Yarl Forum
சினிமா சினிமா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சினிமா சினிமா (/showthread.php?tid=7402)

Pages: 1 2 3 4 5


- AJeevan - 04-05-2004

[b]<span style='font-size:25pt;line-height:100%'>திணைமயக்கம் நூல் வெளியீட்டு விழாவில்</span>
<span style='font-size:22pt;line-height:100%'>கவிஞர் வாலி அவர்களது பேச்சிலிருந்து சில துளிகள்:- </span>

Arrow தமிழை வளர்க்கக் கூடாதென்று நமக்கென்ன பிராத்தனையா?
ஒன்று மட்டும் சொல்கிறேன்.
தமிழை யாராலும் வளர்க்க முடியாது.
தமிழ்தான் நம்மை வளர்க்கிறது. தமிழ் வளர்ப்பதாகச் சொல்பவர்கள் பக்கா அரசியல்வாதிகள்.......................

Arrow ஆயுசு முழுவதும் நான் தமிழ்லயே பேசுறேன். சண்டீவியை தமிழ்ல மாத்திட்டீங்கண்ணா.

Arrow கவிதைகளால் தமிழுக்கு சிறப்பு சேர்க்கலாமே தவிர, தமிழ் வளர்க்க முடியாது.

Thanks : worldtamilnews.com


- AJeevan - 04-05-2004

<span style='font-size:25pt;line-height:100%'>த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு</span>

"நியு' பட ஆடியோ கேஸட் வெளியீட்டு விழாவில், தமிழில் பேசாததற்காக த்ரிஷாவை டி.ராஜேந்தர் கடிந்துகொண்டது அனைவரும் அறிந்ததே.

தமிழில் பேசாதது ஏன் என்று த்ரிஷா பின்னர் விளக்கமளித்தார்.

'நான் தமிழ்ப்பெண்ணாக இருந்தாலும் படித்ததெல்லாம் இங்கிலீஷ் கான்வென்ட்டில்தான். எனவே என்னுடைய தமிழை விட ஆங்கிலம்தான் நன்றாக இருக்கும். அதனால்தான் நான் ஆங்கிலத்தில் பேசினேன்.

மேலும் அவ்விழாவில் பேசுவதற்கு நான் தயாராக வரவில்லை. திடீரென என் பெயரை விழா மேடையில் அறிவித்ததால், ஆங்கிலத்தில் பேச வேண்டியதாயிற்று. இது ஒரு குற்றமா?' என்றார் த்ரிஷா.

'என்னுடைய தந்தை சம்யத்தில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என சிம்பு பின்னர் த்ரிஷாவை சமாதானப்படுத்தினார்.

http://www.dinmani.com/


- AJeevan - 04-05-2004

<span style='font-size:25pt;line-height:100%'>ஆட்டோகிராப்பின் அருள்</span>

துவாரகாநாத். பி.சி. ஸ்ரீராமின் சீடர்களில் ஒருவர். "ஆட்டோ கிராப்'பில் கேமிரா கவிதை புனைந்த நால்வரில் ஒருவர்.

ஹை டெபனிஷன் கேமிராவைக் கையாண்ட இரண்டாவது இந்திய ஒளிப்பதிவாளர் இவர். முதலாமர் இவரது குரு.

ஈரோட்டைச் சேர்ந்த இவர், தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறாராம். எல்லாம் ஆட்டோ கிராப்பின் அருள்! அப் படத்தில் கோவையில் சேரன் இருப்பதாகக் காட்டப்படும் காட்சிகளும் சிநேகா சம்பந்தப்பட்ட காட்சிகளும் இவரது கைவண்ணம்தான்!

இவர் சினிமாவுக்கு வந்தது எப்படி?

"ஸ்கூல்ல படிக்கறப்பதான் திரைப்படக் கல்லூரியைப் பத்தி தெரிய வந்தது. காலேஜ்ல படிக்கும் போது, புகைப்படப் பிரிவுகள்ல நிறைய பரிசு வாங்கினேன். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பி.சி. ஸ்ரீராம்கிட்ட உதவியாளராயிட்டேன்.

காதலர் தினம், முகம், முகவரி, அலைபாயுதே, குஷி (தெலுங்கு) ன்னு அவர்கிட்ட 5 படங்களும் 45 விளம்பரப் படங்களுக்கும் உதவியாளரா இருந்தேன். பி.சி. சார் ரொம்ப என்கரேஜ் பண்ணுவார்.

அதுக்கப்புறம் இப்ப சேரன் வாய்ப்பு கொடுத்து வெளியே வந்திருக்கேன். இன்னொரு பக்கம் ஏரியல், கோல்டு வின்னர், ப்ரிமியர்னு நிறைய விளம்பரப் படங்களும் பண்ணிட்டு இருக்கேன். மகேஷ் நினைவு அறக்கட்டளைக்காக, புற்றுநோய் பற்றிய குறும்படம் ஒன்றையும் பண்ணி இருக்கிறேன்' என்கிறார்.

இவரைப் பொருத்தவரைக்கும் கேமிரா இருப்பதையே உணர வைக்காமல் இருப்பதுதான் நல்ல ஒளிப்பதிவு என்கிறார். "ஓர் ஒளிப்பதிவாளனுக்கு அடிப்படைத் தேவைகள் கற்பனை வளமும் பொறுமையும்தான். எல்லா கதைக்கும் ஒரே மாதிரி ஒளிப்பதிவு பண்ணக் கூடாது. ஜாதி கலவரம்னா கேமிரா ஓடிக்கிட்டே இருக்கணும். நகரக் காட்சிகள் பண்ணும்போது கேமிராவுல ஓர் அவதி தெரியும்' என்கிறார்.

ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பேசவே மாட்டாராம்.

அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். மொழி வித்தியாசம் பார்க்காமல் பணிபுரியும் ஆசை இவருக்கு இருக்கிறது.


- Mathan - 04-07-2004

BBC Wrote:ஐரோப்பாவில் தமிழ் நடிகைக்கு கோவில்

<img src='http://cinesouth.com/images/new/27032004-THN12image2.jpg' border='0' alt='user posted image'>

ஐரோப்பாவின் டென்மார்க் நகரில் தமிழ் நடிகை த்ரிஷாவுக்கு அவரது ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது.

குஷ்பூ, நக்மா என இவர்களைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவிற்கும் ரசிகர்கள் கோவில் ஒன்றை கட்டியுள்ளனர். தமிழ் திரைஉலகிற்கு நடிக்க வந்த சில காலங்களே ஆகியிருந்தபோதிலும், குறைவான படங்களின் மூலமே பெரும்பான்மையான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகை த்ரிஷா.


இயக்குனர் கோபி கிருஷ்ணாவின் 'எனக்கு 20 உனக்கு 18' என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும், இயக்குனர் அமீர் இயக்கி சூர்யா-த்ரிஷா நடிப்பில் உருவான 'மௌனம் பேசியதே' திரைப்படமே, தமிழ் மக்களுக்கு த்ரிஷாவை அடையாளம் காட்டியது. அதனைத் தொடர்ந்து வெளியான ஹரியின் 'சாமி' படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனசில் மாமியாக நிரந்தரமான ஒரு இடத்தை அடைந்தார். இந்நிலையில் த்ரிஷாவின் கால்சீட்டுக்காக இயக்குனர்கள் காத்துக் கிடக்கையில், மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.


தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிக்கச் சென்ற த்ரிஷாவிற்கு, தெலுங்கு படங்களின் மூலமாகவும் பலத்த வரவேற்பே கிட்டியது. இவ்வாறு தமிழ், தெலுங்கு என சென்ற பக்கமெல்லாம் த்ரிஷாவின் புகழ் பரவிக் கொண்டே போய், இறுதியில் அது உலகம் முழுவதும் பரவத்தொடங்கியுள்ளது.


இந்நிலையில் ஐரோப்பாவின் டென்மார்க் நகரில் நடிகை த்ரிஷாவிற்கு கோவில் ஒன்று அவரது ரசிகர்களால் கட்டப்பட்டுள்ளது என்ற செய்தி வெளிவரவே, அவரைத் தொடர்பு கொண்டு உண்மையா என கேட்க முற்பட்ட போது, அவரின் உதவியாளரே இதை உண்மை என ஊர்ஜிதம் செய்தார்.


முதன்முதலில் ரசிகர்களுக்கு கோவில் கட்டும் எண்ணத்தை உண்டு பண்ணியவர் குஷ்பூ என்றாலும், மிக விரைவில் ஒரு சில படங்கள் மூலமாகவே (வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு) அப்படி ஒரு இடத்தைப் பிடித்தவர் த்ரிஷாதான். இதைத்தவிர இப்போது இவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களிலும், முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருப்பதனால் நிச்சயம், ஹீரோக்களுடைய ரசிகர்களின் நெஞ்சிலும் இடம் பிடிப்பார் என்பதில் வியப்பில்லை. போதாக்குறைக்கு எல்லா நடிகர், நடிகைகளும் ஒருமுறையாவது அவரது இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று நினைக்க வைக்கும் டைரக்டர் மணிரத்னத்தின் படத்தில் வேறு நடித்துள்ளார். எனவே இவரது சினிமா எதிர்காலத்தைச் சொல்லவா வேண்டும்.


என்றாலும் குஷ்பூ, நக்மா, த்ரிஷா என நடிகைகள் ரசிகர்களின் மத்தியில், அவர்களது உள்ளங்களில் கடவுளுக்கு இணையாக கருதப்படுவது ஆச்சர்யத்தையே உண்டுபண்ணுகிறது என்கின்றனர் மூத்த சினிமாக்காரர்கள்.

நன்றி - சினி சவுத்

<span style='font-size:25pt;line-height:100%'>த்ரீஷாவிற்கு கோவில் கட்டிய டென்மார்க் ரசிகர்!
-அலகு, காவடி எடுப்பாங்களா ஆத்தாவுக்கு?</span>

<img src='http://www.tamilcinema.com/cinenews/images/thrisha06.jpg' border='0' alt='user posted image'>

நடிகைகளுக்கு கோவில் கட்டும் பழக்கமுள்ள நம் தமிழர்கள் அந்த நல்ல?! காரியத்தை வெளிநாட்டிலும் பரவ செய்துவிட்டார்கள். ஒருகாலத்தில் மதுரையில் குஷ்பூவிற்கு கோவில் கட்டி மோட்சம் பெற்றார்கள். இப்போது த்ரீஷாவுக்கு கோவில் கட்டியிருக்கிறார் ஒரு ரசிகர். டென்மார்க்கில்தான் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட த்ரீஷாவிற்கு, அந்த கோவிலைப் பார்த்துவிட்டு அதை கட்டிய ரசிகருக்கு தரிசனம் கொடுக்க வேண்டும் என்று ஆவல் பிறந்துவிட்டதாம். இதனால் கோடை வெயிலை சமாளிக்க செல்லும் ஊரின் பட்டியலில் டென்மார்க் பெயரையும் சேர்த்திருக்கிறார். ஆத்தா போயிருக்கிற நேரமா பார்த்து அலகு காவடி எடுப்பாங்களோ என்னவோ

Thanx: Tamil Cinema


- Mathan - 04-08-2004

தனது படத்துக்கே தடை போட்ட விஜய்

சமீபத்தில் ரிலீஸ் ஆன விஜய் படம் சரியாகப் போகாது என்பது தெரிந்த விஜய் அந்தப் படம் ரிலீஸ் ஆகால் இருக்க மறைமுகமாக வேலை செய்திருக்கிறார்.

விஜய்-சிம்ரன் நடித்த சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் 'உதயா'. முழுவதும் படம் எடுக்கப்படாமலேயே எடுத்தவரை எடிட் செய்து படத்தை வெளியிட்டிருந்தார்கள். அதனால். வழக்கமாண படங்களை விட படத்தின் நீளம் ஏறத்தாழ 3,000 அடி குறைவாக இருந்ததால் படம் ஓடும் நேரமும் குறைவாக இருந்தது. இப்படி அரைகுறையாக 'உதயா' படம் வெளிவர சிம்ரனும் ஒரு காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். விஜய்க்கும் இதில் பங்கிருந்தது என்பது இப்போதுதான் தெரியும் என்கிறார்கள் படம் சம்மந்தப்பட்டவர்கள்.

அவர்கள் கூற்றுப்படி பார்த்தால் இந்தப் படம் வெற்றி பெறாது. எனவே இந்தப்படம் வெளிவருவது தற்போது தனக்குள்ள மார்க்கெட்டை பாதிக்கும் என்று விஜய் முடிவு செய்திருக்கிறார். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. "சிம்ரனிடம் மட்டும் இந்தப்படம் வராமலிருப்பது நமது 2 பேருக்கும் நல்லது. நாம் இதைக் காட்டிக்கொள்ளாமல் நமது காம்பினேஷனில் கால்ஷீட் தராமல் இழுத்தடித்து படம் வராமல் பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறார். இவர் சொன்னதால் சிம்ரனும் அதையே செய்திருக்கிறார். இது படம் சம்மந்தப்பட்டவர்கள் பக்கம் சொல்வது. இது ஏன் இவ்வளவு நாளாய் தெரியவில்லை என்று கேட்டால், அதற்கும் தயாராக பதில் சொல்கிறார்கள்.

திருமணம் முடிந்தபின் சிம்ரன் மறுபடியும் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறார். அப்போது தயாரிப்பாளர்கள் 'உதயா' படத்தில் சிம்ரன் கால்ஷீட் சொதப்பியதால் வாய்ப்பு தர தயங்குகிறார்கள். இதை அறிந்த சிம்ரன் வேறு வழியில்லாமல் அவர்கள் சந்தேகத்தை போக்குவதற்காக விஜய் சொல்லித்தான் இவ்வாறு கால்ஷீட் சொதப்பினேன். அவர் டேட் தரும்போது நான் டேட்ஸ் இல்லை என்று சொல்வேன். நான் கால்ஷீட் தரும்போது அவர் வேறு படத்தில் பிஸி என்று சொல்லிவிடுவார். ஆனால் பழி மட்டும் என் ஒருத்தி மேல் விழுந்துவிட்டது என்று கூறிவிட்டாராம்.

இதெல்லாம் உண்மையா என்பத அந்த கடவுளக்கே வெளிச்சம்

நன்றி - சினி சவுத்


- Mathan - 04-14-2004

கனவு மெய்ப்பட வேண்டும்

<img src='http://www.tamilcinema.com/cinenews/images/kanavu02.jpg' border='0' alt='user posted image'>

''மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து அழகிகள் மீட்கப்பட்டனர். -சென்னை வருகை!'' எந்த காலத்திலோ செய்தித்தாள்களில் வந்த, இந்த ஒரு வரியின் பின்புலத்தில் இருக்கிற ரத்தத்தையும், வலியையும், சோகத்தையும், அது விட்டுவிட்டுப் போன சொந்தங்களையும் நிஜமாக்கி, நெஞ்சில் தைத்திருக்கிறார் ஜானகி விஸ்வநாதன். 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு போராடும் பெண்ணினத்திலிருந்து வந்திருக்கும் 100 சதவீத ஐ.எஸ்.ஐ இயக்குனர்!

எங்கேயோ உலக வரைபடத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய தேசத்தில் திரையிட்டு, மொழி புரியாத கனவான்களுக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஒரு கூட்டிற்குள்ளேயே பறிமாறிக் கொள்ளும் பழக்க வழக்கத்தை மாற்றி, தமிழ்நாட்டு திரையரங்குகளிலும் படத்தை திரையிட்டிருக்கிறார்கள். வாழ்க! வெல்க!

மங்களாபுரம் கிராமத்தில் வசிக்கும் டாக்டர் மோகனசுந்தரத்திற்கு மத்திய அரசின் உயரிய விருதான மகசேசே விருது கிடைக்கிறது. அவரை ஆங்கில பத்திரிகையன்றின் சார்பாக பேட்டியெடுக்க வருகிறாள் நந்திதா. யார் இந்த நந்திதா? கருவிலிருக்கும்போதே தந்தையை பிரிந்தவள். அந்த தந்தைதான் விருது பெற்ற மோகனசுந்தரம். தன் கனமான கோடரி கோபத்தை மோகனசுந்தரத்தின் மீது வெளிப்படுத்துகிறார் நந்திதா. ஆனால் அதைவிட கனமாக இருக்கிறது உண்மை! அது மனசை பிளந்து மௌனத்தை அலற வைக்கிற பிளாஷ்பேக்!

தேவதாசிகளின் மென்சோகத்தை இவ்வளவு அற்புதமாக யாரும் சொல்லியிருக்க முடியாது. மகனை கொஞ்சக்கூட முடியாமல் தன் அறைக்குள் ஜமீன்தாரை அனுமதித்து கதவை தாளிடும் தாய். வெளியே, ஏக்கத்தோடு காத்திருக்கும் பிஞ்சு மகன். நெஞ்சடைக்க வைக்கிறார்கள் பல காட்சிகளில்.

பல வருடங்களுக்குப்பின் பிரிந்துபோன தன் மகனை டாக்டராக பார்க்கும் அவள், தனக்காக தன் குடும்பத்தையே விட்டு விட்டு வந்துவிட்ட அவனிடம் திரும்ப திரும்ப குடும்பத்தோடு இணைய வற்புறுத்துகிறாள். அவனோ, சாக்கடையில் உழலும் தம் சமூகத்தை கரையேற்ற உழைக்கிறான். அந்த ஊரே அவனை போற்றுகிறது. ஆனால் அந்த மகா மனிதனை மக்கள் போற்றுகிற அளவிற்கு மகள் போற்றினாளா? கனத்த சோகத்தை ஏற்படுத்துகிறது முடிவு.

தாசியாக நடித்திருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். இனி நிம்மதியாக அவர் சினிமாவிலிருந்து விலகிக் கொள்ளலாம். இதைவிட மனசில் நிற்கிற வேடத்தை யார் தரப்போகிறார்கள் அவருக்கு? சொந்தக்குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அற்புதம்! வெளியே வந்தபின்னும் காதுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறது அந்த தாழம்பூவே வாடா....


திரையை விட்டு நம்மை வெளியே வர விடாமல் செய்திருக்கிற பெருமை இன்னும் சிலருக்கு. முக்கியமாக மோகனசுந்தரமாக நடித்திருக்கும் அஸிம்சர்மா. உமா ரியாஸ். சிறுவன் அரவிந்த் பாபு ஆகியோர்.

கால ஓட்டத்தில் அந்த அழகான கிராமமும், அரண்மனை வீடும் சிதிலமாகி போய், கலாச்சார குப்பையாக கிடப்பதை காட்டுகிறார்கள். ஊர் எல்லையில் நின்று கொண்டு இளைஞர்கள் விபச்சாரத்திற்கு ஆள் பிடிக்கிற அவலத்தை பார்க்கும்போதே நீர் திரள்கிறது கண்களில்!

இசை மகேஷ். கேன்சர் அரித்த வயலின். இந்த படத்தின் பாடல்களால் வாழ்ந்து கொண்டிருப்பார் பல யுகங்களுக்கு.

ராஜ்குமாரின் ஒளிப்பதிவு ஒன்றுதான் திருஷ்டி! பல காட்சிகளில் போதுமான ஒளியில்லை!

நல்ல சினிமா என்ற கனவுகள் மெய்ப்பட, ஜானகிவிஸ்வநாதன்கள் வரவேண்டும். வரவேற்போம்... இரத்தின கம்பளம் விரித்து!

நன்றி - ஆர்.எஸ்.அந்தணன் / தமிழ் சினிமா


- Mathan - 04-17-2004

பூஜா - ஒரு பயோடேட்டா

<img src='http://cinesouth.com/images/new/16042004-THN15image1.jpg' border='0' alt='user posted image'>

அப்பா - உமா சங்கர் (உடுப்பிக்காரர்)

<b>அம்மா - சந்தியா (இலங்கைக்காரர்) </b>

பெற்றோர் பற்றிய பெருமை - அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்

சகோதர சகோதரிகள் - ஒரே தம்பி, சித்தார்த்

தம்பியுடன் சண்டை போடுவதுண்டா - சான்ஸே இல்லை, எல்.கே.ஜிலிருந்து எம்.பி.ஏ. வரைக்கும் ஹாஸ்டல் லைஃப் தான். தம்பியை எப்போது பார்ப்போம் என்று இருக்கும்.

பிடித்தது - பஸ் பயணம், தேன்

வித்தியாசமான பழக்கம் - பேனாவால் எழுதப்பிடிக்காது, பென்சிலில் தான் எழுதுவேன்

முதல் வெளிநாட்டு பயணம் - இலங்கை (அதுதான் என் தாய்நாடு. அதாவது என் அம்மா நாடு)

பாதித்த விஷயம் - பேப்பரில் படித்த ஒரு தகவல். வெயில் நேரத்தில் தகரக்கொட்டகைக்கு கீழே யானையை கட்டிவைத்து அதை கட்டுப்படுத்த தும்பிக்கையில் குத்தி காயம் பண்ணினார்களாம்.

விரும்பிப் பார்ப்பது - அனிமல் ப்ளேனட். நேஷனல் ஜ்யாகரஃபி, டிஸ்கவரி, போகோ போன்ற சேனல்கள்

பிடிக்காதது - ஐஸ் கிரீம்

ஹாபி - தொட்டி செடிகள் சேகரிப்பது - வீட்டில் சுமார் 300 தொட்டி செடிகள் உள்ளன

சென்னையில் பிடித்த ஹோட்டல் - ஹோட்டலில் தங்குவது, சென்னை வந்தால் அத்தை வீட்டில் தான் தங்குவேன், படப்பிடிப்புக்காக வந்தாலும்

எதிர்காலத் திட்டம் - மிகப்பெரிய பேக்கரி ஒன்றை தொடங்க வேண்டும்

அன்புக்காட்டுவது - வீட்டில் நான் வளர்க்கும் 4 நாய் குட்டிகளிடமும், 4 பூனைக்குட்டிகளுடமும்

தோழி - அஜித் சார் மனைவி ஷாலினி (நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஃபிரண்ட் ஆகிவிட்டோம்)

நன்றி - சினிசவுத்


- Mathan - 04-17-2004

தமிழ் புத்தாண்டுக்கு கில்லி போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. யாராவது பார்த்தீர்களா? படங்கள் பற்றிய உஙகள் கருத்து என்ன?


- Mathan - 04-20-2004

கில்லி - விமர்சனம்

அசத்தலான விஷ்வல்ஸ் - உடன் வந்து தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'ஒக்கடு' படத்தின் 'ரீமேக்' தான் கில்லி. தில், தூள் படங்களின் இயக்குனர் தரணி விஜய்யுடன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார். 'திருமலை'க்குப் பிறகு விஜய்க்கு மறுபடியும் ஒரு ஆக்.ஷன் படமாக 'கில்லி' வந்துள்ளது.

கண்டிப்பான அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் (ஆஸிஷ் வித்யார்த்தி) மகனான சரவணன் வேலு (விஜய்) மிகச் சிறந்த கபடி விளையாட்டு வீரன். கபடியே பிடிக்காத அப்பாவிடம் பொய் சொல்லிட்டு மதுரைக்கு கபடிப் போட்டிக்காக செல்லும்போது, தனலட்சுமியை (த்ரிஷா) அவன் முறைமாமன் துரைப் பாண்டியன் (பிரகாஷ்ராஜ்) இடமிருந்து காப்பாற்றி தன்னுடன் சென்னைக்கு அழைத்து வருகிறான்.

மதுரையே நடுங்கும் துரைப்பாண்டியனின் அப்பா ஒரு மந்திரி. மகனின் அடாவடி செயல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவன். ஒரு பக்கம் துரைபாண்டியனின் ரௌடி கும்பலும் மற்றொரு பக்கம் மந்திரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட போலீஸ்துறையும், துரத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில் தேசிய கபடிப் போட்டியில் கலந்து கொண்டு தனது டீமின் இலட்சியத்தையும் நிறைவேற்றியாக வேண்டும். இவற்றை எவ்வாறு சரவணன் வேலு எதிர்கொண்டான் என்பது மீதிக்கதை.

கொடுரனான பிரகாஷ்ராஜை அடித்துவிட்டு த்ரிஷாவை காப்பாற்றி காரில் ஏற்றிக்கொண்டு செல்ல பல கார்களில் பிரகாஷ்ராஜின் ஆட்கள் துரத்தும்போது டேக்-அப் ஆகும் படம் இறுதிக் காட்சிவரை, சில காட்சிகள் தவிர்த்து, டெம்போ குறையாமல் செல்கிறது. ஆயுதங்கள் சகிதமாக மிகப்பெரிய கூட்டத்துடன் பிரகாஷ்ராஜ் சுற்றி வளைக்க, விஜய் த்ரிஷா கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி தப்பிக்கும் காட்சியில் ஒரே கைத்தட்டல்தான். இதே போல இறுதிக்காட்சியில் த்ரிஷா பிரகாஷ்ராஜிடம் 'கிழிச்சே' என்று கூறி திரும்ப திரும்ப காபி ஆர்டர் செய்யும் காட்சிக்கும் நல்ல வரவேற்பு. என்னதான் மந்திரி மகன் என்றாலும் தேசிய கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியின் கேப்டன் விஜய்யை மைதானத்திலேயே பிரகாஷ்ராஜ் தாக்குவது ஓவர். கபடிப்போட்டி ஃபைனலில் தோற்கும் நிலையில் இருந்த விஜய், த்ரிஷா வருகையால் புத்துணர்வு பெற்று ஜெயிப்பது சரி. ஆனால் அந்த காட்சியிலேயே பிரகாஷ்ராஜ்ஜால் அடித்து நொறுக்கப்பட்டு மறுபடியும் வீறுகொண்டு எழுவது போரான உடனடி ரிப்பட்டேஷன்.

ஆக்.ஷன் ஹீரோவாக அசத்த முழு ஸ்கோப் உள்ள திரைக்கதை அமைந்திருப்பதால் விஜய் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார். படத்தின் இறுதிக்காட்சிகளில்தான் காதல் துளிர்விடுவதால் படம் முழுக்க விறுவிறுப்பாய் ஆக்.ஷன் காட்சிகளாக அமைந்து விஜய்யை முழு ஆக்.ஷன் ஹீரோவாக்குகிறது.

அண்ணன்களை பறிகொடுத்து முறைமாமனின் கட்டாயக் காதலில் சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பெண் பாத்திரத்துக்கு த்ரிஷா. இன்னும் கூட உயிரூட்டிருக்கலாம். தெலுங்கில் அசத்திய முறைமாமன் கேரக்டரை தமிழிலும் பிரகாஷ்ராஜ் நன்றாகச் செய்திருக்கிறார். த்ரிஷாவிடம் அவர் 'ஐ லவ் யூ' சொல்லும் அழகே சூப்பர்.

ஊரையே மிரட்டும் ரௌடியான பிரகாஷ்ராஜ், விஜய் த்ரிஷா கழுத்தில் கத்தி வைத்ததும் த்ரிஷா மேல் உள்ள ஆசையால் பதறுவது சூப்பர். ஆஸிஸ் வித்யாத்திக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. த்ரிஷாவின் அப்பாவாக வினோத் ராஜ் (நடிகரின் விக்ரமனின் தந்தை), பிரகாஷ்ராஜ்ஜின் அம்மாவாக பாடகி டி.கே. கலாவும் நடித்துள்ளனர்.

வித்யாசாகரின் இசையில் 'அப்படிப்போடு', 'கோழி கொக்ரக்கோ', பாடல்களின் 'ஹிட்' ரகம். மணிராஜ் கலை அமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பரதன் வசனம் நன்றாக உள்ளது. வி.டி. விஜயன் படத்தொகுப்பில் படம் தொய்வில்லாமல் செல்கிறது.

நன்றி - சினி சவுத்


- Mathan - 04-20-2004

சூட்டிங்கில் பெற்றோரை வெளியே அனுப்பும் ஸ்நேகா

<img src='http://cinesouth.com/images/new/20042004-THN14image1.jpg' border='0' alt='user posted image'>

முத்தக்காட்சிகள் போன்ற நெருக்கமான காட்சிகள் எடுக்கும்போது பெற்றோரை அங்கிருந்து ஸ்நேகா அனுப்பிவிடுகிறாராம்.

ஸ்நேகா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகை. இவரது சிரிப்பு இவருக்கு பெரிய ப்ளஸ். இரவல் குரல் இல்லாத மிகச் சில நடிகைகளில் ஸ்நேகாவும் ஒருவர். இவர் முத்தக்காட்சிகள் மற்றும் செக்ஸியான காட்சிகளில் நடிக்கும்போது சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பெற்றோரை அனுப்பிவிடுகிறார். இந்தப் பழக்கம் இவருக்கு வந்ததில் ஒரு பிண்ணனி இருக்கிறது.

இவர் பிரசாந்த் ஹீரோவாக நடித்த 'விரும்புகிறேன்' படத்தில் தான் முதன் முதலில் ஒப்பந்தமாகி நடித்தார். படத்தில் செக்ஸியான காட்சிகள் நிறையவே உண்டு. அதில் பிரசாந்தை முத்திமிடும் காட்சியும் ஒன்று. இந்த காட்சி படமாக்கப்பட்டபோது ஸ்நேகா சரியாக உணர்வுகள் வெளிப்படுத்தி நடிக்க இயலவில்லை. பெற்றோர் வேற சூட்டிங் நடக்கும் இடத்திலேயே இருக்கிறார்கள். டேக்குகள் திரும்ப திரும்ப எடுக்கப்படும். ஸ்நேகாவும் அந்த காட்சியில் ஒன்றி நடிக்க முடியவில்லை. டைரக்டரின் டெம்பர் வேறு எகிறி, கோபத்தில் சத்தம் போட்டு திட்டிவிட்டார். மேலும் பதட்டமாகிவிட்டார் ஸ்நேகா. அப்போதுதான் பெற்றோரை பக்கத்தில் வைத்துக்கொண்டு இவ்வாறு நடிப்பது தனது இயல்புக்கு ஒத்துவராது என்பது ஸ்நேகாவுக்கு பளீரென புரிந்தது.

பார்த்தார் ஸ்நேகா. 'கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணிக்கிறேன், சார்' என்று டைரக்டரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பெற்றோரை தனியே அழைத்து சிறிது நேரத்திற்கு அங்கிருந்து கொஞ்சம் தள்ளி வெளியே எங்காவது போய்வரும்படி அவர்களிடம் கூறினார். அவர்களும் சென்றுவிட, சிறிது நேரம் ரிலேக்ஸ் ஆக இருந்துவிட்டு, டைரக்டரிடம் சென்று சார், 'ஐ எம் ரெடி', என்று சொல்ல, மறுபடியும் அந்த காட்சியை படமாக்க அனைவரும் தயார் ஆனார்கள்.

இந்த முறை எந்த பதட்டமும் இல்லாமல் ஸ்நேகா பிரசாந்த்துடன் முத்தக்காட்சியில் அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்தார். அதிலிருந்து அவர் ஆரம்பித்துதான் இந்தப்பழக்கம். நெருக்கமான காட்சியை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரிந்தால் உடனே பெற்றோரை அங்கிருந்து அனுப்பிவிடுகிறார் ஸ்நேகா.

நன்றி - சினிசவுத்


- Mathan - 04-21-2004

'கண்ணீரில் நடமாடும் சுவாசிக்கும் பிணம்"
-அம்மா! நலமா? பட விமர்சனம்-

<img src='http://www.tamilnaatham.com/special/naatham/amma.jpg' border='0' alt='user posted image'>

அந்நிய நாட்டுப் படைப்புகளை பார்த்து, கேட்டு லயித்துப்போய்விட்டது எம் சமூகம்.

எதற்கெடுத்தாலும் இந்தியப் படைப்புகளையே உதாரணம் காட்டி வந்த நம்மவர்களுக்கு சாட்டையடியாக நம் நாட்டிலும் நல்ல பல படைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இலங்கைக் கலைஞர்கள் என்றாலே முகம் சுழிக்கும் பலரின் மத்தியில், ஊடகங்கள் பல நம் கலைஞர்களை புறந்தள்ளும் இச்சூழ்நிலையில் எமது ஈழமண்ணிலிருந்து உருவான தரமான படைப்புத்தான் ~அம்மா நலமா|.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் கலைப்பிரிவு அண்மையில் வெளியிட்டு வைத்த முழு நீளத் திரைப்படமான ~அம்மா நலமா| ஈழத்துக் கலைஞர்களின் கலைத்திறனை உலகெங்கும் எதிரொலிக்கச் செய்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உணர்வுகளையும், போராளிகளின் உள்ளத்து உணர்வுகளையும் பட்டைதீட்டிக் காட்டுவனவாக அமைந்திருக்கிறது இத்திரைப்படம்.

வடக்கில் வாழும் தமிழ் குடும்பங்களில் அநேகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளிலேயே வாழ்கின்றனர். இவர்களின் பெற்றோர் மட்டும் வன்னி மண்ணிலும், யாழ். மண்ணிலும் உயிர்வாழ்கின்றனர்.

பேருக்கு மட்டும் சொல்லிக் கொள்வர் ~எனக்கென்னப்பா... என் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கினம்... அவங்க காசு அனுப்பிவினம்... நாங்கள் சந்தோஷமாக இருக்கம்..." என்று.

ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளின் பிரிவை எண்ணி நித்தம் நித்தம் கண்ணீர் வடிப்பது எத்தனை உள்ளங்களுக்குத் தெரியும்?

இப்படிச் சொல்லும் தாய்மார்கள் மத்தியில் தம்பிள்ளைகளை போர் முனைக்கு அனுப்பி மார்தட்டி என் பிள்ளை மாவீரன் என்று சொல்லும் தாய்மாரும் ஈழத்தில் இல்லாமலில்லை.

அப்படிப்பட்ட ஒரு வீரத்தாயின் உள்ளக் குமுறல்தான் ~அம்மா நலமா| ஒரு நடுத்தரக் குடும்பம். இரண்டு மகன், ஒரு மகள், பொதுவாக எல்லா கணவன் மார் போலவே ஒரு கணவன்.
மகளின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். மகளுக்கும் விசா கிடைத்து வெளிநாடு செல்லத் தயாராகிறாள். இதே சமயம் இரண்டு மகன்மாரும் ஈழமண்ணை மீட்டெடுக்கப்போராடும் போராளிகள்.

தந்தை ஊதாரித்தனமானவர். மகளின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர். மகள் வெளிநாடு செல்லப்போகிறாள் என்பதற்காக கூழ் காய்ச்ச வேண்டும் என்று சொல்லி புறப்படுகிறார்.

அவருடைய நண்பர்கள் சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவருக்கும் வீட்டிற்கு விருந்திற்கு வரும்படி அழைக்கிறார். ஊரவர்களுடன் அப்படியொரு நெருக்கமான உறவை வைத்திருப்பவர்தான் தந்தை.

வீதியின் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த தன் நண்பரை விருந்துக்கு அழைத்தபோது எதிர்பாராமல் பின்னால் வந்த காரில் மோதுண்டு இறந்து போகின்றார்.

அவ்வளவு நேரமும் குதூகலமாக நகர்ந்து கொண்டிருந்த கதையில் சோகக்கோடு இழையோடுகிறது.

போராளிகளான அண்ணனுக்கும் தம்பிக்கும் தகவல் அனுப்பப்பட்டபோதிலும் தம்பியினால் மரணவீட்டிலே கலந்து கொள்ள முடியவில்லை.

விடுதலைப் போராளி என்பவன் சொந்த பந்தங்களின் இன்ப துன்பங்களைவிட தாய் மண்ணை நேசிப்பவனாகத்தான் இருக்க வேண்டும். இந்தத் தத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக இந்தக் காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு குழுவுக்குத் தலைமைதாங்கி போர்க்களத்தில் இருக்கும் அப்போராளியின் மனோநிலையை அப்படியே அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர் கேசவராஐன்.

தந்தையின் மரணச் செய்தி கேள்விப்பட்டும் போக முடியாத நிலையில் மண்ணின் நலன்காக்க போராடும் போராளியின் மனோநிலையை பிரதிபலிக்கும் பாடல்களும் அருமையாக உள்ளன. இவ்விடத்தில் பாடலாசிரியர் வீராவிற்கு சபாஷ் போடவேண்டும்.

'அம்மா நலமா - நாம் அலையும்
மண்ணே நலமா
வேப்பமரணிம் நலமா
என் வீட்டுக் கிணறே நலமா"

என்ற பாடல் வரிகள் படம் பார்ப்பவர்களின் காதுகளில் எப்பொழுதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.

சந்தோஷமான குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. மகள் வெளிநாடு செல்கிறாள். மூத்த மகனும் மீண்டும் போர்க்களம் போகின்றான்.

தாய் தனிமரமாகின்றாள். பெரியவீடு, வசதிகள் இருந்தும் உதவிக்கென்று ஆளில்லாமல் வாடிப் போகின்றாள்.

எல்லாப் பிள்ளைகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு ஊரில் தனிமரமாக இருக்கும் அண்ணனும் நோயினால் வாடுகின்றார். இந்நிலையில் பக்கத்துவீட்டுக்காரர் உதவி செய்வதாகச் சொல்லி தாயைப் பொறுப்பெடுக்கின்றனர்.

இந்தக் கதை ஒரு புறம் போய்க்கொண்டிருக்க மறுபுறத்தில் காதல் கதையொன்றும் நகர்கின்றது.

கால் ஊனமான ஒருவனுக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் தங்கைக்கும் காதல் மலர்கிறது. இந்தக் காதலை ஊனத்தை சாட்டாகக் காட்டி எதிர்க்கின்றான் தமையன். இந்நிலையில் காதலர்கள் பெரிதும் தவித்துப் போகின்றனர்.

தனிமரமாகவிருக்கும் தாய் ஊனமான காதலனுக்கு ஆறுதல் சொல்கின்றாள். ஆனால் மறுநாள் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன், தாய் கூறித்தான் அவர்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று கூறி அவருக்கு உதவி செய்வதை தடுத்து விடுகின்றான்.

பட்டகாலிலேயே படும் என்பார்களே அதேபோல் மீண்டும் மீண்டும் சோதனைகள் அவளை வாட்டி எடுக்கின்றது. உதவிக்கு இருந்த சிறுமியையும் தகப்பன் தடுத்து விடுகின்றான்.

ஆனாலும் குழந்தைப் பாசத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாதல்லவா? தனது வீட்டிற்குத் தெரியாமல் அந்தத் தாய்க்கு கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொடுப்பதும், ப10iஐக்கு ப10ப்பறித்துக் கொடுப்பதும் பார்ப்பவர் நெஞ்சை நெகிழ வைக்கின்றது.

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும், எவ்வளவுதான் பணம், செல்வம் இருந்தாலும் தனிமை என்னும் கொடுமையை எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது. அந்தக் கொடுமையை இந்தத் தாய் அனுபவிக்கின்றாள். திரைப்படத்தினைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சினில் ஈட்டி பாய்வதுபோல் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாய் அமைந்திருக்கின்றன.

கதை நகர்வில் தொய்வில்லாமல் பின்னப்பட்டிருக்கின்றது. இடையிடையே சண்டைக் காட்சிகளும், நகைச்சுவைக் காட்சிகளும் யதார்த்தமாக அமைந்திருக்கின்றன.

டயஸின் ஒளிப்பதிவு அற்புதமாக அமைந்திருக்கிறது. டயஸ்தான் இத்திரைப்படத்தின் துணை இயக்குநரும் கூட. ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து படமாக்கியிருக்கிறார் டயஸ்.

தனிமையிலே தவித்துக் கொண்டிருக்கும் தாய் பாடுகின்ற பாடல்வரிகள் அற்புதமாக அமைந்திருக்கின்றது. இந்தப் பாடல்களை நிரோஐன், இசையரசன், பஞ்சமூர்த்தி, குமரன் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

'கண்ணீரின் மேல் கோபம் கொண்டு
கண்களை வெறுக்க முடியுமா?
கண்ணீருக்கு காரணம் இந்த
கண்கள் இல்லைத் தெரியுமா?
தாய்மை இங்கே
தனிமையாகிப்போச்சு - இந்த
தூய்மையான மனசுக்கென்ன ஆச்சு
நந்தவனப் ப10க்கள் கூட்டம்
இவளின் உறவுத் தோட்டம்
நாலு திசையும் சிதறிப்போச்சு
போரில் வந்த சோகம்..."

என்று தொடர்கிறது அந்தப் பாடல். இந்தப் பாடலில் மற்றுமொருவரி 'கண்ணீரில் நடமாடும் சுவாசிக்கும் பிணம்" என்பதாகும். இந்தவரி அந்தத் தாயின் முழு மனதின் ஆதங்கத்தையும் ஒன்று திரட்டி எடுத்துக்காட்டியிருக்கிறது.

அம்மா நலமா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்திற்கும் ~இசைப்பிரியன்| இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையினை இசைத்தென்றல் வழங்கியிருக்கிறார்.

அதே சமயம் யுத்த முனையில் இருக்கும் இளைய மகனின் குழுவில் ஒரு போராளி காயப்படுகின்றான். அவன் தன் தாய்க்காக ஒவ்வொரு சித்திரமாக வரைந்து பொக்கிஷப்படுத்திக் கொள்கிறான். தன் தாய் எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் தவிக்கும் அந்தமகனின் நிலையை தத்ரூபமாய் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

அந்தப் போராளி வீரச்சாவடையும் தறுவாயில் தன் தாய்க்காக பாதுகாத்த சுவட்டினை கொடுத்துவிட்டு எப்படியாவது தன் தாயிடம் கொடுக்கும்படி கூறுகின்றான்.

இளையமகனும் நோய் வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில் அந்தத் தாய் மகனைத் தேடி வருகிறாள். அச்சமயத்தில் மகனின் அந்த சுவட்டினைக் கொடுத்து வீரச்சாவடைந்த விடயத்தையும் சொல்கிறான். அப்போது அந்தத்தாய் ~எனக்கு நீயும் மகன் தானப்பா| என்று கூறி தான் கொண்டுவந்த பொருட்களை கொடுத்துவிட்டுச் செல்லும் காட்சி மனதை உருக்குவதாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளிலும் பல நுணுக்கங்களைக் கையாண்டிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும்.

தனிமையிலே வாடும் தாயின் நிலைகண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் ஒரு போராளி மகனை தாயுடன் இருப்பதற்கு அனுமதிக்கிறது. தாயின் விருப்பத்திற்கிணங்க யாராவது ஒரு மகனை தன்னுடன் வைத்துக் கொள்ளும்படி தலைமைப்பீடம் அறிவிக்கிறது. தன்னுடைய மகன்மார் வரப்போகிறார்கள் என்ற சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் துடிக்கிறாள் தாய்.

அதேசமயம் யுத்த முனையிலே இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே பாரிய யுத்தம் மூழ்கிறது.

யுத்தத்தின் முடிவு என்னாகிறது? மகன்மார் தாயுடன் இணைகின்றார்களா? என்பது படத்தின் க்ளைமாக்ஸ்.

கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் அனைத்தையுமே பொறுப்பேற்றிருக்கிறார். ந.கேசவராஐன்.

அம்மா நலமா திரைப்படத்தின் நடிகர்களாக தங்கேஸ்வரி, சின்னவிழிகள் செல்வம், வீரா, சிந்து, மேரி, ராணி, nஐஸ்மின், நிருபன், செபரட்ணம், நிசாந்தன், தவநீதன், கணேஸ்மாமா போன்றோர் நடித்திருக்கின்றனர்.

நம் நாட்டுக் கலைஞர்களின் முழுப்பங்களிப்புடன் உருவாகியிருக்கும் முழுநீளத் திரைப்படம் உலகளாவிய ரீதியில் பலராலும் பாராட்டப்படிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நல்ல படைப்புகள் இங்கில்லை என்று தவமிருந்தவர்களுக்கு தீனிகிடைத்ததுபோல் இப்படம் அமைந்திருக்கிறது. கட்டாயமாக ஒவ்வொருவரும் இத்திரைப்படத்தினைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இதனுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

-ஏ.பி.மதன்


நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (18.04.04)


- AJeevan - 04-21-2004

<b>அம்மா நலமா? </b>விமர்சனம் நம்பிகை தந்திருக்கிறது.தொடர்ந்து படைப்புகள் உலகெங்கும் பரவி நிலைக்க வேண்டும்.

அம்மா நலமா? கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பவியளாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...................

<span style='font-size:21pt;line-height:100%'>'கண்ணீரின் மேல் கோபம் கொண்டு
கண்களை வெறுக்க முடியுமா?
கண்ணீருக்கு காரணம் இந்த
கண்கள் இல்லைத் தெரியுமா?
தாய்மை இங்கே
தனிமையாகிப்போச்சு - இந்த
தூய்மையான மனசுக்கென்ன ஆச்சு........</span>
<b>[align=center:6c09835b04]அம்மா நலமா?[/align:6c09835b04]</b>

AJeevan


- AJeevan - 04-22-2004

<img src='http://www.kumudam.com/reporter/250404/pg1-t.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:27pt;line-height:100%'>\"உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாதே!
உயிரே பிரிந்தாலும் உறவேதும் பிரியாதே!\"</span>

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும்போது இந்த வரிகளுடன்தான் அறிமுகமானார் சௌந்தர்யா! "நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு..." என்ற பாடல் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் பரிச்சயமான சௌந்தர்யா, இன்று....?

<img src='http://www.kumudam.com/reporter/250404/pg1.jpg' border='0' alt='user posted image'> கடந்த சனிக்கிழமை காலையில் சோகத்தில் மூழ்கிய தென்னிந்திய சினிமா உலகம், இன்னமும் துக்கத்திலிருந்து மீளாமல்தான் உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என எந்த மொழியையும் விட்டுவைக்காத அந்த தேவதையை, இன்று காலனும் விட்டுவைக்கவில்லை. தென்னிந்திய சினிமாவின் சௌந்தர்யத்தை விழுங்கிய அந்த விமான விபத்தை விவரமாய்ப் பார்ப்பதற்குள் சௌந்தர்யாவின் ஃப்ளாஷ்பேக்கை பார்த்துவிடலாம்.

நமக்கெல்லாம் சௌந்தர்யா என்ற பெயரில் அறிமுகமான அவரது உண்மையான பெயர், சௌம்யா. 1976 ஜூலை 18_ல் ஓர் ஆந்திர பிராமண குடும்பத்தில் பிறந்த சௌந்தர்யாவின் அப்பா கே.எஸ்.சத்தியநாராயணா, ஒரு ஏழை திரைக்கதையாசிரியர்.

பெங்களூரிலுள்ள மகாராணி கல்லூரியில் ஹோம்சயின்ஸ் படித்த சௌந்தர்யா, அடுத்து கோலாரிலுள்ள தேவராஜ் யு.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஒரு பக்கம் சினிமா வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும், மறுபுறம் படிப்பிலும் தூள் கிளப்பிக்கொண்டிருந்தார். ஆனால், ஒருகாலத்துக்கு மேல் அந்த தேவதையால் ஒரே சமயத்தில் இரட்டைக் குதிரை சவாரி முடியாமல் போக, முழு நேரமும் சினிமாவிலேயே குதித்தார். மருத்துவம் படித்திருந்தால், எத்தனை உயிரைக் காப்பாற்றியிருப்பாரோ தெரியவில்லை. ஆனால், சினிமா அவர் உயிரைக் குடித்துவிட்டது. ஆம்! சினிமா நடிகை என்ற ஒரே காரணத்துக்காகத்தானே அவரை அரசியல் வலைபோட்டுப் பிடித்தது!

முழு நேர சினிமாவில் குதித்த சௌந்தர்யாவுக்கு மளமளவென வாய்ப்புகள் வந்து குவிந்தன. குறுகிய காலத்தில் தெலுங்குத் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகியானார். தெலுங்கு ரசிகர்களை கிரங்கடித்துக்கொண்டிருந்த சௌந்தர்யாவை, 1993_ல் தன் ' பொன்னுமணி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்துக்கு அழைத்து வந்தார் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார். படம் சூப்பர் ஹிட்டானது. எப்போதும் வெற்றிலையைக் குதப்பியது போலிருந்த சௌந்தர்யாவின் உப்பிய கன்னங்களும் சிவந்த உதடுகளும் தமிழ் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் உறங்கவிடவில்லை. தமிழ் சினிமாவில் சௌந்தர்யாவுக்கென நிரந்தர ரசிகர் பட்டாளம் உருவானது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தார் சௌந்தர்யா. அதிலும் இரண்டாவது படமான 'படையப்பா,' தென்னிந்திய திரையுலக வரலாற்றில் ஒரு புதிய சரித்திரம் படைத்தது. சூப்பர் ஸ்டாரின் ராசியான ஹீரோயினானார்.

பிரபல டைரக்டர் சுந்தர் சி., சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய பேட்டி ஒன்றில், தனக்குப் பிடித்த ஹீரோயின்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தபோது, தன் இயக்கத்தில் நடித்த பல நடிகைகளின் குறைகளைப் பட்டியல் போட்டபடி வந்தவர், சௌந்தர்யாவைப் பற்றிப் பேசும்போது மட்டும் ரொம்பவே சிலாகித்துப்போனார். "உண்மையில சொல்றேன்க.... ஷ¨ட்டிங் ஸ்பாட்ல நான் லயிச்சுப் போய் சைட் அடிக்கிற ஒரே ஹீரோயின் சௌந்தர்யாதாங்க. உண்மையிலேயே அவ்வளவு அழகாயிருப்பாங்க" என்றார் வெளிப்படையாக. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடிவிட்டார் சௌந்தர்யா.

தமிழ் சினிமாவில் அசிங்கமான ஆடைக் குறைப்பில் இறங்காமல், ஓரளவு கவர்ச்சியுடன் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திறமை சௌந்தர்யாவுக்கு மட்டுமே உண்டு. ஆர்ப்பாட்டமான, ஆட்டபாட்ட படம் மட்டுமல்லாமல், அம்மன் புகழ்பாடும் ஆன்மிகப் படத்திலும் நடித்தார் சௌந்தர்யா. 1995_ல் வெளியான 'அம்மன்' படத்தில் குங்கும மயமாக அவர் அழுது புரண்ட காட்சிகள், தியேட்டரில் பல பெண்களை சாமியாட வைத்தன. தெலுங்கில் அவர் நடித்த படங்கள் பல அவார்டுகளை வாங்கிக் குவித்தபடியிருக்க, அவர் தயாரித்த "த்விபா" என்ற கன்னடப் படம் தேசிய விருது வாங்கியது. அந்தப் படம், மரணத்திற்கு அஞ்சாத ஒரு பெண்ணின் கதை என்பது டச்சிங்கான விஷயம்.

"வந்தோம்... ரெண்டு பாட்டுக்கு ஆடினோம் என்றில்லாமல், மற்ற கதாநாயகிகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட நடிகையாகத்தானிருந்தார் சௌந்தர்யா. ஒவ்வொரு காட்சியிலும் நுட்பமான ஈடுபாட்டுடன் நடிப்பதுதான் சௌந்தர்யாவின் தனித்துவம். காட்சியின் வெற்றிக்கு அவர் காட்டும் ஆர்வமும் உழைப்பும் பாராட்டப்பட வேண்டியவை. எப்போதுமே தன்னை ஒரு சாதாரண நடிகையாக மட்டும் காட்டிக்கொள்ள அவர் விரும்பியதில்லை. எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவரிடமிருந்தது!" என்றார், நாம் பெங்களூரில் சந்தித்த பிரபல இயக்குநர் க்ரீஸ் காசரவல்லி. சௌந்தர்யாவை தமிழில் அறிமுகம் செய்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரோ, "சௌந்தர்யா இறந்ததைக் கேள்விப்பட்டு துடித்துவிட்டேன். சமீபத்தில் எனது 'கற்க கசடற' படத் தொடக்க விழாவுக்கு வருவதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அந்த சௌந்தர்யா இன்று இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை!" என்றார் துக்கம் தாளாமல்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சௌந்தர்யாவின் ரசிகர்களுக்கு தலையில் இடி இறங்கியது போன்று திடீரென்று ஒரு செய்தி வந்தது. அது.... சௌந்தர்யாவின் திருமணச் செய்திதான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சௌந்தர்யா தன் அம்மா வழி உறவினரான ரகுவைத் திருமணம் செய்து கொண்டார். சாஃப்ட்வேர் இன்ஜினீயரான ரகுவைத் திருமணம் செய்துகொண்ட சிறிய இடைவெளிக்குப் பின், மீண்டும் நடிக்க வந்தார் சௌந்தர்யா. இப்போது தனது முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாட வெறும் பத்து நாட்களே மிச்சமிருக்க, ஏகப்பட்ட கனவுகளுடன் விமானம் ஏறியவர், அடுத்த சில நிமிடங்களில் கரித்துண்டுகளாக சிதறுண்டது கொடுமையிலும் கொடுமை.
<img src='http://www.kumudam.com/reporter/250404/pg1-2.jpg' border='0' alt='user posted image'>சௌந்தர்யாவின் குடும்பத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மேல் ஒரு பற்று உண்டு. இதை நிரூபிக்கும் வகையில்தான் சமீபத்தில் பி.ஜே.பி.யில் இணைந்தார் சௌந்தர்யா. கடந்த பதினாறாம் தேதியன்று பெங்களூர் மல்லேஸ்வரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மத்திகரேயில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். பதினேழாம் தேதியன்று ஆந்திர மாநிலம் கரீம் நகரில், பி.ஜே.பி. மற்றும் தெலுங்கு தேசக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதாகத் திட்டமிட்டிருந்தார்.

அதற்காக கடந்த பதினேழாம் தேதியன்று பெங்களூர் புறநகர்ப் பகுதியிலுள்ள ஜக்கூர் விமான தளத்திலிருந்து அக்னி ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான செஸ்னா 180 என்ற மினி விமானத்தில் ஏறி ஆந்திரா புறப்பட்டார். அவருடன் அவரது அண்ணன் அமர்நாத், ஹிந்துஜாக்ரான் வேதிகேயைச் சேர்ந்த ரமேஷ்கதம் ஆகியோரும் சென்றனர். விமானத்தை ஜாய் பிலிப்ஸ் என்ற விமானி இயக்கினார். ஜக்கூர் விமான தளத்திலிருந்து பதினேழாம் தேதி, காலை 11.05 மணியளவில் கிளம்பிய அந்த மினி விமானம், சுமார் நூறடி உயரத்தை எட்டிப் பிடித்திருந்த நேரத்தில், மின்னி மறையும் வேகத்தில் தரையை நோக்கிப் பாய்ந்து வெடித்துச் சிதறியது. விமானம் விழுந்த இடம், ஜக்கூர் விமான தளம் எதிரேயுள்ள காந்தி க்ரிஷி விக்யான் கேந்திரா என்ற விவசாயப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலம். மினி விமானத்திற்குள்ளிருந்த நான்கு பேரும் அடையாளம் தெரியாமல் கருகி, கிட்டத்தட்ட சாம்பலானார்கள். விவரத்தைக் கேள்விப்பட்டு பெங்களூர் ஜக்கூர் விமான நிலையம் அருகிலுள்ள அந்தச் சம்பவ இடத்தில் மின்னலாய்ப் போய் நின்றோம். புகைந்துகொண்டிருந்த அந்தச் சாம்பல் குவியலின் நடுவில் ஆங்காங்கே சவச்சிதறல்கள். கைகளும் கால்களும் தனித்தனியாய் பிய்ந்துபோய்க் கிடக்க, சுற்றி நின்று கதறியபடியிருந்தனர் சௌந்தர்யாவின் உறவினர்கள். கட்டுக்கடங்காத கூட்டம் அந்த இடத்தைச் சுற்றி நிற்க, அந்த அழகு தேவதை சௌந்தர்யாவின் அங்கங்கள் வெந்துபோய்க் கிடந்த துயரத்தை என்னவென்று சொல்வது!

விமானம் விபத்திற்குள்ளானபோது சௌந்தர்யா தன் கைகளை அசைத்து உதவி கேட்டதாகவும், ஆனால் அதற்குள் ஆடையில் பற்றிய தீ, மளமளவென்று பரவி அவரை எரித்துவிட்டதாகவும், விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். அதேபோல் இந்தக் கோரக் காட்சியை நேரில் பார்த்த சௌந்தர்யாவின் கார் டிரைவர் அப்பே கவுடர், "அவங்க உள்ளே ஏறி உட்கார்ந்ததும் பேக் எல்லாத்தையும் சரியா உள்ளே அடுக்கிட்டு, சீட் பெல்ட்டை மாட்டிவிட்டுட்டு தள்ளிப்போய் நின்னுக்கிட்டேன். ஃப்ளைட் கிளம்பி மேலே போன கொஞ்ச நேரத்துல அப்படியே கீழே விழுந்து நெருப்பு பத்திக்கிச்சு. ஷாக்காகி ஓடினேன். ஆனா என்னால எதுவும் பண்ண முடியலை!" என்று பதற்றம் தணியாமல் விவரித்தார்.

விபத்து நடந்த தகவலைக் கேள்விப்பட்டும் தீயணைப்புப் படையினரோ, காவல்துறையோ விரைந்து வரவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்தாலும், யார் வந்தும் எந்த விதத்திலும் யாரையும் காப்பாற்ற முடியாத அளவிற்கு விபத்தின் வீரியம் இருந்தது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். குவிந்து கிடந்த அந்த கரிக்குவியல்களிலிருந்து ஒவ்வொருத்தரின் உடலையும் ஏதோ குத்துமதிப்பாக அடையாளம் கண்டபடி அள்ளிச் சென்றனர் மீட்புப் படையினர். பெங்களூர் பவுரிங் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு சௌந்தர்யா மற்றும் அவரது அண்ணன் அமர்நாத் இருவரின் உடல்களும் உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டன. விபத்து நடந்த இடத்திற்குக் கதறியபடி வந்த சௌந்தர்யாவின் உறவினர்களின் கதறல், முடிவின்றி தொடர்ந்தவண்ணமேயிருந்தது.

உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள், பெங்களூர் டாலர்ஸ் காலனியிலுள்ள சௌந்தர்யாவின் வீட்டை நோக்கி நகர ஆரம்பித்தனர். சௌந்தர்யாவின் வீட்டின் முன்புறமாக சௌந்தர்யாவின் பளிச் போட்டோ ஒன்று வைக்கப்பட்டிருக்க, "இந்த மலரா கருகிவிட்டது...?" என்ற புகைச்சலான கேள்விதான் ஒவ்வொருவருக்குள்ளும்.

கதறியழுதபடியே தன் மனைவியின் கருகிப்போன அங்கங்கள் குவிக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு இறுதிக் காரியம் செய்தார் சௌந்தர்யாவின் கணவர் ரகு. நடிகர் ராஜ்குமார், தன் மனைவி பர்வதம்மாளுடன் வந்து ரகுவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மௌனமாய் நின்றுகொண்டார். பின்பு வெளியில் வந்தவர், "சௌந்தர்யா தானே கட்டியுள்ள இந்த அழகான வீட்டுக்கு என்னை வரச்சொல்லி அழைத்தார். அதற்கு எனக்கு சரியான நேரம் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால், கடைசியில் இப்படியரு நாளில் அவரது வீட்டிற்கு வரவேண்டியதாகிவிட்டதே!" என்றார் கலங்கிய கண்களுடன்.

சௌந்தர்யாவுடன் இறந்த அவரது அண்ணன் அமர்நாத்தின் மனைவி கண்ணீர் மல்க, "கிளம்பும்போது அவங்க அம்மா கால்ல விழுந்து ஆசி வாங்கிட்டுப் போனாங்க. புதன்கிழமை திரும்பி வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, சனிக்கிழமையே வந்துட்டாங்க... இப்படி அவங்க முன்னாடியே வந்ததுக்காக எங்களால் சந்தோஷப்பட முடியலையே!" என்று கதறினார்.

சௌந்தர்யாவின் வீட்டுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்த வந்தபடியிருக்க, மாலை சுமார் ஆறு மணியளவில் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட, இருவரின் உடல்களும் ஸ்ரீராமபுரத்திலுள்ள ஹரிசந்திரகாட் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன. தென்னிந்திய சினிமா ரசிகர்களை திகட்டத் திகட்ட கலக்கிய அந்த அழகுப் புயல், இப்படி அகாலத்தில் கரை கடந்தது கண்ணீர்மயமான ஒன்றுதான்.

விபத்து பற்றி முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

சௌந்தர்யாவின் மரணச்செய்தி தரும் துக்கம் ஒருபுறமிருக்க.. விபத்துக்குள்ளான அந்தக் குட்டி விமானத்தைப் பற்றிய பெரிய சந்தேகங்கள் இப்போது கலங்கடித்து வருகின்றன. குறிப்பாக, அந்த செஸ்னா 180 விமானம், வியாபார ரீதியாக பயன்படுத்துவதற்குண்டானதல்ல. தனியார் தேவைக்காக வைத்துக்கொள்ளவே ஏற்றது என்றும், அந்த விமானம் இன்ஸ்யூர் செய்யப்பட்டதல்ல என்றும், இந்த ரக விமானங்களின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள்தான்... ஆனால் 1955_ம் ஆண்டில் தயாரான இந்த விபத்துக்குள்ளான விமானம், ஐம்பது ஆண்டுகளாகிவிட்ட நிலையில், எப்படி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது என்றும் ஏகப்பட்ட கேள்விக்கணைகள் எழுப்பப்படுகின்றன.

மேலும் இந்த மினி ரக விமானத்தில் விபத்து நடந்தது பற்றிய உண்மையை அறிய உதவும் கறுப்புப்பெட்டி இல்லாததால், உண்மையை அறியும் வாய்ப்பின் வழிகள் அடைபட்டுள்ளன.

விபத்துக்கான காரணத்தை அறிய மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அந்த விமானத்தை வைத்திருந்த அக்னி ஏவியேஷன் நிறுவனத்திடம் சில ஆவணங்களைக் கேட்டுள்ளனர். மேலும் இந்த விசாரணையை விமானப் போக்குவரத்துத் துறை சார்பில் டெல்லியிலிருந்து வந்துள்ள தனிக்குழு ஏற்று நடத்தும் என்றே தெரிகிறது.

ஆனால், அக்னி ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரியான கேப்டன் அரவிந்த் சர்மா, "எங்களுக்கும் சரியான காரணம் தெரியவில்லை. விமானி தவறுசெய்ததிலிருந்து பருவநிலை மாற்றம் வரை எதுவும் காரணமாக இருக்கலாம். அந்த விமானம் பழைமையானதாக இருந்தாலும் நன்றாய்ப் பறக்கும் தகுதியுடன்தானிருந்தது. விமானம் பழுதடையும் முன் விமானியும் கட்டுப்பாட்டு அறை அதிகாரியும் பேசிக்கொண்டதைக் கேட்டோம். அது சாதாரணமாகத்தானிருந்தது. அதில் விமானி, விமானம் பழுதானதாகவோ அல்லது உதவி கேட்டோ எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்!" என்கிறார்.

யார் என்ன நியாயம் சொல்லி என்ன செய்ய? பறித்துக்கொண்ட அழகு தேவதையை காலன் திருப்பித் தரவா போகிறான்?

படங்கள் : ஆகாஷ்
விபத்து படங்கள் உதவி: காலைக்கதிர், பெங்களூர்.

Kumudam.com


- Paranee - 04-22-2004

1976 ???????????ஃ

ம் இல்லையே 1966 என்றல்லவா வேறு ஏதொ பத்திரிகையில் வாசித்திருந்தேன்


அழகு
நடிப்பு
இரண்டறக்கலந்த குட்டி பத்மினி என்று சுருக்கமாக சொல்லிக்கொள்ளலாம்

மலர் ஓன்று கருகிவிட்டது


- vasisutha - 04-23-2004

:roll: :roll:


- Mathan - 04-27-2004

உங்களை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளிடமிருந்து விலகுங்கள்!
-பாபாவுக்கு ஒரு பகிரங்க மடல்!

<b>பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என்ற பன்முகம் கொண்டவர் ஞானி. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், அரசியல் மாற்றங்கள் நிகழும்போதும் ஞானியின் கருத்துகளை அறிய பத்திரிகைகள் தவறுவதே இல்லை. இந்த முறை ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஞானி இந்தியா டுடே ஏப்ரல் 28-ந் தேதி எழுதிய இந்த பகிரங்க கடிதம் ரஜினி ரசிகர்களிடத்திலும், அவரை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளிடத்திலும் பல கேள்விகளை எழுப்பியிருப்பது நிஜம்.. </b>

அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்!

ஒருவழியாக பகிரங்கமாக அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். நல்லது. உங்கள் உண்மையான அரசியல் பலம் என்ன என்பது இன்னும் சில வாரங்களில் உங்களுக்கும் தெரிந்துபோய்விடும். நீங்கள் மனம் திறந்து அறிக்கை வாசித்தபோது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் போனதற்கு வருந்தி, பின்னொரு சமயம் (உங்களுக்கு) தேவைப்பட்டால் அவர்களை சந்தித்து பதில் சொல்வேன் என்று இன்னொரு அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். சிரமப்பட வேண்டாம். இதோ சில கேள்விகள். பதில் அறிக்கையாக வெளியிட்டாலே போதும். எங்களுக்கும் வீண் அலைச்சல் மிச்சம். இனி கேள்விகள்.

1. அரசியலில் உங்களுக்குப் பிடிக்காதது ஊழலும் வன்முறையும் என்று கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இப்போது மத்திய சென்னையில் ஓட்டுப்போடவிருக்கும் வேட்பாளர் பாலகங்காவின் தலைவி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க, அரசியலிலிருந்து ஊழலை அகற்றுவதற்காக அரும்பாடுபட்டு வரும் கட்சி என்று நீங்கள் நம்புகிறீர்களா?

2. பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு காந்திய அஹிம்சை நடவடிக்கை தான். வன்முறை அல்ல. அதனால் தான் வாஜ்பாயும் அத்வானியும் சிரித்தபடி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

3. உங்கள் திரைப்படங்களில் பாட்ஷா, படையப்பா, பாபா எல்லாவற்றையுமே வன்முறைக்கு எதிரான படங்களாகத்தான் நீங்கள் உருவாக்கித் தந்திருக்கிறீர்களா? அவற்றில் தனி மனிதனாக நீங்கள் வந்து வில்லன்களை அடித்து உதைப்பதெல்லாம் வன்முறை என்று நாங்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லலாமா?

4. டாக்டர் ராமதாசின் பா.ம.கவை நீங்கள் எதிர்ப்பதற்கு காரணம் பாபா படப் பிரச்னையால் உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பினால் அல்ல. சினிமா துறையில் பலருக்கு கோடிக்கணக்கான நஷ்டம் ஏற்பட்டது என்று சொன்னீர்கள். அப்படியானால் இதே போல டாக்டர் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பினால் படப்பிடிப்பையே கைவிட்டு உங்கள் நண்பரும் சக நடிகருமான கமல்ஹாசன் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்தபோது, நீங்கள் இமயமலையில் இருந்தீர்களா? அறிக்கையாவது வெளியிட முடியாமல் போய்விட்டதா?

5. இப்போது நீங்கள் ஆதரிக்கும் வாஜ்பாயி-அத்வானி பங்காளிகளான விஸ்வ ஹிந்து பரிஷத்தும் பஜ்ரங்தளமும் படப்பிடிப்பையே நடத்தவிடாமல், செட்டுகளை உடைத்தெறிந்ததால் வாட்டர் படத்தையே உலகப் புகழ் பெற்ற இயக்குனர் தீபா மேத்தா ஓரேடியாக கைவிட வேண்டி வந்தது, நீங்கள் விரும்பும் அஹிம்சைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாமா?

6. நதிகள் இணைப்பு என்ற ஒரே காரணம் காட்டி ஊழல், வன்முறை இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் உரிய ஒரு கூட்டணிக்கு ஓட்டுப் போடச் சொல்லும் நீங்கள், நதிகள் இணைப்பால் காடுகள்-கிராமங்கள் அழிப்பு, பருவநிலை பாதிப்பு, மக்கள் துயரம் பற்றியெல்லாம் சுற்று சூழல் அறிஞர்கள் சொல்லியிருப்பதை தெரிந்து கொள்ள முயற்சித்ததுண்டா? ஐம்பதாண்டுகள் முந்தைய பக்ரா நங்கல் அணை முதல் அண்மைக்கால நெய்வேலி சுரங்கம் வரை நிலம் பறிக்கப்பட்ட மக்களுக்கு இன்றளவும் நிவாரணம் தராத நாடு இது என்பது உங்களுக்கு தெரியுமா?

7. சரியோ தப்போ, அரசியலில் குதித்துவிட்டீர்கள். உங்கள் நிலைபற்றி உங்களுக்கே நம்பிக்கை இல்லாதது ஏன்? ஆறு தொகுதிகளில் பா.ம.க ஜெயித்துவிட்டால், ராமதாசின் பூர்வ ஜன்ம புண்ணியம் மிச்சம் இருப்பதாக அர்த்தம். தோற்றுவிட்டால், அந்தப் புண்ணியம் தீர்ந்துவிட்டதாக அர்த்தம் என்று சொன்னீர்கள். எல்லாவற்றுக்கும் பூர்வ ஜன்ம புண்ணியம்தான் காரணம் என்றால், பாபா படத்தை அவர் எதிர்த்தது, அந்த படம் ஓடாமல் போனது எல்லாவற்றுக்கும் உங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம் தீர்ந்து போனது தானே காரணமாக இருக்க முடியும்? அப்புறம் எதற்கு இந்த அறிக்கை, அரசியல் எல்லாம்?

8. சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகள் இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலாகி விடும் என்பதை ராமதாஸ் உங்களுக்கு போனில் சொல்லியிருந்தாலே போதும், அவற்றை நீக்கியிருப்பேன் என்று இப்போது சொல்கிறீர்கள். இரண்டு டீன் ஏஜ் பெண்களின் அப்பாவான உங்களுக்கே இதெல்லாம் உறைக்காதா? போகட்டும். அடுத்த படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள், வசனங்கள், தனிநபர் வன்முறையை ஊக்குவிக்கும் சீன்கள், சிகரெட், மது எதுவும் இருக்காது என்று உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா? இத்தனை நாட்களாக இந்த சினிமா துறையை நீங்கள் வளர்த்து வந்திருக்கிற முறையில், இப்படி ஒரு உத்தரவாதத்தை உங்களால் காப்பாற்ற முடியுமா?

இப்போதைக்கு இந்தக் கேள்விகள் போதும், உங்கள் பதில்கள் என்னவாயினும் சரி. குழப்பமான மனிதரானாலும் ஒரு நல்ல நடிகர் என்று உங்களை நான் கருதுவதால், ஒரு இலவச ஆலோசனை. உங்களை பயன்படுத்தி தங்கள் அரசியலை நடத்திக் கொள்ள விரும்புவர்களிடமிருந்து விலகுங்கள். இந்த வழியில் சென்றுதான் சிவாஜி அரசியலில் தோற்றார். அடிபட்டுக் கற்றுக் கொண்டவர் அமிதாப்பச்சன். அருமையான முதியவர் வேடங்கள், குணசித்திர பாத்திரங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. அரசியலை உங்களால் மாற்றியமைக்க முடியாது. மேலும் குழப்பத்தான் முடியும். சினிமாவையாவது மாற்றியமைக்க முயற்சியுங்கள்.

அன்புடன்

ஞானி.

நன்றி இந்தியா டுடே.


- Mathan - 04-27-2004

கில்லி

தெலுங்கு ஒக்கடுதான் தமிழில் கில்லி! மூலகர்த்தாவுக்கு முதல் வணக்கம். அதே நேரத்தில் தமிழுக்கு ஏற்றதுபோல் செதுக்கி, இதயத்துடிப்பை எகிற வைத்திருக்கும் இயக்குனர் தரணிக்கு டபுள் வணக்கம்! மின்னலாய் நகர்கிற திரைக்கதையில் இடைவேளை மட்டுமே ஸ்பீடு பிரேக்கர்!

கபடி விளையாட்டின் மேல் தீராத ஆர்வம் கொண்டுள்ள விஜய், மதுரைக்கு போகிறார் விளையாட. அங்கே.... த்ரிஷாவை துரத்திக் கொண்டு வருகிறார் பிரகாஷ்ராஜ். யதார்த்தமாக த்ரிஷாவை காப்பாற்றும் விஜய், பிரகாஷ் அண் கோஷ்டியினரிடம் மல்லுக்கு நிற்பதுதான் கதை! சீறி வரும் காளை போல் திமிறிக் கொண்டு ஓடுகிறது படம்!

கொடூரமான பிரகாஷ்ராஜை யாரென்றே தெரியாமல் ஒரு தட்டு தட்டிவிட்டு த்ரிஷாவோடு எஸ்கேப் ஆகும் விஜய், சென்னை வந்து சேர்வதற்குள் மூச்சிரைக்கிறது நமக்கு! அதுவும் அந்த சேஸிங் காட்சிகள் தமிழ் படங்கள் பார்த்திராத சாகசம்!

சுமார் ஆயிரம் பேர் வேல் கம்பு, வெட்டரிவாளோடு விஜயையும், த்ரிஷாவையும் சுற்றி வளைக்க, முடிந்தது கதை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் சாகசமாக தப்பிக்கிறாரே விஜய்.... லாஜிக் மீறாத அதிரடி ஆக்ஷன்! ஒவ்வொரு முறையும் விஜயின் பிடறிவரை துரத்தி வருவதும், நூலிழையில் அவரை தப்பவிடுவதுமாக பிரகாஷ்ராஜின் ருத்ரதாண்டவம் அற்புதமோ அற்புதம்! அத நீ சொல்லாத...., ஐ லவ் யூடா செல்லம்... இப்படி இரண்டே வார்த்தைகளை வைத்துக் கொண்டு பிரகாஷ்ராஜ் அடிக்கிற கொட்டம் இருக்கிறதே...! பாராட்ட வார்த்தையில்லை.

த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையில் பூ பூக்கும் அந்த மெல்லிய உணர்வை அப்பட்டமாக சொல்லி ஆர்டினரி லவ் ஆக்கிவிடாத இயக்குனருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு.

எதிரிகளை எச்சரிக்கிறேன் பேர்வழி என்று தன் சுய கோபங்களை வெளிக்காட்டாத விஜய். ரசிகர்களுக்கு திரையின் ஓரத்தில் வந்து நின்று கொண்டு அட்வைஸ் பண்ணாத விஜய். துறுதுறுப்பான விஜய். இப்படி நிறைய விஜய்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகிறார்கள்.

பயந்து பயந்து ஓடிய த்ரிஷா, தைரியமிருந்தா இவரை அடிச்சு போட்டுட்டு என்னை கூட்டிட்டு போ என்று சொல்கிற போது மிச்ச சொச்ச மூச்சையும் விசிலடித்தே தொலைத்து விடுகிறார்கள் ரசிகர்கள்.

நிஜமா? சினிமாவா? திகைக்க வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் மணிராஜ். அந்த லைட் ஹவுஸ் செட் ஒன்று போதும். இந்த வருடத்தின் பெஸ்ட் பட்டத்தை அவருக்கு வழங்க!

சண்டை பயிற்சி ராக்கி ராஜேஷ். முறுக்கிக் கொள்கிறது நரம்பு மண்டலங்கள் அத்தனையும்! அதை சுழன்று சுழன்று படம் பிடித்திருக்கிறார் கோபிநாத்!

இசை வித்யாசாகர். கேட்பவர்கள் துள்ள வேண்டும் என்ற முடிவோடு ஆர்மோனியத்தில் கை வைத்திருப்பார் போலும்!

கில்லி 'தரணி'யாள வைத்திருக்கிறது.
ரத்தினங்களை அள்ளுவார்கள்.

நன்றி - தமிழ் சினிமா


- Mathan - 04-28-2004

எதிரி விமர்சனம்

'கமர்ஷியல் டைரக்டர்' ரவிக்குமார் இயக்கத்தில் மாதவன் முதன் முதலாக நடித்துள்ள படம் 'எதிரி'. முரட்டு வில்லன்கள், அடிதடி, காதல், கிளாமர், காமெடி என்று ரவிக்குமாரின் ஃபார்முலா மாறாத படமாகவே 'எதிரி'யும் வந்திருக்கிறது.

திருவல்லிக்கேணியில் மகள் கனிகாவுடன் வாழ்ந்துவரும் பிராமணரான டெல்லி கணேஷை, அவர் வீட்டிற்கு குடிவந்த முரட்டு மாணவர்கள் கும்பல் படாத பாடுபடுத்துகிறது. அக்கா மகளை காதலனுடன் சேர்த்து வைக்க பணத்தேவையில் இருந்த மாதவன், ஆட்டோ டிரைவர் நண்பனான விவேக்கின் ஆலோசனைப்படி, பிரபல ரௌடி 'பாட்டில் மணி' ஆக நடித்து மாணவர் கும்பலை வீட்டை விட்டு காலி செய்ய வைக்க டெல்லி கணேஷடமிருந்து பணத்தை வாங்கிக் கொள்கிறார். ஆனால் மாணவர்களை விரட்ட வந்தவர் அவர்களுக்கு நண்பராகிவிடுகிறார். திருமண மண்டபத்தில் மணக்கோலத்தில் இருக்கும் நண்பணின் காதலியை தூக்கிவரச் சென்ற மாதவனும், விவேக்கும் மண்டபம் மாறி மணக்கோலத்திலிருந்த சதாவை தவறுதலாக தூக்கி வருகின்றனர். சதாவின் அப்பா மிகப் பெரிய தாதா. மாப்பிள்ளையோ கொடுமைக்கார அஸிஸ்டென்ட் கமிஷனர் ரகுமான். கல்யாணம் நின்ற கோபத்தில் இவர்கள் மாதவனை வேட்டையாடத் தேட, இந்த சூழ்நிலையில் மாதவனுக்கும் சதாவுக்கும் காதல் மலறுகிறது. இவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பது மீதிக்கதை.

