Yarl Forum
'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23)
+--- Thread: 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' (/showthread.php?tid=7453)

Pages: 1 2 3 4


- vasisutha - 02-26-2004

விழுந்து விழுந்து எழுதினாலும் எங்கட ஆதரவு எண்டைக்கும் அவைக்குத்தான்.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vasisutha - 02-27-2004

Selan Wrote:தற்போது வெளிவரும் அரசியற்கட்டுரைகளையோ அல்லது நூல்களையோ நான் படிப்பதில்லை.நான் கண்ணால்கண்டவிடயங்கள் பலவற்றையே மாற்றி எழுதியுள்ளனர். மற்றையவிடயங்கள் எப்படி உண்மையாக இருக்கமுடியும். அதுமட்டுமல்லாது ஒருவருக்கொருவர் முரணானவரலாற்றை வேறு எழுகிறார்கள்.


இதெண்டால் உண்மைதான் சீலன். Idea


- nalayiny - 02-27-2004

உண்மையும் நேர்மையும் ஒரு போதும் சாகாது. நீங்கள் எழுதுங்கள்.களம் அனுமதிக்கும். உங்கள் பார்வை தானே தாராளமாக எழுதுங்கள்.


- vasisutha - 02-27-2004

quote வேலை செய்யுது இல்லை... :|


- thampu - 02-27-2004

வசி
உங்களைப் போல் நானும் கோசங்கள் மூலம்தான் அரசியல் அறிந்தவன்......
அதனால்தான் இப்போ அரசியல் (கோசங்கள்) வேண்டாம் என்று இருப்பவன்


- nalayiny - 02-27-2004

கோசங்கள் மூலம் அரசியலில் அள்ளுப்பட்டவை கனபேர். :?


- vasisutha - 02-27-2004

நான் கோசங்கள் மூலம் அரசியல் அறியவில்லை. இந்திய இராணுவம் மூலம் அறிந்து கொண்டேன் தம்பு அண்ணை.


- thampu - 02-27-2004

இந்திய இராணுவம் என்பது வந்தவர்கள் அல்ல... மலை போட்டு வரவழைக்கப்பட்டவர்கள்...


- thampu - 02-27-2004

இந்திய இராணுவம் என்பது வந்தவர்கள் அல்ல... மாலை போட்டு வரவழைக்கப்பட்டவர்கள்...


- vasisutha - 02-27-2004

அது எண்டால் உண்மைதான். அப்ப எனக்கு 12 வயது நானும் மாலை போட்டுத்தான் வரவேற்றனான். :| <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- thampu - 02-27-2004

சமாதான படையுடன் சண்டை மூண்டதற்கு இந்திய ராணுவம் காரணம் இல்லை.
இந்திய உபகண்டதில் மூன்று அரசியல் தலமைகள் முட்டி மோதி விளையாடின...

1.ராஜிவ்காந்தி

2.பிரபாகரன்

3.பிரேமதாசா

இதை விட்டுட்டு இப்போ நாம் ஏன் எமக்குள்...........


- Eelavan - 02-27-2004

நன்றி நன்றி தம்பர் அவர்களே எனது தேடலுக்கு சரியான தகவல் தந்தது நீங்கள் தான்
நீங்கள் தந்த புத்தகங்களின் பட்டியல் மட்டுமல்ல அவற்றிற்கு தந்த விமர்சனம் என்னை கொரில்லா புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது ஆனால் புத்தகத்தை எங்கே பெறலாம் எனத்தெரியவில்லை
முறிந்த பனை,சுதந்திர வேட்கை இரண்டையும் வாசித்தாயிற்று இனி கொரில்லவையும்,புதியதோர் உலகமும்,ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியமும் என்கேயாவது கிடைக்குமா என்று தேடிப்பார்க்கவேண்டும்
பிரச்சனை என்னவெனில் இந்நூல்களுக்கு சிங்கப்பூரில் தடை கஸ்டப்பட்டுத்தான் தேட வேண்டும்

நீங்கள் மேலும் எழுதினால் நூல்களின் சாராம்சத்தையாவது தெரிந்து கொள்ளலாம்
நீங்கள் சொல்வது போல கோசங்களினால் தெரிந்து கொண்ட அரசியலை விட தீர விசாரித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்

இவற்றினை விட ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்து நிகழ்வுகளை மையப்படுத்தி பாமினி செல்லத்துரை என்னும் அவுஸ்திரேலியவிலுள்ள இலங்கைப் பெண்மணி எழுதிய சிதறிய சித்தார்த்தன் என்னும் நாவல் வாசிக்கப்பெற்றேன் நூலில் தகவல் கனம் குறைவு எனினும் பரவாயில்லை

அதே போன்று யாழிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் சாட்சியத்தைப் பதிவு செய்து ஒருவர் புத்தகம் எழுதியிருப்பதாக கேள்வி யாராவது விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்


- kuruvikal - 02-27-2004

என்ன தம்பர் முக்கிய தலையை விட்டுப் போட்டியள்....ஜே ஆர் தானே ஆரம்பிச்சே வைச்சது....மறந்திட்டீங்களே.....! சின்னதா இருந்த நம்மளுக்கே தெரியுது.....??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- nalayiny - 02-27-2004

http://www.geotamil.com/pathivukal/guerill...lla_novel2.html

http://www.geotamil.com/pathivukal/guerilla_novel.html


- nalayiny - 02-27-2004

சோபா சக்தியின் புதிய நூல் ஒன்று தேசத்துரோகிகள் என அறியமுடிகிறது.வாசிக்க இன்னமும் கிடைக்கவில்லை. அவரது சிறுகதைகளை சேற்து வந்திருப்பதாக அறிகிறேன்.

ஆறேழு வருடங்களிற்கு முன்னர் வந்த முஸ்லீம்களின் எதிர்காலம் அந்த புத்தகத்தையா கூறுகிறீர்கள்.? சாட்சியத்தை வைத்து எழுதியதை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.


- manimaran - 02-27-2004

thampu Wrote:இந்திய இராணுவம் என்பது வந்தவர்கள் அல்ல... மாலை போட்டு வரவழைக்கப்பட்டவர்கள்...

இநதிய இராணுவம் என்பது எம்மால் மாலைபோட்டு வரவழைக்கப்பட்டவர்களல்ல. வந்தோர்க்கு
மாலை போட்டோம்-- வஞ்சகமில்லாமல்.


- manimaran - 02-27-2004

thampu Wrote:வசி
உங்களைப் போல் நானும் கோசங்கள் மூலம்தான் அரசியல் அறிந்தவன்......
அதனால்தான் இப்போ அரசியல் (கோசங்கள்) வேண்டாம் என்று இருப்பவன்

சுமத்தப்பட்ட கொடும் சோகங்கள் அரசியலை ஆழ்மனதில் பொறிக்க போதுமானவையாக
இருந்தபோது கோசங்கள் தேவையற்றுப்போயின--எங்களுக்கு


- thampu - 02-27-2004

குருவிகள் குறிப்பிட்ட....
Quote:என்ன தம்பர் முக்கிய தலையை விட்டுப் போட்டியள்....ஜே ஆர் தானே ஆரம்பிச்சே வைச்சது....மறந்திட்டீங்களே.....! சின்னதா இருந்த நம்மளுக்கே தெரியுது.....??!
கருத்து கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றே.

புலிகளுக்கும் இந்தியாவுக்குமான முரண்பாட்டில் ஜே ஆர் தெளிவாக புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். பிரேமதாசா இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தார்.
ஆக இங்கு ஒரு முக்கோண முரண்பாடு எழ பிரேமதாசா தான் காரணமாகிறார்.
அதனால்தான் குருவிகாள் ஜே ஆரை தவிர்த்தேன். மற்றப்படி வயோதிப மறதியால் அல்ல... நீங்கள் நினைப்பது போல்.??????????

நளாயினி எழுதியிருந்தார்
Quote:சோபா சக்தியின் புதிய நூல் ஒன்று தேசத்துரோகிகள் என அறியமுடிகிறது.வாசிக்க இன்னமும் கிடைக்கவில்லை. அவரது சிறுகதைகளை சேற்து வந்திருப்பதாக அறிகிறேன்.

ஆறேழு வருடங்களிற்கு முன்னர் வந்த முஸ்லீம்களின் எதிர்காலம் அந்த புத்தகத்தையா கூறுகிறீர்கள்.? சாட்சியத்தை வைத்து எழுதியதை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்

மிக்க நன்றிகள்... நளாயினி


- Eelavan - 02-28-2004

நன்றி நளாயினி அக்கா புத்தகங்களை பெறுவது கடினமெனத் தெரிகிறது அவற்றைப் பற்றியாவது உங்களைப் போன்றோரிடமிருந்து அறிந்து கொள்ள ஆவல்
சோபா சக்தி என்ற எழுத்தாளர் எந்த நாட்டைச்சேர்ந்தவர்? அவருக்கும் ஈழப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்புகள் எப்படிப்பட்டவை?
முஸ்லிம்களின் புத்தகம் பற்றி பிறர் சொல்லக் கேள்வி சரியாகத் தெரியவில்லை.


- kuruvikal - 02-28-2004

பிரமதாசாவையே தூண்டி விட்டதே ஜே ஆர் தானே....?! இது பற்றி நெடுமாறன் எழுதிய ஒரு நூலை பாடசாலைக் காலத்தில் படித்த போது அறிந்தோம்...அதில் பல வெளிநாட்டுத் தலைகளின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது....தம்பர்....!
தான் வெளிப்படையாக செய்ய முடியாததை ஏன் பிரமதாசாவைக் கொண்டு செய்துவித்திருக்க முடியாது....அவருக்கு பிரேமாதாசாவை இந்திய எதிர்ப்பாளர் என்று காட்டி அரசியலில் தன் வாரிசுகளை முன்னிலைப்படுத்தும் தந்திரமும் அதற்குள் இருந்திருக்கலாம் இல்லையா....???! ஆனால் இறுதியில் பிரேமதாஸ எல்லோரையும் ஏமாற்ற...பிறகு அவரை....யாரோ முழுதுமாக மறைத்தும் விட்டனர்....! :roll:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->