Yarl Forum
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... (/showthread.php?tid=7447)

Pages: 1 2 3 4 5 6 7


- Mathan - 03-08-2004

kuruvikal Wrote:<img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/03/08_women.jpg' border='0' alt='user posted image'>

இவர்களுக்கு பெண் விடுதலை பெற்றுத் தந்ததென்ன....?!!! தலை சுமக்கும் மண்ணாங்கட்டியா.....???! இது ஏன்....???!

(Image from webulagam.com)

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

வெப் உலகத்தில இருந்து படத்தை போட்ட நீங்கள் அதைப்போட்டு அவர்கள் சொல்லவந்த கருத்தை போடாமல் விட்டுட்டீங்கள். சார்பான கருத்தை மட்டும் எடுக்கும் தந்திரம்? எது எப்பிடியோ அந்த படத்தோடை அவர்கள் சொல்ல வந்த கருத்தை போடுறேன் படிச்சு பாருங்க. இந்த படம் பெண் விடுதலை இன்னும் முழுசா கிடைக்கவில்லை என்றதுக்கு ஒரு சாட்சி.

<b>மகளிர் தினமெல்லாம் இவர்களுக்கேது?

இன்று சர்வதேச மகளிர் தினம். ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆணுக்குப் பெண் இங்கே தாழ்வில்லை என்ற மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் வகையில் தங்கள் காலடி படாத துறையே இல்லை என்னுமளவுக்கு பெண்கள் முன்னேறி விட்டனர். என்றாலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வியறிவு பெறாத மற்றும் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களும் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இன்றைக்கு கூழ்குடிக்க வேண்டுமானால் கூலி வேலைக்குச் சென்றால்தான் உண்டு என்ற நிலையில், கருமமே கண்ணாக சென்னை ராயபுரத்தில் வாழ்க்கைப் பாரத்தை இறக்கிவைக்க தலையில் மண் சுமக்கும் பெண் தொழிலாளர்கள். இவர்களுக்கு ஏது மகளிர் தினம்?</b>


- sOliyAn - 03-08-2004

கொஞ்சநாளால பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு விடுதலை.. அதுக்காக பிள்ளைகள் நாள் என்று விவாதிக்கலாம். இல்லையா பிபிசி! குடும்பம் ஒரு சிறை என நினைத்தால்.. அதிலே உள்ள அங்கத்துவர்கள் யாபேருமே ஒவ்வொருவிதத்தில் கைதிகள்தான். ஆக, நினைப்பைப் பொறுத்ததுதான் பிழைப்பு.


- Mathan - 03-08-2004

நினைப்பை பொறுத்துதான் எல்லாம் என்பது உண்மைதான் சோழியன். ஆனால் குடும்பம் உடைந்து போகக்கூடாது என்பதற்காக பெண் அடக்குமுறையை தாங்க முடியாது தானே? ஆணும் பெண் இரண்டு பேருமே குடும்பத்தை நினைத்து செயல் பட்டால் நல்லது. ஆண் அடக்குமுறை செய்தால் குடும்பத்திற்காக அதை எதிர்க்க கூடாது என்று சொல்ல முடியாது.


- manimaran - 03-08-2004

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/07/VavuWomensDay_4.jpg' border='0' alt='user posted image'>

Picture: Tamilnet


- sOliyAn - 03-08-2004

ஏற்றுக்கொள்ளுகிறேன்.. படிக்காமல் வேலை செய்யும் புகலிடத் தமிழர் நிலையை எடுத்துப் பாருங்கள்! வேலைத் தலத்தில் மனதாலும் உடலாலும் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்?! ஏன்?! தமது குடும்பத்துக்காக. அதாவது மனைவி பிள்ளைகள் போன்ற அங்கத்துவர்களுக்காக. அதனால் அவனை பிள்ளைகளும் மனைவியும் அடக்குகிறார்கள் எனப் பொருள் கொள்ள முடியுமா?!


