![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- veera - 09-03-2003 <b>Mathivathanan</b>, Quote:சமுதாயத்துக்குப் பெண்கள் தேவையென்று சொல்லுங்கள்.. பெண்களை மிருகங்களாக மாற்றாதீர்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!: - Paranee - 09-03-2003 தாத்தா பெண்களை மிருகங்களா நாங்கள்தானே மாற்றுகின்றோம். Mathivathanan Wrote:nalayiny Wrote:ஒரு சிலர் இப்படி முனகத்தான் செய்வார்கள் பெண்ணியத்தின் தேவை அறியாது அதன் தார்ப்பரியமறியாது அதை கொச்சைப்படுத்துவோர். இருக்கத்தான் செய்வார்கள்.களத்துக்குப் பெண்ணியம் தேவையென்று சொல்லுங்கள்.. சமுதாயத்துக்குப் பெண்கள் தேவையென்று சொல்லுங்கள்.. பெண்களை மிருகங்களாக மாற்றாதீர்கள்.. பெண்களை பெண்களாக இருக்கவிடுங்கள்.. <!--emo& - Mathivathanan - 09-03-2003 Karavai Paranee Wrote:தாத்தா பெண்களை மிருகங்களா நாங்கள்தானே மாற்றுகின்றோம்.<span style='font-size:25pt;line-height:100%'>களத்துக்குப் பெண்ணியம் தேவையென்று சொல்லுங்கள்.. </span> - veera - 09-03-2003 <b>Karavai Paranee</b>, Quote:பெண்களை மிருகங்களா நாங்கள்தானே மாற்றுகின்றோம் வித்தியாசமான சிந்தனை தான்.ஆனால் யதார்த்தத்தில் சறுக்கல் நிலையை அடைகின்றது.நாம் மிருகம் என்று குறிப்பிடுவது எது ? - nalayiny - 09-03-2003 பெண்ணியம் பற்றிய புரிதல் குறைவானவர்கள் அதன் உண்மைத்தன்மைகளை திரிவுபடுத்தி அறிந்து வைத்திருப்பவர்கள் பெண்ணியம் என்றால் அரைகுறையாகத்திரிவது ஆணை மிதிப்பது என தெரிந்து வைத்திருப்பவர்களிற்கு எது சொன்னாலும் புரியவே புரியாது.
- veera - 09-03-2003 அது சரி பெண்ணியம் என்றாலே இன்று ஏதோ விலைப்பொருளாகி விட்டது தானே? பெண்களே அதனை ஏதோ அன்னியமாக கருதுகிறார்கள்.உண்மையான பெண்ணிய உணர்வுகள் பெண்களிடத்தில் தான் முதலில் வரவேண்டும். - nalayiny - 09-03-2003 பெண்ணிய உணர்வு பெண்ணிடத்தில் வரவேண்டுமாயின் குழந்தை வளற்பில் இருந்து ஊட்டப்பட வேண்டிய ஒன்று. அல்லது போனால் புரட்சி ஒன்று அந்த சமூகத்தில் ஏற்படவேண்டும். - veera - 09-03-2003 புரட்சியொன்று பெண்கள் சமுதாயத்தில் அதுவும் நம்மவர் மத்தியில் நடப்பதென்றால் அது இந்த யுகத்தில் நடக்காததொன்று.ஆண்களின் அடக்கு முறைகளுக்கு சமனக்கு சமமாக தாழ்வு மனப்பாண்மையும் இருக்கிறதே - nalayiny - 09-03-2003 இன்றும் கூட ஆண்குழந்தைகளை ஒரு மாதிரியும் பெண்குழந்தைகளை அடக்கி உறுக்கி வளற்பதையும் தினம் தினம் காணக் கூடியதாக உள்ளதே. பயந்த சுபாவத்தை பெண்குழந்தைகளிடம் திணித்து வருகிறார்கள். இவற்றின் வெடிப்பாக கூட இருக்கலாம் பல பெண்கள் ஆண்களை வதைத்தெடுப்பது. ( ஆண்கள் அழுகிறார்களே தம்மை பெண்கள் வதைக்கிறார்கள் என. .குழந்தைப்பருவ மன உழைச்சலின் உச்சமாக இது இருக்கலாம் ஊகமே அன்றி முடிந்த முடிபல்ல.) இதன் பயம் தான் பெண்ணியக்கருத்துக்களை எழுதிவரும் பெண் எழுத்தாளரை கொச்சைப்படுத்தும் ஒரு சில ஆண்களின் தன்மைக்கும் காரணமாக இருக்கலாம். - nalayiny - 09-03-2003 எமது போராட்டம் கூட பெண்களை போராட வைத்து பல செயற்கரிய செயல்களை செய்ய வைத்துள்ளதை அறிந்து பிரமிக்க வைக்கிறதே.இதைக் கூட ஒரு புரட்சியாகவே பாக்க முயல்கிறேன். - veera - 09-03-2003 குழந்தை வளர்ப்பிலே தகப்பனை விட தாயே கூடுதல் பங்கு வகிப்பதை நடைமுறை உலகம் காட்டி நிற்கிறது.இதில் எவ்வகையில் அவர்கள் அழுத்தம் இருக்கிறது என்பது சற்று முரணாணனது தான்.எனினும் பெண் என்ற வரையறைக்குள் வளர்ந்த தாயின் பாதிப்புக்கள் தான் கூடுதலாக இருக்கப்போகின்றது.எனவே தாயின் வாழ்க்கை முறையே சேயின் வளர்ப்பிலே குறிப்பாக பெண்பிள்ளைகளின் வளர்ப்பிலே பாதிப்பை ஏற்படுத்துகின்றது. - veera - 09-03-2003 நிச்சயமாக இது பெண்களின் மனவலிமையைப் பலப்படுத்துகிறது.வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் என்ற கட்டத்தில் பெண்களுக்கு மனவலிமை தேவை.அதில் எமது பெண்போராளிகள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.நடைமுறை வாழ்க்கையில் உண்மைகளை உணரப் பெண்கள் தயங்கி நிற்பது தான் உங்கள் போன்ற பெண்ணிய வாதிகளின் போராட்டங்களுக்குப் பின்னடைவாக இருக்கின்றது என்று கருதலாமா? - nalayiny - 09-03-2003 உண்மைதான் . அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூக அக்கறை உடையோரின் முக்கிய பங்காகிறது. குழந்தைகளின் உண்மையான உணர்வுகளை தாராளமாக அவர்களுடன் உரையாடலை வளற்பதற் கூடாக வெளிக்கொணர ஒவ்வொருபெற்றோரும் பின்னிற்க கூடாது. அதட்டல் வாயடைக்க செய்தல் தவிற்கப்படவேண்டியதொன்று. அவர்களிற்கான சிந்தனை செயல்களை ஊக்கு வித்து அதன் சரி கிழைகளை சொலஇலி திருத்தவேண்டியவர்களாக உள்ளொம். அத்தகைய வளற்பில் தாழ்வு மனப்பான்மைக்கு இடமேது? - veera - 09-03-2003 எந்தப்பாதையுமே கரடு முரடானது தான் எனினும் முயற்சிகளுக்கு ஒருக்கால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும்.அது மாத்திரமின்றி தமது உண்மையான சுதந்திரம் என்பது எது என்பதைப் பெண்களும், தமது வரையறை எது என்பதை ஆண்களும் உணர்ந்து கொள்ளும் போது முயற்சிகள் பலனளிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். - nalayiny - 09-03-2003 சில பெண்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் சில பெண்கள் சிந்தித்தும் அவர்களிற்கான தடைகளாக குடும்ப அங்கத்துவ ஆண்கள் திகழ்கிறார்கள். சில பெண்களிற்கு தெரிந்தும் தம் நிலை உணர்ந்தும் கணவனின் உழைப்பில் வாழ்வது பிடிக்கிறது. சில பெண்களிடம் இத்தகைய சிந்தனைகள் போய் சேருவதில்லை. சிலருக்கு இப்படி எல்லாம் முடியுமா என கருதுகின்ற மனப்பாங்கு. பின்னடைவு என ஒரு போதும் சொல்லி விட முடியாது .காலம் காலமான அடக்குமுறை ஆதிக்கம் தாழ்வுமனப்பான்மை போன்ற வற்றை உதறி எறிந்து முன்னேறுவது என்பதை கால இடைவெளிகள் தான் உணர்த்தும். veera Wrote:நிச்சயமாக இது பெண்களின் மனவலிமையைப் பலப்படுத்துகிறது.வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் என்ற கட்டத்தில் பெண்களுக்கு மனவலிமை தேவை.அதில் எமது பெண்போராளிகள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.