Yarl Forum
எனது அறிமுகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: எனது அறிமுகம் (/showthread.php?tid=7600)

Pages: 1 2 3 4


- shobana - 07-02-2004

உணர்ந்தால் புத்தன்
இல்லையேல் பித்தன்

சீற்றம் கொண்டு
சினந்தாய் என்றால்
ஏற்றம் உன் வாழ்வில்
என்றுமேயில்லை
மாற்றம் வேண்டும்
மனவலிமை வேண்டும்
தேற்றிடும் இனியநல்
தேன் சொற்சுவை வேண்டும்
ஆற்றிடையோடும்
அழகு நீர் போல
ஒப்புரவில்லாதோர்
உயர்நிலை வேண்டும்
சீற்றிடை முத்துப்போல்
சிறந்த நல்லெண்ணத்தால்
பார் போற்றும் வகையில்
பண்பு பெருகிடும்
உன்னுள்ளே ஒரு
யாகம் நடத்து !
உன்னையறிந்திட
நெஞ்சினுள் வேள்விசெய்
வேள்வியின் வெற்றியில்
வேகம் பிறக்கும்
வேகத்தினை நீ
விவேகமாக்கிடு
உன்னையறிந்ததை
உலகம் உணர்ந்திட்டால்
இன்னொரு புத்தன் - நீ
உணர்ந்திடாவிட்டால்
இதேயுலகத்தில் பித்தன் - நீ.


இது என்னுடைய கவிதை அல்ல... எங்சேயே பார்த்து மனதில எழுதினது.

யாரோ ஒரு பித்தனால, இனி எந்த பித்தனும் உருவாக கூடாது என்று எழுதினதாக கூட இருக்கலாம்

இருக்கு ஒரு பதில் கவிதை சொல்லுங்கோ....
நன்றி


- Paranee - 07-02-2004

போன சந்ததி சொன்னதை ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாது எமது முரண்.

இலாபநட்டக்கணக்கு போட வாழ்க்கை என்ன வியாபாரமா ?


- shobana - 07-02-2004

ஈழவன் அண்ணா,
ஏதோ பரிட்சை மீதி , ஐந்தொகை என்று எல்லாம் சொல்லி யாழ்ப்பாணத்தில படிச்ச துய தமிழை நினைவு படுத்தீட்டீங்கள் ரொம்ப

நன்றி


- shobana - 07-02-2004

பரணி அண்ணா,
வரவு செலவு பார்க்காமல் தான் வாழ்கிறீங்களா? கடைசியில எதுவும் தேறாதல் போகப்போகுது


- Paranee - 07-02-2004

தேறி என்ன கண்டீர்கள். இன்று கிடைப்பவை நாளை அழிந்துபோகும்
கிடைப்பதை அனுபவிப்போம்


- Kanthar - 07-02-2004

shobana Wrote:உணர்ந்தால் புத்தன்
இல்லையேல் பித்தன்

சீற்றம் கொண்டு
சினந்தாய் என்றால்
ஏற்றம் உன் வாழ்வில்
என்றுமேயில்லை
மாற்றம் வேண்டும்
மனவலிமை வேண்டும்
தேற்றிடும் இனியநல்
தேன் சொற்சுவை வேண்டும்
ஆற்றிடையோடும்
அழகு நீர் போல
ஒப்புரவில்லாதோர்
உயர்நிலை வேண்டும்
சீற்றிடை முத்துப்போல்
சிறந்த நல்லெண்ணத்தால்
பார் போற்றும் வகையில்
பண்பு பெருகிடும்
உன்னுள்ளே ஒரு
யாகம் நடத்து !
உன்னையறிந்திட
நெஞ்சினுள் வேள்விசெய்
வேள்வியின் வெற்றியில்
வேகம் பிறக்கும்
வேகத்தினை நீ
விவேகமாக்கிடு
உன்னையறிந்ததை
உலகம் உணர்ந்திட்டால்
இன்னொரு புத்தன் - நீ
உணர்ந்திடாவிட்டால்
இதேயுலகத்தில் பித்தன் - நீ.


இது என்னுடைய கவிதை அல்ல... எங்சேயே பார்த்து மனதில எழுதினது.

யாரோ ஒரு பித்தனால, இனி எந்த பித்தனும் உருவாக கூடாது என்று எழுதினதாக கூட இருக்கலாம்

இருக்கு ஒரு பதில் கவிதை சொல்லுங்கோ....
நன்றி

வாருங்கோ பிள்ளை சோபனா, எழுதுங்கோ
நிறைய வாசியுங்கோ. நல்லம்.

கிட்டடியில புதிசா வந்த கன பேருக்கு முகமன் சொல்ல மறந்து போனன்.
வயசு போன கிழடுதானே குறைநினக்காதேங்கோ


- shobana - 07-02-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வலைஞன் - 07-02-2004

வணக்கம் சோபனா,
யாழ் கருத்துக்களத்தில் உங்களை வரவேற்றுக் கொள்கிறோம்.


- shobana - 07-02-2004

வணக்கம் உப தலைவர்

என்க்கு எல்லாப்பக்கங்களையும் பார்க்க முடிகிறது, ஆனால் எல்லாப்பக்கங்களையும் பதில் கூறமுடியவில்லை.. ஏன் என்றதுக்கு ஓரிரு நாட்கள் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டுமாம்.. ஆளால் நான் ரொம்ப பொறுமையை கடைப்பிடித்துவிட்டேன். ஏன் ????

நன்றி


- வலைஞன் - 07-02-2004

வணக்கம் சோபனா,
இப்பொழுது முயற்சித்துப் பாருங்கள். சரிவரவில்லையென்றால் அறியத் தரவும்.

நன்றி


- shobana - 07-02-2004

வணக்கம்

அனைவருக்கும் நன்றி கூறி மீட்டும் சந்திக்கும் வரை
உங்கள் அன்புத்தங்கை
சோபனா


- ragupathyragavan - 07-05-2004

வருக வருக வருக


tUf tUf - ragupathyragavan - 07-05-2004

வருக வருக வருக ...


- ragupathyragavan - 07-05-2004

வருக வருக வருக வருக


- ragupathyragavan - 07-05-2004

வருக வருக வருக வருக


- ragupathyragavan - 07-05-2004

when i typing this reply , page showing debug error why??????????????


- வெண்ணிலா - 07-05-2004

ragupathyragavan Wrote:when i typing this reply , page showing debug error why??????????????



<b>தயவுசெய்து இக்களத்தில் தமிழில் மட்டும் உரையாடுங்கள்.</b>


- shobana - 07-05-2004

அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள்


- shobana - 07-05-2004

வண்ணிலா வணக்கம்....
" தமிழா, நீ பேசுவது தமிழா??"

உங்களுடைய வாக்கியம் ரொம்ப அழகாக இருக்கிறது.. ஆனால் ஆரம்பத்தில் தமிழா !!! என விளித்து எழுதிப்போட்டு , பின்னர் என்ன கேள்வி நீ பேசுவது தமிழா என, ஒருவரை நாம் தமிழர் என அழைக்கும் போது அவருக்கு தமிழ் தெரிந்து இருத்தால் தான் அப்படி அழைக்க முடியும்....
நன்றி


- வெண்ணிலா - 07-05-2004

shobana Wrote:வண்ணிலா வணக்கம்....
" தமிழா, நீ பேசுவது தமிழா??"

உங்களுடைய வாக்கியம் ரொம்ப அழகாக இருக்கிறது.. ஆனால் ஆரம்பத்தில் தமிழா !!! என விளித்து எழுதிப்போட்டு , பின்னர் என்ன கேள்வி நீ பேசுவது தமிழா என, ஒருவரை நாம் தமிழர் என அழைக்கும் போது அவருக்கு தமிழ் தெரிந்து இருத்தால் தான் அப்படி அழைக்க முடியும்....
நன்றி


<b>சோபனா அக்கா வணக்கம்
கூடுதலான தமிழர்கள் தமிழையா பேசுகிறார்கள்?
அன்னை மொழி மறக்கின்ற அநியாயம் இங்கு வேண்டாம்
அடுத்த மொழி மோகம் எங்கள் கண்ணை மறைக்கலாமோ!!</b>