- Mathan - 03-08-2004

எல்லோரும் அடக்கின்றார்கள் என்று சொல்லவில்லை சோழியன். அடக்குபவர்கள் திருந்தினால் போதும். அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் என்பது தான் கவலைக்குரிய விசயம். நிறைய பெண்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்றார்கள். ஆனால் வேலைக்கு போட்டு வந்தபின்பு வீட்டுவேலையும் அவர்கள் மேல் சுமத்தப்படுகின்றது. அதை ஆண் பெரும்பாலும் பகிர்ந்துகொள்வது இல்லை. நாட்டை விட்டு கணவனை நம்பி வந்த பெண்ணுக்கு அவனே நண்பன் தாய் தந்தை எல்லாமே. அதை பெரும்பாலும் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் நண்பர்களுடன் ஓய்வு நேரத்தை கழித்தால் அவளுக்கு தனிமை சிறைதானே?


- nalayiny - 03-08-2004

[quote=sOliyAn]ஏற்றுக்கொள்ளுகிறேன்.. படிக்காமல் வேலை செய்யும் புகலிடத் தமிழர் நிலையை எடுத்துப் பாருங்கள்! வேலைத் தலத்தில் மனதாலும் உடலாலும் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்?!

ஏன் வாயை திறந்து கதைக்க வேண்டியது தானே.முடியாட்டி ஒரு கோப்பையையாவது கீழ போட்டு உடைக்கிறது. நாங்களும் வேலைக்குத்தான் போறம். 9 மணித்தியாலம். எல்லாம் கட்டன் றைற்.ஆனால் வேலைத்தொல்லைகளை உணவு விடுதி வாசல்லையே தூக்கி எறிஞ்சிட்டுத்தான் வீட்டை வாறம்.கனக்க கதைச்சா இருக்கவே இருக்கிறது சிந்திக்கா.( தொழிலாளர் சங்கம்) ஏதோ ஆண்கள் தான் வெட்டிப்புடுங்கி நடுகிற மாதிரி கதைக்கிறீங்கள் சோழி. பெணகள் வேலைக்கு போனாலும் நீங்கள் அனுபவிக்கிற மாதிரியான சகல தொல்லைகளும் வரத்தான் செய்கிறது.


- kuruvikal - 03-08-2004

அடக்கும் பலம் கேட்டீர் அடக்கப்படுவீர்கள்....ஆண் அடங்கமாட்டான் அடக்குவான்...வேணும் என்றால் ஆணை அடக்கிப் பாருங்கள்...அடக்குமுறை ஒடுக்குமுறை என்று கத்தினால்...ஆண் அடங்கான்... அடக்குவான்...அவன் சர்வ வல்லமை மிக்கவன்...அது இயற்கை தந்த கொடை....வேண்டும் என்றால் மோதித்தான் பார்போமே.....! பெண்கள் அளவுக்கு மிஞ்சினால் அடக்கப்பட வேண்டியவர்களே அன்றி பெண்களுக்கு யாரும் அடங்கப்படாது...இதுவே ஆணை உலகில் இயற்கை படைக்கக் காரணம்....!

சும்மாவிட்டா ஏதோதோ எல்லாம் எழுதுகினம்.....ஆண் பொங்கினானோ...உங்கள் கதி அதோ கதிதான்....சும்மா புலம்பித் திரியாம நடக்கிறதாக் கதையுங்கோ...சமுதாயம் ஆவது திருந்தும்...சும்மா மட்டை பிடிக்கிறதும் கொடி பிடிக்கிறதும் ஊர்வலம் போறதும் ஆணை என்ன செய்து போடும்...எங்க ஏதாவது செய்யட்டும் பார்ப்போம்...!

ஆணே நீ சர்வ வல்லமை மிக்கவன்...நீ ஆடங்கியதாக சரித்திரம் இல்லை...அடக்கியதும் இல்லை....வீண் பழி வந்தால் வீறு கொண்டெழு...அடக்க முனைவோரை அடக்கி ஆள்.....! அதற்கும் உனக்கு இயற்கை தந்துள்ளது அனுமதி.....! :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 03-08-2004

தொழிலாளர் சங்கத்துக்கு போகலாந்தான்.. போன பிறகு எப்படியெல்லாம் வன்மம் தீர்ப்பாங்கள் தெரியுமே?! அதுக்கும் பார்க்க வேலையை விட்டுப்போட்டு வீட்டில நிம்மதியா இருக்கலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆணென்ன பெண்ணென்ன.. எல்லோருக்கும் பிரச்சினைகள் பாதிப்புகள் இருக்குதான்.. அதற்காக சின்னச் சின்னப் பிரச்சினைகளை நுணுக்குக் காட்டிகளாய் ஆராய்வதால் என்ன விளையும்?! நாமே ஒரு குடும்பத்தின் உருக்குலைவுக்கு ஆளாவதுதான் நிகழும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- nalayiny - 03-08-2004

எல்லாம் எங்கடை மனப்பயம் என நினைக்கிறன்.வன்மம் தீற்பர் என்பது கிடையாது. நான் 3 முறை தொழிலாளர் சசங்கத்தில் முறையிட்டவள். முதல் முறை 3 மாத சம்பளத்துடன் காயாக வீட்டில் இருந்தேன்.மற்ற இரு தடவையும் ஒரு மாத சம்பளத்துடன் வீட்டில் இருந்தேன். சட்டம் தெரிந்தால் எல்லாம் ஆழலாம். சட்டணுணுக்கங்கள் தெரிந்திருத்தல் அவசியம். பாசை மிக முக்கியம். (சின்ன சின்ன பிரச்சனைகனை ஆராய்தல் அது அவசியமற்றது) சின்ன சின்னனாய் வரும் பிரச்சனைகளை தொடரவிடாது முறியடிப்பது எங்களின் கைகளில் தான் தங்கி உள்ளது.

[quote=sOliyAn][color=red]தொழிலாளர் சங்கத்துக்கு போகலாந்தான்.. போன பிறகு எப்படியெல்லாம் வன்மம் தீர்ப்பாங்கள் தெரியுமே?! அதுக்கும் பார்க்க வேலையை விட்டுப்போட்டு வீட்டில நிம்மதியா இருக்கலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இதாலை தான் எங்கடை ஆக்களுக்கு பிரச்சனையே. உங்களை யாரும் கடிச்சு குதற மாட்டார்கள்.


- sOliyAn - 03-09-2004

உண்மைதான்.. தொழிலாளர் சங்கத்துக்கு போவிட்டு.. அதே இடத்தில் தொடர்ந்து வேலை செய்ய முடியாதுங்க.. சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் பிழை பிடிப்பதாக இருப்பாங்கள்.. உதாரணமாக ஆறுதலா ஒரு சிகரட்கூட பத்தலாமோ தெரியாது!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- nalayiny - 03-09-2004

அதே இடத்திலை ஆர் சொன்னது வேலை செய்ய சொல்லி.கூண்டிலை கொண்டு போய் நிப்பாட்டி தொழிலாளர் சங்கத்துக்கு தண்டப்பணத்தை முதலாளியை கட்டவைக்கவிட வேணும். அதோடை வீட்டிலை இருந்த கொண்டு ஒரு மாதமோ 3 மாதமோ சம்பளம் வாங்கவேணும் அப்ப தான் உந்த முதலாளிமார் திருந்துவினம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆனா எங்கடை ஆக்கள் பலர் இறப்பர் மாதிரி இழுபடுறது தான் வேலை. கடவுளெ எப்படித்தான் முடியுதோ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> 8)


- sOliyAn - 03-09-2004

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஐயோ ஐயோ... மறுபடி வேலை தேடி.. புதுசா ஆரம்பிச்சு.. புதுசா சக தொழிலாளரோடு பழகி... வேண்டாம் ராசாத்தி.. ஆளை விடுங்க.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- nalayiny - 03-09-2004

அப்ப அனுபவியுங்கோ. ஆர் வேண்டாம் எண்டது.அப்ப சொல்லாதேங்கோ.

[quote=sOliyAn]ஏற்றுக்கொள்ளுகிறேன்.. படிக்காமல் வேலை செய்யும் புகலிடத் தமிழர் நிலையை எடுத்துப் பாருங்கள்! வேலைத் தலத்தில் மனதாலும் உடலாலும் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்?!


- Mathan - 03-09-2004

கற்பின் நிறம்

கற்புக்கு சிறப்பு
கண்ணகி என
துதிபாடும்
மடமையை
எங்கு சென்றுரைப்பேன்.?!

இன்றுவரை தானும்
கற்புள்ள பெண்தானே
என சிந்தியாது
இருப்போருக்கு
இனி நான் கூறப்போவது
எப்படிப்புர்pயும்?!

என் இனமே மனித இனமே!
கற்புக்கு நிறமேது?
கற்பை பெண்ணின்
மேனியில் புதைத்து
கருக்கலபை;பிலும்
உடல் உறுப்பிலும்
தேடுகிறீர்கள்
புரிகிறது.
வஞ்சகன் ஒருவன் விரித்த
வலையில் சிக்கிய
பெண்ணின் நிலை?
இனவெறியரசது
இரத்த வெறியது தணியாமல்
காமவெறிதனையும் தணிக்க
எத்தனை கிருசாந்திகள்

என்ன பாவம் செய்தனள்?
பெண்ணாகப்பிறந்து விட்டால்
பேதமைகள் என்று மட்டும் புரிகிறது.

கருக்கலைப்பிலும்
உடல் உறுப்பிலும்
கற்பைத்தேடாதீர்;.

வயாக்கராவையே
விஞ்ஞானம் கண்டு விட்டது
நாம் மட்டும் கற்பிலேயே
நின்று தேடுகிறோம்.

ஓ---! தேடலிலும் ஓர் சுகமுண்டோ?

என் இனமே மனித இனமே
ஆணுக்கும் பெண்ணுக்கும்
கற்பே சிறப்பென்று சு10ழுரைத்து
மனம் தான் கற்பென்று
மகிழ்ச்சி கொள்வது எப்போ?
மன எழுச்சியது தோன்றினால்
மனம் தான் கற்பென்று
கற்பது உயர்வு பெறும்
உன்னதம் அடையும்.
கருக்கலைப்பிலும்
உடல் உறுப்பிலும் தேடாதீர்.
மனதில் தேடுங்கள்.

நன்றி - நளாயினி தாமரைச்செல்வன்.


- Mathan - 03-09-2004

மகிளிர் தின விழா யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. இதோ தமிழ் நெட்டில் வந்த செய்தி

Jaffna celebrates International Women's day

[TamilNet, March 08, 2004 21:15 GMT]

The International Women's Day was celebrated in the Jaffna district Monday on the theme "We want our land." The Jaffna District Forum against Sexual and other Violence on Women organized awareness processions and other cultural events related to women liberation programme in the district, sources said.

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/JaffnaWomen_1.jpg' border='0' alt='user posted image'>
Girls singing in Gurunagar event

A motorcade, which commenced Monday around 11 a.m. from the office of the UNHCR located in Temple Road in Nallur returned to the same site at about 6 p.m. covering areas where internally displaced have been staying and areas where resettled Muslim families live, sources said.

Pamphlets urging women to oppose suppression and oppression of their basic rights were distributed. At the conclusion a meeting was held at Gurunagar common grounds, sources said.

Representatives of UNHCR, IDP project of the Sri Lanka Human Rights Commission, Sri Lanka Red Cross Society, Children and Women Unit of the Jaffna Police and several humanitarian agencies participated in the Gurunagar meeting.

The Women Development Project of the Refugees Rehabilitation Organization organized International Women's Day celebration at Jaffna Navalar Cultural Hall Monday evening.

Women Development Centre Director Ms Saroja Sivachchandran, LTTE women political head Ms Thamilini, lawyer Ms Linga Thurairajah and several leading women activists participated in the meeting.

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/JaffnaWomen_2.jpg' border='0' alt='user posted image'>

UNHCR representatives particpate in the Gurunagar women's day celebration

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/JaffnaWomen_3.jpg' border='0' alt='user posted image'>


- kuruvikal - 03-09-2004

என்ன கொஞ்சம் வெள்ளைத் தோலுகளும் தெரியுது...நல்லது...மேற்கும் கிழக்கும் கலக்கிறது....! வளம் பெற வாழ்த்துக்கள்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathivathanan - 03-09-2004

kuruvikal Wrote:என்ன கொஞ்சம் வெள்ளைத் தோலுகளும் தெரியுது...நல்லது...மேற்கும் கிழக்கும் கலக்கிறது....! வளம் பெற வாழ்த்துக்கள்...!
அசைலம் அடிச்சிட்டினமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 03-09-2004

இல்ல நீங்கள் ஒண்டு....அசைலம் அடிச்சத அடிச்சிட்டினம் போல....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 03-09-2004

அப்பாடா யாழ்ப்பாணப் பெண்களுக்கும் பெண்விடுதலை கிடைத்து விட்டது