ரவிக்குமார் மறுபடியும் ஒரு 'சரிவிகித கமர்ஷியல் கலவை' கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ரகுமானை முதன் முதலாக வில்லனாக அறிமுகப்படுத்தியுள்ள ரவிக்குமார், அவர் உருவத்துக்கு பொருத்தமான அஸிஸ்டென்ட் கமிஷனர் கேரக்டரை மிகச்சரியாக கொடுத்துள்ளார். இருந்தாலும், ரகுமானுக்கு இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். சில கிளைக் காட்சிகளை நீக்கி படத்தில் நீளத்தை குறைத்திருந்தால், படத்தில் ஆங்காங்கு தோன்றும் தொய்வைத் தவிர்த்திருக்கலாம். ரகுமான் பாணியிலேயே மாதவனும் கிளைமாக்ஸில் செய்வது நல்ல முடிவு.

துள்ளித் திரியும் இளங்காளையாக மாதவன் வருகிறார். காதல், காமெடி, ஆக்.ஷன் என்று படம் முழுக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் மாதவன். சதா காதலை வேண்டுமென்றே சுற்றி வளைத்து சொல்லி மாதவனை அலைக்கலைக்கும்போது மாதவன் நன்றாக குழம்புகிறார். அலட்டிக்கொள்ளாமல் அளவாக செய்திருக்கிறார் சதா. 'கிளாமராக நடிக்கமாட்டேன்' என்று ஏக கண்டிஷன் போட்டவர் 'எதிரி' பாடல் காட்சிகளில் செக்ஸியாக வருகிறார். மகள் யாரையாவது காதலித்து விடுவாரோ என்று பயந்து எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கிற பையன்களோடெல்லாம் மகள் டூயட் பாடுவது போல கனவு காணும் டெல்லி கணேஷ் கதாபாத்திரம் விசித்திரமானது. விவேக்கின் காமெடி எடுபடுகிறது. ரஜினி ஸ்டைலில் அவர் 'சும்மா, சும்மா' என்று அடிக்கடி சொல்வது கொஞ்சம் ஓவர்தான். கனிகா 'பாட்டில் மணி சார்' புராணம் பாடுவது ரசிக்கும்படி உள்ளது. பெப்ஸி விஜயன் சண்டைக் காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார்.

யுவன்சங்கர்ராஜா இசையில் 'முதன் முதலாக' மற்றும் 'காதல் வந்து தீண்டும்போது' பாடல்கள் இதமாக உள்ளன. கனல்கண்ணன் நன்றாக சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். படத்தில் டி.கே. தணிகாசலம் எடிட்டிங்கில் நீளத்தை குறைத்திருக்கலாம்.

'எதிரி' ரவிக்குமாருக்கு எதிராக இருக்காது.


- vasisutha - 04-29-2004

கில்லி படம் வசூலில் எகிறிக் கொண்டிருப்பதில் மிக குஷியாக இருக்கிறார் நடிகர் விஜய்.
<img src='http://www.thatstamil.com/images21/cinema/gilli-450c.jpg' border='0' alt='user posted image'>
கடந்த இரண்டு வருடங்களாக யூத், பகவதி, வசீகரா, கீதை என வரிசையாக தோல்விப் படங்கள் கொடுத்து விஜய் இறங்கு முகத்தில் இருந்தார்.

இன்னொரு பக்கம் விக்ரம், சூர்யா வெற்றிப் படங்களைக் கொடுத்து கிடுகிடுவென முன்னுக்கு வந்து விட்டனர்.

போட்டி அதிகமாகவே வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். இந்தச் சமயத்தில் தான் திருமலை படம் கைகொடுத்தது.

அந்தப் படத்தின் மூலம் சற்று நிமிர்ந்தவருக்கு, கில்லி படம் காலரைத் தூக்கி விட வைத்துள்ளது.

தமிழில் சேஸிங் காட்சிகளை மையமாக வைத்து எடுத்த படங்கள் எதுவும் பெருத்த வெற்றி பெற்றதில்லை. முதன்முறையாக கில்லி இயக்குனர் தரணியின் திரைக்கதையால் அத்தகை புண்ணியத்தைப் பெற்றுள்ளது.

படத்தில் நிஜ ஹீரோ தரணியும், ஒளிப்பதிவாளர் கோபிநாத்தும் தான். தரணியின் திரைக்கதையில் இருக்கும் புல்லட் வேகத்தை கோபிநாத்தின் கேமரா அற்புதமாக படம் பிடித்துள்ளது.



எந்த இடத்தில் தொட்டாலும் என் கில்லி எகிறுவான் என்று தரணி கூறியிருந்ததுபோலவே, கில்லி எகிறியிருக்கிறது.

ஆட்டோகிராஃப் படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் எதுவும் வெளிவராததும், கில்லி படத்துக்கு பிளஸ் பாயிண்ட்டாகி விட்டது. விஜயை மட்டுமல்ல, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தையும் இந்தப் படம் தூக்கி விட்டுள்ளது.



பெரிய பட்ஜெட்டில் தயாரித்த எனக்கு 20 உனக்கு 18, பாய்ஸ் படங்கள் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்ததால், ரத்னத்துக்கு துட்டு தட்டுப்பாடு ஏற்பட்டதாம். இப்போது கில்லி படத்துக்கு நாலா பக்கமிருந்தும் பாஸிடிவ் ரிசல்ட் வந்து கொண்டிருப்பதில் மனிதர் சற்றுத் தெம்பாக காட்சியளிக்கிறார்.

இதற்கிடையே கில்லி வெற்றியைக் காரணமாக வைத்து, சம்பளத்தில் சில லகரங்களைக் கூட்டலாமா என்று யோசித்து வருகிறாராம் த்ரிஷா.

<img src='http://www.thatstamil.com/images21/cinema/gilli-450.jpg' border='0' alt='user posted image'>


- sWEEtmICHe - 05-01-2004

<span style='font-size:27pt;line-height:100%'><b>கில்லி - சினிமா விமர்சனம்</b></span>

[size=13]"இந்த ஏரியா, அந்த ஏரியா எல்லா ஏரியாவும் நம்ம ஏரியா தான்" என்கிற
ரேஞ்சில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டியிருக்கும் படம் : "கில்லி"
அசிஸ்டென்ட் கமிஷனர் சிவசுப்பிரமணியத்தின் மகனான வேலு அட்டகாசமான கபடி பிளேயர்.
அரை இறுதி ஆட்டத்துக்காக மதுரை போகும் வேலு அங்கு "ரவுடியிசம்" நடத்தும் மந்திரி மகன்
முத்துப்பாண்டி செய்யும் ஒரு கொலையைப் பார்த்து விடுகிறான்.

இந்த முத்துப்பாண்டி தனது உறவுக்கார பெண் தனலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம்
செய்வதற்காக பிடித்து வந்து காரில் ஏற்றுகிற அதே சமயம்?

பொறி கலங்கிப் போகிற மாதிரி அவனைத் தாக்கி தனலட்சுமியை காப்பாற்றிக் கொண்டு
ஓடுகிறான் வேலு.

தனலட்சுமியை சென்னைக்கு அழைத்து வந்து தனது வீட்டிலேயே பாதுகாப்பாக
வைக்கிறான்.
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/miche%2Bimg1040429007_1_1.gif' border='0' alt='user posted image'>
உறவுக்கார பெண் தனலட்சுமியை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக முத்துப்பாண்டி போலீசில்
புகார் செய்ய, வேலுவை கண்டுபிடித்து தனலட்சுமியை மீட்கும் பொறுப்பு அசிஸ்டென்ட்
கமிஷனர் சிவசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

இருவருமே தனது வீட்டில் தான் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் சிவசுப்பிரமணியம் தேட
ஆரம்பிக்க... விஷயம் தெரிய வரும்போது வேலுவும், தனலட்சுமியும் மீண்டும் ஓட...
முத்துப்பாண்டியும் இவர்களை அiடையாளம் கண்டு கொண்டு விடுகிறான். பிறகு என்ன
நடக்கிறது? என்பதை திரையில் காண்க!

கபடி வீரர் வேலுவாக விஜய் அறிமுகமாகும் ஆரம்பகட்ட காட்சியே அனல் பறக்கிறது. படம்
முழுக்க ஆவேசம் மட்டும் அல்லாமல் வயிறு குலுங்க சிரிக்க வைத்தும் விஜய் கலக்கி இருக்கிறார்.
முத்துப்பாண்டியன் பலம் தெரியாமல் தனலட்சுமியை காப்பாற்ற முயற்சிக்கும் போது விஜய்
மெய்சிலிர்க்க வைக்கிறார். பெற்றோரை ஏமாற்றிவிட்டு மதுரை செல்வது, தனலட்சுமியை
வீட்டில் வைத்துக் கொண்டு நாடகமாடுவது கலகலப்பான காட்சிகள். சண்டைக்காட்சிகளில்
விஜய் இதுவரை இல்லாத அளவுக்கு மிரட்டி இருக்கிறார். அமைதியும், ஆக்ரோஷமும்
கொண்டவராக நடிப்புக்கு விஜய் நல்ல சவால்!
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/miche%2Bimg1040429007_1_2.gif' border='0' alt='user posted image'>
திரிஷா நடிப்பு திறமையாலும், வசீகர அழகாலும் முன்பை விட பல மடங்கு உயர்ந்திருக்கிறார்.
விஜய்யை அவர் மெது மெதுவாக காதலிக்க ஆரம்பிப்பது ரசிகர்கள் மனதுக்கு இதம். இதே
திரிஷா முத்துப்பாண்டியை கண்டு மிரளும் போது முகபாவத்தால் நம்மையே மிரட்டி விடுகிறார்.

பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு விமர்சனம் தேவையா? முத்துப்பாண்டியாக வரும் அவர் கிளைமாக்ஸ்
வரை "நச்" முத்திரை பதித்து இருக்கிறார். "அதெல்லாம் பேசக் கூடாது" என்கிற டயலாக்
பிரகாஷ்ராஜிக்கே உரிய தனித்துவம்.

"ஓட்டேரி நரி" என்கிற கேரக்டரில் தாமு அட்டகாசமான காமெடி.

அசிஸ்டண்ட் கமிஷனராக ஆசிஷ் வித்யார்த்தி, நாகேந்திர பிரசாத், மயில்சாமி, சாப்ளின் பாலு என
எல்லோருமே படத்துக்கு சிறப்பு.

திரை முழுக்க கைவண்ணம் காட்டியிருக்கும் காமிராமேன் கோபிநாத்துக்கு விஜய், திரிஷா தப்பி
ஓடும் காட்சிக்காக பிரத்யேகமாக பாராட்டலாம்!

வித்யாசாகரின் இசையில் பா.விஜய் எழுதிய "அப்படிப் போடு" பாடல் திரையரங்கை அதிர
வைக்கிறது. ரசிகர்களுக்கு அட்டகாசமான விருந்து.

ஜெட் வேகத்தில் கதையை கொண்டு போய் இருக்கிறார் டைரக்டர் தரணி. தில், தூள் படத்துக்கு
இணையான கலக்கல். தொடக்கத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களுக்கு உற்சாகமும்,
விறுவிறுப்பும் தந்து தன்னை மீண்டும் நிலை நாட்டி இருக்கிறார்.

"தூள்" படம் போலவே இந்தப் படமும் ஏ.எம்.ரத்னத்திற்கு கைகொடுக்கும் என்று நம்பலாம்
"கில்லி" சாம்பியன்....... நன்றி - சினி சவுத !!
அன்புடன் மிச்சி :roll: