக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பு ஏற்பட தொடங்கும் பொழுது (ஒரு 30 வயது ஆகும்பொழுது,,) 30வயது ஆணுக்கு அவண்ட வாழ்க்கை தேயத்தொடங்கிடும்.. பிறகு எப்படி வாழ்க்கை சக்கரம் சுழலும்??? :? Confusedhock: