Yarl Forum
பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......) (/showthread.php?tid=8381)

Pages: 1 2 3 4 5 6 7


- Paranee - 08-19-2003

தாயிடமும் மனைவியிடமும் எல்லா உண்மைகளையும் சொல்லிவையுங்கள் என்று சொல்கின்றீர்கள். நன்றி



AJeevan Wrote:
sOliyAn Wrote:ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாள் என்று எழுதினால்.. அதெப்படி பெண்களைமட்டும் வர்ணிக்கலாம் என சண்டைக்க வாற காலமுங்கோ?

பெண்மைக்கு மறு பெயர் அழகு
தாய்மைக்கு மறு பெயர் அன்பு

[color=blue]அன்பானவர்களிடம் உண்மையையும்
உண்மையானவர்களிடம் அன்பையும்
தாராளமாக வெளிப்படுத



- Paranee - 08-19-2003

வரும் வழியில் பனிமழையில்
பருவநிலா மட்டும் நனையவில்லை
இந்தவரிகளை கேட்கும்போது நானும் நனைந்துகொள்கின்றேன்.
அருமையான கற்பனை

நன்றி சந்திரவதனா அக்கா

[quote=Chandravathanaa]<b>
வரும் வழியில் பனிமழையில்..
பருவ நிலா தினம் நனையும்..
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்..
வானவீதியில் மேக ஊர்வலம்..
காணும் போதிலே ஆறுதல் தரும்..

முகிலினங்கள் அலைகிறதே..
முகவரிகள் தொலைந்தனவோ..
முகவரிகள் தவறியதால்..
அழுதிடுமோ அது மழையோ..</b>

<b>இந்த அழகிய கற்பனைக்குச் சொந்தக் காரன் கவிஞர் வைரமுத்து என்று தெரிந்தும்
தவறுதலாக கண்ணதாசன் என எழுதி விட்டேன்</b>.

<b>தவறைச் சுட்டிக் காட்டிய முல்லைக்கு நன்றி</b>.


- sethu - 08-19-2003

தரமான கவிதை சுப்பராக இருக்கு


- AJeevan - 08-20-2003

<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->ஆண் அழகுப்போட்டிக்கு வேறு பெயர் சொல்லுங்கோ.. ப்ளீஸ்..!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நண்பா,

உங்கள் சந்தேகத்தை தருமியிடம் கேட்டேன்.

ஆணுக்கு அறிவழகன்(+போட்டி) என்கிறார்.

ஆணால்
பல தோழியரிடம் வினவினேன்.
பல தரப்பட்ட விடைகளை மனம் திறந்து பகிர்ந்தார்கள்.
இதோ ஒரு சில மட்டும்,.................(தணிக்கைக்குட்பட்டு)

1.அன்பழகன்
2.அறிவழகன்
3.கட்டழகன்
4.மனம் கவர்ந்தவன்
5.மன்னவன்
6.இளவரசன்
7.குமரேசன்
- (-போட்டி)
இப்படி சில தொடர்கிறது.

சந்தேகம் தீர்ந்திருந்தால் பரிசைத் தரலாம். அல்லது பரிசு பெறுமதியில்லையேல் நீங்களே வைத்துக் கொள்ளலாம்................


- Paranee - 08-20-2003

போச்சு
இனி இந்தப்பெயரை எல்லாம் பிள்ளைகளிற்கு வைக்கத்தொடங்கிவிடுவார்கள் (எற்கனவே இப்படி இருக்கின்றுது)


- Paranee - 08-20-2003

உதயா என்ற திரைப்படத்தில் ஒரு பாடல்

சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே கோடி செல்வம் எதற்கு
நெற்றி சுழுக்கும் போதிலும் பதறும் நண்பனே உறவு போதும் எனக்கு.............

அருமையான வரிகள்


- AJeevan - 08-20-2003

[b]Victone Tamil TV

மற்றுமொரு இலவச தமிழ் தொலைக் காட்சி உதயம்.
தமிழ் மொழி தவிர பங்கரா, உருது , ஹிந்தி மற்றும் சில மொழிகள் எனத் தெரிகிறது..............................

Victone Tamil

Frequency : 10950 MHz
Symbol rate: 27500
Polarity : V
Fec. 3/4


- sOliyAn - 08-20-2003

அஜீவன்.. அட.. அட.. அட.. 'ஆணழகன் போட்டி" என்ற சொல்லுக்கு வேறு சொல் கேட்டால்.. பெயரை வைத்து விளையாடிவிட்டீர்களா? பலே.. பலே.. நிழல் யுத்தத்திலை எந்த நிழல் தோற்றது என்றோ.. எச்சில் போர்வையை சலவை செய்யலாமா என்றோ கேட்கவே மாட்டேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Chandravathanaa - 08-21-2003

யூலிகணபதி யில் பாலசுப்ரமணியம்

[b]எனக்குப் பிடித்த பாடல்அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்;
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்.[/color]


- Paranee - 08-22-2003

அதெப்படி எனக்குப்பிடித்த பாடல் உங்களிற்கும் பிடிக்கின்றது. அருமையான பாடல் இதேபாடல் பெண் குரலிலும் ஒலித்திருக்கின்றது. தினமும் நான் கேட்கும் பாடல்களில் இதுவும் ஓன்றுதான்.


[quote=Chandravathanaa]யூலிகணபதி யில் பாலசுப்ரமணியம்

[b]எனக்குப் பிடித்த பாடல்அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்;
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்.[/color]


- Chandravathanaa - 08-22-2003

Karavai Paranee Wrote:அதெப்படி எனக்குப்பிடித்த பாடல் உங்களிற்கும் பிடிக்கின்றது. அருமையான பாடல் இதேபாடல் பெண் குரலிலும் ஒலித்திருக்கின்றது. தினமும் நான் கேட்கும் பாடல்களில் இதுவும் ஓன்றுதான்.

நானும் பல தடவைகள் கேட்டு விட்டேன்.
கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்.


- tamilchellam - 08-24-2003

ரிதம் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்து இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

கார்காலம் அழைக்கும்போது ஒளிந்து கொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய, நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என் உருவம் கண்டு பிடிப்பாயா
புூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க
புூமிக்கு மேலே வான் உள்ள வரையில் காதலும் வாழ்க

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப் போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்து கொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் கவிதையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறுபிள்ளையாய்ச் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னாய் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகளானால் பிழையா பிழையா

நட்புடன்,
தமிழ்செல்லம்


- Chandravathanaa - 08-28-2003

[b]நன்றி தமிழ்செல்லம்.

கேட்பதற்கு நல்ல இனிமையான பாடல்.

ரிதம் படப் பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையான பாடல்கள்.

இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்துமே பஞ்சபுூதங்களை அடிப்படையாகக் கொண்டு
அதாவது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பவற்றோடு இணைத்து எழுதப் பட்டதாக ஞாபகம்.
வெறுமே ஞாபகம்தான்.
அல்லது அது வேறு படத்திலோ தெரியவில்லை.

தெரிந்தால் அவைகளையும் தாருங்கள்.


- tamilchellam - 08-28-2003

வணக்கம்,
ரிதம் படத்தில் இடம்பெறும் மற்ற பாடல்களை அறியும் பட்சத்தில் தெரிவிப்பேன்.
நன்றி.

நட்புடன்,
தமிழ்செல்லம்


- Mathivathanan - 08-28-2003

tamilchellam Wrote:வணக்கம்,
ரிதம் படத்தில் இடம்பெறும் மற்ற பாடல்களை அறியும் பட்சத்தில் தெரிவிப்பேன்.
நன்றி.

நட்புடன்,
தமிழ்செல்லம்
நன்றி செல்லம்.. கொஞசம் பார்த்து..
சினிமா தமிழ் அல்ல எனச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..
ஏற்கெனவே அத்திவாரம் போட்டு
நேற்று வானொலியில் சண்டையும் பிடித்தார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilchellam - 08-28-2003

தகவலுக்கு நன்றி.....

நட்புடன்,
தமிழ்செல்லம்


- Kanani - 08-28-2003

Cinema - இது தமிழ் இல்லைத்தானே தாத்ஸ் :wink:


- Mathivathanan - 08-28-2003

Kanani Wrote:Cinema - இது தமிழ் இல்லைத்தானே தாத்ஸ்
அதுசரி குளத்துக்குள்ளை நிண்டுகொண்டு தண்ணீரில்லையெண்டு சொல்லுறமாதிரியிருக்கு.. உங்கள் கதையும்..


- Kanani - 08-28-2003

ஓமோம் தண்ணீர் இல்லைத்தான் முந்தி நல்ல குடி தண்ணி இருந்தது இப்ப எல்லாம் வற்றி வெறும் சேறும் சகதியுமாக் கிடக்கு குளம் :wink:


- Mathivathanan - 08-28-2003

Kanani Wrote:ஓமோம் தண்ணீர் இல்லைத்தான் முந்தி நல்ல குடி தண்ணி இருந்தது இப்ப எல்லாம் வற்றி வெறும் சேறும் சகதியுமாக் கிடக்கு குளம்
தண்ணீர் இருந்தால்த்தானே அது குளம்.. அல்லாமல் வேறு ஏதாவது இருந்தால் நீங்கள் சொல்லுவதுபோன்று சேறு.. சகதி.. யென சில சொற்கரளச் சேர்ப்பார்களாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->