![]() |
|
தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் (/showthread.php?tid=1677) |
- வினித் - 02-07-2006 [b] 07 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் <img src='http://img157.imageshack.us/img157/5851/kousalyan3xb.jpg' border='0' alt='user posted image'> லெப்.கேணல் கெளசல்யன் சாள்ஸ் பாபேஜ் மட்டக்களப்பு ???? - 07.02.2005 மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரான கெள்சல்யன் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட வேளை 07.02.2005 அன்று மட்டு. மாவட்ட இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியான புனானைக் பகுதியில் வைத்து கெள்சல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தால் நாடத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன். 2ம் லெப். விதிமாறன் ஆகியயோரும் வீரச்சாவடைந்தார்கள். மற்றும் இத்தாக்குதலில் படுகாயம்டைந்த மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 08.02.2005 அன்று மரணமானார். பதிவுகள் கிறனடா சுதந்திர தினம்.. (1974) தகவற் துளி அப்புக்காத்து ஜசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914-இல் 'நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926-இல் 'அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார். நம்மால் முடியுமா என்று மனத் தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும். -குறள் விளக்கம்- - வினித் - 02-08-2006 [b]08 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் சந்திரநேரு (அம்பாறை) அம்மாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான டிரு. அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டு. மாவட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான புனானைக் பகுதியில் வைத்து கெள்சல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தால் நாடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து 08.02.2005 அன்று மருத்துவமனையில் இறந்தார். இவர் சிங்கள படைகள் அம்பாறை மண்ணில் புரிந்த அட்டூழியங்களை நேர்மைத்திறனுடன் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். இவரின் இனப்பற்றிகும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியைக் கெளரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை வழங்கிக் கெளாரவித்தார். பதிவுகள் சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டம் களனி மாநாட்டில் பிரகனப்படுத்தப்பட்ட நாள். இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை, இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும்........ -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- - வினித் - 02-09-2006 <b>09 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் மேயர் மங்கை இரத்தினசிங்கம் நேசமலர் கிளிநொச்சி கப்டன் தனா பெருமாள் கலைநிதி யாழ் கப்டன் இந்து கந்தையா புனிதா அம்பாறை சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும். கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான மேயர் மங்கை, கப்டன் தனா, கப்டன் இந்து ஆகியோர் வீரச்சாவடைந்தனர்............... தகவற் துளி 1937-இல் பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ,தமிழ் மகள்' ஆகும். இது வண்ணார்பண்ணையில் இருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருமதி. மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்........ சட்டமேதை ஜி.ஜி. பொன்னம்பலம் நினைவுநாள்(1997) விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி உன்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. -பாரதியார்- </b> - வினித் - 02-10-2006 [b] 10 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் படைஉயெடுப்பு முறியடிப்பில் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது வன்னி மீதான மும்முனைத் தாக்குதல் படையெடுப்பி( வன்னி விக்கிரம) முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒண்றும் சுட்டுவீழ்த்தப்பட்டது. (1991). தகவற் துளி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி ஏ லோனோய் ஆவார். உலகின் பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு சீனாவாகும். சிறிய இராணுவத்தைக் கொண்ட நாடு அண்டோரா ஆகும். ஆஸ்கார் விருதை அதிக முறை வென்றவர் வோல்ட் டிஸ்னி ஆவார்.. பயிற்சி, தந்திரம். துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம். -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- - வினித் - 02-11-2006 [b] 11 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் சங்கிலி மன்னன் அரண்மனை வாயில் யாழ்ப்பாணம் யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலியன் ஆவான். இவந்து இராசதானி நல்லூரில் இருந்த்து. இவ் இராசதானியின் அரண்மனை வாயில் தோற்றம் இதுவாகும். பதிவுகள் நடிகமணி வி.