![]() |
|
நினைவில் நின்றவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: நினைவில் நின்றவை (/showthread.php?tid=2308) |
- tamilini - 12-04-2005 MUGATHTHAR Wrote:பிள்ளை நீங்கள் என்ன சொன்னாலும் போலிகளை விரும்பிற பெண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் அதுதான் புதுபுது கவிஞர்கள் திரையுலகில் உண்டாவதற்குக்காரணம் அதுசரி உண்மையான அன்புக்கிடையில் பொய் தேவையில்லை எண்கிறீங்கள் நான் அறிஞ்சமட்டிலை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேணுமெண்டால் 50 வீதம் தன்னும் மனுசிட்டை பொய் சொல்லவேணுமாம் (உதாரணத்துக்கு சாப்பாட்டில் கறி பச்சை தண்ணியா இருந்தாலும் சூப்பர் எண்டு சொல்லனும் தப்பித்தவறி உண்மையைச் சொன்னா என்ன நடக்குதெண்டு வீட்டை ஒருக்கா வந்து பாருங்கோ தெரியும்......) முகம்ஸ் இப்படி யார் சொன்னாங்க..?? ஒரு துணைவி எப்பவும் கணவனிட்ட உண்மையைத்தான் விருப்புவார். அதே மாதிரித்தான் கணவனும். கறி பச்சைத்தண்ணியா இருந்தா அதை நீங்கள் சுட்டிக்காட்டினா அவங்க ஏற்றுப்பாங்க அது எப்ப தெரியுமோ..?? நீங்களும் அடுப்படியில அவாவைப்போல நின்று சமைச்சு சரிசமனாய் நீங்களும் வீட்டு வேலையைச்செய்தா ஏற்றுக்கொள்வார்கள். அதை விட்டுவிட்டு நீங்க முதலாளி அவங்க தொழிலாளி என்ட மாதிரி அவங்க வீட்டு வேலைகளைச்செய்ய நீங்க காலாட்டீட்டிருந்தா இது தான் நிலை..?? நீங்கள் ஆகா ஓகோ சூப்பர் என்று பாராட்டின கறியை அவங்க சாப்பிடத்தானே போறாங்க பிறகென்ன..?? சோ சின்னச்சின்ன விசயங்களுக்கு கூட அன்பு உள்ளவங்கிட்ட அன்பானவங்கிட்ட பொய்வார்த்தைகள் தேவையில்லை. குறைகளை சுட்டிக்காட்டிற அதேவேளை நிறைகளையும் பாராட்டுங்க அப்ப அவங்களுக்கு சந்தோசம் தானே. அதைவிட்டுவிட்டு கறி எவ்வளவு நல்லாய் இருந்தாலும் கம்முண்ணு மூக்குப்படிக்க சாப்பிட்டுவிட்டு நல்லாய் இல்லாட்டா முணுமுணுத்தா கஸ்டப்படுவினம் தானே?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 12-04-2005 முகத்தார் நீங்க சொல்கின்றது சரிதான். உண்மையில் ஆண்களைப் பொய் பேச வைக்கின்றதே பெண்கள் தான். பொதுவாக ஆண்கள் உந்த வர்ணிப்புகளுக்கு மயங்குவதில்லை. ஆனால் பெண்கள் உடனேயே கவிந்துடுவாங்க. முகத்தார் உங்க ஆத்துக்காரியோடை எனிமெல் சண்டை வந்தால் <b>கோபத்திலேயும் நீர் அழகாகத்தான் இருக்கின்றீர் </b>என்று சொல்லிப் பாருங்க. அப்புறம் ஹி ஹி ஹி ...........................வெட்கமாகவிருக்கு - MUGATHTHAR - 12-04-2005 tamilini Wrote:முகம்ஸ் இப்படி யார் சொன்னாங்க..?? ஒரு துணைவி எப்பவும் கணவனிட்ட உண்மையைத்தான் விருப்புவார். ஆரா........இதெல்லாம் பிள்ளை அனுபவத்திலை வாறது ஆட்களின்ரை கதையை கேட்டு வாறேலை சரி உண்மைதான் துணைவி விரும்பிறா எண்டு வைச்சுக் கொள்ளுவம் இப்ப பொண்ணம்மக்கா வெளிக்கிட்டு வரேக்கை எப்பிடி சொல்லிறது சா.. யானைகுட்டி மாதிரி இருக்கிறாய் எண்டு பிறகு மனுசர் வீட்டிலை இருக்கிறேலையோ இதுக்காண்டிதான் தேவைக்கு ஏத்தமாதிரி சில சில விசயங்களை சொல்லவேணும் இப்ப விளங்குதா குடும்ப வாழ்க்கேலை எங்கெங்கை அள்ளி விடவேணும் எண்டு இதை விட்டு உண்மையைச் சொல்லித்தான்; அதை திருத்த முடியுமோ ? சரி இனி உங்கடை இளைய தலைமுறை பெடியள் யோசிச்சு நடக்கிறாங்களோ பாப்பம் - tamilini - 12-04-2005 முகம்ஸ் பொன்ஸ் உண்மையில் யானை போல இருந்தா அவாக்கு தெரியும் தன் உருவம் அதனால அவங்க நீங்க யானைக்குட்டி போல இருக்கிறீங்க என்றால் கோவிக்க மாட்டா (உண்மை அது தானே) ஆனா நீங்க. 1 ப்பாத்து 2 என்றாக்கள். பூனைக்குட்டியைப்பாத்தா யானைக்குட்டி என்பியள் பின்ன அடிபோடாமல் என்ன செய்வாங்க..