படித்ததில் பிடித்தவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: படித்ததில் பிடித்தவை (/showthread.php?tid=8081) |
- Mullai - 09-29-2003 சூர்ப்பனகை ஒரு முத்தத்தை வரவழைக்க முடியாமல் போனதால் யுத்தத்தை வரவழைத்தவள் -மு.மேத்தா - AJeevan - 09-29-2003 [quote=Mullai] சூர்ப்பனகை ஒரு முத்தத்தை வரவழைக்க முடியாமல் போனதால் யுத்தத்தை வரவழைத்தவள் -மு.மேத்தா  [b]யுத்தம் அணைப்பால் பெற முடியாததை - அவன் கை பட்ட அம்பால் (அம்பு) பெறுவதற்காகத்தானா - இந்த யுத்தம் அஜீவன் - Mullai - 10-01-2003  கடைசி ஆசை! கண்களால் என்னைக் கைதியாக்கிய கன்னியே! கல்யாண வேள்வியில் ஆயுள் தண்டனைக்காக ஆசையோடு காத்திருந்தேன்! காதல் தோல்வியாக மரணதண்டனை விதித்துவிட்டாயே! இந்தக் காதல் கைதியின் கடைசி ஆசையையாவது நிறைவேற்றிவிடு.... என் கல்லறை மீதாவது வந்து நீ முத்தமிடு.... - ராஜராஜன் - Mullai - 10-01-2003 ![]() [size=18]மேற்கு செவ்வானம் கீழே இறங்கும்போது வழுக்கி விழுந்து மலைமீது உடல் மோதிச் சிதறியதால் தெறித்த சூரியனின் ரத்தம் -காவிரிராஜா - இளைஞன் - 10-01-2003 முல்லை அவர்கள் தான் படித்துப் பிடித்ததை இங்கிணைத்து, எம்மையும் பிடித்துப் படிக்க வைக்கிறார். மிக்க மகிழ்ச்சி... தொடர்க... - Alai - 10-01-2003 முகங்கள். ======= அடிக்கடி அணிந்து கொண்டதால் நைந்து கிழிந்த முகங்கள்- அணியாமல் விடப்பட்டதால் மக்கிக் கிழிந்த முகங்கள்- உள்முகத்தை மறைத்து எந்நேரமும் ஒரே பாவம் காட்டும் முகமூடி முகங்கள்- மூடிமறைத்தும் பிதுங்கித் தெரியும் உண்மை முகங்கள்- கோபம் குரூரம் வக்கிரம் இன்னும் பெயரற்ற ஆயுதங்களால் குதறி ஓரமாய்க் கிடக்கும் இரண முகங்கள்- இன்றைய முகத்தடவலிலோ திட்டுத் திட்டாய் நேற்றைய முகங்கள். -ஜோதி ராமலிங்கம்- - Mullai - 10-03-2003 ![]() அடக்கம் மகளே! மாப்பிள்ளைப் பையன் அடக்கமாய் பெரியோரிடம் வாய் பொத்திப் பேசியதெல்லாம்..... கை எடுத்ததும்தானே தெரிந்தது- போதையை மறைப்பதற்கென்று - சொக்கலிங்கம் - Mullai - 10-03-2003 ![]() வரவேற்பு விரிந்த மலர்கள் வரவேற்பு இலை விரித்துப் பந்தி வைப்பு யாருக்கு விருந்து தாமரைக்குளத்தில்? -ரமாராமநாதன் - Paranee - 10-03-2003 நன்றி முல்லைப்பாட்டி இதுவரை நான் காணதா கவிதைகளை எல்லாம் அள்ளி அள்ளி தந்து எமக்கு இன்பம் தருகின்றீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பணியை - Mullai - 10-04-2003 அம்மா அப்பா ஆனபின்தான் அனுபவம் விளங்கும் - பெற்ற அன்னை தந்தை செய்வதெல்லாம் அறிவுக்குத் துலங்கும்! சும்மா சொன்னாப் புரிவதில்லை இந்தத் தத்துவம் - இதை சொல்லாமலே புரிய வைக்கும் வாழ்க்கைத் தத்துவம். அமரர் ஈழத்து ரத்தினம். - Mullai - 10-04-2003 ![]() ஏர் பிடித்த கைகளிலே போர் கொடுத்த ஆயுதமோ நேர் நிமிர்ந்த மார்பினிலே யார் பதித்த குண்டுகளோ சஞ்சீவ்காந்த் - Paranee - 10-04-2003 பாட்டி எங்கிருந்து சுட்டுக்கொள்கின்றீர்கள். இந்த கவிகளை சொல்லித்தாருங்கள் முழுமையாகவே படித்துக்கொள்கின்றேன். இப்படி துளித்துளியாய் தந்து அவாவை அதிகரிக்கின்றீர்களே நன்றி பாட்டி - Mullai - 10-05-2003 [quote]Karavai Paranee[/color] எங்கிருந்து சுட்டுக்கொள்கின்றீர்கள். பரணி, இவை எண்பதுகளில் வந்த கவிதைகள். வாசித்து பிடித்ததை குறித்து வைத்திருக்கின்றேன். அவ்வளவே. கடைசியாகத்தந்த இரண்டு பாடல்களின் வரிகளை பழைய யாழ் களத்தில் இருந்து அள்ளி வந்தேன் http://www.yarl.com/kalam/viewtopic.php?t=522 - Mullai - 10-05-2003 ![]() முகில்கள் மீது நெருப்பு, தனது சேதியை எழுதியாயிற்று. இனியும் யார் காத்துள்ளனர்? சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக! -சேரன் - Mullai - 10-05-2003 ![]() இந்த வண்ணத்துப் பூச்சி ஏன் விசிறிக்கொண்டிருக்கிறது? பூக்களுக்கு வியர்க்கிறதோ? -வண்ணை வளவன் - Paranee - 10-05-2003 வாவ் மிக மிக அழகானதொரு கவிதை நன்றி நன்றி பாட்டி [quote=Mullai] ![]() இந்த வண்ணத்துப் பூச்சி ஏன் விசிறிக்கொண்டிருக்கிறது? பூக்களுக்கு வியர்க்கிறதோ? -வண்ணை வளவன் - Mullai - 10-06-2003 ![]() பூமியே, மென்மையாயிரு! சில நேரங்களில் அவள் செருப்பில்லாமல் நடக்கிறாள் செங்கோட்டை ரமாவாணன் - Mullai - 10-06-2003 ![]() இரவு எனக்கு ரொம்பவே பிடிக்கின்றது உனது நினைவுகள் உனது கனவுகள் உன்னைப்பற்றிய நிகழ்வுகள் எல்லாமே அரங்கேறும் காலம் அல்லவா ? ந.பரணீதரன் - Paranee - 10-06-2003 பாட்டி நன்றி நன்றி கவிதைகளைவிட உங்கள் படங்கள் மிக மிக அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன. [quote=Mullai] ![]() இரவு எனக்கு ரொம்பவே பிடிக்கின்றது உனது நினைவுகள் உனது கனவுகள் உன்னைப்பற்றிய நிகழ்வுகள் எல்லாமே அரங்கேறும் காலம் அல்லவா ? ந.பரணீதரன் - AJeevan - 10-06-2003 [quote=Mullai] ![]() இந்த வண்ணத்துப் பூச்சி ஏன் விசிறிக்கொண்டிருக்கிறது? பூக்களுக்கு வியர்க்கிறதோ? -வண்ணை வளவன் வியர்த்தது பூவுக்கல்ல வானத்து முகில்களுக்கு |