வி. வைரமுத்து பிறந்த நாள் (11.02.1924 - 08.07.1989) அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கம் நினைவுநாள்... ஈரான் தேசிய தினம் (1974) வத்திக்கான் நகர சுதந்திரநாள் (1922) எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாக நிற்ப்பவை........... -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் - வினித் - 02-12-2006 [b] 12 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் பிரபல எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி (28.03.1868 - 18.06.1936) சோவியத் புரட்சிக்கு முந்திய மக்களின் வாழ்க்கை அவலங்களை மார்க்சிம் கோர்க்கியின் எழுத்தில் காணலாம். தாய் என்ற இவரது நாவல் உலகின் பெரும்பாலான மொழிக்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோர்க்கி என்ற ரஷ்யச் சொல்லின் பொருள் கசப்பானது ஆகும். இச்சொல்லை அவர் தனது பெயரின் பின்னால் இணைத்துக்கொண்டார். புரட்சியின் பின் பிரச்சாரத்துக்குப் பொறுப்பாக லெனினால் நியமிக்கப்பட்டார். தகவற் துளி 1555-எல் புகையிலை ஜரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. உலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கிறிஸ்துவுக்கு முன் 776 இல் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களை பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள். -குறள் விளக்கம்- - வினித் - 02-13-2006 [b]13 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் கப்டன் நளாயினி பழனி கோகிலா முல்லை கப்டன் செங்கதிர் ஜெயரட்ணம் ஜெயந்திரா யாழ். கப்டன் குமரேஷ்/ குமணன் ஜெகநாதன் ரவிச்சந்திரன் மன்னார் சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும். கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான கப்டன் நளாயினி,கப்டன் செங்கதிர்,கப்டன் குமரேஷ்/ குமணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். பதிவுகள் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவுநாள் (1874 - 13.02.1950) கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த 16 புலி வீரர்களின் நினைவு நாள். (1985) தகவற் துளி 1954-இல் அமெரிக்க கான்சர் மையம், முதன்முதலாக சிகரட் பிடித்தால் கான்சர் வருமென்று கண்டுபிடித்துச் சொல்லியது. - வினித் - 02-14-2006 [b] 14 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் ஜனாதிபதி சார்ள்ஸ் து கோல் பிரான்ஸ் 22.11.1890 - 12.11.1970 2ம் உலகப் போரின் போது பிரான்ஸ் ஜேர்மனியர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் இங்கிலாந்து சென்று, பிரான்ஸ் நாட்டவர்களை அணிதிரட்டி படையை கட்டியெழுப்பி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் ஜேர்மனிய ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்ஸ் நாட்டை மீட்ட தலைவர் சார்ள்ஸ் து கோல் ஆவார்...... பதிவுகள் காங்கேசந்துறையில் வைத்து சிறீலங்கா பொலிஸ் படையின் மீதான முதலாவது தாக்குதல் தலைவரின் தலைமையில் நடாத்தப்பட்ட நாள்.(1977) உமையாள்புரத்தில் சிங்களப்படை மீது கண்ணிவெடி தாக்குதல் நடாத்தப்பட்ட நாள்.(1983) எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது. - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் - வினித் - 02-15-2006 [b]15 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் லெப். கேணல் பொன்னம்மான்அற்புதன்(யோகரத்திணம் குகன்) 23.12.1956 - 14.02.1987) விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான பென்னம்மான், ஆயிரக்கணக்கான இராணுவப் பயிற்சிப் பாசைறைகளுக்குப் பொறுப்பாக இருந்ததுடன், இராணுவ தொழில்நுட்ப்ப பணியிலும் பெரும் பங்காற்றியவராவார். கைதடியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு இன்னும் 7 தோழர்கலுடன் வீரச்சாவடைந்தார். தகவற் துளி கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ரஷ்யாவாகும். 