நடைமுறை வாழ்க்கையில் உண்மைகளை உணரப் பெண்கள் தயங்கி நிற்பது தான் உங்கள் போன்ற பெண்ணிய வாதிகளின் போராட்டங்களுக்குப் பின்னடைவாக இருக்கின்றது என்று கருதலாமா? - veera - 09-03-2003 கால காலமாக பெண்கள் சமுதாயம் ஒருவகையான சுதந்திரத்தை தாமாகவே இழந்து வந்தது.அதனை சரியான முறையில் ஆண்கள் உபயோகித்ததனால் பெண்களுக்கு பல வரையறைகளைத் தாண்ட முடியாத சுூழ்நிலைகள் உருவானது.எனினும் காலத்தின் மாற்றத்தினால் பெண்களுக்காக ஒருவகை சுதந்திரம் உருவாகி வருகிறது.அதை அவர்களே உணர மறுக்கும் போது ஆண்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே தயக்க நிலையும் தாழ்வு மனப்பாண்மையும் து}க்கியெறியப்படும் வரை பெண்ணிய வாதிகளின் போராட்டங்கள் ஓரக்கண்களாலேயே ஓரங்கட்டப்படும். - nalayiny - 09-03-2003 அப்படி சொல்ல முடியாது . இன்றய பெருகிவரும் பெண் எழுத்தாளரே இதற்கு சான்று. - Paranee - 09-03-2003 மிருகங்களை எப்படி கையாள்கின்றோமோ அப்படித்தான.......... veera Wrote:<b>Karavai Paranee</b>, - Mathivathanan - 09-03-2003 nalayiny Wrote:இன்றும் கூட ஆண்குழந்தைகளை ஒரு மாதிரியும் பெண்குழந்தைகளை அடக்கி உறுக்கி வளற்பதையும் தினம் தினம் காணக் கூடியதாக உள்ளதே. பயந்த சுபாவத்தை பெண்குழந்தைகளிடம் திணித்து வருகிறார்கள். இவற்றின் வெடிப்பாக கூட இருக்கலாம் பல பெண்கள் ஆண்களை வதைத்தெடுப்பது. ( ஆண்கள் அழுகிறார்களே தம்மை பெண்கள் வதைக்கிறார்கள் என. .குழந்தைப்பருவ மன உழைச்சலின் உச்சமாக இது இருக்கலாம் ஊகமே அன்றி முடிந்த முடிபல்ல.)நளாயினி சட்டங்கள் அத்தனையும் பெண்களுக்குச் சார்பாகஇருக்கின்றனவே தவிர ஆண்களுக்குச் சார்பாக இல்லை.. ஆண் ஒரு குற்றச்சாட்டுடன் போனால் ஏளனமாகப் பார்க்கும் சமுதாயத்துள்.. மெல்லவும் முடியாமல் விழுங்கவும்முடியாமல் சாக்கடைகள் வெளியே வராமல் பாதுகாப்பது ஆண்களே தவிர பெண்களல்ல.. சிறியதை பெரிதுபடுத்தி கூக்குரலிட்டு ஊர்கூட்டி வேடிக்ககையாக்கி வயிறு வளர்ப்பது பெண்கள்தான் ஆண்களல்ல.. பிள்ளைகளற்ற குடும்பங்களில்.. பெண்களின் அடக்குமூறையிலிருந்து வெளியேறி.. வேறுபெண்iணுடன் குடித்தனம் நடாத்தவும்.. அதைசாதாரணமான ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள பெண்களும் இல்லாமலில்லை.. எல்லாம் முடிந்தபின்பு.. மனம்வருந்தும் பெண்களும் இல்லாமலில்லை.. தற்போது போகிறபோக்கில் நமது ஆண்கள் பிள்ளைகள் இருக்கத்தக்கதாக வேறு பெண்களுடன் போய் வசிக்கும் காலம் வெகுதூரத்திலில்லை.. இதுதான் சமுதாய முன்னேற்றம் என நமது பெண்ணியம் சொல்லுமானால்.. நமது வாழ்க்கைமுறையை தேடிவரும் மேலைத்தேய உயர்பதவி நாயகர்களை என்னவென்பது.. பிறைவேற்.. பள்ளிகளுக்கு கறுப்புத்தலையுடன்பொதுநிற.. வெள்ளைப்பிள்ளைகள் கொண்டுவரும் ஆசியப் பெண்களின் இரகசியம் உங்களுக்கு எங்கு தெரியும்.. பெண்ணியம் பேச மட்டும்தான் தெரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-03-2003 nalayiny Wrote:எமது போராட்டம் கூட பெண்களை போராட வைத்து பல செயற்கரிய செயல்களை செய்ய வைத்துள்ளதை அறிந்து பிரமிக்க வைக்கிறதே.இதைக் கூட ஒரு புரட்சியாகவே பாக்க முயல்கிறேன்.அது புரட்சியல்ல.. அழிவு.. :oops: :oops: :oops: |