Yarl Forum
Breaking News - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Breaking News (/showthread.php?tid=7412)



- kuruvikal - 02-29-2004

நாம் ஆயுதத்தையே வெறுக்கின்றோம்...அதை யார் பாவித்தாலும் ஆதரியோம்....எமக்குத் தேவை எல்லா மக்களும் சம உரிமையோடு உலகில் வாழ வேண்டும் என்பதே...அதை எவ்வளவு சாத்தியமே அவ்வளவு சமாதான வழியிலேயே பெற வேண்டும் என்பதே....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :wink:


- Mathan - 02-29-2004

kuruvikal Wrote:நாம் ஆயுதத்தையே வெறுக்கின்றோம்...அதை யார் பாவித்தாலும் ஆதரியோம்....எமக்குத் தேவை எல்லா மக்களும் சம உரிமையோடு உலகில் வாழ வேண்டும் என்பதே...அதை எவ்வளவு சாத்தியமே அவ்வளவு சமாதான வழியிலேயே பெற வேண்டும் என்பதே....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :wink:

இது குருவிதானா இல்லை வேறை யாராவதா? இப்ப சற்றலட் சுத்தலை என் மண்டை சுத்துது. கொஞ்சம் யோசிக்க விடுங்க


- Mathan - 02-29-2004

kuruvikal Wrote:நாம் ஆயுதத்தையே வெறுக்கின்றோம்...அதை யார் பாவித்தாலும் ஆதரியோம்....எமக்குத் தேவை எல்லா மக்களும் சம உரிமையோடு உலகில் வாழ வேண்டும் என்பதே...அதை எவ்வளவு சாத்தியமே அவ்வளவு சமாதான வழியிலேயே பெற வேண்டும் என்பதே....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :wink:

எனக்கு ஆச்சரியமாதான் இருக்கு. திடீர்ன்னு குருவில ஒரு மாற்றம் தெரியிற மாதிரி இருக்கு. நிறைய கருத்துக்கு பதில் சொல்லாம நழுவுறீங்க. என்ன தான் ஆச்சு?


- Mathan - 02-29-2004

<b>தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள முன்னணி அரசியல் தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்க இணக்கம் </b>

வடக்கு, கிழக்கு மற்றும் தேர்தல் வன்முறை அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ள முன்னணி அரசியல் தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்களை வழங்குவதற்கு சிறீலங்கா காவல்துறை இணக்கம் தெரிவித்துள்ளது.

பல அரசியல் கட்சிகளின் வேண்டுகோளின் பிரகாரமே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - புதினம்


- Mathan - 03-01-2004

புலிகள் கட்டுப்பாட்டுபகுதியில் பொலீசுக்கு பதிலாக தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட போர் நிறுத்த கண்காணிப்பு குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

Source: Daliy News


- Mathan - 03-01-2004

BBC Wrote:பாதுகாப்பு வழங்க ஈ.பி.டி.பி கோரிக்கை

பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் போட்டிýயிடுவதனால் அக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வடக்கு கிழக்கு உட்பட பிற மாவட்டங்களுக்கும் சென்று வருவதற்கு அவர்களின் போக்குவரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்குமாறு இக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் மா அதிபர் இந்திரா டP சில்வாவிடம் கடிýத மூýலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரப் பணிகளில் இக்கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும், விடுதலைப்புலிகளிடம் இருந்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் ஏ9 பாதைய10டாக போக்குவரவு செய்யவும் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்கவும் எனவும் அக் கடிýதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தினக்குரல்

<b>இதுபற்றிய புலிகளின் கருத்து</b>

இந்தத் தேர்தலில் தமக்கு ஆசனம் கிடைக்கும் - மக்கள் தம்மை வெல்ல வைப்பார்கள் என தமிழ் விரோதக் குழுக்கள் கனவு காண்கின்றன.

இதற்குள் நு.P.னு.P குழு தலைமை வன்னிக்குள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தாம் பரப்புரை செய்ய வேண்டுமாம், அதற்கு சிறீலங்கா காவல்த்துறை தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. உண்மையாக தமிழ் மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றிருந்தால் இவர்கள் இப்படிக் கேட்டிருக்க மாட்டார்கள்.

கடந்த காலங்களில் அரச வாகனங்களையும், படையினர், காவல்த்துறையினரையும் பயன்படுத்தி ஆயுதங்களின் முனையில் மக்களையும் மிரட்டி தமிழ்;த் தேசியவாதிகளை தாக்கியும் - கொன்றும் கள்ள வாக்குகளைப் போட்டு நாடாளுமன்ற ஆசனங்;களைப் பெற்ற கூட்டம் - யதார்த்தத்தை உணராது வன்னிக்குள் பரப்புரை செய்ய சிறீலங்கா காவல்த்துறையின் பாதுகாப்பைக் கேட்கிறது. வன்னிக்குள் சிறீலங்கா காவல்த்துறை நுழைய முடியுமானால் நிலைமை இப்படியிருக்காது.

கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களில் கள்ள வாக்குகளை நு.P.னு.P போட முயன்ற போது அதனை எதிர்த்த அதிகாரிகளை மிரட்டி வாக்குப்பெட்டிகளை நிறைத்த சம்பவங்கள் யாழ். தீவகத்தில் பெருமளவில் நடந்திருக்கின்றன. வாக்குச் சீட்டுக்களை அபகரித்துச் சென்று தமது இடத்தில் வைத்து புள்ளடி போட்டு வாக்குப்பெட்டிகள் நு.P.னு.P யினரால் நிரப்பப்பட்டன.

இன்றைக்கும் சிறீலங்கா காவல்த்துறையினர், இராணுவத்தினருடன் திரியும் இவர்கள் உண்மையில் தமிழ் ;மக்களுக்கு சேவையாற்றுபவர்களா?. ஆளும் கட்சிகளுடன் நின்று பதவி ஆசைக்காக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சிதைக்கும் கைங்கரியத்தை புரியும் இந்த தேச விரோதிகள் - இம்முறை தமிழ் மக்களின் உண்மையான வாக்களிப்பு யாருக்கு என்பதை புரிந்து கொள்ளுவர். தமது முகாம்களை சிறீலங்காப் படையினரின் உயர் பாதுகாப்பு வலயங்களைப் போல வைத்திருக்கும். நு.P.னு.P குழு தம்மை மக்களுக்காக உழைப்பவர்கள் எனக் கூற என்ன அருகதை இருக்கிறது?.

தமிழ் மக்களை போர்க் காலத்தில் படையினருடன் இணைந்தே கொலை செய்த கைங்கரியத்தை செய்தவர்களாக இருக்கிறார்கள். சிறீலங்கா அரசின் ஒட்டுப்படையாகவே அவர்கள் துணைப்படையினருக்குரிய சம்பளத்தைப் பெற்றுகொண்டிருக்கிறார்கள்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று இப்பொழுதும் இவர்கள் பரப்புரை செய்கின்றனர். இவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஜே.வி.பி; - சந்திரிகா கூட்டணி எப்பொழுது தமிழ் மக்களுக்கு சுயாட்சியை தரப்போவதாக கூறிருக்கின்றன?. அல்லது இதுவரை சந்திரிகா கூட்டணி அரசுக்கு முண்டு கொடுத்து அமைச்சுப் பதவியையும் பெற்ற நு.P.னு.P கூட்டம் எப்போதாவது தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தர வேண்டும் எனக் கேட்டிக்கிறதா? அல்லது அதற்கான அழுத்தங்களையாவது கொடுத்திருக்கிறதா? அத்தகைய அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய இராணுவ பலமோ அரசியல் பலமோ அற்றதே அக்கூட்டம்.

இத்தகைய கூட்டம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை கொள்கையாக வைத்திருப்பது எப்படிப்பட்ட போலி அரசியல் என்பதை சகலராலும் புரிந்து கொள்ள முடியும். இராணுவ ஒட்டுப்படையாக இருந்து கொண்டு - அரசுக்கு தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து ஒரு பங்குக்கு தாமும் மக்களை படுகொலை செய்து வந்த இந்தக்கூட்டம் தாமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்ட முனைகின்றது. இம்முறை தேர்தலில் இந்தக்கூட்டம் கடந்த தேர்தல்களில் எப்படி ஆசனங்களை பெற்றன என்பதை சகலரும் விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்.

தமிழ்த் தேசியத்துக்காகவே எப்பொழுதும் தமிழ் மக்கள் வாக்களித்து வந்தனர். 1948 முதல் தம் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே இழப்புகளைத் தாங்கியவாறு அர்ப்பணிப்புகளை செய்தவாறு தமிழ் மக்கள் தம் வாழ்வை நகர்த்திக் கொண்டு வந்துள்ளனர். அற்ப சலுகைகளுக்காக இலவசங்களுக்காக தமிழ் மக்கள் எப்பொழுதும் உரிமைகளை விட்டுக்கொடுத்ததில்லை.

இதுவரை இதற்காக பட்ட துன்ப துயரங்களை இழப்புகளை தமிழ் மக்கள் அர்த்தமிழக்கச் செய்ய மாட்டார்கள். தமிழ் மக்கள் யார் தம் பிரதிநிதிகள் என்பதை இதுவரை கடந்து வந்த குருதிச்சுவடுகளின் சாட்சியாக வெளிப்படுத்துவர்கள். கடந்த காலங்களில் நு.P.னு.P போன்ற குழுக்களுக்களின் கொடூரங்களுக்கு பயந்து, பதுங்கியிருந்த தமிழ்மக்கள் - இன்று அவர்களின் வாகனங்களை கொழுத்தும் அளவுக்கு துணிந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அக்கூட்டம்;; வாகனங்களை வாடகைக்கு கேட்ட போது துணிச்சலாக மறுத்துள்ளனர். இதுவே வரலாற்று மாற்றம். அடுத்த கட்டமாக இக்கூட்டத்தை அடித்துத் துரத்தக் கூட மக்கள் தயாராகவுள்ளனர்.

தமிழ் மக்கள் உரிமைகளை பெற அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய நிலைமைக்கு இராணுவ hPதியாக அவர்கள் பெற்றிருக்கும் பலமே காரணமாகும். இதனை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். இத்தேர்தல் நாடாளுமன்றில் தமிழ் மக்களை அழுத்தம் கொடுக்கும் சக்தியாக மாற்றும் என்றாலும் அந்த ஆசனங்களுக்காக அல்லாது தமிழ் மக்களின் ஒரு கருத்துக்கணிப்பாகவே அமைகின்றது.

ஆகவே தமிழ் மக்கள் சகல சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்தி தமது வாக்குகளை வழங்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் உலகுக்கு சொல்லும் செய்தியாக அமையப் போகின்றது.

தமிழ் மக்கள் தமது கருத்துகளை தம் தாயகத்தின் குறியீடாக அமைந்துள்ளா ~வீடு| க்கு நேராக புள்ளடியிட்டு உலகுக்கு தெரியப்படுத்தவே போகின்றார்கள்.


நன்றி - புலிகளின் குரல்/தமிழ் நாதம்


- Eelavan - 03-01-2004

நன்றி B.B.C உண்மைச்செய்திகளை ஆதாரத்துடன் தருவதற்கு
நான் கூட முதலில் சேதுவுக்குப் போட்டியாக ஆரம்பித்துள்ளீர்களோ என நினைத்தேன் பரவாயில்லை விவாதத்திற்குரிய செய்திகள் தான்
தொடரட்டும் உங்கள் ஒலிபரப்புச்சேவை


- Mathivathanan - 03-01-2004

[b]ஏன்.. எதற்காக..?

மட்டக்களப்பு ஐ.தே.க. வேட்பாளர் சுந்தரம்பிள்ளை இன்று சுட்டுக்கொலை!

மட்டக்களப்பிலிருந்து தேனுராள்

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை இன்று காலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினமிரவு ஆரையம்பதி காளி கோவில் வீதியில் உள்ள இல்லத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான சுந்தரம்பிள்ளை சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இவர், இன்று காலை 6 மணியளவில் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்த்துறை அத்தியட்சகர் மகேஷ் சமர திவாகர தெரிவித்தார்.

நோயாளர்களைப் பார்வையிடுவது போல வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

63 வயதான சுந்தரம்பிள்ளை ஓய்வுபெற்ற அதிபராவார்.

நன்றி புதினம்
:oops:


- kuruvikal - 03-01-2004

உதுதான் சன நாய் அகம்.....! அமெரிக்கன் இரண்டும் செய்யுறான்....சன நாய் அகமும்...துவக்கும் ...<b>ஏன் எதற்கு....????!</b> அப்பப்ப நாய்களைச் சுட்டுத்தள்ளவோ....???! :roll:

:evil: :?:


- Mathivathanan - 03-01-2004

[b]63 வயதான சுந்தரம்பிள்ளை ஓய்வுபெற்ற அதிபராவார்.


- kuruvikal - 03-01-2004

ஓய்வு பெற்றிற்றாரெல்லே பெறகென்ன...எனி உதைக் கதைச்சு என்ன பிரயோசனம்...கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு இருப்பதுதான்...நாகரிகம்....இது சன நாய் அகத்தில சகஜமப்பா....! :roll:

:evil: :evil: :evil:


- Mathivathanan - 03-01-2004

[quote=kuruvikal]ஓய்வு பெற்றிற்றாரெல்லே பெறகென்ன...


- kuruvikal - 03-01-2004

இலங்கை: ரணில் கட்சியின் தமிழ் வேட்பாளர் சுட்டுக் கொலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரணிலின் அரசை அதிபர் சந்திரிகா கலைத்ததையடுத்து வரும் ஏப்ரல் 2ம் தேதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் சந்திரிகா கைகோர்த்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கே மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கட்சியின் சார்பில் பட்டிகலூவாவில் தமிழரான சின்னதம்பி சுந்தரபிள்ளை நிறுத்தப்பட்டிருந்தார்.

இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சுந்தரபிள்ளையை கடந்த சனிக்கிழமை சிலர் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் பட்டிகலூவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் அவரை இன்று இருவர் மருத்துவமனையில் வைத்தே சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிவிட்டனர்.

சிங்கள கட்சிகளின் சார்பில் தமிழர்கள் யாரும் போட்டியிட வேண்டாம் என்று புலிகள் ஆதரவு அமைப்புகளின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் புலிகள் தான் அவரைக் கொன்றதாக சந்திரிகாவின் கட்சியினர் புகார் கூறியுள்ளனர்.

ஆனால், இதைச் செய்தது யார் என்பது குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது என ரணில் அரசில் அமைச்சராக இருந்தவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவருமான ஜி.எல்.பெரிஸ் கூறியுள்ளார். போலீஸ் விசாரணைக்குப் பின்னரே எதுவும் கூற முடியும் என்றார்.

Thatstamil.com


- mohamed - 03-01-2004

<b>Police investigators said they suspected that the gunmen who killed Mr. Jeyakumar</b>

Mr. Sundarampillai contested as a candidate of the New Left Front in the December 2001 elections to Sri Lanka’s Parliament and got 31 personal preference votes.


- mohamed - 03-01-2004

இந்தக் கொலை புலிகளை அரசியல் ரீதியாக பழிவாங்க அரச கட்டுப்பாட்டு பகுதியல் நடாத்தப்பட்டுள்ளது.


- kuruvikal - 03-01-2004

தகவலுக்கு நன்றி மொகமட்....!

:twisted: :twisted:


- Mathan - 03-01-2004

<img src='http://www.thinakkural.com/2004/March/01/sanakiyan.jpg' border='0' alt='user posted image'>

நன்றி - தினக்குரல்


- Mathan - 03-01-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->நன்றி B.B.C உண்மைச்செய்திகளை ஆதாரத்துடன் தருவதற்கு
நான் கூட முதலில் சேதுவுக்குப் போட்டியாக ஆரம்பித்துள்ளீர்களோ என நினைத்தேன் பரவாயில்லை விவாதத்திற்குரிய செய்திகள் தான்
தொடரட்டும் உங்கள் ஒலிபரப்புச்சேவை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சேதுவுக்கு போட்டியாகவா? என்ன ஈழவன் மாட்டிவைச்சுருவீங்க போல இருக்கு. அப்பிடி இல்லை ஈழவன் சேது பத்திரிகையாளர் முகம் தெரிஞ்சவர். அவருக்கு செய்திகள் கிடைப்பதற்கு பல வழிகள் இருக்கும். நான் பலயாழ் நண்பர்களை போல முகம் தெரியாமல் ஓய்வு நேரத்தில் கருத்து எழுதும் ஒருவன். எனக்கு பலவிதமான பத்திரிகைகளை படிக்கும் பழக்கம் இருக்கு. அப்பிடிபடிச்சபோது உங்களோட பகிர்ந்துக்கணும் என்று நினைக்கிற செய்திகளை இங்க போடுறேன். அதனோட உண்மைதன்மையை என்னால் உறுதிப்படுத்த முடியாது. அது செய்திகளை போட்டுள்ள நிறுவனங்களை பொறுத்தது. அந்த நிறுவனங்களின் (செய்தி மூலம்) பெயரையும் செய்திகளின் கீழெ போட்டுள்ளேன்.


- Mathan - 03-01-2004

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்களிப்பு இடம்பெறுவதற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு

<b>தேர்தல் நடத்த ஆணையாளருக்கும் அதிகாரம் இல்லையென தெரிவிப்பு</b>

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிற்கு எந்தவித சட்ட அதிகாரமும் கிடையாதென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

இது பற்றி ஜே.வி.பி. விடுத்த அறிக்கையில், பாதுகாப்புப் படையினரோ, பொலிஸாரோ செல்ல முடிýயாத பகுதியொன்றில் இடம்பெறும் தேர்தல் மோசடிý நிறைந்ததாகவே இருக்கும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என்று கூýறுவதற்கும் எவருக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

அப் பகுதிகளில் வாக்குச் சாவடிýகளை அமைத்து தேர்தல் நடத்தினால், அது தேர்தல் சட்ட விதிகளை மீறும் சட்ட விரோத மற்றும் மோசடிý நிறைந்த செயலாகவே இருக்கும். புலிகளும் ஆயுத முனையில் வாக்குகளை நிரப்ப வழிவகுக்கும்.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாகவிருக்கும் பவ்ரல் போன்ற அமைப்புகள் அப் பகுதிகளில் வாக்குச் சாவடிýகளை அமைக்குமாறு கோரி வருகின்றன. இது அனுமதிக்க முடிýயாததொன்றாகும்.

இதனால், இப் பகுதிகளில் வாக்குச் சாவடிýகளை அமைக்கக்கூýடாது என்றும் ஜே.வி.பி. சுட்டிýக் காட்டிýயுள்ளது.

நன்றி- தினக்குரல்


- Eelavan - 03-01-2004

<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin--><img src='http://www.thinakkural.com/2004/March/01/sanakiyan.jpg' border='0' alt='user posted image'>

நன்றி - தினக்குரல்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நம்ப நட நம்பி நடவாதே?????