Yarl Forum
மகேஸ்வரன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மகேஸ்வரன் (/showthread.php?tid=7966)

Pages: 1 2 3 4


- P.S.Seelan - 10-23-2003

தணிகை அவர்களே எங்கள் காலத்தில் தொங்கித் தான் திரியவேண்டி இருந்தது. ஏனேனில் நீங்கள் எழுதியது போல் இருக்கவில்லை. நான் உங்களை தொங்கித் திரிபவராக எழுதவில்லை. இப்படி ஒரு அசிங்கம் நடக்கின்றதே அதுவும் புனிதமான ஒரு இடத்தில் இப்படியான ஒரு சமூதாயச் சீர்கேடு நடக்கின்றதே என்று நினைத்து பக்கத்திலிருந்த வி.பு காரியலயத்திலோ அல்லது கலாச்சாரம் பேணும் குழுவிடமாவது முறையிட்டிருக்கலாமல்லவா? அதை விடுத்து அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்ந்தால் அது எமது முகத்தில் தான் வந்து விழும். ஒவ்வோருவரும் தவறுகளை பார்த்து விட்டு சும்மாயிருந்தால் அவை திருந்துவது, திருத்துவது எப்போது. வேறு ஒரு இடத்தில் என்றால் பரவாயில்லை. தாங்கள் குறிப்பிட்ட இடம் ஒரு சமுகத்தின் கலாச்சார மையமாகத் திகழும் ஒரு புனித இடம் என்பதனாலேயே வேதனைப்பட்டு எழுதினேன்.

அன்புடன்
சீலன்.


- தணிக்கை - 10-23-2003

ஒன்றுமட்டும் உங்களுக்கு சொல்கிறேன் வி.பு உறுப்பினர்களுக்கு எல்லாம் தெரியும் ஆனால் அவர்களால் அங்கு எதுவும் வெளிப்படையாக செய்யமுடியாது காரனம் சுhழல் அப்படி அங்கு இருக்கு.

அவர்கள் தங்கள் அரசியலை மேற்கொள்கிறார்கள் ஆனால் தவறுகளை தன்டிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு குறைவு காரனம் வெளிப்படையாக சொல்லப்போனால்.

வி.பு வெளியேறும்போது அந்த பிள்ளைக்கு 8 வயது அந்தப்பிள்ளை இன்று 16 வயதை அடைந்துவிட்டது ஆனால் அந்த பிள்ளைகளுக்கு வி.பு வை பற்றி முற்றுமுளுதாக தெரியாது அதற்கு ஆமி யை யும் அதன் சலுகைகளையும் தான் தெரியும் இதை வி.பு உறுப்பினர் ஒருவர் எனக்கு சொல்லி எனக்கு புரியவைத்தார்.

அதாவது அந்த 8 வருடம் இடைவெளி கொடுத்த சந்தர்ப்பங்கள்தான் இவை.

தொடரும்....................


- தணிக்கை - 10-23-2003

இந்த இடைவெளியில் உருவாகிய சுமார் 1 இலட்சத்திற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு வி.பு வைத்தெரியாது புரிகிறதா?
...தொடரும்.....................................


- தணிக்கை - 10-23-2003

பம்பலப்பிட்டிý கதிரேசன் மண்டபத்தில்இன்று தீபாவளிக் கொண்டாட்டம்

பிரதமர் ரணில் பிரதம அதிதி

இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள தேசிய தீபாவளி தினக் கொண்டாட்டங்கள் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டிý புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சர் தி.மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

தீபாவளி தினத்தையொட்டிý தபால் திணைக்களத்தினால் வெளியிடப்படும் சிறப்பு முத்திரையை மக்கள் தொடர்பால் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வெளியிட்டு வைப்பார்.

இவ்வைபவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ர் உட்பட பல அமைச்சர்கள், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அமைச்சின் அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தருகின்ற தமிழ்நாடு பேரூýர் ஆதீன இளைய பட்டம் தவத்திரு மருதாசலம் அடிýகளாரின் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளதுடன், அமைச்சின் செய்திமடல், சிவனொளி, இதழின் முதல் இதழ் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சியாக தமிழக வயலின் இசைமேதை குன்னக்குடிý வைத்தியநாதன் தமது குழுவினருடன் வழங்கும் வயலின் இசைக் கச்சேரியும் இடம்பெறவுள்ளது.


