Yarl Forum
கைக்கூ கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கைக்கூ கவிதைகள் (/showthread.php?tid=7785)

Pages: 1 2 3 4 5 6 7


- aathipan - 09-15-2004

கடற்கரையில்
காலடிஓசைக்கு
ஓடி ஒழியும் நண்டுகள்

அலைகளின் சீற்றத்திற்கு அஞ்சுவவதில்லை


- aathipan - 09-15-2004

வற்றிப்போன நதியில்
காத்திருக்கும் கொக்கு

பிடிவாதம்தான்...


- aathipan - 09-15-2004

அன்றுதான்
கூவ எத்தனித்த குயில்க்குஞ்சை
கொத்திக்கலைத்தன காகங்கள்


- aathipan - 09-16-2004

விறகுவெட்டி

வெயில்

நிழல்தேடி ஓடும் கால்கள்

கருணையுள்ள மரங்கள்


- aathipan - 09-16-2004

உல்லாசப்பயணம்
செய்யும் ஆடுகள்

ஞாயிற்றுக்கிழமை
இறுதிநாள்


- aathipan - 09-17-2004

செருப்புவிற்பவன்
கைவிரல்கள் ஒவ்வொன்றிலும் சோடி சோடியாக
செருப்புகள்

கால்களில் மட்டும் எதுவும் இல்லை


- aathipan - 09-17-2004

ஒளிமயமான எதிர்காலம்

தூக்கத்தில்
காத்திருக்கும்
இளைஞன்


- aathipan - 09-17-2004

கோவிலில் திருக்கல்யாணம்
புூவிற்கும் விதவை


- aathipan - 09-20-2004

கொட்டிக்கிடக்கும் சோற்றுப்பருக்கைகள்
எட்டி எட்டிப்பார்க்கும் அணில் பிள்ளை..


- aathipan - 09-20-2004

பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்

ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"


- tamilini - 09-20-2004

Quote:பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்

ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
உண்மையை சொல்லி இருக்கிறியள்....!


- aathipan - 09-21-2004

குலைதள்ளிய வாழை
கொலைசெய்யக்காத்திருக்கும் மனிதன்


- aathipan - 09-21-2004

நைய்ந்து போன தலையணை

வெளியில் சொல்வதில்லை
விதவைப்பெண் சொன்ன கவலைகளை


- aathipan - 09-21-2004

அதிஸ்டக் கல்வைத்த மோதிரம்
கஸ்டம் தீர்க்குமாம்
ஜோதிடர்சொன்னது

யாருடைய கஸ்டம் சொல்லவில்லை....


- aathipan - 09-21-2004

அலைகள்

கரை....

தீராத பகை


- aathipan - 09-21-2004

தண்ணீர் லாரி

எங்கள்தெருவில்
குடங்களுக்குள் மழை


- சுடரோன் - 09-23-2004

"பேய்மரம்
நல்ல பார்வையை நறுக்கி
நிழல் மரத்தைச் சுருக்கி
இணையத்தில் பிணைத்த
சுத்தமான கவிதை


- aathipan - 09-25-2004

மீன்கள்தான்
<b>ஆசையில்</b>
மாட்டிக்கொள்கின்றன


அப்பாவி மண்புழுக்கள்
எப்போது ஆசைப்பட்டன?


- vasisutha - 09-25-2004

Quote:செருப்புவிற்பவன்
கைவிரல்கள் ஒவ்வொன்றிலும் சோடி சோடியாக
செருப்புகள்

கால்களில் மட்டும் எதுவும் இல்லை
நல்ல கருத்துள்ள கவிதை. நன்றி ஆதிபன்.
__________________
கைக்கூ என்றால் என்ன என்று யாராவது விளங்கப்படுத்த முடியுமா? :?


- shanmuhi - 09-25-2004

Quote:கைக்கூ என்றால் என்ன என்று யாராவது விளங்கப்படுத்த முடியுமா?

þ§¾¡ ¯í¸Ù측¸ ź¢Í¾¡....
<b>
ஹைக்கூ பெயர்க் காரணம்</b>
ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு
ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி
போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர்.

தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா,
மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக
அழைக்கப்படுகிறது.

தமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான
விளக்கம் அளித்திருகிறார்.

ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது !)

ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி,
கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை
உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை.

தமிழக பெண் கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று
பொருள் தருகிறார்.

<b>ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை </b>
ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்
7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்
கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது.
ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில்
ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று
எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும்
பொருந்தி வரும் விதி!)

ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை
பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத்
தூர எறிந்து விட்டார்கள்.

தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த
ஹைக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் வெளியிட்டார் (காற்றின் கைகள்)


<b>ஹைக்கூ ஓர் அலசல் </b>

nantri - www.tamiloviam.com