'பெருலா' எனப்படும் மரத்தின் பிசினேபெருங்காயம் எனப்படுகிறது. மனித ஆத்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது... -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் - வினித் - 02-16-2006 [b]16 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் அணு விஞ்ஞானி நீல்ஸ் போர்07.10.1885 - 18.11.1962 போர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெளதீகச் சாஸ்ர்கிர வல்லுனராவார், இவர் நவீன அணுப் பெளதிகவியலின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். அணுவின் அமைப்புக்கள் பற்றிய வேலைத்திறனுக்காக பெளதிகவியலுக்கான நோபல் பரிசை 1922-ஆம் ஆண்டில் இவர் பெற்றுகொண்டார். அணுகுண்டைத் தயாரித்த விஞ்ஞானிகளின் ஆலோசகரக 1943- ஆம் ஆண்டில் கடமையாற்றினார். தகவற் துளி 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் டைனோசர்களின் ஆதிக்கம் நிலவியது. விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாக தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்தது. சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை. -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- - வினித் - 02-17-2006 [b] 17பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் பிரபல கடலோடி வேடினன் மகலென் (கி.பி. 1480 - கி.பி.. 1521) கடல்வழியாக உலகைச் சுற்றிவந்த முதல் மாலுமி மகலென் ஆவார். பசுபிக் சமுத்திரம் என்ற பெயரைச் சூட்டியதும் இவர்தான் பசுபிக் என்றால் அமைதி என்று பொருள். மகலெனின் நினைவாக தென் அமெரிக்காவின் பகுதியிலுள்ள நீரிணை ஒன்றிற்கு மக்லென் நீரிணை என்று பெயர் சூட்டியுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். தகவற் துளி சிறீராமகிருஷ்ண பரமஹம்சர் அவதாரதினம் (17.02.1836 - 16.08.1886) தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தி நினைவுநாள் (1986) இயற்கையாகக் கிடைக்கும் அணுசக்திப் பொருள் யுரேனியம் ஆகும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு. -குறள்- - வினித் - 02-18-2006 [b]18 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் அணுகுண்டின் தந்தை ரொபேட் ஒப்பன் ஹெய்மர் 22.04.1904 - 18.02.1967 அணுக்குண்டின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் ஒப்பன் ஹெய்மர். இவர் 16.07.1945-இல் நியூமெக்சிக்கோவிலுள்ள் பாலைவனமொன்றில் முதல் முறையாக அணுக்குண்டை பரிசோதனை செய்தார். இவரது பரிசோதனை நிகழ்து ஒரு மாததிற்குள் 2-ஆம் உலகப் ப்பொர்க் காலத்தில் அமெரிக்கா, ஜப்பான் - நாகசாகி ஹிரோசிமா நகரங்கள் மீது 09.08.1945-இல் அணுக்குண்டை வீசி பேரழிவை ஏற்படுத்தியது. தகவற் துளி ஒட்டகச்சிவிங்கியினால் எவ்வித ஒலியையும் எழுப்ப முடியாது. அது ஊமை.... எகிப்து நாட்டில் பூனைகளுக்காக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சிங்கள பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒரு போதும் மாறப்போவதில்லை. -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- - வினித் - 02-19-2006 [b]19 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் அம்பாறை உடும்பன்குளம் படுகொலை 1986 உடும்பன்குளத்தில் வயலில் சூடடித்துக்கொண்டிருந்த தமிழ் விவசாயிகளில் 60 பேரை சிங்கள அதிரடிப்படையினர் சுட்டு கொன்று, வைக்கோலுக்குள்ளேயே போட்டு எரித்தனர். சிங்கள் இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட இவ் அப்பாவித் தமிழ்மக்களின் நினைவுநாள்.(1986) தகவற் துளி உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தின் பரோஸ் கலங்கரை விளக்கம் ஆகும். இது கி.மு. 280 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் 400 அடி. வெந்நீர் சுவையில்லாமல் இருப்பதற்குக் காரணம், நீரைக் கொதிக்கவைக்கும் போது நீருக்குச் சௌவையூட்டும் வாயு வெளியேறிவிடுகின்றது. கரடுமுராடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சியப் பயணத்தில் எமக்கு ஒரேயொரு ஊன்றுகோலாக இருப்பது எமது உறுதிதான். -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- - வினித் - 02-20-2006 [b]20 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் லெப். கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஷ்ணன் பொலநறுவை 07.05.1972 - 22.02.1998 திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் கரும்புலி லெப். கேணல் கரனும் ஒருவர். தகவற் துளி ரஸ்சியாவிலேயே அதிக நூலகங்கள் உள்ளன. இங்கு நான்கு லட்சம் நூலகங்கள் உள்ளன. நூல்நிலையங்களைப் பராமரிக்கும் முறை பற்றி சொல்லிக் கொடுப்பதற்கு 103 கல்லூரிகள் உள்ளன. முதலாவது பயணிகள் புகையிரதம் 1825-இல் இங்கிலாந்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. ஆயுதங்கள் மட்டும் முக்கியமல்ல; தந்திரங்களும் உபாயங்களும் முக்கியம். -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- - வினித் - 02-21-2006 [b] 21 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் மருத்துவ விஞ்ஞானி சேர் அலெக்சாண்டர் பிளேமிங் 06.08.1881 - 11.03.1955 பென்சிலின் மருந்தினைக் கண்டுபிடித்த சேர் அலெக்சாண்டர் பிளேமிங் நினைவு 11.03.1955. இவரது கண்டுபிடிப்பு 2-ஆவது உலகப்போரின் போதும் அதற்குப் பின்னரும் ஏராளமான உயிர்களைக் காத்து வருகின்றது. இவர் மருத்துவதிற்கான நோபல் பரிசு பெற்றார். தகவற் துளி ரோமானியப் பேரரசின் தலைவர்களான, யூலியஸ் சீசர், அக்ஸ்டின் சீசர் ஆகிய இருவருமே; இன்று வழக்கிலுள்ள நாட்காட்டி அமைப்பிற்கு முதலில் வித்திட்டவர்கள். யூலை, ஒகஸ்ட் ஆகிய இரு மாதங்களும் இவர்களது பெயரினைக் குறித்து வந்தவையாகும். நான் செய்தாக வேண்டும், செய்தே தீருவேன், செய்ய என்னால் முடியும், செய்வது என் கடமை, இதோ செய்கின்றேன். -ரிச்சர்ட் ஹெரிட்டன்- - வினித் - 02-22-2006 [b] 22 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் நாட்டுப் பற்றாளர் கோவை மகேசன் 22.02.1938 - 06.07.1992 தமிழரசுக் கட்சி நடாத்திய 'சுதந்திரா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்து தமிழ் உணர்வை மக்களுக்கு ஊட்டிக்கொண்டுருந்த ஒரு தேச பக்தன் கோவை மகேசன். சிங்கள படைகளால் சுதந்திரன் பத்திரிகை தடுக்கப்பட்டதும் தமிழ்நாடு சென்று 'வீரவேங்கை' என்ற பத்திரிகையை நடாத்தி போராட்டத்திற்கு ஆதரவு சேர்த்துக்கொண்டிர்ர்நதார்.................. பதிவுகள் 22.02.2002 அன்று தமிழ்- சிங்கள இன முரண்பாட்டை அமைதிவழியில், அரசியல்ரீதியில் தீர்த்துவைக்கும் உயரிய நோக்குடன் தேஎசியத் தலைவர் அவர்களும், சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், புரிந்துணர்வு உடன்பாடென்றில் கையொப்பமிட்டனர். மலைபோல மக்கள் சக்தி எமக்குப் பின்னால் இருக்கும் வரை, எந்தப் புட்திய சவாலையும் நாம் சந்திக்கத் தயார். -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- - வினித் - 02-23-2006 [b]23 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் கடற்கரும்புலி லெப். கேணல் மதன் (யோகச்சந்திரன் ரதீஸ்குமார்) வெல்வெட்டித்துறை, யாழ். 14.02.1996 கடற்கரும்புலி மேஜர் வேங்கை(சூசைப்பிள்ளை செல்வகுமார்) பொலிகண்டி, யாழ். 14.021996 முல்லைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் பெறுமதியான ஆயுத தளபாடங்களைக் காப்பாற்றும் பொரிட்டு இந்திய, இலங்கை கடற்படைகளுடன் ஏற்ப்பட்ட மோதலின்போது வீரச்சாவடைந்தார்கள். பதிவுகள் புறூணை சுதந்திர தினம்(1984) கயானா குடியரசு தினம்(1970) தகவற் துளி சர்வதேச மன்னிப்புச் சமை, உலகின் சிறைகளில் அடைக்கப்படும் அரசியல் கைதிகளின் அடிப்படை உரிமைகளைப் பேணும் நோக்கில் 1961-இல் பீற்றர் பெரென்சன் என்ற வழக்கறிஞரால் ஸ்தாபிக்கப்பட்டது. பசுபிக் சமுத்திரத்தில் ஜப்பானியக் கரையோரத்திலேயே அதிக எரிமலைகள் காணப்படுகின்றன. - வினித் - 02-24-2006 [b]24 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் கப்டன் உமையாள் செல்லத்துரை புஸ்பராணி நெடுங்கேணி கப்டன் நெடியோன் குலேந்திரன் ஞானசங்கர் யாழ். கப்டன் அருண் அம்பிகாவதி அருட்சோதி யாழ். சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும். கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான கப்டன் உமையாள், கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்................. பதிவுகள் யாழ். குருநகரில் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்த இராணுவ முகாம் கட்டிடம் குண்டுவைத்து தகர்கப்பட்ட நாள். 24.02.1984 எஸ்தேனியா சுதந்திர தினம். - வினித் - 02-25-2006 [b] 25 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள். பிரபல கடலோடி ஜேம்ஸ் குக் கி.பி. 1728 - கி.பி. 1779 அவுஸ்திரேலியக் கண்டத்தை கண்ட்றிந்த மாலுமி ஜேம்ஸ் கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு திறமையான கடலோடி. இவரது வாழ்வில் பெரும்பகுதி கப்பலிலேயே கழிந்துள்ளது. அந்தளவுக்கு கடற்பயணங்களிலே வாழ்க்கையைச் செலவிட்டார். தகவற் துளி 1720 இல் ஹொலண்ட் நாட்டைச் சேர்ந்த கார்னீஸ் வரண்டிராபில் என்பவர் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். அறிவு ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் எந்து இனமும் எந்து மக்களும் வளரவேண்டுமென்று நான் அதிகம் விரும்புகின்றேன்............... -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- - வினித் - 02-26-2006 [b]26 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள். மேஜர் தமிழினியன் நடராஜா கிருபாகரன் யாழ்ப்பாணம் மேஜர் சுலோஜன் குமாரலிங்கம் விஜேந்திரன் திருமலை மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் வவுனியா திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் மேஜர் தமிழினியன், மேஜர் சுலோஜன்,மேஜர் குமரேஸ் ஆகியோரும் அடங்குவர். தகவற் துளி செஞ்சிலுவைச் சங்கம் 1864-இல் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாநாட்டில் 26 நாடுகள் கலந்துகொண்டன. ஒருவர் தம் நடுநிலைமைப் பொறுப்பிலிருந்து நீங்கித் தவறான செய்லில் இறங்குவது, பார் நான் கெட்டோ ஒழிவேன் எனத் தெரிவிப்பதற்குரிய அறிகுறியே! -குறள் விளக்கம்- |