- yarl - 10-23-2003

<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/Ranil_Deepavali_2_18442_435.jpg' border='0' alt='user posted image'>


- தணிக்கை - 10-24-2003

அதுமட்டுமோ தீபவளியை தேசிய நிகள்வாக்கியாச்சாம் இலங்கையிலை.


- தணிக்கை - 10-24-2003

<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/Ranil_Deepavali_1.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/Ranil_Deepavali_6.jpg' border='0' alt='user posted image'>



<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/Ranil_Deepavali_7.jpg' border='0' alt='user posted image'>
JVP parliamentarians Chandrasekaran and Vijitha Herath
Tamilnet


- P.S.Seelan - 10-24-2003

அழகான நாடக மேடை நடிகர்களும அழககா உள்ளார்கள். என்ன ஏதாவது தேர்தல் கிட்ட வருகின்றதோ? நாளை மாகசங்கத்தினர் தீபாவளி பௌத்தர்களின் திருவிழா என்று சொல்லாமலிருந்தால் சரிதான். சிறீலங்காவிலும் ஈழத்திலும் தேனும் பாலும் ஓடுகின்றது. தீபாவளி கொண்டாடத் தான் வேண்டும். ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறதே!

அன்புடன்
சீலன்


- தணிக்கை - 11-19-2003

மகேஸ்வரன் சன்னதி தேர்கட்டி கொடுக்கிறார் பல மில்லியன ருhபா செலவில் வேலைகள் இன்று ஆரம்பமாகியது.
மகேஸ்வரனுக்கு எனது வாழ்த்துக்கள்.


- P.S.Seelan - 11-20-2003

ஆமாம் அது தான் இப்போது முக்கியம். பசியும் பட்டினியுமாக வீடு வாசல் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கே. படிக்க பள்ளிக்கூடம் இல்லை. சன்னதியான் தனக்கு தேர் கேட்டாரா? அந்தக் கடவுள் கூட இவர்களை மன்னிக்காது. என்ன சேது காற்று திசை மாறுது.

அன்புடன்
சீலன்


- தணிக்கை - 11-22-2003

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் மகேஸ்வரன் எச்சரிக்கை
ஜ யாழிலிருந்து எழின்மதி ஸ ஜ சனிக்கிழமை, 22 நவம்பர் 2003, 2:40 ஈழம் ஸ
யாழ். மக்களின் தேவைகளை நிறைவேற்றாக பட்சத்தில் எதிர்வரும் ஐனவரி முதலாம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதாக அமைச்சர் மகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்கு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லையென இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஐh மகேஸ்வரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமை தமிழ் மக்களுக்கு எவ்வகையிலும் பலனளிக்காது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு-கிழக்கின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக வரவு-செலவுத் திட்டத்தில் எவ்வித யோசனைகளும் முன்வைக்கவில்லையெனவும் அமைச்சர் மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் அவர் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் போது அவரது உரையை ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் ஒலிப்பதிவு செய்வதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக இரண்டு கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்ததன் காரணமாக அமைச்சர் மகேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்து விட்டதாக சபைத் தலைவராக செயற்பட்ட ரவீந்திர ரந்தெனிய சுட்டிக்காட்டினார்.

எனினும் வரவு-செலவுத் திட்டத்தை விமர்சித்து பேசிய அமைச்சர் மகேஸ்வரனுக்கு தமது நேரத்தை ஒதுக்கி கொடுப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

எவ்வாறாயினும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை விட மேலதிக நேரம் வழங்கப்பட மாட்டாதென ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இதன்படி அமைச்சர் மகேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்து விட்டதாக சபைக்குத் தலைமை தாங்கிய ரவீந்திர ரந்தெனி கூறியதையடுத்து சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன் காரணமாக சபை நடவடிக்கையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபைத் தலைவர் தீர்மானித்தார்.

சபை மீண்டும் கூடிய போது விவாதத்தில் தொடர்ந்து கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மகேஸ்வரன் வடக்கு-கிழக்கு மாகாண மக்களின் குறைகளை இந்த சபையில் எழுப்பவுதற்கு தமக்கு உரிமை இருப்பதாக கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவி தன்னைவிட்டு விலகிப் போனாலும் தமது மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் சேவையாற்ற போவதாக அமைச்சர் மகேஸ்வரன் கூறினார்.

யாழ்ப்பாண மக்களின் தேவைகள் நிறைவேற்றாத பட்சத்தில் எதிர்வரும் ஐனவரி முதலாம் திகதி முதல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் டிசம்பர் 31-ம் திகதி வரை அரசாங்கத்துக்கு தனது ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் 8 லட்சத்து 91 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தொடர்பாக வரவு-செலவுத் திட்டத்தில் எவ்வித நிவாரண யோசனையும் முன்வைக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

தான் ஐக்கிய தேசிய முன்னணியில் அமைச்சராக செயற்படுகின்ற போதிலும் யாழ். மக்கள் தொடர்பாகவே கூடுதலான அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களாக இந்த அரசாங்கம் யாழ். மக்களை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், வடக்கு-கிழக்கு மாகாணத்துக்கு வெளிநாடுகள் வழங்கிய உதவிகளை சில நபர்கள் மோசடி செய்துள்ளதாகவும் கூறினார்.


- P.S.Seelan - 11-22-2003

ஹாக..! யாழ் மக்கள் மீது எத்தனை அக்கரை என்ன ஏதாவது தேர்தல் வரப்போகின்றதா? அப்படியாவது அக்கரை காட்டட்டும்.

அன்புடன்
சீலன்


- சாமி - 11-22-2003

தேர்தலுக்கு முகேஸ்வரன் வெடி கொழுத்த தொடங்கிட்டார் போலிருக்கே.


- சாமி - 11-22-2003

மகேஸ்வர மகிமை!

நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி யிருக்கின்றார் அமைச்சர் மகேஸ்வரன்.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் சகவாழ்வு நெறிமுறை பிரச்சினைக்கு உள்ளாகி, அரசியல் நெருக்கடி உருவாகி, நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். பொதுத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் கிளம்பியபோதே இத்தகைய வாய்ச்சவடால் பரபரப்புகள் எதிர்பார்க்கப்பட்டவைதான். அவற்றை அரங்கேற்றுவதற்கு வாய்ப்புக் கிடைப்பதற்காகக் காலதாமதமாகியிருக்கின்றது. அவ்வளவே.

வடக்கு - கிழக்கு தமிழ்மக்களின் புனரமைப்புக்குப் பொறுப்பாக ஒரு தமிழரை நியமிக்கவில்லை. அமைச்சரவையில் இலங்கைத் தமிழர்ஒருவருக்குக்கூட இடமளிக்கவில்லை. - என்று அமைச்சர் மகேஸ்வரனின் குற்றச்சாட்டில் கூறப்பட்ட விடயங்கள் எவையும் புதியவை அல்ல. 2001 டிசெம்பர் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அமைச்சரவையை அமைத்தபோதே இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்டுவிட்ட அநீதிகள் அவை.

அப்போது அவற்றையெல்லாம் தாம் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்ததால்தான் பிரதமர் ரணிலின் அரசில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரேயொரு இலங்கைத் தமிழரான தமக்கு, பிச்சை போடுவதுபோல பிரதமர் ரணில் வழங்கிய அரைகுறை அமைச்சுப் பதவியை மகேஸ்வரன் ஏற்றுக்கொண்டார்.
அந்த அமைச்சுப் பதவியையேற்றுக் கொண்டால்தான் இந்து கலாசார அமைச்சு என்ற உயர்வுமிக்க மத அமைச்சின் கீழ் சாராயம் உற்பத்தி செய்யும் திக்கம் வடிசாலையையும் மீன் பிடித்தலோடு தொடர்புடைய வடகடல் நிறுவனத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை அவர் மேற்கொள்ள முடிந்தது. அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்ட சமயத்திலேயே - அப்போதே - இலங்கைத் தமிழருக்கு வேண்டுமென்றே அநீதி இழைக்கப்பட்டமை அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இதுவரை காலமும் பல தடவைகள் இப்பத்தியிலும் திருப்பித் திருப்பி அது சுட்டிக்காட்டப்பட்டும் வந்துள்ளது.

ஆனால், அமைச்சர் மகேஸ்வரன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. "அமைச்சர் பதவி" என்ற பந்தாவை - அது அரைகுறை அமைச்சர் பதவி என்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் - பாய்ந்து பிடித்துக்கொண்டார். இப் போது இரண்டு வருடம் கழித்து தேர்தல் மேகங்கள் சூழத் தொடங்கியதும் - அடுத்த தேர்தலில் தமது பிரதேசத்தில் ஆளும் தரப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான சூழ் நிலை, வாய்ப்பு குன்றி வருவதை உணர்ந்ததும் - ஆளும் தரப்பை உதறுவது போன்று புதுக்கதை, புருடா விடுகின்றார் அவர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அவர் இப் படித் திறந்த சோடாப் புட்டிபோல சீறி எழுவதும், அதே வேகத்தில் அடங்கிப் போவதும், அவரது இந்த இரண்டு, மூன்று வருட கால அரசியல் செயற்பாட்டில் ஒன்றும் புதுமை யான விடயங்கள் அல்ல.

