![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- கபிலன் - 09-03-2003 மதிவதனன் அநாகரீகமாக எழுதத் தலைப்பட்டுள்ளீர்கள்.. தாங்கள் எழுதியவை நீக்கப்பட்டு பொறுப்பாளரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது...முடிவை அவர் தீர்மானிக்கும் வரையில் தங்களை இடைநிறுத்த வேண்டியுள்ளது - yarlmohan - 09-04-2003 எச்சரிக்கை வழங்கப்பட்டு மீண்டும் கருத்தெழுத அனுமதிக்கப்படுகின்றார். - மோகன் - kuruvikal - 09-04-2003 பெண் =/= ஆண் ஆண் சமூகவியல் உரிமை =/= பெண் சமூகவியல் உரிமை...! இதைப் பெண்கள் புரிந்து கொண்டால் சுயபிரகடனக் கோமாளிகள் தேவையில்லை...பொய்ப்பிரச்சாரங்களால் சமுதாயத்தை சீரழிக்க....! உணர்வார்களா...அல்லது இப்படியே ஆண்களைத்திட்டிய யதார்த்தத்திற்கு புறம்பாக வாழப்போகிறார்களா....! அதுதான் இன்று அநாகரிக மனித சமுதாயம் ஒன்றைக்காண்கிறோமே பெண் பெண்ணைத் திருமணம் செய்வதும் கூடிவாழ்வதும் ...உயிரியலுக்கு இயற்கைக்குப் புறம்பான மிருகங்களைவிடக் கீழான வாழ்க்கை முறை......இதை யார் கற்றுக் கொடுத்தார்....அநேக பெண்ணியம் பேசுபவர்கள் தானாம்....உண்மையோ....! இப்படி ஆண் எதிர்ப்புவாதத்தால் மனித சமூகக் கட்டமைப்பைக் குலைத்தால் இது அல்ல இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ...????இறைவா...படைக்கும் போது நீ கூட இப்படி எண்ணினாயோ தெரியாது...தெரிந்திருந்தால் ஆண் பெண்ணென்றே பிரிவினை வைத்திருக்கமாட்டாய்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- nalayiny - 09-04-2003 இத்தகைய பழிசுமத்தல்கள் இன்று நேற்றல்ல காலம் காலமாக பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதை வராலாறுகளே காட்டி வருகிறது. அடக்கி ஒடுக்கி பெண்களை முடக்குவதற்கான சதி என்று தான் முன்னையோர் நம்பி இருந்தார்கள். ஆனால் எனது பார்வையில் இத்தகையவை இயலாமையின் கொதிப்பு என்று தான் கூறுவேன். நீங்கள் கூவுங்கள் யார் வேண்டாம் என்றது. பெண்ணிநிலை வாதம் என்பதன் பொருள் தெரியாதவர்களோடு இனி கருத்து பரிமாறி பிரயோசனமே இல்லை. ஆண் எதிற்பு வாதம் என கூறி கிலாகிக்கும் தங்கள் கருத்துகளை கவனமாக பாருங்கள் உங்கள் கருத்தில் தான் பெண் எதிற்பு வாதம் அதிகமாக தொக்கி நிற்கிறது. அத்Nதூடு கருத்தை கருத்தால் வெல்லும் பக்குவத்தை பல சமயங்களில் இழந்து விடுகிறீர்கள் திடீர் என கொண்டு வந்த பழிசுமத்தல்களை கருத்தாக்கி விடுகிறீர்கள். இவை கூட அப்பட்டமாக தங்களின் இயலாமையையே காட்டி நிக்கிறது. இயலாமை என்பது இயல்பு தான் அதற்காக இப்படியான பழிசுமத்தல் களா....! கருத்துக்கு ஆதாரமான மாற்றுக் கருத்தை முன்வைக்க பழகுங்கள். உங்களின் இயலாமை பகிரங்கமாக தெரிகிறபோது பாவமாகத்தான் இருக்கிறது. சரி கூவுங்கள். - kuruvikal - 09-04-2003 திருத்தம்.... பெண் =/= ஆண் but, ஆண் சமூகவியல் உரிமை = பெண் சமூகவியல் உரிமை ஆனால் தற்போது ஆண் சமூகவியல் உரிமை =/= பெண் சமூகவியல் உரிமை..... தாங்களாக விட்டுக்கொண்டதை எடுக்கச் சொல்வதும் அதைக்கொண்டு மனித இனத்தை முன்னேற்றப்பாதையில் மிக வேகமாகக் கொண்டு செல்லுதலுமே பெண் விடுதலை....! மேலே எழுதியதில் குறியீடு தொடர்பில் சிறுதவறு நிகழ்ந்துவிட்டது தவறுக்கு வருந்துகிறோம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- kuruvikal - 09-04-2003 இயலாமை சேவலிடம் கூடப்பிறக்காத ஒன்று....இப்படிச் சொல்கிறது சேவல்.....நாம் என்ன செய்வோம்....! எழுத்தளவில் இயலாமை பகன்றால் இயலாமை என்பது வெளிப்பட்டதாகுமா.....வெளிப்பாட்டை சுட்டிக்காட்டுங்கள் இயலாமைக்கு அர்த்தம் தர முனைகின்றோம்...வெறும் வார்த்தைகளால் எழுதுவது இயலாமை என்று கூறி சான்றுதரமுடிந்திடாது....! அது சுட்டுதலுக்கான ஆரோக்கிய வழியுமல்ல...! - Mathivathanan - 09-04-2003 கபிலன் Wrote:மதிவதனன் மோகன் Wrote:எச்சரிக்கை வழங்கப்பட்டு மீண்டும் கருத்தெழுத அனுமதிக்கப்படுகின்றார். - மோகன் நன்றி மோகன்.. நான் உங்களுக்கு அனுப்பிய தனிப்பட்ட செய்தியில் கோரியபடி நீக்கியகருத்தை மீண்டும் பிரசுரிக்கவும். எனது கருத்து மட்டுமல்ல.. முல்லை எழுதிய முழுக்கருத்தையும் பிரசுரிக்கவும் பிரசுரிக்கும்போது எங்கு என்ன தப்பு(தவறு) என்று சுட்டிக்காட்டவும்.. வாசகர்கள் முடிவெடுக்கட்டும் நான் ஏதாவது அவதுர்று எழுதினேனா.. இல்லையா என்பதை.. அவர்கள் முடிவெடுக்கட்டும் நான் தொடர்ந்து எழுதுவதா இல்லையா என நன்றி.. வணக்கம் - sOliyAn - 09-04-2003 உங்களுடைய கருத்தை வாசித்தேன் தாத்ஸ்.. அநாகரீகமான வார்த்தைகளை (அது இயல்பாகப் பேசப்படுவதானாலும்..அவற்றின் முதல் எழுத்தாக இருந்தாலும்..) பாவித்திருந்தீர்கள்.. பேசுவதிலும் பார்க்க எழுதுவதில் தாக்கம் அதிகம் என்பது உங்களுக்கு தெரியாததா என்ன? நிர்வாணமாக இருந்தான் என்பது வேறு.. எப்படி நிர்வாணமாக இருந்தான் என எழுதுவது வேறு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 09-04-2003 தாத்தா என்ன நடந்தது உங்கள் செய்தியயே கணவில்லையே எப்படி நாம் தீர்மானம் எடுக்கும் வாசகர்கள் ஆவது.....! - Mullai - 09-04-2003 [quote=kannan]எல்லாம் இந்த முல்லையால் வந்தது இந்த முல்லைக்கு வேறை இல்லை. அனுப்பப்பட்டது: 31.05.2003 23:17 [quote=Alai]முல்லையின் தொல்லை கூடிப் போச்சு. Posted: Sat Jul 12, 2003 9:46 am - Mathivathanan - 09-05-2003 நன்றி மோகன் நான் கேட்டதற்கிணங்க நீங்கள் முல்லை எழுதிய முழுக்கருத்தையும் எனது பதிலையும் மீண்டும் பதித்து வாசகர்களின் பார்வைக்குவிட்டு உங்கள் நேர்மைத்தன்மையை நிலைநாட்டியதற்கு மிக்க நன்றி.. முல்லை நீங்கள் உங்கள் பதிலை முழுமையாகப் பதிக்கலாமே.. உங்களுக்கும் முதுகெலும்பில் ஏதாவது..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- veera - 09-06-2003 பெண்கள் சமூகத்திற்கு பல படிப்பினைகள் இங்கும் காணப்படுகின்றன.உங்கள் சமூகத்திற்காக பல குரல்கள்.உங்கள் திறமைகளுக்காக பல களங்கள்,உங்கள் உயர்வுக்காக எத்தனையோ நல்ல உள்ளங்கள்! நாம் நினைப்பது நினைக்கும் போது கிடைக்காவிடினும், கிடைக்காது என்று நினைக்காத வரை....கிடைப்பதிலும் பலனடையலாம். - Mullai - 09-08-2003 இது கொஞ்சம் புதிது. அதுதான்... செப்டம்பர் 08, 2003 [size=18]நினைத்தது ஒன்று, நடந்தது இரண்டு வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜப்பேட்டையில், விருப்பத்தை மீறி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ததால், தாலி கட்டும் நேரத்தில், எல்லோரிடமும் "சாரி" சொல்லி விட்டு மணமேடையை விட்டு எழுந்து சென்றார் மணமகள். இதைத் தொடர்ந்து அந்த மணமகனுக்கு வேறு பெண்ணை நிச்சயம் செய்து அதே நேரத்தில் திருமணம் நடத்தப்பட்டது. வேலூர் மாவட்டம் வாலாஜபேட்டைக்கு அருகே உள்ளது கீழ் புதுப்பேட்டை. இந்தப் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் அவரது மகள் அருணாவுக்கும், குமரேசன் என்பவருக்கும் கல்யாணம் செய்ய நிச்சயம் செய்தார். இவர்களது திருமணம் சனிக்கிழமை காலை நடப்பதாக இருந்தது. வெள்ளிக்கிழமை இரவே மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வந்து விட்டனர். காலை 6.30 மணி முதல் 7.30க்குள் முகூர்த்தம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. காலை 6 மணி முதலே சடங்குகள் தொடங்கின. தாலி கட்டும் நேரம் நெருங்கியது. மாப்பிள்ளையின் கையில் தாலி கொடுக்கப்பட்டது. அவர் கட்டத் தயாராக இருந்தார். அப்போது, திடீரென்று எழுந்த அருணா, சினிமாவில் வருவது போல மாலையைக் கழற்றி கீழே வைத்தார். பின்னர் அனைவரும் என்னை மன்னியுங்கள், இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி தரையில் விழுந்து மன்னிப்புக் கேட்டவாறு அங்கிருந்து வெளியேறினார். இதைக் கண்ட திருமண மண்டபமே அதிர்ச்சியில் மூழ்கியது. மணமகன் நிலையைக் கேட்க வேண்டாம். அப்படியே கல் போல சமைந்து விட்டார். இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்த முருகேசன் என்பவரை அணுகி அவரது மகளை மணமகளாக்க அனுமதி கேட்டனர். அவரும் உடனடியாக வீட்டுக்குக் கிளம்பி, தனது மகளை அலங்கரித்து அழைத்து வந்தார். பின்னர் குறித்த நேரத்தில் அவருக்கும், குமரேசனுக்கும் திருமணம் நடந்தது. திடீரென்று வாக்அவுட் செய்து வெளியேறிய அருணாவிடம் பேசிய அவரது பெற்றோர்கள், அவரது மனதில் இருந்த அவரது தாய் மாமனுக்கே கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். பின்னர் அருணாவை அவரது தாய் மாமன் இருக்கும் வள்ளிமலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது. நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் நடக்கவில்லை என்றாலும் கூட மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஒரே நாளில் கல்யாணம் நடந்து முடிந்தது வாலாஜாபேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நன்றி தற்ஸ் தமிழ் - kuruvikal - 09-09-2003 பாட்டி உங்கட பேத்தியளுக்கும் உதைச் சொல்லிக் கொடுங்கோ.....அப்பத்தான் எதிர்காலம் பிரகாசமா இருக்கும்.....??????! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- nalayiny - 09-09-2003 வரதட்சணை கொடுமையில் தொழிலதிபர் மனைவி, மகள் சாவு மாமனார்,மாமியார் மற்றும் கணவனுக்கு சிறை தண்டனை ஊட்டி, செப்.9_ வரதட்சணை கொடுமையால் ஊட்டி தொழிலதிபரின் மனைவி தன் மகளுடன் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரது கணவன் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஊட்டியையடுத்துள்ள கிளப் ரோடு பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் நஹர்லால் பாப்னா. இவரது மனைவி பெயர் நிர்மலா. இவர்களது இரண்டாவது மகன் பெயர் மகேந்தர்(வயது_30). மகேந்தருக்கும், சென்னையை சேர்ந்த ரேகா(வயது_25) என்பவருக்கும் கடந்த 94_ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு பூஜா(வயது_4) என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆன புதிதிலிருந்தே வரதட்சணை அதிகம் கேட்டு அவரது கணவன் குடும்பத்தார் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2000_ம் ஆண்டு வாக்கில் ரூ.2 லட்சம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி, கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து, ரேகா தனது குழந்தை பூஜாவை தனது மடியில் கட்டியவாறு, கெரொசின் ஊற்றி பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, ஊட்டி நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, ஊட்டி செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த ஊட்டி செசன்சு கோர்ட்டு நீதிபதி பி.சண்முகம், மேற்குறிப்பிட்ட நஹர்லால் பாப்னா, நிர்மலா, மகேந்தர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். - nalayiny - 09-09-2003 மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை 75 நாளில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு சென்னை, செப்.9- மனைவியைக் கொன்ற கண வருக்கு சென்னை கோர்ட் டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தேன்மொழி சென்னை மேற்கு மாம்பலம் தனபால் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் தங்கம் என்ற வைர வன் (வயது34). இவரது மனைவி பெயர் தேன்மொழி(30). இவர் களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக் கும் ஏற்பட்ட தகராறில் தேன் மொழி அசோக் நகர் பெண் போலீஸ் நிலையத்தில், `என் கண வருடன் சேர்ந்து வாழ மாட் டேன்' என்று எழுதி கொடுத்து விட்டு வந்து விட்டார். இது வைரவனுக்கு ஆத்தி ரத்தை ஏற்படுத்தியது. தேன் மொழியை கத்தியால் குத்தி கொன்று விட்டார். கைதானார் குமரன் நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வைரவனை கைது செய்தனர். கடந்த ஜுன் மாதம் 22-ந் தேதி இந்த படுகொலை சம்பவம் நடந் தது. இந்த வழக்கு விசாரணை சென்னை 1-வது விரைவு கோர்ட்டில் நடந்தது. ஆயுள் தண்டனை நேற்று மாலை இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கொலையாளி வைரவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தர விட்டார். இந்த வழக்கில் 5 நாளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டதாகவும், 75 நாளில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ள தாகவும் போலீசார் தெரிவித்த னர். - Kanani - 09-09-2003 இப்படி விசித்திரமான நாட்டில் நடைபெறும் விசித்திரச் செய்திகளுக்கு நன்றி - Mathivathanan - 09-09-2003 Kanani Wrote:இப்படி விசித்திரமான நாட்டில் நடைபெறும் விசித்திரச் செய்திகளுக்கு நன்றிஎங்கோ மழைபெய்ய இங்கு குடை பிடிக்கிறார்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 09-09-2003 அதுதான் பெண்ணியம் தாத்ஸ்....இப்பிடிக் கேட்கக்கூடாது ..
- Mullai - 09-09-2003 [quote]Mathivathanan[/color] எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதைதான். உங்களுக்கு எங்கே புரியப் போகிறது? |