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 12-11-2005 யாராவது பாஞ்சாலங்குறிச்சி படத்திலிருந்து சின்னச் சின்ன பனித்துளி சிந்திவரும் சோலைக்குள்ளே பாடலை இணைக்கமுடியுமா? - தூயா - 12-12-2005 அந்த பாடலை நான் கேட்டதே இல்லையே. இருவர்பாடியதா?? - Mathan - 12-12-2005 பாஞ்சாலங்குறிச்சி படத்தில் உன் உதட்டோர என்று வரும் பாடலை மட்டும் தான் இணையத்தில் பார்க்க முடிந்தது வியாசன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Vasampu - 12-12-2005 எமக்கெல்லாம் பாடல்கள் தேவையென்றால் நாம் வியாசனை நாடலாம். ஆனால் வியாசனுக்கே பாடல் தேவையென்றால் :roll: :roll: :roll: :roll: - தூயா - 12-12-2005 வசம்பண்ணா நீங்கள் சொன்னது போல ஒரு வசனம் ஏதோ ஒரு படத்தில் வருமே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> மிகவும் பிரபலமான வசனம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->சரி சரி அடுத்த பாட்டு நீங்கள் தான் எழுதவேண்டும்... - Vasampu - 12-13-2005 சரி தூயா தங்கள் விருப்பப்படி படம் : <b>காத்திருந்த கண்கள்</b> பாடியவர் : <b>பி.வி.சிறீநிவாஸ்</b> பி.கு : வியாசன் பாடலை இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள். <b>துள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேன் இன்று தொடர்ந்து பேசும் கிளியொன்று பேச மறந்ததேன் இன்று ..... வெள்ளி வடிவ முகமொன்று வெட்கம் கொண்டதேன் இன்று வேலில் வடித்த விழியொன்று மூடிக் கொண்டதேன் இன்று ..... அல்லி புூத்த முகத்தினிலே முல்லை புூத்த நகை எங்கே?... சொல்லி வைத்து வந்தது போல் சொக்க வைக்கும் மொழி எங்கே? ஆசை நெஞ்சில் இருந்தாலும் அமைதி கொள்ளும் குணம் ஏனோ? அன்னை தந்த சீதனமோ என்னை வெல்லும் நாடகமோ?....</b> - தூயா - 12-20-2005 வரிகள் வாசிக்க நல்லா இருக்கு. ஆனால் நான் இந்த பாடலை கேட்டதே இல்லை வசம்பண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வியாசன் - 12-23-2005 மன்னிக்கவும் வசம்பு களத்துக்கு அதிகம் வரமுடியவில்லை அதனால் உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றமுடியவில்லை. இதோ நீங்கள் கேட்ட துள்ளித்திரிந்த பாடல். தாமதத்திற்கு என்னை மனனித்துவிடுங்கள். துள்ளித் திரிந்த பெண்ணொன்று - Vasampu - 12-23-2005 <b>நன்றி வியாசன்</b> ஆமாம் உங்களை நீண்ட நாட்களாக களத்திலும் காணக் கிடைக்கவில்லை. வந்ததும் பாடலை இணைத்ததற்கு மிக்க நன்றிகள். என்ன தூயா பாடலைக் கேட்டீர்களா?? பிடித்திருக்கிறதா?? - தூயா - 12-29-2005 கேட்டேன் வசம்பண்ணா, நல்ல பாடல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சும்ம சொல்ல கூடாது உங்களுக்கு நல்ல ரசனை தான் ..அதுத்த பாடல் யார்? யாரிடமாவது "ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே " என்ற பாடல் இருக்கா? - Mathan - 12-29-2005 ம் இது நல்ல பாடல் தான் யாரிடமாவது இருந்தால் தாருங்கள் - வியாசன் - 12-30-2005 என்ன படத்திலை அந்த பாடல் இடம்பெற்றது? - vasisutha - 12-31-2005 தமிழ்ப் படத்திலை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வியாசன் - 12-31-2005 வசி நீங்கள் சரியான கெட்டிக்காரன் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 01-01-2006 எனக்கு படம் எது என்று தெரியாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஆனால் அழகிய பாடல்
- அருவி - 01-01-2006 Quote:யாரிடமாவது "ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே " என்ற பாடல் இருக்கா? இப்பாடலிற்கு நடித்தவர்கள் ஆனந்தபாபு மற்றும் மோகினி அப்படியா? :roll: :roll: :roll: :roll: அப்படியெனின் அது மோகினியின் முதற்படம் பெயர் ஞாபகம் வரல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|