நாடாளுமன்றத்தில் அதிர்வேட்டுக்களை முழங்குவதும், அரச நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் அதிரடிப் பாய்ச்சல் களை நடத்துவதும், திடீரெனப் போய் எதிர்த் தரப்பில் உள்ள ஜனாதிபதியைச் சந்தித்து, அவருடன் புகைப்படத் துக்கு போஸ் கொடுத்து, பின்னர் ஊடகங்களில் அவரை வானளாவப் புகழ்ந்து தனது கட்சித் தலைமையின் வயிற் றில் புளியைக் கரைப்பதும், இவ்வளவும் செய்துவிட்டு பின் னர் அரசுத் தலைமை சுண்டி எறியும் சலுகைகளை சுவீ கரித்ததும் அடங்கிப் போவதும் ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல.

கடைசியாக அவரது அமைச்சுக்குப் பிரதமர் ஒதுக்கிய பத்துக்கோடி ரூபாவோடு அடங்கிப்போயிருந்த அவர் அது முடிந்ததும் இப்போது திரும்பவும் திறந்த சோடாப் போத்த லாகியிருக்கின்றார். ஆனால், அவர் எழுப்பிய குற்றச்சாட்டுக்கள், சுட்டிக்காட் டிய விடயங்கள் எவையும் மறுக்கத்தக்கவையல்ல. முற்றும் முழுதும் சரியானவை. ஒவ்வொரு இலங்கைத் தமிழனின தும் மனதில் உள்ளதையே அவர் பிரதிபலித்திருக்கின்றார். ஆனால், அவற்றைப் பிரதிபலிப்பவரும், பிரதிபலிக்கும் நேர மும், முறையும்தான் கொஞ்சம் இடிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதேசமயம் சிறுபான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் - அதுவும் அமைச்சர் நிலையில் இருப்பவர் ஒருவர் - தமக்குச் சரியெனப்பட்டதை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதற்கு அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டதும், கேவலமாக நடத்தப்பட்டதும், அச்சுறுத்தப்பட்டதும் சகிக்கமுடியாதவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. அது தனி அமைச்சர் மகேஸ்வரனுக்குச் செய்யப்பட்ட அநீதி அல்ல. முழுத் தமிழினத்துக்குமே இழைக்கப்பட்ட அநீதி உரிமை மீறல். இத்தகைய சவாலை அமைச்சர் மகேஸ்வரனுடன் சேர்ந்து எதிர்கொண்டு, முகங்கொடுத்துப் போராடி, தங்கள் உரிமையை நிலைநாட்ட முழுத்தமிழ் எம்.பிக்களும் மற்றும் சிறுபான்மையின எம்.பிக்களும் மக்களும் தயாராக வேண் டும். இது விடயத்தில் அன்றையதினம் உத்வேகத்தோடு நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட தமிழ் எம்.பிக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

தான் சார்ந்த அரசின் மீது தாமே குற்றச்சாட்டுக்களை அடுக்கி, அதற்கு சரியான முடிவை எடுப்பதற்குத் தாமே காலக்கெடுவையும் விதித்திருக்கும் அமைச்சர் மகேஸ்வரன் காலக்கெடு முடிவில் என்ன செய்வார்?
அரசியல் நெருக்கடி நிலவும் இச்சூழ்நிலையில் அரசியல் குழப்பங்கள் மேலும் இறுகி, தேர்தல் மேகங்கள் மேலும் சூழுமானால் அவரது முடிவு இதுதான் என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியும். இல்லையேல் பழைய குருடி கதவைத் திறவடி என்ற பல்லவியே மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

நன்றி: உதயன்

மகேசுக்கு அடிக்க சேதுக்கு வலிக்கும். வந்து புலம்புவார் பாருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- yarl - 11-23-2003

மகேஸ்வரன் போன்று ஸ்டண்ட் காட்டத்தெரிந்த தமிழ் அரசியல்வாதிகளும் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டும்.
முன்னவர்களபோல போராடாமல் வெளிநடப்பு செய்வதைவிட .


- தணிக்கை - 11-23-2003

தலைவர் சாமி அவர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
முதலில் எனக்கு அமைச்சர் மகேஸ்வரன் நன்பானானதிற்கு பின்வரும் காரனங்கள் இருக்கு.

1972 ஆன்டு தமிழ் விடுதலைகூத்தனி ஆரம்பிக்கப்பட்டு பல தலைவர்களை நாம் நினைவு கூறுகிறோம் ஆனால் மகேஸ்வரை இனி நினைவு கூறலாம்

ஏன் என்றால்?

முஸ்லீம்கள் அம்பாறையை தனி முஸ்லீம் பிரதேசமாக மாற்ற முற்பட்டமைபோல காரை நகரை தனி பிரதேச சபையாக மாற்றி தமிழர் பிரதேசத்தில் அரசியல் பாராளுமன்ற அங்கத்துவத்தை உயர்த்தியமை.

தமிழ்hகளுக்காக பாராளுமன்றில் குரல் கொடுத்து பாராளுமன்றத்தால் தன்டனை பெற்றமை வரலாற்றில் முதலாவது தமிழன்.

முதலாவதாக தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநால் வாழ்த்தை பாராளுமன்றில் பிரகடனப்படுத்தியமை.

யே வீ பி கட்சிஜக்கு பதிலடி கொடுத்தமை.

கல்லுன்டாய் வெளியில் வீடு கட்டி பொதுமக்களுக்கு கொடுத்தமை.

அனைத்து கோவில் களுக்கும் வாகனம் கொடுத்தமை.

மாவீரர் குடும்பங்களுக்கு 35 வீடமைப்புத்திட்டம் கடற்புலிகளின் பிரிவிற்கு.


வன்னி பிரதேச கிளிநொச்சி பிரதேச அரசியல் துறைக்கு பேருhந்து கொடுத்தமை.



யாழ் மாவட்டத்தில் 600 பேரை சமாதான நீதவானாக்கியமை.


ஈ பி டீ பி யின் அரசியல் பலத்தை யாழ்பானத்தில் அளித்தமை.


யாழ் பலகலைகழக மானவர்களுக்கு பேருhந்து கொடுத்தமை.


அனைத்து கோவில்களுக்கும் நிதி ஒதுக்கி அந்த நிதியை மக்களுக்கு வழங்கியமை.

யாழ் மாவட்ட அரசியல் துறைக்கு பல வசதிகளை செய்து கொடுத்தமை.


இன்னும் பல சொல்ல முடியாதவை இருக்கின்றது.

தேவை என்றால் தனிபட்ட தகவல் ஊடாக அனுப்புகிறேன்.

உதாரனமாக வன்னிக்குள் எங்கு எல்லாம் ஓம் நமசிவாய படம் போட்டு ஓடுதோ அது எல்லாம் மகேஸ்வரனை கும்பிடவேன்டியதுதான் புரிகிறதா.


- தணிக்கை - 11-23-2003

தீபாவளியை தேசிய தினமாக்கியமை.

உலக இந்துமானாடு நடாத்தியமை.

சாவகச்சேரிக்கு மின்சாரம் கொடுத்தமை.

வல்லிபுர கோவில் பகுதியில் பாரிய மண்டபங்கள் அமைத்தமை.

சன்னதி தேரை கட்டி கொடுத்தமை.

பாடசாலை கோவில்களை கட்டி கொடுத்தமை.

தான் சார்ந்த கட்சியை எதிர்கின்றமை.

தனது வியாபார லாபத்தில் ஒரு பகுதியை போராட்டத்திற்கு ஒதுக்குகின்றமை.

மேலும் பலர் சொல்ல முடியாதவர்களுக்கு வாகனங்கள் கொடுத்தமை.

மேலும் பலருக்கு அரசியல் தலைமைகளின் எதிர்கால திட்டங்களை தகவல்களாக வளங்கி வருகின்றமை.

பல ஊடுவல்களுக்கு வளி வகுத்தமை.


- தணிக்கை - 11-23-2003

கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- தணிக்கை - 11-23-2003

ஏன் இதை எளுதினேன் என புரிந்தால் சரி இப்படி பல பட்டியல் இருக்கு இப்ப சொல்லமுடியாத பட்டியல்கள்.


- Paranee - 11-23-2003

எல்லாம் அவன் செயல்
(வலக்கை கொடுப்பதை இடக்கை அறிவதில்லை)